இதில் நான் எனது விமர்சனத்தை வைக்க வில்லை. ஏனெனில் ஆரிய திராவிட மற்றும் கடவுள்களின் சமூக தெடல் ஓர் புரிதலுக்கே இவை... தெவைப்பட்டால் விரிவாக பின்னர் இதனை பற்றி எழுதுகிறேன். சமூக பக்திமார்க்கம் புரிந்துக் கொள்ள ... தமிழ்க் கடவுள் முருகன் :வரலாறும் தத்துவமும்-இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் நுலின் ஆதாரப்படி கிழ்காணும் பகுதி ..
மொத்தமாக ஒரு தத்துவத்தைக் கூற முடியாத அளவிற்குக் குழப்பங்களைக் கொண்டது இந்து சமயம்.
20-ஆம் நூற்றாண்டு இந்திய அறிஞர்களுள் ஒருவரான இராகுல சாங்கிருத்தியாயன் (1893 - 1963) இந்தியச் சமயத் தத்துவங்கள் பற்றி "நம் பெளதிக அடிமைத்தனத்துடன் நம் புத்தி, சிந்தனை, பகுத்தறிவுகூட அடிமைத் தளையில் கட்டப்பட்டிருக்கின்றன. பொய்யும் புனைகருட்டுமாகப் பழம்பெருமை பேசுதல்; மந்திர தந்திரங்கள், சோதிடம், ஆருடம் இவற்றுள் ஊறியிருக்கும் விசுவாசம், சாதிச் சடங்குகள், பிறரைச் சுரண்டுவதை, ஏமாற்றுவதை, வதைப்பதைச் சாமர்த்தியமான பிழைப்பாகச் சிலாகிப்பது; கடந்த காலச் சமயத்தில் நிரம்பியிருந்த நெறிகேடுகளை மறந்து, மறைத்து நிகழ் காலத்தைச் சாடுவது; புராதன கிரந்தங்களையும் மகரிஷிகளையும் போற்றுவது; நாடுகளில் நிகழ்வதை உதாசீனப்படுத்துவது; இல்லாத பெருமைகளை ஏறிட்டுக் கொண்டு பெருமிதம் செருக்குடன் ஆர்ப்பறிப்பது எங்கள் மரபாகிவிட்டிருக்கிறது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இப்போது நடக்கும் மாற்றத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். 20-ஆம் நூற்றாண்டு வரை வளர்ந்துவிட்ட இந்த இந்து சமயக் குளறுபடிகள் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் மட்டும் மகா
"இந்துக்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் இதிகாசம், புராணம், சாஸ்திரம், வேதம், உபநிஷத், வேதாந்தம், சமய கிரந்தங்கள், காவிய நாடகங்கள், நீதி உபதேசங்கள், சரித்திரம், கலை, கலாச்சார நூல்கள் முதலான பழம் பெருமை மூட்டைகளில் 75 சதவீதம் மடத்தனமான பேத்தல்களும் உதவாக்கரைப் பிதற்றல்களும்தான் நிறைந்திருக்கின்றன" என்றும் இராகுல்ஜி (06-09-1993) குறிப்பிடுவதை இங்கு ஒப்பு நோக்குக.
ஆனால், ஆரியரின் வருகைக்கு முன் இந்தியாவில் பரவிக் கிடந்த வழிபாட்டு முறைகள் வேறுபட்டனவாக இருந்திருக்கின்றன. ஆண் கடவுளர்களை முதன்மைப்படுத்திய ஆரிய வழிபாட்டுக்கு எதிராக இந்திய ஆதிக்குடிகள் சக்தி, தாய் வழிபாட்டில் ஊறியிருந்திருக்கின்றனர். ஆரியரின் வரலாறு கி.மு. 3000-க்கும், கி.மு. 1500-க்கும் இடையில் தொடங்குவதாக வைத்துக் கொண்டாலும் அதற்கு முன்பிருந்த நாகரிகம் ஆதிக்குடிகளின் நம்பிக்கைகளின் வெளிப்படையாகவே அமைந்திடக் காணலாம்.
இந்திய ஆதிக்குடிகளின் மொழிகளுள் திராவிட மொழிகளும் அடங்கும் (க.ப. அறவாணன், 1984). திராவிடத் தமிழரோடு தொடர்புள்ள சிந்துவெளி நாகரிக நினைவுச் சின்னங்களும் ஒரு காலத்தில் திராவிடப் பண்பாடு சிறந்து வளர்ந்திருந்தது என்பதை உறுதிப்படுத்துகின்றன.
இராகுல சாங்கிருத்தியாயன் (1949) தனது "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற நூலில் ஆரியர் வருகைக்கு முன்பு இந்தியக் குடிகள் தொழில் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருந்தனர் என்று குறிப்பிடுகிறார். ஆனால், அவ்வாறு தொழில் அடிப்படையில் பிரித்தாலும் மனிதர்களை அடக்கி வைத்திருக்கவில்லை என்றும் வலியுறுத்துகிறார். மாறாக, ஆரியரின் 'நால் வர்ணப் பகுப்பு' மனிதனை மனிதன் அடிமைப்படுத்துவதற்கு அமைக்கப்பட்டது என்பதைச் சமூக வரலாற்றாய்வாளர் உறுதிப்படுத்துகின்றனர்.
