சாதி மட்டுமேதான் பிரச்சினை!
+++++++++++++++++++++++_++++++++++++
பிராமணர் மேலாதிக்கம் எப்படி ஏற்பட்டது சமூகத்தில் என்று தேடும் பொழுது ஆதாரம் கிடைக்கிறது.
இன்று ஏன் நிலைத்து நிற்கிறது ஜாதி என்பதற்கும் பதில் கிடைக்கிறது ஆனால் ஜாதி ஒழிப்பில் மட்டும்தான் பிரச்சினை.
இதுவரை உலகில் தோன்றிய எல்லா சமூக அமைப்புகளும் அதன் உள்முரண்பாடுகள் தீவிரமடையும் பொழுது உற்பத்தி சக்தியும் உற்பத்தி உறவும் சுமூகமாக வாழமுடியாது எனும் பொழுது சமூக மாற்றம் ஏற்படுகிறது அதாவது பழைய சமூதாயத்தை தூக்கி எறிந்து புதிய சமூதாயம் பிறக்கிறது என்கிறது மார்க்சியம் அவைதான் புரட்சி சமுக மாற்றம்...
ஆனால் நம்மவர் இங்கே எந்த மாற்றமும் வேண்டாம் எங்களுக்கும் இங்கே குந்த இடம் கொடுத்தால் போதும் என்கின்றனர். அதற்கு ஆளும் வர்க்கம் பரவாயில்லை ஆளுக்கு ஓர் ஆள் வாருங்கள் நாம் மட்டும் கூடிக்குலாவிக்கொள்வோம் அவர்கள் பிரச்சினையை பேசாதே... அப்படி பேசினால் நாம் நிம்மதியாக வாழ முடியாது என்கிறது. இந்த சுகபோகத்தை துய்க்க நினைப்போர்தான் "சீர்திருத்தவாதிகள்" இவர்கள் வேண்டியது மாற்றமோ புரட்சி அல்ல இங்கே இதிலே ஒருசிலர் வாழ வழி கேட்கின்றனர். மார்க்சியத்தை நேசிப்போர் இந்த கொடுமைக்கு காரணமான சமூகத்தை மாற்ற சொல்கிறோம்..
தோழர்களே, உண்மையில் நாம் வாழும் சமுகத்தில் 8% மக்கள் கூட நிரந்தர வேலையில் இல்லை எனும் ஆய்வு கூறுகிறது. அதேபோல் அதே நேரத்தில் தனியார் மற்றும் அமைப்புசார தொழிலில் 45 லிருந்து 50 % மக்கள் உள்ளதாகவும் கூறும் ஆய்வுரை என்ன சொல்லவருகிறது? (வேலைக்காக காத்துகிடப்போரில் இந்த சதவீதம்).
இங்கே ஏழை எளிய மக்களுக்கு வாழ வழியில்லை ஏன்பதே!
அவன் இந்துவாக இருந்தாலும், முஸ்லீமாக இருந்தாலும், கிருஸ்துவனாக இருந்தாலும் மேலும் ஜாதியில் அவன் எதுவாக இருந்தாலும் அதேபோல் மொழியால் அவன் எந்த மொழி பேசினாலும் ஏழையாக இருந்தால் அவன் இங்கு வாழ எந்த உத்தரவாதமும் இல்லை.
அதில் கூடுதலாக ஜாதியால் அடக்கி ஒடுக்கப்படும் மக்கள் கூடுதலாக கொடூரங்களை அனுபவிக்கிறார்கள். ஆனால் இதிலிருந்து விடுதலை என்பது பெரியார் சொன்ன வழியிலோ, அம்பேத்கார் சொன்ன வழியிலோ, ஏன் தலித்தியம் பேசுவோர் கூறும் வழியிலோ, இல்லையில்லை NGO கள் கூறும் வழியிலோ சாத்தியம் இல்லை...
ஏனென்றால் இவர்களின் எல்லா துன்பதிற்கும் காரணம் இந்த சமூக அமைப்பை கட்டிக்காக்கும் ஆளும் வர்க்கத்தின் அரசியல் பொருளாதார நலன்களை ஒட்டியே நிகழ்கிறது என்கிறது மார்க்சியம்.
ஆகவே இந்த ஒடுக்குமுறைக்கான நுகத்தடியை தூக்கியெறிய சொல்கிறது மார்க்சிய லெனினியம்.
இதனை விடுத்து இவர்களுடன் கூடிக்குலாவிக் கொண்டு அவர்கள் போடும் எச்சிலுக்கு வாலாட்டிக் கொண்டு அவர்கள் பின் அணி வகுக்க சொல்கின்றனர் சீர்திருத்தவாதிகள்.
அதனால்தான் தினம்தினம் இழைக்கப்படும் கொடுமைகளுக்கு ஒப்பாரி வைக்கும் இந்த சீர்திருத்தவாதிகள் இறுதியில் கொடுமைகளுக்கு காரணமானவர்களிடமே சரணடை சொல்லும் அவலம்...
பிராமணர் தோற்றம் வளர்ச்சி
தமிழகத்தில் சமணம் பௌத்தத்தை விட காலத்தால் முந்தையது என்றாலும் அது எப்பொழுது இங்கு அறிமுகமாகி வளர்ப்பது என்றும் காலகட்டத்தை அறுதிவிட்டுக் கூற முடியவில்லை. சமணம் தமிழகத்தில் கிமு 3 முதல் கிபி 7 வரையிலும் பௌத்தம் கிமு 2 முதல் கிபி 6 வரையும் மிகவும் செல்வாக்குடன் இருந்தன எனலாம். பௌத்தத்தை காட்டிலும் சமணம் தமிழகத்தில் மேலும் சில காலம் செல்லாக்குடன் இருந்தது என்றாலும் சைவ வைணவ எழுச்சிக்கு பின் அது வீழ்ச்சி அடைந்தது. தமிழகத்தில் இன்று பெரும்பான்மை நயினார் என்ற பட்டத்துடன் காணப்படும் சமணத்தைப் பின்பற்றுவோர் தமிழகத்தில் வடதமிழகத்தில் உள்ளனர்.
ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பில் சுரண்டுவோர்க்கு உரியதாக உள்ள அதிகாரத்தை பேணும் பொருட்டு வடிவமைக்கப்பட்டதே ஜாதியம்.
அவ்வாறு ஜாதி தோன்றுவதற்கு முன்னரே ஜாதிகள் தோன்றுவதற்கான அடிப்படைகள் உருவாகிவிட்டது. நிலவி வந்து வாழ்வியல் முறையில் (ஜாதியின்) வேற்றுமையில் ஒற்றுமையாக வாழும் இயங்கு நிலைக்கான கருத்தியலை தோற்றுவித்தது அந்தக் கருத்திலே வழங்கியவர்கள் சனாதனவாதிகளே.
நில பிரபத்துவ அமைப்பை வடிவமைக்கும் கருத்தியலை கட்டமைப்பதில் கிபி3 ஆம் நூற்றாண்டில் தொகுத்து வடிவமைக்கப்பட்ட மனுதர்ம சாஸ்திரத்திற்கு பெரும் பங்கு உண்டு. மேலும் வர்ண தருமத்தை பேணுவதற்காக பகவத் கீதை இறைவனால் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. இவை கி.பி 3-4ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டு பின்னர் மகாபாரத இதிகாச கதைகளுடன் இணைக்கப்பட்டது. நிலப்பரபுத்துவ உடன்பாடான கடவுள் கோட்பாட்டையும் அதற்கான பக்தி கோட்பாட்டையும் வடிவமைத்திருந்த கீதையும் மனுஸ்மிருதியும் பண்பாட்டுத்தளத்தில் வலுவான மாற்றங்களை ஏற்படுத்தியது நிலப் பிறப்புத்துவத்தை உறுதிப்படுத்த வடிவமைத்தது சனாதனத்தை கட்டியமைத்தவர்களே. கிபி 4ஆம் நூற்றாண்டு தொடங்கி கிபி 8ஆம் நூற்றாண்டில் சங்கரரின் அத்வைதம், பகவத் கீதை, மனுதர்மம் ஆகியவை நிலப் பிரபுத்துவ உறுதிப்பாட்டை நிலைநிறுத்தவும் பூசர்களானவர்ள் பிராமணர்கள் என்ற மேல்நிலை ஆதிக்கத்திற்கு வழிகோறியது.
காலவோட்டத்தில் வேதங்களைப் போற்றவும் ஏற்பட்ட புதிய வர்க்கப் பிரிவு பிரதேச பூசர்களுடன் இணைந்து உருவான பிரிவுதான் பிராமணர்கள் ஆரியர்கள் என்ற கோட்பாடு.
பகவத் கீதை வடிவமைப்பதற்கு முந்திய ஆதி இயற்கை கடவுள் குலதெய்வ கடவுளுக்கும் நிலப்பரப்புத்துவ தேவையொட்டி உறுதிப்பட்ட எல்லா தெய்வங்களையும் கட்டுப்படுத்தும் முறையில் பரம்பொருள் கோட்பாடுகள் கிபி 4ம் நூற்றாண்டில் தோன்றி வளரலாயிற்று .
அதற்கான முழு முதற் பரம்பொருட் கோட்பாடு சங்கரின் அத்வைதம் உயர்வடிவம் பெற்றது. பல்வேறு குலக்கடவுள்களை உள்வாங்கி ஆறு கடவுளை ஏற்றுக்கொண்டு ஆறு மதங்களை சனாதன நெறிக்குரியனவாக வடிவப்படுத்தி அக் கடவுள்களை சங்கரர் தனது மடத்தில் எழுந்தருளவும் செய்தார். அவையெல்லாம் மாயையுடன் இயைந்த பிரபஞ்சத்துத் தேவர்களே.
இவ்வாறு நிலப்பிரபுத்துவம் உறுதி அளித்த வேலை மனுதர்மம் பகவத் கீதை சங்கரர் அத்வைதம் ஆகியன சனாதன ஆன்மீக தலைமை வலுவடை செய்ததோடு. ஜாதிகள் ஒவ்வொன்றுக்கும் தத்தமது தொழில்களை மாறுபாடின்றிச் செய்தொழுகும் வாழ்நெறிக்கு தெய்வ அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தன.
அவ் வர்ணாசிரம நெறியைச் சமூகம் பிறழ்வின்றித் தொடர்வதற்கான கண்காணிப்பை அரசருக்கான பணியாக்கி அதற்கு ஏதுவாகக் கடவுளின் மனித உருவாக அரசர்கள் விளங்குவார் என்ற கருத்தியலை சனாதனிகள் விதைத்தனர்.
வர்ணங்கள் தமக்குள் கலந்து தூய்மை கேட்டு உறுப்பெற்றவையே ஆயிரக்கணக்கான ஜாதிகள் என்று மனுதர்மம் சொல்வதும். இனக்குழு கடந்த மண உறவுகள் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன. இனக் குழுக்களுக்கிடையே அகமணத்திற்கு மேலாக புறமணமும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இவ்வாறாக நிலவுடமை சமூகம் உறுதிப்படுவதற்கு முன் இருந்த நிலை மாறி நிலப் பிரபுத்துவ அமைப்பை கட்டிக் காப்பதற்காக தெய்வீக அங்கீகாரம் பெற்ற அரசு தொழில் ரீதியாக உழைப்பவர்களை நிலத்துடன் இறுகப் பிணைக்கப்பட்ட வம்சாவழியாக அரசு கண்காணிப்பை மேற்கொண்டது.
இவ்வாறாக நிலப்பிரப்புதுவ சமூகத்தில் அரசர் பூசையார் (பிராமணர்) ஆகியோர் கைவினை சாதிகள் மற்றும் பண்ணையடிமை ஜாதிகளை ஒடுக்கி வந்தனர்.
