தமிழகத்தில் சித்தாந்தம் அற்ற அரசியல் என்று திராவிட அரசியல் இயக்கத்தை விமர்சித்து அவர் பிரண்ட் லைன் பத்திரிக்கையில் கொடுத்த நேர்காணல்தான் இவை... நூல் வடிவில் உள்ளதை அடுத்த பதிவில் பதிவேற்றம் செய்கிறேன்.
“தமிழகத்தின் அரசியலில் 40 அண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிற திராவிட இயக்கம் இன்று அடையாள நெருக்க (Identity Crisis) அளாகியுள்ளது. திராவிட. முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய திராவிடக் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் இயக்கப்படும் பி.ஜே.பி.யுடன் தேர்தல் கூட்டணி வைத்துக் கொள் வதையும், ஆட்சி அதிகாரத்தைப் பங்குப் போட்டுக் கொள்வதையும் விட இதற்கு சிறந்த சாட்சியம் வேறு எதுவும் தேவையில்லை. திராவிட இயக்கம் எதை எதையெல்லாம் எதிர்த்து வந்திருக்கிறதோ, அதற்கெதிரான சக்திகளுக்கு, இன்று துணை நிற்கிற கட்சியாகும் பி.ஜே.பி. திராவிடக் கட்சிகள் தங்களை பெரியார் ஈ.வெ.ராமசாமி பாரம்பரியத்தின் உண்மையான வாரிசுகள் என வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வர்ணித்துக் கொள்ள தவறுவதேயில்லை.
ஈ.வெ.ராவின் பகுத்தறிவுக் கொள்கையானது, வேதங்களையும், “உண்மைகளை உரைப்பதாகக்” கூறப்படும் சாத்திரங்களையும் நிராகரிக்க கூடியதாகும். ஆனால், “வேதங்களின் உயரிய கருத்து களும், பண்டைய இந்து மற்றும் இந்தியச் சாத்திரங்களுமே பாரதத் திற்கு வழிகாட்டும் கோட்பாடுகள்” என அறிவிக்கிற பிஜே.பி-யோடு: கைகோர்ப்பதற்கு இந்த திராவிடக் கட்சிகள் தயங்கவில்லை. திராவிட இயக்கம் பிறந்தபோது உயிர்மூச்சாய்க் கருதப்பட்ட சமூக நீதிக் கொள்கையானது பிஜே.பி. கட்சியின் சமூகத்தளமாகத் திகழக்கூடிய உயர்சாதியினரில் பெரும்பாலோனோர்க்கு உடன் பாடானது அல்ல. சங்பரிவாரத்தின் பற்றிய பார்வை “ஒரே தேசம், ஒரே கலாசாரம்” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஆன தாகும் இது மொழி வழி தேசியம், சமூக சீர்திருத்தம் ஆகிய இரு பெரும் நீரோட்டங்களுக்கு எதிரானதாகும். இவ்விரு நீரோட்டங்களின் சங்கமத்தின் விளைவாகவே தமிழகத்தில் வவிமை வாய்ந்த அரசியல் சக்தியாக திராவிட. இயக்கம் உருவெடுக்க முடிந்தது. உண்மையில் பி.ஜே.பி. “நிர்வாக வசதிக்காக” மாநிலங்கள் சிறு சிறு பகுதிகளாக பிரிக்கப்பட வேண்டுமென்று கூறுகிறது இது மொழிவாரி மாநிலங்கள் என்ற கோட்பாட்டிற்கு நேர் எதிரான தாகும். இந்தியச் சமூகத்தின் பன்முகத் தன்மையை பிரதிபலிக்க வேண்டுமென்ற ஜனநாயகத் தேவையை அடிப்படையாகக் கொண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய முன்னோர்கள் வகுத்துத் தந்த கூட்டாட்சித் தத்துவத்தின் வெளிப் பாடுதான் மொழிவாரி மாநிலங்கள் ஆகும்.
அண்மைக் காலங்களில், நிதி அதாரப்பங்கீட்டில் சில மாநிலங்கள் தங்களுக்குக் கூடுதல் விகிதம் அளிக்கப்பட வேண்டுமென கோரி வருகின்றன ஆனால், மாநில சுயாட்சி வீரர்களான திராவிடக் கட்கிகளிடமிருந்து இக்கோரிக்கைக்குப் போதிய ஆதரவு கிட்டுவதில்லை. திராவிடத்தின் அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து இக் கட்சிகள் பிறழ்வதென்பது வெறும் அரசியல் சந்தர்ப்பவாதம் தொடர்பானது மட்டுமல்ல. திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியினை 1940களிவிருந்து அழமாக ஆய்வு செய்து வருபவரும், இலங்கையைச் சேர்ந்த மிகச் சிறந்த தமிழறிஞருமான கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் கூற்றே இது.
