சாதியை புரிந்துக் கொள்ள சுருக்கமான தேடல்

 தோழர்களே வணக்கம், 

விவாதிக்க-1

சாதி என்றால் என்ன?


இன்று தினம் தினம் நாம் பார்க்கும் செய்திகளும் செயல்களும் நாம் வாழும் சமூகத்தின் ஒரு பகுதியினருக்கு செத்துப் பிணத்தை கூட எடுத்து செல்ல பொது வழி இல்லை ஒன்றாக வாழ்வதற்கு இடமில்லை ஒற்றுமையாக வாழவழிவகையில்லை மக்களை பல்வேறு பிரிவினர்களாக பிரித்ததில்லாமல் இதில் ஒரு பிரிவினர் கீழானவர் தீண்டதாகதவர் என்று              ஒதுக்கி வைக்கும் கீழான போக்கே ந்த பிரிவினையே சாதியம்சாதி இருதலுக்கு கட்டியம் கூறுகிறதுஇந்த தீண்டாமை மற்றும் பல ஒடுக்குமுறை ஆளாகும் சாதியினரா கட்டும் ஆதிக்கசாதி எனக் கூறப்படும் நிலவுடைமை சமூகத்தில் அடுத்தவர உழைப்பில் வாழ்ந்த சாதியினர் இன்று அந்த சாதியிலும் உழைக்கும் மக்களும் உழைக்காமல் வாழும் கூட்டமும் இன்று வர்க்கமாக பிரிந்துள்ளதுசாதியின் உச்சியில் அமர்ந்துள்ள அந்தந்த சாதியில் மேல் மட்ட அமைப்பில் தங்களின் தேவைகளுக்காக தன் சாதியில் உள்ள கடைநிலையில் உள்ளவர்களின் உழைப்பாள் வாழும் இவர்கள் பல்வேறு சாதி பிரிவில் உள்ள உழைக்கும் மக்களை சாதியாக பிரித்து வைத்து உழைப்பாளர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டும் ஒருவரை கொன்று கொண்டும் வாழும் அவலம் இவை ஏன் என்றால் மேல் நிலையில் உள்ளவர்கள் வாழத்தான் சாதியின் பெயரில்?

சாதியம் என்பது மக்கள் தோன்றிய காலம் தொட்டே இருந்த ஒன்று அல்ல.இவை தனி உடமை தேவையை ஒட்டி சொத்து சேர்க்கும் ஒரு கூட்டம் தோன்றிய பொழுது அடுதவர்களின் உழைப்பை சுரண்ட தேவையான பல வகை சுரண்டல் முறை உலகெங்கும் காண முடியும்அதில் இந்திய துணை கண்டத்தில் ந்த சுரண்டல் முறையின் ஒரு வடிவம் சாதியாக உருதிரண்டு நிலவுடைமை சமூகத்தில் அவை உருபெற்றதுதாவது உலகில் உள்ள மற்றச் சமூகப்பு போலவே இந்தியச் சமுக அமைப்பும் வர்க்க அமைப்பே அதில் சி தனிச் சிறப்புகள் உண்டு (வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில்). இந்தியச் சமூகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளாக சாதி நிலவி ந்தாலும் அதன் செயல்பாடும் வடிவமும் எல்லா காலங்களிலும்ஒரே மாதிரியாய் இருந்ததில்லை.நிலபிரப்புத்துவ அமைப்பு முறையில் தொழிற் பிரிவினை அடிப்படையில் சாதியம் உறுதியாக செயல்பட்டதுஇன்றோ நடைமுறையில் அவை இருந்தாலும் கோட்பாட்டு அளவில் மறுக்கப் பட்டுள்ளது (சட்ட ரீதியா). இன்று உயிர்புடன் இருப்பதற்கு காரணம் சாதி கட்சிகள் தாங்கள் சொகுசாக வாழ உழைக்கும் மக்கள் சாதியின் பெயரில் அடிபட்டு சாக மட்டுமே!

