அரசும் புரட்சியும் லெனின் நூலினை புரிந்துக் கொள்ள

 இன்றைய வகுபிற்கு

தோழர்களுக்கு வணக்கம். இலக்கு இணைய இதழ் 01 ஜீன் 2022 அன்று தொடங்கினோம். இதுவரை  69  இணைய இதழ்களை வெளியிட்டுள்ளோம். இப்பொழுது இலக்கு 70 இணைய இதழ் வரவுள்ளது. அரசு பற்றிய ஆசான்களின் எழுத்துகளும் நமக்கான புரிதலுக்கான பகுதியே இவை விமர்சனங்கள் வரவேற்க்கிறோம்.

நாம் எதை எதிர்த்துப் போரிடவேண்டும்- நாம் பாட்டாளி வர்க்க சித்தாந்தத்தின் மேம்பாட்டுக்காக- மார்க்சிய லெனினிய மேலாதிக்கத்துக்காக போராடவேண்டும்

எல்லாக் கஷ்டங்களும் நமக்கெதிராகவே உள்ளனஉண்மை மாத்திரம் நம் பக்கத்தில் உள்ளனஇங்கு தான் புரட்சிகர தத்துவத்தில் தேர்ச்சி பெறுவதன் முக்கியத்துவம் புதைந்து கிடக்கின்றதுநாம் மார்க்சிய லெனினியமாகிய தத்துவத்தை கற்று தேற சரியான முறையான அடிப்படை மார்க்சியத்திலிருந்து தொடங்குவோமே தோழர்களே.

பொருள்சிந்தனை இரண்டில் பொருள் முதன்மை வகிப்பதுபோலநடைமுறைதத்துவம் இரண்டில்நடைமுறை முதன்மையானது என்பதில் சந்தேகமே இல்லைஆனால், (சிந்தனை அல்லதுமனம் பொருளின் அதியுயர்ந்த வடிவமாக விளங்கு வதுபோலதத்துவம் கூட நடைமுறையிலிருந்தே எழுகின்றதுஇருந்தும்தத்துவத்தின் சரி தவறைமீண்டும் செழுமைப்படுத்துகின்ற நடைமுறையில் தான் பரீட்சிக்கப்பட முடியும்.

ஆகவேதத்துவமும்நடைமுறையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்படக் கூடாதவைநடைமுறையில் பிரயோகிப்பதற்காகவே நாம் தத்துவத்தைப் படிக்கின்றோம்மாவோ சொன்னது போல, “மார்க்சிய-லெனினியம் என்பது அம்பு போன்றதுஆனால்அது ஒவ்வொரு நாட்டினதும் ஸ்தூலமான புரட்சிகர நடைமுறை என்ற இலக்கை நோக்கி எய்யப்படவேண்டும்நாம் இலக்கின்றிச் சும்மா எய்தால்அம்பு சும்மா பறக்குமேயன்றி இலக்கை அடையாதுஅதே வேளையில்அம்பு இல்லாமல்இலக்கையும் தாக்க முடியாது”.

ஆகவேதத்துவத்தையும் நடைமுறையையும் இயந்திரம் போல பிரித்து வைக்கக் கூடாதுசொந்த நாட்டின் ஸ்தூலமான நடைமுறையைப் படிக்க மறுக்கும் அதேவேளையில்தத்துவத்தின் முக்கியத்துவத்தை யார் மிகைப்படுத்திக் கூறுகிறாரோஅவர் வறட்டுவாதியாவர்யார் (அனுபவத்தில்நடைமுறையில் மாத்திரம் அக்கறை செலுத்தி தத்துவத்தின் முக்கி யத்துவத்தை மறக்கிறாரோஅவர் அனுபவவாதியாவர்.

வறட்டுவாதம்அனுபவவாதம் இரண்டும் தவறானவைநடைமுறை இல்லாத தத்துவம்தத்துவம் இல்லாத நடைமுறை இரண்டும் பயனற்றவைஇரண்டினதும் ஐக்கியம்தான் நமக்கு வேண்டும்.

மார்க்சியம் ஒரு விஞ்ஞானபூர்வமான தத்துவத்தை முன்வைக்கின்றதுஎவ்வாறு முதலாளித்துவம் தோற்றம் பெற்றுவளர்ச்சி அடைந்தது என்பவற்றை நடைமுறை ஆய்வுக்கு உட்படுத்தி தனது முடிவுகளை திடப்படுத்தி நிரூபித்துக் கொண்டதோடு அவற்றை முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமாகப் பிரயோகித்தும் மார்க்சியம் வெற்றி கண்டது.

மார்க்சும்ஏங்கெல்சும் முதலாளித்துவ உற்பத்தி முறைமையில் உற்பத்திச் சக்திகள்உற்பத்தி உறவுகள் பற்றிய துல்லியமான ஆய்வையும் தெளிவான வரையறைகொண்ட முடிவுகளையும் தமக்கேயுரிய மேதாவிலாசத்துடன் அணுகி ஆராய்ந்து அதன் மூலம் முதலாளித்துவம் நடைமுறைப்படுத்தி வரும் கூலி அடிமை முறையின் உள்ளார்ந்த அம்சங்கள் ஒவ்வொன்றையும் அவர்கள் அம்பலத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தினர்.

அன்றைய முதலாளித்துவம் தன்னை வளர்த்து நிலை நிறுத்திக் கொள்வதற்கு உலக நாடுகளை அடிமைப்படுத்தி அந்நாடுகளின் விலை மதிப்பற்ற வளங்கள் அனைத்தையும் சூறையாடிச்சென்றதுகாலனித்துவ அமைப்பை இறுக்கிக்கொண்டதுஇத்தகைய முதலாளித்துவ வளர்ச்சியையும் அதன் ஈவிரக்கமற்ற சுரண்டலையும் மார்க்சியம் நன்கு வெளிச்சமிட்டுக் காட்டியதுடன் நில்லாது அதற்கு எதிராகத் தொழிலாளி வர்க்கமும் அடக்கப்படும் காலனி நாடுகளும் போராட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியது.

மார்க்ஸ் சிந்தனை ஒரு லெனினைச் செயல்வீரனுக்கியதுஒரு மாவோவை புரட்சியாளனாக்கியதுஉலகின் பாதி மக்கள் அவரது கோட்பாடுகளை ஏற்று அவர் வழியிலே புதிய உலகைப் படைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மார்க்ஸ் சமூக விஞ்ஞானிவரலாற்றுப் பொருள் முதல் வாதம் என்ற புதிய கோட்பாட்டை வகுத்த விஞ்ஞானிஅவர் கூறியவற்றை இன்று நடைமுறையில் காண்கிறோம். 175 ஆண்டுகளின் முன் 1848-ல் கம்யூனிஸ்ட் அறிக்கையில் கூறியவற்றை இன்று நடைமுறையில் காண்கிறேம், 30 வயதிலேயே அவரால் எழு தப்பட்ட இச்சிறு அறிக்கை மனித இனத்தின் சமூக வாழ்வுஅதன் இயங்கியல்வர்க்கப் போராட்டம்உலகப் புரட்சிசோசலிச சமுதாயத்தின் அமைப்புஅதைத் தொடர்ந்த கம்யூனிச சமூக அமைப்பு யாவையும் கூறி நிற்கிறது.

 

தேர்தல் நேரத்திலும் தேர்தலுக்கு முன் "Go back Modi" என்று குரல் கொடுத்தோர் குரல் கொடுக்க சொன்னவர் இன்று ஆட்சியில் உள்ளவர் அப்படி பேசினால் தண்டிக்கப் படுவீர் என்பதும்.

இதே கட்சி ஆட்சிக்கு வெளி இருந்த பொழுது விமர்சித்த இந்த போலீஸ் அராஜகம் மற்றும் பல செயல்களை இன்று தன் அதிகாரத்தில் அதை மூடி மறைக்க நீலிக் கண்ணீர் வடிப்பதை நீங்களும் புரிந்துக் கொள்ளாமல் அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதும் ஏன்?

ஒடுக்கும் முதலாளித்துவ வர்க்கங்கள், மாபெரும் புரட்சியாளர்களை அதாவது அவர்களுடைய வாழ்நாளில் ஓயாமல் வேட்டையாடின. அவர்களுடைய கருத்துக்களின் மீது வெறுப்பு கொண்டு கயமைத்தனமான அவதூறு பிரச்சாரங்கள் செய்தார்கள். ஆனால் அவர்கள் மறைந்தபின்பு அவர்களை அபாயமற்ற பூஜையறை படங்களாக்கி அவர்களை வழிபாட்டுக் குரியவர்களாக மாற்றினர். அதன் மூலம் ஒடுக்கப்பட்டமக்களை ஆன்ம திருப்தி செய்து ஏமாற்றினர். அதே நேரத்தில் மார்க்சின்போதனைகளிலுள்ள புரட்சிகர சாரத்தை மூடி மறைத்துவிட்டு, அதனைதிருத்தி முதலாளி வர்க்கத்தாருக்கு சாதகமான முறையில் மாற்றி மக்களிடம் பிரச்சாரம்செய்து மக்களை முதலாளி வர்க்கங்களிடம் அடிமைப் படுத்துவதில் முதலாளிகளும் தொழிலாளி வர்க்க இயக்கத்திலுள்ள சந்தர்ப்பவாதிகளும் ஒன்றுபடுகிறார்கள்.

இவ்வாறு முதலாளித்துவ அறிவாளிகளும் தொழிலாளி வர்க்க இயக்கங்களிலுள்ள சந்தர்ப்பவாதிகளாலும் மிகவும் அதிகமாக மார்க்சியத்தை திருத்தி மக்களை குழப்பத்திற்குள் ஆழ்த்தியமார்க்சிய போதனைகளில் மிகவும் முதன்மையானது அரசு பற்றிய மார்க்சியபோதனையையே ஆகும்.