திராவிட. இயக்க வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களில் தத்துவார்த்தத் திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன என்கிறார் இவர் திமு.க.வை உருவாக்கிய சிஎன்.௮ண்ணா துரைக்கும், பெரியாருக்கும் இடையே ஏற்பட்ட பிளவை மிக முக்கியமான திருப்பமாக இவர் கருதுகிறார். இப்பிளவுக்குப் பிறகு திராவிட. இயக்கம் மிக முக்கியமான சறுக்கல்களை சந்தித்தது. நாத்திகத்திலிருந்து “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்ற முழக்கத்தை முன் வைக்கும் நிலைக்குச் சென்றது. அதுபோல சமூக சீர்திருத்தத்திலிருந்து தேர்தல் அரசியல், பிரிவினை வாதத்திலிருந்து தேச ஒற்றுமை ஆகிய மாற்றங்களுக்கும் ஆளாகியது 1947களின் விடுதலைக்குப் பிந்தைய இத்திய அரசியலில் ஏற்பட்ட மாற்றங் மற்றும் பொருளாதாரப் பாதை குறித்த தெளிவான அணுகு முறையற்ற திராவிட இயக்க சித்தாந்தத்தின் பலவீனங்கள் ஆகியன மேற்கூறிய சறுக்கல்களுக்கான முக்கிய காரணிகளில் அடங்குபவை யாகும். “காலத்திற்கேற்ற சித்தாந்த முதிர்ச்சி திராவிட இயக்கத்தில் இல்லை” என்கிறார் சிவத்தம்பி
திராவிட. இயக்கம் பற்றிய ஆழமான ஆய்வுகளை உள்ளடக்கிய “திராவிட இயக்கம் குறித்த புரிதல்: பிரச்சனைகளும் கோணங்களும்” என்ற ஆங்கில நூல் மற்றும் “இன்றைய சூழலுக்கும் திராவிட இயக்க சித்தாந்தத்திற்கும் உன்ள தொடர்பு : ஒரு வரலாற்றுப் பார்வை” என்ற தமிழ் நூல் ஆகியன அவரின் இரு முக்கிய வெளியீடுகளாகும். இப்படிப்பட்ட திருப்பங்கள் சித்தாந்தமற்ற அரசியலுக்கு வழி வகுத்துவிட்டன என அண்மையில் பத்திரிகையாளர் ஆர்.விஜயசங்கருக்கு அளித்த நேர்காணவில் கா.சிவத்தம்பி கூறியுள்ளார். (இந்நேர்காணல் அப்பன் மேனன் நினைவுப் பரிசுக்காக மேற்கொள்ளப்பட்ட “1967க்குப் பிந்தைய திராவிட இயக்க வரலாற்றுக் கட்டம்” என்ற ஆய்வின் ஒரு பகுதியாகும்).
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற தமிழ்ப் பேராசிரியராய்ப் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர் சிவத்தம்பி. மறைந்த கே.கைலாசபதி அவர்களைப் போன்றே இலங்கை ஈந்த மிகச்சிறந்த தமிழ் அறிஞராவார். தமிழர்களின் சமூக - கலாசார வரலாறு, தமிழ் மக்களிடையே கலாசாரம் மற்றும் தகவல் தொடர்பு, தமிழ் நாடகம். இலங்கை மற்றும் தமிழக அரசியல்... இப்படி இவரின் ஆய்வுத் தளங்கள் விரிந்து கொண்டே செல்கின்றன. இவர் இத்தலைப்பு களில் 50 சிறு பிரசுரங்களையும், நூல்களையும் வெளியிட்டுள்ளார். தமிழ்மொழி வரலாற்றில் சங்க காலம் பற்றிய இவரின் ஆய்வு மிகச் சிறந்த முன்னோடியாகக் கருதப்படுகிறது. தமிழ்மொழி ஆய்வுகள் குறித்த இவரின் அறிவார்ந்த சாதனைகளைப் போற்றுகிற வகையில் தமிழக அரசு 2000ஆம் ஆண்டில் அவருக்கு திரு வி.க விருதை அளித்துச் சிறப்பித்தது.
சென்னை பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகிய இந்தியப் பல்கலைக் கழகங்களிலும், இங்கிலாந்திலுள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்திலும், பின்லாந்து, நார்வே ஆகிய நாடுகளிலும் இவர் கெளரவ பேராசிரியராக பணியாற்றியவர்.
நேர்காணவிலிருந்து...
தீராவிடம் ஒரு சித்தாந்தமாக உருவெடுத்த வரலாற்று பின்னணி என்ன?
திராவிட இயக்கத்தின் பாதையை நாம் திரும்பிப் பார்த்தோமெனில் பிராமணரல்லாத பல சாதிகள் ஒருங்கு சேர்ந்த ஒரு புதிய வர்க்கம் அன்றைய சென்னை மாகாணத்தில் உருவான மிக முக்கியமான, முதன்மையான நிகழ்வினைக் காண இயலும். பிள்ளைமார்கள், நாயர்கள், கம்மா, காபூ ரெட்டியார்கள் உள்ளிட்டகூட்டணியாகும் அது. அவர்களுக்கு ஏற்பட்ட அன்றையத் தேவைகள் அவர்களை ஒருங்கிணைக்கக் கூடிய சங்கிலிகளை இனம் காண்பதற்கு உதவியாய் இருந்தன. தத்துவார்த்த ஈர்ப்பு என்பது அன்றைய சமூக, அரசியல் அல்லது சித்தாந்த தேவையாக இருந்தது. குறிப்பிட்ட குழுவைச் சார்ந்த மொழிகளின் ஒரு பிரிவு என்ற பொருளுடன் முதலில் தொடங்கி அவ்வாறே ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையிலிருந்து திராவிட இயக்க சித்தாந்தம் மேலும் வளர்ச்சியடைந்தது. இதுவே ஒருங்கு சேர்தலுக்கு வழியும் வகுத்தது. அடுத்த முக்கியக் காரணி, பிரிட்டன் ஆட்சியின் தாக்கமும் அது உருவாக்கிய சமூக பிறழ் நிலைகளுமாகும் பிரிட்டனுக்குட்பட்ட இந்தியாவில் இந்தியாவை ஒரே கலாசாரக் கோட்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டிய தத்துவார்த்த தேவை அன்று இருந்தது. அதற்காக இந்து மதம் ஆற்றிய பங்கு அல்லது இந்து மதத்திற்கு அளிக்கப்பட்ட பாத்திரம், சமஸ்கிருத நூல்கள் மற்றும் புனித நூல்கள், மாக்ஸ் முல்லரில் தொடங்கி குறிப்பாக அன்னிபெசன்ட் போன்றோரைக் கொண்ட இறையியல் கழகங்கள் ஆகியன புதிய புரிதலைத் தந்ததாக அனைத்து வரலாற்று ஆசிரியா்களாலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவற்றுக்கு எதிராக இரண்டு இயக்கங்கள் எழுந்தன அதில் “தனித்தமிழ் இயக்கம்” ஒன்றாகும். இது ஆரிய, திராவிட தத்துவங்களை விவரிக்கிற ஏற்பாடு போன்றே அமைந்தது. ஏனெனில், அதனை உருவாக்கிய மறைமலை அடிகள் மொழி பெயர்ப்புகளை எதிர்ப்பவரல்லர். அவர் தனது தமிழ் நூல்களுக்கு நீண்ட ஆங்கில முன்னுரைகளை எழுதினார். ஆனால், மிக முக்கியமானது “பகுத்தறிவு வாதம்” என்று அழைக்கப்படுவதாகும்.
