இந்திய தலித்துகளும், தமிழ்நாட்டு பெரியாரும். நேரடி சாட்சியங்கள்.-18
----------------------------------------------------------------------
தந்தை பெரியாருக்கு எதிராகவும், திராவிடத்திற்கு எதிராகவும் அயோத்திதாசரை முன்னிறுத்தி, இனி எங்களுக்கான தலைவர் எங்கள் ஜாதியிலிருந்து தான் வர வேண்டும்,
எங்கள் சேரியில் உங்கள் பிரச்சாரமா போன்ற பிளவுவாத விஷக் கருத்துக்களை எல்லாம் விதைத்து வந்தார்கள்.
இதை அம்பலப் படுத்த வேண்டிய கடமை நம்முன் இருப்பதால், மேலும் விளக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.
அதனால் இன்னும் கொஞ்சம் அயோத்திதாசரை விசாரித்துவிட்டு மேற்கொண்டு தொடர்வோம்.
1890ல் அயோத்திதாசப் பண்டிதர், திராவிட மகாஜன சபையைத் தொடங்கினார்.
அயோத்திதாசப் பண்டிதர் தலமையில், தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை இணைத்து 1-12-1891ல் நீலகிரியில் ஒரு மாநாட்டை நடத்தினார்.
அம்மா இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மாணங்கள் நிறைவேற்றப் பட்டன. நிறைவேற்றிய தீர்மாணங்களை பிரிட்டிஷ் அரசினருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் அனுப்பப் பட்டன.
அத்தீர்மாணங்கள்....
1.தீண்டப்படாத மக்களைப் பறையர் எனவிளித்தல் குற்றம் எனச் சட்டம் இயற்ற வலியுறுத்தியது.
2.தீண்டப்படாத மக்களுக்குக் கல்வி வசதியளித்தல்.
3.தீண்டப்படாத மக்களுக்குக் கல்வி உதவித் தொகை அளித்தல்.
4.தீண்டப்படாத மக்களில் கற்றவர் களுக்குத்தடையின்றி அரசுப்பணி வழங்குதல்.
5.உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் வழங்கல்.
6.பொதுக்குளம், கிணறுகளில் தண்ணீர் எடுக்கும் உரிமை வழங்குதல்.
7.பொதுஇடங்களில் நுழைய உரிமை.
8.அரசு அலுவலகங்களில் தங்கு தடையின்றி அனுமதித்து நீதி அளித்தல்.
9.கிராம முன்சீப் அலுவலகங்களில் நியமிக்கப்படுதல்.
10.சிறைச்சாலைச் சட்டம் 464வது பிரிவை நீக்குதல். (சிறைச் சாலை விதி 464 பிரிவில் பறையர்களைச் சகல தாழ்ந்த வேலைகளிலும் ஈடு படுத்தலாம் என்றிருந்தது)
ஆகிய தீர்மாணங்களைப் பொது விண்ணப்பமாக 21-12 1891 அன்று காங்கிரஸ் செயலாளர் எம்.வீரராக வாச்சாரியார் அவர்களுக்கு அனுப் பப்பட்டது.
காங்கிரஸ் செயலாளர், அந்த விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டதற்கான எந்த ஒப்புதல் கடிதம்மும் தராததோடு அவ்விண் ணப்பத்தின் மீது எந்தவித மேல் நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.
அதன்பிறகு, 1892ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சென்னை யில்விக்டோரியா நகர அவையில் சென்னை மகாசன சபை கூடியது,
அதில் அயோத்திதாசப் பண்டிதரும், நீலகிரி பிரதிநிதியாக கலந்துக் கொண்டார்.
அந்தக்கூட்டத்தில் அயோத்திதாச பண்டிதர் பேசும்போது...
எம் குலத்தினரும் சிவாலயங்களிலும், விஷ்னு ஆலயங்களிலும் உள்ளே சென்று வணங்கிட வழிசெய்தல் வேண்டும் என்று சபைத் தலைவரை நோக்கி கேட்டுக் கொண்டார்.
