“பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்”-லெனின்

 லெனின் “பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” என்கிற நூலை 1908ஆம் ஆண்டு எழுதி முடித்தார். 1909 ஆம் ஆண்டு நூலாக வெளிவந்தது. இந்த நூலை எழுதுவதற்காக லெனின் சுமார் 200 நூல்களைப் படிக்க வேண்யதாக இருந்தது. அப்படிக் கடுமையாகப் படித்து இந்த நூலை எழுத வேண்டிய தேவை லெனினுக்கு ஏன் ஏற்பட்டது, என்பதைப் புரிந்து கொள்வதின் மூலம், இந்த நூலின் இன்றைய தேவையையும் நாம் அறிந்து கொள்ள .... தொடர்

மார்க்சிய லெனினிய  தத்துவத்திற்குரிய இடமும் பங்களிப்பும்.

மார்க்சிய லெனினியதின் தத்துவயியல் இடையறாது வளர்ச்சி அடைந்து வரும் ஒரு தத்துவமாகும். தத்துவயியலின் பல நூறு ஆண்டு கால வளர்ச்சியின் ஆக சிறந்ததும் மிகவும் முன்னேற்றமடைந்ததுமான எல்லா அம்சங்களையும் அது விமர்சன ரீதியாக  தன்வயப்படுத்தி உள்ளது அதேபோல் இதன் தோற்றம் தத்துவஞானத்தின் பண்பு நீதியாக பாய்ச்சலை புரட்சிகரமான பேரழுச்சியும் சிறப்பாக குறிக்கிறது. உழைக்கும் வர்க்கத்தின் உலக கண்ணோட்டம் என்ற வகையில் மார்க்சும் எங்கெல்சும் இதனை முறையாக உருவாக்கினார்கள். இதன் வரலாற்று இலட்சியப்பணி வர்க்கங்கள் அற்ற சமூகத்தை படைப்பதாகும். இதனால்தான் மார்க்சிய தத்துவ ஞானம் உலகம் குறித்து ஒரு கறாரான விஞ்ஞான விளக்கத்தை தருவதோடு மற்றும் நின்று விடுவதில்லை உலகினை மாற்றுவதற்குரிய ஒரு தத்துவார்த்த கருவியாக செயல்புரிகிறது.

விஞ்ஞானத்தின் வளர்ச்சியும் அதன் முன்னேற்றமும் இன்றைய ஏகாதிபத்திய காலகட்டத்தில் அறிவின் தனித்தனி துறைகள் பல்வேறு பிரிவுகளாக உள்ளன இவை சார்பற்றதாய் உள்ளதாக குழப்பிக் கொண்டுள்ளனர்.

இந்த நூலின் இன்றைய தேவை. பல தோழர்கள் நினைக்கலாம்இந்த நூல் அன்று ரஷ்யாவில் 1908 ஆம் ஆண்டில் இருந்த தத்துவார்த்த பிரச்சினைகளை ரஷ்யாவில் லெனின் பேசினார் இங்கு எதற்கு தேவை என்று!!!

இன்று மார்க்சியத்தை விட மார்க்சியமல்லாத பல்வேறு போக்குகளில் தத்துவவாதிகளும் ஏன் மார்க்சியவாதிகளும் கூட (சந்தர்ப்பவாதிகளும், குழப்புவாதிகளும்) ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சூழலில் அன்றைய லெனினின் போராட்டம் அவர் நாட்டில் இருந்த பல்வேறு விதமான போக்குகளுக்கு பதில் அளித்ததோடு உண்மையாலுமே ஒரு தத்துவ புரிதலை உருவாக்கி சரியான இயக்கவியல் பொருள் முதல்வாத பார்வையை அவர்களுக்கு வழங்கினார். ஆக நம்மிடைய உள்ள சில போக்குகளை புரிந்து கொள்வதும் அதற்கு சரியான மார்க்சிய பார்வையில் தெளிவடையவும் இந்தப் பகுதி தொடர்ந்து வாசிக்க நினைத்துள்ளோம்.

இந்த நூல் ஆறு அத்தியாயங்களைக் கொண்டதாகவும் அதற்கு முன்னே முன்னுரையில் அன்று லெனின் கூறியவற்றை மிக அழகாக வெளியிட்டுள்ளனர்.

