தத்துவமும் நடைமுறையும்-20

பதினெட்டாம் நூற்றாண்டில் ஃபிரான்சில் நடந்ததைப் போன்றே, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜெர்மனியிலும் ஒரு தத்துவப் புரட்சி அரசியல் வீழ்ச்சிக்கு வித்திட்டது. ஆனாலும் இந்த இரண்டுக்கும் இடையில்தான் எவ்வளவு வேறுபாடு! ஃபிரஞ்சுத் தத்துவவாதிகள் அதிகாரபூர்வமான அனைத்து விஞ்ஞானத்தையும், கிறிஸ்துவத் திருச்சபையையும், பலநேரங்களில் அரசையும்கூட வெளிப்படையாய் எதிர்த்துப் போரிட்டனர். பாஸ்டிலில் (Bastille) அவர்கள் சிறைபிடிக்கப்படும் ஆபத்து எப்போதும் நிலவிவந்தபோது, அவர்களது எழுத்துகள் நாட்டுக்கு வெளியே ஹாலந்து அல்லது இங்கிலாந்தில் அச்சிடப்பட்டன. மறுபுறம் ஜெர்மானியத் தத்துவவாதிகளோ பேராசிரியர்களாவும், இளைஞர்களுக்கான, அரசால் நியமிக்கப்பட்ட போதனையாளர்களாகவும் இருந்தனர். அவர்களது நூல்கள் அங்கீகரிக்கப்பட்ட பாடப் புத்தகங்களாக இருந்தன.(லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்)

ஹெகலைப் பொறுத்தவரை, அரசாங்கத்தின் ஒரு குறிப்பிட்ட நடவடிக்கை ஒரு குறிப்பிட்ட வரிவிதிப்பு நடவடிக்கையை ஹெகலே எடுத்துக்காட்டாகக் கூறுகிறார்நிபந்தனையின்றி எவ்விதத்திலும் எதார்த்தம் ஆகிவிட முடியாது. எனினும், அவசியமாய் இருக்கின்ற ஒன்று, வளர்ச்சிப் போக்கின் கடைசி நிலையில் தன்னைப் பகுத்தறிவுக்கு உகந்ததாகவும் நிரூபித்துக் கொள்கிறது. அக்காலத்திய பிரஷ்ய அரசுக்கு பொருத்திப் பார்த்தால் ஹெகலியக் கருதுகோளின் பொருள் இதுவே: அந்த அரசு எந்த அளவுக்கு அவசியமானதாக இருக்கிறதோ அந்த அளவுக்குப் பகுத்தறிவுக்கு உகந்ததாகவும் இருக்கிறது. அப்படி இருந்தும் அந்த அரசு நமக்குத் தீங்கானதாய்த் தோன்றுகிறது எனில், தீங்கான பண்பு கொண்டதாய் இருந்தும் அது தொடர்ந்து நீடித்திருக்கிறது எனில், காரணம் யாது? அரசாங்கத்தின் தீங்கான பண்பை நியாயப்படுத்துவதும், விளக்குவதும் அதன் குடிமக்களிடம் நிலவும் அதற்கீடான தீங்கான பண்பே ஆகும். ஆக, அக்காலப் பிரஷ்ய மக்கள் அவர்களின் தகுதிக்கேற்ற அரசாங்கத்தைத்தான் பெற்றிருந்தார்கள்.