அங்கே கூடியிருந்த அனைவரும் ஒரு மனதாய் எழுந்து நின்று கூச்சலிட்டு ஆலய நுழைவு விண்ணப்பத்தை எதிர்த்தனர்.
அப்போது தஞ்சைப் பிரதிநிதி சிவராம சாஸ்திரியார் எழுந்து, உங்களுக்கு மதுரை வீரன், காட்டேரி, கருப்பண்ணன் ஆகிய சாமிகளைக் கொடுத்துள்ளோம்.
சிவனும் விஷ்ணுவும் உங்களுக்கு உரியவை அல்ல என்றார்.
இந்த சம்பவத்துக்கு பிறகு தான், அயோத்திதாசப் பண்டிதர் அவர்கள் பௌத்தம் ஏற்கத் துணிந்தார்.
இதுவரை கூறிவந்த செய்திகளின் அடிப்படையில், பெருமதிப்புக் குரிய திராவிடத்தின் தந்தை அயோத்திதாசர் அவர்களை நாம் எங்கும் மறுக்கவோ மறக்கவோ இல்லை.
வரலாற்றின் போக்கில், உழைக்கும் மக்களுகளின் விடுதலைக்காக அவர வர்களின் பங்களிப்பை மிகச்சரியாக செய்துள்ளார்கள் என்றுதான் நாம் ஒவ்வொரு தலைவர்களையும் மதிப் பிடுகின்றோம்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கூட்டினைவே சமூக விடுதலை என்கின்ற கோட்பாட்டை சிதைத்து, அவர்களை நிரந்தரமாக பிளவு படுத்தும் இழிவான அரசியலை நாம் செய்யவில்லை.
அப்படி செய்பவர்களை அம்பலப் படுத்த வேண்டிய வரலாற்றுக் கடமையும் நமக்கு உள்ளது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. என்கின்ற அடிப்படையில்தான். இந்தக் கேள்வியை நாம் முன் வைக்கின்றோம்.
ஜாதிய, வர்ணாசிரம, தீண்டாமை கொடுமைகளுக்கு, அதிலிருந்து வெளியேறி தங்களை ஜாதியற்ற வர்கள் என்று அறிவித்துக் கொள்வ தினால், தன்மேல் சுமத்தப்பட்டிருக் கும் இழிவு நீங்குமா? அல்லது மதம் மாறுவதினால் இழிவு நீங்குமா?
பெருமதிப்புக்குரிய அயோத்திதாச பண்டிதர் அவர்கள் பேசிய பௌத்தம் என்பது லட்சுமி நரஸ் பேசிய பௌத்தத்தோடு ஒத்துப் போகிறதா?
அல்லது டாக்டர். அம்பேத்கர் பேசிய பௌத்தத்தோடாவது ஒத்துப் போகிறதா?
எதற்காக சைவத்தையும், பௌத்தத் தையும் கலந்து ஒருபுதிய பௌத்தத்தை அயோத்திதாசர் பேசுகிறார்?
தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட என்கின்ற சொல்லாடலுக்குள் பொருந்துகின்ற மலைவாழ் பழங் குடியினரையும் ஆதி திராவிடர்கள் என்று சொல்ல முடிந்த அயோத்தி தாசரால்,
அடுக்கப்பட்ட மூட்டைகளிலேயே அடி முட்டையாக இருக்கக்கூடிய சக்கிலி யர்களை ஆதிதிராவிடர்களாக ஏற்றுக் கொண்டாரா?
போன்ற எண்ணிலடங்கா கேள்வி களுக்கு உங்களிடம் நேர்மையான பதில் இருக்கிறதா?
இப்படி நாம் தொடர்ந்து கேள்விகளை முன் வைக்கும் போது, அதற்கு பதில் சொல்லாமல், திடீரென புதிதாக நம் முன்னால், இவரும் தான் தலித்துக ளின் தலைவர் என்று ஒருவரை முன்னிறுத்துகிறார்கள்.
யாருப்பா அது என்று திரும்பிப் பார்க்கும் போது தான் தெரிகிறது அடடே நம்ம சகஜானந்தா!
