பிராமணர்களின் மேலாதிக்கம் ஜாதியத்தில்-1

 பிராமணர்களின் வாழ்வியலை புரிந்துக் கொள்ளாமல் வெறும் வெறுப்பு அரசியல் இங்கு பேசுகின்றோம். உண்மையில் வரலாற்றில் அவர்களை தேடினால் அவர்கள் இங்கிறிருந்தவர்களில் ஒருவர்தான் என்பது புலப்படும்.... எப்படி நம்முடன் உள்ள ஒருவர் IAS, IPS ஏன் ஒரு ஆளும் வர்க்க பிரிவில் உயர்ந்து விட்டால் நம்மையே (உழைக்கும் ஏழை எளிய மக்களை) நசுக்க வருவதில்லையா அது போல் அன்றுஅதிகார வர்க்கதின் உச்சாணி கொம்பில் ஏறிய இவர்கள் தனி பிரிவாக இங்கிருந்து போனவர்கள்தான் இன்று தனித்து நின்று புனிதர்கள் வேசம் என்றால் மிகையில்லை என்பேன் விரிவான விவாதம் தொடரும் அதற்கு முன்....

இந்தியாவைப் பொறுத்தவரை சமூகப் பண்பாட்டு மாற்றத்திற்கான கோட்பாட்டில் சமஸ்கிருத மயமாதல் மட்டும் முன் வைக்கவில்லை மாறாக அதற்கு கேள்விக்குள்ளாக்கும் தரவுகளை முன்வைக்கிறது.
பண்பாட்டு அளவில் தென்னிந்திய பிராமணர்களும் வட இந்திய பிராமணர்களும் வேறுபடுத்துவதும் பிராமணர்களின் வாழ்வு நெறி என்றும் மாறாதது என்றோ அவர்கள் வேத புராணங்களில் கூறப்பட்டுள்ள முறைப்படி மாறாமல் வாழ்ந்து வந்துள்ளனர் என்று கூறும் அளவிற்கு அனைத்து பிராமணர்களும் ஒரு வழிபட்ட வாழ்வியல் நெறிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை.
இன்னும் சொல்லப்போனால் பிராமணர்களின் மற்றமே மற்றொரை காட்டிலும் விரைந்து நிகழ்ந்து இருக்கிறது.
வேதகால பிராமணர்கள் சோமம் என்னும் போதை தரும் மதுவை பருகினார்கள் மாட்டுக்கறி உண்டார்கள் தெய்வங்களுக்கு உயிர் பலியை செய்தார்கள் இந்த நிலை வேதகாலத்திற்கு பிந்தைய நாளில் ஜெயன புத்த சமயங்களின் தாக்கத்தினால் மாறியது என்றாலும் இன்றும் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக காஷ்மீர் வங்காள மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பிராமணர்கள் மாமிச உணவு உண்கிறார்கள்.
கி.பி ஆறாம் நூற்றாண்டில் எழுந்த சமணத்தின் செல்வாக்கால் பிராமணர்கள் புலால் உண்ணுவதை நிறுத்திக் கொண்டார்கள் என்பது குறிப்பு .
இன்னும் கூட புலால் உண்ணும் பழம் மரபின் எச்சம் பிராமணர்களிடம் காணப்படுகிறது.
ஆந்திராவில் கர்னூல் மாவட்டம் கம்பம் மாவட்டத்திலும் மாதங்கி வழிபாட்டின் போது தாழ்த்தப்பட்ட மக்களான மாதிகர் வீட்டில் எருமை கறி சமைத்து அதனை பரிமாறுவதும் பிராமணர்கள் உண்பதும் ஆண்டுக்கு ஒரு முறை சடங்காக நிகழ்கிறது. (தமிழர் மானுடவியல் பத்வத்சல பாரதி பக்கம் 170 171 அடையாளம் வெளியீடு ).
சாதியும் படிநிலை வரிசை சாதியமானது பார்ப்பனர்களை சமூகத்தில் உச்சத்திலும் பஞ்சமரை தாழ்ந்த நிலையில் கொண்டதாக உள்ளது படிநிலை என்பது சமூக அமைப்பில் மேலும் கீழும் உள்ள அடுக்குகளில் உள்ள சமூக அமைப்பாகும் வர்ண நெறிமுறையில் பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் என்று நாலு வருணங்கள் ஓர் இறுக்கமான படிநிலை வரிசையில் உள்ளனர்.இங்கே வர்ண நெறிக்கு அப்பாற்பட்டவரை சேர்க்கப்படவில்லை .வர்ண நெறிமுறைகளின் தொடக்க காலத்தில் வர்ணங்களுக்கு இடையே மாறிக் கொண்டும் மேலும் கீழும் போவதற்கான வழிவகை இருந்தது காலப்போக்கில் அவை மறுக்கப்பட்டு விட்டன.
