பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும் நூல் ஏன் வாசிக்க வேண்டும்?

இன்றைய வகுபிற்கு செல்லும் முன் இதுவரை நடந்த விவாதங்களை சற்று பார்ப்போம் தோழர்களே.

பொருள்முதல்வாதமும் அனுபவாத விமர்சனமும் நூலை ஏன் பயிலத் தேவை என்றால் இங்குள்ள சிலர் மார்க்சியம்  பேசிக் கொண்டே  மார்க்சியத்தை மறுக்க முயலுவதை தெளிவுப்படுத்தவும் மேலும் இங்குள்ள மார்க்சியம் அல்லாத நூல்கள் மலிந்துக் கிடக்கும் வேளையில் மார்க்சிய அடிப்படையை உண்மை தன்மையை மார்க்சிய ஆசான்களின் எழுத்து மூலம் அறிய கிடைத்துள்ளது.

நமது ஆசான் லெனின் இது போன்ற துரோகிகளை அம்பலப்படுத்தி எழுதியுள்ள பகுதியிலிருந்து வாசியுங்கள். நேரமுள்ள தோழர்கள் இந்த பகுதியை வாசியுங்கள் உங்களை நீங்கள் சரியாக்கி கொள்ள பயன்படும் தோழர்களே.

1) இந்த இணைப்பில் முழுமையாக வாசிக்க உள் செல்க

மார்க்சிய லெனினியதின் தத்துவயியல் இடையறாது வளர்ச்சி அடைந்து வரும் ஒரு தத்துவமாகும். தத்துவயியலின் பல நூறு ஆண்டு கால வளர்ச்சியின் ஆக சிறந்ததும் மிகவும் முன்னேற்றமடைந்ததுமான எல்லா அம்சங்களையும் அது விமர்சன ரீதியாக  தன்வயப்படுத்தி உள்ளது அதேபோல் இதன் தோற்றம் தத்துவஞானத்தின் பண்பு நீதியாக பாய்ச்சலை புரட்சிகரமான பேரழுச்சியும் சிறப்பாக குறிக்கிறது. உழைக்கும் வர்க்கத்தின் உலக கண்ணோட்டம் என்ற வகையில் மார்க்சும் எங்கெல்சும் இதனை முறையாக உருவாக்கினார்கள். இதன் வரலாற்று இலட்சியப்பணி வர்க்கங்கள் அற்ற சமூகத்தை படைப்பதாகும். இதனால்தான் மார்க்சிய தத்துவ ஞானம் உலகம் குறித்து ஒரு கறாரான விஞ்ஞான விளக்கத்தை தருவதோடு மற்றும் நின்று விடுவதில்லை உலகினை மாற்றுவதற்குரிய ஒரு தத்துவார்த்த கருவியாக செயல்புரிகிறது.

2). முழுமையாக இந்த பகுதியை வாசிக்க இந்த இணைய பகுதியின் உள் செல்க

மனிதன்தான் தனது மூளையின் துணைகொண்டு சிந்தித்து கருத்துக்களை உருவாக்குகிறான்அத்தகைய மனிதன் மற்றும் மூளை இல்லாமல் சிந்தனையோ கருத்துக்களோ உருவாகவே முடியாது என்று விஞ்ஞானம் குறிப்பிடுகிறது.ஆகவேஆன்மீகவாதிகள் கூறும் மனம்தான் பொருளைப் படைக்கிறது என்ற கருத்து உண்மையில்லை.

கடவுள் என்ற பரமாத்மாதான் மனிதனை படைத்தது என்று ஆன்மீகவாதிகள் வாதாடுகிறார்கள்ஆனால் உண்மையில் கடவுள் என்ற கருத்தையும்கடவுள் சிலைகளையும்கோவில்களையும் மனிதர்கள்தான் படைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது நடைமுறை எதார்த்தமாக உள்ளது.
காலத்தால் பாதிக்கப்படாத மாற்ற மடையாத பொருள் உலகில் உண்டாஇல்லை காலத்தால் மாறுதலுக்கு உட்பட்டு இயங்கிக்கொண்டு இருக்கின்ற பொருள்களைத்தான்நாம் புறநிலையில் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.இந்த உண்மையைத்தான் நமக்கு விஞ்ஞானம் போதிக்கிறது.ஆனால் கடவுள் இருக்கிறார் என்பதை ஆன்மீகவாதிகள் நடைமுறையில்காட்டுவதில்லை.அந்தக் கடவுளும் பிற பொருள்களைப் போல் மாறுதலே இல்லாமல் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதாக கற்பனை செய்து நம்மை நம்பச் செய்கிறார்கள்