மிகவும் சிரமப்பட்டு, துன்பப்பட்டு, கஷ்டப் பட்டு, படாத பாடுபட்டு, அலைந்து திரிந்து எப்படியோ, தலித்துகளின் தலைவராக சகஜானந்தாவையும் கொண்டு வந்து விட்டார்கள்.
இதற்கு இவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டியதில்லை, இவ்வளவு கால இடைவெளியும் தேவையில்லை, ஒழுங்காக பெரியாரைப் படித்திருந் தாலே போதும்.
போன நூற்றாண்டிலேயே சகஜானந் தாவை கண்டுபிடித்திருக்கலாம். சரி நான் மீண்டும் உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு அருகில் உள்ள மேல் புதுப்பாக்கம் என்ற கிராமத்தில் அண்ணாமலை, அலமேலு தம்பதி யினருக்கு,
1890ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் நாள் பிறந்த, சுவாமி சகஜானந் தாவுக்கு, பெற்றோர் வைத்தப் பெயர் முனுசாமி என்பதாகும்.
முனுசாமி தனது கிராமத்தில் இருந்த அமெரிக்கன் ஆற்காட் புராட்டஸ்டன்ட் மிஷன் பாடசாலையில் தொடக்கக் கல்வியைப் பயின்றார்.
அதன் பிறகு உயர்நிலைக் கல்விக் காக திண்டிவனத்தில் உள்ள பள்ளி யில் சேர்ந்தார். அங்கு அவருக்குச் சிகாமணி என்று பெயர் சூட்டப்பட்டது.
பெரும் பஞ்சத்தின் காரணமாக அவரின் பெற்றோர் குடும்பத்தோடு பிழைப்புத் தேடி கோலார் தங்க வயலுக்கு இடம் பெயர்ந்தனர்.
கோலார் தங்க வயலில் வசித்து வந்த தனது குடும்பத்தை விட்டு தனது 17து வயதில் வெளியேறினார்.
பல்வேறு ஊர்களிலும் உள்ள பல சாமியார்களுடன் சுற்றித் திரிந்து ஆன்மீக கல்வியைக் கற்றார்.
அவர் சென்னை வியாசர்பாடியில் இருந்த சுரபாத்திர சுவாமிகளை சந்தித்தது அவரது வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
அவரது பெயரை சகஜானந்தா என்று பெயர் மாற்றியதும் சுரபாத்திர சுவாமி கள் தான்.
மேலும், அ.முருகேசம் பிள்ளை அவர் கள், 1910ம் வருடம் ஜூலை மாதம் சிதம்பரம் நடராஜர் தரிசனத்திற்கு சுவாமி சகஜானந்தா அவர்களை அழைத்துச் சென்றது மட்டுமல்லாமல்,
அங்கே உள்ள ஓமக்குளத்தின் கரை யில், ஸ்ரீ ஆறுமுக சுவாமியவர்களும், பின்னத்தூர் ஸ்ரீமத் இலட்சுமணன் அவர்களும் கட்டியுள்ள சிறு கட்டிடத்தில் அவரை தங்க வைத்தனர்.
அங்கே... சகஜானந்தா தனது 17ம் வயதில் துறவறம் பூண்டு, தீண்டாமை ஒழிப்புக்குத் தீர்வாக ஒழுக்கத்தையும், தூய்மையையும் தீண்டப்படாதவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார்.
சமஸ்கிருதத்திலும் வல்லவரான சுவாமி சகஜானந்தா,
ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பிரதிவாதி பயங்கரம் சீனுவாசாச்சாரியிடம் சமஸ்கிருதத்தையும் பயின்று தேர்ச்சிப் பெற்றார்.
(இந்த ஸ்ரீரங்கம், பிரதிவாதி பயங்கரம் சீனிவாசாரி என்பவர் அந்த காலத்து போர்டு பவுண்டேஷன் மற்றும் அ.மார்க்ஸ் போன்றவர்.)