ஆங்கிலேயர் ஆட்சிக்கு தேவையொட்டியே பல மாற்றங்கள் ஏற்பட்டன. அவர்களது சுருண்டல் வெவ்வேறு தளங்களில் அவர்களுக்கு உகந்த வகையில் நடத்தினர். ஆங்கிலேயர்கள் மிக நுட்பத்துடன் ஜாதியை கட்டமைப்பை தமக்கு வசதியான முறையில் கையாளவும் செய்தனர். ஆங்கிலேயர்கள் தேவையை ஒட்டி மேட்டுக்குடியினர் காலனி எஜமானர்களுக்கு நெருக்கமாகி ஆங்கிலம் கற்று அரசு பணிகளில் ஆதிக்கம் செலுத்தினர். அதில் முக்கியமாக பிராமணர் பிராமணர் அல்லாதோர் பிரிவினருக்கு இடையேயான முரண்பாடும் நவீன சமூகத்தில் எல்லா ஜாதிகளும் மேல்நிலை நோக்கிய வர்க்க அமைப்பு உருவாகியது ஒவ்வொரு ஜாதியிலும் வர்க்கங்களாக பிளவுண்டு கிடக்கிறது.
ஜாதியின் இருப்பு
ஜாதிகளும் மதங்களும் உழைக்கும் வர்க்கத்தை பிரிப்பது என்பதால் அது நீடிக்கவே ஆளும் வர்க்கம் விரும்புகிறது.ஜாதிகளும் மதங்களும் மக்களின் வாழ்வாதார பிரச்சனையிலிருந்து அவர்களது கவனத்தைத் திசை திருப்புவதால் ஆளும் வர்க்கம் இதனை ஆழமாக வேண்டி நிற்கிறது.ஜாதியின் ஓர் அம்சம் என்னவென்றால் தீண்டாமை. தீண்டாமை சட்ட விரோதமாகி சட்டம் கொண்டுவரப்பட்டது ஆனால் ஜாதி நிலைத்து நிற்பதற்கு ஜாதியத்தின் அடித்தளங்கள் விரிவாக்கப்படுத்தப்பட்டது. ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பது ஜாதி அடையாளங்களை மீட்டுருவாக்கவே செய்கின்றது ஜாதியை வலுப்படுத்தவும் செய்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை சமூகப் பண்பாட்டு மாற்றத்திற்கான கோட்பாட்டில் சமஸ்கிருத மயமாதல் மட்டும் முன் வைக்கவில்லை மாறாக அதற்கு கேள்விக்குள்ளாக்கும் தரவுகளை முன்வைக்கிறது .பண்பாட்டு அளவில் தென்னிந்திய பிராமணர்களும் வட இந்திய பிராமணர்களும் வேறுபடுத்துவதும் பிராமணர்களின் வாழ்வு நெறி என்றும் மாறாதது என்றோ அவர்கள் வேத புராணங்களில் கூறப்பட்டுள்ள முறைப்படி மாறாமல் வாழ்ந்து வந்துள்ளனர் என்று கூறும் அளவிற்கு அனைத்து பிராமணர்களும் ஒரு வழிபட்ட வாழ்வியல் நெறிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை இன்னும் சொல்லப்போனால் பிராமணர்களின் மற்றமே மற்றொரை காட்டிலும் விரைந்து நிகழ்ந்து இருக்கிறது.
வேதகால பிராமணர்கள் சோமம் என்னும் போதை தரும் மதுவை பருகினார்கள் மாட்டுக்கறி உண்டார்கள் தெய்வங்களுக்கு உயிர் பலியை செய்தார்கள் இந்த நிலை வேதகாலத்திற்கு பிந்தைய நாளில் ஜெயன புத்த சமயங்களின் தாக்கத்தினால் மாறியது என்றாலும் இன்றும் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக காஷ்மீர் வங்காள மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பிராமணர்கள் மாமிச உணவு உண்கிறார்கள். கி.பி ஆறாம் நூற்றாண்டில் எழுந்த சமணத்தின் செல்வாக்கால் பிராமணர்கள் புலால் உண்ணுவதை நிறுத்திக் கொண்டார்கள் என்பது குறிப்பு . இன்னும் கூட புலால் உண்ணும் பழம் மரபின் எச்சம் பிராமணர்களிடம் காணப்படுகிறது ஆந்திராவில் கர்னூல் மாவட்டம் கம்பம் மாவட்டத்திலும் மாதங்கி வழிபாட்டின் போது தாழ்த்தப்பட்ட மக்களான மாதிகர் வீட்டில் எருமை கறி சமைத்து அதனை பரிமாறுவதும் பிராமணர்கள் உண்பதும் ஆண்டுக்கு ஒரு முறை சடங்காக நிகழ்கிறது. (தமிழர் மானுடவியல் பத்வத்சல பாரதி பக்கம் 170 171 அடையாளம் வெளியீடு ).
இவ்வாறான வாழ்க்கை முறையை கொண்ட பிராமணர்கள் காலம்தோறும் மாறி வந்துள்ளது மனுதர்மம் யக்ஞவல்கியம் போன்றவை சுட்டிக் காட்டுகின்றன. வேதகால சமூக சட்டதிட்டங்களை விவரிக்கும் இந் நூல்கள் சமுதாயத்திற்கு ஒவ்வாத தீமைகளை ஏற்படுத்துகின்ற ஆசாரங்களை அகற்றிவிட்டு அவற்றுக்கு மாறாக புதியவற்றை புகுத்தி உள்ளதையும் நாம் காண வேண்டும். காலத்துக்கேற்ப வாழ்க்கை முறை மாறி வந்துள்ளதை சுட்டிக்காட்டுவது அல்ல மேற்கூறிய தரவுகளின் நோக்கம் பிராமணர்களின் வாழ்வியல் முறை எந்த ஒரு காலகட்டத்திலும் மாறாமல் வரவில்லை என்பதையும் மாற்றத்துக்கு எந்த வகையான வேத புராணங்களும் துணை நிற்கவில்லை என்பதின் சுட்டிக்காட்டுவது தரவுகளின் நோக்கமாகும். (அதே நூல் பக்கம் 171 ).
நவீன கல்வி தொழில் மயமாக்கும் நகரமயமாக்கும் போன்றவற்றை உள்ளடக்கிய மேற்கத்திய பண்பாட்டுகளோடு அனைத்து பண்பாடுகளும் ஆட்டம் கண்டு இருக்கிறது. நவீனத்துவமும் பிராமணர்களின் நகர்வும் மற்ற ஜாதியினரின் சமூகம் மாற்றத்திற்கான மையமாக மட்டும் பிராமணர்களின் வாழ்க்கை முறை என்று எல்லை இடுவது சமஸ்கிருத மயமாதல் கோட்பாட்டின் முரண்பாடாகும் (மேல் அதேநூல் பக்கம்171).
