நாங்கள் தொடர்ந்து இந்த நூலை வாசித்துக்கொண்டிருப்பதன் நோக்கம் மார்க்சிய தத்துவ அடிபடையை கற்றுதேறுவதும் மற்றும் மார்க்சியம் அல்லாத குப்பைகளை மார்க்சியமாக கடைவிரிக்கும் அயோக்கியர்களை அம்பலப்படுத்துவதோடு, மார்க்சியத்தின் தேவையை ஒவ்வொருவரும் அறிந்து புரிந்து செயல்புரிய வேண்டும் என்ற நோக்கத்திலே.
மார்க்சுக்கு முன்னரே உலகில் பல்வேறு விதமான தத்துவங்களும் தத்துவவாதிகளும் இருந்தார்கள் ஆனால் அவை மக்களின் பிரச்சினைகளையையோ அல்லது அவர்கள் படும் துன்பதுயரங்களை துடைத்தெறிவதாக இல்லாமல் கற்பனையில் அவர்களுக்கு ஆறுதல்களை கூறின. ஆனால் மார்க்சிய சமூக விஞ்ஞானம் சமூகத்தில் உள்ள துன்ப துயரங்களுக்கு காரணம் என்ன அவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை தெட்டத்தெளிவாக நம் முன் வைத்தது. ஆக அதற்கு முன்னர் இருந்த தத்துவ குழப்பங்களை முடிவுரையாக மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதம் வரலாற்று பொருள்முதல்வாதம் என்ற மனித சமூக வாழ்க்கைகான தத்துவத்தை நமது ஆசாங்கள் வகுத்தளித்தனர். பல்வேறு தப்பெண்ணங்களால் இருந்த நமது முந்தைய தத்துவங்களை மறுதலித்து நடைமுறை சாத்தியமாகியது மார்க்சியம் மட்டும் தான். அதனால் அதற்கு முன்னர் எவ்வளவு உயர்வான தத்துவம் இருந்தாலும் மார்க்சியதிற்கு கீழானதே ஏனெனில் மார்க்சியம் நடைமுறைக்கான தத்துவமாக சோசலிச நிர்மாணதிற்கு பிறகு நிரூபிக்கப்பட்ட தத்துவம்.
இன்று பல்வேறு தத்துவ கோமாளிகள் மார்க்சியத்தை குழப்பும் வேலையை செய்கின்றனர் அவர்களின் நோக்கம் மார்க்சியத்தை வளமை படுத்த அல்ல என்பது தெளிவு இதனை நமது ஆசான் லெனின் தெளிவு படுத்திய பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும் நூலின் மூலம் அறிவோம். அப்படியிருந்தும் அதே பாணியில் மார்க்சியத்தை மறுத்து மார்க்சிய ஆசான் களை கொச்சை படுத்தும் வேலையில் இடதுசாரி கட்சிகளே இறங்கி உள்ளது அவர்களின் நோக்கம் மார்க்சியத்தை வளர்பதல்ல தான் வாழும் வர்க்க சமூகத்தில் ஆளும் வர்க்கத்தின் ஒத்தூதும் வேலையன்றி வேறில்லை. ஆக அதனை பற்றி ஓர் சிறிய தேடலே இவை.
ஆக மற்ற தத்துவங்களுக்கும் மார்க்சிய தத்துவத்துகும் உள்ள வேறுபாடு புரிந்து கொள்வது மார்க்சியத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
மார்க்சுக்கு பிறகு வந்த பல்வேறு தத்துவவாதிகளும் பல்வேறு மிகப்பெரிய முதலாளித்துவ அறிஞர்களும் அரசியல் தத்துவத்தில் சமூகத்தை குழப்புவதிலும் சமூகத்தில் உள்ள தத்துவங்களை குழப்பத்திலும் பெரிதும் செயல்பட்டு கொண்டுள்ளார்களே ஒழிய மக்களின் பிரச்சினைக்கு வழி காண்கிறோம் என்று ஆளும் வர்க்க கருத்தியலை உயர்த்தி பிடித்து, மார்க்சியத்தை குறை கூறி அதனிடத்தில் ஆளும் வர்க்க அறிஞர்களை கொண்டு நிறுத்தி தங்களை பெரிய தத்துவவாதிகளாக மார்க்சியத்தை ஒதுக்க செய்யும் பணியினை புரிந்துக் கொள்வது அவசியமான நமக்கான பெரிய பணியாகும் என்று நினைக்கிறேன்.