அயோத்திதாசர் போன்றோரே இதனைத் தொடங்கினர். உண்மையில் இவ்வியக்கத்தை ஒரு சிலரைத் தவிர நவீன இந்திய வரலாற்று ஆசிரியர் மட்டத்திலுள்ள மற்றவர்கள் சரியாக கவனித்து மதிப்பிடவில்லை குறிப்பாக ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை சார்ந்த மக்களில் தொடங்கி பகுத்தறிவு இயக்கம் வளரத் தொடங்கியது இதில் நிறைய சாதிக்குழுக்கள் இருந்தன கீழ் சாதிகள் என அழைக்சப்பட்டோரின் அமைப்புகள் இருந்தன. ஆதித்தமிழர்கள், பறையர்கள், பள்ளர்கள் அல்லது ஆதிதிராவிடர்கள் ஆகிய வகுப்புகளைச் சார்ந்தவர்களின் அமைப்புகளே அவை. இவற்றுக்கு எதிராக 'பிராமணியத்திற்கு புதிய ஊக்கம் தரப்பட்டது. புத்துயிர் ஊட்டப்பட்டது
இப்போது நாம் பிரச்சனையின் மைய அம்சத்திற்கு வருவோம். அதாவது அப்போதைய 'சென்னை மாகாண காங்கிரஸ் அரசால் அரசியல் கோரிக்கைகளை சமூகப் பிரச்சனைகளுடன் தொடர்பு படுத்த இயலவில்லை. எனவே, சமூக முரண்பாடுகள் மூடிமறைக்கப்பட்டன. ஒரு பிராமணர் அல்லாத காங்கிரஸ்காரர் என்னிடம் கூறியதுபோல, சென்னையில் சுயமரியாதை இயக்கம் தோன்றுவதற்குக் காந்தியடிகளே காரணமாக இருந்தார். ஏனெனில், வைக்கம் போராட்டத்தின்போது மக்கள் மனதிற்குள் கனன்று கொண்டிருந்த எண்ண ஓட்டங்களை அவர் அறிந்திருக்கவில்லை. இன்னொரு புறம் திரு.விக போன்ற தலைவர்கள் தமிழகத்தின் மொத்த வரலாற்றையே சமூக, அரசியல் விடுதலையோடு இணைக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர். எனவே வைக்கம் சத்தியா கிரகத்தின் போது இந்த உணர்வுகள் பொங்கி எழுந்தன.
இதே வேளையில் பகுத்தறிவு இயக்கம், உலக சோசலிச இயக்கத்துடனான தொடர்புகளின் காரணமாக மேலும் அறிவியல் பூர்வமாகச் செயல்படத் தொடங்கியிருந்தது. அது வெறும் இங்கர் சாலின் வழியிலான பகுத்தறிவுவாதமாக மட்டும் இருக்கவில்லை. அது மேலும், மேலும் அறிவியல் ரீதியாக வளர்ந்தது. சோசலிசத்தைப் பேசியது. இப்படியாக முன்னேறியது. இது சிங்காரவேலருக்கும் ஈவெராவுக்கும் ஏற்பட்ட உடனடி இணைப்பில் வெளிப் பட்டது. விடுதலைப் போராட்ட வீரர்கள் மிகப்பெரும் அரசியல் வெற்றியைச் சந்தித்த நேரத்தில் தமிழகத்தில் சமூக முரண்பாடுகள் முன்னுக்கு, வந்தன.
1944ல் 'திராவிடர் கழகம்' உருவாக்கப்பட்டது. 1949ல் அது உடைந்து திமுக உருவானது. அப்போது சமூகத்திற்குள் ஒரு வகையான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. அதுபோல இவ்வியக்கத்தின் பலம் உணரப்படாததாக, கேள்விப்படாததாக, அங்கீகரிக்கப்படாததாக இருந்தது. இவ்வியக்கத்தை நேரு அலட்சியப்படுத்தினார். ஆனால், நான்கு ஆண்டுகளுக்குள் இது முக்கியமான சக்தியாக வளர்ந்து விட்டது. சமூகப் பிரச்சனைக்கு தேசியவாதம் முன்வைத்த தீர்வின் தன்மையா அல்லது அதற்கு உரிய பிரதிபலிப்பே இல்லாதிருந்ததா இதில் எது திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்கான முக்கிய காரணியாக அமைந்தது?
நேருவின் நடைமுறைகள் யதார்த்தத்திற்கு உகந்ததாய் அமைய வில்லை. காங்கிரஸின் தெற்கத்தியத் தலைவர்கள் இப்பிரச்சனைகள் குறித்து கண்டுகொள்ளத் தவறினார்கள். சில காங்கிரஸ் தலைவர்கள் அரசியலில் முற்போக்கான கருத்துகளைக் கொண்டிருந்தாலும் சமூகப் பிரச்சனைகளின் மீது அவர்கள் அவ்வளவு முற்போக்காக இருக்கவில்லை.
இந்தியா விடுதலைப் பெற்று வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைத்த பிறகு சென்னை மாகாணத்தில் காங்கிரஸின் மேலாதிக்கம் கேள்விக்குள்ளானது பிரதேசவாதம் முதன்முறையாக இங்கு முன்னுக்கு வந்தது.