ஏனெனில் மார்க்சின் போதனைகளிலேயே மிகவும் முதன்மையான, மற்றும் உழைக்கும் மக்களாலும், அதன் முன்னணிகளாலும் உணர்ந்து, புரிந்து கொண்டு செயல்படுத்த வேண்டிய கொள்கை என்பதுஅரசு பற்றிய

மார்க்சியக் கொள்கையாகும். அரசு பற்றிய மார்க்சியகொள்கையில் உழைக்கும் மக்களுக்கும் அதன் முன்னணிகளுக்கும் குழப்பம்இருந்தால் ஆளும் முதலாளி வர்க்கமும், தொழிலாளிவர்க்க இயக்கத்திலுள்ள சந்தர்ப்பவாதிகளும்,மக்களும் அதன் முன்னணிகளும் மார்க்சியத்தின் அடிப்படைகளையே புரியவிடாமல் செய்துவிட முடியும், மேலும் மார்க்சிய சித்தாந்தத்தின் மீதே நம்பிக்கை இழக்கச்செய்ய முடியும். உலக வரலாற்றிலும், இந்திய வரலாற்றிலும் முதலாளித்துவ (ஏகாதிபத்திய) வர்க்கமும், சந்தர்ப்பவாதிகளும் அரசு பற்றிய மார்க்சிய போதனைகளை திருத்தி மக்களிடம் பிரச்சாரம் செய்து மக்களை நம்ப வைத்தார்கள். அதன் மூலம் முதலாளிகள், அவர்களை பாதுகாத்துக்கொண்டு தற்போதுகொடூரமான முறையில் அதாவது பாசிச முறையில்உழைக்கும் மக்களை சுரண்டிக் கொண்டும் ஒடுக்கிக் கொண்டும் இருக்கிறார்கள். இந்த சூழலில் அரசு பற்றிய மார்க்சிய போதனைகளை உழைக்கும் மக்களும் அதன் முன்னணியினரும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

‘’அரசுகுறித்த சந்தர்ப்பவாதத் தப்பெண்ணங்களை எதிர்த்துப் போராடாமல்,  பொதுவில் முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்கிலிருந்தும், குறிப்பாய் ஏகாதிபத்திய முதலாளி வர்க்கத்தின் செல்வாக்கிலிருந்தும் உழைப்பாளி மக்களை விடுவிக்கப் போராடுவது சாத்தியமன்று.’’ என்றார் லெனின்.

ஆகவே அரசு குறித்த சந்தர்ப்பவாதிகள் அதாவது மார்க்சிய போதனையை திருத்தி விளக்கம் கொடுத்து மக்களை ஏமாற்றும் திருத்தல்வாதிகளின் கொள்கைகளை எதிர்த்துப் போராடாமல் மக்களை விடுவிக்க நாம்போராட முடியாது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

‘’அரசின்பால்சோசலிசப் பாட்டாளிவர்க்கப் புரட்சிக்குள்ள போக்கு குறித்த பிரச்சனை நடைமுறை அரசியல் முக்கியத்துவம் மட்டுமின்றி, இன்றைய மிக அவசர அவசியப் பிரச்சனையாகவும் (முதலாளித்துவக்கொடுங் கோன்மையிலிருந்து தம்மைவிடுவித்துக்கொள்ள வெகுஜனங்கள்கூடிய சீக்கிரத்தில் என்ன செய்ய வேண்டியிருக்கும்என்பதை அவர்களுக்குவிளக்கிச் சொல்லும் பிரச்சனையாகவும்) முக்கியத்துவம் பெற்று வருகிறது’’என்றார் லெனின்.

அரசுக்கும் பாட்டாளி வர்க்கம் தன்னை விடுவித்துக் கொள்வதற்கான போராட்டங்களுக்கும் இடையிலான உறவை உழைக்கும் வர்க்கம் மற்றும் அதன் முன்னணிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்பது நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் முதலாளித்துவ கொடுங்கோன்மை  குறிப்பாக இன்றைய பாசிஸ்டுகளின் கொடுங்கோன்மை நிலவுகின்ற சூழலில்உழைக்கும் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும்என்பதை வழிகாட்டுவதற்கு அரசு பற்றிய மார்க்சிய கொள்கைகளை புரிந்துகொள்ள வேண்டியது மிகமிகஅவசியமாகும்.

‘’மார்க்சியத்தைதிரித்துப் புரட்டுவது என்றுமில்லாத அளவுக்கு மலிந்திருக்கும் ஒரு சூழலில், மெய்யாகவே மார்க்ஸ் அரசு எனும் பொருள்குறித்து என்ன போதித்தார் என்பதைத் திரும்பவும் நிலைநாட்டுவது நமது கடமையாகும்.

இதற்கு மார்க்ஸ், எங்கெல்ஸ் நூல்களிலிருந்து நீண்ட மேற்கோள்களை தருவது இன்றியமையாதது’’என்றார் லெனின்.

லெனின் காலத்திலேயே மார்க்சியத்தை திருத்தி மக்களை ஏமாற்றும் திருத்தல்வாதக் கூட்டத்தை எதிர்த்துப் போராட வேண்டிய சூழலில் தற்போது மார்க்சியத்தை திருத்துவதோடு மட்டுமல்லாமல் மார்க்சியத்தோடு ஏகாதிபத்திய சீர்திருத்தவாத கொள்கைகளையும் கலந்துகொள்ள வேண்டும்என்ற கலைப்புவாதம், அடையாள அரசியல் போன்ற மார்க்சியத்திற்கு எதிரான கொள்கைகளும் தொழிலாளி வர்க்க இயக்கத்திற்குள் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சூழலில், லெனின் சொன்னது போல மெய்யாகவே அரசு பற்றி மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின்போன்றவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை உழைக்கும் வர்க்கமுன்னணிகள் கற்றுத் தேர்வது எவ்வளவு அவசியம் என்பதைநாம் புரிந்துகொள்ள வேண்டும்,

மேலும் அது நமது கடமையாகும்.

லெனின் காலத்தில் திருத்தல்வாதியான காவுத்ஸ்கியின் மார்க்சியத்தை திருத்திய வாதங்களை முறியடிப்பதன் மூலம் லெனின் அரசு பற்றிய மார்க்சின் போதனைகளை மட்டுமல்லாது மார்க்சியத்தை பாதுகாத்தார்.

எனினும் இன்றைய காலத்திலும் காவுத்ஸ்கி போன்ற திருத்தல்வாதிகள் மட்டுமல்ல ஏராளமான திருத்தல்வாதிகள் அரசுபற்றிய மார்க்சிய கோட்பாடுகளை திருத்தியும் மார்க்சியத்திற்கு நேர் எதிரான கொள்கைகளையும் மக்களிடம் பரப்பி வருகிறார்கள். அவர்களைமுறியடிக்க அரசு பற்றிய மார்க்சிய கோட்பாடுகளை படித்து உள்வாங்கி முன்னணிகளை வளர்த்திடுவோம்.

அரசின் தோற்றத்தைப் பற்றி குடும்பம், தனிச்சொத்து, அரசின் தோற்றம் என்ற நூலில் எங்கெல்ஸ் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார். அதாவது ‘’அரசானது எவ்வகையிலும் வெளியிலிருந்து சமுதாயத்தின் மீது வலுக்கட்டாயமாய் இருத்தப்பட்ட சக்தியல்ல; இதேபோல அது எவ்வகையிலும் ஹெகல் வலியுறுத்தும் அறநெறி கருத்தின் எதார்த்தஉருவோ, ‘அறிவின் பிம்பமும் எதார்த்தமோ அல்ல. மாறாக சமுதாயத்தின் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தின் விளைவே அரசு. இந்தசமுதாதாயம் தன்னுடனான தீராத முரண்பாட்டில் சிக்கிக்கொண்டு விட்டது, இணக்கம் காணமுடியாத பகை சக்திகளாய்ப் பிளவுண்டுவிட்டது, இந்த பகைமை நிலையை அகற்றத் திறனற்றதாகி விட்டதை ஒப்புக்கொள்வதன் விளைவே அரசு. ஆனால் இந்தப் பகை சக்திகள் முரண்பட்டு மோதிக்கொள்ளும் பொருளாதார நலன்களைக்கொண்ட இந்த வர்க்கங்கள், தம்மையும் சமுதாயத்தையும் பயனற்ற போராட்டத்தில் அழித்துக் கொண்டு விடாமல் தடுக்கும் பொருட்டு, மோதலை தணித்து ஒழுங்கின் வரம்பிற்குள் இருத்தக் கூடிய ஒரு சக்தியை வெளிப்பார்வைக்கு சமுதாயத்திற்கு மேலானதாய்த் தோன்றும் ஒரு சக்தியைநிறுவுவது அவசியமாயிற்று. சமுதாயத்திலிருந்து உதித்ததனாலும்சமுதாயத்திற்கு மேலானதாய்த் தன்னை அமர்த்திக்கொண்டு மேலும் மேலும் தன்னை அதற்கு அயலானாக்கிக் கொள்ளும்இந்தச் சக்தியே அரசு எனப்படுவதாகும்’’என்றார் எங்கெல்ஸ்.