உண்மையாளுமே உலகில் உள்ள மக்களின் வாழ்வியலுக்கான தத்துவம் மார்க்சியம் மட்டும் தான் என்பதை நாம் தெளிவாக தெரிந்திருந்தும் குழப்பம் ஏன்?
இன்றைய ஏகாதிபத்திய காலகட்டத்தில் மக்களை திசை திருப்பு பல்வேறு விதமான தத்துவங்களும் பெயர்களும் அவர்கள் கொண்டு வந்து கொட்டும் குப்பைகளும் நமது மூளையில் திணிக்கப்படுகிறது! அவர்களின் நோக்கம் மார்க்சிய விஞ்ஞானத்தை புரிந்து மக்கள் விழிப்படையாமல் இருக்க செய்யும் சூழ்ச்சியே, உண்மையாலுமே தத்துவம் என்பது மக்களின் நடைமுறைக்கானது தான் அதை மறுத்து பல்வேறு விதமான வியாக்கியானங்கள் இவர்கள் செய்கிறார்கள்.
அண்மையில் ஹெகல், கான்ட், நீட்சே என்ற கருத்துமுதல்வாதிகளிடம் புகழிடம் தேடும் கூட்டம் மார்க்சியத்தை குழப்பி புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளான பல விடயங்களை பேசி சமூக விஞ்ஞானத்தை புரிந்துக் கொள்ளாமல் குழப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டுள்ளனர்.
ஆனால்,மார்சியமானது இயக்கவியல் பொருள் முதல்வாதத்தை அடிப்படையாகக் கொண்டது.
ஆனால் இயக்கவியலை படைத்த ஹெகல் ஒரு கருத்து முதல்வாதி அதேபோல பொருள் முதல் வாதத்தை படைத்த ஃபயர் பாக்கும் இயங்காவியல் எனும் மாறா நிலை வாதியாவர்.
ஆனால் மார்கசியமானது ஹெகலின் இயக்கவியலை கருத்துமுதல்வாதம் என்ற சிறையிலிருந்து விடுவித்து பொருள்முதல்வாதம் என்ற உயர்ந்த நிலைக்கும் மனித சமூக வளர்ச்சி விதிகளை ஒன்றினைத்து வரலாற்று பொருள்முதல்வாதம் என்றும் வளர்த்தெடுத்தனர் நமது ஆசான்கள்...
மார்க்சிய தத்துவத்தை குழப்புவோரை அறிந்த ஆசான் லெனின் தன் நாட்டில் மார்க்சியத்தையும் கருத்து முதல்வாதத்தையும் ஒன்றினைத்து புதிய தத்துவம் படைக்க கிளம்பியவர்களை அம்பலப்படுத்த எழுதிய நூலே, "பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்" இந்த நூலில் குறிப்பிடும் அனுபவவாத விமர்சகர்கள் என்பவர்கள் தாங்கள் புதிய தத்துவத்தை கண்டுபிடித்து விட்டதாகவும் அவை விஞ்ஞான வகை பட்டவை என்றும் பல்வேறு புதிய வகை வார்த்தை பயன்பாடும் மார்க்சியமே கண்டுபிடிக்க தவறியதை தாங்கள் கண்டுபிடித்ததாக கூறிக் கொள்ளும் இவர்கள் இறுதியில் போய் சேருமிடம் கான்ட், இயற்கை விஞ்ஞானம், நேர்காட்சிவாதம், உளவியல் இப்படி பலதேடிபோய் சேருமிடம் கருத்துமுதல்வாத ஆன்மீக வாதத்திலே என்று ஆணித்தரமாக நிரூபிக்கிறார் நமது ஆசான் லெனின்.
எங்கள் புரிதல் கீழே வாசிக்க எளிதாக இருக்கும்...