பதிப்புரை :- எழுதிய பதிப்பாசிரியர் சிவம் அவர்கள் நூல் உருவாக்கத்திற்கான பின்னணியும் அதில் உரு கொண்ட பல்வேறு தோழர்களின் பணிகளையும் விளக்கி உள்ளார். அவர் கூறியது போல இவர்களின் பணியினை நாமும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் நல்லதொரு சிறப்பான கருத்தாயுதமான மார்க்சிய லெனின்ய போர் ஆயுதத்தை வழங்கியமைக்காக. மார்க்சியம் எனும் தத்துவத்தின் மெருகேற்ற பட்ட பகுதிதான் பொருள் முதல் வாதமும் அனுபவ வாதமும் விமர்சனம் என்ற இந்த நூல் ...

“பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” என்கிற இந்த நூலில் ஆறு அத்தியாயங்கள் இடம் பெற்றுள்ளது.

மார்க்சியத்தை நேசிக்கும் எல்லோரும் வாசித்து கற்றறிய வேண்டிய அவசியமான ஒரு நூல். அதனால் தான் இந்த நூலை முழுமையாக வாசித்து தெளிவடைய தொடர் வகுப்பு நடத்துகிறோம். விருப்பம் உள்ள தோழர்கள் தொடர்ந்து வாசிப்பில் கலந்து கொள்வதோடு விவாதித்து தெளிவடைந்து நாம் ஒரு சரியான மார்க்சிய லெனின்யத்தை கற்றுத்தேற வழியமையும். வாருங்கள் வாசிக்க மார்க்சிய லெனினியத்தை கசடற கற்றுத்தேற தோழர்களே...

தத்துவம் பற்றி சிறிய புரிதல் மனித இனம் தோன்றியதிலிருந்து இன்றைய வளர்ந்த நிலைவரை ஏற்பட்டுள்ள பல்வேறு தத்துவ குழப்பங்களை புரிந்து கொள்வதற்கு , சமூக அறிவு நமக்கு அவசியமானது. மனிதன் தோன்றி முப்பது லட்சம் ஆண்டுகள் ஆகின்றது அவன் தோன்றும் போதே இன்றுள்ள எல்லாவகையான நிலைகளும் உருவாகி விடவில்லை. அவனுடைய உழைப்பும் அவனுக்கான தேடலும் இயற்கையோடு அவனது போராட்டமும் தொடர்ந்து அவனை மாற்றியும் வளர்ந்தும் உலகெங்கும் பல்வேறுவித வகையான் சமூகமாக மனிதன் வளர்ந்து வாழ்கிறான். இயற்கையோடு போரிட்டு வளர்ந்தவன் தன்னால் இயன்றவற்றை மாற்றி அமைத்தான் இயலாதவற்றை பல்வேறு விதமான கற்பிதங்களை கொடுத்து தனக்கு மேலானதாக ஆக்கிக் கொண்டான். அதனைப் பற்றி சற்று விரிவாக புரிதலுக்காக பேசுவோம்.

இந்திய தத்துவம் மட்டும் அல்ல உலக தத்துவங்களும் இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றம் பூமியில் உயிர்களின் வாழ்க்கை இவற்றைப் பற்றி பேசும் பொழுது கடவுள் தான் இவற்றையெல்லாம் படைத்தார் என்றே கூறுகின்றன. இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எங்கெங்கும் மதம் தான் ஆளுமை செய்திருக்கிறது. கிறிஸ்துவம் ஆகட்டும் இஸ்லாம் ஆகட்டும் தங்களின் மார்கத்தின் அடிப்படையில் உலகம் பற்றிய தத்துவத்தை விளக்குகின்றனர். இந்த தத்துவ கருத்துக்களுக்கு எதிரானவர்களும் அவர்களோடு போராடி வாழ்ந்துள்ளார்கள் அன்றைய சமூகத்தில். அவர்களின் தர்க்கங்களும் கேட்டு வாசித்து அறிந்துதான் உள்ளோம். இந்தியாவில் ஏற்பட்ட மததத்துவமும் அதனை மறுத்த பல்வேறு போக்குகளும் இங்கே தினம் தினம் பேசப்பட்டுக் கொண்டுதான் உள்ளது. அவை எவ்வகை சரியாக உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்வது தொடர்ந்து நமது மார்க்சிய ஆசான்களிடம் செல்வோம்.