 இறுதியாக கருத்து முந்தியதா பொருள் முந்தியதா என்ற விவாதம் கடவுளாவிஞ்ஞானமாஎன்ற கேள்வியாக முடிவுறுகிறது.கருத்துமுதல் வாதிகள் அனைவரும் இறுதியாக ஆன்மீகவாதிகளாகவும் பொருள்முதல் வாதிகள் சமூக விஞ்ஞானிகளாகவும் மாறி ஒருவருக் கொருவர் சண்டையிட வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது.

3). https://namaduillakku.blogspot.com/2023/08/blog-post.html

(இந்த இணையதள இணைப்பில் இன்னும் உள் சென்று வாசிக்க தோழர்களே)

அனுபவவாதம் என்பது-நடைமுறைதான் தோழர்களே! அப்போ என்ன நடைமுறை என்பதனை பார்ப்போம்!

தத்துவமும்நடைமுறையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்படக் கூடாதவைநடைமுறையில் பிரயோகிப்பதற்காகவே நாம் தத்துவத்தைப் படிக்கின்றோம்தோழர் மாசேதுங் அவர்கள்.
தத்துவத்தையும் நடைமுறையையும் யந்திரம் போல பிரித்து வைக்கக் கூடாது.
 சொந்த நாட்டின் ஸ்தூல மான நடைமுறையைப் படிக்க மறுக்கும் அதேவேளையில்தத்துவத்தின் முக்கியத்துவத்தை யார் மிகைப்படுத்திக் கூறுகிறாரோஅவர் வரட்டுவாதியாவர்.
நடைமுறையில் மாத்திரம் அக்கறை செலுத்தி தத்துவத்தின் முக்கியத்துவத்தை மறுக்கிறாரோஅவர் அனுபவவாதியாவர்.வரட்டுவாதம்அனுபவவாதம் இரண்டும் தவறானவைநடைமுறை இல்லாத தத்துவம்தத்துவம் இல்லாத நடைமுறை இரண்டும் பயனற்றவைஇரண்டினதும் ஐக்கியம்தான் நமக்கு வேண்டும்.


4). https://namaduillakku.blogspot.com/2024/10/1.html

(இந்த இணையதள இணைப்பில் இன்னும் உள் சென்று வாசிக்க தோழர்களே)

லெனின் பொருள்முதல்வாதமும் அனுபவாத விமர்சனமும்என்ற நூலை 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி துவங்கி அக்டோபர் மாதத்தில் எழுதி முடித்தார்.1909-ஆம் ஆண்டு அந்நூல் பிரசுரமாகி வெளிவந்ததுமிகவும் சிக்கலான தத்துவப் பிரச்னைகளை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட நூல் இது.

இந்த நூல் வெளிவந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகுரஷ்யாவில் பிற்போக்கு முதலாளித்துவ ஆட்சி தூக்கியெறியப்பட்டு,புதிய தொழிலாளி விவசாயிகளின் வர்க்க அரசு ஆட்சிக்கு வந்தது.அந்த அரசுக்கு லெனின் தலைமை ஏற்றார்.இந்த காலங்கள் முழுவதும் புரட்சிக்கான தயாரிப்பு பணிகளும் போராட்டங்களும் நிறைந்த காலமாக இருந்த நிலையில் ஒரு தத்துவ நூல் எழுத வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?அதிலும் புரட்சியின் தலைமையில் நின்றுமுழுமூச்சாக செயல்பட்டு வந்த லெனின்அந்தப் பணியை ஏன் மேற்கொண்டார்?

அன்றைய காலக்கட்டத்தில் எழுந்த தத்துவப் பிரச்னைகள் புரட்சி வெற்றியோடு இணைந்த பிரச்னைகள் என்று லெனின் கருதினார்.தத்துவப் பிரச்னைகளில் அக்கறை செலுத்தாமல் அவற்றைக் கைவிட்டால்,புரட்சி  முன்னேற்றம் அடையாது என்ற ஆபத்தினை அவர் உணர்ந்ததால்தான் இந்தக் கடினமான பணியில் ஈடுபட்டார்.

