கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் முதல் தொகுதியை அடிப்படையாகக் கொண்டு, முதலாளித்துவ உற்பட்சியின் தன்மைகள் மற்றும் அதன் சுரண்டல் முறைகளை இப்பகுதி விரிவாக விளக்குகிறது. பண்டங்களின் பகுப்பாய்வு மற்றும் உழைப்புச் சக்தியின் மதிப்பை ஆராய்வதன் மூலம், மார்க்ஸ் உபரிமதிப்புத் தத்துவத்தின் அறிவியல் அடிப்படையை வெளிப்படுத்தியுள்ளார். இயந்திரங்களின் பயன்பாடு மற்றும் மூலதனத்தின் திரட்சி எவ்வாறு தொழிலாளர்களின் வர்க்க முரண்பாடுகளைத் தீவிரப்படுத்துகிறது என்பதை இது அலசுகிறது. இறுதியில், முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த முரண்பாடுகள் தவிர்க்க முடியாத சோஷலிசப் புரட்சிக்கு வழிவகுக்கும் என்று இப்பகுதி முடிவு செய்கிறது...
இந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே
காரல் மார்க்சின் வாழ்க்கை வரலாறு 10 அத்தியாயம்
முதலாளித்துவ உற்பத்தி முறையில் உபரி மதிப்பு (Surplus Value) எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதை கார்ல் மார்க்ஸ் தனது 'மூலதனம்' நூலில் விரிவாக விளக்கியுள்ளார்:
-
உழைப்புச் சக்தி பண்டமாக மாறுதல்: முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளி தனது 'உழைப்பை' விற்கவில்லை; மாறாகத் தனது 'உழைப்புச் சக்தியை' (உழைப்பதற்கான ஆற்றல்/திறன்) முதலாளிக்கு பண்டமாக விற்கிறார். உழைப்புச் சக்திக்கு மற்ற பண்டங்களைப் போலவே பயன்பாட்டு மதிப்பும் மதிப்பும் உண்டு.
-
அவசியமான வேலை நேரம் (Necessary Labor Time): உழைப்புச் சக்தியின் மதிப்பு என்பது தொழிலாளியும் அவரது குடும்பமும் பராமரிக்கப்படுவதற்குக் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் மதிப்பாகும். ஒரு வேலை நாளில் தொழிலாளி தனது உழைப்புச் சக்தியின் மதிப்பிற்கு இணையான வாழ்வாதாரப் பொருட்களை உற்பத்தி செய்ய எடுத்துக்கொள்ளும் நேரம் 'அவசியமான வேலை நேரம்' எனப்படுகிறது.
-
உபரி வேலை நேரம் மற்றும் உபரி மதிப்பு: உழைப்புச் சக்தியின் பயன்பாட்டு மதிப்பு (புதிய மதிப்பை உருவாக்கும் திறன்), அதன் சொந்த மதிப்பைக் காட்டிலும் அதிகமாகும். அவசியமான வேலை நேரத்திற்குப் பிறகு, வேலை நாளின் எஞ்சிய பகுதியில் தொழிலாளி உழைக்கும் நேரம் 'உபரி வேலை நேரம்' (Surplus labor time) எனப்படும். இந்த உபரி வேலை நேரத்தில் தொழிலாளி உருவாக்கும் கூடுதலான மதிப்பே உபரி மதிப்பு ஆகும். இக்க கூடுதலான மதிப்பை முதலாளி தனதாக்கிக் கொள்கிறார்.
-
உபரி மதிப்பை அதிகரிக்கும் இரு வழிகள்: முதலாளிகள் உபரி மதிப்பின் அளவை அதிகரிக்க இரண்டு முக்கிய முறைகளைப் பயன்படுத்துகின்றனர்:
- முழுமையான உபரி மதிப்பு (Absolute Surplus Value): அவசியமான உழைப்பு நேரத்தை நிலையாக வைத்துக்கொண்டு, வேலை நாளின் நீளத்தை (வேலை நேரத்தை) அதிகரிப்பதன் மூலம் உபரி உழைப்பு நேரத்தைப் பெருக்குவது.
- சார்புநிலையான உபரி மதிப்பு (Relative Surplus Value): வேலை நாளின் நீளத்தை மாற்றாமல், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரித்து, அவசியமான உழைப்பு நேரத்தைக் குறைப்பதன் மூலம் உபரி உழைப்பு நேரத்தை அதிகப்படுத்துவது.
மார்க்சின்
வாழ்க்கை வரலாற்று நூலிலிருந்து
ஏங்கெல்ஸ் "உபரிமதிப்பு தத்துவங்கள்" என்னும் இந்நூலின் மூன்றாவது
விமர்சனப் பகுதியை மூலதனத்தின் நான்காவது கடைசித் தொகுதியாக வெளியிடுவதற்கு
விரும்பியிருந்தார். ஆனால் அதை அவரால் செய்து முடிக்க முடியவில்லை.