மாமேதை மார்க்சும் எங்கெல்சும் இந்த இரண்டு தத்துவங்களையும் ஆராய்ந்து கருத்து முதல் வாதமானது ஆளும் வர்க்கத்துக்கு ஆம் தனி சொத்துடைய வர்க்கத்தின் சேவைக்கானது என்றும் இயக்கவியல் பொருள் முதல் வாதம் உழைக்கும் உழைப்பாளர்களின் விடுதலைக்கான தத்துவம் என்றும் தெளிவுபடுத்தினர்.


முதலில் சுருக்கமாக கருத்து முதல் வாதம் என்றால் என்ன? பொருள் முதல் வாதம் என்றால் என்ன? என்பதை தெரிந்து கொள்வோம்.
இயற்கையின் செயல்பாடு தான் உலகில் பல்வேறு விதமான உயிர்களையும் வாழ்வியலையும் தீர்மானிக்கின்றேன் என்ற கருத்தைக் கொண்டவர்கள் பொருள் முதல்வாதிகள் இந்த கருத்தை மறுத்து நம்மைப் பற்றி புரிந்து கொள்ள முடியாது அனைத்தும் மாயை எல்லாவற்றையும் கடவுள் தான் வழி நடத்துகிறார் அவருடைய செயலாள் தான் உலகே இயங்குகிறது என்று கருத்து முதல்வாதிகள் வாதிக்கின்றனர்.

இன்றைய இந்தியாவில் மதவாதம் கோலோச்சும்போது கருத்து முதல் வாதத்தை பற்றி மிகத் தெளிவாக புரிந்து கொள்வது அவசியமாக உள்ளது.

கருத்து முதல் வாதம் ஏன் நிலவி வருகிறது பல மக்களின் உணர்வின் மீது ஏன் தாக்கம் செலுத்துகிறது? பல்வேறு உயர்மட்ட அறிவாளிகள் விஞ்ஞானிகள் மத்தியில் கூட இதை பின்பற்றுவர் இருக்கின்றார்கள். விஷயம் என்னவென்றால் மனித அறிதலில் மட்டுமின்றி சமுதாய சூழ்நிலைகளிலும் கருத்து முதல் வாதத்திற்கு வேர்கள் உள்ளன.
"பழங்களைத் தருவதோடு அன்றி மலட்டு மலர்களையும் தரும் மரத்தோடு மனித அறிதலை" லெனின் ஒப்பிடுகிறார்.
அறிதல் என்ற உயிருள்ள மரத்தில் இருக்கக்கூடிய இத்தகைய மலட்டு மலர் தான் கருத்து முதல் வாதம். இது அறிதல் நிகழ்ச்சி போக்கின் மீதான ஒரு தலைப்பட்ச அணுகுமுறையை ஆதாரமாகக் கொண்டது அதன் சிக்கல்தன்மை மற்றும் முரண்பாட்டின் மேல் ஊக ஆய்வு நிகழ்த்துகிறது.
அகவய கருத்து முதல்வாதிகள்
உணர்ச்சிகள் தான் நாம் சிந்தனை நிகழ்ச்சி போக்கின் சிக்கலான தன்மையிலும் முரண்பாட்டிலும் மட்டும் விஷயம் அடங்கி இருக்க வில்லை. கருத்து முதல் வாதம் உயிருடன் இருப்பதற்கான காரணங்கள் சமுதாய சூழ்நிலைகளிலும் அடங்கி உள்ளது.ஆளும் வர்க்கமானது தன் சுரண்டலை மறைக்கவும் தன்னை தக்க வைத்துக் கொள்ளவும் பழமைவாத கருத்துகளை புதுப்பித்தும் மேன்மைப்படுத்தியும் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் கண்ணோட்டத்தை குழப்புகிறது நடைமுறை கடமைகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்புகிறது. அதனைப் புரிந்து கொள்ள மதத்தை பற்றியும் சற்று அறிந்து கொள்வோம் . கருத்து முதல் வாதம் மதத்துடன் உள்ள உறவு விஞ்ஞான தன்மை அற்றது என்று தெளிவாக புலப்படுகிறது.
ஆதியில் இயற்கையோடு மனிதனுக்கு இருந்த பலவீனத்தின் விளைவே மதம் தோன்றியது. இயற்கை மற்றும் மனித சமூக வளர்ச்சி விதிகளை அறியாமல் இந்த புலப்பாடுகளை விளங்கிக் கொள்வது அரிது. இயற்கையோடு போரிட்ட மானிடம் தன் இயலா நிலைக்கு தன்னில் அப்பாற்பட்ட ஒரு சக்தியை தேடினான், அதி அற்புதமான கற்பனை வடிவங்களை கடவுளுக்கு கொடுத்தான்.
மதம் சாதாரண மனித உணர்ச்சிகளை நாடுகிறது. அவர்களது மனநிலையின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தான் நிலவிவரும் பல நூற்றாண்டு காலத்தில் மனித உணர்ச்சிகளின் மீதான தாக்கத்தை ஏற்படுத்தவல்ல பயன் மிக்க சாதனங்களின் முழு முறையையே மத ஸ்தாபனங்கள் உருவாக்கியுள்ளன. கலை இலக்கியம் இசை மற்றும் பல்வேறு முறையில் மனிதர்களின் மீது உளவியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
வர்க்க சமுதாயமும் மனிதனை மனிதன் சுரண்டுவது தோன்றியதும் மதம் அதிக உறுதியான ஆதாரத்தை பெற்றது. உழைக்கும் மக்கள் திரளினரின் சமூக ஒடுக்கம் இதற்குத் துணை புரிந்தது. இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளின் மேலும் சர்வ வல்லமை படைத்த கடவுளின் மீதான நம்பிக்கை கடுமையான உழைப்பும் முடிவற்ற வேதனைகளும் நிறைந்து கிடக்கும் அடக்கி ஒடுக்கப்பட்டோரின் வாழ்வில் நியாயம் மற்றும் அன்பிற்கான மாயையான ஈடாக மாற்றப்பட்டது. மதத்தின் இந்தப் பணியை இதயமற்ற உலகில் ஆன்மா என்று காரல் மார்க்ஸ் குறிப்பிட்டார்.
மதக் கருத்துக்களும் எண்ணங்களும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளின் மீதான நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. எனவே இவை மாயவாதம் அறிவிற்கு பொருந்தாத தன்மையை உடையவனாக உள்ளன.

