நேற்று டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள்!
பல தோழர்கள் அவர்கள் அம்பேத்கர் பிறந்தநாளை தங்களின் வெற்றி வழியாக பேசி பல வழிகளில் பேசினர் நான் அவர்களை பற்றி நான் பேச வரவில்லை ....
உலக மயத்தின் கோர முகம் அடிதட்டு மக்கள் வாழ்வாதம் பறிக்கப்பட்டு ஒட்ட சுரண்டப்பட்டு நகர வீதிகளில் வீசப்பட்டுள்ளனர். இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படிதான் அவர்களை சுரண்டிக்கொண்டிருக்கிறது இந்த அரசு இந்த உண்மையை இந்த அடித்தட்டு மக்கள் புரிந்திருக்க வாய்பில்லை ஆனால் இவர்களை இந்த அரசமைப்பின் பித்தாலட்டங்களை தோலுறித்து காட்டாமல் அதனுள் இடம் தேடும் கூட்டத்தை நான் பேசவில்லை ஆனால் தேவைப்படும் பொழுது புரட்சி வேசம் கம்யூனிசமும் பின்னர் ஆளும் வர்க்கத்தின் பின் ஓடி ஒளிந்துக் கொள்ளும் சந்தர்ப்பவாத கம்யூனிசம் பேசும் பேர் வழிகளை பற்றிதான் இந்தப்பதிவு.
தலித்துகள் நண்பனாக நடிப்பது தேவைப்பட்டால் புரட்சியாளனாகவும் நடிப்பது இவை கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம்.
சரி அம்பேத்கர் பற்றி சுருக்கமாக பார்ப்போம்- அவர் பல்வேறு விதமான சட்ட போராட்டங்கள் மூலம் இங்குள்ள அவலங்களை போக்கவும், இந்த கொடூரங்களிலிருந்து விடுபட அந்த அடக்கப்பட்ட மக்கள் உயர்நிலை அடைந்து விட்டால் இந்த கொடுமைகள் நீங்கி விடும் என்று சீர்துருத்தம் இடஒதுக்கீடு ஆகியவற்றை முன்வைத்து போராடினார். அவை அவர் நினைத்தது போல் நடைபெறவில்லை. அவரின் போராட்டத்தினால் உயர்வு பெற்றவர்களே தான் கண்ட கனவுகளை நிறைவேற்றவில்லை. அப்பொழுது மனம் நொந்து எல்லாவற்றையும் எதிர்கிறார். இவை இந்த சுரண்டல் அரசே எல்லோருக்குமான அரசாகவும் சட்டம் எல்லோருக்கும் பொதுவானதாக நினைக்கும் ஆளும் வர்க்க சித்தாந்தமே இதனை அம்பேத்கர் தன் வாழ் முழுவதும் கடைபிடித்தார் (அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு தனஞ்செய் கீர் எழுதியதியதன் அடிப்படையில்)
மேலும்
சாதி ஒழிப்பில் அம்பேத்கரின் பணியை பார்ப்போம். - சட்ட மேதையும், பட்டியல் இன மக்களின் விடுதலைக்காக தன் வாழ்நாள் பணியை அர்ப்பணித்தவருமான அம்பேத்கர். நிலைப்பாட்டை சுருக்கமாக பார்ப்போம். சாதி முறையை எதிர்க்கும் அவர் நிலப் பிரபுத்துவத்துடன் சமரசம் செய்து கொண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை ஆதரித்தார். வாழ்நாள் முழுவதும் சாதி ஒழிப்பு சமத்துவம் பற்றி பேசியவர். அம்பேத்கர் தான் உருவாக்கிய அரசியல் அமைப்பு சட்டத்தில் சாதி ஒழிப்பு பற்றி சட்டப்பிரிவை முன் வைக்கவில்லை. தீண்டாமை ஒழிப்பு பற்றி தான் சட்டப்பிரிவு முன் வைத்திருக்கிறார் (தீண்டாமை சட்டவிரோதம் என்பதுதான்). இறுதியில் சாதியை ஒழிக்க முடியாது என்பதால் நான் இந்துவாக சாக மாட்டேன் என்று பௌத்தத்தை தழுவினார். அம்பேத்கரின் பணி பலதுறைகளில் இருந்தாலும் சட்டரீதியாக எதிர்ப்பையும் காண்பிக்கவில்லை பிரெஞ்சு புரட்சியானது சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்ற அடிப்படையில் சமுதாயத்தின் புதிய அடித்தளத்தை அமைக்க முயன்றது. அதன் பிறகான ரஷ்ய புரட்சி வழியாக சமத்துவத்தை சோசலிம் மூலம் கட்டி அமைத்தது. ஆனால் இந்த புரட்சிகளின் படிப்பினைகளை பெற்றுக் கொள்ளாத அம்பேத்கர் பிரெஞ்சு புரட்சி, ரசியா சோசலிச புரட்சி இவற்றைத் தவிர்த்து புத்த மதத்தை தழுவுவது தான் இந்துமத சாதிய ஒடுக்கு முறையிலிருந்து சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை அடைவதற்கான ஒரே வழி என்றார்.மதங்களின் அடிப்படையை தோற்றுவாயை புரிந்து கொள்ளாததன் வெளிப்பாடுதான் இவை எனலாம்.