ஆனால், எதார்த்தம் என்பது சமூக அல்லது அரசியல் அமைப்பில் குறிப்பிட்ட நிலைமையின் உள்ளடங்கிய பண்பாக எல்லாச் சூழ்நிலைகளிலும், எல்லாக் காலங்களிலும் எவ்விதத்திலும் இருக்க முடியாது என்பது ஹெகலின் கருத்தாகும். அப்படிச் சொல்லிவிட முடியாது. ரோமானியக் குடியரசு எதார்த்தமானதாய் இருந்தது. ஆனால் அதனைத் தொடர்ந்து வந்த ரோமானியப் பேரரசும் எதார்த்தமானதாக இருந்தது. ஃபிரஞ்சு முடியாட்சி 1789-இல் மாபெரும் புரட்சியினால் அழிக்கப்பட வேண்டிய அளவுக்கு எதார்த்தத்துக்குப் புறம்பானதாகவும், அவசியமற்றதாகவும், பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகவும் ஆகிவிட்டிருந்தது. இந்தப் புரட்சியைப் பற்றி ஹெகல் எப்போதும் மிகுந்த உற்சாகத்துடன் பேசுகிறார். ஆகவே, இந்த எடுத்துக்காட்டில், முடியாட்சி எதார்த்தம் அல்லாததாகவும், புரட்சி எதார்த்தமானதாகவும் இருந்தது. எனவே, வளர்ச்சிப் போக்கில், முன்பு எதார்த்தமானதாக இருந்தது, எதார்த்தம் அல்லாததாக மாறிவிடுகிறது. தனது அவசியத்தை, நிலவுவதற்கான உரிமையை, பகுத்தறிவுக்கு உகந்த தன்மையை இழந்து விடுகிறது. அழிந்து கொண்டிருக்கும் எதார்த்தத்துக்குப் பதிலாக ஒரு புதிய, சாத்தியமான எதார்த்தம் எழுகிறது. பழைய எதார்த்தம் புத்திசாலித்தனமாக எதிர்ப்புக் காட்டாமல் சாகுமெனில் இம்மாற்றம் அமைதியாக நிகழும். இந்த அவசியத்தை எதிர்க்குமெனில் இது பலவந்தமாக நிகழும். இவ்வாறாக, ஹெகலிய இயக்கவியலின் வழியாகவே ஹெகலின் கருதுகோள் எதிரிடையாய் மாறிவிடுகிறது. மனித வரலாற்றில், எதர்த்தமானதாய் இருப்பதெல்லாம் காலப்போக்கில் பகுத்தறிவுக்குப் புறம்பானதாய் ஆகிப் போகிறது. எனவே எதார்த்தமானதாய் இருப்பது அதன் உள்ளடக்கத்திலேயே பகுத்தறிவுக்கு ஒவ்வாததாய் இருக்கிறது. பகுத்தறிவுக்குப் புறம்பான தன்மையின் கறை முன்னமே படிந்திருக்கிறது. மனிதர்களின் மனங்களில் பகுத்தறிவுக்கு உகந்ததாய் இருக்கும் ஒவ்வொன்றும், நடப்பிலுள்ள வெளித்தோற்ற எதார்த்தத்துக்கு எவ்வளவுதான் அதிகமாக முரண்படுகின்ற போதிலும், இறுதியில் எதார்த்தமானதாய் ஆகியே தீரும்

தத்துவம் பற்றி பல்வேறு விதமான கருத்துகளும் பல்வேறு விதமான எழுத்துகளும் உள்ளது ஆனால் இதுவரை உள்ள எல்லா தத்துவங்களும் உள்ள சமூக அமைப்பை விமர்சிக்க  செய்வதற்கு மட்டுமே பயன்பட்டது அதிலிருந்து வேறுபட்டது தான் மார்க்சியம், அவை சொல்வது உள்ள பிரச்சினைக்கு காரணமான இந்த சமூக அமைப்பை மாற்றி அமைத்தால் தான் இதற்கு தீர்வு என்றது.

நமக்கு தத்துவம் போதிக்கும் பலரும் செய்யும் மிக மோசமான பணி இதை நமக்குப் புரிந்து கொள்ளாமல் செய்வது தான். ஆளும் வர்க்கத்தை கட்டிக் காப்பதற்காக பல்வேறு விதமான தத்துவ போக்குகளை உருவாக்கினாலும் அவை உழைக்கும் மக்களுக்கு விரோதமானதே என்பதனை புரியவைக்க முன்வருபவர்கள் அரிதலும் அரிதே. ஆளும்வர்க்கத்துக்கு சாதகமானது என்பது புரிந்து கொள்ள வேண்டும்

இந்தியாவில் தோன்றிய சில தத்துவ மரபுகள் சமயத்தை ஏற்பதும் சமயத்தை மறுப்பதாக இருந்தாலும் அவை ஏதோ ஒரு வகையில் ஆளும் வர்க்கத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதாகவே இருந்துள்ளது. அதில் உள்ள பல்வேறு பிரிவுகளை நாம் எடுத்துக் கொண்டு பேசுவோம் அன்றிருந்த உயர்ந்த அல்லது தாழ்ந்த நிலையில் இருந்து தத்துவங்களும் ஏதோ ஒரு வகையில் அவை ஆளும் வர்க்கத்தின் தேவைகளை ஒட்டி பூர்த்தி செய்தன.

