தத்துவ அவசியத்தை அறிந்த ஆசான் லெனின் தன் நாட்டில் மார்க்சியத்தையும் கருத்து முதல்வாதத்தையும் ஒன்றினைத்து புதிய தத்துவம் படைக்க கிளம்பியவர்களை அம்பலப்படுத்த எழுதிய நூலே, "பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்" அதனை இன்றிரவு 8 மணிக்கு வாசிக்க உள்ளோம் வாருங்கள் தோழர்களே... அதற்கான இணைப்பு இவை
எங்கள் புரிதல் கீழே வாசிக்க எளிதாக இருக்கும்...
தத்துவார்த்த உலகிலேயே மார்க்சியத்தை குறைக்கூறி விமர்சனம் செய்வதற்கும் அதை திரிப்பதற்கு நாளுக்கு நாள் அதிகமாக முயற்சி செய்யப்பட்டு வருகின்றன. புதிய புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் அதன் உண்மைகளையும் திரித்து விஞ்ஞானத்துக்கு விரோதமான போக்குகளாக ஆளும் வர்க்கம் மதவாத முகமூடியில் ஒளிந்து கொண்டு வெளிப்படுத்துகிறது.
அதே பணியை தான் அனுபவவாத விமர்சகர்கள் என்பவர்கள் மார்க்சியத்தின் உண்மையான நிலைப்பாட்டை ஒருபோதும் உறுதியாக ஏற்றுக் கொள்ளாத இவர்கள். மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையின் மீதும் இயக்கவியல் பொருள் முதல்வாதத்தின் மீதும் சாதாரண விமர்சனங்கள் போல் இல்லாமல் மார்க்சிய முகமூடி தரித்துக்கொண்டே, "மார்க்சியத்தின் அடிப்படைகளை பாதுகாக்கிறோம்" என்று "மார்க்சிய சித்தாந்தத்தின் அடிப்படைகளை ஒழித்து கட்டுவதுதான்" பணியாக கொண்ட இவர்கள் மார்க்சிய விரோதிகள்.
இவர்கள் மார்க்சியத்தை தாங்கள் எதிர்க்கவில்லை என்று கூறிய பொழுதும் மார்க்சிய தத்துவத்தை பலவீனப்படுத்துவதற்காக அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்தார்கள்.
மார்க்சிய தத்துவத்திலிருந்து ஓட்டம் பிடித்த இந்த துரோகிகளுக்கு சரியான சூடு கொடுக்க வேண்டிய அவசியமானது. அவர்களுடைய முகமூடியை கிழித்தெரிய வேண்டிய அவசியமாயிற்று. அவர்களை பரிபூரணமாக அம்பலப்படுத்தி மார்க்சிய தத்துவ அடிப்படையில் பாதுகாக்க வேண்டிய அத்தியாவசியமாயிற்று.
இந்தப் பெரும் பணியை லெனின் புரிந்தார் "பொருள் முதல்வாதமும் அனுபவ வாத விமர்சனம்" என்ற நூலின் மூலமாக.
சிந்தனை நிகழ்ச்சி போக்கின் சிக்கலான தன்மையிலும் முரண்பாட்டிலும் மட்டும் விஷயம் அடங்கி இருக்கவில்லை. கருத்து முதல்வாதம் உயிருடன் இருப்பதற்கான காரணங்கள் சமுதாய சூழ்நிலைகளிலும் அடங்கி உள்ளது. ஆளும் வர்க்கமானது தன் சுரண்டலை மறைக்கவும் தன்னை தக்க வைத்துக் கொள்ளவும் பழமைவாத கருத்துகளை புதுப்பித்தும் மேன்மைப்படுத்தியும் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் கண்ணோட்டத்தை குழப்புகிறது.
நடைமுறை கடமைகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்புகிறது. அதனைப் புரிந்து கொள்ள மதத்தை பற்றியும் சற்று அறிந்து கொள்வோம். கருத்து முதல் வாதம் மதத்துடன் உள்ள உறவு விஞ்ஞான தன்மை அற்றது என்று தெளிவாக புலப்படுகிறது.
ஆதியில் இயற்கையோடு மனிதனுக்கு இருந்த பலவீனத்தின் விளைவே மதம் தோன்றியது. இயற்கை மற்றும் மனித சமூக வளர்ச்சி விதிகளை அறியாமல் இந்த புலப்பாடுகளை விளங்கிக் கொள்வது அரிது. இயற்கையோடு போரிட்ட மானிடன் தன் இயலா நிலைக்கு தன்னில் அப்பாற்பட்ட ஒரு சக்தியை தேடினான், அதி அற்புதமான கற்பனை வடிவங்களை கடவுளுக்கு கொடுத்தான்.