முதலாளித்துவ உற்பத்தியின் செயல் வழி முறை
மார்க்ஸினுடைய மூலதனம் வாழ்நாள் முழுமையான ஒரு நூலாகும். விஞ்ஞான
கம்யூனிஸத்தின் பிரதானமான நூலாகும். அதன் முதல் தொகுதி முதலாளித்துவ உற்பத்தியின்
செயல்வழி முறையைப் பற்றி ஆராய்ந்து கூறுகிறது. மார்க்ஸ் தானே கூறியுள்ளதைப் போல
இந்தத் தொகுதியின் ஆரம்பத்தில் (முதலாவது ஜெர்மன் பதிப்பின் முதல் அத்தியாயம்,
அடுத்த பதிப்புகளில் அதற்கு இணையான முதல் பாகம்.) அரசியல்
பொருளாதார விமர்சன ஆய்வுக்கு ஒரு பங்களிப்பின் முதலாவதும் ஒரே ஒரு பாகமாகவும்
உள்ளதை அவர் "சுருக்கி" சாரப்படுத்தி எழுதியுள்ளார்.
மீண்டும் ஒரு முறையாக பண்டத்தைப் பற்றிய பகுப்பாய்வாக மார்க்ஸ் தொடங்குகிறார்.
பண்டம்தான் பூர்ஷ்வா செல்வத்தின் ஆரம்ப உயிரணு வடிவம். இதைப் பற்றிய ஆய்வு,
முதலாளித்துவ உற்பத்தியின் மிக மேலான இன்னும் அதிகமான
சிக்கலும் பின்னலும் நிறைந்த வடிவங்களைப் பற்றிய ஆராய்ச்சிக்கு மிகவும் முக்கியமான
மய்யமான முன் தேவையாகும். 2,000 ஆண்டுகளுக்கு மேலாக மனிதகுலம் பண்டத்தைப் பற்றிக்
கிரகித்துக் கொள்வதற்கு முயன்று பார்த்தது. அதை மதிப்பின் வடிவமாகக் கொண்டது. அது
முதல் பார்வையில் ஒரு சாதாரண விஷயமாகத் தோன்றுகிறது. ஆனால் இது அளவு கடந்த மிகவும்
கடினமான ஒரு கட்டமைப்பாக நிரூபணமாயிற்று. இந்த மிகப் பெரிய கடமையை மார்க்ஸ்
முன்வந்து நிறைவேற்ற வேண்டியதாயிற்று. பணம் என்பது பண்டங்களிலேயே ஒரு தனித்தன்மை
வாய்ந்த ஒரு பண்டம் என்றும் அப்பணம் உள்பட அதன் வரை மதிப்பின் வடிவத்தை மிகவும்
ஆழ்ந்து தெள்ளத் தெளிவாகப் பகுத்தாய்ந்தார் மார்க்ஸ். இது அவருடைய மிகப் பெரிய
ஆகப் பெரிய அறிவியல் சாதனைகளில் ஒன்றாகும். மதிப்பின் வடிவத்தைப் பற்றிய அவருடைய
பகுப்பாய்வு மூலதனத்தைப் பற்றிய பகுப்பாய்வில் அவருடைய வெற்றிக்கு வழிவகுத்துக்
கொடுத்தது.
மூலதனம் முதல் தொகுதியின் முக்கியமான முதன்மையான உள்ளடக்கம்,
முதலாளித்துவத்தின் கீழ் உள்ள மேலாதிக்கம் செலுத்துகின்ற
உற்பத்தி உறவான மூலதனம் கூலி உழைப்பைச் சுரண்டுவதைப் பற்றிய ஒரு தொகுப்பாய்வாகும்.
பண்ட உற்பத்தி வளரும்போது பணம் மூலதனமாக மாற்றப்படுகிறது. சாதாரண பண்டப்
பொருளாதாரம் ஒரு முதலாளித்துவப் பொருளாதாரமாக கூலி உழைப்பைச் சுரண்டுவதை
அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரமாக மாற்றப்படுகிறது.
முதலாளித்துவ சுரண்டலின் ரகசியத்தை மார்க்ஸ் கண்டுபிடித்தார். உபரி மதிப்பு
பற்றிய ஒரு உண்மையான விஞ்ஞான பூர்வமான தத்துவத்தை முன் வைத்தார். அதைப் பற்றி அது
அவர்களுக்கு ஒரு பேரிடியாக விழுந்தது என்று ஏங்கல்ஸ் கூறினார். பண்டைய வழிவந்த
பூர்ஷ்வா அரசியல் பொருளாதார நிபுணர்கள் உபரி மதிப்பின் மூலாதாரத்தையும் அல்லது
அதன் உண்மையான தன்மையையும் விளக்குவதற்கு சக்தியற்றிருந்தார்கள்.
