கடவுள், மதம் மற்றும் ஜாதியின் தோற்றம் இன்றைய இருப்பும் ஓர் தேடல்.

 தோழர்களுக்கு வணக்கம்,  இன்றைய நமது விவாத பொருளாது, கடவுள் மதம் ஜாதி ஆகியவற்றின் தோற்றம் அதன் இன்றைய இருப்பு பற்றி ஒரு தேடல்.


கடவுள் மதம் ஜாதியை பற்றி கம்யூனிஸ்ட் களுக்கு சரியான பார்வை இல்லை என்று பல்வேறு விதமான குற்றச்சாட்டுகள் எழுப்புக்கின்றனர். அதனைப் பற்றிய நமது முக்கியமான சில விளக்கங்களும் மற்றும் நம்மிடையே உள்ள சில போக்குகளைப் பற்றியும் விவாதிப்போம்.

முதலாளித்துவ நாத்திகவாதமும் அதன் போதாமையும்.

கம்யூனிஸ்டுகள் நாத்திகர் தானா என்கின்றனர் சிலர், அதே வேளையில் இந்த நாத்திக்கும் பேசும் பலர் நாத்திகம் என்பது கடவுள் மறுப்பும் மதம் மற்றும் அதன் பிற்போக்குதனங்களை மறுப்பதும் என்றாக மட்டுமே நினைக்கின்றனர்.

உண்மையில் மார்க்சியவாதிகள் இயற்கையில் பொருள் முதல்வாதியாகும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஏற்பவராக இருக்க வேண்டும். அதனோடு மார்க்சியவாதிகள் மதத்திற்கு எதிரான போராட்டத்தை அதன் சகல பரிணாமங்களையும் கண்டுணர்ந்து நிகழ்த்த வேண்டியிருக்கிறது.

மதத்தைப் பற்றிய மார்க்சியம் வெறும் நாத்திக கோணத்தில் ஒரு கருத்து அமைப்பை உருவாக்கவில்லை. மதம் ஒரு சமூக நிறுவனம் அது மேற்கட்ட அமைப்பின் ஒரு பகுதி அவை அடிக்கட்டுமானத்தில் பிரதிபலிக்கும் பல்வேறு கருத்துகளில்  அவை ஒன்று. எனவே மார்க்சியம் மதத்தை அதன் தோற்றம் அதன் வளர்ச்சி அதன் தன்மை ஆகியவற்றை நமது ஆசான்கள் விரிவாக ஆராய்ந்துள்ளனர்.அதனை உள்வாங்கி பின்பற்ற வேண்டியது மார்க்சியவாதிகளின் கடமையாகும்.

அதே நேரத்தில் வெறும் நாத்திகம் பேசுவோர் மதத்தின் அடிப்படையில் எவ்வாறு தோன்றியது அது ஒவ்வொரு காலத்திலும் என்ன பங்காற்றியது என்பதைப் பற்றி கேள்வி கேட்காமல் அதன் குறைகளை மட்டுமே சாடும் விமர்சனம் அதன் அடிப்படைகளைப் பற்றி பேசாமல் மேம்போக்காக உள்ளது

ஒரு கருத்தை இன்னொரு கருத்தால் மறுக்கும் கருத்து முதல் வாதமாக இவை உள்ளது . மதத்திற்கு மற்ற சமூக நிறுவனங்களான அரசியல் கலை கல்வி பொருளாதார அமைப்புகளுக்கும் உள்ள உறவுகளை கணக்கில் இவை எடுத்துக் கொள்வதில்லை.

மார்க்சியமானது மதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு வர்க்க ரீதியாக மதத்தின் பங்களிப்பை புரிய வைக்கிறது.  மதமானது துவக்கத்தில் மனிதனின் அறியாமை காரணமாக தோன்றியது என்றாலும் சமூகங்கள் வர்க்கங்களாக பிளவுண்ட பொழுது அது ஆளும்  வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்கும் சாதனமாக மாறியது. அடக்குமுறை கருவியாக பயன்படுகிறது. விஞ்ஞானபூர்வமான பல்வேறு விதமான ஆரோக்கியமான கருத்துகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறது. இவையெல்லாம் இருந்தாலும் மக்கள் மதத்தின் பின் அணி சேர்கின்றனர் வாழத் தெரியாத மக்கள் மதம் என்ற அபினியின் மயக்கத்தில் வாழ பழக்கப்படுத்திக் கொண்டுள்ளது இந்த மதமானது. ஆக மதத்திற்கு எதிரான போராட்டத்தை அதன் சகல பரிணாமங்களையும் கண்டு அதனை உணர்த்தி எதிர்க்க வேண்டும்.

வகுப்பை ஒலிவடிவில் கேட்க இந்த லிங்கை அழுத்துங்கள் தோழர்களே


கடவுளும் மதமும் ஜாதியும் அன்றைய சமூக வளர்ச்சியில் குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்ய தோன்றியது, ஆனால் இன்று உலகம் வளர்ந்து நிக்கும் நிலையில் அவை தோன்றிய காலகட்டத்தை விட இன்று அறிவியல் சமூகமும் தொழில்நுட்பத்தால் மேலோங்கி உள்ளது இந்த சமூகம். அன்றைய அதே கருதாக்கங்களை தாங்கி பிடிப்பது ஏன் இந்த வளர்ந்த சமூகத்தில் அதன் தேவைகள் உள்ளதா விரிவாக விவாதித்தோம்.


[6:22 am, 26/11/2023] CP.: மதத்தை ஒழிக்க புறப்பட்ட பெரியாரும் ஜாதி ஒழிப்பு புறப்பட்ட அம்பேத்கரும் சமூக இயல்களை புரிந்து கொள்ளாதே ஜாதி ஒழிப்பிற்கு மதம் மாற்றத்தை அம்பேத்கரும் சாதி தீண்டாமை கடவுளை ஒழிப்பதற்கு பெரியாரும் முன்வைத்துக் கோட்பாடுகள் அவை தோல்வி கண்டத்துக்கு காரணம் தேடினால் கிளியராக

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்