“இன்றுள்ள சமூக நிலைமைகள் அனைத்தையும் பலவந்தமாக வீழ்த்தினால் மட்டுமே தம் இலட்சியங்களை அடைய முடியும் என்பதைக் கம்யூனிஸ்டுகள் வெளிப்படையாக அறிவிக்கின்றனர். கம்யூனிசப் புரட்சியைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்கட்டும். பாட்டாளிகளிடம் இழப்பதற்கு ஏதுமில்லை, அவர்தம் அடிமைச் சங்கிலிகளைத் தவிர. அவர்கள் வெல்வதற்கோ ஓர் உலகம் இருக்கிறது.” (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலிருந்து).
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் கூறியுள்ளதே. உலகில் மனிதகுல வளர்ச்சியில் பல்வேறு விதமான வகுப்பு பிரிவினைகளும் வர்க்க சமூகம்தான் வரலாற்று வழியில் பிளவு பட்டு இருந்ததை சுட்டிக் காட்டுகிறது. நிலப் பிரப்புத்துவ இடிபாடுகளில் இருந்து உதித்தெழுந்த சுதந்திர முதலாளித்துவ சமுதாயத்தின் ஒரு தனி இயல்பு என்னவெனில் வர்க்க பகைமைகளை இது சுருக்கி எளிமையாக்கி உள்ளது. முதலாளித்துவ வர்க்கமும், பாட்டாளி வர்க்கமும் எதிரும் புதிருமான இரு பெரும் பகை முகாம்களாக சமுதாயம் பிளவுப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய சமூகங்களில் எங்குமே பல்வேறு வகுப்புகளாக வர்க்கங்களாக சமூக பாகுபாடு இருந்தது. இந்தியாவில் மன்னர்கள், புரோகிதர்கள், நிலப் பிரப்புக்கள், கைவினை தொழிலாளர்கள், பண்ணை அடிமைகள் இருந்ததை காண்கிறோம்.மனித குல வரலாற்று விதிகள் இவை இதை புரிந்து கொள்ள ஏற்றுக் கொள்வதுதான் மார்க்சியம்.
வரலாற்றுப் பொருள் முதல் வாதத்தை மறுக்கும் பல்வேறு அறிவாளி பிரிவினர்கள் சாதி முறை என்பது இந்தியாவில் மட்டுமே நிலவுவதாகவும் அதற்குப் பார்ப்பனர்களின் சூழ்ச்சியும் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மனுதர்மம், கடவுள் தத்துவம் இந்து மதமே காரணம் என்று கூறுகின்றனர். அவர்களுக்கு பதிலளிக்கவும், சாதி நம் மத்தியில் ஒழியாமல் இருபதை புரிந்துக் கொள்ளவும் பயனுள்ளவையாக இருக்கும்.
பிரெஞ்ச் புரட்சியில் முதலாளித்துவமானது அதன் தொடக்க கால புரட்சிகரமான பாத்திரத்தை வகித்தது நிலப் பிரப்புத்துவத்தின் பல்வேறு விதமான பிற்போக்குத் தனங்களையும் கொடுங்கோன்மைகளையும் ஒழித்துக் கட்டி முதலாளித்துவ ஜனநாயக கடமையை நிலைநாட்டியது.
முதலாளித்துவத்தில் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக பாட்டாளி வர்க்கம் தோன்றியது.
1917-இல் ரஷ்யாவில் ஏற்பட்ட பிப்ரவரி புரட்சியில் ஜார் ஆட்சிக்கு பிறகான பல்வேறு விதமான பிற்பகுத்தனங்கள் ஒழித்துக் கட்டப்படவில்லை.
1917 லெனின் தலைமையில் நடைபெற்ற அக்டோபர் புரட்சியில் ரஷ்யாவில் நிலவிய பண்ணை அடிமைமுறை, பெண் அடிமைத்தனம், மத அடிமைத்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பழைய நிலப்பிரபுத்துவ கசடுகளை களைந்து எறிவதற்கு லெனின் குறிப்பாய் செயல்பட்டார். (தேசிய இனப்பிரச்சினை தொடங்கி பல்வேறுவிதமான ஏற்ற தாழ்வுகளை இல்லாதொழித்தது).
ரஷ்ய சோசிலிச புரட்சிக்கு முன்னும் பிரிட்டன் பிரான்ஸ் போன்ற நாடுகள் இதுபோன்ற பிரிவுகள் இருந்து வளர்ந்து வந்தது. சமூகத்தின் விரோதமாக இருக்கவே அழித்தொழிக்கப்பட்டது ஜப்பானிலும் 1945க்கு பிறகு இந்தக் கொடுமைக்கு தீர்வு காணப்பட்டது.