மார்க்சிய நோக்கிலான அவரது தீர்க்கதரிசனம் பின்னர் உண்மையானது.தத்துவத் துறையில் மார்க்சிய தத்துவத்தை திரித்து குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்தோரின் கருத்து நிலைபாடுகளோடு இந்த நூல் வலிமையான கருத்து யுத்தத்தை நடத்திஅந்தக் கருத்துக்களை முறியடித்தது.அதன் விளைவாக ரஷ்யப் பாட்டாளி வர்க்கம் மார்க்சிய தத்துவத்தின் உயிர்நாடியான இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை இறுகப் பற்றிகொண்டு புரட்சியை நோக்கி முன்னேறியது.

சமுக மாற்றத்தில்,புரட்சியில் நம்பிக்கை கொண்டவர்கள் தத்துவத்தை கைவிடக்கூடாது என்ற பாடத்தை இந்த வரலாற்று அனுபவம் எடுத்துரைக்கிறது.தொழிலாளி மற்றும் உழைக்கும் வர்க்கங்களிடம் வர்க்க தத்துவப் பிரச்சாரத்தை செய்வதும்முதலாளித்துவதத்துவநிலைகள்மதப்பழமை வாதங்களின்  குரலாக ஒலிக்கிற உலகப் பார்வைகள் போன்றவற்றிற்கு எதிராக தத்துவப் போராட்டம் மேற்கொள்வதும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அவசியமனதுஇந்த நூல் உணர்த்தும் உன்னதமான லெனினிய அறிவுரை.

5). https://namaduillakku.blogspot.com/2024/05/1_27.html

 (இந்த இணையதள இணைப்பில் இன்னும் உள் சென்று வாசிக்க தோழர்களே)


**அனுபவவாத விமர்சகர்கள்  மார்க்சிய வரலாற்றுப் பொருள்முதல்வாதத்திலும் தலையிட்டனர்.வரலாற்று நிகழ்வுகளை ஆராயும்போது உயிரியல்ரீதியான காரணங்கள்,சமூகவியல் ரீதியான அம்சங்களை விவாதிக்க வேண்டும் என்றனர்.மார்க்சியம் சமுக நிகழ்வுகளின் அனைத்துப் பரிமாணங்களையும் ஆராய்கிறது என்றாலும்,பொருளியல்அடிப்படையைவலியுறுத்துகிறதுஇந்த அடிப்படையை நிராகரிப்பதாக அனுபவவாத விமர்சகர்கள் பார்வை உள்ளது என்று குறிப்பிடுகிறார்,லெனின்.

**சமுக உணர்வினை நிர்ணயிப்பதில் சமுக இருப்பு அல்லது எதார்த்தம் அடிப்படையானது என்பது மார்க்சிய வரலாற்றுப் பொருள்முதல்வாதம்.இதை மறுக்கும் வகையில் போகடானாவ் இரண்டையும் ஒன்றுபடுத்துவதாக கூறி ஒரு ஒருமைக் கோட்பாட்டை உருவாக்கினார்.இதில் சமுக சிந்தனையை முதன்மையாக்கிஅந்தசிந்தனையைநிர்ணயிப்பதில்பொருளியல் அடிப்படைகளின் முதன்மைப் பங்கினை  போகடானாவ் கைவிட்டதாக லெனின் குற்றம் சாட்டினார்.

**அனுபவாதவிமர்சகர்களின்தத்துவம்பொருள்முதல்வாதம்,கருத்துமுதல்வாதம் என்ற இரண்டு எல்லைகளையெல்லாம் தாண்டிய நடுநிலையான தத்துவம் என்று தங்களது தத்துவத்தை அவர்கள் பாராட்டிக்கொண்டனர்.இந்த கருத்தினையும் லெனின் தாக்கினார்.ஒரு தத்துவவாதி நடுநிலை என்ற நிலையை தத்துவப் பிரச்னைகளில் எடுக்க முடியாது.ஏனென்றால்,பொருளா?கருத்தா?எது அடிப்படை என்பதுதான் தத்துவத்தின் அடிப்படைப் பிரச்னை.எது அடிப்படை என்ற நிலையெடுத்து தனது தத்துவத்தை விளக்கிட வேண்டும்.இதில் நடுநிலை இருக்க இயலாது.அப்படி இருப்பதாக கூறிக் கொள்வது ஏமாற்று வித்தை.

