நக்சல்பாரி எழுச்சியும் அதன் தொடர்ச்சியுமாய் உதித்தெழுந்த இந்தியா தழுவி புரட்சிக்கான கட்சியாய் உருவான கட்சியை பேசும் பலரும் கடந்தகால படிப்பினைகள் இன்றைய நிலையில் அவர்களின் செயல்பாடு கவனத்தில் கொண்டு ஓர் தேடல்தான் இவை. பலர் மறந்தே போன சில நிகழ்வுகள்... அவர்களை புரிந்துக் கொள்ள....
50 years of Naxalite movement: What happened at Naxalbari on May 25, 1967?
நக்சல்பாரி கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் அந்த விவசாயிகளின் நெஞ்சில் கனலை மீட்டியது. பிகுல் கிஷன் என்ற குத்தகை விவசாயி, நிலப்பிரபுவால் வெறியேற்றப்பட்டார். வழக்குமன்ற உத்திரவு பிகுல் கிஷனுக்கு சாதகமாக இருந்த போதிலும் நிலப்பிரபுவின் ஆட்கள் அவரை அடித்து விரட்டினர். வழக்கு மன்றமோ, அரசாங்கமோ தங்களைப் பாதுகாக்காது என்பதை இச்சம்பவம் விவசாயிகளுக்குப் புரியவைத்தது. சிலிகுரி வட்ட விவசாயிகள் மாநாட்டு அழைப்பை உடனடியாக அமலாக்குவதே சரியானது என்று அவர்கள் முடிவு செய்தனர்.
ஏப்ரல் மாதத்திற்குள் அந்த வட்டாரத்திலிருந்த எல்லா கிராமங்களிலும் விவசாயிகள் கமிட்டி அமைக்கப்பட்டுவிட்டது. 15,000 முதல் 20,000 விவசாயிகள் தங்களை முழுநேர ஊழியர்களாகப் பதிவு செய்து கொண்டனர். எல்லா கிராமங்களிலும் ஆயுதம் தாங்கிய செங்காவலர் குழுக்கள் அமைக்கப்பட்டன.
“நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புரட்சிகர விவசாயிகளின் போராட்டங்கள் வெடித்தெழுவதை தோழர்கள் அவதானித்திருப்பீர்கள். பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படை என்ற முறையில் இவற்றை வளர்த்தெடுப்பதும், தலைமை தாங்கி வழி நடத்துவதும் நம் கடமை. நாட்டின் பல்வேறு மூலைகளில், தனித்தனியே, மக்கள் போராட்டங்களின் பல்வேறு அரங்குகளில் கட்சிக்கு (மார்க்சிஸ்ட்) உள்ளேயும் வெளியேயும் செயலாற்றி வரும் சக்திகளெல்லாம் ஒன்று படவேண்டும். மார்க்சியம்-லெனினியம் – மா சே துங் சிந்தனையின் ஒளியில் ஒரு புரட்சிகரக் கட்சியைக் கட்டியமைக்க வேண்டும்".
தனது முதல் பிரகடனத்தில் ஒருங்கிணைப்புக் கமிட்டி நாட்டின் பல பகுதிகளிலும் வெடித்திருந்த விவசாயிகளின் போராட்டங்களுக்கு தலைமை தாங்கி வழி நடத்திச் செல்ல வேண்டும் என்றும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஒரு புரட்சிகர கட்சியைக் கட்ட வேண்டும் என்று தீர்மானித்தது. ஒருங்கிணைப்புக் கமிட்டியின் சார்பில் ‘லிபரேஷன்’ என்ற ஆங்கில பத்திரிகை கொண்டு வரப்பட்டது. இந்தியா அரசியல் சுதந்திரம் பெறாத அரைக் காலனிய – அரை நிலப்பிரபுத்துவ நாடு; இந்தியப் புரட்சியின் இலக்குகள் அமெரிக்க ஏகாதிபத்தியம், சோவியத் சமூக ஏகாதிபத்தியம், தரகு அதிகார வர்க்க முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம்; இந்தியப் புரட்சி, விவசாயிகளின் விவசாயப் புரட்சியை சாராம்சமாகக் கொண்ட புதிய ஜனநாயகப் புரட்சி; புரட்சிக்கான பாதை நீண்டகால மக்கள் யுத்தப் பாதையே; தேர்தலை புரட்சிக் காலம் முழுவதும் புறக்கணிப்பது போன்ற அரசியல் அடிப்படை நிலைப்பாடுகளை ஒருங்கிணைப்புக் கமிட்டி அறிவித்தது. மார்க்சிய – லெனினிய – மாவோ சிந்தனையே சித்தாந்த வழிகாட்டி எனவும் பிரகடனம் செய்தது.
