நம்மிடையே உள்ள சில முற்போக்குவாதிகளும் ஏதாவது ஒருவகையில் பிற்போக்காக இருக்கும் பொழுது எங்கே சரியான கருத்தை விவாதிப்பது?
நான் எழுதிக் கொண்டிருக்கும் "இந்தியாவில் ஜாதியம் அன்றும் இன்றும்" நூலில்தேடும் கருத்துகள் சமூக நடைமுறையில் சோதித்தறிய முயன்றால் அவை ஒருசார்பாக இங்கு காண்கிறேன்.
மார்க்சியத்தை பேசுபவரே சிலர் மார்க்சியத்தை மறுத்து நிற்கும் பொழுது எங்கே செல்வது நீங்களே சொல்லுங்கள்.
மனிதனின் வரலாறு எங்கிருந்து தொடங்கியது எவ்வாறு தோற்றுவிக் கப்பட்டது.. என்பதற்கு முன், இவ்வண்டங்களையும், அதில் அடங்கிய பால்வெளி மண்டலம், சூரியக் குடும்பங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், மலைமுகடுகள், மாகடல்கள், ஆறுகள், காடுகள், நில அமைப்புகள் பற்றி அறிவதென்பது மிக அவசியமானது என்பதை உணர முடிகிறது.
டார்வினின் கோட்பாடான, குரங்கினத்தின் மூதாதயர் வழியில் மனிதன்தோன்றினான் என்பதிற்கான சான்றுகளும், ஆதிபொது உடமை சமூகம் மெல்ல சிதைந்து.உபரியான விளைபொருள் உற்பத்தி செய்யும் ஆரம்ப காலத்தில் தாய்வழி சமூகம் தந்தை வழி சமூகமாக மாறி…. மனித சமுதாயம் பல குழுக்களாக பிரிந்து வலிமை மிக்கவன் குழு தலைவராக உயர்ந்து பின்பு உணவு உற்பத்தி மற்றும் வேட்டை, மேய்ச்சல், நில உரிமை போன்ற போராட்டத்தில் பல பழஇனகுழுக்களுக்கும் ஏற்பட்ட போர்கள்,சிற்றரசு, பேரரசு உருவான விதத்தையும் மிக எளிதாக புரிந்து கொள்ள முடியும் ….
மதங்கள் எப்போதும் அறிவியல் கண்டு பிடிப்புகள் மற்றும் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க பட்ட அனைத்து உண்மைகளையும் எதிர்த்தே வந்துள்ளது. அது சாக்ரடீஸ் பிலட்டோ முதற்கொண்டு தற்கால விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் வரை அனைவரின் ஆதார பூர்வ நிரூபனங்களை மறுத்து இந்த உலகம்,பால்வெளி அண்டம் உட்பட பிரபஞ்சம் முழுவதும் கடவுள் என்ற ஒரு தனிப்பட்ட நபரால் உருவாக்கப்பட்டது என்று இவ்வுலகில் மனிதனால்உருவாக்கப்பட்டஅனைத்து மதங்களும் அவற்றின் தலைவர்களும் மக்களை நம்ப வைத்து பலநூறு ஆண்டுகளாக மனித சமுதாயத்தை மூடநம்பிக்கையில் ஆழ்த்தியுள்ளது.
புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், மனிதனின் எண்ணங்களில் எழும் பெரும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உதவுவதாயிருக்கிறது; சமூக, மத, கல்வி சம்பந்தமான விடயங்களில் நமக்குள்ள நிலைபாடுகளை அது மாற்றுகிறது.