பண்டம் என்பதே பயன்பாட்டு மதிப்பும் (மனித சமுதாயத்தின் சில தேவைகளைப்
பூர்த்தி செய்யும் குணப் பொருளைக் கொண்டது), மதிப்பும் (ஒரு உற்பத்திப் பொருளில் அடங்கியுள்ள
சமுதாயத்திற்கு அவசியமாகத் தேவையான வேலை நேரம்) ஒன்று சேர்ந்து இணைந்த ஒன்றாகும்
என்பதைப் போல பண்ட உற்பத்தியின் செயல்வழிப் போக்கும் ஒரே நேரத்தில் இணைவாக
உழைப்பின் செயல் போக்கையும் மதிப்பை உண்டாக்கிக் கொடுக்கும் செயல்வழி போக்கையும்
கட்டாயம் வெளிப்படுத்த வேண்டும். இது முதலாளித்துவ உற்பத்தி முறையாக ஏற்பட்டுள்ள
காரணத்தால் மதிப்பை உண்டாக்குதல் என்பதும் முதலாளி உருவாக்கும் நோக்கம் என்பதும்
ஒரு குறிப்பிட்ட திட்டவட்டமான அதிகப்படி மதிப்பை உற்பத்திச் செய்வதற்காகத்தான்
என்பதும் உள்ளடங்கியிருக்கிறது. "அவருடைய குறிக்கோள் ஒரு பயன்பாட்டு மதிப்பை
உற்பத்திச் செய்வது மட்டுமல்ல, ஒரு பண்டத்தை உற்பத்திச் செய்கிறார். பயன்பாட்டு மதிப்பு
மட்டுமல்ல ஆனால் மதிப்பு, மதிப்பு மட்டுமல்ல அதே சமயத்தில் உபரி மதிப்பு."¹
¹ 1. Karl Marx, Capital, Vol. I, p. 186.
மார்க்ஸ் கண்டுபிடித்தது: பூர்ஷ்வாப் பொருளாதார நிபுணர்கள் எண்ணுவதைப் போல
உழைப்பு தானே அல்ல ஆனால் உழைப்புச் சக்தி அல்லது உழைப்பதற்கான ஆற்றல் திறன் தான்
பண்டமாகும் என்னும் உண்மையை. அந்த உழைப்பு சக்தியைத்தான் தொழிலாளி விற்கிறான்,
முதலாளி விலைக்கு வாங்குகிறான். இந்தக் கண்டுபிடிப்பு
முதலாளித்துவ சுரண்டலின் அதி நுட்ப முறையைப் புரிந்து கொள்வதற்கான முக்கிய
சாதனத்தை நமக்கு அளிக்கிறது. ரிக்கார்டோவின் வழிமுறையினால் தீர்க்கப்பட முடியாத
பிரச்சனைகளில் ஒன்றைத் தீர்ப்பதற்கு உதவி செய்கிறது. அதாவது மூலதனத்திற்கும்
உழைப்பிற்கும் இடையிலுள்ள பரிவர்த்தனைக்கும் உழைப்பின் மூலம் பண்டங்களின் மதிப்பை
நிர்ணயித்து உறுதி செய்வதற்கும் இடையில் இணைப்பை உண்டாக்குவது பற்றியதாகும்.
உழைப்பு சக்தி வேறு எந்த ஒரு பண்டத்தைப் போலவே பயன்பாட்டு மதிப்பும் மற்றும்
மதிப்பும் கொண்டிருக்கிறது. உழைப்புச் சக்தியின் பயன்பாட்டு மதிப்பு என்பது
மதிப்பை உண்டாக்குவதற்கு அதற்குள்ள ஆற்றல் அளவாகும். அது உழைப்பு சக்தி
கொண்டிருக்கும் மதிப்பைக் காட்டிலும் அதிகமான மதிப்பாகும். அந்த உழைப்புச்
சக்தியின் மதிப்பு என்பது ஒரு தொழிலாளித் தன்னையும் தனது குடும்பத்தையும்
பராமரிப்பதற்கு வாழ்க்கை நடத்துவதற்கு - மிகவும் அத்தியாவசியமான தேவைகளுக்கான
சாதனங்களின் மதிப்பாகும். உழைப்புச் சக்தியின் மதிப்பு உற்பத்திக்கு அவசியமான
உழைப்பு நேரத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. அதன் விளைவாகவே இந்தக் குறிப்பிட்ட
பண்டத்தின் மறு உற்பத்திக்கும் அவசியமான உழைப்பு நேரத்தால் நிர்ணயிக்கப்படுகிறது.