நிலையான ஜாதியை பற்றி தேடுதலே. மார்க்சிய ஆய்வு முறை கண்ணோட்டத்தில் நமது சமூக வளர்ச்சி போக்கை நாம் புரிந்து இதற்கான தீர்வு மிக எளிதாக கிடைக்கும்.
மனித குல வளர்ச்சியில் பல்வேறு கட்டங்களில் ஏற்றத்தாழ்வான சமூக நிகழ்வுகளை நாம் கண்டுள்ளோம். அதே போன்று இந்திய துணை கண்டத்தில் இன்று நிலவும் ஜாதியை பற்றி புரிந்து கொள்ள இச் சமூக வரலாற்று வளர்ச்சியை சற்று புரிந்து கொள்வோம்.
மனிதர்கள் அவர்களின் வாழ்க்கை  தேவைக்காக நிலத்தைப் பயன்படுத்த கற்றுக் கொண்டதில் இருந்து, நிலம் சார்ந்த உழைப்பே மனித குலத்தை மேம்படுத்தும் நிலையில் இருந்தது.  அன்று நிலத்தில் உழைப்போரும் அதற்கான கருவிகளை தயாரிப்பவரும் இவர்களுக்கு பயன்படும் பிரிவினை உருவானது. அந்தப் பிரிவினையின் வளர்ச்சி போக்கு அவர்கள் சார்ந்த தொழிலில் நிபுணத்துவமும் இன்னொரு புறம் போரும் மக்களை மேலும் கீழும் பல்வேறு விதமான போக்குகளை கொண்டு வந்தது. இருந்தும் நிலத்தையே அடிப்படையாக ஆட்சி புரியும் ஒரு காலகட்டத்தில் தேவையும் வழங்கப்பட்டது. இதை எல்லா பகுதிகளுக்கும் ஒரே போல இருந்ததாக கூற முடியாது. அன்றைய குறு மன்னர்கள் ஆட்சியும்  பேரரசும் இன்றுள்ளது போல் நாடு தழுவியதாக இல்லை. இதனைப் பற்றி தெரிந்து கொள்ள பிரிட்டிஷாரின் வரவும் அன்றைய உலகளாவிய போக்கும் புரிந்து  கொண்டால் சிறப்பாக இருக்கும். 
பிரிட்டிஷ் வாணிப கம்பெனி வருவதற்கு முன் இங்கு ஒன்று பட்ட புவி பரப்பு ஒற்றை ஆட்சியின் கீழ் வரவில்லை.
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ஒரே ஆட்சியின் கீழ் அன்று வரை எந்த ஆட்சியிலும் வரவில்லை.
இன்றுள்ள பல்வேறு வரலாற்று குழப்பங்களுக்கு அவனே காரணம் விரிவாக தொடர்ந்து எழுதுவேன்..
15 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் ஐரோப்பியர்கள் உலக நாடுகளின் செல்வங்களை கொள்ளையிட  பல்வேறு நாடுகளுக்கு பயணித்தனர். அவர்களின் தேடுதலுக்காக அங்கு பல்வேறு விதமான தொழில் புரட்சி நடந்தது. அன்று நீராவி இயந்திரங்களும் பல்வேறு விதமான தொழில் பட்டறைகளும் தோன்றின. அதன் வேகம் மக்கள் தங்கள் நிலையிலிருந்து மாறி தொழிலாளர்களாகவும் பல்வேறு வகை தொழில் பிரிவினராக மிக வேகமாக வளர்ந்தனர். அதற்கு ஏற்ப செல்வங்களும் குவிந்தன அங்கே உலகைப் பிடிக்க அவர்கள் எத்தனித்தனர்.