மார்க்சியத்தை குறைக்கூறி விமர்சனம் செய்வதும் அதை திரிப்பதும் நாளுக்கு நாள் அதிகமாக முயற்சி செய்யப்பட்டு வருகின்றன. புதிய புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் அதன் உண்மைகளையும் திரித்து விஞ்ஞானத்துக்கு விரோதமான போக்குகளாக ஆளும் வர்க்கம் மதவாத முகமூடியில் ஒளிந்து கொண்டு வெளிப்படுத்துகிறது.
அதே பணியை தான் அனுபவவாத விமர்சகர்கள் என்பவர்கள் மார்க்சியத்தின் உண்மையான நிலைப்பாட்டை ஒருபோதும் உறுதியாக ஏற்றுக் கொள்ளாத இவர்கள். மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையின் மீதும் இயக்கவியல் பொருள் முதல்வாதத்தின் மீதும் சாதாரண விமர்சனங்கள் போல் இல்லாமல் மார்க்சிய முகமூடி தரித்துக்கொண்டே, "மார்க்சியத்தின் அடிப்படைகளை பாதுகாக்கிறோம்" என்று "மார்க்சிய சித்தாந்தத்தின் அடிப்படைகளை ஒழித்து கட்டுவதுதான்" பணியாக கொண்ட இவர்கள் மார்க்சிய விரோதிகளே.
இவர்கள் மார்க்சியத்தை தாங்கள் எதிர்க்கவில்லை என்று கூறிய பொழுதும் மார்க்சிய தத்துவத்தை பலவீனப்படுத்துவதற்காக அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்தார்கள்.
மார்க்சிய தத்துவத்திலிருந்து ஓட்டம் பிடித்த இந்த துரோகிகளுக்கு சரியான சூடு கொடுக்க வேண்டிய அவசியமானது. அவர்களுடைய முகமூடியை கிழித்தெரிய வேண்டிய அவசியமாயிற்று. அவர்களை பரிபூரணமாக அம்பலப்படுத்தி மார்க்சிய தத்துவ அடிப்படையில் பாதுகாக்க வேண்டிய அத்தியாவசியமாயிற்று.
இந்தப் பெரும் பணியை லெனின் புரிந்தார் "பொருள் முதல்வாதமும் அனுபவ வாத விமர்சனம்" என்ற நூலின் மூலமாக.
சிந்தனை நிகழ்ச்சி போக்கின் சிக்கலான தன்மையிலும் முரண்பாட்டிலும் மட்டும் விடயம் அடங்கி இருக்கவில்லை. கருத்து முதல்வாதம் உயிருடன் இருப்பதற்கான காரணங்கள் சமுதாய சூழ்நிலைகளிலும் அடங்கி உள்ளது. ஆளும் வர்க்கமானது தன் சுரண்டலை மறைக்கவும் தன்னை தக்க வைத்துக் கொள்ளவும் பழமைவாத கருத்துகளை புதுப்பித்தும் மேன்மைப்படுத்தியும் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் கண்ணோட்டத்தை குழப்புகிறது.
நடைமுறை கடமைகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்புகிறது. அதனைப் புரிந்து கொள்ள மதத்தை பற்றியும் சற்று அறிந்து கொள்வோம். கருத்து முதல் வாதம் மதத்துடன் உள்ள உறவு விஞ்ஞான தன்மை அற்றது என்று தெளிவாக புலப்படுகிறது.
ஆதியில் இயற்கையோடு மனிதனுக்கு இருந்த பலவீனத்தின் விளைவே மதம் தோன்றியது. இயற்கை மற்றும் மனித சமூக வளர்ச்சி விதிகளை அறியாமல் இந்த புலப்பாடுகளை விளங்கிக் கொள்வது அரிது. இயற்கையோடு போரிட்ட மானிடன் தன் இயலா நிலைக்கு தன்னில் அப்பாற்பட்ட ஒரு சக்தியை தேடினான், அதி அற்புதமான கற்பனை வடிவங்களை கடவுளுக்கு கொடுத்தான்.