இன்னும் விரிவாக ரசியா சீன படிப்பினையிலிருந்து பார்ப்போம் .
சமூக வகுப்புகள் ஒழிக்கப்பட வேண்டும் எனவும் நாட்டின் எல்லா குடிமக்களும் சம உரிமைகள் பெற வேண்டும் என்றும் சமூக ஜனநாயக வாதிகள் கோருகின்றனர்- லெனின் (14 அக்டோபர் 1921, நூல் திரட்டு தொகுதி 44 ஆங்கிலம் (பக் 144-152)). அக்டோபர் புரட்சியின் நாங்காவது ஆண்டு விழா பகுதியிலிருந்து.
அக்டோபர் புரட்சியின் நான்காவது ஆண்டு விழாவில் லெனின் உரை.
ருசியாவில் நடைபெற்ற புரட்சி நேரடி உடனடிக் குறிக்கோள் முதலாளித்துவ ஜனநாயக குறிக்கோள்தான். அதாவது மத்திய கால முறைமைகளின் மீது மிச்சங்களை அழித்து அவற்றை அறவே துடைத்தெறிவதும் இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை இந்த அவகேட்டை ருசியாவில் இருந்து களைந்து எறிவதும். நமது நாட்டில் அனைத்து கலாச்சாரத்துக்கும் முன்னேற்றத்துக்கும் பிரம்மாண்ட தடையாய் அமைந்த இதனை அகற்றி விடுவது தான். 125 ஆண்டுகளுக்கு அதிகமான காலத்துக்கு முன்பு நடைபெற்ற மாபெரும் பிரெஞ்சுப் புரட்சி காட்டிலும் அதிக வைராக்கியத்தோடும் மிக விரைவாகவும், துணிவாகவும், வெற்றிகரமாகவும் மற்றும் பெரும் திரள் மக்களிடையே ஏற்பட்ட பலனை கொண்டு பார்க்கையில் பன்மடங்கு விரிவாகவும் ஆழமாகவும் இந்த களையெடுப்பினை நடத்தினோமென நாம் நியாயமாக பெருமை கொள்ளலாம்.
.... முந்தைய புரட்சி அல்லது அனுபவம் குறித்து நாம் செய்த மதிப்பீடும் பிழையற்றவை என்பதை கடந்த நான்கு ஆண்டுகள் முழு அளவுக்கு நிரூபித்து காட்டி இருக்கின்றன. முதலாளித்துவ ஜனநாயக புரட்சி இதன் முன் வேறு யாரும் செய்திடாதபடி நாம் நிறைவு பெற செய்துள்ளோம்.
சோசலிச புரட்சி நோக்கி நாம் உணர்வுபூர்வமாக உறுதியாகவும் இம்மியும் பிறழாமலும் முன்னேறி செல்கிறோம் ....ருசியாவில் 1917 வரை பண்ணையடிமை முறையில் பிரதான வெளிப்பாடுகள் ஆகும் மீத மிச்சங்களாக இருந்துவை எவை? முடியரசும், குலப்படிநிலை ஆதீனங்களும், நிலஉடமை முறைமையும், நிலத்தைப் பயன்படுத்துவதற்கான முறையும், பெண்களின் நிலையும், மதமும், தேசிய இன ஒடுக்கு முறையும், ஆகியவையே. இந்த அவுக்கியஸ் லாயங்களில் (குதிரை லாயம் பல காலமாக சுத்தப்படுத்தப்படாத குப்பையும் அழுக்கடைந்த கவனியாது கெட்டுப்போன) எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் அதிகம் முன்னேறிய அரசுகள் யாவும் அவற்றின் முதலாளித்துவ ஜனநாயக புரட்சிகளை 125 ஆண்டுகளுக்கும் 250 ஆண்டுகளும் அதற்கு அதிகமான காலத்துக்கு முன்பு சித்தி பெற செய்து கொண்ட போது (இங்கிலாந்தில் 1649), இந்தலாயங்களை அவை பெருமளவுக்கு சுத்தம் செய்யாமலேயே விட்டு வைத்திருக்கின்றனர் என்பதை இடை குறிப்பாக இங்கு குறிப்பிட வேண்டும்- இந்த அவுகியஸ் லாயங்கள் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள், இவற்றை நாம் துப்புறவாய் சுத்தம் செய்திருப்பதை காண்பீர்கள். இத்துறையில் முதலாளித்துவ ஜனநாயகவாதிகளும் மிதவாதிகளும் இவர்கள் ஆட்சி அதிகாரத்திலிருந்து எட்டு மாத காலத்தில் சாதித்ததை காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகமாய் நாம் பத்தே வாரங்களில் அக்டோபர் 25 லிருந்து அரசியல் நிர்ணய சபை கலைக்கப்பட்ட 1918 ஜனவரி அஞ்சுக்கு இடையிலான காலத்தில் சாதித்தோம்.
