இலக்கு 70 இணைய இதழ்

இந்த இதழில் பேசப்பட்டுள்ள தலைப்புகள்

1). வரலாற்று பொருள்முதல்வாதம். மாரிஸ் கான் ஃபோர்த். பாகம்- 2.

2). மனித சமூக சாரம். ஜார்ஸ் தாம்சன் பாகம் -1.அறிமுகம்

3).இந்தியாவின் தேசிய இனச்சிக்கலும் ஆளும்வர்க்கங்களும். - சுனிதிகுமார் கோஷ் பாகம்- 2

4). கம்யூனிஸ்டுகளும் கம்யூனிச அமைப்புகளும் - சிபி

கம்யூனிஸ்டுகள் எங்கும் தற்போதுள்ள சமூக, அரசியல் அமைப்பு முறைகளுக்கு எதிரான புரட்சிகர இயக்கம் ஒவ்வொன்றையும் ஆதரிக்கின்றனர். இந்த இயக்கங்கள் அனைத்திலும், அவை ஒவ்வொன்றின் தலையாய பிரச்சினையாகச் சொத்துடைமைப் பிரச்சினையை கம்யூனிஸ்டுகள் முன்னிலைக்குக் கொண்டு வருகின்றனர்.

மனிதனினுடைய பொருளாயத வாழ்வின் நிலைமைகளிலும், அவனுடைய சமூக உறவுகளிலும், அவனுடைய சமூக வாழ்விலும் ஒவ்வொரு மாற்றம் ஏற்படும்போதும், மனிதனுடைய எண்ணங்களும், கண்ணோட்டங்களும், கருத்துருவாக்கங்களும், சுருங்கக் கூறின், மனிதனுடைய உணர்வும் மாற்றம் அடைகிறது என்பதைப். புரிந்து கொள்ள ஆழ்ந்த ஞானம் தேவையா, என்ன?

பொருள் உற்பத்தியில் எந்த அளவுக்கு மாற்றம் ஏற்படுகிறதோ அந்த அளவுக்கு அறிவுத்துறை உற்பத்தியின் தன்மையிலும் மாற்றம் ஏற்படுகிறது என்பதைத் தவிர கருத்துகளின் வரலாறு வேறு எதை நிரூபிக்கிறது? ஒவ்வொரு சகாப்தத்திலும் ஆதிக்கம் செலுத்திய கருத்துகள், அந்தந்தச் சகாப்தத்தின் ஆளும் வர்க்கத்துரிய கருத்துக்களாகவே எப்போதும் இருந்துள்ளன.

இந்த வர்க்கப் பகைமைகள் எந்த வடிவத்தை ஏற்றிருந்தாலும், சமுதாயத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியைச் சுரண்டியது என்பது, கடந்தகாலச் சகாப்தங்கள் அனைத்துக்கும் பொதுவான உண்மையாகும். எனவே கடந்தகாலச் சகாப்தங்களின் சமூக உணர்வு பல்வேறுபட்டதாகவும், பல்வகைப்பட்டதாகவும் காட்சியளித்த போதிலும், குறிப்பிட்ட சில பொது வடிவங்கள் அல்லது பொதுவான கருத்துகளுக்கு உள்ளேதான் இயங்கி வந்துள்ளது என்பதில் வியப்பேதும் இல்லை. வர்க்கப் பகைமைகள் முழுமையாக மறைந்தாலொழிய அவ்வடிவங்களும் கருத்துகளும் முற்றிலுமாக மறைந்துபோக முடியாது.

”வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில், மதம், ஒழுக்கநெறி, தத்துவம், சட்டநெறி சார்பான கருத்துகள் ஐயத்துக்கு இடமின்றி மாற்றம் அடைந்துள்ளன.

இங்கு மார்க்சிய தத்துவத்தை கைவிட்டுவிட்ட நடைமுறைவாதிகளை புரிந்துக் கொள்ள லெனின் மேற்கொண்ட தத்துவ போராட்டம்தான் ரசிய புரட்சியை சாதித்தது என்பதனை அறிவார்கள்?

ஆன்மீகவாதிகளாகவும் பொருள்முதல் வாதிகள் சமூக விஞ்ஞானிகளாகவும் மாறி ஒருவருக் கொருவர் சண்டையிட வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது.

அன்றைய காலக்கட்டத்தில் எழுந்த தத்துவப் பிரச்சினைகள் புரட்சி வெற்றியோடு இணைந்த பிரச்சினைகள் என்று லெனின் கருதினார். தத்துவப் பிரச்னைகளில் அக்கறை செலுத்தாமல் அவற்றைக் கைவிட்டால், புரட்சி முன்னேற்றம் அடையாது என்ற ஆபத்தினை அவர் உணர்ந்ததால்தான் தத்துவத் துறையில் மார்க்சிய தத்துவத்தை திரித்து குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்தோரின் கருத்து நிலைபாடுகளோடு எதிர்த்து வலிமையான கருத்து யுத்தத்தை நடத்தி, அந்தக் கருத்துக்களை முறியடித்தது.அதன் விளைவாக ரஷ்யப் பாட்டாளி வர்க்கம் மார்க்சிய தத்துவத்தின் உயிர்நாடியான இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை இறுகப் பற்றிகொண்டு புரட்சியை நோக்கி முன்னேறியது.

சமுக மாற்றத்தில்,புரட்சியில் நம்பிக்கை கொண்டவர்கள் தத்துவத்தை கைவிடக் கூடாது என்ற பாடத்தை இந்த வரலாற்று அனுபவம் எடுத்துரைக்கிறது.தொழிலாளி மற்றும் உழைக்கும் வர்க்கங்களிடம் வர்க்க தத்துவப் பிரச்சாரத்தை செய்வதும், முதலாளித்துவ தத்துவ நிலைகள், மதப்பழமைவாதங்களின் குரலாக ஒலிக்கிற உலகப் பார்வைகள் போன்றவற்றிற்கு எதிராக தத்துவப் போராட்டம் மேற்கொள்வதும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அவசியமனது. உன்னத மான லெனினிய அறிவுரை. 


இலக்கு இணைய இதழ் PDF வடிவில் இந்த லிங்கை அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் தோழர்களே

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்