நக்சல்பாரி எழுச்சி ஓர் உண்மையான, புரட்சிகரமான கம்யூனிஸ்டு கட்சிக்கு அடித்தளமிட்டது. ஆளும் வர்க்கங்கள் இன்றும் அச்சத்துடனும், வெறுப்புடனும், ஆத்திரத்துடனும் குறிப்பிடும் நக்சல்பாரிகளின் கட்சி – இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) – ஏப்ரல் 22, 1969 அன்று பிறப்பெடுத்தது.
நக்சல்பாரி பகுதியைப் பொருத்தவரை, அங்கு எழுந்த அந்தப் பேரெழுச்சியை திருத்தல்வாதிகளின் தலைமையிலான ஜக்கிய முன்னணி ஏவிய போலீசுத் தாக்குதலால் அப்போதைக்கு ஒடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதன் பிறகு இந்திய நாடு பழைய இந்திய நாடாக ஒருபோதும் நீடிக்க முடியவில்லை.
அதைத் தொடர்ந்து வந்த சங்கிலித் தொடரான விளைவுகளும் எதிர்விளைவுகளும் அடங்கிய நிகழ்வுகள் அரசியல்களத்தை மட்டுமல்ல, நாட்டின் பல பகுதிகளிலும் சமூக, பண்பாட்டு சூழலையே குலுக்கி எடுத்துவிட்டது. ஆண்டாண்டு காலமாய் அநீதிக்கும் அக்கிரமங்களுக்கும் இலக்காகி இருக்கும் கூலி ஏழை உழவர்களின் உலகை – அதாவது இந்திய நாட்டின் இருள் சூழ்ந்த மூலைமுடுக்குகளுக்கெல்லாம் வெவ்வேறு பகுதிகளில் நாட்டுப்புற ஏழை எளிய மக்கள் நடத்திய அடுத்தடுத்த ஆயுதந்தாங்கிய போராட்டங்கள் ஒளிபெறச் செய்தன.
சிறீகாகுளம், தெலுங்கானா, பஞ்சாப், உ.பி., பீகார், கேரளா, தமிழ்நாடு,அசாம், காசுமீர் என்று குறுக்கு நெடுக்காக நாடெங்கிலும் விவசாயிகளின் வர்க்கப் போர் காட்டுத் தீயாய்ப் பற்றிப் படர்ந்தது.
‘வேலை நிறுத்தம் என்றால் கதவடைப்பு’ என்று மிரட்டிய ஆலை முதலாளிகளை முற்றுகையிடும் தொழிலாளர்களைக் கண்டு நிர்வாகம் அஞ்சி நடுநடுங்கியது. நக்சல்பாரித் தொழிற்சங்கங்களின் போர்க்குணமிக்க “கெரோ” போராட்டங்கள் பரவின.
நாடு முழுவதும் அரசு அலுவலர்கள் வேலைகளைத் துறந்து, மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளைத் துறந்து நக்சல்பாரி இயக்கத்துடன் தம்மை இணைத்துக் கொண்டனர். விவசாயிகளை அணிதிரட்ட கிராமங்களை நோக்கிச் சென்றனர்.