அதன்பிறகு நந்தனைத் தனது முன்னோடியாக எடுத்துக் கொண்ட சகஜானந்தா அவர்கள், நந்தனின் பெயரில் மடம் ஒன்றையும், கல்விச் சாலை ஒன்றையும் ஏற்படுத்த முடி வெடுத்து,
1916 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7ம் தேதி நந்தனார் கல்விக் கழகத்தை நிறுவினார்.
இதனிடையே அவருக்கு நாட்டுக் கோட்டை செட்டியார்களின் நட்பு கிடைத்தது.
அவர்களின் ஆதரவில் மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை முதலான நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, அங்கெல்லாம் சைவ சமய பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
அந்தப் பயணம் அவருக்கு உலக மெங்கும் அறிமுகத்தை ஏற்படுத் தியது மட்டுமின்றி, அவர் உருவாக்க நினைத்த மடத்துக்கும், கல்விச்சாலை க்கும் நிதியுதவியைப் பெறுவதற்கு உதவியாக அமைந்தது.
இவர் துவக்கிய நந்தனார் கல்விச் சாலையில், முதலில் 25 மாணவர்கள் தான் சேர்ந்திருந்தார்கள். அதுவும் ஒரு கூரைக் கொட்டகையில் நடந்து வந்தது.
அதன் பிறகு 1918ஆம் ஆண்டு பள்ளிக் கூடம் கட்டுவதற்கு அப்போதய சென்னை மாகாண உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த, ஜஸ்டிஸ் சதாசிவ அய்யரால் அடிக்கல் நாட்டப்பட்டு,
பெண் கல்வியே கூடாது என்று கருதிய 1920ல், 20 மாணவிகளைக் கொண்டு தொடக்கப்பள்ளியைத் தொடங்கினார் சுவாமி சகஜானந்தா.
இதில் மதுரை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்மாள் தான் முதல் பெண் மாணவி.
அதுமட்டுமல்லாமல், முன்னாள் அமைச்சர் ராஜாங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மருதூர் ராமலிங்கம், வானூர் மாரிமுத்து, சீர்காழி மணி, புதுச்சேரி முருகேசன், அரூர் அன்பழகன், ஐ.ஏ.எஸ் தங்க ராஜ் என பலரும் இப்பள்ளியில் படித்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல், அரசியலில் சுவாமி சகஜானந்தாவுக்கென ஒரு தனித்துவ பார்வையும் இருந்தது.
அம்பேத்கர் போராடிப் பெற்ற இரட்டை வாக்குரிமையும், தனி வாக்காளர் தொகுதியும், பூனா
ஒப்பந்தத்தின் மூலமாகப் பறிக்கப் பட்டபோது,
அம்பேத்கருக்கு ஆதரவாகத் தமிழகத் தில் தாழ்த்தப்பட்ட மக்களை திரட்டிப் பொதுக் கூட்டங்களை நடத்திப் பிரச்சாரத்தை மேற்கொண்டவர் சுவாமி சகஜானந்தா அவர்கள்.
தாழ்த்தப்பட்ட மக்கள் எல்லா நிலைகளிலும் தமக்குரிய பங்கை பெற வேண்டும் என்று, விடாமல் வலியுறுத்தி வந்தார்.
கோயில்களில், தேவஸ்தான கமிட்டி களில் ஆதிதிராவிடர்களை உறுப்பி னர்களாக்க வேண்டும் என்கின்ற முதல் குரலே சுவாமி சகஜானந்தா வின் குரல்தான்.
முதல் கட்டமாக திருப்பதி தேவஸ்தா னத்தில் அப்படி ஒருவரையாவது நியமியுங்கள் என்று வலியுறுத்தி வந்தார்.
அப்போது இருந்த ஜில்லா போர்டுக ளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முறை யான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வில்லை.
தென்னாற்காடு மாவட்டத்தில் தாழ்த் தப்பட்ட மக்கள், நான்கில் ஒரு பகுதி யாக இருக்கின்றனர்.