மனிதர்களின் மன ஆசைகளின் வெளிப்பாடே கடவுளர்களின் படைப்பு என்பது பலரறிந்த உண்மை. ஆனாலும் காலத்துக்குக் காலம் ஆரியர்கள் தவிர்க்க முடியாதவாறு தங்கள் தத்துவத்திற்கு ஒத்துவராத சிலரையும் மேன்மைப்படுத்தி யிருக்கின்றனர். புத்தரை விஷ்ணுவின் அவதாரமாக்கியது இதற்கு ஓர் எடுத்துக் காட்டாகும். நந்தனாரை நாயனாராக்கியது இன்னொரு எடுத்துக் காட்டு. அதே போல, சைவர்களின் கடவுள் அல்லது திராவிடக் கடவுளான சிவனையும் காலப் போக்கில் உருத்திரனாக்கிவிட்டனர். இது போன்றே, ஆதிக்குடிகளின் கடவுளர்களும் ஆரியர்களின் கடவுளர்களான சூரியன், வாயு, இந்திரன் ஆகியோர்களும் காலப் போக்கில் இடம் மாறி மேன்மைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
தொன்மையான புராணக் கதைகள் பெரும்பாலும் எல்லா ஆதிக்குடிகளுக்கும் பொதுவாக இருந்திருக்கின்றன. இத்தகையத் தொன்மக் கதைகளை மனித வரலாற்றுடன் ஒப்பிட்டு ஆராய்வது அக் கால கட்டத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை நாம் அறிய உதவுகிறது.
இந்து சமயக் கதைகள் என்று குறிப்பிடப்படும் இந்தத் தொன்மக் கதைகள் ஒரு குறிப்பிட்ட குழுவினரின் கதைகளாக மட்டும் இருந்திருக்கவியலாது. உருவ வழிபாடு, இந்திய ஆதிக்குடிகளிடமிருந்து ஆரிய வழிபாட்டு முறைக்கு வந்திருக்கிறது. இயற்கையின் வெளிப்பாடுகளான சூரியன், சந்திரன், அக்கினி, பிரபஞ்சம், மின்னல், மழை, காலை நேரம் என்பன உருவமுள்ள கடவுளர்களாக உருப்பெற்றமை காலப் போக்கில் நடந்தேறியிருக்கிறது. இது போன்றே, சிவன், விஷ்ணு, கணபதி, காளி என்போரும் ஆரியக் கடவுளர்களாகக் காலப் போக்கில் மாற்றப்பட்டிருக்கின்றனர். மகாபாரதத்தில் 'கண்ணன்' காட்டப்படுவதற்கு முன்பே 'விஷ்ணு வழிபாடு அபிரா (Abhiro) இனக்குழுவினரால் மேற்கொள்ளப் பட்டுள்ளதை இதற்குச் சான்றாகக் காட்டலாம். கண்ணனை வணங்கிய இனக்குழுவினர் துவாரகைப் பகுதியில் வாழ்ந்த ஆதிக்குடிகளாவர். ஆரியர்களின் கடவுள் அல்லாத கிருஷ்ணன் வட இந்திய நாடோடி இனக்குழுவினரது கடவுளாக இருந்து, ஆயர்களின் முகாமையான கடவுளாகக் காலப் போக்கில் உயர்த்தப்பட்டிருக்கிறார். இதனால், தங்களின் மந்திரங்களைத் தொல்குடிகளின் கடவுளர்களுக்கு ஆரியர் பயன்படுத்தத் தொடங்கினர்.
ஆரியர்கள் இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் முன்னுக்குப் பின் முரணாக முருகனைப் படைத்திருக்கின்றனர். சான்றாக, ஐந்தாம் வேதமென்று பிராமணர்களால் போற்றப்படும் மகாபாரதத்தில் முருகன் மூன்று இடங்களில் வெவ்வேறுவிதமான வரலாற்றைக் கொண்டிருக்கிறான்.
திராவிடக் கடவுளான சிவன் தொன்மைக் காலத்தில் ஒரு சமயப் பூசாரியாக இருந்திருக்கலாம் என்பது அறிஞர்களின் கணிப்பு. இவரின் 'ஊழித் தாண்டவம்' பூசாரிகளின் சமயச் சடங்குகளில் நடைபெறும் ஆட்டமாக இருந்திருக்கலாம்; இதுவே மருவி 'வெறியாட்டு' (முருக வழிபாடு) என்று பெயர் பெற்றிருக்கலாம்; இப் பூசைகளும் சடங்குகளும் மயானப் பகுதியில் நடந்திருக்கலாம்.
சிவனுக்கும் ஆரியர்களுக்கும் உள்ள தொடர்பின் ஆரம்பமும் வளர்ச்சியும் ஸ்கந்த வழிபாட்டின் வரலாற்றில் இன்றியமையாதவை என்பதால் சிவனைப் பற்றிய சில வரலாறுகளை இங்கு எடுத்துக் காட்டுவதும் இன்றியமையாததாகும்.
சிவன் ஆரியக் கடவுளாக மருவியது காலப் போக்கில் நடந்தேறியது. இதற்குச் சான்றாகச், சுவேதாஸ்வதா உபநிடதத்தில் பிரம்மனும் உருத்திர சிவனும் ஒன்று என்ற கருத்து இடையிடையே காணப்படுகிறது என ஆ. வேலுப்பிள்ளை (1985 : 63) குறிப்பிடுவதைக் காட்டலாம்.
