லெனின் பிறந்தநாளில் லெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் !
தோழர் லெனின், அவர் எடுத்துக் கொண்ட சமூகப் பொறுப்பை நிறைவேற்ற அவர் தன்னை வளர்த்துக் கொண்டதை உட்கிரகித்துக் கொண்டு அவரது வழிகாட்டலை ஏற்று வளர்வதுதான். புரட்சிக்கான கட்சியே இல்லை ஆளுக்கொரு வழியில் ஆளும் வர்க்க எதிர்ப்பே என்றாலும் அதன் பலம் எவ்வளவு. ஆளும் வர்க்க தொங்கு சதையாக மாறி போன இடது சாரிகளின் நிலை என்ன?
இங்கு உள்ள இடதுசாரிகள் அதிகாரத்தில் இருக்கும் திமுக அதிமுக போன்ற கட்சிகளோடு சமரசம்செய்து கொள்ளும் அதே வேளையில் அவர்கள் மக்களுக்கு எதிரான கொள்கை வகுத்து செயல்படும் போது அவர்களை எதிர்த்துப் போராடுவதற்குரிய அவசியத்தையும் உணர்ந்து அவர்களை எதிர்த்தும் போராட வேண்டும். அவர்களோடு கூட்டு சேர வேண்டும் என்பதற்காக அவர்கள் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கும்போது அதனை எதிர்த்துப் போராடாமல் ஆளும் வர்க்கதுடன் ஒத்து போதல் உழைக்கும் வர்க்கதிற்கு செய்யும் துரோகம் அல்லவா?
இதுபோன்ற தவறை இங்குள்ள இடதுசாரிகள் செய்ததன் காரணமாகவே இடதுசாரிகள் மக்களின் செல்வாக்கை இழந்துள்ளார்கள். லெனின் சொன்ன சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்ற கொள்கையை இடதுசாரிகள் இங்கு கடைபிடித்தார்கள். ஆனால் சமரசம் செய்துகொண்டு கூட்டணி அமைத்து விட்டாலும் நாம் யாருடன் கூட்டு சேர்கிறோமோ அவர்களின் மக்களுக்கு எதிரான கொள்கை மற்றும் நடவடிக்கைக்கு எதிராக உறுதியுடன் போராட வேண்டும் என்ற லெனினது கொள்கையை இங்குள்ள இடதுசாரிகள் பின்பற்றவில்லை. கம்யூனிஸ்டுகள் ஒரு செயலை செய்ய வேண்டும் என்று மார்க்சிய ஆசான்கள் குறிப்பிடும்போது அதற்கான நிபந்தனைகளையும் வலியுறுத்துவார்கள். திருத்தல்வாதிகள் மார்க்சிய ஆசான்கள் சொன்னவற்றில் அவர்களின் தேவைக்கு சாதகமான ஒருபகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு பிற பகுதிகளான இந்த நிபந்தனைகளை மறைத்து விட்டு செயல்படுவதன் மூலம் திருத்தல்வாதிகளாக மாறிவிடுகிறார்கள். ஆகவே மார்க்சிய ஆசான்களால் முன்வைக்கப்படும் ஒவ்வொரு கருத்தையும் மிகவும் ஆழமாகவும் விரிவாகவும் படித்து புரிந்து கொண்டு இன்றைய சூழலுக்கு அதனை பொருத்திப் பார்த்து முடிவெடுத்து செயல்பட்டால் மட்டுமே கம்யூனிஸ்டுகள் பாட்டாளி வர்க்க அரசை உருக்கும் லட்சியத்தில் வெற்றி காண முடியும்.
No comments:
Post a Comment