இதன் மூலம் அரசானது சமுதாயத்திற்கு அப்பால் வெளியிலிருந்து உருவானது அல்ல. அதாவது கடவுளால்உருவாக்கப்பட்டதோ, அல்லதுபுனிதமானதோ அல்ல என்பது மார்க்சியம். ஆனால் முதலாளிகளும் சீர்திருத்தவாதிகளும் திருத்தல்வாதிகளும் அரசை புனிதமானது என்றே சித்தரிக்கின்றனர். சமுதாயத்தின் குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில், வர்க்கங்கள் தோன்றி முரண்பாடுகள் தோன்றி பகைத்தன்மை வளர்ந்து,இந்தப் பகையை தீர்க்க முடியாதநிலை ஏற்பட்டபோதுதான் அரசு தோன்றியது. இந்த வர்க்க பகைமையானது பயனற்ற போராட்டங்களில் ஈடுபட்டு சமுதாயமே அழிந்துவிடாமல் பாதுகாப்பிற்கான ஒழுங்கைஏற்படுத்துவதற்காகவேஅரசு அவசியம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி அரசானது சமூகத்திற்கு மேலானது என்றும் அதற்குகட்டுப்பட வேண்டியது அவசியம் என்ற கருத்தை விதைத்துஉருவாக்கப்பட்டதுதான் இந்த அரசாகும்.

மேலும் சமூகத்திற்கு மேலானதாக நிறுவிக்கொண்ட அரசானது மேலும் மேலும் மக்களிடமிருந்து அன்னியப்பட்டு மக்களுக்கு எதிரான பகை சக்தியாகவே அரசு மாறிவிட்டது. இந்தஉண்மையை மூடிமறைத்துவிட்டு அரசை மக்களின் நண்பனாகவும், மக்களுக்காக பாடுபடும் நிறுவனமாகவும் அதிலுள்ள சிலர் தவறு செய்வதால்அரசே தவறானது என்று கருதக்கூடாது என்று முதலாளித்துவவாதிகளும் சீர்திருத்த திருத்தல்வாதிகளும் கருதுகிறார்கள்.

‘’வர்க்கப்பகைமைகள் இணக்கம் காண முடியாதவை ஆனதன் விளைவும் வெளியீடுமே அரசு’’இதுதான் அரசு பற்றிய மிகத்தெளிவான மார்க்சிய கோட்பாடாகும். எங்கே, எப்பொழுது எந்தளவுக்குவர்க்கப் பகைமைகள் புறநிலைக் காரணங்களால் இணக்கம்காண முடியாதவை ஆகின்றனவோ, அங்கே அப்பொழுது, அந்தளவுக்கு அரசு உதித்தெழுகிறது. எதிர்மறையில் கூறுமிடத்து, அரசு ஒன்று இருப்பதானதுவர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதனவாய் இருத்தலை நிருபிக்கிறது என்பது மார்க்சியம் ஆகும்.

இதிலிருந்து நாம் வந்தடையும் முடிவுஎன்ன? அரசு ஒன்று இருந்தால்அங்கே வர்க்கங்கள் இருக்கிறது மேலும் அங்கே வர்க்கப்பகைமைகள் நிலவுகின்றது என்பது பொருளாகும். அதே போலவே வர்க்கங்களும் வர்க்கப் பகைமைகளும் நிலவும் சமூகத்தில் அரசுஎன்ற ஒரு நிறுவனம் கட்டாயம் இருக்கும். இந்த கோட்பாட்டிலிருந்துதான் சோசலிச சமூகமாக இருந்தாலும் அங்கே தொழிலாளர்களின் அரசு இருக்கும் அதேநிலையில் சோசலிசசமூகத்திலும் வர்க்கங்களும் வர்க்க பகைமைகளும் இருக்கும் என்று மார்க்சியம் வரையறுத்தது. அவ்வாறு சோசலிச சமூகத்தில் முதலாளி வர்க்கங்களின் அதிகாரம் ஒழிக்கப்பட்டிருந்தாலும், முதலாளித்துவ வர்க்கங்கள் முழுவதுமாக ஒழிக்கப்பட்டிருக்காத நிலையில், வர்க்கங்களும் வர்க்கப் போராட்டங்களும் நீடிக்கும் நிலையில் முதலாளித்துவ வர்க்கங்களை முற்றிலும் ஒழிக்கும் வரை பாட்டாளி வர்க்கத்திற்குஅரசியல் அதிகாரம்வேண்டும் என்கிறது மார்க்சியம்.

மார்க்சியம் கூறும் இந்த உண்மையை திருத்தி,  புரட்டிடும்  முதலாளித்துவவாதிகளும், சீர்திருத்த   திருத்தல்வாதிகளும் இரண்டுவகையாக  மார்க்சியத்தை திருத்துகிறார்கள்.

எங்கே வர்க்கப் பகைமைகளும் வர்க்கப் போராட்டங்களும் உள்ளனவோ அங்கே மட்டும் அரசு இருக்கிறதுஎன்ற புறநிலை உண்மையை மறுக்க முடியாமல் ஏற்றுக்கொள்கிறார்கள். எனினும் இந்த வர்க்கப்பகைமைகளுக்கு இணக்கம் காண்பதற்காகவே அரசு உருவாகிறது என்றும்அரசானது பகைவர்க்கங்களுக்கு இடையே இணக்கம் காண்பதற்கானநிறுவனம்தான் அரசு என்று வாதிடுகிறார்கள். ஆனால் பகை வர்க்கங்களுக்கு இடையே இணக்கம்காண முடிந்திருந்தால் அரசு என்பதே தோன்றுவதற்குஅவசியமில்லை என்பதுதான் மார்க்சின் கருத்தாகும்.

அதாவது வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாததன்விளைவே அரசு என்பதுதான் மார்க்சின் கருத்தாகும். இந்த கருத்தைத்தான் திருத்தல்வாதிகள் இணக்கம்காணமுடியாத வர்க்கப் பகையையை இணக்கம்காணச் செய்ய முடியும் என்று திருத்துகிறார்கள். இதன் மூலம் வர்க்கப்பகைமைகள் இணக்காணமுடியாதவை என்ற உண்மையை மூடிமறைத்து இந்த அரசானது வர்க்கப்பகைமையை ஒழித்துவிடும் என்று பொய்ப் பிரச்சாரம்செய்கிறார்கள்.

மார்க்சின் கருத்துப்படி ‘’வர்க்க ஆதிக்கத்திற்கான ஓர்உறுப்பே, ஒரு வர்க்கம்பிற வர்க்கங்களை ஒடுக்குவதற்கான உறுப்பே அரசு’’ என்ற புகழ்பெற்றமார்க்சிய கோட்பாட்டை இவர்கள் மறுக்கிறார்கள்.

வர்க்கங்களுக்கு இடையிலான மோதலை மட்டுப்படுத்தி அதன்வாயிலாக இந்த ஒடுக்குமுறையைச் சட்டமாக்கி, நிரந்தரமாக்கிடும் ‘ஒழுங்கை நிறுவதுவே அரசாகும் என்கிறது மார்க்சியம். இதற்கு மாறாக குட்டி முதலாளித்துவவாதிகள் இந்த ஒழுங்கைவர்க்கங்களை ஒடுக்குவதற்கான ஒழுங்கு என்று பார்ப்பதற்கு எதிராக வர்கங்களுக்கு இடையில் இணக்கம் உண்டாவதற்கான ஒழுங்கு என்று பார்க்கிறார்கள். மோதலை மட்டுப்படுத்துவது என்றால் ஒடுக்கும் முதலாளிகளின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான குறிப்பிட்ட மக்களின் போராட்ட சாதனங்களையும் முறைகளையும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களிடமிருந்து பறிப்பதல்ல, மாறாகவர்க்கங்களுக்கு இடையே இணக்காண்பதற்காக மோதலை மட்டுப் படுத்துவதுதான் என்று குட்டி முதலாளித்துவ வாதிகள் வாதிடுகிறார்கள். இதன் மூலம் முதலாளித்துவ அரசானது, உழைக்கும் மக்கள் முதலாளித்துவ அரசை எதிர்த்துப் போராடும்போது அந்த போராட்டங்களை ஒடுக்குவதற்காக தனது வன்முறை கருவிகளான போலீசையும்இராணுவத்தையும்ஏவிவிடுகின்ற எதார்த்த உண்மையை மூடி மறைக்கிறார்கள்.

முதலாளி வர்க்கத்திற்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் இடையில் இணக்கம் காணமுடியாத பகைத்தன்மை உருவாகிவிட்டதால்முதலாளி வர்க்கத்தின் அரசானது தொழிலாளி வர்க்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் அரசாக இருக்கிறது என்ற உண்மையை குட்டி முதலாளித்துவவாதிகளால் புரிந்து கொள்ள முடியவில்லை.‘’மறுபுறத்தில், மார்க்சியத்தைப் பற்றிய காவுத்ஸ்கிவாதப் புரட்டு இன்னும் நுண்ணியம் வாய்ந்தது. அரசானது வர்க்க ஆதிக்கத்திற்கான ஓர் உறுப்பு என்பதையோ, வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவை என்பதையோ தத்துவார்த்தத்தில் இப்புரட்டு மறுப்பதில்லை. ஆனால் அதுபாராமுகமாய் அது விட்டொழிப்பது அல்லது பூசிமெழுகிச் செல்வது இதுதான்: வர்க்கப் பகைமைகள் இணக்கம் காணமுடியாதவை ஆகியதன்விளைவேஅரசு என்றால், அது சமுதாயத்துக்கு மேலானதாய்நின்று மேலும் மேலும் தன்னை அதற்கு அயலானாக்கிக் கொள்ளும்சக்தி ஆகும்என்றால்,ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் விடுதலை பலாத்காரப் புரட்சியின்றி சாத்தியம் இல்லை என்பதோடு, ஆளும் வர்க்கத்தால் தோற்றுவிக்கப்பட்டதும் அயலானாய் இருக்கும்இந்தநிலையின்  உருவகமானதுமான அரசு அதிகார இயந்திரத்தை அழித்திடாமலும்  இந்த விடுதலை சாத்தியமில்லை என்பது தெளிவு.’’ (லெனின்- அரசும் புரட்சியும்)

இங்கே மார்க்சியம் அரசு பற்றிய சொன்னகருத்துக்களை எல்லாம் காவுத்ஸ்கி ஏற்றுக்கொள்கிறார். அதிலிருந்து இந்த அரசை பலாத்கார முறையில் ஒரேயடியாக ஒழித்துவிட வேண்டும் என்ற மார்க்சியத்திற்கு எதிரான தவறான இடதுசாரி முடிவிற்குவருகிறார். இந்த கருத்திற்கு மாறாக அரசை ஒரேயடியாக ஒழிக்க முடியாது என்றும், தற்போது நிலவும்முதலாளித்துவ அரசிற்கு முடிவுகட்டிவிட்டு, பாட்டாளிவர்கத்திற்கான இடைக்கால அரசை உருவாக்கி சமூகத்தைவர்க்கமற்ற சமூகமாகமாற்றியமைக்கும் போக்கில் அரசானது உலர்ந்து உதிரும்என்ற கருத்தை மார்க்சியம் முன்வைக்கிறது. அதுபற்றி தொடர்ந்து விரிவாகப் பார்ப்போம்.