வேள்வியில் அக்கினியைத் தூதுவனாக்கி முப்பத்து மூன்று தேவர்களுக்கும் குதிரை முதலிய மிருகங்களைக் கொல்லவே வேள்வி நடத்தினர். சிவ வழிபாடு தொடக்கம் பெறுவதற்கு முன்பு அக் காலத்தில் நடந்த சமய மாற்றங்கள் எந் நிலையிலிருந்தன என்று அறிவது முகாமையாகும். இவ்வாறு வேள்வி செய்தோர் தாம் விரும்பிய செல்வம், புத்திரப் பேறு, நீண்ட வாழ்வு, சத்துரு வெற்றி முதலியவற்றை வேண்டினர். ஆரிய வழிபாடுகள் ஆண்களின் மேன்மையில் உருவாகின. காலப் போக்கில் ஆரிய வழிபாட்டு முறையில் அக்கினிக்குப் பலியிடும்போது உருத்திரனுக்கும் ஒரு ஒதுக்குப் புறத்தில் பலிகளிட்டுப் பூசை செய்தனர் என்கிறார் ஆ. வேலுப்பிள்ளை (1985).
சைவம் மருவிய 'இந்து (வைதிக) சமயம் கி.மு. 8-ஆம் நூற்றாண்டுக் கால கட்டத்தில் தொடங்கியிருக்கலாமா என்ற கேள்வி நியாயமானதே. கி.மு. 6-ஆம் 7-ஆம் நூற்றாண்டுகளில் இந்தியத் துணைக் கண்டத்தில் மட்டுமல்ல உலகின் பல பகுதிகளிலும் மனித சிந்தனையில் சமயம் முகாமையான இடத்தைப் பெற்றுள்ளது.
நீண்ட காலமாக ஆரியர்களின் வழிபாடுகள் அவர்களது தேவ மொழியான சமஸ்கிருதத்திலேயே நடத்தப்பட்டன. சாதாரண மக்களுக்குத் தெரியாத மொழியில் ஆரியர்கள் மந்திரங்களைச் சொல்லித் தங்களைப் பூலோகத் தேவர்களாகப் பிரகடனப்படுத்திக் கொண்டனர். இவ்வாறு தங்களது சமய ஆதிக்கத்தை மேம்படுத்திய ஆரியர்களுக்குச் சமண, புத்த சமயங்களின் வளர்ச்சிகள் எதிர்த் தாக்குதல்களைத் தருவனவாக அமைந்திருக்கலாம்.
இந்தியாவில் மகாவீரர் கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் சமண சமயத்தைத் தோற்றுவித்த காலத்தில் கெளதம புத்தரின்பெளத்தமும் தலையெடுக்கத் தொடங்கியது. அதே கால கட்டத்தில், கிரேக்க நாட்டில் சாக்கிரட்டிசும் சீனாவில் கொன்பூசியசும் தோன்றினர்.
இவ் அறிஞர் அனைவரும் சமயம் என்ற பெயரில் சமயவாதிகள் செய்யும் மோசடிகளை மக்களுக்கு எடுத்துரைத்தனர். இந்தியாவில் பெளத்தமும் சமணமும் மனிதத் தன்மையை மேம்படுத்தும் முறையில் வளர்ந்தன. சமணத்தையும் பெளத்தத்தையும் தழுவிய மக்களைக் கவர அக் கால கட்டத்தில் கடவுளின் படைப்பு ஒன்று இன்றியமையாததாக இருந்திருக்கலாம்; அதாவது,பாமர மக்களைக் கவர மிகவும்மேன்மையான கடவுளர்களை உண்டாக்குவது இன்றியமையாததாக இருந்திருக்கலாம். அக் கடவுள் ஆரிய சிந்தனையில் தோன்றிய 'ஸ்கந்தன்' என்றும் ஒரு அணுகுமுறையில் கொள்ளலாம்.
ஆரியர்கள் தமது வேள்விகளின்போது உயிர்ப்பலி கொடுத்தனர். இவ்வாறு உயிர்ப்பலி செய்வதை எதிர்த்து மகாவீரரும் புத்தரும் 'அகிம்சை பற்றி மக்களுக்குப் போதித்தனர். இதனால், கடவுளர்க்குப் 'பரிசுகள்' கொடுத்து வாழ்க்கையில் மேன்மை அடையலாம் என்ற ஆரிய தத்துவத்திற்கும் அகிம்சை நெறியைக் கடைப்பிடித்துத் தூய வாழ்க்கை நடத்தினால் உய்வடையலாம் என்ற சமண, பெளத்த போதனைகளுக்கும் இடையில் சமய எழுச்சிக்கான தத்துவப் புரட்சி நடந்துள்ளமையை அறியலாம். இத்தகைய தத்துவப் புரட்சியிலிருந்து பாமர மக்களைத் திசை திருப்ப ஆரியர்களுக்குப் 'புராணங்கள் தேவைப்பட்டன.
மேலும், அக் கால கட்டத்தில் 'சமஸ்கிருதம்' கடவுள் மொழியாக இருந்ததற்கு எதிரிடையாக சமணர்கள் மக்களின் மொழியாகிய பிராகிருதத்திலும், பெளத்தர்கள் தங்கள் பாலி மொழியிலும் தத்துவக் கருத்துகளைப் பரப்பினர். இதனால், சமண, பெளத்த சமயங்களின் வளர்ச்சி மக்களிடையே மிக வேகமாகப் பரவியது.இதே கால கட்டத்தில் பல புராணங்கள் எழுதப்பட்டன. மக்களைத் தம் வயம் வைத்துக் கொள்ள எந்த அளவிற்கு கடவுளரை மேன்மைப்படுத்தி எழுதலாம் என்பதற்கான வெளிப்பாடே "ஸ்கந்த புராணம்'.