ஆரியர்களின் தனித்தன்மை சமண புத்த சமயங்களின் தாக்கம் எவ்வாரெல்லாம் மாறி வந்துள்ளது என்பதை புரிந்து கொள்ள சில விளக்கம் ... பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய சைவ சித்தாந்தமும் பன்னிரண்டாம் நூற்றாண்டு தோன்றிய லிங்காயத் இயக்கமும் பிராமணியத்துக்கு எதிரான மாற்றுக் கருத்துகளை முன் வைத்தன ... அப்படி என்னும் பொழுது சைவ உணவு முறை தமிழ் பண்பாடு என்று கூறப்படும் பல்வேறு பழக்கவழக்கங்கள் இன்று பிராமணியமாக ஊகிக்க இயலாத அளவிற்கு பண்பாட்டு உருவாக்கத்தின் கலவையாக அமைந்துள்ளது.
இதனைப் புரிந்து கொள்ள சங்ககாலத்திற்கு பிந்திய காலத்தோடு தொடர்பு படுத்துவது பொருத்தம். கிபி ஆறாம் நூற்றாண்டில் பல்லவர் ஆட்சி யின் ஆதிக்கம் எழுச்சி மேலோங்கி இருந்த தென்னிந்தியாவில் சகாப்தம் முடிந்தது கல்வெட்டுகளை காணும் பொழுது கிபி 6-9 நூற்றாண்டு காலகட்டங்களில் பல்லவர்களும் பாண்டியர்களும் தம்மிடையேயும் தக்காண அரசுகளோடும் போரிட்டுக் கொண்டும் இணக்கம் கண்டும் வாழ்ந்த காலகட்டத்தில் ஏற்பட்ட பண்பாட்டு மறுமலர்ச்சி ..அக்காலகட்டத்தில் ஏற்பட்ட பரஸ்பர போக்கில் பிராமணர்கள் தமிழ்வாய மாக்களும் தமிழர்கள் சமஸ்கிருதமயமாக்களும் ஏற்பட்டன. (174).
மேல் ஜாதியினரின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றி கீழ் ஜாதியினர் தங்கள் தகுதிகளை உயர்த்துக் கொள்ளும்போது சாதி சமூகத்தின் உயர் குடியாக்கும் எனும் கருத்தமைவு கீழ்குடியினர் தங்கள் பழக்க வழக்கங்களை வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொண்டு உயர்குடியாக மாற வேண்டும் என்ற எண்ணம் தகுதி உயர்வை ஏற்படுத்திக் கொண்டால் அவர்கள் அனைவரும் மேல் ஜாதியினராக மாறிவிட முடியுமா?
பிராமணர்கள் அல்லது மேல் சாதி அடிப்படையில் மேல் உள்ளவர்கள் தங்களின் சொந்த நலனுக்காக சில கீழ் ஜாதியில் உள்ளவர்களை தேர்ந்தெடுத்து தங்களோடு இணைத்து வளர்த்து விடுவதனால் என்ன மாற்றம் ஏற்பட்டது பார்ப்போம்.
இடைக்காலத்தில் சோழர் ஆட்சியின் பொழுது ராமானுஜர் பிராமணர் அல்லாதவரை வைணவ சமயத்திற்கு ஈர்ப்பதற்காக சமய சடங்குகள் செய்து பூணூல் அறிவித்து வைணவப் பிராமணராக மாற்றினார். அதேபோல் இடைக்கால மன்னர்கள் பாவ நிவர்த்திக்காகவும் இறைவனருள் பெற வேண்டியும் இலட்சக்கணக்கான பிராமணர்களுக்கு விருந்தளிக்க வேண்டியதாக இருந்தால் பிற வகுப்புலிருந்து ஏராளமானவர்கள் பிராமணராக மாற்றப்பட்டனர் . இன்னும் பிராமணர் பற்றி எழுத்து வரலாற்றில் இடம்பெறும் இன்னொரு செய்தி கவனிக்கத்தக்கது கடம்ப குலத்தை சார்ந்த மயூரவர்மனுடைய ஆட்சி காலத்தில் சில ஆந்திர பிராமணர்கள் தென் கன்னடத்திற்கு அழைத்துவரப்பட்டார்கள் யாகத்திற்கு போதுமான அளவு பிராமணர் கிடைக்காத காரணத்தினால் அவ்வாறு அழைத்து வரப்பட்ட ஆந்திர பிராமணர்கள் பிராமணர்கள் இல்லாத ஜாதின் பல குடும்பங்களை தேர்வு செய்து பிராமணர் ஆக்கி அவர்களுக்கு குடும்பப் பெயரையும் தந்துள்ளனர். (மேல் அதேநூல் பக்கம்181)
ஆக மன்னர்கள் அதிகாரத்தளம் சர்வ வல்லமை பெற்ற தாயினும் வல்லமையின் தளம் தொடர்ந்து தாக்கப்பட /உயர்த்தப்பட பிராமணர்களின் சடங்கியல் தளத்தை அது கோரி நிற்பதால் இங்கு அதிகாரம்(Power) தகுதி (status) ஆக இரண்டும் தன்னியல்புகளுடன் நிலைபெறாமல் பிராமணர்களின் சடங்கு தகுதி மன்னர்களின் சர்வாதிகாரத்தை தன்வசம் உச்செரித்துக் கொள்கின்றது. இவ்வாறு அதிகாரம் தகுதியாகிய இரண்டும் தனித்தியங்கும் கூறுகள் ஒன்றோடு ஒன்று ஒத்திசைவு பெறாமல் எதிர்நிலையில் ஒன்றை ஒன்று மறுதலித்துக் கொண்டு ஒன்று மற்றொன்று தன்வயப்படுத்திக் கொண்டது என்பதே ஜாதி சமூகத்தின் படிநிலை தர்க்கமாக வாய்ப்பாடாக அமைந்தது (மேல் அதேநூல் பக்கம்179).
தீட்டு என்ற பண்பாட்டு வரவே தீண்டாமையின் மையப்புள்ளியாக அமைந்துள்ளது.