நிலவுடைமை சமூகத்தில் குலத் தொழில் அடிப்படையில் அவரவருக்கான பணியினை செய்ய வேண்டிய அவசியம் இருந்தது. அங்கே அந்த குறிப்பிட்ட குலத் தொழில் இன்றி அந்த சமூகம் இயங்க முடியாது. அதே நேரத்தில் வளர்ந்துள்ள சமூக அமைப்பில் குலத் தொழில் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை அதேபோல் குலத் தொழிலை நம்ப்பிதான் வாழ வேண்டிய கட்டாயம் எந்த சாதி பிரிவினருக்கும் இல்லை. ஆக இன்றை சமூக வளர்ச்சியில் இல்லாதொழிந்து போக வேண்டிய சாதியை கட்டிக்காக்கும் காரணியை தேடினால் இதற்கான விடை க்கிடைக்கும்.

 

 

சாதி தொடக்கம்

சாதியம் ஆரம்பம் என்பது குல சமூகம் உற்பத்தியில் ஈடுபடலான போது அவர்களுகிடையிலேயான வேலைப் பிரிவினையின் அடிப்படையில் அவரவர்களுக்கான வேலைபிரிவினையின் அடிப்படையில் செயல்பட்டதன் விளைவு குழுவிற்குள்ளே இருந்த சமத்துவம் குழைந்து தலைமை பொருப்பில் இருந்த தலைவர்பூசாரி என்ற பிரிவினர் உபரியான சொத்து சேரலாயிற்று ஒரு பக்கம் சொத்தும் இன்னொரு பக்கம் சொத்தற்றவர்களும் பிரிவினை ஏற்றதாழ்வு உருவாயிற்றுஅன்று இந்தப் பிரிவினை சாதியாக இருக்கவில்லை பல நூறு ஆண்டுகள் பல மாற்றங்களின் ஊடாக சாதியின் உரு திரண்ட நிலை கிமு 2 நூற்றாண்டிலிருந்து தெரிந்தாலும் துலக்கமாக கிபி 2ம் நூற்றாண்டில் கோலோச்ச ஆரம்பித்தது எனலாம்.


எங்கெல்ஸின் வார்த்தைகளில் சொன்னாள், "செல்வத்தின் பால் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளின் விளைவாக சமுதாய அமைப்பு பாதிக்கப்பட்டது பரம்பரை பிரபுதுவத்திற்கும் அரசும் அரசு முறைக்கும் கொழுந்துகள் துளிர்த்தனஅடிமைமுறை போர்க்கைதிகளோடு  நின்று இருந்தபோதிலும் , ஏற்கனவே குலத்தின் உறுப்பினர்களையும் கூட அடிமைப்படுத்துவதற்கு வழிவகை செப்பனிட்டு வந்ததுகால்நடைக்கு நடைபெற்ற சண்டைகள் நிலத்துக்கான திட்டமிட்ட படையெடுப்புகளாக இழிந்து ஒரு முறையான தொழிலாகிவிட்டது.

உயர்விலும் உயர்வான சம்பத்தாக செல்வம் புகழப்பட்டது..... தனிநபர்கள் புதிதாக சேர்த்த சொத்தை பாதுகாக்கவும் அதைப் பெருக்குவதற்கும் படிப்படியாக வளர்ந்து வரும் புதிய வடிவங்களுக்கும் பொதுமக்கள் அங்கீகாரம் எனும் முத்திரையைப் பதிக்க வைப்பதற்கும் வேண்டிய ஒரு நிறுவனம் இல்லாதிருந்ததுசமுதாயத்தில் ஆளும் வர்க்க பிரிவினையை நிரந்தமாகவதோடு மட்டுமல்லாமல் உடைமை அற்றவர்களை உடைமை ள்ளவர்கள் சுரண்டுவதற்கான உரிமையை நிரந்தரமாகும் நிறுவனம் வர தொடங்கியது அதுதான் அரசு என்பது".