ஆரிய வேதங்களில் எத்தனையோ தொன்மக் கதைகள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பது போல் உலகில் முதல் படைப்பு யார் என்பதும் கேள்விக் குறியாக இருக்கிறது.
வேதங்களில் ஆண் கடவுளர்களுக்குக் கொடுக்கப்படும் முதன்மை பெண் தெய்வங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. மாறாகத் திராவிடரிடத்தில் ஆண்களுக்குச் சமமான வாழ்க்கை முறை பெண்களுக்கு இருந்திருக்கிறது. தொல்குடிகளிடையே சக்தி வழிபாடு (எனும் அம்மன் / தாய்த் தெய்வ வழிபாடு) இருந்தமைக்கு ஏராளமான ஆதாரங்கள் உண்டு. இன்றும் வங்காளத்தில் நிலவும் 'காளி வழிபாடும்.
ஆரியக் கண்ணோட்டத்தில் 'ஸ்கந்தனின் மூலம் என்னவென்று திட்டவட்டமாகக் கூறவியலாத குளறுபடி இருக்கிறது. மாறாகத், தென்னிந்தியாவில் முருகனுக்கு
ஆரியர்கள் இந்தியாவில் ஊடுருவிய போது நாடோடி வாழ்க்கையையே அவர்கள் மேற்கொண்டிருந்தனர். இதற்கு நேர் மாறாக, சிந்துவெளி நாகரிகத்தின் எச்சங்களாக விளங்கும் புதைபொருள்களை வைத்துப் பார்த்தால், அதே கால கட்டத்தில் மிகவும் நாகரிகமடைந்த சமுதாயமும் இந்தியாவில் வாழ்ந்திருக்கிறது என்பது புலனாகும்.
நாடோடிச் சமுதாய வாழ்க்கையின் பின்னணியில் அமைந்த ஆரியக் குழுக்கள் வேள்விகளின் வாயிலாக அரசர்களுக்கும் வசதி மிக்கவர்களுக்கும் முன்னேற்றமான வாழ்வு கிடைத்ததற்குத் தங்களைக் கடவுளர்களின் தூதுவராகத் தாமாகவே பிரகடனப்படுத்திக்கொண்டு அதன்வாயிலாக இந்தியாவில் மேன்மை தங்கிய சாதியினராகத் தங்களை மாற்றிக் கொண்டனர்.
ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்து குடியேறியபோது, அவர்களுக்கு முன்பாகவே இந்தியாவின் பல பகுதிகளிலும் பல வகையான இனக்குழுவினர் பரந்து வாழ்ந்து வந்தனர். ஆரியர்கள் வந்தபோது இந்தியா முழுவதும் பரந்து வாழ்ந்திருந்த திராவிடக் குடிகள் போல இன்னும் பல இனக்குழுவினரும் இருந்ததாக வரலாற்றாய்வாளர் ரோமிலா தாப்பர் (Romilo Toper, 1968) குறிப்பிடுவதை இங்கு ஒப்பு நோக்கலாம்.
தாப்பர் கூற்றுப்படி, இந்தியாவில் கீழ்க்கானும் பல பெரிய இனக்குழுவினர் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது:
சமஸ்கிருதத்தில் ஸ்கந்த புராணம் எழுதப்பட்ட காலத்தின்போது இந்தியாவின் பல பகுதிகளில் ஏற்பட்ட மாற்றங்களை ஸ்கந்த வரலாற்றுத் தொடர்புகளுடன் இணைத்துப் பார்க்க வேண்டும் (கிபி 4-ஆம், 5-ஆம் நூற்றாண்டு) 'மாதா வழிபாடும் இடம் பெறத் தொடங்கியிருக்கிறது என்கிறார்.
ஆரியக் கடவுளர்கள் மக்களிடம் செல்லுபடியாகாதவர்களாக இருந்தனரா? அல்லது சிவனுக்கும் மேலாக ஒரு கடவுளைத் தங்கள் தத்துவ நியதியின்படி படைக்க ஆரியர்களுக்குக் கட்டாயம் ஏற்பட்டதா என்று கேட்பது நியாயமான கேள்வியாக இருக்கும்.
ஆதிகாலப் பழங்குடிகள் பலரிடமும் இருந்திருக்கிறது. எடுத்துக் காட்டாக, எகிப்திய மக்கள் சூரியனைத் தங்கள் கடவுள் என்றும் எகிப்திய அரசர்கள் தங்களைச் சூரியனின் வழித் தோன்றல்கள் என்றும் நினைப்பதைக் குறிப்பிடலாம்.
அலெக்சாண்டர் இந்தியாவை வெற்றி கொள்ள வேண்டும் என்ற திட மனத்துடன் வந்தார் என்பதற்குப் பல காரணங்கள் இருந்ததாம். அவற்றுள் சில பின்வருமாறு இராபின் லேன் பாக்ஸ்,1975:333-350 :)
Cymrcegoaf urocůrufuúO
இந்தியா முழுக்கத் தங்கம் பரவிக் கிடந்தது. இந்திய ஆடவர் 100 முதல் 200 வயது வரை வாழ்ந்தனர். இந்தியாவில் பகிரங்கமான இடங்களில் காதல் செய்தனர். சாதி (வர்ணம்) அடிப்படையில் மிக மேன்மையாக வாழலாம். கம்பளித் துணிகள் மரங்களில் கிடைத்தன. மிகவும் அற்புதமான வாசனைத் திரவியங்கள் காணப்பட்டன. வெள்ளியாலான பல கலைப் படைப்புகள் இருந்தன. காண்டாமிருகங்கள் சிவப்புத் தலையுடனும் நீலக் கண்களை உடையனவாகவும் காணப்பட்டன. * குள்ளர்களின் தந்திரங்கள் வாயிலாகவும் மந்திர வித்தைகளாலும் இடி, மின்னல்களை உண்டாக்கலாம்.