மார்க்சியம் எந்த தயக்கமும் இல்லாமல் தனது சார்புத்தன்மையை அறிவிக்கிறது.பொருள்தான் அடிப்படை என்ற இயக்கவியல் பொருள்முதல்வாதத்தினைப் பற்றி நிற்கிறது.

லெனின் நூலில் எழுதுகிறார்:

துவக்கத்திலிருந்து கடைசி வரை மார்க்சும் எங்கெல்சும் தத்துவத்தில் சார்பு கொண்டவர்களாகவே இருந்தனர்பொருள்முதல்வாதத்திலிருந்து திசைமாறுகிற ஒவ்வொரு விலகலையும் அவர்களால் கூர்ந்து கண்டுபிடிக்க முடிந்தது.ஒவ்வொரு புதிய போக்குகள் உருவெடுக்கும் போதும் அது கருத்துமுதல்வாதத்திற்கும் மத விசுவாசத்திற்கும் எவ்வாறு இடமளித்து சலுகைகள்  கொடுக்கிறது என்பதை நுணுகி கண்டறிந்தனர்..”

எனவே தத்துவம் என்பது  எதோ சில அறிவுஜீவிகளின் மயிர் பிளக்கும் வாதங்களுக்கான களமாக லெனின் பார்க்கவில்லை.பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்திற்கு எதிராக நடத்தும் வாழ்வா,சாவா போராட்டத்தின் மற்றொரு களமாகவே லெனின் தத்துவத்தை அணுகினார்.

தத்துவத்துறையில் நிலைத்து நிற்கும் நூலாகலெனின் எழுதிய சில நூல்கள் மட்டுமே பரவலாக அறிமுகமாகியுள்ளன.அதிகம் அறியப்படாத நூல்கள் பல உள்ளன.அதிலும் குறிப்பாக தத்துவம் பற்றிய நூல்களை பலர் வாசிப்பதில்லை.அதற்கு முக்கிய காரணம்,அன்றாட அரசியல் தேவைகளுக்கு தத்துவம் உதவிடாது என்ற எண்ணம் பலரிடம் நீடிப்பதுதான்.ஆனால் எட்டு மாதங்கள் முழுமையாக செலவிட்டு இடைவிடாது எழுதி முடித்தபொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” புரட்சிகர அரசியலுக்கு உதவிகரமாக அமைந்தது.


6). https://namaduillakku.blogspot.com/2024/05/2_27.html 

(இந்த இணையதள இணைப்பில் இன்னும் உள் சென்று வாசிக்க தோழர்களே)

அகநிலைக்கும் புறநிலைக்கும் இடையிலான முறிந்த தன்மையை கருத்துமுதல்வாதமும் எந்திர பொருள்முதல் வாதமும் சந்தர்ப்பவாதமும் சாகசவாதமும் உடையவைநடைமுறையிலிருந்து அறிவு பிரிந்த தன்மையையும் உடையவை.” (நடைமுறை பற்றி)

ரஷ்யாவில் போக்டனோவும் அவரைப் போன்ற மற்ற ஏமாற்றுக்காரர்களும் திருட்டுத்தனமாக கட்சிக்குள் உட்பு குந்த அத்தகைய சந்தர்ப்பவாதிகள் ஆவர்லெனின் பொருள்முதல் வாதமும் அனுபவவாத விமர்சனமும்” என்ற தனது படைப்பில் இவர்களின் தன்மையை கூர்மையாக அம்பலப்படுத்துவதன் மீது தனது முயற்சிகளை ஒன்றுகுவித்தார்இந்த அயோக்கியர்கள் புரட்சிகர நடைமுறையை எதிர்த்தனர்அனுபவம் குறித்த பொருள் முதல்வாத கோட்பாட்டை மறுதலித்து உரைத்தனர்அதே சமயத்தில் புரட்சிகர கோட்பாடுகளை எதிர்க்க வும் செய்தனர்இயங்கியல் பொருள் முதல்வாதத்தை புதிர்” எனவும் வறட்டுச் சூத்திரம்” எனவும் கயமைத்தனமாக அவதூறு செய்து பொருள்முதல்வாதத்தின் இடத்தில் கருத்து முதல்வாதத்தையும் மார்க்சியத்தின் இடத்தில் திருத்தல்வாதத்தையும் வைக்க தங்கள் மூளைகளை கசக்கினர்.

