தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர உலகக் கண்ணோட்டம் எல்லாம் வல்லது, ஏனெனில் அது சரியானது. மார்க்ஸீய-லெனினீயகத் தத்துவத்துக்கு மாறாக பூர்ஷ்வாத் தத்துவமும் மொத்தத்தில் பூர்ஷ்வாக் கொள்கைவாகும் அனைத்துமே சுரண்டும் வர்க்கங்களின் நலன்களுக்குத் தொண்டாற்றுகின்றன.
தோழர்களுக்கு வணக்கம், நாங்கள் நடைமுறையில் இருக்கிறோம் என்பவர்களுக்கானதே இந்தப்பதிவு.
ரசியாவில் மார்க்சிய தத்துவத்தை நடைமுறை படுத்தியவர் லெனின் .
மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் போல்ஷ்விக் கட்சியின் வடிவில் மார்க்சிய தத்துவத்தினை நடைமுறையாக்கி புரட்சியை சாதித்தார்,
சீனாவில் மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் வழிகாட்டிய தத்துவத்தின் அடிப்படையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நடைமுறையில்தான் நாட்டின் புரட்சியின் ஊடாக செஞ்சீனம் ஆக்கினர் மாவோ .
ஆக அங்கே மார்க்சிய தத்துவத்தை நடைமுறையில் அவர்கள் புரட்சியை சாதித்தனர். ஆனால் இங்கு மார்க்சிய லெனினிய தத்துவத்தை நடைமுறை படுத்த தயார் இல்லாதோர் .... என்ன நடைமுறையில் உள்ளனர்?
மார்க்சியம் எல்லா பிரச்சினைக்கும் அடிப்படையான வர்க்க சமூகத்தை ஆய்வு செய்து நண்பர்கள் எதிரிகள் அடிப்படையில் நட்பு சக்திகளை வளர்த்தெடுத்து எதிரிக்கு எதிரான போராட்டத்தில் ஓரணியில் திரள வேண்டும் என்பதே மார்க்சிய லெனினிய தத்துவம்.
நமது நடைமுறை வாதிகளை இனம் காண்போம்.
இடதுசாரிகளான சி.பி.அய். சி.பி.எம் இரண்டும் தனது எல்லா அமைப்புகளின் போராட்டமும் அரசிடம் சரண்டையும் முதலாளித்துவ பாணியிலான நடைமுறை மட்டுமே, இறுதி இலக்கு பாராளுமன்ற தேர்தல் தேவைக்கானவை மட்டுமாக சுருங்கி விடும் பொழுது இவர்களின் நடைமுறை மார்க்சிய லெனினிய தத்துவமா? பல்வேறு நடைமுறையில் உள்ளோர் பதில் அளிப்பீர்களா?
அடுத்து தமிழகத்தில் உள்ள பாராளுமன்றத்தை பின்வாசல் வழியாக போக நினைக்கும் மா-லெ கட்சிகள் மார்க்சியத்தை விட மார்க்சியம் அல்லாத முதலாளித்துவத்தை தூக்கி சுமக்கும் சிலரை (அம்பேத்கர் பெரியார் இன்னும் சிலரை) பின்பற்றும் பொழுது அவர்களுக்கான நடைமுறை என்ன?
இவை கடந்து மா-லெ பேசும் சில குழுக்கள் நேரடியாக ஆளும் கட்சிகளுக்கு பல்லக்கு தூக்குகிறது அவர்களின் நடைமுறை என்னவாக இருக்கும்?
இறுதியாக புரட்சி பேசிக் கொண்டிருக்கும் ஒரு சில குழுக்கள் மட்டும் என்ன நடைமுறையில் உள்ளன. வறட்டுதனமாக தாங்கள் மட்டுமே புரட்சியாளர்கள் என்ற மமதையில் ஆளுக்கொரு அமைப்பு எந்த தத்துவப் போராட்டத்திற்கும் தயார் இல்லை ஒருங்கிணையவும் தயார் இல்லை. இவர்கள் கட்சி அல்ல, குழு அப்படி இருந்தும் தாங்கள் ஏதோ கட்சி என்பது போல் இவர்கள் விடும் அறிக்கைகள் கேவலமாக இருக்கும்.
ஆக ஆளும் வர்க்கத்தின் செயல்களுக்கு இவர்கள் வால் பிடித்து சில ஆர்ப்பாட்டங்கள், கண்டன முழக்கங்கள் இறுதியாக எந்த தீர்வும் இல்லாமல் களைந்து செல்வது இவைதான் இவர்களின் நீண்ட கால நடைமுறை பணி தோழர்களே முதலில் எதிரிக்கு எதிரான போராட்டத்தில் வலிமை வேண்டும் அதற்கு பலம் வாய்ந்த கட்சி மார்க்சிய லெனினிய தத்துவத்தை முழுமையாக கற்று தேர்ந்த குழாமை கொண்ட புரட்சிகர கட்சி வேண்டும் அதற்கான பணியை இந்த நடைமுறைவாதிகள் செய்வதில்லை ஏன்?