1970-களின் துவக்கத்தில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் _ லெனினிஸ்ட்), மற்றும் சிறு குழுக்களின் தலைமையில் நக்சல்பாரி இயக்கம் உச்சநிலையை எட்டியது. ஆந்திராவின் 15 மாவட்டங்களில் கம்யூனிசப் புரட்சியாளர்களின் தலைமையில் அணிதிரண்ட உழவர்கள், குறிப்பாக ஆதிவாசிகிரிஜனங்கள் 300-க்கும் மேற்பட்ட நிலப்பிரபுக்களை அழித்தொழித்தனர் அல்லது கிராமங்களை விட்டுத் துரத்தியடித்தனர். அதன்மூலம் கிராம்ப் புறங்களில் மாற்று அரசியல் அதிகாரமாகத் தங்களை நிறுவிக் கொள்ளமுயன்றனர். இதே முறையில் இரகசிய கொரில்லா குழுக்களைக் கட்டி நிலப்பிரபுக்களை அழித்தொழிப்பதற்கான நடவடிக்கைகளில் பீகார், மேற்கு வங்கம், பஞ்சாப், ஒரிசா, தமிழ்நாடு, கேரளாவில் கம்யூனிசப் புரட்சியாளர்கள் ஈடுபட்டனர். இதைகண்டு எழுச்சியுற்ற வங்காள இளைஞர்கள் கல்கத்தா நகரில் கல்வி நிறுவனங்களையும், பிற்போக்குப் பண்பாட்டு சின்னங்களாக கருதி சீர்திருத்தவாதிகளின் சிலைகளையும் தாக்கினர். போலீசு நிலையங்களைத் தாக்கி ஆயுதங்களைப் பறிமுதல் செய்வதும், சிறைகளைத் தகர்த்துக் கொண்டு வெளியேறுவதும்கூட நிகழ்ந்தன.
ஆனால் போதிய ஆயுதங்களும், பயிற்சியும் இல்லாத உழவர் படைக் குழுக்களுக்கு எதிராக துணை இராணுவமும் போலீசுப் படையும் ஏவி விடப்பட்டபோது, அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டபோது, நக்சல்பாரி இயக்கம் பின்னடைவைச் சந்தித்தது. தலைமையின் செயல்முறை தவறுகளும் இதற்கு இன்னொரு காரணமாக அமைந்தது. நூற்றுக்கணக்கான நக்சல்பாரிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் போலீசின் சந்தேகத்துக்கு இலக்கான அப்பாவி இளைஞர்களும் “போலீசுடன் மோதல்” என்கிற பெயரில் படுகொலை செய்யப்பட்டனர். ஆந்திராவின் காடு-வயல்வெளிகளிலும், கல்கத்தா நகரத் தெருக்களிலும் குண்டுதுளைத்த நக்சல்பாரிகளின் பிணங்களை விசிறியடித்து பயபீதி திட்டமிட்டு பரப்பப்பட்டது.
1973-க்குள் 32,000 நக்சல்பாரிகளும் அவர்களது ஆதரவாளர்களும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளிலும் அடைக்கப் பட்டனர். அவர்களில் பலர்மீது கொலை, கொள்ளை மற்றும் சதி வழக்குகள் போடப்பட்டன. சிறைச்சாலைக்குள் போலீசு சித்திரவதைகளும், துப்பாக்கிச் சூடுகளும் ஒருவழக்கமாகி விட்டன. 1970-72 ஆகிய மூன்றாண்டுக்குள் குறைந்தது பல்வேறு துப்பாக்கிச் சூடுகள் நடத்தி பல நூறுபேரை ஆங்காங்கே நக்சல்பாரிகள் கொல்லப்பட்டனர். 1975-76 அவசர நிலை ஆட்சிக் காலத்திலும் இதே நிலை நீடித்தது. நக்சல்பாரிகளை ஒடுக்குவதற்கென்றே ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்புப் போலீசுப் படையும் சித்தரவதைக் கூடங்களும் உருவாக்கப்பட்டன.
நாடெங்கும் நரவேட்டை அரங்கேறியது. அதில் தலைமை குழுவும் தப்பவில்லை. பலர் தலைமறைவும் சிறைவாசமும் சாரூ கொல்லப்பட்டும் கட்சியின் அடிதளத்தை ஆளும் வர்க்க ஒழித்துக் கட்டியதோடு கட்சியின் தலைமை தன் தியாகத்தை செயலையும் அளப்பறிய செய்தளவு மார்க்சிய லெனினிய சிந்தாந்த வலிமை கொண்டிக்கவில்லை அதனால் தான் எதிர்த்து அழிக்க வேண்டிய எதிரியை விட தன்னைதானே அழித்துக் கொண்டது.