இந்தத் தொடை நடுங்குகளும் வாய்வீச்சுக்காரர்களும் தற்பெருமையாளரான நார்ஸீஸ்களும் தமது அட்டைக் கத்திகளை வீசி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் முடியரசைக் கூட அழித்துவிடவில்லை. யாரும் என்றும் செய்திடாத முறையில் நாம் முடியரசு அசிங்கங்கள் அனைத்தையும் அகற்றி சுத்தம் செய்தோம். குலப்படி நிலை ஆதீனங்கள் எனும் அந்தப் பழங்கால அமைப்பின் ஒரு கல்லையும் விட்டுவைக்காமல் நாம் அனைத்தையும் ஒழித்திட்டோம்.(மிகவும் முன்னேறிய பிரிட்டன் பிரான்ஸ் ஜெர்மனி போன்ற நாடுகளும் கூட அந்த அமைப்பின் மீத மிச்சங்களை இது நாள்வரை அறவே அகற்றவில்லை). குலப் படிநிலை ஆதினங்களது ஆணிவேர்களாகிய நில உடைமையிலான பிரபுத்துவ மீதமிச்சங்களையும் பண்ணை அடிமைமுறை மீதமிச்சங்களை நாம் அடியோடு கெல்லியெறிந்து விட்டோம் .... (சாதியம் நிலவுடைமையின் எச்சங்களே நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்)
ஒரு புரட்சி எப்படி மற்றொன்றாக வளர்ச்சியுறுகிறது என்பதற்கு மிகவும் கண்கூடான நிரூபணங்கள் அல்லது வெளிப்பாடுகளில் ஒன்றே சோவியத் அமைப்பு. தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் சோவியத் அமைப்பானது அதிகபட்ச அளவிலான ஜனநாயகத்தை கிடைக்க செய்கிறது. அதேபோல் முதலாளித்துவ ஜனநாயகத்திடமிருந்து முறிவையும் ஜனநாயகத்தின் ஒரு புதிய, சகாப்த முக்கியத்துவம் வாய்ந்த வகையில், அதாவது பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தின் அல்லது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் உதயத்தையும் அது குறிக்கின்றது. நமது சோவியத் அமைப்பினை கட்டி அமைத்திடும் பணியில் நமது பின்னடைவுகள் குறித்தும் தவறுகள் குறித்தும் ....புரிந்து வருகிறோம். சோவியத் அரசு ஒன்றை கட்டியமைக்க உலக வரலாற்றில் ஒரு புது யுகத்தை துவக்கி வைக்கும் நற்பேர் நமக்கு கிட்டியுள்ளது குறித்துப் பெருமைக் கொள்ள நமக்கு உரிமை உண்டு.
....புரட்சிக்கு அத்தியாவசியமான இன்னொரு கலையான நெளிவு சுளிவை, அதாவது எதார்த்த புறநிலைமைகளில் ஏற்படும் மாறுதல்களின் காரணமாகய் அவசியமாகும் போது விரைவாகவும் திடுதிப்பென்றும் போர்தந்திரத்தை மாற்றிக் கொள்வதற்கும் நமது குறிக்கோளை அடைய நமது பழைய பாதையானது குறிப்பிட்ட ஒரு தருணத்தில் உசித்தமற்றதாகவோ, சாத்தியமற்றதாகவோ மாறிவிடுமாயின் அதற்கு பதில் வேறொரு பாதையைத் தேர்ந்துக் கொள்வதற்குமான திறனை நாம் கற்றுக் வைத்திருக்கிறோம்.