ஆனால் தங்களின் செல்வங்களை பெருக்கி கொள்ள ஆங்கிலேயர் பல்வேறு நாடுகளில் பல தந்திரங்களை கைக் கொண்டனர். அதே போன்று இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி புரிய பல சதி திட்டங்கள் தீட்டினான் அவை பல இன்று நாம் பேசும் ஜாதி அமைப்பில் அவர்னின் பங்களிப்பு இன்று தமிழ் நாட்டிலே வடக்கே உள்ள ஜாதி தெற்கே இல்லை அப்படி எனும் பொழுது நாடுமுழுக்க இருந்த மக்களை ஜாதியின் சட்டகத்துகுள் அடைத்து அதற்கு ஒரு அடையாளம் கொடுத்து மக்களை பிரித்து வைத்த பெருமை இவர்களையே சாரும் அப்படி எனும் பொழுது அதற்கு முன் இல்லையா இந்த ஒடுக்குமுறை என்றால் இருந்தது அவை செயல் வடிவில் பல்வேறுவிதம் இயங்கிக் கொண்டிருந்தது அவற்றை ஐரோபிய நாடுகளில் நடந்த தொழிற்புரட்சி போல் நடந்தேறியிருந்தால் அன்றே மாறியிருக்கும் ஆனால் அங்கிலேயன் நோக்கம் மாற்றுவதல்ல கொள்ளையடிப்பதுதான் அதற்கு நமது குறைகளை பயன்படுத்தி மக்கள் மத்தியில் ஆழாமான வேறுபாடுகளை வித்தைத்து அவன் அறுவடை செய்துக் கொண்டான் ஆனால் இன்றுவரை இந்தியர்கள் அந்த கொடுமையிலிருந்து மீள முடியாமைக்கு அவர்களும் ஒரு காரணம் என்பேன்.
சாதியம் படிநிலை வரிசையில் பார்ப்பனர்களை சமூகத்தில் உச்சத்திலும் பஞ்சமரை தாழ்ந்த நிலையில் கொண்டதாக உள்ளது. படிநிலை என்பது சமூக அமைப்பில் மேலும் கீழும் உள்ள அடுக்குகளில் உள்ள சமூக அமைப்பாகும். வர்ண நெறிமுறையில் பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் என்று நாலு வருணங்கள் ஓர் இறுக்கமான படிநிலை வரிசையில் உள்ளனர்.இங்கே வர்ண நெறிக்கு அப்பாற்பட்டவரை சேர்க்கப்படவில்லை. வர்ண நெறிமுறைகளின் தொடக்க காலத்தில் வர்ணங்களுக்கு இடையே மாறிக் கொண்டும் மேலும் கீழும் போவதற்கான வழிவகை இருந்தது காலப்போக்கில் அவை மறுக்கப்பட்டு விட்டன.
ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பில் சுரண்டுவோர்க்கு உரியதாக உள்ள அதிகாரத்தை பேணும் பொருட்டு வடிவமைக்கப்பட்டதே ஜாதியம். அவ்வாறு ஜாதி தோன்றுவதற்கு முன்னரே ஜாதிகள் தோன்றுவதற்கான அடிப்படைகள் உருவாகிவிட்டது. நிலவி வந்து வாழ்வியல் முறையில் (ஜாதியின்) வேற்றுமையில் ஒற்றுமையாக வாழும் இயங்கு நிலைக்கான கருத்தியலை தோற்றுவித்தது அந்தக் கருத்திலே வழங்கியவர்கள் சனாதனவாதிகளே. நில பிரபத்துவ அமைப்பை வடிவமைக்கும் கருத்தியலை கட்டமைப்பதில் கிபி3 ஆம் நூற்றாண்டில் தொகுத்து வடிவமைக்கப்பட்ட மனுதர்ம சாஸ்திரத்திற்கு பெரும் பங்கு உண்டு. மேலும் வர்ண தருமத்தை பேணுவதற்காக பகவத் கீதை இறைவனால் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. இவை கி.பி 3-4ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டு பின்னர் மகாபாரத இதிகாச கதைகளுடன் இணைக்கப்பட்டது.

