ஒரு கம்யூனிஸ்ட் கட்சியானது கறாரான பாட்டாளிவர்க்க கண்ணோட்டம், கொள்கை கோட்பாடுகளில் உறுதியான பற்றுகொண்டிருக்கவேண்டும். ஆகவே கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் பாட்டாளிவர்க்க கண்ணோட்டத்தைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களில் பலர் பாட்டாளிவர்க்க கண்ணோட்டமில்லாமல், பாட்டாளிவர்க்க நிலைபாட்டில் குறைபாடுள்ளவர்களாகவும், மார்க்சிய லெனினிய தத்துவத்தையும், சிந்தனையையும் வேலைமுறையையும் தெளிவாகப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். இவர்களால், நடைமுறைப் பணிகளை வெற்றிகரமாகச் செயல்படுத்தும் ஆற்றலற்றவர்களாகவே இருப்பார்கள் என்றார் லியோஷோசி. ஒவ்வொரு பிரச்சனையை எதிர்நோக்கி தீர்ப்பதிலும் ஒருவர் பாட்டாளிவர்க்க நிலைபாட்டில் உறுதியாக நிற்க்கும் போதுதான் அவரால் மார்க்சிய லெனினிய தத்துவத்தையும் அரசியலையும் கற்று முதிர்ச்சியடைய முடியும். அதாவது ஒரு கம்யூனிஸ்டு முதலில் பாட்டாளிவர்க்க உணர்வுபடைத்தவராக இருக்கவேண்டும். அத்தகைய உணர்வுள்ளவர் களால்தான் மார்க்சிய ஆசான்களது போதனைகளை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ள முடியும். இதற்கு மாறாக குட்டிமுதலாளிய உணர்வு படைத்தவர்களால் மார்க்சியத்தை அவர்களது சுயநல நோக்கத்திலிருந்தே புரிந்து கொள்கிறார்கள். இத்தகையவர்கள்தான் மார்க்சியத்தை திருத்தும் திருத்தல்வாதிகளாக இருக்கிறார்கள். ஆகவே ஒரு பிரச்சனைக்கான தீர்வை ஒருவர் முன்வைக்கிறார் என்றால், அவர் பாட்டாளிவர்க்க நலன் அல்லது கண்ணோட்டத்திலிருந்து வைக்கிறாரா? அல்லது குட்டிமுதலாளித்துவ நலன் அல்லது கண்ணோட்டத்திலிருந்து வைக்கிறாரா? என்று பார்க்கவேண்டும். உதாரணமாக பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் வேண்டும் என்ற கொள்கையானது பாட்டாளிவர்க்க கண்ணோட்டத்திலிருந்து வருகிறது. இதற்குமாறாக பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் கூடாது என்ற கொள்கை முதலாளித்துவ மற்றும் குட்டிமுதலாளித்துவ கண்ணோட்டத்திலிருந்து வருகிறது. இவ்வாறு ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வை முன்வைக்கும்போது அதற்கு அடிப்படையாக பின்னணியாக ஒரு வர்க்க நலன் மற்றும் கண்ணோட்டம் இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த இதழில் பேசப்பட்டுள்ளவை
1). போர்வெறியும் ஏகாதிபத்தியமும்
2). சிறந்த கம்யூனிஸ்டாவது எப்படி? பாகம் - 7
3).அரசு பற்றி லெனின் பாகம் 4.
4).அடையாள அரசியலும் மார்க்சியத்தை மறுக்கும் போக்குகளும்
ஏகாதிபத்தியம் என்றாலே போரும் சுரண்டலும் ஒடுக்குமுறையும் நிறைந்த காலம் என்பதும்தான். ஆக ஆசான் லெனின் வழிகாட்டியுள்ளவற்றை புரிந்துக் கொள்ள முயலுவோம்.
"தேசங்களுக்குள், அவற்றுக்கிடையில் நடைபெறும் போர்களை காட்டுமிராண்டித்தனமானவை, அதை முரட்டுத்தனமான கொடூரமானவை என்று கூறி சோசலிஸ்டுகள் எப்போதுமே அவற்றை கண்டனம் செய்து வந்துள்ளனர். எனினும் போரை பற்றி நாம் கொண்டுள்ள போக்கு பூர்ஷ்வா சமாதானவாதிகளிடையே (சமாதானத்தின் ஆதரவாளர்கள் அது வேண்டும் என்று சரியானது என்று எடுத்துரைக்க அதற்காக வாதிபோர் ஆகியோருடைய) போக்கினின்று அடிப்படையில் மாறுபட்டது அராஜவாதிகளுடைய போக்கின்றும் அடிப்படையில் மாறப்பட்டது. நாட்டிற்குள் நடக்கும் வர்க்க போராட்டத்திற்கும் போர்களுக்கும் உள்ள தவிர்க்க முடியாத தொடர்பினை நாம் அறிந்து புரிந்து கொண்டுள்ளோம் என்ற விஷயத்தில் நாம் முன்னர் குறிப்பிட்டவர்களிடமிருந்து பூஷ்வா சமாதானவாதிகளிடமிருந்து மாறுபட்டவர்கள்.