சாதி ஒழிப்பையும் சமத்துவத்தையும் லட்சியமாகக் கொண்டு செயல்படாததன் நோக்கம் பிரிட்டிஷ் ஆட்சி நீடிக்க வேண்டும் அரசின் அதிகார பதவிகளில் தாழ்த்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் அதாவது சாரம்சத்தில் சாதி ஒழிப்பல்ல சுரண்டும் அரசின் அதிகார வர்க்க பதவிகளில் தங்களுக்குரிய பங்கினை கோருவதே ஆகும். இவை விடுதலைக்கான பாதை அல்ல.
ஆனால் உண்மையில் கம்யூனிஸ்ட்டுகள் வேறுபடும் இடம் இந்த ஒடுக்கும் அரசை புரிந்துக் கொள்வதிலிருந்தே தொடங்குகிறது.
கம்யூனானது முக்கியமாக ஒன்றை நிரூபித்துக் காட்டியது. அதாவது, ’ஏற்கெனவே தயார் நிலையிலுள்ள அரசு எந்திரத்தைத் தொழிலாளி வர்க்கம் வெறுமனே கைப்பற்றி, அப்படியே தன் சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முடியாது’. (பார்க்கவும்: ஃபிரான்சில் உள்நாட்டுப் போர் - சர்வதேசத் தொழிலாளர் சங்கப் பொதுக்குழுவின் பேருரை, லண்டன், ட்ரூலவ், 1871. பக்கம் 15-இல் இந்த விவரம் மேலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது).-கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலிருந்து.
இன்றுள்ள சமூக நிலைமைகள் அனைத்தையும் பலவந்தமாக வீழ்த்தினால் மட்டுமே தம் இலட்சியங்களை அடைய முடியும் என்பதைக் கம்யூனிஸ்டுகள் வெளிப்படையாக அறிவிக்கின்றனர். கம்யூனிசப் புரட்சியைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்கட்டும். பாட்டாளிகளிடம் இழப்பதற்கு ஏதுமில்லை, அவர்தம் அடிமைச் சங்கிலிகளைத் தவிர. அவர்கள் வெல்வதற்கோ ஓர் உலகம் இருக்கிறது.-கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலிருந்து.
இதனை புரிந்துக் கொள்ளாமல் புரட்சியையும் எதிர்புரட்சியையும் ஒன்றிணைக்கும் போக்குள்ளவர்கள் கம்யூனிஸ்டாக இருக்க முடியாது அவர்கள் சுயநலம் கொண்ட சந்தர்ப்பவாதியாகதான் இருக்க முடியும்.
அம்பேத்கர் இந்த இந்திய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தங்களுக்கான இடம் தேடி வாழவழிவகை சொன்னர் ஆனால் கம்யூனிசம் இந்த சமூக அமைப்பில் சுரண்டப்படும் வர்க்கம் வாழ முடியாது அதனால் இந்த ஏற்றதாழ்வான சுரண்டல் அமைப்பை தூக்கி எறிந்து சுரண்டல் அற்ற ஏற்றதாழ்வற்ற சமூகம் படைக்க சொல்கிறது புரிந்து வினையாற்றுங்கள் தோழர்களே..
இன்னும் பின்னர்...
No comments:
Post a Comment