இன்று அதனை பேசும் பலர் அம்பேத்காரிடமும் பெரியாரிடமும் பல முற்போக்கு அம்சங்களை காணுகிறார்கள் எப்படி முன்பே தத்துவ ஆசிரியர்கள் தத்துவவாதிகள் இந்த ஆளு வர்க்கத்திற்கு பணிபுரிந்தார்களோ அதேபோல தான் அம்பேத்கரும் பெரியாரும் உள்ள அமைப்பு முறை கொள்ளையே தங்களுக்கான இடம் தேடி அதற்குள்ளே வாழ வழி செய்தார்கள் இவர்கள் இது ஆளும் வர்க்கத்தின் பிற்போக்குத்தனங்களை விமர்சித்துவதோடு தானும் அதே அமைப்புக்குள் சங்கம் ஆகிவிட்டார்கள் ஆக இந்த பிற்போக்குத்தனங்களை கலைந்து எறிவதற்கான வழி வகையை கைவிட்டு விட்டார்கள் என்பேன்

என்றோ முதலாளி புரட்சியில் ஒளித்து கட்டப்பட்ட மதமானது இங்கு உயிருடன் இருப்பதற்கு இந்த ஆட்சி முறை அல்லவா அதனை ஒழித்துக் கட்டுவதற்கான வழிவகை அற்ற அதற்குள்ளேயே எப்படி தீர்வு காண முடியும் பதில் அளிக்க கடமைப்பட்டவர்களை எல்லோரும் 

மார்க்சிய தத்துவத்தைப் புரிந்துகொள்ள உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் உங்களது அனுபவவாத வழியில் நீங்கள் பயணம் செய்யலாம். ஆனால் எனக்கு மார்க்சிய ஆசான்களின் தத்துவ அரசியல்தான் வழிகாட்டும் ஆயுதமாக இருக்கிறது என்று உணர்கிறேன். இன்றும் மார்க்சியமே வெல்லும் என்று கருதுவதற்கு காரணம் மக்களை வழிநடத்தப் பயன்படும் மார்க்சிய ஆசான்களது போதனைகள் ஆவணங்களாக உலகம் முழுவதிலுமுள்ள மொழிகளில் மொழிபெயற்கப்பட்டு ஆவணங்களாக உள்ளன. இந்த ஆவணங்களைப் படித்து உணர்பவர்களால் தற்காலத்திலுள்ள சமூகப் பிரச்சனைகளையும் விஞ்ஞான அடிப்படையில் புரிந்துகொண்டு சமூகத்தை மாற்றியமைக்க முடியும். ஆகவேதான் மார்க்சியமே வெல்லும் என்கிறோம். இந்த ஆவணங்களை அழிப்பதற்காகவே ஏகாதிபத்தியவாதிகள் மார்க்சியம் என்ற பெயரில் பல வகையான தவறான கருத்துக்களை எழுதி பல ஆயிரக்கணக்கான புத்தகங்களை மக்களை குழப்புவதற்காக வெளியிடுகிறார்கள். அவர்களின் நோக்கம் மார்க்சிய ஆசான்களது கருத்துக்கள் மக்களுக்கு சென்றுவிடக்கூடாது என்பதே ஆகும். கருத்துக்களின் பலத்தை மக்களின் எதிரிகள் நன்கு தெரிந்து வைத்துள்ளனர். ஆகவேதான் மார்க்சியத்தை நேசிப்பவர்களிடம் மார்க்சிய கருத்துக்கள் சென்றுவிடக் கூடாது என்பதற்காக மார்க்சிய ஆசான்களின் நூல்களைப் படிப்பதால் எவ்விதமான பயனும் இல்லை என்ற கருத்தைப் பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். தத்துவம் மக்களிடம் சென்றால் அது பொருள்வகை சக்தியாகும் என்ற மார்க்சின் கோட்பாட்டை இவர்கள் மறுக்கிறார்கள். மார்க்சிய தத்துவ அரசியலை நன்கு படித்துப் புரிந்துகொண்டவரால் மட்டுமே மக்களின் விடுதலைக்கான அரசியலை மக்களுக்கு எடுத்துச் சொல்லி வழிகாட்ட முடியும். மார்க்சியத்தை படித்து புரிந்துகொள்ளாதவரால் மக்களுக்கு அவரது சொந்த அனுபவத்திலிருந்து அனுபவவாத வழியில்தான் வழிகாட்ட முடியும். அது அகநிலைவாத கண்ணோட்டத்தின் அடிப்படையிலானது அது மார்க்சியத்துக்கு எதிரானது என்று மார்க்சிய ஆசான்கள் போதித்துள்ளார்கள். நமது நடைமுறையானது அறிவியல்பூர்வமாக இருக்க வேண்டுமானால் மார்க்சிய சமூக விஞ்ஞானத்தை படித்து புரிந்துகொண்டு அதன் அடிப்படையில் நமது நடைமுறை அமைந்திருக்க வேண்டும். அத்தகைய சமூக விஞ்ஞான அறிவில்லாமல் ஒருவர் நடைமுறையில் ஈடுபடலாம் அத்தகைய நடைமுறையின் மூலம்வெற்றி என்பது உறுதியல்ல.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்