அன்றைய நக்சல்பாரியின் வீச்சை கண்டஞ்சிய அரசு, மக்களை பல்வேறு பிற்போக்கு கலாச்சாரங்கள் மூலமும் உண்மையான மக்களின் நண்பர்களாக மாறிய ஓட்டரசியல் கட்சிகளும், புரட்சி வேசம் போட்டு மக்களை மயக்கிய பல நிகழ்வுகள்...
இன்று நாடாளுமன்ற போலி ஜனநாயகமே அழுகி நாறுகிறது. இன்று கொடிகளும் சின்னங்களும் மட்டுமே வேறுவேறு. “தனியார்மயம், தாராளமயம், உலகமயம்” என்கிற கொள்கையில் ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளிடையே எந்த வேறுபாடும் கிடையாது. சாதி – மத வெறியைத் தூண்டி அரசியல் ஆதாயத்துக்காக மக்களைப் பலியிடுவது அதிகரித்துவிட்டது. சிற்றூர் – பேரூர்களில் எல்லாம் கிரிமினல் குற்றக் கும்பல்கள் தோன்றி அரசியல் கிரிமினல்மயமாகிவிட்டது.நாட்டின் சொத்தை கொள்ளையடிக்க பல கட்சிகள்.
அதேசமயம் அவர்களுள் யார், யார், எந்தப் பிரிவினர் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு ஆதாயமடைவது என்பதில் நாய்ச்சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இலஞ்ச – ஊழல் அதிகார முறைகேடுகளாலும், சமூக விரோத கிரிமினல் குற்றங்களாலும் அரசியல் அமைப்பு முழுவதும் புழுத்து நாறுகிறது.
இதனையெல்லாம் கணக்கில் கொண்டு உதித்த நக்சல்பாரியின் தமிழக பிரிவுகளை பார்ப்போம்.
ML அமைப்புகள் மீதான விமர்சனம்
1969
ஏப்ரல்
22 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்
உருவாக்கப்பட்டது.
1969
டிசம்பரில்
தமிழ் மாநில மாநாடு கூடியது அதில் தோழர் எல். அப்புவை செயலாளராக கொண்ட ஒரு மாநில
கமிட்டி தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த மாநில கமிட்டிக்கு தோழர்கள் எல்.ஆப்பு,
ஏஎம்கே
கலியபெருமாள், பிவிஎஸ், மாணிக்கம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநிலக்குழு செயலாளரும் மத்திய கமிட்டி
உறுப்பினருமான எல்.அப்பு 1970 செப்டம்பர் 28
-30 வேலூரில்
கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அதன் பின் மத்திய கமிட்டி உறுப்பினரான AMK
மாநிலக்குழு
செயலாளராக தொடர்ந்தார்.
1972 சாரு கொல்லப்பட்ட பின்னர் இந்தியா தழுவிய கட்சி தன் பிரதேசம் தழுவிய கட்சிகளாக குழுக்களாக மாறின.ரசியாவில் பல்வேறு குழுக்கள் ஒன்றுபட்டு கட்சியாக மாறின ஆனால் இங்கு கட்சி சிதறி குழுக்களாக மாறியுள்ளது.
தமிழகத்தில் 1972
நவம்பரில்
தஞ்சை மாவட்டத்தில் மாநில குழு கூட்டம் நடைபெற்றது அதில் கட்சியின் அரசியல் வழி
மீது மாறுபட்ட கருத்துக்கள் தோன்றின. தோழர் ஏ.எம்.கே அழித்தொழிப்பு வழியையும் சாருவின் அதிகாரத்தை
எதிர்த்தார். வெகுஜன மார்க்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
தோழர்கள் பி.வி.எஸ்,
கனி,
தமிழ்வாணன், தாத்தா பாண்டியன் ஆகியோர் அழித்தொழிப்பு மற்றும்
புரட்சிகர போராட்டங்கள் உள்ளடக்கத்தையும் ஆதரித்தனர். இன்னொருபுறம் தோழர் தமிழரசன்
அழித் தொழிப்பு ஒன்றே போராட்ட வடிவம் என்ற கருத்தைக் கொண்டிருந்தார் .
