விளாதிமிர் லெனின் 22 ஏப்ரல் 1870ல் ரஷ்யாவில் வால்கா நதியின் கரையோரம் உள்ள சிம்பிர்ஸ்க் எனும் நகரத்தில் இல்யா உல்யனாவ் - மாயா உல்யானவ் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் விளாதிமிர் இலீச் உல்யானவ் என்பதாகும். அலெக்ஸாண்டர், டிமிட்ரி என்ற சகோதரர்களும், ஆனர், மரியா, ஆல்கா என்ற சகோதரிகளும் லெனினுக்கு இருந்தனர். இல்யா உல்யனாவ் மாவட்ட கல்வி அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்தார்.
இவருடைய தந்தையின் இறப்பிற்குப் பிறகு, அண்ணன் அலெக்ஸாண்டர் ஜார் மன்னனை கொல்ல முயன்றதுக்காக 1887 ஆம் ஆண்டு மார்ச் 1ம் நாள் கைது செய்யப்பட்டரார். அதனையடுத்து 1887 ஆம் ஆண்டு மே 8ம் நாள் ஜார் மன்னரின் காவல்துறையால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உயிரிழந்தார்.
லெனின் பிறந்து 155 ஆண்டுகள் ஆகின்றன. அவர் மறைந்து 101 ஆண்டுகள் ஆகின்றன். ஆனால் அவர் இன்றும் நம்முடன் உள்ளார் அவரின் கொள்கை கோட்பாடுகளின் நடைமுறையால். நம்மை அவர் வழி நடத்துகிறார். சுரண்டல் வாதிகளை இல்லாதொழிக்க அதற்கு நாம் அவரின் மாணவராக இருக்க வேண்டும்.
உலகின் முதல் சோசலிசக் குடியரசை அமைத்த பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் மறைந்து 101 ஆண்டுகள் கடந்து விட்டன. ரசியாவில் ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியைத் தூக்கியெறிந்ததோடு முதலாளித்துவ சுரண்டலையும் துடைத்தெறிந்து பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகார ஆட்சியை அமைத்தவர் தோழர் லெனின்.
உலகெங்கும் நடைபெறுகிற உழைக்கும் வர்க்கப் போராட்டங்கள், எழுச்சிகளைப் புரட்சியை நோக்கி வளர்த்துச் செல்லாத இன்றைய திரிபுவாதிகள்தான் புரட்சியின் தடையரண்கள்.
உலக மயமானது தன்லாப வெறிக்காக ஒட்டுமொத்த புவிக்கோளத்தின் மனிதவளம், இயற்கைவளம் என எல்லா வற்றையும் சுரண்டுவதும் கார்ப்ரேட்களுக் காக உழைக்கும் மக்கள் பட்டினி, பசி, போர், அகதிகளாகப் புலம்பெயர்வு, தேசிய இன அடக்குமுறைகள், பல்வேறு நெருக்கடி களுக்கும் உலக உழைக்கும் மக்கள்இந்த அவலங்களை எதிர்கொண்டிருக்கின்றனர்.
இந்த சுரண்டல் அடக்குமுறை ஒடுக்குமுறையிலிருந்து விடுதலையும், இளைப்பாறுதலும் பெற போல்ஷ்விக் பாணியிலான பாட்டாளி வர்க்கக் கட்சியால் மட்டுமே முடியும். அதற்கு இந்த எல்லா ஒடுக்குமுறைக்கும் சுரண்டல் முறைக்கும் காரணமான அரசமைப்பை இல்லா தொழிக்க வேண்டும் அதற்கான வழிமுறை லெனினியம் கற்பித்துள்ளது.
லெனினியக் கட்சியை உடனடியாகக் கட்டியமைப்பதற்கு மார்க்சிய லெனினியம் என்ற தத்துவ போதனை தெளிவடைதன் மூலமே இந்தியப் பாட்டாளி வர்க்கமாகிய நாம் தோழர் லெனினை வழி நின்று இங்குள்ள பல்வேறு பிரச்சினைகளை மார்க்சிய லெனினிய பாதையில் தீர்க்க முடியும்.