தமிழகத்தில் நிலவிய சாதிய ஒடுக்குமுறைகள் பற்றியும், பாரம்பரிய, சமூக ஓடுக்குமுறைகள் குறித்து சரியான பார்வை காங்கிரசுக்கு இல்லாதிருந்ததும், சமூக ஏற்றத் தாழ்வுகள் பற்றிய கண்ணோட்டங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காத நிலையில் சமூகத்தின் சில பிரிவினர்களின் சமூக, அரசியல் குமுறல்களின் வெளிப்பாடாக திராவிட இயக்கம் உருவெடுத்தது. அவற்றின் வெளிப்பாடு திமுகவின் உருவாக்கத்தினால் முழு அரசியல் வடிவத்தை எடுத்தது. இது தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் புதிய மாற்றத்தை, புதிய பாணியிலான தலைமை, உறுப்பினர் சேர்ப்பு - திரட்டலில் புதிய வடிவங்களை கொணர்ந்தது. தமிழகத் தின் புதிய அரசியல் அகராதியையே இது உருவாக்கியது. காங்கிரஸ் அணுகுமுறையில் முற்போக்கான அரசியல், பிற்போக்கான சமூகப் பார்வை என்ற இரட்டைத் தன்மை திருந்ததா? ஆம். திராவிட இயக்கத்தின் வேகமான வளர்ச்சியை இப் பின்னணியில்தான் புரிந்துகொள்ள வேண்டும்.
அடிப்படையில் குமுறல்களின் வடிவமாகவே திராவிட இயக்கம் உருவெடுத்தது. இக்குமுறல்களுக்குக் காரணங்களாக கருதப்படுவது எவையெனில் ஒன்று, சாதிய ஏற்றத் தாழ்வுகள்; இரண்டாவது ஏற்றத்தாழ்வுகளை அங்கீகரித்து அதன் காரணமாக பிரிட்டிஷ் ஆட்சி வழங்க தயாராகவிருந்த அரசுப் பதவிகளின் பகிர்மானம் ஏற்படுத்திய பிரச்சனைகளும் ஆகும். அடுத்து, நீதிக் கட்சியின் அரசியலும் ஓர் அம்சமாகும். அரசு பதவிகளிலும், கல்வியிலும் பங்கு என்பது மட்டுமே நீதிக்கட்சியின் கோரிக்கையாக இருந்தது பெரியார்தான் நீதிக்கட்சிக்கு தத்துவ திசை வழியினை அளித்தார் பெரியாரியத்தைத் திரும்பிப் பார்க்கும்போது, அதன் அடிப்படைகளை ஆய்வு செய்கையில், அது தனிமனிதனின் சுயமரியாதையை அதாவது தனிமனிதஉரிமைகள் மதிக்கப்படுவதை முன் வைப்பதாகவே இருந்தது.
இவையெல்லாம் காங்கிரஸாலோ, இதர இயக்கங்களாலோ எவ்வித தயக்கங்களுமின்றி செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழகத் தின் நவீன தொழில் வளர்ச்சிப் பாதையில் ஏற்பட்ட வர்க்க வேறுபாடுகளே இப்பிரச்சனையில் முக்கியத் தடைகளாக முன்னுக்கு வந்தன என நான் கருதுகிறேன். இவ்வர்க்கங்களிலிருந்து வந்த நவீன அறிவாளர்கள், வர்க்கத்தையும், சாதியையும் பற்றி தெளிவாக இல்லை. எனவே திராவிட இயக்கமானது குமுறல்களின் வெளிப்பாடாக மட்டுமே அமைந்தது.
இவ்வியக்கம் எங்கே வழி தவறியது?
இது பிராமணியத்தை எதிர்ப்பதென்ற பெயரால் மொத்தத்தில் மதத்தையே நிராகரித்தது மார்க்ஸே ஏற்றுக் கொண்டது போல பழமையான, சம நீதியற்ற, ஆதிக்க சமூகத்தில் மதமானது சமூகத் தேவையாக இருக்கிறது.
மதமானது “ஒடுக்கப்பட்டோரின் ஏக்க பெருமூச்சு”... “ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்க பெருமூச்சு, இதயமில்லாத உலகில் இதயம், ஆன்மா அற்ற சூழலில் ஆன்மா”.
முதலாவதாக நீங்கள் தமிழகத்தின் இந்துயிசத்தின் வரைபடத்தை எடுத்துப் பார்த்தால் ஒரு புறம் உயர்ந்த மதில் சுவர்களையும், உயரிய கோபுரங் களையும் கொண்ட கற்களால் கட்டப்பட்ட கோவில்கள், மறுபுறம் அவற்றுக்கு அப்பாற்பட்டுள்ள களிமண்ணால் கட்டப்பட்ட கருமாரியம்மன் கோயில்கள் மற்றும் கிராமத் தெய்வங்களின் கோயில்கள் என்ற பெருத்த வேற்றுமையைக் காண இயலும். இப்படி மதத்தின் உயர்ந்த வடிவங்களை முற்றிலும் நிராகரிக்கிற தன்மைகளும் இருந்த நிலையில்தான் எம்.என்.ஸ்ரீனிவாஸ் போன்றோர் பேசக்கூடிய சமஸ்கிருதமயம் என்ற மொத்த கருத்தே சிக்கலுக்கு உள்ளாக்கப்பட்டது. சமஸ்கிருதமயம் நிராகரிக்கப்பட்ட நிலையில் மக்கள் கருமாரியம்மன் கோயிலுக்கும், இதர சிறு தெய்வங்களின் கோவில்களுக்கும் சென்றனர். திர௱விட இயக்கம் இதற்காக எதுவும் செய்யவில்லை. எனினும், மதத்திற்கு எதிரான முழுமையான பிரச்சாரம் மேற்கொண்ட சக்திதான் அம்மன் கோயில் மற்றும் உள்ளூர் தெய்வ வழிபாடுகளை அதிகமாக்குவதற்கு உதவிய சக்தியாகவும் ஆயிற்று.