இந்த வகையில் அவர்கள் தனியாக இல்லைலியுஷாவோ சியும் இதர அரசியல் ஏமாற்றுக்காரர்களும் அதையே அச்சுஅசலாகச் செய்தனர்அவர்கள் மேதைமை” என்று அழைக்கப்படுகிற கோட்பாட்டை கொம்பூதுவதற்கு மிகையாக செயல்படும் அதே சமயத்தில் மனிதனின் திறமை நடைமுறையிலிருந்து தோன்றுகிறது என்ற பொருள்முதல்வாத கருத்துநிலையை எதிர்த்தனர்அதே சமயத்தில் மார்க்சியம் லெனினியம் காலாவதியானது என அதை மூர்க்கமாகத் தாக்கினர்மக்கள்திரள்களை கண்காணா இடத்திற்கு வழி நடத்துவதற்கும் ஏமாற்றுவதற்கும் புரட்சிகர மக்கள் திரள்களை புரட்சிகர கோட்பாடுகளிலிருந்து பிரிப்பதற்கு அற்பமாக எத்தனித்தனர்இவையனைத்தும் காட்டுவது என்னவெனில் நாம் கருத்துமுதல்வாதத்திற்கும் இயங்காவியலுக்கும் ஆளாவதை தடுப்பதற்காக சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக போராட்டங்களை தொடுத்தாக வேண்டும்அதே சமயத்தில் நாம் நடைமுறைக்கு முதல் இடம் கொடுக்கும் கருத்துநிலையை உயர்த்திப் பிடித்து கருத்துமுதல்வாத காரண காரியவாதத்தை எதிர்த்தாக வேண்டும்அதே நேரத்தில் புரட்சிகர கோட்பாடுகளின் வழிகாட்டும் பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளித்து அனுபவவாதத்திற்கு எதிராக விழிப்புடன் இருந்து அதை வெற்றி கொண்டாக வேண்டும்.

வர்க்கப் போராட்டத்தில் நடைமுறையிலிருந்தே அனுபவம் வருகிறது என மார்க்சியம் மெய்ப்பித்து நிலைநாட்டுகிறதுஅந்த வர்க்கப் போராட்டமானது உற்பத்திக்கும் அறிவியல் பரிசோதனைக்குமானது ஆகும். “அனைத்து உண்மையான அறிவும் நேரடி அனுபவத்திலிருந்தே தோன்றுகிறது(நடைமுறை பற்றி).

7).https://namaduillakku.blogspot.com/2024/06/blog-post_19.html

 (இந்த இணையதள இணைப்பில் இன்னும் உள் சென்று வாசிக்க தோழர்களே)

பொருள்முதல்வாதிகள் பொருளை எப்படிப் பார்க்கிறார்கள், எப்படிப் புரிந்துகொள்கிறார்கள்?

முதல் கேள்விக்கு பொருள்முதல்வாதிகள் கொடுக்கும் பதில் இதுதான்: பொருள் என்பது புறநிலையிலுள்ள ஒரு யதார்த்தம் அது மனத்தைச் (சிந்தனையை) சார்ந்திராமல் சுதந்திரமாக இருப்பது. மனதில்லாமலேயே அது இருக்க முடியும்; அது இருப்பதற்கு மனம் அவசியமே இல்லை என்கிறார்கள். இதைப் பற்றி சொல்லும் போது “பொருளைப் பற்றிய கருத்தோட்டம் குறிக்கிறதெல்லாம் நம் புலனுணர்ச்சிகள் மூலமாக நாம் அறியும் பறநிலை யதார்தமேயொழிய வேறெதுவுமில்லை” என்று கூறினார் லெனின். (பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும் என்ற அவரது நூலில் 323 ஆம் பக்கம் பார்க்க)

8). https://namaduillakku.blogspot.com/2024/06/8.html

(இந்த இணையதள இணைப்பில் இன்னும் உள் சென்று வாசிக்க தோழர்களே)


மார்க்சும் எங்கெல்சும் அவர்களது தத்துவ கருத்துக்களை இயங்கியல் பொருள் முதல்வாதல் என்று பல தடவை கூறியுள்ளார்கள் என்பது இவர்கள் அறியாமல் இருக்க மாட்டார்கள்.

பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்" நூல் வாசிப்பின் ஊடாக அவசியத்தை உணர்ந்து எழுதிக் கொண்டும் வாசித்துக் கொண்டிருக்கும் நூலின் அடிப்படையில் தத்துவத்தின் தொடக்கம்....

ஒவ்வொரு தலைபில் உள்ளவற்றின் விளக்கம் அந்தந்த இணைப்பில் உள்ளன தேவைபடுவோர் வாசிக்கவே தோழர்களே

9). https://namaduillakku.blogspot.com/2024/09/blog-post_30.html  (இந்த இணையதள இணைப்பில் இன்னும் உள் சென்று வாசிக்க தோழர்களே)


மார்க்சியம்-லெனினிய தத்துவத்தால் ஆயுதபாணியாக்கப்பட்டசுயவிமர்சன முறையைப் பயில்கின்றபொது மக்களுடன் நெருங்கிய தொடர்புடையசிறந்த கட்டுப்பாடுடைய ஒரு கட்சிஇத்தகைய கட்சியின் தலைமையிலுள்ள ஒரு ராணுவம்இத்தகைய கட்சியின் தலைமையிலுள்ள புரட்சிகர வர்க்கங்கள்புரட்சிகாக உள்ள குழுக்கள் எல்லாவற்றினதும் ஒரு ஐக்கிய முன்னணி இந்த மூன்றும்தான் நாம் எதிரியைத் தோற்கடித்த மூன்று பிரதான ஆயுதங்கள்.-மாசேதுங்.

மேலும்

புரட்சியாசீர்திருத்தமா?

கடந்த காலத்தின் குறிப்பிட்ட மிச்ச சொச்சங்களேஉதாரணமாகமுடியாட்சிநிரந்தரப் படை முதலியவற்றை சார்ந்திருப்பது முதலாளி வர்க்கத்துக்கு சாதகமானது பாட்டாளி வர்க்கத்துக்கு பாதகமானதுமுதலாளி வர்க்கப் புரட்சி கடந்த காலத்தின் மிச்ச சொச்சங்கள் அனைத்தையும் அவ்வளவு உறுதி யாகத் துடைத்தெறியாமல்அவற்றில் சிலவற்றை விட்டுச் சென்றால்அதாவதுஇந்தப் புரட்சி முழுமையான உறுதிப்பாட்டுடன் நடைபெறாவிட்டால்அது முதலாளி வர்க்கத்துக்கு சாதகமானதுமுதலாளித்துவ ஜனநாயகத் திசையில் தேவையான மாற்றங்கள் புரட்சி மூலம் நடவாமல்சீர்திருத்தங்கள் மூலம் மெது மெது வாகபடிப்படியாகமேலும் அபாயமின்றிமேலும் மென்மையாக நடைபெற்றால்இந்த மாற்றங்கள் பொது மக்களின்அதாவது விவசாயிகளினதும்சிறப்பாக தொழிலாளர்களினதும் சுதந்திரமான புரட்சிகர நடவடிக்கைமுன்முயற்சிஆற்றல் ஆகியவற்றை சாத்தியமான அளவு சிறிது சிறிதாக வளர்த்தால்அது முதலாளி வர்க்கத்துக்கு மேலும் சாதகமானதுஅவை துரிதமாக வளர்ந்தால்தொழிலாளர்களைப் பொறுத்தவரையில்பிரெஞ்சு மக்கள் கூறுவதுபோலதுப்பாக்கியை ஒரு தோளிலிருந்து மறு தோளுக்கு மாற்றுவது வெகு சுலபமாகும்அதாவதுமுதலாளித்துவ புரட்சி தமது கைகளில் கொடுக்கும் துப்பாக்கிகளைபுரட்சி தமக்கு வழங்கும் சுயாதீனத்தைஅடிமைமுறை இல்லாத அடிப்படையிலிருந்து தோன் றும் ஜனநாயக உரிமைகளைமுதலாளி வர்க்கத்துக்கு எதிராகத் திருப்புவது வெகு சுலபமாகும்மறுபுறம்முதலாளித்துவ ஜனநாயகத் திசையில் தேவையான மாற்றங்கள் சீர்திருத்தங்கள் மூலம் நடவாமல்புரட்சி மூலம் நடைபெறுவதுதொழிலாளர் வர்க்கத்துக்கு மேலும் சாதகமானதாகும்காரணம்சீர்திருத்த வழி என்பது தாமதமான வழியாகும்காலத்தைக் கடத்தும் வழியாகும்அழுகிய பொருள்களின் துர்நாற்றம் வீசுவதுபோல் சமூக சீர்கேடுகள் மலிந்து  புரட்சியை கஷ்டப்பட்டு தாமதமாக்கும் வழியாகும்அவை வீசும் துர்நாற்றம் முதன்முதலாகவும்எல்லாவற்றுக் கும் மேலாகவும் பாட்டாளி வர்க்கத்தையும்விவசாயி வர்க்கத் தையும்தான் துன்புறுத்தும்புரட்சி வழி என்பது விரைந்து துண்டிக்கின்றபாட்டாளி வர்க்கத்துக்கு மிகக் குறைந்த கஷ்டமுடைய வழியாகும்ஒற்றையாட்சிக்கும் அதோடு சம்பந்தப் பட்ட மிக வெறுக்கத்தக்கஇழிந்தஉழுத்துப்போனநோய் பரப்புகின்ற நிறுவனங்களுக்கும் மிகக் குறைந்த அளவு சலுகை கொடுக்கின்றமிகக் குறைந்த அளவு அக்கறை செலுத்துகின்ற வழியாகும்.- லெனின்