இத்தகைய அபரிமிதமான நம்பிக்கைகளுடன் அலெக்சாண்டருக்கு இந்தியாவில் நிறைய படிக்க வேண்டிய விடயங்கள் இருப்பதாகவும் கருதினாராம். இவற்றுக்கெல்லாம் மேலாகத் தன்னைக் கடவுளின் மகனாக மேன்மைப்படுத்திக் கொண்ட அலெக்சாண்டருக்கு அம் மேன்மையை நிலை நாட்ட இந்தியாவைக் கைப்பற்றுதல் மிகத் தலையானதாக இருந்தது.
இந்தியாவை, அதிலும் குறிப்பாகப் பஞ்சாப் பகுதியைக் கிரேக்க வனக் கடவுளும், ஒயின் போன்ற பானங்களின் அதிபதியுமான டையோனியஸும் ஹெரக்கிலியஸ் (Herecleus) எனும் கிரேக்க கடவுளும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்து பார்வையிட்டுச் சென்றதாகக் கிரேக்க நாட்டினர் நம்பினர். அத்துடன் ஸ்கைலாக்ஸ் (Scyllax) போன்ற மாலுமிகளும் இந்தியாவைப் பார்வையிட்டுத் திரும்பியதாக வரலாறுகள்கிரேக்கக் கடவுள் ஜியஸின் (Zeus) மகனென்று தன்னைப் பிரகடனப்படுத்திய அலெக்சாண்டர் இளவேனில் காலத்தில் இந்தியாவை அடைந்தபோது அவரின் காதலியான பார்சைன் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். குழந்தைக்கு ஹெரக்கிலியஸ் என்று கிரேக்கக் கடவுளின் பெயரையிட்டு மகிழ்ந்தார் அலெக்சாண்டர்; இந் நிகழ்வு அலெக்சாண்டருக்கும் இந்தியாவுக்கும் உள்ள 'ஆன்மீகத் தொடர்பைத் திட்டவட்டமாக்கியதாகக் கூறுகின்றனர் வரலாற்றாய்வாளர்கள்.
இந்தியாவுக்கு வந்த அலெக்சாண்டர் பஞ்சாப் மாமன்னனது யானைப் படைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது; எத்தனையோ போர்களைக் கண்ட மாவீரனான அலெக்சாண்டருக்கு இந்த யானைப் படைகள் பெருத்த வியப்பை உண்டாக்கின. தனக்கென ஒரு யானைப் படையை அமைக்க அலெக்சாண்டருக்கு ஐந்து ஆண்டுகள் ஆயின. அலெக்சாண்டரது பாசன்றயை யானைப் படை காவல் செய்தது.இத்தகைய யானை மகோன்னதத்திற்கும் முருகனுக்குக் கணபதி (யானை) தமயனானதற்கும் ஏதும் தொடர்புண்டா என்றுஆராய்ந்திட வேண்டும். சாதாரண வரலாறுகள் எவ்வாறு புராணங்களுக்குள் புகுந்தன என்பது சுவையான விடயமாகும்.
அலெக்ஸாண்டர் இந்தியப் புராணக் கதைகளை அறிந்திருந்தார்.கடவுள் சிவன் விலங்கின் தோலை அணிந்து நடனங்களை ஆடி இரசிப்பதுபோல் கிரேக்க கடவுளர்களுள் ஒருவரான பாச்சன்ட்ஸ் (BOcchants) என்பவரும் காட்டு விலங்குகளின் தோலை அணிந்து நடனங்களிலும் ஈடுபடுகிறார்.
கிரேக்க-இந்தியப் பண்பாடுகளுக்கு இடையேயான ஒற்றுமை அலெக்ஸாண்டரைப் பிரமிக்கச் செய்ததாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
அலெக்ஸாண்டருக்கும் அவருடன் உடன்படிக்கை செய்து கொண்ட இந்திய மாமன்னன் சந்திரகுப்த மெளரியனுக்கும் உள்ள தொடர்பையும் சந்திரகுப்த மெளரியனின் போர்த் திறமையையும் அவன் தன்னை அலெக்ஸாண்டருடன் ஒப்பிட்டுப் பல பெரிய போர்களை நடத்தி வெற்றி கொண்டதையும் "ஸ்கந்த குப்தா" என்று தன்னைப் பெயரிட்டு அழைத்துக் கொண்டதையும் இனி ஆராய்வோம்.
சந்திரகுப்த மெளரியனின் காலம் கி.மு. 322 - கி.மு. 298 ஆகும். முதலாம் சந்திரகுப்தனின் பிறப்பு பற்றிச் சரியான தகவல் இல்லை. எனினும், இவன் மகத நாட்டின் பெரிய பிரபுக் குடும்பத்தினன் எனக் கருதப்படுகிறது.