இரண்டாவதாக, திராவிட இயக்கம் முன்னிறுத்திய சமூக, அரசியல் குமுறல்களுக்கு அடிப்படையாக இருந்த பொருளாதாரதளம் பற்றி அவ்வியக்கம் உரிய கவனம் செலுத்தவில்லை. அரசியல் அழுத்தம் அளிக்கப்பட்ட அளவிற்கு பொருளாதார அழுத்தம் தரப்படவில்லை. திராவிட இயக்கம் அரசியல் அதிகாரத்திற்கு வந்த பிறகு இக்குறைபாடு வெளிப்படையாய்த் தெரிந்தது. அரசியல் அதிகாரம் கிட்டிய பிறகு, தலைவர்களுக்கிடையேயான மோதல்கள் முக்கிய இடத்தைப் பிடித்ததென்பதை நாம் காண முடியும். இப்படி அரசியல் பொருளாதார பார்வையின் அடிப்படையில் திரட்டாததால் தலைமை மக்களை ஈர்க்கும் மலிவான அரசியலில் ஈடுபட்டது.
மூன்றாவதாக, திருமணப் பதிவுகள் மற்றும் இடஒதுக்கீடுகளில் பிரதிநிதித்துவத்தை உயர்த்துவது போன்றவற்றில் உரிய அக்கறை செலுத்தப்படாததால் தலித் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட பிரிவினரின் முன்னேற்றம் பாதிக்கப்பட்டது ஆனால் திராவிட இயக்கமோ, நடுத்தர சாதியினரின் சமூக அங்கீகாரம் உயர்வதிலேயே கவனம் செலுத்தியது. மதத்தை நிராகரிப்பது என்ற அவர்களின் சொந்த தத்துவத்தின் அடிப்படையில் பார்த்தால் கூட தலித் உள்ளிட்ட அனைத்துப் பகுதி மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க முயன்றிருக்க வேண்டும்.
பெரியார் சூத்திரர் - தலித் ஒற்றுமைக்கு முயற்சி செய்தார்... ஆனால் இது நடக்கவே இல்லை.
உண்மையில் மண்டல் கமிஷன் அறிக்கை இது குறித்து குறிப்பிட்டுள்ளது. தலித் பிரிவினருக்கும், இதர பிற்பட்ட பிரிவினருக்கும் இடையிலான முரண்பாடு எழக்கூடிய கடைசி இடமாகத்தான் தமிழ்நாடு இருக்குமென அவ்வறிக்கை கூறியது. அனால் முரண்பாடுகள் எழுந்தபோது அது பல அம்சங்களை அம்பலமாக்கியது. மண்டல் கமிஷன் இது குறித்துப் பேசியது. தமிழ் பண்பாட்டு மீட்பு இயக்கத்தின் பிடியில் தமிழகம் இருக்கும் வரையில் பிற்படுத் தப்பட்டவர்களின் உண்மையான இயக்கம் தோன்ற முடியாது. இதர மாநிலங்களைப் போல தலித் மற்றும் பிற்பட்டோருக் கிடையிலான முரண்பாடுகள், பிராமணர்- பிராமணர் அல்லா தோர் இடையிலான பிளவை மறைத்து விடவில்லை. ஏனெனில், தமிழகத்தின் தலித் மக்கள் சுயமரியாதை இயக்கத்தை உடனடியாக கொண்டதுதான் என மண்டல் கமிஷன் கூறுகிறது. ஆனால் மண்டல் கமிஷனின் கணிப்பு தவறென்பதை அதன் பத்தாண்டு கால அமலாக்கம் வெளிப்படுத்தி இருக்கிறது. திராவிட இயக்கம் மேற்கொண்ட பண்பாட்டு மீட்பு முயற்சிகள் பிராமணர் அல்லாத சாதிகள் மத்தியில் ஒருமித்த சிந்தனையை உருவாக்கி யுள்ளதா என்பதுதான்!
திராவிட இயக்கம் தோல்வியைத் தழுவிய சரியான இடம் எது?
சி.என்.௮ண்ணாதுரை குறித்து எழுதப்பட்டவற்றையெல் தற்போது ஒன்றாக தொகுத்தோமேயானால் அவர் சந்தித்த பெரிய பிரச்சனையை நாம் அறிந்து கொள்ள முடியும். அவரால் அனைத்து சமூகக் குமுறல்களையும் ஒரே ஒரு பெரிய அரசியல் கோரிக்கைக்குள்ளே அடக்க முடிந்தது. அனால், கட்சியை வளர்த்தெடுக்கிறபோது அச்சமூகக் குமுறல்களுக்கான தீர்வுகளை அமைப்புக்குள்ளேயே தர இயலவில்லை.
நான் பி. இராம மூர்த்தி அவர்கள் கூறியதை எனது நூலில் குறிப்பிட்டுள்ளேன். பி.ராமமூர்த்தி அவர்களிடம் அண்ணாதுரை கூறினார், “நாங்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் முன்பாகவே பதவிக்கு வந்துவிட் டோம்”
பெரியாருக்கும் அண்ணாவுக்குமிடையேயான பிளவு இதில் மிக முக்கியமானது. திமுக 1949ல் தோன்றிய பிறகு திராவிட இயக்கத்தில் மிக முக்கியமான திருப்பம் ஏற்பட்டது. இந்நிலையில்தான் தமிழ் தேசிய உணர்வுக்கு முழுமையான வடிவம் அளிக்கிற வகையில் திராவிட இயக்கம் வளர்ந்து இருந்தது. அது கீழ்க்காணும் முக்கியமான தத்துவார்த்த நிலை மாற்றங்களுக்கு ஆளாகியது.
1. தேர்தல் அரசியலில் ஈடுபடுவதென்ற முடிவு (1956)
2. நாத்திகத்திலிருந்து நகர்ந்து “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்ற கோட்பாட்டை முன் வைத்தது.
3. தனித் திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டது (1963).