இறுதியாக நாம் மனதில் பதிவுசெய்துகொள்ள வேண்டிய அரசு பற்றிய

குறிப்புகள்.

1. அரசு என்பதை சமூகத்திற்கு வெளியிலுள்ள சக்தி (கடவுள்) உருவாக்கவில்லை.

2. அரசு என்பது புனிதமானதும் அல்ல.

3.சமூகத்திலிருந்து உருவாகி சமூகத்திற்கு மேலானதாக அரசு தன்னை காட்டிக்கொள்கிறது.

4. அரசு பற்றிய மார்க்சிய போதனைகளை மறைத்துவிட்டு அதன் புரட்சிகரத் தன்மையை நீக்கிவிட்டு முதலாளித்துவ்வாதிகளும் சீர்திருத்தவாத திருத்தல்வாதிகளும் நம்மை ஏமாற்றுகிறார்கள்.

5. சந்தர்ப்பவாதிகளால் குழப்பப்பட்ட மார்க்சிய போதனைகளில் முதன்மையானது அரசு பற்றிய மார்க்சியபோதனையே ஆகும்.

6. அரசு பற்றிய மார்க்சிய போதனைகளைநாம் புரிந்து கொள்ளவில்லை என்றால் நம்மால் மார்க்சியத்தின் அடிப்படைகளையே நம்மால் புரிந்துகொள்ள முடியாது. அதாவது மார்க்சின் போதனை களிலேயே முதன்மையானது அரசு பற்றிய அவரதுபோதனைகளே ஆகும்.

7. தற்போது இந்திய பெருமுதலாளிகளும் அந்நியகார்ப்பரேட்டு முதலாளிகளும் உழைக்கும் மக்களை சுரண்டிக்கொண்டும் கொடூரமாகபாசிச முறையில் ஒடுக்கிக் கொண்டிருப்பதற்கும் அடிப்படை இந்த அரசுதான் என்பதை நடைமுறையிலிருந்து புரிந்துகொள்ளவேண்டும்.

8. அரசு பற்றிய சந்தர்ப்பவாத தப்பெண்ணங்களை எதிர்த்துப் போராடாமல் உழைக்கும் வர்க்கத்திற்கு விடுதலை இல்லை.

9. உழைக்கும் மக்கள் தங்களுக்கான வளமானவாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமானால், அதற்கு மக்கள் என்னசெய்யவேண்டும் என்று தீர்மானிப்பதற்கு அரசுபற்றிய மார்க்சின் போதனைகளை எவ்விதமான திருத்தமுமின்றி தெளிவாகப்புரிந்து கொள்ள வேண்டும்.

10. அரசு பற்றிய மார்க்சிய கோட்பாட்டை என்றுமில்லாத அளவு திருத்திக் கொண்டிருக்கும் சூழலில் அரசு பற்றி மார்க்ஸ்உண்மையிலேயே என்ன போதித்தார் என்பதைநாம் தெரிந்துகொள்ளவேண்டியது நமது கடமையாகும்.

11. மார்க்ஸ், லெனின் காலத்திலேயே காவுத்ஸ்கிபோன்றவர்களின் திருத்தல்வாதக் கருத்துக்கள் முறியடிக்கப்பட்டது. எனினும்தற்காலத்திலும் காவுத்ஸ்கி போன்றவர்களின் திருத்தல்வாதக் கருத்துக்களை புதிய வடிவத்தில் சிலர்கொண்டுவந்து உழைக்கும்வர்க்க முன்னணிகளிடம் குழப்பத்தை ஏற்படுத்த முயலுகிறார்கள். அந்ததிருத்தல்வாதிகளை முறியடிக்க நாம் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் போன்றவர்களின் கருத்துக்களை ஆழ்ந்து படிக்க வேண்டும்.

12. வர்க்கப் பகைமைகள் இணக்கம்காண முடியாததன் விளைவே அரசு ஆகும்.

13. வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாததால்ஆளும் வர்க்கமானது உழைக்கும் வர்க்கத்தை ஒடுக்குவதை தவிர வேறுவழியில்லாத்தால் உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்காக அரசைஉருவாக்கியது.

14. வர்க்கங்களுக்கு இடையில் மோதலை மட்டுப்படுத்துவதற்காகவே அரசு பாடுபடுகிறது என்ற பொய்யைச் சொல்லி, உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்கான சட்டங்களைப் போட்டு ஒடுக்குவதுதான் அரசின் வேலையாகும்.

15. வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாததால்உருவான அரசால்ஒருபோதும் வர்க்கங்களுக்கு இடையிலான பகையை ஒழித்து வர்க்கங்களுக்கு இடையில் சமாதானத்தை கொண்டுவரமுடியாது.

16. வர்க்கங்களுக்குஇடையில் பகையை ஒழித்து சமாதானத்தைகொண்டுவர முடியும் என்ற கருத்தானது அரசுபற்றிய மார்க்சியபோதனையை திருத்திய சந்தர்ப்பவாத திருத்தல்வாதிகளின் கருத்தாகும் ..

1). https://namaduillakku.blogspot.com/2022/07/blog-post_28.html

 

எங்கெல்ஸ் தமது உரையின் தொடக்கத்திலேயே, பாட்டாளிவர்க்கம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் அது "அரசு அரசாய் இருத்தலை ஒழித்திடுகிறது"என்கிறார். இதன் பொருள் குறித்துசிந்திப்பது அவசியமெனக் கருதப்படுவ தில்லை. பொதுவாக இது சிறிதும் கவனியாது விடப்படுகிறது, அல்லது எங்கெல்சிடமிருந்த ஒருவகை "ஹெகலியப் பலவீனத்தின்" பாற்பட்டதாக இது கருதப்படுகிறது. ஆனால் உண்மை என்னவெனில், இச்சொற்கள் மாபெரும் பாட்டாளிவர்க்கப் புரட்சிகளில் ஒன்றான 1871ஆம் ஆண்டின் பாரீஸ்கம்யூனது அனுபவத்தைச் சுருக்கமாக எடுத்துரைக் கின்றன. இதுகுறித்து உரிய இடத்தில் நாம் விவரமாகப் பேசுவோம். உண்மை என்னவெனில், எங்கெல்ஸ் இங்கு பாட்டாளி வர்க்கப் புரட்சி முதலாளித்துவ அரசை "ஒழித்திடுவது" குறித்துப் பேசுகிறார். "அரசு உலர்ந்து உதிர்வது" பற்றிய சொற்கள் சோசலிசப் புரட்சிக்குப் பிற்பாடு பாட்டாளி வர்க்க அரசின் மிச்சங்களைக் குறிப்பன வாகும். எங்கெல்சின் கருத்துப்படி முதலாளித்துவ அரசு "உலர்ந்து உதிர்வதில்லை"புரட்சியின் மூலம் பாட்டாளி வர்க்கத்தால்"ஒழிக்கப்படுகிறது" இந்தப் புரட்சிக்குப் பிறகு உலர்ந்து உதிர்வது பாட்டாளிவர்க்க அரசு அல்லது அரை-அரசே ஆகும்.

இங்கே இரண்டுவகையான அரசுகளைப் பற்றி எங்கெல்ஸ் பேசுகிறார். ஒன்று சுரண்டும் வர்க்கத்திற்கான அரசு. அதாவது முதலாளித்துவ அரசு. இது சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட அரசாகும். இந்த அரசு உலர்ந்து உதிராது. மாறாக இந்த அரசை பாட்டாளிவர்க்கம் போராடி ஒழிக்க வேண்டும் என்கிறார். இவ்வாறு ஒழிக்கப்பட்ட அரசுக்குப் பதிலாக உருவாகும் அரசானது தொழிலாளர் வர்க்க அரசாகும். இந்த அரசில் முதலாளித்துவ சுரண்டல்கள் ஒழிக்கப்படும். இந்த அரசுதான் உலர்ந்து உதிரும் அரசாகும் என்று இந்த இரண்டு அரசுகளுக்கு இடையிலான வேறுபாட்டை எங்கெல்ஸ் விளக்கியுள்ளார்.