முதலாளித்துவ ஊடங்கள் மூலம் பரவும் முதலாளித்துவ எதிர்ப் புரட்சிக் கருத்துகளால் நமது மனம் தாக்கப்பட்டவண்ணம் இருக்கின்றதுநாம் முதலாளித்துவ கருத்துகளின் அழுத்தமான விற்பனையால் தாக்கப்பட்டுதான் வாழ்கிறோம்அவை மக்கள் மீதுகுறிப்பாக இளைய சமூகத்தின் மீது வெற்றிகரமாகச் செல்வாக்கு செலுத்துகிறது. அவர்களை எதிர்நோக்கியுள்ள உண்மையான பிரச்சினைகளிலிருந்து அவர்களுடைய மனதைத் திருப்பிஅவர்களை இந்த சமூக அவலங்களை ஏற்று வாழும் நிலைக்கு ஆளும் வர்க்க சித்தாந்திகள் மிகத் தெளிவாக செய்துக் கொண்டுள்ளனர். ஆக நமக்கான பணி நாம் இதை எதிர்த்துப் போரிடவேண்டும்நாம் பாட்டாளி வர்க்க சித்தாந்தத்தின் மேம்பாட்டுக்காகமார்க்சிய லெனினிய தத்துவத்தின் மேலாதிக்கத்துக்காக போராடவேண்டும் அல்லவா?

எல்லாக் கஷ்டங்களும் நமக்கெதிராகவே உள்ளனஉண்மை மாத்திரம் நம் பக்கத்தில் உண்டுஇங்கு தான் புரட்சிகர தத்துவத்தில் தேர்ச்சிபெறுவதன் முக்கியத்துவம் புதைந்து கிடக்கின்றதுமேலே கூறியதுபோலநமது தோழர்களை புரட்சிகர தத்துவத்தால் ஆயுதபாணிகளாக்க சரியான முறையில் நாம் கற்றுதேற வேண்டாமா?

அனுபவவாத விமர்சகர்கள் என்பவர்கள் மார்க்சியத்தின் உண்மையான நிலைப்பாட்டை ஒருபோதும் உறுதியாக ஏற்றுக் கொள்ளாத இவர்கள். மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையின் மீதும் இயக்கவியல் பொருள் முதல்வாதத்தின் மீதும் சாதாரண விமர்சனங்கள் போல் இல்லாமல் மார்க்சிய முகமூடி தரித்துக்கொண்டே, "மார்க்சியத்தின் அடிப்படைகளை பாதுகாக்கிறோம்" என்று "மார்க்சிய சித்தாந்தத்தின் அடிப்படைகளை ஒழித்து கட்டுவதுதான்" பணியாக கொண்ட இவர்கள் மார்க்சிய விரோதிகள்.

இவர்கள் மார்க்சியத்தை தாங்கள் எதிர்க்கவில்லை என்று கூறிய பொழுதும் மார்க்சிய தத்துவத்தை பலவீனப்படுத்துவதற்காக அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்தார்கள்.