.....கம்யூனிசத்துக்கு மாறிச் செல்வதற்காகத் தயாரிப்பு செய்யும் பொருட்டு - நீண்ட பல ஆண்டுகளுக்குப் பாடுபட்டு தயாரிப்பு செய்யும் பொருட்டு -இவை அவசியமாகும் என்பதாக தெரிகிறது நேரடியாக ஆர்வத்தையே ஆதாரமாகக் கொண்டுவிடலாகாது, மாபெரும் புரட்சியால் தோற்றுவிக்கப்பட்ட ஆர்வத்தைத் துணை கொண்டும்,.... சோசலிசத்தைச் சென்றடைய உறுதியான பாலத்தை முதற்கண் அமைத்திட வேண்டும் இல்லையேல் என்றுமே நம்மால் கம்யூனிசத்தை சென்றடைய முடியாது கோடான கோடியான மக்களை எந்நாளும் நாம் கம்யூனிசத்துக்கு அழைத்துச் செல்ல முடியாது ...
- காலத்தின் இன்னல்கள் எவ்வளவுதான் கடுமையாக இருப்பினும் சரி விபத்தையும் பஞ்சத்தையும் அழிவையும் மீறி, நாம் சோர்வின்றி உறுதியுடன் இருப்போம், நமது லட்சியத்தை வெற்றிகரமாக நிறைவேறச் செய்வோம்.
நமக்கான படிப்பினகள் தொகுப்பாக பார்க்கும் பொழுது ரசிய, சீன புரட்சியானது, அதற்கு முந்தைய சமூக ஒழுக்கக் கேடான குலமரபு, மத மூடத்தனங்கள், நிலவுடைமை பிற்போக்குதனங்கள், ஏற்றதாழ்வான வகுப்புவாதம், பெண்ணடிமைதனம், தேசிய இன ஒடுக்குமுறை, மத ஆதீன சொத்துகளை பறித்தல் இதுபோன்ற உழைக்கும் ஏழை எளிய மக்கள் விரோதமாக இருந்த எல்லாம் ஒழிக்கப்பட்டது, உழைக்கும் மக்களுக்கான சமூகமாக மாற்றப்பட்டது.
இங்கே சாதி பிரச்சினையை மையமாக பேசுவோர் புரிந்துக் கொள்ளாதவையும் அல்லது விஞ்ஞான கண்ணோட்டம் இல்லாத அவர்களுக்கான எனது பதில்கள் ஆசான்கள் நடைமுறையில் காண்பித்துள்ளனர் என்பதே.
சாதி உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லை இந்தியாவில் மட்டுமே உள்ளது ஆக சாதியை ஒழிக்காமல் வர்க்க போராட்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பவர்கள் சமூகத்தில் சாதியின் தோற்றமும் இன்றைய இருப்பையும் புரிந்துக் கொள்ளாத இயங்காநிலை வாதிகளுக்கும் சமூக இயக்கம் புரியாமையின் வெளிப்பாடே என்பேன்.
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்சிய ஆசான் எங்கெல்ஸ் குறிப்பிட்டுள்ளவைதான், அனைத்து வரலாறும் வர்க்க போராட்டத்தின் வரலாறகவே உள்ளது. சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களில் சுரண்டும் வர்க்கதிற்கும், சுரண்டப்படும் வர்க்கதிற்கும் இடையே நடைபெறும் போராட்டமாக இருந்துள்ளது. இவை இந்தியாவிற்கும் பொருந்தாதா? இங்கே சுரண்டும் ஆளும் வர்க்க அரசை எதிர்க்கும், சுரண்படும் உழைக்கும் மக்களை வர்க்கமாக பார்க்காமல் சாதியாக பார்க்க சொல்லும் சுரண்டும் வர்க்க கண்ணோட்டமே. சாதியாக இருந்தால் சலுகை சிலருக்கு பயன் அல்லவா ஆகையால்.
சாதி ஒழிப்பென்பது வெறும் சாதி தீண்டாமை மற்றும் சாதியால் கடைநிலையில் உள்ளவர்களுக்கானவை மட்டுமல்ல, நாம் வாழும் சமூகத்தில் சனாதன தர்மத்தில் எல்லோரையும் அடிமை நிலையில் வைத்திருக்கும் போக்கை உடைதெறிய இச்சமூகத்தில் உள்ள எல்லோரும் இந்த இழிவான சாதிய முறையை விட்டொழிவதே அவை .
இவை நடைமுறையில் சாதித்துக் காட்டிய ரசிய சீன புரட்சிகள் நமக்கு வழிக்காட்டிகள். அதனை பற்றி மார்க்சிய ஆசான் எழுத்தை முன் வைத்து நடைமுறை உண்மைகள்தான் இவை.
No comments:
Post a Comment