இதன் விளைவாக காலத்திற்கேற்ற தத்துவார்த்த முதிர்ச்சி ஏற்படவில்லை. இதைவிட நாசூக்காக இதனை விவரிக்க முடியாது. இக்கட்டத்தில் எனது மார்க்சிய பின்புலத்தோடு திரும்பிப் பார்க்கிறேன். சமூகச் சீர்திருத்தங்கள் என்ற வரையறையைக் கடந்த அரசியல் நடவடிக்கைக்குச் செல்வதென்பது மிகக் கடினமான பணி என்பதை பெரியார் உணர்ந்திருந்தார். அதற்கு அவர் அன்று தயாராகவும் இல்லை. எனெனில். ஓவ்வொரு அரசியல் கோரிக்கைக் கென்று ஒரு தனிப்பாதை உண்டு. இவ்வகையில் பெரியாரும் காந்தியவாதியாகத்தான் இருந்தார்.
காந்தியைப் பற்றி இ.எம்.எஸ்.நம்புதிரிபாட் “மகாத்மாவும் அவரது இசமும்” என்ற அவரது நூலில் மதிப்பீடு செய்துள்ளார். பெரியாருக்கு இருந்த தடைக் கற்கள் எவை? ஏன் அவர் ஓர் எல்லையைக் கடந்து செல்லவில்லை?
நான் முன்னர் என்ன கருதி வந்தேன் எனில், மார்க்சிய கண்ணோட்டத்தில் பெரியார் மொத்த இயக்கத்தையும் உடனடியாக அரசியல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், காலனியாதிக்கத் திற்குப் பிந்தைய காலத்தில் தமிழக அரசியல் மாற்றத்திற்கு உள்ளாகி விட்டதுதான் பிரச்சனையாகும். காலனியாதிக்கத்திற்குப் பிந்தைய இந்தக் காலம் குறித்து ஒரு கருதுகோள் என்ற அடிப்படையில் அதை நாம் கவனிக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
காலனி இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை மற்றும் நிவாரணம் கோரிய அமைப்புகளெல்லாம் தற்போது அரசியல் கட்சிகளாக, குழுக்களாக உருவெடுத்து விட்டன. காலனியாதிக்கத்திலிருந்து நாம் விடுதலை பெற்ற நேரத்தில், நம்மிடம் இருந்த ஒரே புரட்சிகர சக்தியான நேதாஜியிசமானது தன்னைத்தானே வீழ்த்திக் கொண்டோ அல்லது இந்தியாவை விட்டு வெளியேற்றிக் கொண்டோ போய்விட்டது. காங்கிரசுக்குள் நிறைய குழுக்கள் உருவாகிவிட்டன. இராஜாஜி தனக்கென்று ஒரு குழுவைவைத் திருந்தார். பின்னர் காங்கிரஸில் பழைய காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் பிளவுகள் வந்தன. அரசியல் வளர்ச்சி பின்னுக்குச் சென்றது. கம்யூனிச இயக்கம் தடை செய்யப்பட்டது. இப்போது நான் கூறுகிறேன், மேற்கூறியவை எல்லாம் பெரியார் இது குறித்தெல்லாம் எவ்வளவு தூரம் சிந்தித்தார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அவர் முன் வைத்த சமூகக் குமுறல்களை எல்லாம் அரசியல் ரீதியாக அன்று செயல்படுத்த இயலாமல் போயிருக்கலாம் எனவே பெரியார் அரசியலை விட்டு விலகியே இருந்தார். இது ஒரு முரண்பாடானதுதான் யார் அரசியல் நடவடிக்கைகளைக் கோரியிருக்க வேண்டுமோ அவர் அதைச் செய்யவில்லை. அரசியல் நடவடிக்கையை விரும்பினார்களோ அவர்கள் கலாசாரத்தை அரசியலாக்கினார்கள்.
இதன் பொருள் என்ன? உள்ளடக்கம் என்ன? கலாசாரத்தை அரசியலாக்குவதென்ற கருத்தாக்கம் பற்றி...
கலாசாரத்தை அரசியலாக்குவது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளாமல் திமுகவின் வளர்ச்சி, பலம், பலவீனங்களை புரிந்து கொள்ள முடியாது. இது அடிப்படையில் தகவல் தொடர்பு முறையிலான திட்டம், மேடைப் பேச்சுக்கள், நாவன்மை, நாடகம், பத்திரிகை மற்றும் சினிமா மூலமானவை ஆகும்.
சமூக முரண்பாடுகளின் விளைவாக புறந்தள்ளப்பட்ட பிரச்சனைகளெல்லாம் விடுதலை இந்தியாவில் தற்போது முன்னுக்கு வந்துள்ளன. அப்பிரச்சனைகளெல்லாம் அரசியலாக்கப்பட்டன. தமிழ்ப் பண்டிதர்களுக்கு உரிய அங்கீகாரம் கிட்டாமை, தமிழர் திருநாளான பொங்கல் மகா சங்கராந்தியாக கருதப்படுவது, தமிழுக்கு உரிய இடம் இல்லாத நிலை போன்றவையாகும். தமிழ் மதத்தை மீட்பதை திமுக நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. மதத்தை மீட்பதற்குப் பதிலாக தமிழ்க் கலாசாரத்தை மீட்பதிலே தான் கவனம் செலுத்தினர். சித்திரித்தனர். சங்க காலத்தைப் புனிதமானதாக சிலப்பதிகாரத்தைப் புனிதமானதாக வர்ணித்தனர். சிலப்பதிகாரம் முழுவதும் மந்திர வித்தைகள் நிறைந்தது. அதே காலத்தில் வேறு எந்த இலக்கிய படைப்பும் இவ்வளவு வித்தைகள், அதிசயங்கள், அற்புதங்களை உள்ளடக்கியதாக இருக்கவில்லை. ஆனால், அதன் உள்ளடக்கத்தில் அரசியலுக்கான அம்சத்தை கண்டெடுக்க முடிந்தது. அது மூன்று அரசாட்சுகளின் பெருமை களைப் பற்றிய அடையாளமாய் திகழ்ந்தது சேர, சோழ, பாண்டிய ஆட்சிகளே அவை.