யாழ்ப்பாணத் தமிழர் பண்பாட்டிலே தீட்டும் துடக்கும் மிகவும் முக்கியமான நடைமுறைகளாக விளங்குகின்றன.இவை பற்றி ஆய்வுகள் தற்போது வெளிநாட்டறிஞர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தீட்டும் துடக்கும் சமய நடைமுறைகளோடு பெரிதும் தொடர்புபட்டுள்ளது.அதனால் இந்து சமய நடைமுறைகளின் தோற்றம் அடிப்படையிலேயே தீட்டுத்துடக்கு சம்பந்தமான ஆய்வை அறிஞர் மேற்கொள்ளுகின்றனர். ஆனால் பண்டைய தமிழர்நடைமுறைகளை நுணுகி ஆராயும்போது சமய நடைமுறைகள் இடைக் காலத்திலே தமிழர் பண்பாட்டிலே வந்து கலந்ததை உணரலாம்.(என்கிறார் நூலாசிரியர்)
தொல்காப்பியச் சூத்திரம் இதனைத் தெளிவாக விளக்குகின்றது.ஆண் பெண்ணின் இணைப்பு கற்பு நிலையிலே ஏற்பட்ட பண்பட்ட காலத்திலே இந்நடைமுறை தோன்றியது.தொடா மகளிர் எனச் சங்க இலக்கியம் குறித்த சொற்றொடர் தற்போதும் தொடமாட்டாள்? என யாழ்ப்பாணத் தமிழர் மொழியிலும் பண்பாட்டிலும் நிலைத் துள்ளது.
பெண்ணின் உடலில் தோன்றும் மாதவிடாய் ஒரு ஒழுங்கு நிலையிலே தோன்றி மறைவதுஅதனால் அவ்வொழுங்கு நிலைமையை உணர்த்தவும் சில தமிழ்ச் சொற்கள் தோன்றின. மாதத் தீட்டு,மாதவிலக்கு,மாதவிடை,மாதத்தூரம்,மாதச் சுகவீனம்,மாதவிடாய் என்னும் சொற்கள் இன்றும் அவ்வாறு வழக்கிலுள்ளன.மாதவிடை என்னுஞ் சொல்லே மாதவிடாய் என மருவிற்று.
பெண்ணை மையமாகக் கொண்டு தமிழர் பண்பாடு வளம் பெற்றதை இந்நடைமுறைகள் மூலம் தெளிவாக உணரலாம்.பெண்ணுடன் தொடர்புடைய பூப்பும்,பிறப்பும் பல நடைமுறைகளைக் கொண்டுள்ளன.
1.தீட்டு நாள் நடைமுறைகள் 2. அழுக்கு நிலை பேணல் 3. உணவும் உடையும் 4. புனிதப்படுத்தல் தீட்டுக்கழிவு 5. வீடு மையமாதல் 6. குடும்ப நிலையில்தீட்டும் கழிவும் 7. சமூக நிலையில் தீட்டும் கழிவும் 8. நம்பிக்கை சம்பந்தமானவை 9. வழிபாட்டு நிலையில் 10. கால அடிப்படையில் 11. கருவிக்கையாட்சி நிலையில் 12. தொழில் நிலையில் 13. பிறபண்பாட்டுக் கலப்பு நிலையில் 14. நோய் நிலையும் மாற்றும் முறையும்.
இவ்வாறு பிறப்பிலிருந்து இறப்புவரை தொடரும் இந்த சுழறச்ர்சியில் தீட்டு தீண்டாமை புனிதம் என்ற சமுக வழிமுறைகள் சமய வழிமுறையோடு பின்னிப்பிணைந்துள்ளதை காணலாம்.பூப்பின் போதும் பிறப்பின் போதும் ஏற்படும் அழுக்கு நிலையைப் பேணச் சில நடைமுறைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.தீட்டுடன் இருக்கும் பெண்களின் தேவைகளை வயதில் முதிர்ந்த பெண்கள் கவனித்தனர். இக்காலங்களிலே அணியும் சேலை தீட்டுச்சீலை என அழைக்கப்பட்டது. இச்சீலையை வண்ணார் அழுக்ககற்றிக் கொடுப்பர்.இதனால் வண்ணாத்தியே சீலைகளைக் கொண்டு வந்து கொடுப்பவளாகவும் எடுத்துச் செல்பவளாகவுமிருந்தாள்.
புனிதப்படுத்தல் தீட்டுக்கழிவு- தீட்டுள்ள பெண் தலைமுழுகுவதன் மூலம் புனிதப்பட்ட வளாகக் கருதப்பட்டாள்.இதனைத் தீட்டு முழுக்கு என அழைத்தனர்.சங்க இலக்கியங்களிலும் மகப்பெற்ற மகளிர் நீராடுதல், நெய்யாடுதல் என்பன பற்றிய குறிப்புகள் உண்டு.தீட்டு, வீட்டை மையமாகக் கொண்ட நடைமுறைகளோடும் இணைந்துள்ளது.
தீட்டு நிலையால் முக்கியத்துவப் படுத்தப் பட்ட போது அதற்கான நடைமுறைகளும் ஏற்படுத்தப் பட்டன.
இயற்கைநிலையாக அன்றிச் செயற்கைநிலையிலே துடக்க நடைமுறைகள் தமிழர் வாழ்வில் இணைய வீட்டின் அமைப்பிலே ஏற்பட்ட மாற்றங்களும் வழி செய்தன. இந்நிலை பிறபண்பாட்டுக் கலப்புகளிலே வேகமும் முன்னேற்றமும் பெற்று இன்று வரையும் நிலைத்து நின்று வருகிறது.