மார்க்சிய தத்துவத்திலிருந்து ஓட்டம் பிடித்த இந்த துரோகிகளுக்கு சரியான சூடு கொடுக்க வேண்டிய அவசியமானது. அவர்களுடைய முகமூடியை கிழித்தெரிய வேண்டிய அவசியமாயிற்று. அவர்களை பரிபூரணமாக அம்பலப்படுத்தி மார்க்சிய தத்துவ அடிப்படையில் பாதுகாக்க வேண்டிய அத்தியாவசியமாயிற்று.

இந்தப் பெரும் பணியை லெனின் புரிந்தார் "பொருள் முதல்வாதமும் அனுபவ வாத விமர்சனம்" என்ற நூலின் மூலமாக.

சிந்தனை நிகழ்ச்சி போக்கின் சிக்கலான தன்மையிலும் முரண்பாட்டிலும் மட்டும் விஷயம் அடங்கி இருக்கவில்லை. கருத்து முதல்வாதம் உயிருடன் இருப்பதற்கான காரணங்கள் சமுதாய சூழ்நிலைகளிலும் அடங்கி உள்ளது. ஆளும் வர்க்கமானது தன் சுரண்டலை மறைக்கவும் தன்னை தக்க வைத்துக் கொள்ளவும் பழமைவாத கருத்துகளை புதுப்பித்தும் மேன்மைப்படுத்தியும் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் கண்ணோட்டத்தை குழப்புகிறது.

நடைமுறை கடமைகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்புகிறது. அதனைப் புரிந்து கொள்ள மதத்தை பற்றியும் சற்று அறிந்து கொள்வோம். கருத்து முதல் வாதம் மதத்துடன் உள்ள உறவு விஞ்ஞான தன்மை அற்றது என்று தெளிவாக புலப்படுகிறது.

ஆதியில் இயற்கையோடு மனிதனுக்கு இருந்த பலவீனத்தின் விளைவே மதம் தோன்றியது. இயற்கை மற்றும் மனித சமூக வளர்ச்சி விதிகளை அறியாமல் இந்த புலப்பாடுகளை விளங்கிக் கொள்வது அரிது. இயற்கையோடு போரிட்ட மானிடன் தன் இயலா நிலைக்கு தன்னில் அப்பாற்பட்ட ஒரு சக்தியை தேடினான், அதி அற்புதமான கற்பனை வடிவங்களை கடவுளுக்கு கொடுத்தான்.

வர்க்க சமுதாயமும் மனிதனை மனிதன் சுரண்டுவது தோன்றியதும் மதம் அதிக உறுதியான ஆதாரத்தை பெற்றது. உழைக்கும் மக்கள் திரளினரின் சமூக ஒடுக்கம் இதற்குத் துணை புரிந்தது. இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளின் மேலும் சர்வ வல்லமை படைத்த கடவுளின் மீதான நம்பிக்கை கடுமையான உழைப்பும் முடிவற்ற வேதனைகளும் நிறைந்து கிடக்கும் ,அடக்கி ஒடுக்கப்பட்டோரின் வாழ்வில் நியாயம் மற்றும் அன்பிற்கான மாயையான ஈடாக மாற்றப்பட்டது.

மதத்தின் இந்தப் பணியை இதயமற்ற உலகின் ஆன்மா என்று காரல் மார்க்ஸ் குறிப்பிட்டார்.


10). https://namaduillakku.blogspot.com/2024/10/blog-post_72.html

(இந்த இணையதள இணைப்பில் இன்னும் உள் சென்று வாசிக்க தோழர்களே)

பூனையை பிடித்துக் கொண்டு புலியை பிடித்துள்ளதாக தவறான விமர்சனத்தை முன் வைக்கின்றீர்.

எல்லாப் புகழும் தோழர் பஸாரவ், உங்களுக்கே! உங்கள் வாழ்நாளில் நாங்கள் உங்களுக்கு ஒரு நினைவுச்சின்னத்தை எழுப்புவோம். ஒருபுறம் உங்கள் கூற்றையும், மறுபுறம் "ரஷ்ய மார்க்சிஸ்டுகளிடையே மாக்கியக் கல்லறையைத் தோண்டிய ரஷ்ய மாக்கியர்களுக்காக!" பொறிப்போம்.

11).  https://namaduillakku.blogspot.com/2024/11/22112024.html

(இந்த இணையதள இணைப்பில் இன்னும் உள் சென்று வாசிக்க தோழர்களே)

இன்னும் பின்னர் உங்களின் விமர்சனங்களுக்கு பதிலாக....

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்