சந்திரகுப்தன் காலம் இந்தியாவின் பொற்காலம் என்று
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த இனம் என்று தன்னைத் தானே உயர்த்திக் கொள்ளும் தமிழர் மனநிலைக்கும் குன்றுக் கடவுள் குமரனுக்கும் என்ன தொடர்பு உள்ளது.
ஆதிகால மனிதர் குன்று சார்ந்த குறிஞ்சிப் பகுதிகளில் வாழ்ந்த காலத்தில் முருகன் கடவுளாகப் படைக்கப் பட்டிருக்க வேண்டும். சமூக ஆய்வாளரின் கருத்துப்படி, முருகன் ஒரு இனத்தின் தலைவனாக இருந்து, பெரும் வெற்றிகளையீட்டித் தெய்வீகத் தன்மைக்கு உயர்த்தப்பட்டு, நாளடைவில் ஒரு தெய்வமாக வணங்கப்பட்டிருக்கலாம். சமூக அடிப்படையில் மலையைத் தெய்வமாகவும் முருகனை மலை வாழும் இறையாகவும் வழிபட்டிருக்கலாம்.
ஆரிய வேதத்தில் குறிப்பிடப்படும் 'கிருஷ்ண' என்ற மக்கள்தான் வட இந்தியாவில் துவாரகைப் பகுதியில் வாழ்ந்த கிருஷ்ணனைத் தெய்வமாகக் கொண்ட நாடோடி மக்கள். இப்படி ஒவ்வோர் இனக்குழு மக்களின் வரலாற்றையும் ஆராய்ந்து கொண்டு சென்றால் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வழிபாட்டு முறைகள் இருந்திருக்கின்றன என்பது தெரிகிறது.
ஆரிய வழிபாட்டு முறை அவர்களது சமுதாயத்தின் வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கிறது.
அரைகுறை நாடோடித்தனமான ஆரியர்கள் இந்தியாவை ஊடுருவும்போது, மூன்று நிலையான சமுதாயக் குழுக்களாக இருந்தனர். இது, சாதியமைப்பு எப்படி வந்தது என்பதைக் காட்டுகிறது.
1. போராளிகள் : இவர்கள் நாடோடிச் சமுதாயத்தில் இன்றியமை யாதவர்களாகக் கருதப்பட்டனர். தமது பெரும் சொத்தான மாடுகளை எதிரிகள் களவாடிக் கொண்டு போகாமல் காப்பது இவர்களது முகாமையான பணியாக இருந்தது. இவர்கள் 'இந்திரர்' என்று அழைக்கப்பட்டனர். இவ் இந்திரரது வலிமை தெய்விகமாக்கப்பட்டது. வலிமை படைத்த போராளிகள் ஒரு கூட்டத்தின் தலைவனாக இல்லாமல், தலைவனாக இருந்தவரின் மகன் தலைமைப் பதவிக்கு நியமிக்கப்பட்டான். போரிடும் குழுவினர் நாளடைவில் சத்திரியர்கள் ஆயினர்.
2. சமயச் சடங்கு செய்வோர் : பலிகொடுத்து யாகம் செய்வதன் வாயிலாகத் தேவர்களிடம் தங்களுக்குத் தேவையானது கிடைப்பதாக இவர்கள் நினைப்பர். தங்களைவிட மேன்மையான சக்திக்குப் பலி கொடுப்பதன் வாயிலாகவும்வேள்விகள் செய்வதன் வாயிலாகவும் அதைத் திருப்திப் படுத்தலாம் என்பது இவர்களது நம்பிக்கை. பிராமணர்களின் தோற்றம் இவ்வாறே உருவானது. இவர்கள் இந்தியாவிலேயே தங்களை உயர்ந்த சாதியாக உயர்த்திக் கொண்டனர். சத்திரியர்களுக்கு இவர்களின் தேவையும் இருந்தது இதற்கு ஒருகாரணமாகும்.
3. பொது மக்கள் : எல்லா சமுதாயத்திலுமுள்ளது போலஆரிய சமுதாயத்திலும் பொது மக்கள் அனைத்துப் பொது வேலைகளையும் அதாவது, மர வேலை செய்வதிலிருந்து ஒரு சமுதாயத்திற்குத் தேவையான எல்லாத் தொழில்களையும் - செய்தனர். நாளடைவில் பல தொழில்களிலும் முன்னேறிய இவர்கள் வைசியர்கள்' ஆனார்கள். இந்தியாவிற்கு இவர்கள் வரும்போது எழுத்தறிவு இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. இவர்களின் இருக்கு வேதம் எத்தனையோ நூற்றாண்டுகளாக 'வாய்மொழி மந்திரமாகவே இருந்தது. அதே நேரத்தில், சிந்துவெளி நாகரிகச் சின்னங்கள்வாயிலாக மிகவும் நாகரிகமடைந்த ஒரு சமுதாய மரபு இருந்திருக்கிறது என்பது தெரிகிறது.
இவ்வாறாக, ஆரியர் சமுதாயத்தில் மூன்றுவிதமான 'குழுக்கள் இருந்தாலும் ஒருவரை ஒருவர் அடக்கியாளும் சமுதாயக் கொடுமை நிலவவில்லை. போராளிகள், பூசை செய்வோர், பொது மக்கள் உள்ளிட்ட எல்லோரும் சமமாக நடத்தப்பட்டனர். இவ் ஆரிய சமுதாயத்திற்கு இந்தியாவின் தொல்குடிகளுடன் தொடர்பேற்பட்ட பின்னரே சாதியமைப்பு உண்டானது என்கிறார் ரோமிலா தாப்பர் (Romila Thaper, 1978) அவரது கருத்துப்படி, இருக்கு வேதத்தில் அந்தக் கால இந்தியாவிலிருந்த பல இனக்குழுவினரின் பெயர்கள்.