தனிமனித வாழ்வு குடும்ப நிலையில் உறுதி பெற்றுச் சமூக நிலையிலே வளர்ச்சி பெற்ற போதும் நடைமுறைகள் விரிவடைந்தன. தீட்டும் அதனால் சமூக நிலையிலே பரவலாக்கப்பட்டது. முக்கியமாகத் தொழில் நிலையால் இணைந்திருந்த சமூக உறவுகள் தீட்டின் மூலம் மேலும் பலப்படுத்தப்பட்டன. வழிபாட்டு நடைமுறைகளில் பல சமூகத்தவரும் பங்கு பற்றுவது தீட்டினால் கட்டுப்பாடு செய்யப்பட்டது. புனிதமானவர்கள் மட்டுமே வழிபாட்டு நடைமுறைகளில் பங்கு கொள்ளலாம் என்ற நியதி ஏற்பட்டது. பெண்ணின் தீட்டோடு தொடர்பு கொண்ட பிற சமூகத்தவரும் தீட்டுப்பட்டவராயினர். வழிபாட்டு நடை முறைகளைப் பண்டு தொட்டுச் செய்து வந்த வண்ணாத்தியும் இதனால் கட்டுப்பாட்டுக்குள்ளானாள்.பண்டைய இலக்கியங்களில் ஆடைகளைச் சுத்தம் செய்யும் வண்ணாத்தி புலைத்தியென்றழைக்கப்பட்டாள்,அவள் தெய்வ நடைமுறைகளோடு தொடர்பு கொண்டிருந்ததைப் புறநானூறு கூறுகிறது.முருகு மெய்ப்பட்ட புலைத்தி என்னும் சொற்றொடர் இதனை நன்கு விளக்கும்.தீட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வண்ணாத்தி வழிபாட்டு நடைமுறைகளைச் செய்பவளாகவும் இருந்தாள்.இன்றும் யாழ்ப்பாணத்திலே வண்ணார் கோவிலுக்குள் சென்று சில நடைமுறைகளைச் செய்கின்றனர்.
தொழில் நிலையிலே தொடர்பு கொண்ட ஏனைய சமூகத்தவரும் தீட்டுடன் தொடர்பு படுத்தப்பட்டனர். மீன் பிடித் தொழில் செய்வோர், மரமேறுபவர், பறையடிப்போர், மயிர்வினைஞர், கொல்லர், தச்சர், தட்டார், கூலி வேலை செய்யும் பள்ளர், எண்ணையூற்றுவோர்,ஆடை நெய்பவர்,எடுபிடி வேலை செய்வோர் எனப் பல்வேறு தொழில் செய்வோரும் பிறப்புடன் பல நிலைகளால் தொடர்புற்றிருந்தனர்.
தீட்டு நடைமுறைகள் சில நம்பிக்கைகளின் அடிப் படையிலும் தோன்றியுள்ளன.
வழிபாட்டு நடைமுறைகளில் பெண் முக்கிய பங்கு கொண்டவளாக இருந்துள்ளாள்.யாழ்ப்பாணத் தமிழரது வழிபாட்டு நடைமுறையிலே 'விளக்கேற்று வைத்தல்’என்பது முக்கியமான நடைமுறையாக உள்ளது. மாதவிடாய்தீட்டுக் காலத்திலே பெண்கள் இந்நடைமுறையைத் தவிர்த்தனர்.ஆண்களும் அக்காலகட்டத்தில் அப்பொறுப்பை ஏற்காததால் முற்றாக தவிர்க்கும் நிலையும் தோன்ற வாய்ப்பாயிருந்தது.பிற்காலங்களிலே கோயில் அமைப்புத் தோன்றிய போது தீட்டுள்ள பெண்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. தீட்டு நிலையினைக் காட்டி கோயில் வழிபாட்டு நடைமுறைகளைப் பெண்கள் செய்வதும் தடுக்கப்பட்டது.இதனால் தீட்டு நிலையிலே தொடர்பு கொண்ட அனைவரையுமே தடுத்து வைப்பதும் இலகுவாயிற்று. புனிதப்படுத்தும் சடங்குகள் பரவலாக்கப்பட்டன. தீட்டுக் கழிவு நாள் புனிதப்படுத்தும் நாளாக வழிபாட்டு நடைமுறைகளுடன் இணைந்தது.தீட்டுள்ள பெண் மட்டுமன்றி அவளைச் சார்ந்த ஆண்களும் இதனால் தீட்டுடன் தொடர்பு படுத்தப்பட்டனர்.
தீட்டு குடும்ப நிலையிலும் சமூக நிலையிலும் பரவ உதவிய தொழிலாகவும் வண்ணாத் தொழில் விளங்கியது.பிற்காலங்களிலே இத்தொழிலாளர்களுக்கு மாதாந்தம் வருமானமாக ஒவ்வொரு வீட்டவருமே அரிசியோ பணமோ கொடுக்கும் நடைமுறையும் ஏற்பட்டது.
யாழ்ப்பாணத்திலே வழிபாட்டு நடைமுறைகள் பெண்களால் நடத்தப் பெறாமைக்கு ஆரியப் பண்பாட்டின் கலப்பே முக்கிய காரணமாய் அமைந்ததெனலாம்.பிறப்புத் தீட்டினைப் புனிதப்படுத்தப் பிராமணர் வந்து புனிதமாக்கும் நடைமுறை ஏற்பட்டது. இந்நடைமுறை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட போது வேளாளரால் மட்டுமே செயற் படுத்தப்பட்டது. ஏனைய தொழில் நிலையாளரிடமும் காலகதியிலே பரவியது.
தீட்டுக்கழிவு புனிதப் படுத்தும் சடங்கு இந்நடைமுறை இடையிலே தேவை கருதி இணைக்கப்பட்டதென்பதும் தெளிவாகின்றது.யாழ்ப்பாணத்தமிழர் வாழ்வியலில் பிறப்பு, பூப்பு, இறப்பு என்ற மூன்று நிலைகளிலும் துடக்கு தொடர்புற்றிருப்பதைக் காணலாம் தீட்டுடன் மட்டுமன்றி இறப்பிலும் பலரைத்தொடர்பு கொள்ளச் செய்வதற்காகவே இந்நடைமுறை ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.இறப்பு நடந்த வீட்டையும் பிராமணர் வந்து சடங்கு மூலம் புனிதப் படுத்தினர்.