ஜில்லா போர்டில் 40 உறுப்பினர்கள் உள்ளனர். மக்கள்தொகை கணக்குப் படி தாழ்த்தப்பட்டவர்கள் குறைந்த பட்சம் பத்துப் பேராவது ஜில்லா போர்டில் இடம்பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் ஒரே ஒருவர்தான் இருக்கி றார். இது நியாயம் அல்ல என்று முழங்கியவர் சுவாமி சகஜானந்தர்
(ஆனால் இன்று தலித்துகள் என்கின் கின்ற பெயரில் இயங்குபவர்கள், நாங்கள் ஆண்ட ஜாதியினர் என்கின்ற அளவிற்கு மக்களை குழப்புகின்றனர்.)
ஆனாலும் இவை எல்லாவற்றுக்கும் முன் நிபந்தனையாக, தாழ்த்தப்பட்ட மக்கள் சுத்தமாகவும், ஒழுக்கமாகவும், சைவ நெறியோடும் வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
இதுதொடர்பாக தொடர்ந்து பிரச்சாரங் களையும் மேற்கொண்டு வந்தார்.
இதன் மூலம்தான் தாழ்த்தப்பட்ட மக்களை முன்னேற்ற முடியும் என்று ஆழமாக நம்பினார். அதையே தன் வாழ்நாள் பணியாக மேற்கொண்டார்.
தொடர்ந்து இவர் ஆற்றி வரும் சமூகத் தொண்டு மற்றும் கல்வி நிறுவனங்கள் தொடர்பான கட்டு ரைகள் குடியரசில் வெளி வந்த வண்ணம் இருந்தன.
1932ல் காந்தி உண்ணாவிரதம் இருந்த போது, சிதம்பரத்தில் 18.9.1932 அன்று நடந்த பொதுக் கூட்டத்தில் சகஜானந்தர் பேசியதை 25.9.1932 தேதியிட்ட குடிஅரசு இதழ் முழுமையாக வெளியிட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் 25.9.1932 - 23.5.1937 போன்ற தேதிகளில் சுவாமி சகஜானந்தா பற்றிய கட்டுரைகளும் அவரின் பேச்சுக்களும் தொடர்ந்து குடியரசு வெளியிட்டுக் கொண்டே வந்தது.
சகஜானந்தா மீது பெரியாரும், பெரியார் மீது சகஜானந்தாவும் மிகுந்த பற்று கொண்டிருந்தனர்.
சுவாமி சகஜானந்தா அவர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகள் பலவற்றில் பெரியார் கலந்து கொண்டு பாராட்டி பேசியிருக்கிறார்.
அதேபோல, சுவாமி சகஜானந்தா உருவாக்கிய சிதம்பரம் நந்தனார் கல்விக் கழகத்துக்கு வழங்கி வந்த நிதியை, அரசு நிறுத்தியதை கண்டித்து பெரியார் குரல் கொடுத்தார்.
ஆனால், சைவ சமயத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்ட சகஜானந்தா சட்டமன்றத்தில் பேசும் போது,
“நூலகங்களில் கறுப்புச் சட்டைக் காரர்களின் நூல்களை வைத்து விடாதீர்கள்”, என்று பெரியாரின் கொள்கைகளுக்கு எதிராகப் பேசினார்.
அதற்காக சுவாமி சகஜானந்தா மீது பெரியார் எந்தவித வெறுப்பும் காட்ட வில்லை. அவர் மீது எந்தவித பகைமை யும் பாராட்டவில்லை.
இதோ சகஜானந்தர் பற்றி பெரியார் பேசுகிறார்...
சிதம்பரம் சாமி சகஜானந்தா அவர் களுக்கு சிதம்பரம் அரசினர் நந்தனார் கல்வி நிறுவனங்களின் சார்பில் சிலை வைப்பது என்பது மிகவும் பொருத்தமானதும், செய்து தர வேண்டியதுமான ஒரு நற்பணி யாகும்.
தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் சமுதாயத்திற்காக சாமி சகஜானந்தா அவர்கள் அரும்பெரும் தொண்டாற்றி இருக்கிறார்கள்.