இரண்டாவதாக, அரசு என்பது "தனிவகைப் பட்ட பலவந்த சக்தி ஆகும்" தேர்ந்த தெளிவுடன் இங்கு எங்கெல்ஸ் இந்த அற்புதமான, ஆழ்ந்த பொருட்செறிவுள்ள இலக்கணத்தை வகுத்தளிக்கிறார். இதிலிருந்து பெறப்படுவது என்னவெனில், பாட்டாளி வர்க்கத்தை முதலாளித்துவ வர்க்கம் அடக்குவதற்காக, கோடானகோடி உழைப்பாளி மக்களை ஒருசில செல்வந்தர்கள் ஒடுக்குவதற்காக அமைந்த "தனிவகைப்பட்ட பலவந்த சக்திக்குப்"பதிலாக, முதலாளித்துவ வர்க்கத்தைப் பாட்டாளிகள் அடக்குவதற்கான "தனிவகைப்பட்ட பலவந்த சக்தியை" (பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை) அமைத்தாக வேண்டும். "அரசு அரசாய் இருத்தலை ஒழித்திடுவது"என்பதன் அர்த்தம் இதுவே ஆகும்.பொருளுற்பத்திச் சாதனங்களைச் சமுதாயத்தின் உடமையாக்கிக்கொள்ளும் "செயல்" இதுவேதான். ஒரு(முதலாளித்துவ) "தனிவகை சக்திக்குப்" பதிலாய் மற்றொரு (பாட்டாளி வர்க்க) "தனிவகை சக்தியை" இத்தகைய முறையில் அமைத்திடுவது "உலர்ந்து உதிரும்" வடிவில் நடைபெறுவது சாத்தியமில்லை. என்பது கூறாமலேயே விளங்கக் கூடியதாகும்.

"அரசு அரசாய் இருப்பதை ஒழிக்க வேண்டும்" என்று எங்கெல்ஸ் சொல்வதன் பொருள் என்ன?

உழைக்கும் மக்களை ஒருசில செல்வந்தர்கள் அடக்கி ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்டபலவந்தமான சக்தியாகிய முதலாளித்துவ அரசுக்குப் பதிலாக கோடானுகோடி உழைக்கும் மக்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய செல்வந்தர் களை ஒடுக்குவதற்கான பலவந்தமான சக்தியை (பாட்டாளிவர்க்க அரசை) உருவாக்க வேண்டும் என்கிறார் எங்கெல்ஸ். அத்தகைய பலவந்தமான சக்தியான பாட்டாளி வர்க்க அரசுதான் "அரசு அரசாய் இருப்பதை ஒழிப்பதற்கான அரசு" என்று எங்கெல்ஸ் விளக்குகிறார். பொருளுற் பத்திச் சாதனங்களை சமுதாயத்தின் உடமையாக இந்த அரசு மாற்றுகிறது. அதன் காரணமாகவே இந்த அரசு உலர்ந்து உதிரும் அரசாக இருக்கிறது. இதற்கு மாற்றாக முதலாளித்துவ அரசில் பொருளுற்பத்திச் சாதனங்கள் சமுதாயத்தின் உடமையாக இருப்பதில்லை, மாறாக தனிப்பட்ட முதலாளிகளின் உடமையாக இருக்கின்ற காரணத்தால் இந்த முதலாளித்துவ அரசானது உலர்ந்து உதிராது, மாறாக இது ஒழிக்கப்பட வேண்டிய அரசாகவே இருக்கிறது என்பதை எங்கெல்ஸ் விளக்கியுள்ளார்.

மூன்றாவதாக, அரசு "உலர்ந்து உலர்வது" பற்றியும், இன்னும்கூட பளிச்சென விளங்கும் வண்ணம் கவர்ச்சிகரமாக அமைந்த "தானாகவே தணிந்து அணைந்து விடுவது" பற்றியும் பேசுகையில் எங்கெல்ஸ் "பொருளுற்பத்திச் சாதனங்களைச் சமுதாயம் அனைத்தின் உடமையாக்கிக் கொண்டதற்கு"பிற்பட்டக் காலத்தையே, அதாவது சோசலிசப் புரட்சிக்குப் பிற்பட்ட காலத்தையே மிகத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் குறிப்பிடுகிறார். இக்காலத்தில்"அரசின்"அரசியல் வடிவம் முழு அளவிலான முழு நிறைவான ஜனநாயகமாகும் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். ஆகவே எங்கெல்ஸ் இங்குஜனநாயகம் "தானாகவே தணிந்து அணைந்து விடுவது" அல்லது "உலர்ந்து உதிர்ந்து விடுவது" பற்றிப் பேசுகிறார்; வெட்க்கங்கெட்ட முறையில் மார்க்சியத்தைத் திரித்துப் புரட்டும் சந்தர்ப்பவாதிகள் யாருடைய மண்டையிலும் இது நுழைவதே இல்லை. முதல் பார்வைக்கு இது மிக்க வினோதமாகவேதோன்றுகிறது. ஆனால் ஜனநாயகம் என்பதும் ஓர் அரசே ஆகும், ஆதலால் அரசு மறையும்போது அதுவும் மறைந்தே ஆகவேண்டும் என்பது பற்றி ஆலோசிக்காதவர்களுக்குத்தான் இது "புரியாததாக" இருக்கும். புரட்சியால் மட்டுமேமுதலாளித்துவ அரசை" ஒழிக்க முடியும்". பொதுவாக அரசு எனப்படுவது, அதாவது முழுஅளவிலான, முழு நிறைவான ஜனநாயகம் எனப்படுவது "உலர்ந்து உதிரவே" முடியும்.

நெருப்பு தானாக எரிவதற்கான சூழலை ஒழித்துவிட்டால், நெருப்பானது தானாக தணிந்து அணைந்துவிடும் அல்லவா. அதுபோலவே அரசு அரசாக நீடிப்பதற்கு காரணமான முதலாளித்துவ சுரண்டலை ஒழித்துவிட்டால், எவர் ஒருவரும் பிறரை சுரண்டி வாழ முடியாத ஒரு சூழலை ஏற்படுத்திவிட்டால், ஒருவர் பிறரை சுரண்டித்தான் வாழ வேண்டும் என்ற நிலையை ஒழித்துவிட்டால், எவர் ஒருவரும் பிறரிடம் கூலி அடிமையாக இருந்துதான் வாழவேண்டும் என்ற சூழலை ஒழித்துவிட்டால், எவர் ஒருவரையும் அடக்கி ஆள வேண்டும் என்ற நிலை சமூகத்தில் ஒழிந்துவிடும். அப்போது பிறரை ஒடுக்கி ஆள்வதற்கான கருவியான அரசு என்பது சமூகத்திற்கு தேவையில்லாமல் போய்விடும். அரசானது அதன் தன்மையை இழந்துஇல்லாமல் போய்விடும் என்கிறார் எங்கெல்ஸ்.

2). https://namaduillakku.blogspot.com/2023/01/blog-post_41.html

காவுட்ஸ்கியை விமர்சனம் செய்த லெனின் "பாட்டாளி வர்க்கம் ஏகாதிபத்திய முதலாளிகளை புரட்சிகரமான முறையில் தூக்கி எறிய போராடி வருகிறது ஆனால் கவுட்ஸ்கியோ ஏகாதிபத்தியத்துக்கு அடி பணிந்து கொண்டு அதை சீர்திருத்த முறையில் முன்னேற்றவும் அதற்கு ஒத்துப் போகவும் போராடுகிறார் ( லெனின் தேர்வு நூல்கள் தொகுதி 2 பக்கம் 95 ).

 

உழைக்கும் வர்க்கத்தையும் பறந்து பட்ட மக்களையும் புரட்சியில் வழிநடத்திச் செல்வதற்கு பாட்டாளி வர்க்க கட்சி போராட்டத்தின் அனைத்து வடிவங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும் வேறுபட்ட வடிவங் களை ஒன்றிணைக்கவும் போராட்டத்தின் நிலைமையில் மாறுவதற்கு ஏற்ப ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு விரைவாக மாற்றிக் கொள்ளவும் தெரிந்திருக்க வேண்டும். அமைதியான மற்றும் ஆயுதம் தாங்கிய பகிரங்கமான மற்றும் ரகசியமான சட்டப்படியான மற்றும் சட்ட விரோதமான பாராளுமன்றமுறையிலான மற்றும் மக்கள் திரள் போராட்டமாக உள்நாட்டு மற்றும் சர்வதேச போராட்டமாக இவ்வாறு எல்லாவிதமான போராட்ட வடிவங்களிலும் தேர்ச்சி பெற்று இருந்தால் தான் அது எந்த சூழ்நிலையிலும் வெல்லப் பட முடியாத இருக்கும் என்று மார்க்சிய லெனினிய வாதிகளாய் நாம் எப்போதும் கூறுகிறோம்.

 

குறிப்பான தனித்தன்மைகளுக்கு ஏற்ப போராட்டத்தில் அனைத்து வடிவங்களிலும் முழுமையாகவும் திறமையாகவும் தேர்ச்சி பெற்றிருப்பதன் விளைவாக புரட்சி வெற்றியடைய முடியும்.

 

லெனின் தனது விமர்சனத்தை சரியாகவே சுட்டிக்காட்டிய படி காவுட்ஸ்கி போன்ற திருத்தல்வாதிகள் முதலாளித்துவ சட்டவாதத்தால் இழிவுக்கும் அவமதிப்பும் உள்ளாக்கப்பட்டார்கள் தற்போதைய போலீஸ் சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு மொந்தை கூழுக்கு பாட்டாளி வர்க்கத்தின் புரட்சி செய்யும் உரிமை விற்கப்பட்டு விட்டது ( லெனின் இரண்டாம் அகிலத்தின் தகர்வு தொகுதி 18 பக்கம் 314 ).