ஏ.எம்.கே தனது கருத்துக்களை ஓர் அறிக்கையாக எழுதி கமிட்டி கூட்டத்தில் வைத்தார். அந்த அறிக்கை படிப்பினை அடிப்படையில் உள்ளதா என்று கேட்ட கேள்விக்கு இல்லையென்றால் அவை அனுமதிக்கக்கூடாது என்று கனியும், பிவிஎஸ் யும் வாதிட்டனர். அது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.இந்நிலையில் தன்னை செயலாளர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக முன்வந்தார் ஏ.எம்.கே. ஆனால் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஏற்க மறுத்ததால் தொடர்ந்தார். படிப்பினை அடிப்படையில் வேறொரு அறிக்கை எழுதி அடுத்த கூட்டத்தில் வைக்கும்படி அவரிடம் கோரப்பட்டது.அது நடவாமல் போனது(ம.யூ.போ 88 சிறப்பு கூட்ட நகல் அறிக்கையின் அடிப்படையில்)
ஏப்ரல் 1973 இல் தோழர் ஏஎம்கே கைதாகிறார் 1978
இல்
விடுதலையாகிறார்.
1973
ம்
ஆண்டின் கடைசியில் மாநிலக் குழுவில் மூன்று விதமான போக்குகள் நிலவின.
1).
கூட்ட
குழு நிலையை தோழர்கள் தமிழரசன், தமிழ்வாணன்,
சின்னதுரை
ஆகியோர் எடுத்தனர்.
2).
அழித்தொழிப்பு
நிலையை தோழர்கள் பழனியப்பன், தாத்தா பாண்டியன் எடுத்தனர்.
3).
தோழர்
கனி வலது சந்தர்ப்பவாத நிலையில் இருந்தார். 1974 தொடக்கத்தில் இருந்து மேற்கு பிராந்திய
குழு என்ற பெயரில் இயங்கி வந்த தோழர்கள் ராமானுஜம், ராகவன் மாநில குழுவிற்கு கீழ் பட்ட பிராந்திய குழு
என்று கூறி செயல்பட்டு வந்தனர்.
இவர்கள் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் தமிழ்நாடு என்று அழைத்துக் கொண்டு பத்திரிக்கை நடத்த
தொடங்கினர்.
கோவை குழுவினர் அழித்து ஒழிப்பு என்பது
போராட்டம் வடிவம் அல்ல
மற்றும் மா.கு அரசியல் வழியிலான அழித்தொழிப்பு போராட்டம் கூலி
ஏழை உழவர்களை ஈர்க்கவில்லை என்றும் பிரசாரம் செய்தனர்.
அன்று
மா. கு அழித்தொழிப்பு ஒரே போராட்ட வழிமுறை என்று கூறியவர்களும் கூட்டக்
குழுவினரும் அழித்தொழிப்பு என்ற போராட்ட வடிவத்தை மையமாக பார்த்தனர். அதற்கேற்ப
அமைப்பு வழியிலும் அழித்தொழிப்பில் ஈடுபடுபவர்களுகானதே கட்சி என்றிருந்தது. (எனவே நடைமுறையில் முழு
நேர ஊழியர்களே உறுப்பினர்கள்).
தோழர் தமிழரசன் அன்று ஒரு அகில இந்திய
இணைப்பில் ஆர்வம் காட்டவில்லை தனது சொந்த அனுபவத்தின் மூலம் தான் ஒரு தலைமையாக
வளரமுடியும் வளரவேண்டும் என்ற அனுபவத்தால், இவருடைய
குட்டி முதலாளித்துவ தனிநபர் மனப்பாங்கும் அனுபவமே பிற்காலத்தில் அவ்ருடைய நிலைபாடாக வளர்ந்தது; இருந்தாலும் அன்று அழித்தொழிப்பு ஒரே வடிவம் என்ற
நிலையை மறுத்து வெகுஜனப் போராட்டங்களை நடத்தவேண்டும் என்ற தெளிவுடன் இருந்தார்.