உழைப்புச் சக்தியின் மதிப்பு பண வடிவத்தில் அதன் கணக்கில் கூலியாக
வெளிப்படுத்தப்படுகிறது. அது திண்ணிய பொருளாதார நிலைமையைப் பொறுத்தும் குறிப்பிட்ட
நாட்டிலுள்ள பரம்பரையான வாழ்க்கை முறைகளைப் பொறுத்தும் தொழிலாளி வர்க்கத்தின் ஸ்தாபனத்தையும்
பலத்தையும் பொறுத்தும் இன்னும் இதர பல அம்சங்களைப் பொறுத்தும் உழைப்புச் சக்தியின்
மதிப்பைச் சுற்றி மேலும் கீழும் செல்லும் பல்வேறு வடிவங்களையும் எடுக்கும். கூலி
என்பது உழைப்பிற்கான விலையைப் போலவே தோன்றும். மதிப்பின் மாற்றப்பட்ட ஒரு வடிவமாக,
உழைப்புச் சக்தியின் விலையின் வடிவமாக அவைகள் உழைப்பின்
விலையாகத் தோற்றமளிக்கிறது. அதன் மூலம் அது சுரண்டலின் செயல் வழிப்போக்குகளை மூடி
மறைத்துத் தெளிவில்லாததாக்குகிறது. தொழிலாளி தனது உழைப்பை விற்கிறார் என்றும்
அவருடைய உழைப்பிற்கு ஊதியமளிக்கப்படுகிறது என்றும் தோன்றுகிறது. ஆனால் கூலி என்பது
எப்போதுமே, கூலி
உழைப்பு உண்டாக்கும் உற்பத்திப் பொருளின் மொத்த மதிப்பைக் காட்டிலும்
குறைவாகவேதான் இருக்கின்றது. தொழிலாளி, உற்பத்திச் சக்தியை மறு உற்பத்திச் செய்வதற்கு அவசியமாகத்
தேவையான சாதனங்களின் மதிப்பை உற்பத்தி செய்கிறார். இதை அவர் மொத்த வேலை நேரத்தின்
(அவசியத் தேவையான வேலை நேரம்) ஒரு குறிப்பிட்ட பகுதி அளவு நேரத்திற்குள் செய்து
முடிக்கிறார். மொத்த வேலைநேரத்தில் பாக்கியுள்ள நேரத்தில் (உபரி வேலை நேரம்)
அவருடைய உழைப்புச் சக்தியின் மதிப்பிற்கும் அப்பால் அதற்கு மேலும் ஒரு கூடுதலான மதிப்பை
அல்லது உபரி-மதிப்பை உண்டாக்குகிறார்.
பூர்ஷ்வா அரசியல் பொருளாதாரம் மூலதனத்தை உழைப்பின் மொத்த சேமிப்பு அதாவது
உற்பத்திச் சாதனம் என்று பிரகடனம் செய்தது. மனித சமுதாயம் நிலைத்திருப்பதற்கே ஒரு
நிரந்தரமான நிபந்தனையிலையென்றும் அதைக் கருதுகிறது. மார்க்ஸ் அதைத் தவறு என்று
நிரூபித்து விட்டார், உற்பத்திச் சாதனம் ஒரு குறிப்பிட்ட நிபந்தனை, நிலையில்தான் அவைகள் முதலாளிகளுடைய சொத்துடைமையாகும்
போதுதான் கூலி உழைப்பைச் சுரண்டுவதற்கு பயன்படுத்தும் போதுதான் மூலதனம் ஆகிறது
என்று எடுத்துக் காட்டினார். இவ்வாறாக மூலதனம் என்பது ஒரு வரலாற்றுக்கால
கட்டமைப்பிற்குள் மட்டுமே கட்டுக்கடங்கியுள்ள ஒரு சமுதாய உறவாகும்.
முதலாளித்துவ சுரண்டலைப் பற்றிய விஞ்ஞான விளக்கத்தின் மிக விரிவான
முக்கியத்துவத்தில் பண்டங்களின் மதிப்பை உருவாக்கி அமைப்பதில் உயிருள்ள உழைப்பும்
உற்பத்திச் சாதனங்களும் ஆற்றியுள்ள பங்கைப் பற்றி பகுப்பாய்வதாக உள்ளது. பண்டைய
வழிமுறையின் பூர்ஷ்வா அரசியல் பொருளாதார நிபுணர்கள் மூலதனத்தை இயந்திர தளவாட
இருப்பு மூலதனம் என்றும் சுற்றுக்கு விடப்படும் மூலதனம் என்றும் பிரித்தனர்.
மார்க்ஸ் இந்த வகைப்படுத்தலை நிராகரிக்கவில்லை. ஆனால் உபரி மதிப்பின் உற்பத்தியில்
மூலதனம் ஆற்றிவரும் பங்கு என்னும் கண்ணோட்ட நிலையிலிருந்து அவர் மேலும் தொடர்ந்து
சென்று மற்றொரு முக்கியமான அம்சத்தைக் கொண்டு வந்தார். அதை நிலையான மூலதனம்
என்றும் பெருகும் மூலதனம் என்றும் விவரித்தார். உற்பத்திச் சாதனங்கள் எந்தப் புதிய
மதிப்பையும் உண்டாக்கி விடுவதில்லை. உயிருள்ள உழைப்பு மட்டுமேதான் புதிய
மதிப்பிற்கான மூலாதாரமாக உள்ளது. உற்பத்தியின் நிகழ்ச்சிப் போக்கில் உயிருள்ள
உழைப்பு உற்பத்திச் சாதனங்களின் மதிப்பை அவைகள் பயன்படுத்தப்படுவதை வைத்து புதிய
உற்பத்திப் பொருளாக மாற்றுகிறது.