 

திரிப்புவாதிகள் பல்வேறு போராட்ட வடிவங்கள் குறித்து பேசினாலும் உண்மையில் அவர்கள் போராட்ட வடிவத்தை மாற்றுவது என்ற பெயரில் சட்டவாதத்தில் ஊன்றி நின்று பாட்டாளி வர்க்க புரட்சியின் குறிக்கோளையே கைவிட்டுவிடுகிறார்கள் இன்று லெனினியதிற்கு பதிலாக காவுட்ஸ்கியத்தை பின்பற்றுவது தான் இது காட்டுகிறது.

3). https://namaduillakku.blogspot.com/2023/01/blog-post_33.html

லெனின் மேலும் சொல்லுகிறார் "ஒவ்வொரு ஜனநாயக கோரிக்கையும் வர்க்க உணர்வு பெற்ற தொழிலாளர்களை பொறுத்த வரையில் சோசலிசத்தின் மிக உயர்ந்த நலன்களுக்கு கீழ்ப்பட்டதே" மேலும் அரசும் புரட்சி என்ற நூலில் ஏங்கெல்சை மேற்கோள் காட்டி எழுதுகிறார்,"அன்றாட தற்காலிக நலன்களுக்கான மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த நிலைப்பாட்டை மறந்து விடுவதும் பின் விளைவுகளைப் பற்றி ஆராய்ந்து பார்க்காமல் அப்போதைய வெற்றிக்காக முயற்சிப்பதும் போராடுவதும் நிகழ்காலத் திற்காக இயக்கத்தின் எதிர்காலத்தை தியாகம் செய்வதும் சந்தர்ப்பவாதம் ஆகும் அதுவும் அபயகரமான சந்தர்ப்பவாதமாகும்". "குறிப்பாக இந்த அடிப்படையில் தான் சீர்திருத்தத்தை புகழ்வது ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு அடிபணிவது புரட்சியை பலிகொடுப்பது , கைவிடுவது ஆகியவற்றிர் காக காவுட்ஸ்கியை விமர்சனம் செய்தார் லெனின்". (லெனின் பாட்டாளி வர்க்க புரட்சியும் ஓடு காலி காவுட்ஸ்கியும் தேர்வு நூல் தொகுதி 2 பக்கம் 95 ).

பூர்ஷ்வா சமூக பொருளாதார அமைப்பில் வாய்ப்பாக வாழும் சிறுபான்மையினர் மட்டும் பெறும் ஜனநாயக உரிமையே பூர்ஷ்வா ஜனநாயகமாகும். பரந்துபட்ட பெரும்பான்மை மக்கள் ஒடுக்கு முறைக்கு உள்ளாகி சமத்துவமற்று வாழும் நிலை. சோஷலிசத்தில் கிட்டும் ஜனநாயகம் பரந்துபட்ட மக்கள் பெறும் ஜனநாயக உரிமை யாகும். அங்கு சமத்துவமும் சமநீதியும் அனைவருக்கும் கிட்ட வழி வகுக்கப்படும்.

லெனின் அரசும் புரட்சியும் என்ற நூலில் இவ்வுண்மையை பின்வருமாறு_விளக்குவார்:

முதலாளித்துவ சமுதாயத்தில் கிட்டும் ஜனநாயகம் கட்டுப் படுத்தப்பட்ட, கொடுமையான, பொய்மையான, ஜனநாயகமாகும், சிறுபான்மையினரான பணக்காரருக்கே ஜனநாயகம், கம்யூனிசத்திற்கு செல்லும் இடைப்பட்ட காலகட்டத்தில் பாட்டாளியின் சர்வாதிகாரம் முதல் தடவையாக , பெரும் பான்மையான மக்களுக்கு ஜனநாயகம் கிட்டும் அவ்வேளை, சுரண்டும் சிறுபான்மையினர் ஒடுக்கப்படுவர் (இதையே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பர்) . கம்யூனிசம் மட்டுமே முழுமையான ஜனநாயகத்தை மக்களுக்கு வழங்க முடியும்; முழுமையாக அனைவர்க்கும் ஜனநாயகம் கிட்டியதும் எவ்வித (பாட்டாளி சர்வதிகாரம்) அடக்குமுறைகள் தேவையற்று தானே உலர்ந்துவிடும் (ஏனெனில் வர்க்க சமூகம் மறைந்திருக்கும்).

4). https://namaduillakku.blogspot.com/2023/03/blog-post_30.html

‘’இந்த நிர்வாக ஆட்சியமைப்பு பிரமாண்டமான அதிகாரவர்க்கஇராணுவ அமைப்பைப் கொண்டதுசிக்கல் மிக்க செயற்கையான அரசுப் பொறியமைவுடன் கூடியதுஐம்பது லட்சம் எண்ணிக்கை கொண்ட ஏராளமான அதிகாரிகளையும் மற்றும் ஐம்பது லட்சம் ஆட்களுடைய சேனையையும் பெற்றிருப்பதுஇந்த மிகக் கொடிய புல்லுருவி அமைப்பு – பிரெஞ்சு சமுதாயத்தின் உடல் பூராவும் படர்ந்து வலை போல இறுக்கி சர்வாங்கத்தையும் நெரித்துத் திணறடிக்கும் இவ்வமைப்பு – எதேச்சிகார முடியரசு காலத்தில்பிரபுத்துவ அமைப்பு சிதைந்து வந்த காலத்தில் உதித்ததுபிரபுத்துவ அமைப்பின் அழிவைத் துரிதப்படுத்த உதவியது.’’

அதிகார வர்க்கத்துக்கும் போலீசுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான தொடர்பை வர்க்க உணர்வுள்ள தொழிலாளி வர்க்கத்தால் புரிந்துகொள்ள முடியும் என்றும்இந்த உறவை குட்டிமுதலாளித்துவ வர்க்க உணர்வுள்ளவர்களால் புரிந்துகொள்ள முடியாது என்றும் லெனின் இங்கே விளக்குகிறார்இங்குள்ள கம்யூனிச அமைப்புகளிலுள்ள குட்டிமுதலாளித்துவ உணர்வும்சிந்தனை முறையும் கொண்டவர்களால் மார்க்சின் இந்த போதனையை புரிந்துகொள்ள முடியாதுஇவர்கள் எந்தளவுக்கு தங்களது பாட்டாளிவர்க்க உணர்வைப் பெற்று வளர்க்கிறார்களோ அந்தளவுக்குத்தான் மார்க்சின் போதனைகளை இவர்களால் புரிந்துகொள்ள முடியும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்ஆகவே பாட்டாளி வர்க்க உணர்வுகளை வளர்த்துக்கொள்வதும்பாட்டாளிவர்க்க சிந்தனைமுறையில் நாம் சிந்திக்கும் பயிற்சி பெறுவதும் கம்யூனிஸ்டுகளின் முன் உள்ள கடமையாக உள்ளது.

முதலாளித்துவ சமூகத்தில் செயல்படும் அதிகார வர்க்கமும் நிரந்தர சேனையும் மக்களின் வரிப்பணத்தில் வாழ்ந்துகொண்டே உழைக்கும் மக்களை ஒடுக்கிக்கொண்டு புல்லுரிவியாக இருக்கிறது என்ற கூற்று அராஜகவாதிகளின் கூற்று என்று கம்யூனிசத்தை கைவிட்டு ஓடிப்போன காவுத்ஸ்கி போன்ற திருத்தல்வாதிகள் பிரச்சாரம் செய்தாலும் காவுத்ஸ்கியின் வாதம் ஒரு புரட்டே என்பதுதான் மார்க்சிய போதனை ஆகும்கம்யூனிச சமுதாயத்தில் மக்களுக்கு பாரமாகவும் புல்லுருவியாகவும் இருக்கும் அரசு என்பதே சமுதாயத்திற்கு தேவையில்லாமல் போய்விடும்அதாவது அரசு உலர்ந்து உதிர்ந்துவிடும் என்பதுதான் மார்க்சின் போதனை ஆகும்

 

5). https://namaduillakku.blogspot.com/2023/05/blog-post_13.html

கம்யூனானது அரசெனும் சொல்லின் சரியான பொருளில் அரசாய்இருக்கவில்லை” - தத்துவ வழியில் இது எங்கெல்ஸ் அளித்திடும் மிகவும் முக்கியமான நிர்ணயிப்புமேலே கூறப்பட்டுள்ளதற்குப் பிற்பாடு இந்த நிர்ணயிப்பு தெட்டத்தெளிவாய் விளங்கும் ஒன்றுகம்யூனானது அரசாய் இருப்பது முடிவுற்றுக் கொண்டிருந்ததுஏனெனில் அது பெரும்பான்மை மக்களை அல்லசிறுபான்மையினரை (சுரண்டலாளர்களைமட்டுமே அடக்க வேண்டியிருந்ததுமுதலாளித்துவ அரசுப் பொறியமைவை அது நொறுக்கிவிட்டதுதனிவகை வன்முறை சக்திக்குப் பதிலாய் மக்கள் தமே செயலரங்குக்கு வந்துவிட்டனர்இவை யாவும் அரசெனும் சொல்லின் சரியான பொருளிலிருந்து விலகிச் செல்வதைக் குறிப்பவை ஆகும்கம்யூன் உறுதியாய் நிலைபெற்றிருந்தால்,அரசுக்குரிய எல்லாச் சாயல்களுமே தாமாகவே “உலர்ந்து உதிர்ந்திருக்கும்” அரசின் நிறுவனங்களைக் கம்யூன் “ஒழிக்க” வேண்டியிருக்காது. - இந்தநிறுவனங்கள் வேலையற்றவனவாகி இயங்காது ஓய்ந்து போயிருக்கும். “;அராஜகவாதிகள் ‘மக்கள் அரசு’ என்பதனை .... நம் முகத்தில் எறிந்து

சோசலிஸ்ட் எதிர்ப்புச் சட்டம் திரும்பவும் வந்துவிடுமோ என்று அஞ்சியும்,அந்தச் சட்டம் ஆட்சிபுரிந்த காலத்தில் அவசரப்பட்டுக் கூறப்பட்ட பலவற்றையும் நினைவிற் கொண்டும் இவர்கள் எல்லாக் கட்சிக்கோரிக்கைகளையும் சமாதான வழியிலேயே செயல்படுத்திவிட தற்போது ஜெர்மனியிலுள்ள சட்டமுறை போதுமெனக் கட்சி கருதவேண்டும் என்று விரும்புகிறார்கள்...”சோசலிஸ்டு எதிர்ப்புச் சட்டம் மீண்டும் வந்துவிடுமோ என்று அஞ்சி ஜெர்மன் சமூக - ஜனநாயகவாதிகள் இவ்வாறு நடந்துகொண்டனர். – இந்த அடிப்படை உண்மையை எங்கெல்ஸ் முக்கியமாய் வலியுறுத்தினார்.