உடைமை வர்க்கம் தோன்றிய பொழுது அதுவரை ஒன்றாக ஒரே குடும்பமாக இருந்தவர்களுக்கிடையே பிரிவினை தோன்றியது குலத் தலைவர், பூசாரி இன்னும் தலைமை பொறுப்பில் வந்தவர்கள் நேற்றுவரை ஒன்றாக இருந்தவர்கள்தான் இன்று சொத்தின் அடிப்படையில் அவர்கள் பிரிந்து வேறுவேறு பெயர்களில் வாழ முறப்படுகின்றனர், பின்னர் அவையே வழக்கமாகி சமூக ஒழுங்காகி போகிறது.

 

ஜாதியின் தன்மைகள்

பலரும் பல்வேறு விதமான ஆய்வுகளின் அடிப்படையில் கூறினாலும் சாதியின் பொதுத்தன்மைகளை இந்த நான்கு வகைக்குள் கோ கேசவன் அடக்குகிறார்.

1). பிறவியின் அடிப்படையில் தொழில் நிர்ணயிக்கப்படுதல் அதாவது பாரம்பரியமாக தொழில் கையளிக்கப்படுதல்.

2). ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் மண உறவுகளை அமைத்துக் கொள்ளல்.

3). சமூகம் முழுமைக்கும் மேலிருந்து கீழ் வரை ஒரு படிநிலை முறையை மைத்துக் கொள்ளல்.

4). சமூகம் முழுமைக்கும் தூய்மை - தூய்மையற்ற தன்மை ஆகியவற்றை உருவாக்குதல்.

சாதியம் என்பதை நிலஉடமை உற்பத்திமுறை அல்லது முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்தி முறை கொண்ட ஒரு சமூகத்தின் மேல் கட்டுமானமாக மார்க்சிய அறிஞர் டிடி கோசாம்பி கருதுகிறார்.


தெற்கு ஆசியாவில் பல்வேறு பகுதியில் சாதியினுடைய தன்மைகள் விரவிக் கிடப்பதை காணலாம்குறிப்பாக இந்தியாநேபாளம்பாகிஸ்தான்பங்களாதேஷ் மற்றும் இலங்கையில் இதன் தன்மைகள் விரவிக் கிடக்கின்றனபங்களாதேஷ் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் காண்பதை விட இந்தியா நேபாளம் இலங்கை ஆகிய நாடுகளில் ஜாதியத்தின் இறுக்கத்தை காண்கின்றனர் வரலாற்று அறிஞர்கள்.

இந்தியா முழுவதும் சாதி பரவி கிடக்கின்றது அது பொது தன்மையோடு இருப்பினும் அதிலும் பல வட்டார அடிப்படையிலான வேறுபாடுகள் உள்ளன.

தென்னிந்திய பகுதிகளில் அமைந்துள்ள சாதியானது தமிழ்நாடு மற்றும் ஆந்திர பகுதிகளில் இருப்பதை விட கேரளா பகுதியில் கட்டிறுக்கம் மிகுந்ததாக காணப்படுகிறது. (விரிவாக வரும் பகுதியில் காண்போம்).

சாதி பற்றிய முக்கிய நான்கு கோட்பாடுகள்

சாதியத்தின் தோற்றத்தை விளக்கும் சில கோட்பாடுகள் உள்ளன அவற்றில் குறிக்கதக்கன.

1.மதக் கோட்பாடு (Religious theory)

2.தொழிற் கோட்பாடு (Occupational theory)

3.இனக் கோட்பாடு (Racial theory)

4.அம்பேத்காரின் கூற்று

மதக் கோட்பாடு.ஜாதியின் தோற்ற ளர்ச்சியை சமயத்தோடு இணைத்து காணுகின்றனர்  அதுவும் இந்து சமயத்தோடு மட்டுமேஇந்து சமயம் என்பதே ஒரு கலவை ஆகும்இந்திய பகுதிகளில் பல்வேறு காலங்களில் உருவாகி திரட்சி பெற்ற மேலாதிக்க சமய கருத்துகளின் தொகுப்பாகவும் வேதநெறிகளின் மையமாகக் கொண்ட பார்ப்பனர்களின் சமயமாகும் இந்து சமயத்தை காண வேண்டி உள்ளது.