வர்க்க சமுதாயமும் மனிதனை மனிதன் சுரண்டுவது தோன்றியதும் மதம் அதிக உறுதியான ஆதாரத்தை பெற்றது. உழைக்கும் மக்கள் திரளினரின் சமூக ஒடுக்கம் இதற்குத் துணை புரிந்தது. இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளின் மேலும் சர்வ வல்லமை படைத்த கடவுளின் மீதான நம்பிக்கை கடுமையான உழைப்பும் முடிவற்ற வேதனைகளும் நிறைந்து கிடக்கும் ,அடக்கி ஒடுக்கப்பட்டோரின் வாழ்வில் நியாயம் மற்றும் அன்பிற்கான மாயையான ஈடாக மாற்றப்பட்டது.
மதத்தின் இந்தப் பணியை இதயமற்ற உலகின் ஆன்மா என்று காரல் மார்க்ஸ் குறிப்பிட்டார்.
மதக் கருத்துக்களும் எண்ணங்களும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளின் மீதான நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. எனவே இவை மாயவாத அறிவிக்கு பொருந்தாத தன்மையை உடையவனாக உள்ளன.
மதம் சாதாரண மனித உணர்ச்சிகளை நாடுகிறது. அவர்களது மனநிலையின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தான் நிலவிவரும் பல நூற்றாண்டு காலத்தில் மனித உணர்ச்சிகளின் மீதான தாக்கத்தை ஏற்படுத்தவல்ல பயன் மிக்க சாதனங்களின் முழு முறையையே மத ஸ்தாபனங்கள் உருவாக்கியுள்ளன. கலை இலக்கியம் இசை மற்றும் பல்வேறு முறையில் மனிதர்களின் மீது உளவியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
மத வழிபாட்டு முறை என்பது சடங்குகள் பல அடங்கிய ஒரு முறையாகும் இச்சடங்குகள் மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை கூடவே வருகின்றன.வழிப்பாட்டு சடங்குகளின் உதவியால் மதஸ்தாபனங்கள் மத நம்பிக்கைகள் உள்ளோரை தனது செல்வாக்கு வட்டத்திற்குள்ளே வைத்திருக்கிறது.
மத ரீதியான உலக கண்ணோட்டம் என்பது விஞ்ஞானத்திற்கு நேர் எதிரானது இவை கடந்த கால பல்வேறு விஞ்ஞானிகளில் தண்டித்திலிருந்து மத வாதிகள் பகுத்தறிவு பகுத்தறிவை அற்றவர்கள் ஆனால் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் மதவாதிகள் விஞ்ஞானத்தை மறுக்கவில்லை. மனிதனுக்கு இந்த அறிவை கொடுத்ததே கடவுள் தான் என்று நிரூபிக்க அவர்கள் முயன்று கொண்டுள்ளனர்.
மதம் தோன்றியதிலிருந்து இன்று வரை சுரண்டலுக்கு சாதகமாக சுரண்டும் வர்க்க நலனுக்காக பெரும்பான்மை உழைக்கும் மக்களின் உழைப்பை சுரண்டுவதற்கும் கற்பனையான ஒரு சொர்கத்தை காட்டி வருகின்றனர்.
இன்று மதமும் மத ஸ்தாபனங்களும் தம் மீது சமூக சூழ்நிலை தாக்கத்தை உணர்ந்து அதற்கேற்றபடி தன்னை மாற்றிக் கொள்கின்றன.
கருத்து முதல்வாதம் மற்றும் மதத்தின் முக்கிய கோட்பாடுகளுக்கு இடையேயான ஒற்றுமை இவை தமது சாரம்சத்தில் சமூக பாத்திரத்திலும் நெருக்கமானவை என காண்பிக்கிறது.
கருத்து முதல் வாதமும்- மதமும் பொருள்முதல் வாதத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் எதிரானவை ஆகும்.
அப்படிபட்ட ஒரு கோட்பாட்டை வகுத்தளித்த அனுபவவாதம் பற்றி லெனின் முழு நுலை வாசிக்கும் முயற்சி இன்று பக்கம் 102லிருந்து வாசிக்க உள்ளோம்..
No comments:
Post a Comment