எந்தவிதமான எல்லையும் இல்லாமல் நல்ல வண்ணம் முன்னேறி இருக்கின்றது.
பொதுவாக சொல்லப்போனால், நம் நாட்டில் சகஜானந்தா அவர்களைப் போல், தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற் குத் தொண்டாற்றியவர்கள் யாரும் இல்லையென்றே சொல்லலாம்.
இது வரையில் அவர் இருந்திருப் பாரே யானால், அந்த சமுதாயத்திற் கென்றே ஒரு தனிக் கல்லூரி ஏற்படுத்தி இருப்பார் என்று கருதுகின்றேன்.
சட்டசபையிலும் மற்றும் அரசியல் துறையிலேயும் உள்ள குறைகளை எடுத்துச் சொல்லி மிகத் தைரியமா கக் கண்டித்தவராவார்.
அவருக்குப் பிறகு அந்தஇடத்திற்கு வேறு யாரும் வரவில்லையென்றே சொல்லலாம். என்று, பூவிழியன் தனது நூல், பக்கம், 16ல் குறிப்பிடு கிறார்.
இப்படி சாமி சகஜானந்தாவை போற்றியும் பாராட்டியும் வந்த தந்தை பெரியார் அவர்கள், அவரின் செயல் பாடுகளை விமர்சிக்கவும் தயங்கிய தில்லை.
மூன்று வேளை குளித்து, உடலெங் கும் பட்டை போட்டுக் கொண்டு, தனது பாஷையையும் மாற்றிக் கொண்டு, தன்னைஒரு சைவனாக காட்டிக் கொண்டு, மற்றஉயர் ஜாதி யினரைப் போல தன்னை மாற்றிக் கொள்வதனால்,
(பல நேரங்களில் உடல் முழுவதும் நாமமும் போட்டுக் கொள்வார்.)
பிறரையும் மாற்றிக் கொள்ளும்படி சொல்வதினால் ஜாதி இழிவு போய் விடும் என்றும் நம்பும் சுவாமி சகஜானந்தாவின் ஜாதி இழிவு ஒழிந்ததா?
அல்லது அவரால் ஒரே ஒருவரையா வது ஜாதியிலிருந்து வெளியேற்ற முடிந்ததா!?.
எனவே உயர் ஜாதிக்காரர்களைப் போலவே வேஷம் போட்டுக் கொள்வ தனால் மட்டுமே ஜாதி இழிவு ஒழிந்து விடாது.
ஜாதிக்கு ஆதாரமாக இருக்கக் கூடிய அனைத்து ஆதாரங்களையும் அழித்து ஒழிக்க வேண்டும், என்று சகஜானந்தாவிற்கு சுட்டிக் காட்ட வேண்டிய நேரத்தில், சரியாகவே குட்டியும் காட்டுகிறார் தந்தை பெரியார்.
இப்படி அவரது ஆன்மீக செயல் பாடு களை பெரியார் பலமுறை கண்டித்து எழுதியுமிருக்கிறார், பேசியும் இருக்கிறார்.
ஆனால், சமூகத் தொண்டு விவகார ங்களில் சகஜானந்தரை முழுமையாக ஆதரித்து நின்றவர் பெரியார்.
அதேபோல...
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் பேரறிஞர் அண்ணா, சகஜானந்தா போட்டியிடும் வரை அவரது தொகுதியில் தி.மு.க. போட்டி யிடாதென முடிவெடுத்துள்ளது என்று அறிவிப்பு செய்தார்.
விடுதலை 8.5.1959ல், ஆதிதிராவிடர் களின் முன்னேற்றத்தையே முக்கிய நோக்கமாகக் கொண்டு பணியாற்றி யவரும்,
நந்தனார் கல்விக் கழகம் என்ற பெயரில் ஆண்களுக்கு ஒரு பள்ளியை யும், பெண்களுக்கு ஒரு பள்ளியையும் (உயர்நிலைப் பள்ளி கள்) வைத்து நடத்தி வந்தவரும்,
சிதம்பரம் வட்டத்தின் சென்னை சட்ட சபை உறுப்பினருமான திரு.ஏ.எஸ்.சகஜானந்தர் அவர்கள் 68 வதுவயதில், 1.5.1959 வெள்ளி காலை 10 மணிக்கு இயற்கை எய்தினார்.
