நம் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு அடக்குமுறையும் ஒடுக்குமுறையும் சுரண்டல் முறையும் அரசின் அதிகார பலம் கொண்டே மூலதன ஆதிக்கத்தின் தேவையை ஒட்டியும் நடந்தேறுகிறது.
இங்கு அதிகார வர்க்கம் என்பது பொருளாதார அரசியலை அடிப்படையாய் கொண்ட மூலதன ஆதிக்கத்தின் வெளிப்பாடே
என் எழுத்துகள் இந்த 14 ஏப்ரலுக்கு பிறகு சில விவாதங்கள் ஊடாக நேர்ந்த அனுபங்களை எழுத வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
ஆதிக்க சாதிகளின் அட்டூழியர்களால் தான் சாதி கொடுமைகள் நடக்கிறது என்கின்றனர் அதனைப் பற்றி இன்று விவாதிப்போம்.
முதலில் சமூகத்தில் ஆதிக்கம் என்றால் என்ன என்று பார்ப்போம்!
அரசியல் பொருளாதார பலம் கொண்டு ஆளுமை புரிவது தானே?
ஒரு தகவல்தான், கருப்பையா மூப்பனார் ஜெ ஜெயலலிதா அவர்களுடன் தன் கட்சியை கூட்டணி அமைப்பதை ஏற்கவில்லை. ஏனென்றால் அவருக்கு இருந்த பொருளாதார பலம், "பார்ப்பன ஜெயலலிதாவை ஒரு நாட்டியக்காரி" என் வீட்டில் நடனமாடிய பெண் என்ற பண்ணையார் நிலைதானே கருப்பையா மூப்பனார் செயல். இங்கே உயர் சாதியாக (ஆதிக்க சாதி) இருந்த ஜெயலலிதாவை விட அவரை விட தாழ்ந்த சாதியில் இருந்த மூப்பனார் எப்படி எதிர்த்தார்? அதேபோல் அவருடைய சாதிலுள்ள எல்லோரும் எதிர்க்க முடியுமா?
மேலும் அதிகாரத்தை புரிந்து கொள்வதற்கு...
மூலதன ஆதிக்கத்தில் முதலாளி -தொழிலாளி ஒன்றா?
நிர்வாகத்துறையில் அதிகாரி - பணியாளர்
ஒன்றாக இருப்பதால் இவர்கள் ஒரே பிரிவினரா? இவ்வாறு வெவ்வேறு பிரிவினர் அதிகாரத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது இங்கே அதிகாரம் என்பது அவர்கள் கொண்டுள்ள சமுதாயத்தின் அரசியல் பொருளாதார நிலையிலிருந்து தீர்மானிக்கப்படுகிறது.
இங்கே நமது அரசு என்பது ஒட்டுமொத்த சமூகத்தின் அரசியல் பொருளாதார கலாச்சார ரீதியாக தீர்மானிக்கும் பலம் கொண்டது.
இன்றைய சமூகத்தில் அதிகாரம் என்பது அரசிடம் தான் உள்ளது. பிஜேபியின் நாடு தழுவிய செயல்பாடு என்பது அந்தக் கட்சி தன்னுடைய அணிகளை அதற்கு ஏற்றபடி பயிற்றுவித்து செயல்படுத்துவது தானே தவிர ஒட்டுமொத்த இந்துக்களும் இதில் ஈடுபடுவார்களோ இதனை ஏற்றுக் கொள்பவர்கள் அல்ல! இந்துக்கள் எல்லோரும் சிறுபான்மையினரின் எதிரியாக இருக்க முடியாதோ அதேபோல் ஒரே சாதியில் உள்ள எல்லோரும் ஒரே தராசில் வைக்க முடியுமா?
அரசியல் பொருளாதார நிலையில் சாதி ஆதிக்கம் என்பது நிலஉடைமை சமூகத்தில் உயர் அடுக்கில் இருந்த பிராமணர்கள், சத்திரியர்கள் சாதியினருக்கு முழுமையான பங்கு இருந்தது. அதேபோல் கிராமப்புறங்களில் தனி பெரும் சாதியின் அதிகாரம் கோலோச்சியது. அவர்களுக்கான அரசியல் பொருளாதார அதிகாரத்தினால். ஆதிக்க சாதி அல்லது சாதி ஆதிக்கம் இன்றைய இந்தியாவில் நிலவுவது ஏன்? அதேபோல் தலித் மக்களின் பிரச்சினை பேசுவது மட்டுமல்ல அப் பிரச்சனைக்கான காரணத்தையும் தீர்வையும் பேச வேண்டிய தேவை உள்ளது.
இன்றைய சாதி சங்கங்கள், சாதிக் கட்சிகளை உயிர்ப்புடன் வைத்துள்ளதோடு அந்தக் கட்சி ஆட்சி அதிகாரத்திலும் பங்குதாரர்களாக உள்ளனார். அதே நேரத்தில் கடை நிலையில் உள்ள மக்கள் பாதிக்கப்படும் பொழுது இவர்களின் பங்களிப்பு கண்கூடாக நீங்கள் பார்ப்பதுதான்.
இங்கு அடையாள அரசியலில் சிக்குண்டுள்ளவர்கள் நேரடியாக உண்மையான குற்றவாளிகளின் மூடி மறைப்பதற்கு, அந்த சாதி மக்களை ஒன்றாக்கி வசை பாடுவது. வர்க்கமாக அணி திரளுவதை அல்லது அணி திரண்டவர்களை இல்லாதாக்கும் ஆளும் வர்க்கத்தின் சூழ்ச்சி அல்லவா? உழைக்கும் மக்களை ஒன்றாக இருந்ததை சாதித்த ஆளும் வர்க்கம் தன் சுரண்டலை மூடிமறைக்க சாதி சண்டைகளும் மத சண்டைகளும் அதற்கு தேவை.
இன்றைய நமது சமூகத்தில் நாட்டின் பெரும் பகுதி மக்கள் எவ்வித அரசு வேலை வாய்ப்புகளோ அரசின் நேரடி உதவிகள் இன்றி வாழும் அவல நிலை. நாட்டின் பெருவாரியான உழைக்கும் மக்களுக்கு வாழ்வதற்கான எவ்வித பங்களிப்பும் உத்தரவாதமும் செய்யாத ஆளும் வர்க்கம், அந்த மக்கள் மீது வரி சுமை ஏற்றி அவர்களின் வாழ்க்கையை இன்னும் நிர்மூலமாகிறது.
No comments:
Post a Comment