இந்திய சமூகத்தில் பல கொடுமைகளை உழைக்கும் மக்கள் சந்தித்து வருகிறார்கள். சாதி தீண்டாமைக் கொடுமை, மத அடிப்படையிலான தாக்குதல்கள், தேசிய இனங்களின் உரிமைகள் பறிக்கப்படுதல், தொழிலாளர்கள் சுரண்டப்படுவது, விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபட்டு நஷ்டமடைந்து தற்கொலை செய்துகொள்வது, சிறு வியாபாரிகளும் சிறு தொழில் செய்வோரும் தொழிலை தொடரமுடியாமல் நஷ்டம் அடைவது, ஏழை மாணவர்கள் படிப்பதற்கான வாய்ப்பை இழந்து கல்வி அறிவு பெறமுடியாத நிலை, உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் அவதிப்படுவது, ஏழை மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்காமல் மரணமடைவது போன்ற பல பிரச்சனைகள் இருக்கிறது. ஒவ்வொரு பிரச்சனைக்கும் வெவ்வேறான தீர்வுகள் உள்ளது. அனைத்துப் பிரச்சனைக்கும் ஒரே தீர்வு இல்லை. ஆகவே கம்யூனிஸ்டுகள் ஒவ்வொரு பிரச்சனைக்கும் குறிப்பாக என்ன தீர்வு உண்டு என்பதை பகுத்தறிந்து குறிப்பான தீர்வுகளை உழைக்கும் மக்கள் முன் வைக்க வேண்டியது அவசியமாகும். உதாரணமாக சாதி தீண்டாமை கொடுமையானது பல வடிவங்களில் இங்கே நடக்கிறது. பொதுவான கோவிலுக்குள் செல்வதற்கும் கடவுளை வணங்குவதற்கும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு என்ன? அனைத்து சாதியினரும் கோவிலுக்குள் செல்வதற்கும் கடவுளை வணங்குவதற்கும் உரிமை உண்டு என்றும், இதற்கு தடைவிதிப்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்ற கொள்கையை நாம் செயல்படுத்த வேண்டும். கோவிலுக்குள் செல்வதற்கான உரிமை அனைவருக்கும் உண்டு என்ற ஜனநாயகக் கொள்கையை மக்களிடம் தொடர்ந்து பிரச்சாரம் செய்து உழைக்கும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமை என்று கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். இதேபோல் உழைக்கும் மக்கள் சந்திக்கும் வேலையில்லாப் பிரச்சனைக்கு தீர்வு அனைத்து மக்களுக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான திட்டங்களை உருவாக்கி செயல்பட வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு பிரச்சனைக்குமான தீர்வுகளைப் பட்டியலிட்டு அந்தப் பட்டியலை மக்கள் முன் கம்யூனிஸ்டுகள் வைக்க வேண்டும். இந்த தீர்வுகளை நடைமுறையில் செயல்படுத்துவதுதான் எமது கொள்கை மற்றும் திட்டம் என்று மக்களிடம் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு பிரச்சனைக்கான தீர்வுகள் அடங்கியதுதான் கம்யூனிஸ்டுக் கட்சியின் திட்டமாக இருக்க வேண்டும். இதற்கு மாறாக மக்கள் ஜனநாயகப் புரட்சி என்றும் சோசலிசப் புரட்சி என்று பேசுவது வெறும் வார்த்தை விளையாட்டாகவே அமைந்துள்ளதை நாம் காண்கிறோம். மேலும் இத்தகைய தீர்வுகளை கம்யூனிஸ்டுகள் முன்வைத்தாலும் நடைமுறையில் இதனை சாதிப்பதற்கு அரசியல் அதிகாரம் தேவையாகும். மேலும் இந்த அரசியல் அதிகாரமானது பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரம் இல்லை என்றால் இந்தப் பிரச்சனைகளை தீர்க்க முடியாது. ஆகவே பாதிக்கப்பட்ட மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை கண்காணிக்கவும், தவறு நடந்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்கவும் உரிமையும் அதிகாரமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டும். அத்தகைய அரசமைப்பு முறையை உருவாக்கினால் மட்டுமே இங்குள்ள பல சமூகக் கொடுமைகளை முறியடித்து பிரச்சனைகளை தீர்க்க முடியும். இதற்கு மாறாக வேறு வழியில்லை என்ற உண்மையை சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
தத்துவமும் நடைமுறையில் பிரச்சினையை அணுக
தத்துவத்தின் அவசியம் மார்க்சிய லெனினியத்தை கற்று தேற மார்க்சிய இயங்கியலை அடிபடையில் கற்றுதேற ஒரு முயற்ச்சி இந்த நூலை வாசித்து முடிக்க பல அத்தியாங்களாக எழுத்து வடிவில் கொண்டு வந்துள்ளேன் அதன் பின்னர் நம்முடைய தேவைக்கான புரிதலிருந்து தொடங்குவோம் தோழர்களே.... இவை நாங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் "பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்" நூல் வாசிப்பின் ஊடாக அவசியத்தை உணர்ந்து எழுதிக் கொண்டும் வாசித்துக் கொண்டிருக்கும் நூலின் அடிப்படையில் தத்துவத்தின் தொடக்கம்....