இப்படிக் கலாசாரத்தை அரசியலாக்கிய வகையிலும், பொருளாதார பார்வையின்றி தனிநபர் குமுறல்களை வெளிப்படுத்துகிற பின்னணியிலும் தத்துவம் காணாமல் போய்விட்டது ஒட்டு மொத்த புரிதலைக் கொண்டிருந்த அந்த மனிதர் இருக்கும் வரை எல்லாம் சரிதான். அனால், அண்ணாதுரை மாறைந்தார். எம்.ஜி.ஆர். பதவிக்கு வந்தவுடன், அதாவது மேலாதிக்க அதிகாரம் அவர் கைக்கு வந்தவுடன், தத்துவம் பின் இருக்கைக்குப் போய்விட்டது.
எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுகவின் வளர்ச்சி திராவிட இயக்கத்தில் மேலும் முக்கியமான தத்துவார்த்த திருப்பங்களுக்கு வழிவகுத்தது. ஒன்று, நடைமுறைத் தந்திரம்தான் எனினும், விரிந்த தேசிய வட்டத்திற்குள் ௮. இ.௮ தி.மு.க. நுழைந்தது இது திமுகவின் மாநில சுயாட்சி கோரிக்கையினின்று ஏற்பட்ட விலகலுக்கான பெரும் தொடக்கமாகும். மேலும், திராவிடத் தத்துவத்தின் நாத்திகத்திலிருந்தும் திருப்பம் ஏற்பட்டது. வேலைகளுக்கான இட ஒதுக்கீட்டில் உயர்வு, பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச சத்துணவு திட்டம் போன்றவை பெரும் சமூக விளைவுகளை உருவாக்கினாலும் திராவிட இயக்கத்திற்கே உரிய சமூக, அரசியல், தத்துவ அணுகு முறை பெருமளவில் நீர்த்துப் போகிற நிலை ஏற்பட்டது.
திமுக தலைவர் மு.கருணாநிதி குறித்து தங்களின் கருத்து என்ன? பிரச்சனை எதுவெனில், கருணாநிதி தமிழின் அடையாளமாக உள்ளார். அதாவது சிறந்த உரை வீச்சாளர். ஆனால், தமிழகத்தின் துயரம் என்னவெனில் அரசியலிலிருந்து சித்தாந்தத்திற்கு விடை அளிக்கப்பட்டதுதான் நான் ஒரு தமிழ் இலக்கிய மாணவனாகவும், மார்க்சியவாதியாகவும் இதை பார்க்கிறேன். மார்க்சியவாதி என்ற முறையில் நான் சொல்ல முடியும். திராவிட இயக்கத் தத்துவமானது பொருளாதார அம்சங்களைக் கணக்கில் கொள்ளாததே அடிப் படைப் பிரச்சனையாகும். அதில் அகில இந்திய அரசியலுக்கான முக்கியத்துவம் உண்டு. இவ்வளவுக்கு மத்தியிலும் மேற்கு வங்கத்தில் தொடர்ச்சியான முன்னேற்றத்தைக் காணமுடிகிறது. கேரளாவிலும் ஒரு பொது நோக்கினை காண்கிறோம். வங்காளிகள் மத்தியில் அத்தகைய உணர்வை உருவாக்க கம்யூனிஸ்டுகள் எதைப் பயன்படுத்தியுள்ளார்கள்? மலையாளிகள் மத்தியில் எதைப் பயன்படுத்த முடிந்துள்ளது? வங்காள பாரம்பரியத்தின் விழுதுகளைப் பற்றி எவ்வாறு ஜோதிபாசு உயர்ந்து நின்றார்? கேரளாவின் பாரம்பரிய அடித்தளத்தின் மீது இஎம்எஸ் எப்படி நின்றார்? தமிழகத்திற்கு நேர்ந்தது என்ன? திராவிடம் ஒருங்கே கோர்க்கப்பட்ட தத்துவமாக இல்லை. அதன் தத்துவ வேர்கள் அறுக்கப்பட்டு விட்டன சோகம் என்னவெனில், மாற்றாக ஒரு பொருத்தமான தத்துவம் அந்த இடத்தை பிடிக்காத நிலையில், இருந்த தத்துவமும் அசன்றிருக்கிறது என்பதே இன்னொரு அம்சமும் உண்டு. அதன் தொடக்கம் தமிழகத் தின் பிராந்திய வாதத்தின் தோற்றம் எல்லைகளுக்குள் இருந்து உருவாகவில்லை. அதாவது பிரிட்டிஷ் அரசாங்கமும், இந்திய அறிவாளர்களும் அளித்த ஒருங்கிணைப்பு முயற்சியும், உயர்ந்த இந்தியக் கலாசாரம் உள்ளிட்ட அனைத்தும் இந்நாட்டை ஓன்றுபட்டதாக வைத்திருக்க முடியவில்லை. பிராந்தியவாதமும், மாநில உணர்வுகளின் அடிப்படையிலான அரசியலும், ஆளுபவர்களின் அரசியலும் பல வகையிலான கூட்டணிகளுக்கு வழி வகுத்தன இப்போது மாநில உணர்வுகள் இந்திய அரசியலின் பகுதியாகி விட்டன. எனவே இப்போது சில குறைந்தபட்ச பொது அளவு கோல்கள், உயர்ந்தபட்ச பொது அளவுகோல்கள் அல்லது குறைந்த பட்ச பொது பன்முக அளவீடு ஆகியன ஒற்றுமைக்கு தேவைப்படுகின்றன.