இவர்களிடையே ஏற்பட்ட உடைவு மூன்று போக்குகளை கொண்டுள்ளது.
கூட்ட குழுவானது நிலப்பிரபுத்துவத்தை
புரிந்துகொள்ளுதல் குறைபாடு இருந்தது நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை என்பதற்கு
பதில் ஒவ்வொரு கிராமத்திலும் நிலபிரபு இருப்பதாக பார்த்தது . அதே நேரத்தில் எஸ் ஓ
சி யானது இங்குள்ள சூழ்நிலையிலிருந்து ஆய்வு தொடங்காமல் வெளி நாட்டு வரலாற்று
அனுபவத்தை அப்படியே பெயர்த்து பொருத்தும் இணைகோட்பாட்டு வாதம் மேலோங்கி இருந்தது.
அவர்கள் இடைநிலை வர்க்கத்திற்கு ஜனநாயக ஐக்கிய முன்னணி ஜங்கர்பாணி போன்றவற்றை ரசிய
சீனப்புரட்சி இவற்றிலிருந்த நிலைமைகளுடன் நேரடியாக ஒப்பிட்டுப் பார்த்து முடிவுகளை
மேற்கொண்டனர்.
1977 க்கு முன் எஸ் ஓ சி எந்த வெகுஜன அமைப்பும் கொண்டிருக்கவில்லை ஆனால் திருப்பத்தூரில் தோழர் சீராளன் படுகொலை கண்டித்து ஒரு மாபெரும் பேரணியை திருப்பத்தூரில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் முன்னாள் சென்னை மேயராக இருந்த தோழர் எஸ் கிருஷ்ணமூர்த்தியால் நிறுவப்பட்டு வந்த மக்கள் உரிமை கழகம் பெரும் பங்காற்றியது, அதில் கிடைத்த படிப்பிலிருந்து மக்கள் உரிமை கழகத்தை உடைத்து ஒரு தனியாக மாநில மக்கள் உரிமை அமைப்பைத் தோற்றுவித்தனர் . அதன்பின் எஸ் ஓ சி மக்கள் உரிமை அமைப்பு கட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டு இயங்கினர்.
1978
இறுதிவரையிலும்
ஒன்லி பார்ம் தாங்கள் மட்டும்தான் கட்சி மற்றவையெல்லாம் குழுக்கள் என்று
அகம்பாவத்தில் அணுகினர். 1980 களில் வீ.எம் அமைப்பு
தன் நிலையை கைவிட்டு வலதுசாரி நிலைக்கு சரிந்து கொண்டிருந்தனர்.
1980
ஏப்ரல்
22 ல் தமிழ்நாடு மாநில குழு ஆந்திர மாநிலத்தில் குழுவும்
இணைந்து மக்கள் யுத்தம் என்ற கட்சியை அமைத்தனர்.
அன்று இவர்கள் வைத்த விமர்சனம் கீழ் வருமாறு
1). சர்வதேச சூழ்நிலை பற்றிய இந்த சகாப்தத்தின் தன்மை பற்றி மதிப்பீடு தவறு மூன்றாம் உலக யுத்தம் தொடங்கிவிட்டது என்ற கருத்து தவறு.
2). அகநிலை அம்சத்தை அதாவது மக்களின் தயார் நிலை அமைப்பு வலிமை இவற்றைப் புறக்கணித்து இடது தீவிரவாத வழியை கடைபிடித்தால் முதிர்ச்சியடையாத அறை கூவல்கள் முழக்கங்கள் வைத்தல்.
3).இந்தியாவின் சமச்சீரற்ற வளர்ச்சி பார்க்கா திருத்தல் நகர்புறங்களில் கொரில்லா போராட்டங்களை தொடுத்தல்.
4). அழித்து ஒழிப்பும் ஒரு போராட்ட வடிவம் என்பதற்கு மாறாக அதனை மட்டுமே ஒரே போராட்ட வடிவமாக கருதுதல் வெகுஜன போராட்டங்களையும் வெகுஜன அமைப்புகளின் புறக்கணித்தல்.