முதுகெலும்புள்ள பல விலங்குகள் இன்றில்லை அவை வாழ்ந்த காலம் 0.3 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமாகும். கற்ககால மனிதன் (Pleistocene) காலக்கட்டம் 0.2 லிருந்து 0.3 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டவர்கள். 30லிருந்து 20 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பணியுககாலம், பழைய கற்கால மனித வளர்ச்சி காலம் ஆகும்.இவ்வாறு மனிதனின் வளர்ச்சி போக்கை அறியும் நாம் மனிதன் மூலம் பற்றி பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் அவன் விலங்கினத்தை சேர்ந்தவன் என்பதில் ஐயமில்லை. அவன் ஹோமோசெபியன்(Homosapien)எனும் இனத்தை சார்ந்தவன். ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் என்று அடிப்படையில் ஒரே இனத்தின் எந்த ஆணும் பெண்ணும்கூடிஇனப்பெருக்கம்செய்யமுடியும்.இயற்கையின் இந்த நியதிப்படி அனைத்து மனிதர்களும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள். உலகில் இங்குமங்குமாக இவர்கள் இடம்பெயர்ந்து முறையாக அப்பூர்வீக மனிதவகையினரிலிருந்து தோன்றியவர்களே. மனிதன் நகர்வில் இப்பொழுதுள்ள ஆபிரிக்க நீக்ரோகள், ஐரோப்பிய வெள்ளையர்; வட சீனவிலுள்ள “மஞ்சள்’ நிற மக்கள், மற்றும் உலகெங்கும் சிதறுண்டுள்ள பல்வேறு வகையினர்.
- சமூக மாற்றத்திற்கான பொதுவான காரணம் என்ன? எந்த அடிப்படையில் இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன என்ற பொதுஉண்மையை, பொதுவான வழிகாட்டுதலையை, பொதுவான கண்ணோட்டத்தை மார்க்சியம் வழங்குகிறது. இந்தபொதுவான கண்ணோட்டத்தை உள்வாங்கி அதன் அடிப்படையில் குறிப்பான சமூகத்தின் அல்லது குறிப்பான நாட்டின் சூழல்களை ஆய்வு செய்து குறிப்பாக சமூக மாற்றத்திற்கான கொள்கை திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று மார்க்சியம் வலியுறுத்து கிறது. ஆகவே மார்க்சியமானது நிரந்தரமான வறட்டுசூத்திரங்களை முன்வைக்கவில்லை மாறாக குறிப்பான பிரச்சனைகளை ஆராய்ந்து முடிவெடுப்பதற்கான பொதுவானவழிகாட்டுதலையும் கண்ணோட்டத்தையும் வழங்குகிறது.
இந்தியாவை ஒரே நாடாக கட்டமைக்கப்பட முயற்சிக்கும் இன்று வருண முறை மற்றும் ஜாதி முறையை நோக்கினால் ஜாதி முறையானது எல்லா மாநிலங்களுக்கும் ஒன்றாகஇல்லை. ஏன் திராவிடர்கள் நாடு என்று அழைக்கப்படும் தென்னிந்தியாவிலே ஒன்றாகஇல்லை. தெலுங்கு பேசும் பகுதியில் காணப்படும் கம்மா, ரெட்டி கேரளாவில் நாயர், ஈழவர் கர்நாடகாவில் லிங்காயத்துகள் தமிழ்நாட்டுப் பகுதியில் காணப்படும் பள்ளர் கள்ளர் வன்னியர் மற்ற மாநிலங்களில் காணப்படுவதில்லையே ஏன்? தமிழ்நாட்டிலேயே வடபகுதியில்காணப்படும் வன்னியர் தென் தமிழகத்தில் இல்லை.தென் தமிழகத்தில் உள்ள தேவர் மறவர் வட தமிழகத்தில் இல்லையே.
பகுதி ரீதியாக நாம் இப்படி தேடும்பொழுது வருணங்களாக பிரிக்கப்பட்ட மக்கள் இந்தியஅளவில்ஒன்றாகதெரிந்தாலும் ஜாதிகளாக உள்ள பொழுது வேறுபட்டு காணுவது எப்படி? இவை இனக் குழுக்களாக இருந்த பொழுது ஏற்பட்டது என்று கூறுகின்றனர் வரலாற்றாசிரியர்கள்.