மார்க்ஸ் மூலதனத்தை நிலையான மூலதனம் என்றும் பெருகும் மூலதனம் என்றும்
பிரித்ததன் மூலம் கூலி உழைப்பைச் சுரண்டுவதைப் பற்றிய மிகத்தெளிவான ஒரு
பகுப்பாய்வைக் கொடுக்க முடிந்தது. அத்துடன் சுரண்டலின் அளவு மட்டத்திற்கு உபரி
மதிப்பின் அளவு விகிதாச்சாரத்தை முதலீடு செய்யப்பட்ட மொத்த மூலதனத்திற்கல்லாமல்
பெருகும் மூலதனத்துடன் மட்டும் ஒப்பிடுவதன் மூலம் ஒரு அளவு முறையிலான
வெளிப்படுத்தலைக் கண்டுபிடிக்கவும் முடிந்தது. மார்க்ஸ் இதை உபரி மதிப்பின்
விகிதம் என்றும் அல்லது சுரண்டலின் விகிதம் என்றும் அழைத்தார். முதலாளித்துவம்
வளர்ச்சியடைவதையொட்டி சுரண்டல் அளவின் விகிதமும் அதிகரிக்கும் போக்கில் செல்கிறது.
அதை ஒட்டி ஒரே சமயத்தில் பாட்டாளி வர்க்கத்திற்கும் பூர்ஷ்வா வர்க்கத்திற்கும்
இடையில் உள்ள முரண்பாடுகளும் ஆழமடைகின்றன. இன்னும் அதிகமான அளவில் தீவிரமாக
வளருகின்றன.
மூலதனத்தின் முதல் தொகுதியில் மார்க்ஸ் உபரி மதிப்பின் அளவு விகிதத்தை
அதிகப்படுத்துவதற்கு முதலாளிகளால் பயன்படுத்தப்படும் வழிமுறைகளை அலசி ஆராய்ந்து
விளக்குகிறார். அவைகள் இரண்டு வழிகள்: 1) அவசியமான உழைப்பு நேரத்தின் பரிமாணத்தை நிலையாக நிறுத்தி
வேலை நாளை நீடிப்பதன் மூலம் உபரி வேலை நேரத்தை அதிகப்படுத்துகிறான் (இது முழு
மொத்தமான உபரி மதிப்பு). 2) வேலை நாளின் நீளத்தை நிலையாக நிறுத்தி உழைப்பின் தீவிரத்தன்மையையும்
உற்பத்தித் திறனையும் அதிகரிக்கிறான். அதன் மூலம் அவசியமான வேலை நேரத்திற்கும்
உபரி வேலை நேரத்திற்கும் இடையில் உள்ள சார்புறவை தனக்குச் சாதகமாக மாற்றிக்
கொள்வது (சார்பு நிலையான உபரி மதிப்பு). முந்தைய முறை முதலாளித்துவ உற்பத்தியின்
ஆரம்பக் கட்டங்களின் பிரதான குணாம்சங்களாக இருந்தன. அப்போது முக்கியமாக கைத்தொழில்
நுணுக்க முறையின் அடிப்படையில் இருந்தது. ஒப்பீட்டு நோக்கும் போது உழைப்பு பற்றி
பண்டைய அமைப்பு முறை மேலோங்கியிருந்தது. பிந்தைய முறை முதலாளித்துவ உற்பத்தி
முறையின் மேலான உயர்ந்த வளர்ச்சிக்கட்டத்தின் பிரதான குணாம்சமாகும். அப்போது
உற்பத்தியின் தொழில் நுட்பம் மற்றும் ஸ்தாபன அமைப்பு நிலைகள் மிகவும்
முதிர்ச்சியடைந்திருந்தன. அத்துடன் தொழிலாளி வர்க்கத்தின் மேலான எழுச்சிமிக்க
மோதல் நிறைந்த போராட்டங்கள் பூர்ஷ்வா வர்க்கத்தை நிர்ப்பந்தப்படுத்தி வேலை நாளில்
குறைப்பை ஏற்படுத்தியது. வேலை நேரத்தைக் குறைப்பதற்காக தொழிலாளி வர்க்கம் நடத்திய
போராட்டத்தைப் பற்றிய ஏராளமான உண்மை விவரங்களைப் பற்றிய சித்திரத்தை மார்க்ஸ்
பெரும் அளவில் பயன்படுத்திக் காட்டியுள்ளார்.