கிமு 2-ஆம் நூற்றாண்டுக் காலத்தில் தமிழ் மன்னர்கள் இலங்கையை அடிமை கொண்டிருந்தனர். இவ்வளவு நாகரிகம் படைத்த சமுதாயத்தினுடைய தமிழ்த் தடயம் எங்கே? என்ற கேள்வி நம் முன்னே எழுகிறது.
சோழ மன்னன் கரிகாலனின் காலம் கி.மு. 4-ஆம் நூற்றாண்டு என்கிறார் தாப்பர். சேர மன்னன் ரோமரது கடற்படையைத் தகர்த்ததாகவும் கூறப்படுகிறது. கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டு மன்னர்கள் கிரேக்க நாட்டுடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தமை வரலாற்றுச் செய்திமுருக வழிபாடு குறித்துத் தாப்பர் (Romila Thoper, 1978) கூறும்போது, தமிழர்கள் முருகனைத் தங்கள் போர்க் கடவுளாக வணங்கினர் என்று குறிப்பிடுகிறார்.
போர்க் கடவுளாக முதன்மைப்படுத்தி வணங்கப்பட்டது மட்டுமல்லாமல் மனித இனத்தின் வளர்ச்சிக்கும் முருகன் இன்றியமையாதவனாகக் கருதப்பட்டான். அக் கடவுளை அரிசி போன்ற தானியங்களால் தமிழர் வணங்கியது மட்டுமல்லாமல் நடனத்தையும் இன்றியமையாததாகக் கொண்டிருந்தனர். இச் சடங்குகளைத் தலைமைப் பூசாரி செய்தார்.
முருக வழிபாடு எப்போது வளரத் தொடங்கியது என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். அதே நேரம், தென்னகத்தில் சமய அடிப்படையிலும் அரசியல் அடிப்படையிலும் நடந்த மாற்றங்களையும் ஆராய வேண்டும். வடக்கில் சமணமும் பெளத்தமும் வளர்ந்து கொண்டே வந்தபோது தென்னகத்தில் தமிழ் மன்னர்கள் ஆட்சி உச்சத்திலிருந்தது; ஒருவருக்கொருவர் போர் தொடுப்பதும் நாட்டைப் பிடிப்பதும் நடைமுறையான விடயங்களாக இருந்தன.
பல்லவர் காலத்தில் வடக்கிலிருந்து ஆரியர்களின் வருகை அதிகரித்ததாக வரலாறு கூறுகிறது. பல்லவர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகராய்க் கொண்டும் பாண்டியர்கள் மதுரையைத் தலைநகராகக் கொண்டும் ஆட்சி நடத்துகின்றனர். மகேந்திரவர்ம பல்லவன் காலத்தில் (கி.பி. 600 முதல் கி.பி. 630 வரை) மகாபலிபுரக் கோவில் குடையப்பட்டிருக்கிறது. இம் மன்னன் சமண சமயத்தைச் சார்ந்திருந்தவன்; இவன் அப்பரின் முயற்சியால் 'சைவம் தழுவினான்.
பல்லவர் காலத்தில், தமிழகத்தில் ஆரியர்களுக்குப் பல கிராமங்கள் தானமாக வழங்கப்பட்டன; அவற்றிற்கு வரி கட்டுவது என்னும் வழக்கம் ஆரியர்களிடையே காணப்படவில்லை.
சமணர்கள் ஆரியர்கள் போலல்லாது மக்களுக்கு விளங்கிய மொழிகளில் சமயக் கல்வியைக் கற்பித்தனர். அக் காலத்தில் அதிவேகமாகப் பரவிய 'பக்தி இயக்கம்' 'தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது. சமண சமயக் கொள்கைகளுக்கு எதிராகச் சைவ சித்தாந்த சிந்தனைகள் வளர்ந்தன. பக்தி மார்க்கம் கிபி 6, 7 -ஆம் நூற்றாண்டுகளில் தொடங்கினாலும் அதனுடன் 'முருக இணைப்பு என்பது கி.பி. 10-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே பரந்திருக்கிறது.
கி.பி. 6-ஆம், 7-ஆம் நூற்றாண்டுகளில் இந்தப் பக்தி மார்க்கம் ஆரியப் போலிகளைச் சிதறடித்து இந்தியா முழுதும் பரவியதாக வரலாறு கூறுகிறது. அப்பரும் சுந்தரரும் சம்பந்தரும் மாணிக்கவாசகரும் பக்திவாயிலாகத் தமிழை உயர்த்தினர். இவர்களது தமிழ்ப் பற்று 'பக்தி'யாக ஊற்றெடுத்தது. 'முருகன்' என்றும் ‘கந்தன்' என்றும் 'கதிர்காமக் கடவுள்' என்றும் 'குகன்' என்றும் 'குழந்தை வேலன்' என்றும் கொஞ்சி மகிழ்வதற்கு முருகனுக்கும் தமிழர்க்கும் இடையே ஒரு அபரிமிதமான இறுக்கம் வர அக் கால கட்டத்தில் நடந்த அரசியல் காரணங்கள் அடிப்படையாக இருந்திருக்கலாம்.