பிராமணர் வழிபாட்டு நடை முறைகளைச் செய்யும் தகுதியுடையோராக அமைந்தனர். புலால்,கள் என்பனவற்றுடனும் அசுத்தங்களுடனும் தொழில் நிலையிலே தொடர்புற்றவர் தாழ்த்தப்பட்ட மக்களாயினர்.உயர் சாதி,கீழ் சாதி,இடைச்சாதி என சமூக நிலையிலே மக்களிடையே பாகுபாடு தோன்றியது. சிறப்பாக இலங்கைத் தமிழரிடையே அமைந்துள்ள சாதிப்பாகுபாடு இதனைத் தெளிவாக விளக்குவதாயுள்ளது. பெரிய புராணம் போன்ற நூல்களிலே கோயிலினுள்ளே செல்ல முடியாத நாயன்மார் பற்றிய குறிப்புகளைக் காணலாம்.தீண்டத்தகாத சாதியினர்’என்ற பாகுபாடும்தோன்றியிருந்தது.
சாதித்தீட்டு மனப்பான்மை ஆழமானதாகவும் காணப்பட்டது.பிராமணர்,சைவர்,குருக்கள் போன்றோர் ஏனையோரைத் தீண்டாது வாழ்ந்தனர். தென்னகத் தமிழர்களில் பிராமணர் நிலச் சொந்தக்காரர்களாகவும் இருந்தமையால் பொருளாதார ரீதியாக ஏனைய தொழில் செய்வோரைக் கட்டுப்பாடு செய்யவும் சாதித்தீட்டு என்றசெயற்கையான அழுக்குநிலை கற்பிக்கப்பட்டது. தீட்டுள்ள பெண்ணை அசுத்தமானவளென்று எண்ணித் தொடாமலிருந்ததைப் போலவே அசுத்தமான தொழில் செய்வோரையும் தொடமுடியாதவர்களாக எண்ணினர். வீடு என்ற நிலையில் மட்டுமின்றிக் கோவில் என்ற பொதுநிலையிலும் இந்நிலை பேணப்பட்டது. அசுத்தமான தொழில் செய்வோர் கோவிலினுட் செல்ல அநுமதிக்கப்படவில்லை. மாமிசம், கள் அருந்துவோரும் அவ்வாறே அநுமதிக்கப்பட வில்லை. யாழ்ப்பாணத் தமிழரின் சாதிப்பாகுபாடு பற்றி ஆய்வு செய்வோர் இந்நிலையைப் பற்றி முக்கியமாகச் சிந்திப்பதில்லை.வர்க்க நிலையிலே முரண்பாடுகள் தோன்று முன்பே தொழில் நிலை வேறுபாட்டால் அசுத்த உணர்வு சமூகத்திலே ஆழமாக வேரூன்றிவிட்டது. பெண்ணின் பூப்புநிலை மையமான தீட்டும் துடக்கும் சமூகநிலை வேறுபாடுகளிலும் இணைக்கப்பட இதுவே உதவியது.
மனிதனின் இறப்புநிலையிலே உரிமையை நிலைநாட்ட துடக்கு இணைந்தது போலப் பிற்காலத்திலே தலைமைத்துவத்தை நிலைநாட்டச் சாதித்துடக்கு உதவலாயிற்று. பிரதேச ரீதியாக வேறுபட்ட தொழில் செய்யும் மக்கள் உறவு கொள்வதையும் இதன் மூலம் தடுக்க முடிந்தது.சாதித்துடக்கு வழிவழியாகப் பேணப்பட்டது.கலப்புச் சாதி உறவுகள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டன.கோவில் நிலையிலே கீழ்சாதியான் ஒருவன் மேல் சாதியினருக்குரிய இடத்துக்குச் செல்ல முடியாது. யாழ்ப்பாணத்துக் கோவில்களின் வரலாற்றிலே பல நிகழ்வுகள் இதனைச் சுட்டி நடைபெற்றுள்ளன.
கே. டானியல் தனது நாவல்களிலே இதனை அழகாகப் பதிவு செய்துள்ளார். தாழ்ந்த சாதியினர் கோயினுல் சென்று விட்டால் கோயில் பல சடங்குகளால் புனிதப்படுத்தப்பட்டது.ஆனால் தாழ்ந்த சாதியினரைப் புனிதப்படுத்த எந்த நடைமுறைகளுமே ஏற்படுத்தப்படவில்லை.தீட்டுநிலை நீரால் புனிதப்பட்டது.ஆனால் சாதித் தீட்டே நிரந்தரமானதாகக்கருதப்பட்டது.செயற்கை நிலையிலே நடைமுறையான துடக்கு ஆரம்பத்தில் குடும்ப உறவுகளைப் பிணைக்கவே ஏற்படுத்தப் பட்டது.ஆனால் ஆரியப் பண்பாட்டின் தாக்கத்தினால் சமூக உறவுகளைப் பிரித்துவைக்கவும் பயன்படுத்தப்பட்டது.
இலங்கையில் ஆங்கிலேயர் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் சாதிப்பாகுபாட்டை மேலும் கூர்மையாக்க சில உத்தியோகபூர்வமான நடைமுறைகளை ஏற்படுத்தினர். *உடையார்? என்ற பிரதேசத் தலைமைத்துவப் பொறுப்பை உயர் சாதியினருக்கே கொடுத்தனர். அதனால் மக்களை ஒன்று சேர்ப்பதும் இலகு என்பதை உணர்ந்தனர். ஆங்கிலக் கல்வியும், கிறிஸ்தவ சமய செல்வாக்கையும் உயர் சாதியினரே பெரிதும் பெற்றனர். அவர்களும் தமது சாதியாசாரங்களையே பெரிதும் பேணினர்.இன்று பலர் கிறிஸ்தவ மதமாற்றமே யாழ்ப்பாணத் தமிழரது சாதி யுணர்வை அழிக்கும் சாதனமாக இருந்தது என்று கருது கின்றனர்.ஆனால் ஆரம்பநிலையிலே மதம் மாறிய உயர் சாதியினர் தமது சாதியைப் பேணுவதிலே கண்ணுங் கருத்துமாக இருந்ததை அறியலாம். உயர்சாதிக் கிறிஸ்தவர் களுடைய தேவாலயங்களுக்குள் தாழ்ந்த சாதிக் கிறிஸ்த வர்கள் போக அனுமதி வழங்கப்படவில்லை.அதனால் தாழ்ந்த சாதியினர் தமக்கெனத் தனியான தேவாலயங்களை கட்டவும் முற்பட்டனர்.கே.டானியல் இப்பண்பை தெளிவாகத் தனது கானல் என்ற நாவலிலே எடுத்துக் காட்டிள்ளார்.