எனினும் உபரி மதிப்பில் ஒரு முழு மொத்தமான அதிகரிப்பை அடைவதற்கான முயற்சியில்
முதலாளிகள் உண்மையில் எப்போதுமே வேலை நாளை நீடிப்பதற்கு எல்லாவிதமான
முயற்சிகளையும் செய்கிறார்கள். ஒவ்வொரு மணி வேலை நேரத்திலும் தொழிலாளியை அதிகமான
உழைப்பைச் செலுத்தச் செய்வதற்கு உழைப்பைத் தீவிரமாக அதிகப்படுத்துவதற்கு
எல்லாவிதமான நிர்ப்பந்தங்களையும் கொடுப்பதற்கு முயற்சிக்கிறார்கள். எவ்வளவு
கிடைத்தாலும் திருப்தியடையாத அடக்க முடியாத பேராசை மிக்க முதலாளித்துவம்
கட்டுப்படுத்தப்பட வேண்டுமானால் "உயிருள்ள எந்திரங்களின்" உடல் வாய்ப்புகள்
மூலமும் அவர்களுடைய அதிருப்தி என்னும் பயத்தின் மூலமும்தான் முடியும்.
புகைப்படங்களில் உள்ள பக்கங்களின் அச்சு வடிவம் கீழே உள்ளவாறு தரப்பட்டுள்ளது:
பல அத்தியாயங்களில், அப்போது வளர்ச்சியடைந்த முதலாளித்துவத்திற்கு முன்னுதாரணமாக இருந்த
இங்கிலாந்து சம்பந்தப்பட்ட பல விவரங்களை அடிப்படையாகக் கொண்டு சார்பு நிலையான உபரி
மதிப்பை உண்டாக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட முறைகளைப் பற்றிய மிகச்சிறந்த தெளிவான
வரலாற்றுக் கட்டுரையை மார்க்ஸ் முன்வைத்தார். அதில் சாதாரண ஆரம்ப நிலை ஒத்துழைப்பு,
பட்டறைத் தொழில்முறை, பெரிய அளவிலான தொழில் ஆகிய முதலாளித்துவ வளர்ச்சியின்
மூன்று கட்டங்களைப் பற்றியும் விவரிக்கிறார். இந்தக் காட்சி வடிவம் குறைவான
வளர்ச்சியடைந்திருந்த நாடுகள் தங்களின் எதிர்காலக் காட்சியின் சாயலையே முன்
வைக்கப்பட்டிருந்தது. அவர், முதலாளித்துவத்தில் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதன் வரலாறு,
நிபந்தனைகள், காரண விளைவுகள் ஆகியவைகளைப் பற்றி சிறப்பான வகையில் மிக
விரிவான முறையில் தொகுப்பாராய்ச்சி செய்தார். எந்திரங்களும் இதர தொழில்நுட்பக்
கண்டுபிடிப்புகளும் உழைப்பாளர்களின் வேலைப்பளுவைக் குறைக்கவில்லை என்னும்
உண்மையானது எல்லாவித புதிய, சமீபத்திய தொழில் நுட்ப உழைப்புச் சாதனங்கள் திருப்பி விடப்பட்டுள்ள
குறிக்கோள்கள் எதுவோ அதன் மூலமாகத்தான் மொத்தத்தில் நிர்ணயிக்கப்படுகின்றன. அதாவது
தொழில் நுட்ப உழைப்புச் சாதனங்களை எத்திசையில் முதலாளித்துவம் திருப்பி விடுகிறது?
அதன் குறிக்கோள்: பண்டங்களின் உற்பத்திச் செலவைக் குறைத்தல்,
அவசியமான உழைப்பின் அளவைக் குறைத்தல்,
கூடுதலாக வரும் உழைப்பு நேரத்தை நீட்டுதல் அதாவது
"சோம்பேறி கணவான்களுக்காக" உபரி மதிப்பை உற்பத்தி செய்வதற்கு ஒரு
கருவியாக மட்டுமே அவை பயன்படுகின்றன.
வேலைப் பிரிவினை மற்றும் முதலாளித்துவம் எந்திரங்களைப் பயன்படுத்திப்
பிரயோகிக்கும் முறை ஆகியவைகளின் பயனாக உழைப்பின் உற்பத்தித்திறன் வளருகிறது. அதைத்
தொடர்ந்து தொழிலாளர்களின் நல நிலைமைகளிலும் ஒரு பொதுவான வீழ்ச்சியும் சீரழிவும்கூட
ஏற்படுகின்றன. முதலாளித்துவ நாடுகளில் எந்திரங்களின் விளைவாகப் பெரும் அளவில்
வேலையில்லாத் திண்டாட்டம் பெருகுகிறது. எண்ணற்ற பல தொழில் விபத்துக்கள்
ஏற்படுகின்றன. உழைப்பு மிகவும் கடுமையாகிறது. அழுத்தமாகிறது,
சலிப்பூட்டுகிறது, சோர்வும் ஊக்கமின்மையும் ஏற்படுகிறது. மூலதனத்தின்
கொடுங்கோன்மை அதிகரிக்கிறது. முட்டாள்தனமான பட்டாளத்துப் பாடிவீட்டுக்
கட்டுப்பாட்டு முறைகள் புகுத்தப்படுகின்றன.