இதனை சந்தர்ப்பவாதமே என்று வெளிப்படையாகவே விவரித்தார்ஜெர்மனியில் குடியரசும் இல்லைசுதந்திரமும் இல்லை ஆதலால், “சமாதான” வழி பற்றிய கனவுகள் முற்றிலும் அபத்தமாகும் என்று கூறினார்.எங்கெல்ஸ் தமக்குத் தளையிட்டுக் கொள்ளாதவாறு எச்சரிக்கையுடன் இதனைக் குறிப்பிட்டார்.குடியரசு நாடுகளிலோ,மிகுந்தசுதந்திரம் நிலவும் நாடுகளிலோ சோசலிசத்தை நோக்கி சமாதான வழியில் வளர்ச்சி காணலாமென “நினைக்க சாத்தியமுண்டு” (நினைக்க மட்டும்தான்!) என்று ஒத்துக்கொண்டார்.ஆனால் ஜெர்மனியைப் பொறுத்தவரையில்,அவர் திரும்பவும் ஒரு முறை கூறினார்.

 

6). https://namaduillakku.blogspot.com/2024/04/1871-46.html

அரசின் தோற்றம், அதன் சாராம்சத்தை பன்முக ரீதியில் ஆராய்ந்து, அரசு பற்றிய தெளிவான கோட்பாடுகளை மார்க்சிய ஆசான்கள் உருவாக்கினார்கள். அரசு பற்றிய மார்க்சிய ஆசான்களதுபோதனைகளை நாம் கற்று அறிய வேண்டுமானால், மார்க்சிய ஆசான்கள் எழுதிய லூயி போன்ப்பார்ட்டின் பதினெட்டாம் புரூமேர், பிரான்சில் உள்நாட்டுப் போர், டூரிங்குக்கு மறுப்பு, குடும்பம் தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம், அரசும் புரட்சியும் போன்ற மார்க்சிய ஆசான்களது நூல்களை நாம் படிக்க வேண்டும். இந்தியாவிலுள்ள இடதுசாரிகளில் பல பேர்களுக்கு அரசு பற்றிய மார்க்சிய ஆசான்களது போதனைகள் தெரியாது. இடதுசாரி தலைவர்களும் அரசு பற்றிய மார்க்சிய ஆசான்களது போதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் இல்லை. அதன்காரணமாக இடதுசாரி அமைப்பிலுள்ள பலருக்கும் நடைமுறையிலுள்ள அரசைப் பற்றியும் தெரியாது உழைக்கும்மக்களுக்கு எந்தவகையான அரசு தேவை என்பதும் தெரியாது. அரசு பற்றி முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு என்ன தெரியுமோ அந்த அளவிலேயே இடதுசாரிகளும் தெரிந்து வைத்துள்ளார்கள். ஆகவேதான் இடதுசாரிகளும் முதலாளித்துவ அரசியல்வாதிகளைப் போலவே இருக்கிறார்கள். இடதுசாரிகளுக்கும் முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கும்எவ்விதமான வேறுபாட்டையும் இங்கு காணமுடியவில்லை. அவர்களுக்கு இடையிலான வேறுபாடு அவர்கள் ஏந்திக்கொண்டிருக்கும் கொடிகளில் மட்டுமே காண முடிகிறது. அரசு பற்றிய கொள்கையில் இவர்களுக்கு இடையில் எவ்விதமான வேறுபாட்டையும் காணமுடியவில்லை. ஆகவே உண்மையான இடதுசாரிகள் அரசு பற்றிய மார்க்சிய ஆசான்களது போதனைகளை படித்து புரிந்துகொண்டு அதன் அடிப்படையில் தங்களது அரசியல் கொள்கையை வகுத்து செயல்பட வேண்டும். அப்போதுதான் இடதுசாரிகள் உண்மையான மார்க்சிய லெனினியவாதிகளாக மாறி வளரமுடியும்..

அரசு என்பதை வர்க்கங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களுக்கும் பொதுவான நிறுவனமாக அடையாளப்படுத்தும் சித்தாந்தவாதிகளும் அரசியல்வாதிகளும் மக்களை ஏமாற்றி உற்பத்திச் சாதனங்களை அதாவது மூலதனத்தை உடமையாகக் கொண்ட வர்க்கங்கள், உடமையற்ற வர்க்கங்களின் உழைப்பு சக்தியை சுரண்டி அதாவது திருடி தனது மூலதனத்தை அதாவது சொத்துக்களை குவிக்கும் நோக்கத்திற்காக உடமையற்ற உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்கான கருவிதான் இந்த அரசு என்பதை மூடிமறைக்கிறார்கள். பண்டைய ஏதென்ஸ், ரோமாபுரி, ஜெர்மனி, இந்தியாவிலும் தோன்றிய அரசுகளின் வரலாறறை நாம் ஆய்வு செய்தால், இந்த அரசுகள் தோன்றியபோதே சமூகத்தில் உற்பத்திச் சாதனங்களை உடமையாகப் பெற்ற வர்க்கங்களுக்கு ஆதரவாக ஆதிக்க சக்தியாகவே அரசுகள் தோன்றியதை நாம் புரிந்துகொள்ளலாம். இந்த உண்மையை வரலாற்றிலிருந்து தகுந்த ஆதாரங்களோடு நிறுவியவர்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ் போன்ற மார்க்சிய ஆசான்கள் ஆவார்கள்.

 

7). https://namaduillakku.blogspot.com/2024/05/1-49.html

படிப்பினைகள்வருமாறு:

“.... பழைய மத்தியத்துவ அரசாங்கத்தின் ஒடுக்குமுறை அதிகாரம்தான், சேனை, அரசியல் போலீஸ், அதிகார வர்க்கம் (இது 1798 இல் நெப்போலியனால் தோற்று விக்கப்பட்டு அது முதலாய் ஒவ்வொரு புதிய அரசாங்கத்தாலும் தக்க ஆயுதமாய் மகிழ்ச்சியோடு ஏற்கப்பட்டு தனது எதிராளிகளுக்கு விரோதமாய்ப் பிரயோகிக்கப்பட்டது.) இவற்றின் அதிகாரம் தான் முன்பு பாரிஸில் வீழ்த்தப்பட்டது போலவே எங்கேயுமே வீழ்த்தப்பட வேண்டியது.

தொடக்கம் முதலாகவே கம்யூனானது, அதிகாரத்துக்கு வந்து விட்ட தொழிலாளி வர்க்கம் பழைய அரசு எந்திரத்தைக் கொண்டே தொடர்ந்து நிர்வகித்து செல்வது சாத்தியமில்லை என்பதையும், தற்போது தான் வென்று கொண்ட மேலாதிக்கத்தை திரும்பவும் இழக்காது இருக்கும் பொருட்டு இந்த தொழிலாளி வர்க்கம் ஒரு புறத்தில் முன்பு தன்னையே எதிர்த்து பிரயோகிக்கப்பட்ட பழைய ஒடுக்குமுறை இயந்திரம் அனைத்தையும் ஒழித்து விட்டு, மறுபுறத்தில் தனது பிரதிநிதிகள் அதிகாரிகள் ஆகியோரிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் பொருட்டு இவர்கள் எல்லோரையும் விதிவிலக்கின்றி எந்நேரத்திலும் திருப்பி அழைக்கப்படக் கூடியவர்களே என்பதாய் பிரகடனம் செய்ய வேண்டும் என்பதையும் அங்கீகரிப்பது இன்றியமைதாக ஆகிவிட்டது.

முடியரசில் மட்டுமின்றி, ஜனநாயக குடியரசிலும் கூட அரசு அரசாகவே இருந்து வருகிறது என்பதை, அதாவது அதிகாரிகளை சமுதாயத்தின் பணியாட்களை, அரசின் உறுப்புகளை சமுதாயத்தின் எஜமானர்களாய் மாற்றி விடுவது என்ற அதன் அடிப்படையான தனிப் பண்பினை இழந்து விடவில்லை என்பதை எங்கெல்ஸ் மீண்டும் வலியுறுத்தி கூறுகிறார்.