வர்க்கங்கள் ஒழிக்கப்பட்டு சோசலிசம் படைக்கப்பட்டாலன்றி போர்கள் ஒழிக்க முடியாது என்பதை நாம் அறிந்து கொண்டுள்ளோம். மேலும் உள்நாட்டுப் போர்களை அதாவது ஒடுக்கப்பட்ட வர்க்கம் ஒடுக்கும் வர்க்கத்தினை எதிர்த்து நடத்தும் போர்கள் , அடிமைகள் அடிமை உடைமையாளர்கள் எதிர்த்து நடத்தும் போர்..... ஆகிய போர்கள் முற்றிலும் முறையானவை முற்போக்கானவை தேவையானவை என்று நாம் கருதுகிறோம். ஒவ்வொரு போரினையும் அதன் வரலாற்றியல் அம்சத்திலே (மார்க்ஸ் அவர்களுடைய முரண்பாட்டியல் பொருள் முதல் வாதத்தின் நோக்கு நிலையில் இருந்து) தனித்தனியாக ஆராய்ந்து அறிய வேண்டும் என்று நாங்கள் கருதுவதில்லை. அனைத்து போர்களும் தவிர்க்க முடியாத வகையில் வரும் குரூரங்கள் கொடுமைகளும் வேதனைகளும் துயர்களும் கோரங்களும் இருந்தபோதிலும் முற்போக்காக இருந்து அதாவது மிகவும் தீங்கிழைத்து வந்த பிற்போகன ஸ்தாபனங்களை உதாரணமாக ஒரு தனி மனித தன்னிச்சையாக ஆட்சி அதிகாரத்தை ஒழிப்பதற்கு உதவி செய்த மனித குல வளர்ச்சியில் நன்மையை கொடுத்த போர்கள் கொடுங்கோன்மை ஆட்சியை ஒழிப்பதற்கு உதவிய மனித குல வளர்ச்சிக்கு உகந்த நடந்த கடந்த கால போர்கள் எடுத்து பரிசீலனை செய்ய வேண்டும் ஆராய வேண்டும்" என்கிறார்.
ஏகாதிபத்தியம் உள்ளவரை போரைத் தடுக்க முடியாது. சமூகம் வர்க்கமாக பிளவுண்டு கிடக்கும் வரை சமூகத்தில் போர் தவிர்க்க முடியாது என்கிறார் லெனின்.
இந்த போர் இன்று நடைபெற்று வரும் போர் ஒரு ஏகாதிபத்திய போர் என்பது அநேக அனைத்து இடங்களிலும் ஒப்புக்கொள்ளப்படுகின்றது. எனினும் பெரும்பாலான இடங்களில் இந்த சொல்லின் பொருள் திரிக்கப்படுகிறது.
ஏகாதிபத்திய காலகட்டத்தில் முதலாளித்துவமானது தேசியங்களை ஒடுக்கும் ஒடுக்கலின் மிகப்பெரிய ஒடுக்கல் காரனாக மாறிவிட்டது. போர் என்பது அரசியலின் தொடர்ந்த தொடரே தான் வேறு (வன்முறை) வழியில் தொடர்ந்து செல்லும் தொடர்ச்சி தான். தன் நாடு கடந்து நாடுகளை ஒடுக்குவது, கொள்ளையடிப்பது தொழிலாளி வர்க்க இயக்கத்தை நசுக்குவது இவைதான் நாம் காணும் படிப்பினைகள் இந்த போக்கு இப்பொழுதும் தொடர தான் செய்கிறது.
"பிற்போக்காளர்களே புரட்சிகர சக்திகளுக்குப் பயப்பட வேண்டும், மறுபுறமாக அல்ல" என்றார் (ஆனால் ஏகாதிபத்தியங்கள் செய்யும் சூழ்ச்சி வலையில்
முழு இதழை வாசிக்க கீழ்காணும் இணைப்பை அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் தோழர்களே.
No comments:
Post a Comment