ஜாதியின் குறுக்கிய தன்மையானது மொழி மற்றும் பிரதேசம் சார்ந்ததாக உள்ளது. அதுவும் குறிப்பான பகுதியில் அதே நேரத்தில் வருணம் என்பது இந்தியப் பகுதியின் அனைத்துக்கும் பொருத்தமாக உள்ளது. ஆனால் சாதி பழங்குடிக்குழுவின் தன்மையோடு இணைந்து கருதவேண்டிய அவசியம் உள்ளது. ஆக ஒரு பழங்குடிக்குழு பிரதேசத்தில் ஏற்படும் உற்பத்தி சக்திகளின் செழுமை உற்பத்தித்திறன் மேம்பாடு ஆகியவற்றின் விளைவாக பல்வேறு எளிமையான தொழில் பிரிவுகள் தோன்றலாயின.இவ்வாறு உற்பத்தியான பொருள்களின் மதிப்புக்கு ஏற்ப தொழில்களுக்கு இடையில் வேறுபாடுகளும் அரும்பலாயின.ஒரு பிரதேசத்தில் தனித்தன்மை கருதி ஏற்பட்ட இத்தகைய தொழில் பிரிவுகள் ஒவ்வொன்றும் தமக்கென ஒரு கூட்டுணர்வை பேணியது.
ரிக் வேத சமூகத்தில் நான்கு வருண பாகுபாடு என்பதுகூட முழுமையாகச் செயல்படவில்லை. பிறப்பின் அடிப்படையில் தொழில் என்பது ரிக் வேத கால நடைமுறையாக இல்லை. பின் வேதகாலத்தில் கூட வருணங்களிடையிலான இயக்கம் முற்றிலுமாய் தடைசெய்யப்பட வில்லை.
தமிழகத்திலோ சங்க இலக்கியங்களுக்கு முந்திய காலகட்டத்தில் (கி.மு. 2 நூற்றாண்டுக்கு முன்) சமூக உருவாக்கம் குறித்த விரிவான செய்திகள் இல்லை. இன்றைய வடிவிலான சாதிய உருவாக்கத்தின் தோற்றத்திற்கு ஆதாரமில்லை.
சிந்துவெளிப் பண்பாடு குறித்து வரலாற்றாசிரியர்கள் பொதுவில் கருத்து மாறுபாடினின்றி ஏற்றுக் கொள்ளும் உண்மைகளை இப்படிப் சொல்லலாம்: சிந்துவெளிச் சமூகம் இரும்பின் பயன்பாட்டை அறிந்திராத உலோககாலச் சமூகம். ஏற்றத்தாழ்வும் வர்க்க வேறுபாடும் மிகுந்திருந்த ஒருவகை நகர நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகம் இது. விவசாயத்தை இம்மக்கள் அறிந்திருந்தனரெனினும் பிந்திய கங்கை வெளிச் சமூகத்திற்கும் இவர்களுக்குமிடையே வேறுபாடுகள் நிறைய. விரிவான அரசுருவாக்கம் நடைபெறாத இச்சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளை நிலைநாட்டுவதில்மதக் கருத்தியலாதிக்கத்தின் பங்குமுக்கியமானது. இவ்வகையில் பின்நாளைய சாதியமைப்பின் தொன்மமாதிரியை இங்கு அடையாளங்காணமுடியும். சிந்துவெளிப் பண்பாடு எவ்வாறு முடிவுக்கு வந்தது என்பது குறித்தும் ஐயத்துக்கிடமற்ற முறையில் நிறுவப்பட்ட கருத்துகள் ஏதுமில்லை. ஆரியப்படையயடுப்பு என்கிற கருத்து தவறானது என்று ரொமிலாதப்பார் போன்ற வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
l ஆக சாதியம் ஆரம்பம் என்பது குல சமூகம் உற்பத்தியில் ஈடுபடலான போது அவர்களுகிடையிலேயான வேலைப் பிரிவினையின் அடிப்படையில் அவரவர்களுக்கான வேலைபிரிவினையின் அடிப்படையில் செயல்பட்டதன் விளைவு குழுவிற்குள்ளே இருந்த சமத்துவம் குழைந்து தலைமை பொருப்பில் இருந்த தலைவர், பூசாரி என்ற பிரிவினர் உபரியான சொத்து சேரலாயிற்று ஒரு பக்கம் சொத்தும் இன்னொரு பக்கம் சொத்தற்றவர்களும் பிரிவினை ஏற்றதாழ்வு உருவாயிற்று. அன்று இந்தப் பிரிவினை சாதியாக இருக்கவில்லை பல நூறு ஆண்டுகள் பல மாற்றங்களின் ஊடாக சாதியின் உரு திரண்ட நிலை கிமு 2 நூற்றாண்டிலிருந்து தெரிந்தாலும் துலக்கமாக கிபி 2ம் நூற்றாண்டில் கோலோச்ச ஆரம்பித்தது எனலாம்.