ஒவ்வொரு தலைபில் உள்ளவற்றின் விளக்கம் அந்தந்த இணைப்பில் உள்ளன தேவைபடுவோர் வாசிக்கவே தோழர்க்
1). மார்க்சியத்தின் அவசியம் குறித்தும் மார்க்சிய தத்துவம் குறித்தும்... https://namaduillakku.blogspot.com/2024/09/1_28.html
2). தொன்மைக் கிரேக்கர்களின் எளிய பொருள்முதல்வாதமும் இயக்க இயவியலும்.
இந்திய தத்துவங்களான ஆதிகால பல போக்குகளை இங்கு கவனத்தில் கொண்டால் இந்த இரு போக்குகள் முதன்மையாக இருப்பதை காணலாம்... https://namaduillakku.blogspot.com/2024/09/2_46.html
3). நிலப்பிரபுத்துவக் காலகட்டத்திலும் பூர்ஷ்வாச் சமூகத்திலும் தத்துவப் போக்குகளின் போராட்டம்
நம் நாட்டில் இன்றுள்ள போக்குகளை புரிந்துக் கொள்ள இந்தப் பகுதி மிக முக்கியமானதாக இருக்கும். https://namaduillakku.blogspot.com/2024/09/3.html
4). தத்துவத்தின் வளர்ச்சியில் ருஷ்யப் புரட்சிகர ஜனநாயகவாதிகள் ஆற்றிய பங்கு
ரஷ்யப் புரட்சிகர ஜனநாயகவாதிகள் கருத்துமுதல்வாதத்திற்கு எதிராக முன்னணிப் பொருள்முதல்வாதத்தின் போராட்டத்தில் பெரும் பங்கு ஆற்றினார்கள்... https://namaduillakku.blogspot.com/2024/09/4_30.html
5). மார்க்ஸீய-லெனினீயத் தத்துவ விஞ்ஞானம் அகுற்கு முன்பு இருந்த தத்துவம், தற்கால பூர்ஷ்வாத் தத்துவம் ஆகியவை எல்லாவற்றிலுமிருந்து பண்பளவில் வேறுபட்டது ஆகும். கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்ஸ், இருவராலும் உருவாக்கப் பட்டு விளாதீமிர் இல்யீச் லெனினால் விரிவுபடுத்தப்பட்ட இந்தத் தத்துவம் பொருள்முதல்வாதத்தையும் இயக்கவியலையும் இணையுறுப்புக்களாகப் பொருத்துகிறது. இயற்கை, சமூகம், சிந்தனை ஆகியவற்றுக்கு உரிய நிகழ்ச்சிகளை அறிவதற்கு, ஒன்றான இயக்கஇயல்-பொருள்முதல்வாதச் சித்தாந்தாந்தமும் முறையும் இதில் கையாளப்பட்டன. https://namaduillakku.blogspot.com/2024/09/5_30.html
இன்னும் பின்னர் வாசித்து எழுதும் பொழுது வரும் தொடர்களில் தொடர்வேன் தோழர்களே...
மார்க்சிய லெனினிய தத்துவம் பயில விருப்பம் உள்ளவர்கள் அடிப்படையை கற்க பயனுள்ளவை தோழர்களே
Subscribe to:
Post Comments (Atom)
இலக்கு இதழின் கட்டுரைகள்
செய்தியை சார்ந்த அலசல்
-
தலித் விடுதலை சாதி ஒழிப்பு பற்றி பேசுவோர் இதுவரை செய்தவற்றை தொகுப்பாக காணும் பொழுது அவை எந்த வர்க்க நலனில் உள்ளது? உண்மையாலுமே சாதி ஒழிப்ப...
-
ஒரு கம்யூனிஸ்ட் கட்சியானது கறாரான பாட்டாளிவர்க்க கண்ணோட்டம், கொள்கை கோட்பாடுகளில் உறுதியான பற்றுகொண்டிருக்கவேண்டும். ஆகவே கம்யூனிஸ்ட் கட்சி...
-
தோழர் ஞானம் அவர்களின் பதிவே. இவை சில தினங்களாக வாட்சாப் விவாத பொருளாக உள்ளது ஆகையால் இங்கே பகிர்கிறேன் தோழர்களே, பாசிச எதிர்ப்பு மக்கள் முன்...
-
அம்பேத்கரும் கம்யூனிசமும் என்கிற இந்த சிறிய வெளியீடு அம்பேத்கர் குறித்த புத்தகம் ஒன்றிற்காக எழுதிபார்க்கப்பட்ட பகுதிகளில் ஒன்ற...
-
தோழர்களுக்கு வணக்கம், சிலர் ஏன் குறைக்கூறிக் கொண்டே உள்ளீர் நடைமுறையில் ஈடுபடுவதில்லை தத்துவம் பேசி என்ன பயன் சமூகம் சீரழிந்துவிட்ட பின்னர்ந...
-
தோழர்களுக்கு வணக்கம் இன்றைக்கு தொடங்கி இந்த நூல் வாசிக்க உள்ளோம். தேசிய இனப்பிரச்சனைகளும் பாட்டாளி வர்க்க சர்வதேசிய வாதமும் நூல் pdf வடிவி...
-
தோழர்களுக்கு வணக்கம், இந்த இதழில் நாம் செய்ய வேண்டியதை மார்க்சிய ஆசான்கள் செய்தவையில் இருந்து தேர்ந்தெடுத்து எழுதிக் கொண்டும் அதில் குறிப...
No comments:
Post a Comment