5). தள பிரதேசங்களை உருவாக்கிய பின்னே ஐக்கிய முன்னணி என்ற கருத்து.
6). அமைப்பு வழியில் அராஜகம்.
இன்று தமிழகத்தில் உள்ள அதன் வழி
தோன்றல்கள் என்ன நிலையில் உள்ளனர்.
த.நா.மா.லெ மற்றும் ம.க.இ.க இரண்டும்
பல்வேறு போக்கில் சென்று இறுதியில் தி.க மற்றும் தி.மு.க வின் பின் நின்றுக்
கொண்டு மார்க்சிய லெனினியத்தை பேசுவதை மட்டுமல்ல புரட்சியை கைவிட்டுவிட்டு அம்பேத்கர்
பெரியார் இவர்களுக்கு வழிகாட்டியாக உள்ள பொழுது இவர்கள் என்னவகையிலான புரட்சியாளர்கள் என்பது
தெளிவு.
இவை அடுத்து ம.ஜ.இ.க வின் உடைவு அதன்
தலைமையின் அரஜவாதம்தான் என்பதனை ஏ.எம்.கே மீதான விமர்சனம் அண்மையில் வெளியான இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) (செங்கதிர்) தமிழ்நாடு வெளியிட்டுள்ளது.
இவ்வாறு இவர்களின் தவாறான போக்கையும் தலைமை வழிபாடும் குறுங்குழுவாதத்தின் உச்சத்தில் உள்ளனர்.(இவைகள் பற்றி விரிவான கட்டுரை தனித்தனியாக வெளிக் கொணர முயலுவோம்).
நாம் சீனாவின் அனுபவத்தை கூட சரியாக
புரிந்து கொள்ளவில்லை ஏனெனில் அங்கு ஆயுதப்போராட்டம் துவக்கத்திலிருந்து
போராட்டமாக விளங்கியதேயொழிய அது மட்டுமே ஒரே போராட்ட வடிவமாக இருக்கவில்லை. இங்கு
நாம் ஆயுதம் தாங்கிய நடவடிக்கை மட்டுமே வர்க்கப் போராட்டமாக கருதிக் கொண்டு இவை
மட்டுமின்றி மக்கள் படை சிறு குழுவிலிருந்து வளர்கிறது என்பதை காண மறுத்து;
மக்கள்
படையையும் கொரிலா குழுவையும் ஒன்றாக கருதி மக்கள் யுத்தத்தையும் கொரிலா
போராட்டத்தையும் ஒன்றாக கருதி செயல்பட்டோம். கட்சியும் படையும் ஒன்றுதான் என்று
கருதப்பட்டது ஒரு கொரில்லா நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் அதனுடைய தயாரிப்பில்
ஈடுபட்டுள்ள கட்சி உறுப்பினர்களாக கருதப்பட்டனர். உட்கட்சி முரண்பாடுகள் பகையாக
கையாளப்பட்டன .(சீன க.க.யுத்த வரலாறு ஹோகான்சி) உண்மையை உணர்ந்துக் கொள்ளவில்லை.
எந்த ஒரு பொருளிலும் இரு எதிர்மறைகளுக் கிடையான முரண்பாடு நிலவும். முரண்பாடு இல்லாத பொருள் ஏதும் இல்லை கட்சிக்குள்ளும் இரு பாதைகள் கருத்துகள் சித்தாந்தம் இடையே முரண்பாடு நிலவுகிறது குறிப்பிட்டமுரண்பாட்டின் போராட்டத்திலும் அது தீர்வு காணப்படும் விதத்திலும் தான் கட்சியின் வாழ்வும் வளர்ச்சியும் அடங்கியுள்ளது. ஒரு குறிப்பிட்ட முரண்பாடு முடிவு பெற்றதும் வேறொரு முரண்பாடு எழுகிறது எனவே முரண்பாடும் அவற்றுக்கிடையே ஒற்றுமையும் போராட்டமும் எப்போதும் நிலவும் இது இல்லாவிட்டால் கட்சியின் வாழ்வும் முடிவுக்கு வந்துவிடும். இதன் பொருள் நாமே செயற்கையாக முரண்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்பதல்ல.
