காரல் மார்க்ஸ்-கு சிலை வைப்போர்

தோழர் எழுதியுள்ள கவிதை சிறப்பாக இருக்கவே அவரின் கவிதையை ஒத்திருக்கும் ஆசான் லெனின் எழுத்துகளும் இங்குள்ள மார்க்சிய விரோதிகளுக்கும் மார்க்சியத்தை பேசி ஏமாற்றி திரியும் திருத்தல்வாதிகளுக்கும் பொருந்தும் வாசம் அதனால் எழுதியுள்ளேன்.

 அரசும் புரட்சியும் நூலில் மிகத் தெளிவாக லெனின் பேசி இருப்பார்....

மார்க்சின் தத்துவத்திற்கு இப்போது என்ன நடந்து வருகிறதோ, அது வரலாற்றின் போக்கில், விடுதலைக்காகப் போராடும் புரட்சிகர சிந்தனையாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் தலைவர்களின் தத்துவங்களுக்கு மீண்டும் மீண்டும் நிகழ்ந்துள்ளது. மாபெரும் புரட்சியாளர்களின் வாழ்நாளில், ஒடுக்கும் வர்க்கங்கள் இடையறாது அவர்களை வேட்டையாடின, அவர்களது தத்துவங்களை மிகக் காட்டுமிராண்டித்தனமான வன்மத்துடனும், மிகக் கொடூரமான வெறுப்புடனும், பொய்கள், நேர்மையற்ற பிரச்சாரங்களுடனும் அவதூறு செய்தன. அவர்களின் மரணத்திற்குப் பிறகு, ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்கு "ஆறுதல்" அளிப்பதற்காகவும், பிந்தையவர்களை ஏமாற்றும் நோக்கத்துடனும், அதே நேரத்தில் புரட்சிகரத் தத்துவத்தை அதன் சாராம்சத்தைக் களைந்து, அதன் புரட்சிகர முனையை மழுங்கடித்து, கொச்சைப்படுத்தும் நோக்கத்துடனும், தீங்கற்ற திருவுருவங்களாக(பூஜை அறைபடங்களாக) அவர்களை மாற்றுவதற்கும், புனிதர்களாக ஆக்குவதற்கும், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவர்களின் பெயர்களைப் புனிதப்படுத்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இன்று, முதலாளித்துவ வர்க்கமும் தொழிலாளர் இயக்கத்திற்குள் இருக்கும் சந்தர்ப்பவாதிகளும் மார்க்சிசத்தை இவ்வாறு திருத்துவதில் உடன்படுகின்றனர். அவர்கள் இந்தத் தத்துவத்தின் புரட்சிகரமான பகுதியை, அதன் புரட்சிகர ஆன்மாவை விட்டுவிடுகிறார்கள், மங்கச் செய்கிறார்கள், அல்லது திரித்துக் கூறுகிறார்கள். முதலாளித்துவ வர்க்கத்துக்கு ஏற்புடையதாகத் தெரிவதை அல்லது ஏற்புடையதாகத் தோன்றுவதை அவர்கள் முன்னணிக்கு எடுத்துச் சென்று புகழ்ந்து பேசுகிறார்கள். சமூக-பேரினவாதிகள் அனைவரும் இப்போது "மார்க்சிஸ்டுகள்" (சிரிக்காதீர்கள்!). மேலும் மேலும் அடிக்கடி ஜெர்மன் முதலாளித்துவ அறிஞர்கள், நேற்றுதான் மார்க்சியத்தை அழித்தொழிப்பதில் நிபுணர்களாக இருந்தவர்கள், "தேசிய-ஜெர்மன்" மார்க்சைப் பற்றி பேசுகிறார்கள், ஒரு கொள்ளையடிக்கும் போரை நடத்தும் நோக்கத்திற்காக மிகவும் அற்புதமாக ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் சங்கங்களுக்கு அவர் கல்வியளித்தார் என்று அவர்கள் கூறிக் கொள்கிறார்கள்! (அரசும் புரட்சியும் நூல் முதல் அத்தியாயம் பக்கம் 8-9).