லெனின் மாணவர்களாக அவருக்கு நாம் செய்யும் உண்மையான நினைவு கூர்வதற்தானது. அவரின் கொள்கை கோட்பாடுகளை நமது நாட்டு சூழலுகேற்ப அறிந்து செயல்படுவதே. இல்லையேல் புஜை அறையில் பூஜிக்கும் கடவுள்கள் வரிசையில் அவரையும் வைத்து இந்நாளில் பூஜிப்பதோடு நம் பணி முடிந்து விடும்.
ரஷ்ய சோசலிசப் புரட்சி மூலம் உள்நாட்டு-வெளிநாட்டு ஏகாதிபத்தியங்களை ஒருசேர வீழ்த்தி, காலனிய நாடுகளின் விடுதலைக்கு ஒளியூட்டினார். அந்த ஒளியில்தான், சீனா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் புரட்சிகள் வெடித்தன. உலகின் ஆறில் ஒரு பங்கு மக்கள் உண்மையான விடுதலையை அடைந்தனர்.
மேலும், பாட்டாளி வர்க்கப் புரட்சியின் ஊடாகத்தான் உண்மையான தேசிய இன விடுதலையைப் பெற முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினார். தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்து கோட்பாட்டு ரீதியாகவும், பல்வேறு தேசிய இனங்கள் விருப்பப்பூர்வமாக ஒருங்கிணைந்திருந்த சோவியத் யூனியனை உருவாக்கி நடைமுறை ரீதியாகவும் வழிகாட்டினார், லெனின். ஒரு தேசிய இனம் மற்றொரு தேசிய இனத்தோடு சேர்ந்து வாழவே முடியாது என்ற முதலாளித்துவ தேசியவாதத்தை, கோட்பாடு, நடைமுறை ஆகிய இரண்டு அம்சங்களிலும் அடித்து நொறுக்கினார்.
லெனினின் நினைவு கொள்வதென்பது, உழைப்பாளி வர்க்கத்தின் மீதான நேசமும், புரட்சியின் மீதான உறுதியும், மார்க்சியத்தை இடைவிடாது கற்றுக்கொண்டு செயல் படுத்திய அவரது அரசியல் மேதைமையும் நாம் அவரிடமிருந்து இறுகப் பற்றிக் கொள்ள வேண்டிய பண்புகள்.
எனினும், இவற்றையெல்லாம் தாண்டி, தோழர் லெனினது மகத்தான பங்களிப்புகளில் இன்று நாம் முதன்மையாக நினைவுகூர வேண்டியது, பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு வழிகாட்டுகின்ற, உறுதிமிக்க ஒரு போல்ஷ்விக்மயமான கட்சியைக் கட்டியமைத்ததைத்தான். ஏனெனில், இன்றைய உலகப் பாட்டாளி வர்க்கத்தின் முதன்மைத் தேவை அதுதான். புதிய காலனிய ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் ஆயுதம் அமைப்பு, “அமைப்பு மட்டுமே!” கம்யூனிஸ்ட்டு களின் பணி தொழிற்சங்கப் போராட்டங்கள் என்று புரட்சியிலிருந்து தொழிலாளி வர்க்கத்தைப் பிரித்து, முதலாளித்து வத்திற்கு சேவைசெய்த லெனின் காலத்து திரிபுவாதிகளைப் போல இன்றும்சித்தாந்தத்தை, கொள்கைகளை முதலாளித்துவத்திடம் அடகுவைத்துவிட்டு சொல்லில் சோசலிசம் பேசுகின்ற பலவண்ண திரிபுவாதிகள் உலகெங்கும் இருக்கின்றனர்.
No comments:
Post a Comment