ஆரியர் உடமையாக இல்லாமல் கடவுள் சாதாரண மக்கள் சொத்தானதற்கு முருக வழிபாடு சரியான சான்றாகும். கந்த புராணம் தமிழில் எழுதப்பட (கி.பி. 1214 ஆம் நூற்றாண்டுகளில்) அறுபத்து மூன்று நாயன்மார்களும் தமிழுலகத்திற்கு வருகின்றனர். இவர்கள் ஆரிய பரம்பரையோடு மட்டும் அடையாளம் காணப்படவில்லை. தமிழின் சமத்துவம் அறுபத்து மூன்று நாயன்மாரையும் பார்த்தால் தெரியும். இவர்களுள் 12 பேர் மட்டுமே பிராமணர்கள்; நால்வர் ஆதி சைவர்கள்; 12 நாயன்மார்கள் மன்னர் பரம்பரையினர் அல்லது செல்வர் பரம்பரையினர்; 12 நாயன்மார் வேளாளர்; மற்றையோர் மீன் பிடிப்போர், கள் இறக்குவோர், வண்ணார், எண்ணெய் எடுப்போர், மாடு மேய்ப்போர் என்று பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள்; கடைசி இருவரும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தோர். அதில் முகாமையானவர் நந்தனார். தமிழ்நாட்டில் பரவிய இந்தப் பக்தி மார்க்கம் தமிழ்நாட்டிலிருந்து சமணத்தையும் பெளத்தத்தையும் துரத்திவிட்டது.பக்தி மார்க்கம் என்ற இயக்கம் அல்லது சமயப் புரட்சி அந்தக் காலத்தில் ஆரிய ஆதிக்கத்திற்கு எதிராக நடந்த ஒரு சமூகப் புரட்சி என்று சொன்னால் மிகையாகாது.
சமணமும் பெளத்தமும் (தமிழில் பரவிய) பக்தி மார்க்கமும் மக்கள் மொழியில் சமயத்தை எல்லா இடங்களிலும் பரப்பினர். சைவத்தின் சிவனும் வைணவத்தின் திருமாலும் தமிழ்ச் சமுதாயக் கடவுளர்களாக வணங்கப்பட்டபோது முருகனின் வழிபாடு உயர என்ன வரலாற்றுத் தொடர்புள்ளது என்பதைப் பல வழிகளில் ஆராயலாம். முருகனுக்குத் திருமால் (வைணவம்) மாமன் ஆக்கப்படுகிறார்; முருகன் இந்திரனின் (பிராமணியம்) மனைவியை மீட்டுக் கொடுக்கிறான். திருமாலை முருகனுக்கு மாமனாக்கக் கந்த புராணம் உதவியிருக்கிறது.
பல்லவர் காலத்திற்குப் பின் சோழர்கள் மிகப் பெருமையுடன் ஆண்ட காலத்தில் தமிழ்ப் பகுதியில் பெரும்பாலான கோயில்கள் கட்டப்பட்டன. கோயில் கலைகளின் வளர்ச்சி புத்தர் காலத்திலேயே தொடங்கியிருக்கலாம்.
கந்த புராணம் சோழர் காலத்தில் எழுதப்பட்டாலும் முருகனைப் பற்றிய கருத்தாக்கங்கள் தமிழ்நாட்டில் மிகவும் அருகிலே காணப்பட்டதாகக் குறிப்பிடுகின்றனர் அறிஞர் பெருமக்கள்
தெய்வ வழிபாடு என்பது தனி மனிதனின் உள் மனப் போராட்டத்தின் எதிரொலியாகும்.
ஒரு தலைவனுக்குரிய கம்பீரம், அழகு, வலிமை, கடமையுணர்வு, ஒரு கூட்டத்தை வழிநடத்தும் ஒழுங்குமுறை என்பன 'முருகன்' என்ற பாத்திரத்திற்கு இருந்திருக்கலாம்.
யூதப் பண்பாட்டை ரோமானியர் அழித்தனர்; அதே போல, அய்ரோப்பியர் இங்கிலாந்தைக் கைப்பற்றியபோது ட்ருயிட்ஸ் பண்பாட்டை (ஆங்கிலேயரின் ஆதிகாலப் பண்பாட்டை) அழித்தனர்; ஆப்பிரிக்கா சென்றபோது ஆப்பிரிக்கப் பண்பாட்டை அழித்தனர்; ஆங்கிலேயர்களும் தாங்கள் போன நாடுகளில் அங்கிருந்த பண்பாட்டை நாசப்படுத்தினர்; ஸ்பானியர்கள் தென் அமெரிக்க 'மாயன்'களின் பண்பாட்டை அழித்தனர்; ஆரியர்கள் தங்கள் மொழியை உயர்ந்த, தெய்விக மொழியாக்கி, இந்திய மொழிகளை அழித்தனர்; இந்தியக் கடவுளர்களைத் தங்களுடையதாக்கிவிட்டனர்; திராவிடக் கலைகளான யோகாசனம், சித்த வைத்தியம் போன்றவற்றையும் திரிபுபடுத்திவிட்டனர்.
ஆரியர்கள் தென் இந்தியாவிற்கு கி.பி. 2-ஆம், 3-ஆம் நூற்றாண்டுகளிலேயே வரத் தொடங்கியிருந்தாலும் பல்லவர் காலத்தில்தான் அவர்களின் சமய, மொழி, தத்துவ ஆதிக்கங்கள் தமிழர்களைப் பாதித்தன; அதன் எதிரொலிதான் 'பக்தி இயக்கம்' என்கின்றனர்
சிறப்பு
ReplyDelete