தோழரின் முகநூல் பகுதி அப்படியே

May be a doodle of 1 person, monument and text that says 'சிலைகள் அல்ல உரிமைகள் அழைப்புலோறும் பபலரநும் వಿಜಟ್ತಿ எத்தனை ஏமாற்று? பாட்டானி வரக் விழி விழித வழிததுக் த்தபப் கொள! ஏமாற்றாதே காண்ட்ராக்ட்முறையை ச்சய்க்கொண்டு முறை கான்ட் முறையை നயை மூச்சா ய்க்வ கொண்டு டுி மார்க்ஸைசிலையை காரல் மார்க்ஸைசிலைச லைய் நிறுவுவதா? อปต ா அாப்ி หตนต่'
காரல் மார்க்ஸ் க்கு
சிலை வைத்துவிடுவோம் !
எமதன்பு இடதின் தோழர்களே -
ஆன்ம திருப்தி கொள்ளுங்கள் !
காரல் மார்க்ஸ் க்கு
சிலை வைத்துவிடுவோம் !
விற்பனையாகும் பண்டம் - எது
வியாபாரிக்குத் தெரியாதா ?
காரல் மார்க்ஸ் க்கு
சிலை வைத்துவிடுவோம் !
தொழிலாளர் சங்கம் - அமைக்க
உரிமை இல்லை.
பணிப் பாதுகாப்பு - இங்கு
அறவே இல்லை.
ஒடுக்கு முறைகளுக்கோ
பஞ்சம் இல்லை
போராடும் உரிமை
யார்க்கும் இல்லை
அதனாலென்ன ?
காரல் மார்க்ஸ் க்கு
சிலை வைத்துவிடுவோம் !
எமதன்பு இடதின் தோழர்களே -
ஆன்ம திருப்தி கொள்ளுங்கள் !
காரல் மார்க்ஸ் க்கு
சிலை வைத்துவிடுவோம் !
நன்றியுடனிருங்கள் ! நல்லதென்று சொல்லுங்கள் !
பாயாசம் தானிங்கு தீர்வென்று
முழங்குங்கள் !
காரல் மார்க்ஸ் க்கு
சிலை வைத்துவிடுவோம் !
12 மணி நேர உழைப்புச் சுரண்டல்
பாதுகாப்பில்லாத பணிச் சூழல்
காண்டராக்ட் எனும் அத்தக்கூலிமுறை
அம்பானிக்குக் கம்பளம்
கார்ப்பரேட்க்குக் காவல்
மறுக்கப்படும் சங்க உரிமை
நசுக்கப்படும் மாணவர் அமைப்பு
கண்டு கொள்ளப்படாத விவசாயிகள்
கொல்லப்படும் மக்கள் போராளிகள்
பறிக்கப்படும் நிலத்தின் உரிமை
பிடுங்கப்படும் வாழ்வாதாரம்
கட்டுப்பாடற்ற காவல்துறை
சித்திர(வதை) இங்கு வழக்கம் ஆக ....
பதட்டம் வேண்டாம் கேளுங்கள் !
காரல் மார்க்ஸ் க்கு
சிலை வைத்துவிடுவோம் !
எமதன்பு இடதின் தோழர்களே -
ஆன்ம திருப்தி கொள்ளுங்கள் !
காரல் மார்க்ஸ் க்கு
சிலை வைத்துவிடுவோம் !
மார்க்ஸின் சிலையில்
என்ன எழுதலாம் ?
"உலகத் தொழிலாளர்களே !
ஒன்று படுங்கள்" ?
எதற்காக ? எனக் கேட்பார்கள்.
எதற்கெதிராக ? எனக் கேட்பார்கள்.
புதிதா நமக்கு ?
பாசிச எதிர்ப்பு என்றே சொல்லி
பாசிச மாடல் கூட்டோடிணைந்து
பாசிசம் இங்கு வளர்த்தெடுத்தாலும்
கவலை வேண்டாம் - கேளுங்கள்.
காரல் மார்க்ஸ் க்கு
சிலை வைத்துவிடுவோம் !
ஆனாலும் என் தோழர்களே !
ஒருநொடியேனும் உண்மையாக
உள்ளக்கிடை சொல்லுவதெனில்,
இப்படித்தான் இங்கு எழுதியாகனும்
"உலக தொழிலாளர்கள் ஒன்றுபடட்டும். உள்ளூர் தொழிலாளர்களே கம்முன்னு இருங்கள்"
-------
காரல் மார்க்ஸின் சிலையை எதிர்க்கிறீர்களா ? - என்கிறார்கள்.
ஆமாம். மார்க்ஸை அல்ல.
மார்க்ஸின் பேரால் நடைபெறும் போலித்தனங்களை ....
திரிபுகளை, கயமைகளை,
பாட்டாளி வர்க்கத்தை ஏமாற்றும் போக்கை ...
நன்றி !

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்