பட்டறைத் தொழிற்சாலையில் வேலையின் வேகமும் தரமும் நேரடியாகத் தொழிலாளியையும்
அவனுடைய திறமையையும் அவனுடைய அனுபவத்தையும் ஊக்கத்தையும் இன்னும் இதர தன்மைகளையும்
பொறுத்திருக்கிறது. எந்திரத் தொழிற்சாலையில் வேலையின் வேகம் மிகப் பெரும்பாலும்
எந்திரத்தையும் குறிப்பிட்ட தொழில் நுட்ப செயல்பாக்கையும் பொறுத்திருக்கிறது.
அதன்படி எந்திர உற்பத்திக் கட்டம் உண்மையில் மூலதனத்திற்கு உழைப்பு கீழடங்கி
அடிபணிந்து விட்ட நிலைமையாகும் என்று மார்க்ஸ் கூறுகிறார். எந்திரத்திலும்
எந்திரத் தொழிலிலும் முதலாளித்துவம் ஒரு பௌதிகப் பொருளாயதத் தொழில்நுட்ப
அடிப்படையைப் பெறுகிறது. அதுவே அதற்குப் போதுமானதாக இருக்கிறது.
முதலாளித்துவ சுரண்டலின் சாராம்சத்தையும் உபரி மதிப்பு உற்பத்தியின்
வளர்ச்சியையும் முழுமையாகப் பரிசீலனை செய்து ஆராய்ந்து பார்த்து மார்க்ஸ்
முதலாளித்துவ சேமிப்புத் திரட்சி பற்றிய பிரச்சனையை அதாவது உபரி மதிப்பை மூலதனமாக
மாற்றுதல் பற்றிய பிரச்சனையை முழுமையாகத் தெளிவாகப் பகுப்பாய்வு செய்தார்.
உற்பத்தியின் ஒவ்வொரு நிகழ்ச்சிப் போக்கும் அது திரும்பத் திரும்ப
நிகழ்த்தப்படும்போது அது அவசியமாகவே ஒரு மறு உற்பத்தியின் செயல்போக்காகிறது.
முதலாளித்துவ உற்பத்தியின் நிகழ்ச்சிப் போக்கில் தொழிலாளி உழைப்பு உற்பத்திப்
பொருளின் மதிப்பில் முன்கூட்டியே மூலதனத்தை மறு உற்பத்திச் செய்து அதற்கு மேலும்
அதற்கு அதிகமாகவும் உபரி மதிப்பை உண்டாக்குகிறான். உபரி மதிப்பு முழுவதையும்
முதலாளி நுகர்ந்துவிட்டால் உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கு ஒரு சாதாரண மறு
உற்பத்தியாகவே இருக்கும். அதாவது மாறாத அளவில் உற்பத்தியின் நிகழ்ச்சிப்போக்கை திரும்பத்
திரும்ப நடத்துவதாகும். ஆனால் முதலாளித்துவத்தில் மிகவும் விரிவுபடுத்தப்பட்ட மறு
உற்பத்தியில் ஈடுபடுவது அதாவது மூலதனம் சேமித்துத் திரட்டப்படுவது என்பது
உள்ளடங்கியுள்ள குணமாகும்.
தொழிலாளர்கள் தங்கள் உழைப்பின் மூலம் முதலாளிகளுக்கு தங்களுடைய சொந்த
உபயோகத்திற்கு எவ்வளவு தேவையோ அதைக் காட்டிலும் மிகவும் கணிசமாகப் பெரும் அளவில்
உபரி மதிப்பை உண்டாக்குகிறார்கள். உபரி மதிப்பின் ஒரு பகுதி மூலதனமாக
மாற்றப்படுகிறது. அது மேலும் உற்பத்தியின் அளவைப் பெருக்கி விரிவுபடுத்துவதற்கு
உபயோகப்படுத்தப்படுகிறது. அதன் விளைவாக தொழிலாளி முதலாளியின் சொந்த உபயோகத்திற்கான
சாதனங்களை மட்டும் அல்லாது சுரண்டல் களத்தை விரிவுபடுத்துவதற்கு மேலும் அதிகமாகத்
தேவைப்படும் சாதனங்களையும் உண்டாக்கிக் கொடுக்கிறான்.
மூலதனச் சேமிப்புத்திரட்சி அல்லது விரிவுபடுத்தப்பட்ட முதலாளித்துவ மறு
உற்பத்தியைத் தொடர்ந்து அத்துடன் மூலதனத்தின் உயிர்ப்பொருள் அமைப்பின்
வளர்ச்சியும் ஏற்படுகிறது. இதன் பொருள் மூலதனத்தின் நிலையான பகுதிக்கும் பெருகும்
பகுதிக்கும் இடையிலான உறவு அதாவது உற்பத்திச் சாதனங்களின் மதிப்பிற்கும்
ஒட்டுமொத்தமான கூலிக்கும் இடையிலுள்ள உறவாகும் என்று மார்க்ஸ் கூறுகிறார்.