விமர்சிக்கும்
முறையானது விமர்சனம் என்பது நோயை குணப்படுத்துவதாக இருக்க வேண்டுமே ஒழிய நோயாளியை
கொல்வதாக இருக்கக்கூடாது. விமர்சனம் சுயவிமர்சனம் மூலம் கட்சியில் உள்ள தவறுகளை
களைந்தெறிய போராட வேண்டும் என்று அடிக்கடி பேசப்படுகிறது. தவறு செய்யும் தோழர்கள்
விஷயத்தில் அவர்களுக்கு அறிவுறுத்தி அவர்கள் தவறுகளை திருத்திக் கொள்ள உதவி
செய்வதே முதன்மையானது..
இன்று தமிழகத்தில் புரட்சிக்கான ஒரு கட்சி இல்லாத நிலையில் பல குழுக்கள் தாங்கள் மட்டும் புரட்சிக்கானவர்கள் என்று வலம் வருகின்றனர். ஆனால் அவர்களை பீடித்துள்ள குறுங்குழுவாத நோய் விடுபடாத வரை அவர்கள் வளர்வது சாத்தியமே இல்லை.
ஆகவே அரசியல் பொருளாதார அறிவுள்ளதோடு மார்க்சிய சித்தாந்த அறிவுடன் கூடவே சிறந்த கம்யூனிச பண்புள்ளவர்கள் ஒரு சிலரே ஆயினும் அத்தகைய சிறந்த பண்புள்ளவர்கள் முதலில் ஒன்றுகூடி ஒரு சில குழுவாக உருவாக வேண்டும். அவர்கள் கம்யூனிசத்தை ஆதரிப்பவர்களை ஒன்றுதிரட்டி ஒரு புரட்சிகரமான கட்சியை உருவாக்க கூட்டாக முயற்சி செய்யவேண்டும். அதாவது ஆரம்பத்தில் முதலாளித்துவ வகைப்பட்ட தீய பண்புள்ளவர்களை சேர்த்துக்கொண்டு இயக்கத்தை துவங்கக் கூடாது. தோழர் ஸ்டாலின் சொல்வது போல உன்னதமான தலைவர்களைக் கொண்ட ஒரு சிறு குழுவைத்தான் முதலில் உருவாக்க வேண்டும். அத்தகைய உன்னத மானவர்கள்தான் ஒற்றுமைக்காகப் பாடுபடுவார்கள். அத்தகைய தலைவர்கள்தான் மக்களிடத்திலும் அணிகளிடத்திலுமுள்ள தீய பண்புகளை களைவதற்கு பொறுமையாக வழிகாட்டுவார்கள். எனினும் இன்றைய கம்யூனிச இயக்கமானது பல குழுக்களாக பிளவுபட்டுள்ளது என்ற எதார்த்தத்தையும் நாம் புறக்கணிக்கக் கூடாது. ஆகவே இருக்கின்ற கம்யூனிச குழுக்களிலுள்ள இத்தகைய அன்னிய வர்க்க தீய பண்புகளை எதிர்த்து உறுதியாகப் போராடுவதற்கான கொள்கை வகுத்து அந்த குழுக்கள் செயல்பட வேண்டும். அன்னிய வர்க்க தீய பண்புகளை எதிர்த்துப் போராடிக்கொண்டே பிற குழுக்களுடன் ஒன்றுபட்டு இந்தியப் புரட்சிக்கான கொள்கை கோட்பாடுகளிலுள்ள கருத்து வேற்றுமைகளை சிந்தாந்தப் போராட்டத்தின் மூலம் முடிவிற்கு கொண்டுவந்து ஒரு தெளிவான கருத்தொற்றுமைக்கு வரவேண்டும். அதன் அடிப்படையில் ஒரு கட்டுப்பாடான உறுதிமிக்க கம்யூனிஸ்டு கட்சியை உருவாக்க வேண்டும்.
+++++++++++++
No comments:
Post a Comment