இலக்கு 69 இணைய இதழ் pdf வடிவில்

 இந்த இலக்கு இணைய இதழில் பேசப்பட்டுள்ள பகுதி

1).இந்திய தேசத்தின் தோற்றம். - கோ.கேசவன். பாகம் 1.

2).இந்தியாவின் தேசிய இனச் சிக்கலும் ஆளும் வர்க்கங்களும் - சுனிதிகுமார் கோஷ் பாகம் 1

3).தமிழ் தேசத்தின் மீதான ஒடுக்கு முறைக்கு எதிரானபோராட்டத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை பாகம் - 1

4). இந்திய கம்யூனிஸ்ட்டுகளும் கம்யூனிஸ்ட் இயக்கங்களும்.

5). குறுங்குவாத பிளவுவாத புதைசேற்றில் கம்யூனிச கட்சிகள்/ குழுக்கள்.

எங்களின் முயற்சியாக இங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் குழுக்கள் மார்க்சிய ஆசான்களின் போதனைகளை, தத்துவ, அரசியல் பொருளாதார வழிகாட்டுதல்களை புரிந்துக் கொள்ளாமையும் தான்தோன்றிதனமாக ஆளுக்கொரு திசையில் பயணித்து வலுவான எதிரியை வீழ்த்த எந்த முயற்சியையும் எடுக்காமல் தங்களின் தவறுகளை மறைக்க ஏதேதோ பேசி காலம் ஓட்டிக் கொண்டுள்ளனர். அவர்கள் பேசாத பேசியும் ஒதுங்கி செல்லும் பகுதிகளை கோடிட்டு காட்டியுள்ளோம் வாசித்து கருத்திடுங்கள் தோழர்களே. 

இந்திய தேசத்தின் தோற்றம்,தேசிய இனச் சிக்கலும் தமிழ் தேசத்தின் மீதான ஒடுக்கு முறைக்கு எதிரானபோராட்டத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை ...

