சாதி அன்றும் இன்றும்-மார்க்சிய பார்வையில்
என்ற நூலை வெளியிட போகிறோம். நூல் விலை ₹ 225. விலை குறைப்பு செய்துள்ளோம் முன்வெளியீட்டு திட்டத்தில். நூல் ₹ 150 விலையில் உங்கள் கைக்கு வந்து சேரும் கொரியர் செலவு உட்பட. விருப்பம் உள்ளவர்கள் முன் பதிவு செய்ய பணம் அனுப்ப வேண்டிய Gpay எண் 9095136356, தாங்கள் பணம் அனுப்பிய அந்த தகவலுடன் விலாசத்தையும் வாட்சாப்பில் 9095136356 என்ற எண்ணிற்கோ அல்லது 7010134299 எண்ணிற்கு அனுப்பி பதிவு செய்துக் கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறோம். உங்களுக்கான நூல் 10 மே 2025ல் கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்டும்.
மனித சமுகத்தின் வரலாறு அனைத்தும் வர்க்க போராட்டத்தின் வரலாறே என்று மார்க்சிய ஆசான்கள் மனித சமூக நிகழ்வுகளை உழைப்பின் அடிப்படையில் ஏற்பட்ட வளர்ச்சி அதன் மூலம் தோன்றிய பல்வேறு சமூக நிறுவனங்கள். அரசு, மதம் போன்ற நிறுவனங்கள் கால ஓட்டத்தால் குறிப்பிட்ட சமூக வளர்ச்சியில் வளர்ந்து வந்தவை. அவை அந்த சமூகத்தின் ஆளுவோரின் தேவைக்கான அடிப்படைகளாக இருந்தன. சமூக வளர்ச்சியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சமுதாய அவசியத்தை ஒட்டி சில வளர்ந்தன சில அழிந்து போயின. அதேபோல் இந்திய சமூகத்தில் சாதியானது ஒரு குறிப்பிட்ட சமூக காலகட்டத்தில் உழைப்பு பிரிவினையாக தோன்றி கால ஓட்டத்தில் மத நிறுவனங்களின் ஆதிக்கத்தால் மதக் கோட்பாடுகளின் அடிப்படையில் சமூகத்தில் உள்ள மக்களை அவர்கள் செய்யும் தொழிலின் அடிப்படையில் அவர்களை குறிப்பிட்ட குலத்தொழில் புரிவோரை குறிப்பிட்ட சாதியாக, வர்ணமாகவும் வளர்க்கும் போக்கு நடந்தேறியது. இதனை அன்றைய ஆளும் அரசின் அவசியத்திற்கு ஏற்ப சுரண்டலின் ஒரு வடிவமாக நடைமுறையாகின.
இன்று குலத் தொழில் அடிப்படையில் தொழில் புரிய வேண்டிய அவசியமோ, அந்த குறிப்பிட்ட சாதித் தொழிலை செய்துதான் வாழ வேண்டிய கட்டாயமோ இல்லை. அதனால் சாதி ரீதியான தொழில் இல்லாவிட்டாலும் அதனை இன்றைய சமூகத்தில் வைத்திருக்க நினைப்போர் யார்? நீங்கள் தேடுங்களேன்.
நேரடியாக சுரண்டல் என்ற அடிப்படையில் யார் சுரண்டுகின்றனர்? எதற்காக சுரண்டுகின்றனர்? எப்படி எல்லாம் சுரண்டுகின்றனர்? என்பதனை கணக்கில் கொண்டால் இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்.
ஆங்கிலேய ஆட்சியாளர்கள் மக்களை பிரித்தாளவும் தங்களின் சுரண்டலை மூடி மறைக்க மக்கள் மத்தியில் பிரிவினைக்குறிய மத, சாதிய அடையாளங்களை கட்டிக்காக்க ஊக்கிவித்தனர். அதனை இன்றை ஆட்சியாளர்களும் தங்களின் சுரண்டலுக்கு முழு மூச்சில் செயல்படுத்துகின்றனர். ஆக இதனை இல்லாதொழிக்க ஒரு உயர்வான சமத்துவ சமூகத்தை படைக்க முந்தைய உலகில் நடந்தேறிய புரட்சியின் அனுபங்களின் அடிப்படைகளில், இங்குள்ள சீக்குகள் முடை நாற்றம் பிடித்த முந்தைய சமூக அவலங்களை இல்லாதொழிக்கும் ஒரு புரட்சி வேண்டும். அதற்கான பணி என்பது ஒடுக்கப்ட்டு கிடக்கும் ஏழை எளிய உழைக்கும் மக்களை சாதி கடந்து வர்க்கமாக அணித் திரட்டி அவர்களின் சுரண்டலுக்கான அடிப்படைகளை விளக்கி இதிலிருந்து விடுதலை பெற வழிமுறைகளை தெளிவுப்படுத்தி ஒன்றுப்பட்ட ஒர் பணியே அடுத்த தலைமுறை இந்த இழிவுகளை தூக்கி எறிய உதவும்.
No comments:
Post a Comment