சமூக நிலையிலே தமர்,பிறர் என்ற பாகுபாட்டை நடைமுறைப்படுத்தவும் சரதித்துடக்கு பெரிதும் உதவியது. ஒரே தொழில் செய்பவர்கள் மத்தியிலே துடக்கு இயற்கை நிலையாகத் தீட்டுடன் பெரிதும் இணைந்ததாயிருந்தது. ஆனால் தொழில் வேறுபட்ட நிலையிலே அழுக்கு உணர்வின் அடிப்படையிலே செயற்கையாக இணைந்ததைக் காணலாம். மீனோடு பழகும் மீன்பிடித் தொழில் செய்வோரும், அசுத்தமான ஆடைகளைச் சுத்திகரிக்கின்ற ஆடையைச் சுத்தம் செய்யும் வண்ணாரும், சேற்று நிலங்களிலே வேலை செய்கின்ற பள்ளரும், அழுக்குகளை அகற்றும் பறையரும், கள் தயாரிக்கும் தொழில் செய்யும் நளவரும்,மயிர்வெட்டும் தொழில் செய்யும் அம்பட்டரும் தத்தமக்குள்ளும் சாதித் துடக்கைப் பேணினர். அவர் களிடையே தொழில் நிலைத்தொடர்பு மட்டுமேயிருந்தது.மணவுறவுத் தொடர்புகளில்லை. சமபந்தி போசனமும் வெகு குறைவாகவே நடைமுறையிலிருந்ததெனலாம். குடிமைகள் என்ற நிலையிலே வேளாளர் வீட்டு நடப்புகளிலே பிறப்பு, இறப்பு, திருமணம் போன்றவற்றில் இவர்கள் ஒன்றாகச் சேவை செய்தபோதும் தத்தமக்குரிய நடைமுறைகளோடும் வாழ்ந்தனர். இயற்கை நிலையான தீட்டுத் தொடக்கு நடைமுறைகளை அநுசரித்தும் வாழ்ந்தனர்.
செயற்கை நிலையில் இணைந்த சாதித்துடக்கு தீண்டாமையென்னும் நிலையில் தமிழரிடையே நடை முறைப்படுத்தப்பட்டது. தீண்டாச்சாதி, தீண்டாச்சேரி,தீண்டாதவள், தீண்டாமை என்னும் சொற்றொடர்களின் வழக்கினால் இதனை விளங்கிக் கொள்ளலாம். தீட்டுப் படுதல்’என்ற சொல் தீண்டத்தகாதவரைத் தீண்டுதலால் அசுத்தியடைதல் எனப் பொருள் தருகிறது.இது செயற்கையான நிலையையே காட்டுவதாயினும் அடிப் படையிலேபெண்ணின் தீட்டு நிலையைக் கொண்டு அமைந்ததெனலாம்.தீட்டுப்படுதல்’என்னும் சொல் யாழ்ப்பாணத் தமிழர் வழக்கிலே பெண்ணின் இயற்கை நிலையான தீட்டைக் குறித்து நிற்கிறது. அவள் எதையும் தொடாமல் இருப்பதும் நடைமுறையாக உள்ளது. ஆனால் சாதித்தீட்டு நிலையிலே ஆண்களும் எவரையும் தொட முடியாதவராயிருந்தனர். தீட்டுக்காரன்”என்ற சொல் துடக்குடையவன் என்ற பொருளிலே வழங்கப்பட்டு வருகின்றதுசாதித் தீட்டுடையவன் இந்தப் பிறவியிலே புனிதமடைய வாய்ப்பற்றவனாகவே வாழ்கிறான்ஆனால் தற்செயலாக அவனால் தீண்டப் பெற்றவர் புனிதச் சடங்குகளால் மீண்டும் புனிதமடையச் சந்தர்ப்பம் கொடுக்கப் பட்டிருந்தது. எனவே சாதித் தீட்டுடையவன் பெண்ணையும் விட நிரந்தர அசுத்தமானவனாகக் செயற்கைநிலையிலே கட்டுப்படுத்தப்பட்டான். செயற்கையான சாதித்துடக்கைப் பேணுவதால் சமூக உறவுகளைக் கட்டுப்படுத்தத் தமிழன் முயன்றான்.
சோழராதிக்கப் போது கட்டப் பட்ட ஆலயங்கள் தூய்மை நிலையை நடைமுறைப்படுத்த உதவின. கிறிஸ்தவ மதத்தின் பரம்பல் அந்நிலை பற்றிய கருத்தினை மக்களிடையே வலுப்பட வைத்தது. யாழ்ப் பாணத்தின் வரலாற்றிலே சாதியமைப்பு ஆழமாக வேரூன்ற லாயிற்று. புத்த சமயப் போதனைகளைவிட கிறிஸ்தவ சமயப் போதனைகள் தமிழர் மனதிலே விரைவாக இடம் பெற சாதி வேறுபாடே முக்கிய காரணமாக இருந்தது. நிலம் அற்றவர் ஆங்கிலக் கல்வியைக் கற்று அரசாங்க உத்தியோக வாய்ப்புக்களைப் பெற்றனர். எனினும் சாதி நிலையிலே தீவிரமடைந்திருந்த ஏற்ற தாழ்வுகள் சம நிலையடைய வில்லை. கிறிஸ்தவ தேவாலயங்களிலும் கூட உயர்வு தாழ்வு பாராட்டப்பட்டது. இந்து சமயத்தவரிடையே மட்டும் நிலைத்து விடாமல் சாதி பிற மதத்தினரையும் வலுவாக ஆட்கொண்டது. தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவ சமய மக்கள் தமக்கெனத் தனியான வழிபாட்டிடங்களை அமைக் கவும் தொடங்கினர். மத போதகர்களால் கூட இத்தகைய ஏற்றத் தாழ்வுகளை முற்றாக நீக்க முடியவில்லை. நவீன கல்வி மரபினாலும் உடனடியாக ஏதும் பயன் ஏற்பட வில்லை.
தொடரும்
No comments:
Post a Comment