தொழில் பிரிவினை அடிப்படையில் தோன்றிய ஜாதியானது குறிப்பிட்ட சமூகத்தில் வர்க்கமாகவும் சமூக வளர்ச்சி போக்கில் பல்வேறு மாற்றங்களினால் சிதைவுகள் உள்ளாகி இன்று ஒரே ஜாதிக்குள் பல ஏற்றத்தாழ்வுகளை காண முடியும்.
இப்படியெல்லாம் இருக்கும் பொழுது ஆரியர் திராவிடர் மோதல் எனக்கு புரியவில்லை? பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன் இந்தியா என்ற நாடக ஒன்றினைந்த பகுதியில்லை!ஆதேபோல் ஆரியர்களுக்கான நிலப்பரப்போ அல்லது மொழி வழியிலான பிரதேசமோ இல்லாத பொழுது எப்படி?
- முதலாளித்துவத்திற்கு முன்பு தேசங்கள் இல்லையா என்றால் பண்டைய பழங்குடி சமூகங்களீன் அழிவில் தேசிய இனங்களுக்கான சில கூறுகள்தாம் தோன்றி நாளாவட்டத்தில் வளர்ந்து வந்தன. நிலப்பிரபுத்துவத்தின் இறுதியில் அதாவது முதாலாளித்துவம் வளர்ச்சியடையும் கட்டத்தில்தான் மக்கள் தேசங்களாக உருவாகின்றனர். தேசிய இயக்கங்கள் தோன்றுகின்றன.இவை மார்க்சிய வரையறை.
நீங்கள் விளக்கு வீர்களா? இதற்கான விளக்கத்தை?
ஸ்டாலின் வரையறைப்படி, "ஒரு தேசம் என்பது ஒரு பொதுவான மொழி, பொதுவான வாழும் பகுதி, பொருளாதார வாழ்வு மற்றும் மன இயல்பு ஆகிய எல்லா அம்சங்களும் ஒருங்கே அமையப்பெற்ற வரலாற்று ரீதியாக உருவாகிய நிலையான மக்கள் சமூகம்". இது மனித குல வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கால கட்டத்தைச் சேர்ந்த வகையினம் - அதாவது முதலாளித்துவமும் சரக்கு உற்பத்தியும் தோன்றியபின்தான் தேசங்கள் தோன்றின. அவற்றின் வளர்ச்சியோடு சேர்ந்தே வளர்ந்தன. அவற்றின் முடிவில் அதாவது முழு பொது உடமை சமுதாயத்தில் தேசங்களும் மனிதர்களுக்கிடையே தேசிய இன வேறுபாடுகளும் மறைந்துவிடும் என்பது இதிலிருந்து பெறப்படுகிறது.
No comments:
Post a Comment