CPI,CPM, CPI ML Liberation, Red star இது போன்ற பாராளுமன்ற கட்சிகள் ஒன்றிணைவதில் என்ன தடை இவர்களின் நோக்கம் ஒன்றுதானே?
அதனால் பொத்தாம் பொதுவாக நடைமுறையில் உள்ளோம் என்பதனை விட்டுவிட்டு என்ன வகையான நடைமுறையில் உள்ளீர் என்பதனையும் குறிப்பிடவும் தோழர்களே.
இங்குள்ள முதலாளித்துவ வர்க்கத்தின் தேவையின் பின்னால் ஓடுவது எதற்கான நடைமுறை யாருக்கான தத்துவத்தை நடைமுறை படுத்துகின்றனர் விளக்குவார்களா?
மார்க்சியம் தெளிவாக கூறுகிறது....
"புரட்சிகரத் தத்துவம் இல்லாவிட்டால், புரட்சிகர இயக்கம் என்பது இருக்க முடியாது" என்று லெனின் அவர்கள் நமக்குப் போதித்துள்ளார்.
தத்துவம் என்பது வரட்டு வேதாந்தம் அல்ல. அது செயலுக்கு ஒரு வழிகாட்டி, "இது வரையில் தத்துவஞானிகள் உலகை வியாக்கியானம் மாத்திரம் செய்துள்ளனர். நமது கடமை அதை மாற்றுவதாகும்" என்று மார்க்ஸ் அவர்கள் கூறினர்.
ஒருபுறம் சொத்துடைய கூட்டம் இன்னொறுபுறம் வாழ்வா சாவா தினம் தினம் வாழ்க்கை வாழ போராடிக் கொண்டிருக்கும் கூட்டம்.
பாட்டாளி வர்க்க சித்தாந்தம் மக்கள் திரளை ஒன்றிணைப்பதும் இத்தத்துவத்தின் பால் அவர்களை கிரகித்து அவர்களை புரிய வைத்தலும், உழைக்கும் மக்கள் தமக்கு சொந்தமான தத்துவத்தை கிரகித்துக் கொண்டு அதன்படி நடக்கத் துணியும் போது தமது குருதியை உறிஞ்சி கொண்டிருக்கும் அட்டைகளையும் நச்சுக்கிருமிகளையும் மாபெரும் புயலான சீறி எழுந்து ஒரே அடியாகத் துடைத்தொழிப்பர். (அவைதான் தத்துவம் நடைமுறை பெற்று புரட்சியாக பரிணாமம் பெறல்).
மக்கள் தாமாகவே தமக்கு சொந்தமான தத்துவத்தை கிரகிக்க முடியாது. உழைக்கும் மக்களுக்கு அவர்களுடைய வர்க்கத்தின் நலனை பற்றி போதிப்பதும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் பொருட்டு அவர்களை அமைப்பு ரீதியான திரட்டுவதுமான இந்த இமாலய பணியை மக்களுக்கு இடையேயான பணி என்கின்றோம். இவையைதானே நடைமுறை பணி என்று நமது ஆசான்கள் போதித்தனர்.
மக்களிடையேலான பணியின் பாத்திரம் தத்துவார்த்த ரீதியில் நிலைநாட்டல் தான் நடைமுறை பிரச்சனை.
இக்கடமையை ஒரு பொதுவுடைமை கட்சி நேர்மையான முறையில் கடமை ஆற்ற வேண்டியுள்ளது. அந்தக் கட்சியின் ஊழியர்களுடைய பணிதான் நடைமுறை.புரட்சிகர தத்துவத்தில் தேர்ச்சிபெறுவதன் முக்கியத்துவம் நடைமுறை பணி புதைந்து கிடக்கின்றது. நமது தோழர்களை புரட்சிகர தத்துவத்தால் ஆயுதபாணிகளாக்க இது துணை செய்யும்.
ஆனால் இங்குள்ள இடதுசாரிகள் என்னவகை நடைமுறை கையாள்கிறார்கள் தோழர்களே நீங்களே புரிந்துக் கொள்ள!.இங்கு நடைமுறையில் உள்ளவர்கள் என்னவாக உள்ளனர்?
உங்களிடமே கேள்வியை முன் வைக்கிறேன்
No comments:
Post a Comment