வர்க்க சமுதாயமும் மனிதனை மனிதன் சுரண்டுவது தோன்றியதும் மதம் அதிக உறுதியான ஆதாரத்தை பெற்றது. உழைக்கும் மக்கள் திரளினரின் சமூக ஒடுக்கம் இதற்குத் துணை புரிந்தது. இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளின் மேலும் சர்வ வல்லமை படைத்த கடவுளின் மீதான நம்பிக்கை கடுமையான உழைப்பும் முடிவற்ற வேதனைகளும் நிறைந்து கிடக்கும் ,அடக்கி ஒடுக்கப்பட்டோரின் வாழ்வில் நியாயம் மற்றும் அன்பிற்கான மாயையான ஈடாக மாற்றப்பட்டது.
மதத்தின் இந்தப் பணியை இதயமற்ற உலகின் ஆன்மா என்று காரல் மார்க்ஸ் குறிப்பிட்டார்.
மதக் கருத்துக்களும் எண்ணங்களும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளின் மீதான நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. எனவே இவை மாயவாத அறிவிக்கு பொருந்தாத தன்மையை உடையவனாக உள்ளன.
மதம் சாதாரண மனித உணர்ச்சிகளை நாடுகிறது. அவர்களது மனநிலையின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தான் நிலவிவரும் பல நூற்றாண்டு காலத்தில் மனித உணர்ச்சிகளின் மீதான தாக்கத்தை ஏற்படுத்தவல்ல பயன் மிக்க சாதனங்களின் முழு முறையையே மத ஸ்தாபனங்கள் உருவாக்கியுள்ளன. கலை இலக்கியம் இசை மற்றும் பல்வேறு முறையில் மனிதர்களின் மீது உளவியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
மத வழிபாட்டு முறை என்பது சடங்குகள் பல அடங்கிய ஒரு முறையாகும் இச்சடங்குகள் மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை கூடவே வருகின்றன.வழிப்பாட்டு சடங்குகளின் உதவியால் மதஸ்தாபனங்கள் மத நம்பிக்கைகள் உள்ளோரை தனது செல்வாக்கு வட்டத்திற்குள்ளே வைத்திருக்கிறது.
மத ரீதியான உலக கண்ணோட்டம் என்பது விஞ்ஞானத்திற்கு நேர் எதிரானது இவை கடந்த கால பல்வேறு விஞ்ஞானிகளில் தண்டித்திலிருந்து மத வாதிகள் பகுத்தறிவு பகுத்தறிவை அற்றவர்கள் ஆனால் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் மதவாதிகள் விஞ்ஞானத்தை மறுக்கவில்லை. மனிதனுக்கு இந்த அறிவை கொடுத்ததே கடவுள் தான் என்று நிரூபிக்க அவர்கள் முயன்று கொண்டுள்ளனர்.
மதம் தோன்றியதிலிருந்து இன்று வரை சுரண்டலுக்கு சாதகமாக சுரண்டும் வர்க்க நலனுக்காக பெரும்பான்மை உழைக்கும் மக்களின் உழைப்பை சுரண்டுவதற்கும் கற்பனையான ஒரு சொர்கத்தை காட்டி வருகின்றனர்.
இன்று மதமும் மத ஸ்தாபனங்களும் தம் மீது சமூக சூழ்நிலை தாக்கத்தை உணர்ந்து அதற்கேற்றபடி தன்னை மாற்றிக் கொள்கின்றன.
கருத்து முதல்வாதம் மற்றும் மதத்தின் முக்கிய கோட்பாடுகளுக்கு இடையேயான ஒற்றுமை இவை தமது சாரம்சத்தில் சமூக பாத்திரத்திலும் நெருக்கமானவை என காண்பிக்கிறது.
கருத்து முதல் வாதமும்- மதமும் பொருள்முதல் வாதத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் எதிரானவை ஆகும்.
அப்படிபட்ட ஒரு கோட்பாட்டை வகுத்தளித்த அனுபவவாதம் பற்றி லெனின் முழு நுலை வாசிக்கும் முயற்சி இன்று பக்கம் 102லிருந்து வாசிக்க உள்ளோம்..
No comments:
Post a Comment