மத வழிபாட்டு முறை என்பது சடங்குகள் அடங்கிய ஒரு முறையாகும் இச்சடங்குகள் மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை கூடவே வருகின்றன.வழிப்பாட்டு சடங்குகளின் உதவியால் மதஸ்தாபனங்கள் மத நம்பிக்கைகள் உள்ளோரை தனது செல்வாக்கு வட்டத்திற்குள்ளே வைத்திருக்கிறது.

மத ரீதியான உலக கண்ணோட்டம் என்பது விஞ்ஞானத்திற்கு நேர் எதிரானது இவை கடந்த கால பல்வேறு விஞ்ஞானிகளை கொன்றது தண்டித்திலிருந்து தெளிவான் விடயம் மத வாதிகள் பகுத்தறிவு அற்றவர்கள் ஆனால் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் மதவாதிகள் விஞ்ஞானத்தை மறுக்கவில்லை மனிதனுக்கு இந்த அறிவை கொடுத்ததே கடவுள் தான் என்று நிரூபிக்க அவர்கள் முயன்று கொண்டுள்ளனர்.
மதம் தோன்றியதிலிருந்து இன்று வரை சுரண்டலுக்கு சாதகமாக சுரண்டும் வர்க்க நலனுக்காக பெரும்பான்மை உழைக்கும் மக்களின் உழைப்பை சுரண்டுவதற்கும் கற்பனையான ஒரு சொர்கத்தை காட்டி வருகின்றனர். இன்று மதமும் மத ஸ்தாபனங்களும் தம் மீது சமூக சூழ்நிலை தாக்கத்தை உணர்ந்து அதற்கேற்றபடி தன்னை மாற்றிக் கொள்கின்றன.
கருத்து முதல் வாதம் மற்றும் மதத்தின் முக்கிய கோட்பாடுகளுக்கு இடையேயான ஒற்றுமை இவை தமது சாரம்சத்தில் சமூக பாத்திரத்திலும் நெருக்கமானவை என காண்பிக்கிறது கருத்து முதல் வாதமும் மதமும் பொருள் முதல் முதல் வாதத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் எதிரானவை ஆகும்.
தொடரும்....

தொடர்ந்து வாசிக்க இந்த லிங்கை அழுத்தவும்

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்