“......... அரசும் அரசின் உறுப்புக்களும் சமுதாயத்தின் பணியாட்கள் என்கிற நிலையிலிருந்து சமுதாயத்தின் எஜமானர்கள் என்ற நிலைக்கு இவ்விதம் மாற்றப்படுவதற்கு எதிராய் (முந்திய எல்லா அரசுகளிலும் இம்மாற்றம் தவிர்க்க முடியாதது) கம்யூனானது பிசகாத இரு வழிகளைக் கையாண்டது. முதற்கண், அது எல்லா பதவிகளுக்கும்) (நிர்வாகம், நீதித்துறை, கல்வித்துறை ஆகிய எல்லா பதவிகளுக்கும்) அனைத்து மக்கள் வாக்குரிமையின் அடிப்படையிலான தேர்தல் மூலம் ஆட்களைஅமர்த்தியதோடு, அவர்களை அதே வாக்காளர்களால் எந்த நேரத்திலும் திருப்பி அழைக்க கூடியவர்களாக ஆக்கிற்று. இரண்டாவதாக, அது உயர் அதிகாரிகள் ஆயினும் சரி கீழ் அதிகாரிகளாக ஆயினும் சரி எல்லோருக்கும் பிற தொழிலாளர்களுக்கு கிடைக்கும் அதே சம்பளங்கள் தான் கொடுத்தது. யாருக்கும் கம்யூன் அளித்த மிக உயர்ந்த சம்பளம் 6000 பிராங்குகள்தான் (பிரெஞ்சு நாணயம்) பிரதிநிதித்துவ உறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு கம்யூனால் விதிக்கப்பட்ட மீறமுடியாத ஆணைகளை அன்னியில், இவ்வழியில் பதவி வேட்டைக்கும் தன்னல உயர்வு நாட்டத்துக்கும் சரியானபடி தடை எழுப்பப்பட்டது....... இங்கே எங்கெல்ஸ் முரணற்ற ஜனநாயகம் ஒருபுறம் சோசலிசமாய் மாற்றப்படுவதையும், மறுபுறம் சோசலிசம் அவசியெமெனக் கோருவதையும் குறிக்கும் சுவையான எல்லைக் கோட்டினை நெருங்கி வந்துவிடுகிறார்.

ஏனெனில் அரசை ஒழித்திட அரசு நிர்வாக அலுவல்களை தேச மக்களில் மிகப்பெரும் பகுதியோருடைய (நாளடைவில் ஒவ்வொரு தனியாளுடைய) தகுத்திக்கும் ஆற்றலுக்கும் உட்பட்ட எளிய கண்காணிப்பு, கணக்கீட்டு வேலைகளாய் மாற்றுவது அவசியமாகும். பதவி வேட்டை அடியோடு ஒழிக்கப்பட்டாக வேண்டுமாயின், அரசு நிர்வாக அலுவல் துறையில் லாபம் தருவனவாய் இல்லாவிட்டாலும்மதிப்பிற்குரியனவாகியபதவிகள், மிகமிக சுதந்திரமான முதலாளித்துவ நாடுகளில் எல்லாம் இடையறாது நடைபெற்று வருவது போல, வங்கிகளில் அல்லது கூட்டுப்பங்கு கம்பெனிகளில் கொழுத்த ஆதாயத்துக்குரிய பதவிகள் பெறுவதற்கான உந்து தளங்களாய்ப் பயன்பட முடியாதபடி செய்தாக வேண்டும்.

8). https://namaduillakku.blogspot.com/2024/10/1871-4.html

அரசும் புரட்சியும் நூல் PDF வடிவில் உள்ளது தேவைபடும் தோழர்கள் இந்த இணைப்பை அழுத்தி பெற்றுக் கொள்ளலாம் தோழர்களே

 

9). https://namaduillakku.blogspot.com/2024/10/blog-post_21.html

சுரண்டும் வர்க்கங்களுக்குச் சுரண்டலைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, அதாவது எல்லா மக்களிலும் மிகப் பெரும்பான்மையோருக்கு எதிராக மிகச் சொற்பச் சிறுபான்மையினரின் சுயநல நலன்களின் பொருட்டு அரசியல் ஆட்சி தேவைப்படுகிறது. சுரண்டப்படும் வர்க்கங்களுக்கு, எல்லாச் சுரண்டலையும் முற்றிலுமாக ஒழிப்பதற்கு, அதாவது மிகப் பெரும்பான்மையான மக்களின் நலன்களுக்காகவும், நவீன அடிமை உடைமையாளர்களான நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளிகள் அடங்கிய முக்கியத்துவமற்ற சிறுபான்மையினருக்கு எதிராகவும் அரசியல் ஆட்சி தேவைப்படுகிறது.(அதே பக்).

வர்க்கப் போராட்டத்தை வர்க்க நல்லிணக்கக் கனவுகளால் பிரதியீடு செய்த குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகள், அந்த போலி சோசலிஸ்டுகள், சோசலிச மாற்றத்தை ஒரு கனவான பாணியில் சுரண்டும் வர்க்கத்தின் ஆட்சியைத் தூக்கியெறிவதாக அல்ல, மாறாக சிறுபான்மையினர் அதன் நோக்கங்களை அறிந்த பெரும்பான்மையினருக்கு அமைதியான முறையில் அடிபணிவதாகக் கூட சித்தரித்தனர். வர்க்கங்களுக்கு அப்பாற்பட்டது அரசு என்ற கருத்திலிருந்து பிரிக்க முடியாததான இந்தக் குட்டி முதலாளித்துவ கற்பனாவாதம், நடைமுறையில் தொழிலாளி வர்க்கங்களின் நலன்களைக் காட்டிக் கொடுப்பதற்கு இட்டுச் சென்றது, எடுத்துக்காட்டாக, 1848 மற்றும் 1871 பிரெஞ்சுப் புரட்சிகளின் வரலாறு மற்றும் பிரிட்டனில் முதலாளித்துவ அமைச்சரவைகளில் "சோசலிஸ்ட்" பங்கேற்பின் அனுபவம் ஆகியவற்றால் எடுத்துக்காட்டப்பட்டது.  இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரான்ஸ், இத்தாலி மற்றும் பிற நாடுகள்.(பக் 36)

 

10). https://namaduillakku.blogspot.com/2024/11/blog-post_25.html

அரசும் அரசாங்கமும்

எங்களின் வகுப்பில் கேட்ட கேள்விகளுக்கு பதிலாக அரசும் புரட்சியும் நூல் வாசித்தோம் அப்பொழுது சிலர் "திராவிட மாடல் அரசு" என்றால் என்ன? மேலும் "கேரள மாடல், குஜராத் மாடல்" விரிவாக விளக்கும் படி கேள்வி எழவே நீண்ட விவாதம் சென்றது. அரசென்பது நிரந்தரமான சிவில் சமூக நிருவனமான மாறாத அதிகாரிகளிலிருந்து கடைநிலை ஊழியர் வரை ஆனால் நாம் இங்கு அரசாங்கமான பாராளுமன்றம் சட்டமன்றம் மட்டுமே பேசுகிறோம்.

ஆக எந்த கட்சி ஆட்சி என்றாலும் மோடி அரசாங்கம், இடதுசாரி கேரள அரசாங்கம், இங்குள்ள மு.. ஸ்டாலின் அரசாங்கம் இவ்வாறு இவை திரை மறைவுக்கு பின்னே நடக்கும் அரசின் செயலை மூடி மறைக்கதான். இதனை செயல்படுத்துவோர் நிரந்த அதிகாரம் படைத்தவர்களே. இதனை பற்றி மார்க்சியம் மிகதெளிவாக சொல்கிறது அரசாங்கம் மாறுகிறது ஆனால் அரசு மாறுவதில்லை. அன்றைய கலெட்டர் அடுத்த ஆட்சியிலும் கலெட்டர் இவ்வாறு....

ஆக அரசையும் அரசாங்கத்தையும் புரிந்துக் கொள்ள முயலுவோம் தொடர்ந்து தோழர்களே..

 

11). https://namaduillakku.blogspot.com/2025/01/blog-post_31.html

ஏகாதிபத்தியத்தை அழிக்க கையை ஓங்கியாக வேண்டிய நிர்பந்தம் இருந்தது. யார் யார் ஜாரியத்தை எதிர்க்க கிளர்ந்து எழுந்தார்களோ, அவர்கள் எல்லோரும் அதே சமயத்தில், ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் கிளர்ந்து எழ வேண்டியவர்களாக ஆயினர். ஏனெனில், ஜாரியத்தை முறியடிப்பதோடு நின்று கொள்ளாமல் அதை அடியோடு வழித்து எறியவும் யாராவது சங்கற்பம் செய்து கொண்டிருந்தால், ஜாரியத்தை வீழ்த்தும் போதே அவர்கள் ஏகாதிபத்தியத்தையும் வீழ்த்த வேண்டியிருந்தது. இவ்விதம் ஜாரியத்தை எதிர்த்துக் கிளம்பிய புரட்சி, ஏகாதிபத்தியத்தை வீழ்த்தக்கூடிய புரட்சியின் எல்லையை எட்டியதோடு மட்டுமின்றி, அந்த எல்லையைத் தாண்டியும் சென்று ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சியாக, ஒரு தொழிலாளி வர்க்கப் புரட்சியாக பனிணமிக்க வேண்டியிருந்தது. (ஸ்டாலின்).

".... பாட்டாளி வர்க்கம் தனது அரசியல் மேலாண்மையைப் பயன்படுத்தி முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்து படிப்படியாய் மூலதனம் முழுவதையும் கைப்பற்றும்; உற்பத்திக் கருவிகள் யாவற்றையும் அரசின் கைகளில், அதாவது ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் ஒருசேர மையப்படுத்தும்; மற்றும் உற்பத்தி சக்திகளது ஒட்டுமொத்தத் தொகையைச் சாத்தியமான முழு வேகத்தில் அதிகமாக்கும்."

12). https://namaduillakku.blogspot.com/2025/02/blog-post_18.html

இன்னும் சில பகுதி இலக்கு இணைய பகுதியில் உள்ளன தேவைப்படுவோர் வாசிக்க இந்த இணைப்பில் செல்க தோழர்களே…

இலக்கு இணைய இதழ்

 

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்