அன்னாருக்கு சிதம்பரத்தில் உள்ள முக்கியஸ்தர்களும் ஏராளமான ஆதிதிராவிடர்களும் வந்து இறுதி மரியாதை செலுத்தினர்.
தென்னார்க்காடு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கு.கிருஷ்ணசாமி அவர்களும், மற்றைய கழகத் தோழர் களும் இதில் கலந்துகொண்டனர். என்கின்ற துயரச் செய்தியும் வந்திருக்கிறது.
இதில் சுவாமி சகஜானந்தர் புகழை குடியரசோ, விடுதலையோ, திராவிடர் கழகமோ அல்லது பெரியாரோ எங்கேயாவது மறைத் திருக்கிறார்களா?
ஆனால் தலித்துகளின் தலைவர் களை மறைத்து விட்டார்கள், ஒழித்து விட்டார்கள், அவர்களின் குரலை ஒடுக்கிவிட்டார்கள்.
இவர்கள்தான் நமக்கான தலைவர் கள், இவர்கள்தான் நமக்கான விடுதலைக்கு பாடுபட்டார்கள் என்றெல்லாம் பேசி, தாழ்த்தப்பட்ட மக்களை அவர்களின் உட்பிரிவுக் குள்ளேயே முடக்குவதோடு, மிகக் கவனமாக இந்திய தேசிய நீரோட்டத்தில் கரைக்கிறார்களே,
இவர்களிடம் ஒன்று கேட்கிறேன், யாராவது நேர்மையாக பதில் சொல்லத் தயாரா?
சுவாமி சகஜானந்தா அவர்கள், பொதுத் தொண்டில், குறிப்பாக கல்வி தொண்டில் முன்னோடியாக திகழ்ந்தவர்.
சுவாமி சகஜானந்தா அவர்கள் முன்வைத்த, தாழ்த்தப்பட்ட மக்கள் சுத்தமாகவும், ஒழுக்கமாகவும், சைவ நெறியோடும் வாழ வேண்டும் என்று தன் வாழ்நாள் முழுவதும் பிரச்சாரமாக முன்னெடுத்த, இந்தக் கோட்பாடுகள் உங்களுக்கு ஏற்புடையதுதானா?
மூன்று வேளை குளித்து சுத்தமாக வும், ஆறு வேளை பூஜை செய்து ஒழுக்கமாகவும் இருந்தால், ஜாதி ஒழிந்து விடும் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?
உடல் முழுவதும் பட்டையையும், அடிக்கடி நாமத்தை போட்டுக் கொண்டு, நானும் வைஷ்வன்தான் என்று காட்டிக் கொள்வதையும் நீங்கள் ஏற்கிறீர்களா?
சுவாமி சகஜானந்தா முன்னெடுத்தது, நாங்கள் ஆதிகுடிகள், நாங்கள் தான் உண்மையான சைவர்கள், உயர்ஜாதி என்கின்ற பெயரில் எங்களை தடுப்பதற்கு நீ யார்?
என்கின்ற கோபத்தின் வெளிப் பாடாய் சுவாமி சகஜானந்தாவின் பிரச்சாரம் அமைந்ததா?
அல்லது ஜாதி ஒழிப்பிற்காகத்தான் அவர் தன் வாழ்நாளை அர்ப்பணித்தாரா?
என்பதை உவத்தல், காய்த்தல் இல்லாமல் உங்கள் எத்தனை பேர் பதில் சொல்ல தயாராக இருக்கிறீர்கள்?
தொடரும்....
#dravidiansyndicate #dravida_model #MKStalinCM #DMKITWING #TVKVijay #tamiltrending #seemanspeech #VCKParty #NewsUpdate #TVKparty
No comments:
Post a Comment