நிலப்பரபுத்துவ உடன்பாடான கடவுள் கோட்பாட்டையும் அதற்கான பக்தி கோட்பாட்டையும் வடிவமைத்திருந்த கீதையும் மனுஸ்மிருதியும் பண்பாட்டுத்தளத்தில் வலுவான மாற்றங்களை ஏற்படுத்தியது. நிலப் பிரப்புத்துவத்தை உறுதிப்படுத்த வடிவமைத்தது சனாதனத்தை கட்டியமைத்தவர்களே, கிபி 4ஆம் நூற்றாண்டு தொடங்கி கிபி 8ஆம் நூற்றாண்டில் சங்கரரின் அத்வைதம், பகவத் கீதை, மனுதர்மம் ஆகியவை நிலப் பிரபுத்துவ உறுதிப்பாட்டை நிலைநிறுத்தவும் பூசர்களான பிராமணர்கள் என்ற மேல்நிலை ஆதிக்கத்திற்கு வழிகோறியது. காலவோட்டத்தில் வேதங்களைப் போற்றவும் ஏற்பட்ட புதிய வர்க்கப் பிரிவு பிரதேச பூசர்களுடன் இணைந்து உருவான பிரிவுதான் பிராமணர்கள் ஆரியர்கள் என்ற கோட்பாடு. பகவத் கீதை வடிவமைப்பதற்கு முந்திய ஆதி இயற்கை கடவுள் குலதெய்வ கடவுளுக்கும் நிலப்பரப்புத்துவ தேவையொட்டி உறுதிப்பட்ட எல்லா தெய்வங்களையும் கட்டுப்படுத்தும் முறையில் பரம்பொருள் கோட்பாடுகள் கிபி 4ம் நூற்றாண்டில் தோன்றி வளரலாயிற்று . அதற்கான முழு முதற் பரம்பொருட் கோட்பாடு சங்கரின் அத்வைதம் உயர்வடிவம் பெற்றது. பல்வேறு குலக்கடவுள்களை உள்வாங்கி ஆறு கடவுளை ஏற்றுக்கொண்டு ஆறு மதங்களை சனாதன நெறிக்குரியனவாக வடிவப்படுத்தி அக் கடவுள்களை சங்கரர் தனது மடத்தில் எழுந்தருளவும் செய்தார். அவையெல்லாம் மாயையுடன் இயைந்த பிரபஞ்சத்துத் தேவர்களே. இவ்வாறு நிலப்பிரபுத்துவம் உறுதி அளித்த வேலை மனுதர்மம் பகவத் கீதை சங்கரர் அத்வைதம் ஆகியன சனாதன ஆன்மீக தலைமை வலுவடை செய்ததோடு. ஜாதிகள் ஒவ்வொன்றுக்கும் தத்தமது தொழில்களை மாறுபாடின்றிச் செய்தொழுகும் வாழ்நெறிக்கு தெய்வ அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தன. அவ் வர்ணாசிரம நெறியைச் சமூகம் பிறழ்வின்றித் தொடர்வதற்கான கண்காணிப்பை அரசருக்கான பணியாக்கி அதற்கு ஏதுவாகக் கடவுளின் மனித உருவாக அரசர்கள் விளங்குவார் என்ற கருத்தியலை சனாதனிகள் விதைத்தனர். வர்ணங்கள் தமக்குள் கலந்து தூய்மை கேட்டு உறுப்பெற்றவையே ஆயிரக்கணக்கான ஜாதிகள் என்று மனுதர்மம் சொல்வதும். இனக்குழு கடந்த மண உறவுகள் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன. இனக் குழுக்களுக்கிடையே அகமணத்திற்கு மேலாக புறமணமும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இவ்வாறாக நிலவுடமை சமூகம் உறுதிப்படுவதற்கு முன் இருந்த நிலை மாறி நிலப் பிரபுத்துவ அமைப்பை கட்டிக் காப்பதற்காக தெய்வீக அங்கீகாரம் பெற்ற அரசு தொழில் ரீதியாக உழைப்பவர்களை நிலத்துடன் இறுகப் பிணைக்கப்பட்ட வம்சாவழியாக அரசு கண்காணிப்பை மேற்கொண்டது. இவ்வாறாக நிலப்பிரப்புதுவ சமூகத்தில் அரசர் பூசையார் (பிராமணர்) ஆகியோர் கைவினை சாதிகள் மற்றும் பண்ணையடிமை ஜாதிகளை ஒடுக்கி வந்தனர். ஆங்கிலேயர் ஆட்சிக்கு தேவையொட்டியே பல மாற்றங்கள் ஏற்பட்டன. அவர்களது சுருண்டல் வெவ்வேறு தளங்களில் அவர்களுக்கு உகந்த வகையில் நடத்தினர். ஆங்கிலேயர்கள் மிக நுட்பத்துடன் ஜாதியை கட்டமைப்பை தமக்கு வசதியான முறையில் கையாளவும் செய்தனர். ஆங்கிலேயர்கள் தேவையை ஒட்டி மேட்டுக்குடியினர் காலனி எஜமானர்களுக்கு நெருக்கமாகி ஆங்கிலம் கற்று அரசு பணிகளில் ஆதிக்கம் செலுத்தினர். அதில் முக்கியமாக பிராமணர் பிராமணர் அல்லாதோர் பிரிவினருக்கு இடையேயான முரண்பாடும் நவீன சமூகத்தில் எல்லா ஜாதிகளும் மேல்நிலை நோக்கிய வர்க்க அமைப்பு உருவாகியது ஒவ்வொரு ஜாதியிலும் வர்க்கங்களாக பிளவுண்டு கிடக்கிறது.
தொடரும்....

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்