அம்பேத்கரின் கூற்று:-ஒரே சாதிக்குள் நடைபெறும் அகமண முறையே சாதியின் தோற்றத்துக்குக் காரணம் என்று கூறுகிறார்.

சாதியத்தின் மையமான கூறுகளென நாம் வரையறுத்தலை முழுமையாகச் செயற்பட்ட காலமென்பது இந்திய வடிவிலான நிலப் பிரபுத்துவக் காலக்கட்டத்தில்மட்டுமேஎனலாம்தமிழகத்தில் பல்லவர் காலந்தொட்டு வெள்ளையர் காலம் வரை இந்தக் கூறுகளை இறுக்க மாகக் காணலாம்.எனினும் எல்லாக் காலக்கட்டங்களிலும் ஆதிக்க சக்திகள் சமூகத்தை வகைப்படுத்திபெயரிட்டு அதிகாரம் செலுத்தும் நடைமுறைக்குசாதி பயன்பட்டு வந்துள்ளது.

 

சாதியின் இருத்தல்

தெற்காசியாவில் பல நாடுகளில் ஜாதி தோன்றி மறைந்த பின்னரும் இந்தியா இலங்கை நேபாள் போன்ற பகுதிகளில் இன்றும் சாதி நிலைத்திருப்பது ஏன்?

2.பல்லவர்கள் காலம் தொட்டு சோழர்கள் காலம் வரை உருவாக்கி திடப்படுத்தப்பட்ட ஜாதிய முறையும் அதனுடன் நுழைந்த தீண்டாமையும் நிலஉடமை கிராம சமுதாயத்தில் ஓர் இருக்கமடைந்த வேலை பிரிவினையை உணர்த்துகிறதுஇவை ஆரியர்களால் உருவாக்கப்பட்டதோ அன்றி திராவிடர்களால் உருவாக்கப்பட்டதோ என காண்பதை விட கிராமிய நிலவுடமை முறையின் சமூகத்தின் வடிவம் என காண்பதே பொருந்தும்இவற்றை செழுமைப்படுத்துவதில் சனாதன இந்து மதத்தின் கருத்து உருவாக்கும் பணி முதன்மையாக இருக்கிறதுஅரசு அதிகாரம் கோயில் அதிகாரம் மையமாக கொண்ட நிலவுடமை கிராமிய சமூகத்தில் இரண்டும் அதிகாரத்திலிருந்தும் தீண்டதாகாதவர் விலக்கி வைக்கப்பட்டு ஊருக்கு வெளியே தனித்து இருத்தப்பட்டனர்.

 

சமூக உற்பத்தியின் அடிநிலை மக்களான இவர்களை குறிப்பிட்டு அந்தணரில் இருந்து புல்லு பறிக்கிற பரமன் வரை’ என கூறும் கல்வெட்டாகட்டும்.புலைச்சேரி கூறும் கூரைக் குடிவாழ் மனிதர்களான’ இவர்கள் எந்தவித பொது உரிமையைகளும் இன்றி இருந்தனர்விளை நிலங்கள் விற்பனையாகும் பொழுது இவர்களும் சேர்ந்து விற்கப்பட்டனர். (கி.பி 1184- தலித்தியம் கோ.கேசவன் நூல் பக்கம் 57).

இந்தியாவில் இன்றும் சாதி நிலைத்திருப்பது ஏன்எப்படி?

ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இன்று உருதிரண்டு கிடக்கும் சாதிகள் ஒன்றித்து செய்தவை அடுத்த பகுதியில் பார்ப்போம்..... 

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்