இன்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் குழுக்கள் பற்றிய இவை ஆசான்கள் சொன்னவை...
ஒரு புரட்சிக்கான கட்சியாக இல்லாத நிலையை தொடர்ந்து ஆராயும் பொழுது குறுங்குழுவாதமே முதன்மையானது ஏனெனின் ஒவ்வொரு கட்சியும் தான் மட்டுமே சரியான கட்சி என்றும் தான் மட்டுமே சரியான செயல்பாட்டில் உள்ளதாக கூறிக் கொள்வோரும் சமூக எதார்த்த நிலையில் செயல்படாமல் தங்களின் சரி தவறை புரிந்துக் கொள்ளாமல் அகநிலைவாத நிலையில் செயல்படுவது ஒரு பரந்துபட்ட செயல்பரப்பை மறுத்து குறித்த பிரச்சினைக்குமேல் இயங்காத குறுங்குழுவாத ஒரு போக்கே எனலாம்...
குறுங்குழுவாதத்தின் அபாயத்தையும், அதிலிருந்து விடுபட வேண்டுமானால் கட்சியின் அணிகளுக்கு மார்க்சிய போதனையின் அவசியத்தை மாவோ எடுத்துச் சொன்னார்.
அடுத்தப்பகுதி...
ரசியப் புரட்சி வெற்றிபெற்று, ஜாரை ஒழித்துக் கட்டிய பிறகு, “தேசிய இனங்களின் கூட்டரசாக ரசியாவை மாற்றி அமைப்போம். ஒவ்வொரு மொழி வழி அரசு அதற்கான அதிகாரம் - அந்தந்த மொழி - இனத் தேசமாக ஏற்கப்படும். அப்படிப்பட்ட தேசங்களின் கூட்டரசு அமைப்போம். ஒட்டு மொத்த நாட்டிற்கும் இப்போதுள்ள ரசியா என்ற பெயர் ரசியக் குடியரசு என்ற பெயராக மட்டும் இருக்கும்.
ஒட்டு மொத்த நாட்டிற்கும் - எந்த இன - மொழி அடையாளமும் இன்றி, சோவியத் சோஷலிசக் குடியரசுகளின் ஒன்றியம் (Union of Soviet Socialist Republics - USSR) என்று பெயர் மாற்றுவோம் இவ்வாறு இணைந்துள்ள குடியரசுகளில் ஒன்று பிரிந்து தனிநாடு அமைத்துக்கொள்ள அந்த மக்கள் தீர்மானித்தால், பிரிந்துபோக அனுமதி உண்டு” என்று லெனினும் ரசியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சித் தலைவர்களும் உறுதி கொடுத்தனர்.
சோவியத் ஒன்றியத்தில் இணைந்துள்ள தேசிய இனங்கள் பிரிந்துபோக விரும்பினால் பிரிந்து போகும் உரிமை உண்டு என்று அரசமைப்புச் சட்டத்தில் எழுதினார்கள். பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை (Right to Self Determination with the right to secede) என்ற தேசிய இனங்களுக்கான அடிப்படை உரிமையை சோவியத் ஒன்றிய அரசமைப்புச் சட்டத்தில் சேர்த்தார்கள். அஜர்பைஜான், பைலோ ரஷ்யா, உக்ரைன், எஸ்தோனியா, லாட்வியா என 15 தேசிய இனங்களின் கூட்டமைப்புதான் சோவியத் ஒன்றியம்.
அந்த சோவியத் ஒன்றியத்திற்கு ஒற்றை ஆட்சி மொழி - அலுவல்மொழி இல்லை! பதினைந்து தேசிய இனங்களின் தாய்மொழிகளும் ஆட்சி மொழிகளே! சுப்ரீம் சோவியத் நாடாளுமன்றத்தில் இந்த 15 மொழிகளிலும் பேசலாம். இத்தனைக்கும் இரசிய மொழி பேசுவோர் சோவியத் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 44 விழுக்காட்டினர்! ஆனாலும் அது இணைப்பு மொழியாகவோ, ஒற்றை ஆட்சி மொழியாகவோ ஆகக் கூடாது என்று பல்தேசிய இனங்களின் சமநிலை காத்தார் ரசியரான லெனின்.

இந்தியாவில் தேசிய இனங்களின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் மறுத்துவிட்டு கட்டாயமாக இணைக்கப் பட்டுள்ளது. இந்த இணைப்பு உறுதியானதல்ல. தேசங்களின் சுதந்திரத்தை மறுத்துவிட்டு அல்லது கட்டாயப்படுத்தி தேசங்களை ஒன்றிணைப்பது என்பது சாத்தியமா என்பதனை இங்கே தின பிரச்சினை வெளிச்சமிடுகிறது. அவ்வாறு ஒன்றிணைத்துள்ள இந்தியாவின் தேசிய இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் ஒவ்வொரு தேசமும் தன்னுடைய சுதந்திரத்திற்காகவும் ஜனநாயகத்திற்காகவும் தங்களை கட்டாயப்படுத்தி ஒன்றிணைப்பவர்களை எதிர்த்து பிரிந்து போகும் சுதந்திரத்துக்காக போராடிக் கொண்டேதான் இருப்பார்கள். ஆகவே ஒவ்வொரு தேசத்திற்கும் தேசிய சுயநிர்ண உரிமை வழங்கி ஒவ்வொரு தேசத்தின் விருப்பத்தின் அடிப்படையில் அவர்களை பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமை வழங்கி ஒன்றிணைக்க வேண்டும் என்பதுதான் கம்யூனிஸ்களின், தேசியம் பற்றிய கொள்கையாகும்.


இவ்வாறு இன்றைய தேவையை ஒட்டி எங்களின் தேடலும் உங்களின் மார்க்சிய புரிதலை வளப்படுத்தும் என்ற நோக்கிலும் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் வாசியுங்கள் வாருங்கள் உங்களின் கருத்துகளோடு தோழர்களே...


இலக்கு 69 இணைய இதழ் இந்த இணைப்பை அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள்

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்