பிராமணிய எதிர்ப்பும், பின்னர் சாதிய எதிீர்ப்புமே திராவிட இயக்கத்தின் அடித்தளமாக பெரியார் களத்தில் இருந்தவரைத் திகழ்ந்தவையாகும். ஆனால் அரை நூற்றாண்டற்குப் பின்னர் இன்று தமிழகம் தலித் மற்றும் தேவர், வன்னியர் போன்ற பிற்பட்ட சமூகங்களுக்கிடையே மிகவும் கடுமையான மோதல்களைச் சந்தித்து வருகிறது. இது திராவிட இயக்கத்தின் தோல்வியைச் சுட்டிக் காட்டுகிறதா? தமிழ்த் தேசிய அடையாளமானது சாதிய அடையாளங்களைக் கடந்து நிற்க முடியவில்லையா? தமிழகத்தில் வேலைகளிலும் கல்வியிலும் இடஒதுக்கீட்டுக் கொள்கை அமலாக்கப்பட்ட வகையினை நீங்கள் கவனித்தால் அது இத்திய நாடு முழுவதும் அமலானதைப் போலவே சாதியக் குழுக்களையும், சாதிய உணர்வுகளையும் நிலை நிறுத்துவதாகவே இருந்துள்ளது. இது வரலாற்று ரீதியான முரண்பாட்டினை உருவாக்கி அதாவது குறிப்பிட்ட சாதியின் சமூக, பண்பாட்டு மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்காக உருவான இயக்கம் கீழ் மற்றும் நடுத்தர சாதிகளிடையே சமத்துவ உணர்வை உருவாக்கு வதற்கு மாறாக அவர்களிடையே சாதிய உணர்வுகளை உருவாக்கி விட்டது இதனால்தான் சாதிய மோதல்களானது தமிழகத்தின் நடப்பு வரலாற்றின் தொடர்ச்சியான நிகழ்ச்சிகளாகிவிட்டன. சாதிய அமைப்பிற்கு எதிரான போராட்டத்திற்கு பின்னரும் அந்த அமைப்பு நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்னவெனில் அடிப்படை. சமூக, பொருளாதார அமைப்பு முறையில் மாற்றமின்மையும், சில குறிப்பிட்ட துறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பினும் அடிப்படை “உறவுகள்” மாறாததுமே ஆகும். இது ஜனநாயக பரவலாக்கலுக்கான முறையினைப் பாதிக்கிற நீண்ட கால விளைவுகளை உள்ளடக்கியதாகும். ஆனால் ஜனநாயக பரவலாக்கவின் பாதையிலேயே இது ஏற்பட்டிருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. பிராமணரல்லாத சாதிகளிடையேயான ஐனநாயக பரவலாக்கலை அதன் தர்க்க ரீதியான இலட்சியம் வரை திராவிட இயக்கம் எடுத்துச் சென்றிருந்தால் அதன் பயன்கள் தமிழ்ச் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பகுதியினருக்குப் போர்ச் சேர்ந்திருக்கும் நீங்கள் திரும்பிப் பார்த்தால், ஜனநாயக பரவலாக்கல் முழுமையடையவில்லை என்பது தெரியும். வரலாற்றுக் கடமை நிறைவேற்றப்படவில்லை. சாதிகளை ஒழிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட திராவிட இயக்கம் மாறாக, சாதிகளை வலுப்படுத்தியிருக்கிறது. சாதிய அடையாளமானது மனிதனின் பிரிக்கமுடியாத அங்கமாகவே தமிழகத்தில் மாறியிருக்கிறது.
தத்துவத்திற்கு விடை அளித்த பின்னரும் திராவிடக் கட்சிகளின் ஒட்டுமொத்த சக்தி தமிழக அரசியல் வாக்கு வங்கியைப் பொருத்த வரையில் பெரும் பலமிக்கதாக நீடிக்கிறதே?
திராவிட இயக்கம் வெளிப்படுத்திய சமூகக் குமுறல்கள் உண்மையானவையாகும். திராவிட இயக்க உணர்வுகள் மேலோங்கியதற்கு மிகவும் முக்கியக் காரணமாக இருப்பது தீர்க்கப்பட முடியாத சமூகக் குமுறல்கள் அளவின்றிக் குவிந்ததுதான். நடுத்தர சாதிக் குழுக்களின் சமூக முன்னேற்றத்திற்கு இவ்வியக்கம் வழிக ளைத் திறந்து விட்டது. எனவே திராவிடக் கட்சிகள் இப்பகுதியினர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்கின்றன.
இதுபோன்ற குமுறல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், இக்குமுறல்களை பிரிவினைவாத பாதையில் திருப்பி விடுகிற வாய்ப்பு இப்போது உள்ளதா? தமிழகம் பிரிவினை வாதத்தை நோக்கிச் செல்கிற வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை. வரலாறும் அதனை அனுமதிக்காது. இந்தியக் கட்டமைப்புக்குள் உரிய வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே தமிழ்மொழி உணர்வு எழுந்தது. மாநில மொழிகளின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கவும், மொழிவாரி மாநிலங்களை அமைக்கவும் சுதந்திர இந்தியா விற்கு 10 ஆண்டுகள் பிடித்தன.
இப்போது ஒருவர் தன்னைத் தமிழனாக மட்டுமின்றி இந்தியத் தமிழனாகவும் பார்க்கிறார். இளைய மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் அவர்களின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை இந்திய நாடு முழுமையும் எதிர்பார்க்கிறார்கள். வேலை வாய்ப்பு என்பதும் தமிழகத்தோடு மட்டும் இனி சுருங்கியிருக்க முடியாது. ஓர் அகில இந்தியச் சந்தை என்பது மிக முக்கியமானதாக உள்ளது. இப்போதுள்ள நிலையில், ஒரு சாதாரண பிராமணரல்லாத தமிழ்ப் பெற்றோர் ஆங்கில வழியிலான கல்வியே பிராமணியத்தை எதிர்கொள்வதற்குள்ள வழியென்றும், அகில இந்தியச் சந்தையில் உரிய இடத்தைப் பெறுவதற்கான ஒரே வாய்ப்பு என்றும் கருதுகிறார்கள் என்பது இச்சூழலில் பிரிவினைவாதத்திற்கு தமிழகத்தில் இடமிருக்க முடியாது.
நன்றி : “ப்ரண்ட் லைன்". 08.11.2002
No comments:
Post a Comment