அபிவிருத்தியான முன்னேற்றகரமான எந்திரங்கள் புகுத்தப்படுவதன் மூலமும் உற்பத்தி
நுட்பத்தின் வளர்ச்சியின் மூலமும் நிலையான மூலதனம் பெருகும் மூலதனத்தைக்
காட்டிலும் வேகமாக வளரும் போக்கு ஏற்படுகிறது. அதன் விளைவாக தொழிலாளி வர்க்கத்தைச்
சுரண்டுவது அதிகமாகிறது. உபரி மதிப்பு விகிதம் பெருகுகிறது.
அதே சமயத்தில் மூலதனத்தின் உயிர்ப்பொருள் சேர்க்கை அமைப்பின் வளர்ச்சியும்
அதன் விகிதாசார அளவில் உழைப்புச் சக்தியின் தேவையும் வீழ்ச்சியடைகிறது. காரணம்
இந்தத் தேவை மொத்த மூலதனத்தின் தொகையை வைத்தல்லாமல் அதன் பெருகும் பகுதியினால்
மட்டும் நிர்ணயிக்கப்படுகிறது. அப்பகுதி ஒப்பீட்டு நோக்கில் மிகவும்
குறைக்கப்பட்டுள்ளது.
மால்த்தூஸ் முன்வைத்த "எப்போதும் உள்ள நிரந்தரமான"
"இயற்கையான" ஜனத்தொகை விதிக்கு நேர்மாறாக, மார்க்ஸ் முதலாளித்துவத்தின்கீழ் உள்ள உண்மையான மக்கள் தொகை
விதிமுறைகளை உருவாக்கினார். அந்த விதிமுறை உறுதியற்ற தன்மை கொண்டதாய் சில
காலத்தில் மாறி விடுவதாய் முதலாளித்துவத்தின் இயல்பால் மட்டுமே
நிர்ணயிக்கப்படுவதாய் உள்ளது.
உழைக்கும் மக்கள் தொகையின் ஒரு பகுதி உற்பத்தியிலிருந்து
வெளியேற்றப்படுகிறார்கள். சார்பு நிலையிலான அதிகப்படியான மக்கள் தொகை என்னும்
பெயரில் ஒரு கூட்டம் அல்லது தொழில் துறை இருப்பு (ரிசர்வ்) படையாக அமைதியான
வேலையில்லாமை தொழிலாளர்களின் பொருளியல் நிலைமைகளில் படுமோசமான வீழ்ச்சியை
ஸ்திரமற்ற நிலையை விளைவிக்கிறது. எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்ற நிலையை
உண்டாக்குகிறது. கூலி விகிதத்தின் பொது நிலையில் அழுத்தம் ஏற்பட்டு குறையும்
அபாயம் ஏற்படுகிறது. அதைக் காட்டி பயமுறுத்தி வேலை செய்து கொண்டிருக்கும்
தொழிலாளர்களின் உழைப்பை முதலாளிகள் அதிகப்படுத்தித் தீவிரப்படுத்துவதற்கு
சுலபமாகிறது.
அதன் விளைவாக மூலதனம் சேமிக்கப்பட்டுத் திரளும்போது முதலாளித்துவ சமுதாயத்தின்
ஒரு பக்கத்தில் மிகப்பெரும் அளவில் செல்வம், செருக்கு, ஆடம்பரம், புல்லுருவித்தனம், சுரண்டும் கூட்டத்தினரால் அளவுக்கு மீறிய ஆடம்பரச் செலவுகள்
ஆகியவை வளருகின்றன. மறுபக்கத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் ஒடுக்குமுறை,
சுரண்டல், வேலையில்லாத் திண்டாட்டம், உழைக்கும் மக்களுக்கு வாழ்க்கைக்குப் பாதுகாப்பின்மை ஆகியவை
அதிகரித்துக் கின்றன. சமுதாயச் செல்வம் எவ்வளவு அதிகமாக உள்ளதோ,
மூலதனத்தின் செயல்பாடு, அதன் வளர்ச்சியின் விரிவும் பலமும்,
அதன் காரணமாய் பாட்டாளி வர்க்கத்தின் மொத்தமான எண்ணிக்கைத்
திறன்,
அதன் உழைப்பின் உற்பத்தித்திறன் எந்த அளவுக்கு
அதிகரிக்கிறதோ அந்த அளவு தொழில்துறை இருப்பு (ரிசர்வ்) படையும் அதிகமாகிறது.
மூலதனம் விரிவுபட்டு ஆதிக்கமடையும் அதே காரணங்களின் விளைவாக அதன் ஆதிக்கத்தின்
கீழ்வரும் உழைப்பு சக்தியும் வளர்ச்சியடைகின்றன. தொழில் இருப்புப் படை எந்த
அளவுக்குப் பெரும் திரளாக அதிகரிக்கிறதோ அந்த அளவு ஒப்பீடாக செல்வாதாரத்தின்
ஆற்றல் வாய்ப்பு வளமும் அதிகமாகிறது. ஆனால் செயலில் உள்ள உழைப்பாளர் படையைக்
காட்டிலும் விகிதாசாரத்தில் இருப்புப் படை அதிகமாக இருந்தால் ஒன்றுதிரட்டி உறுதி
செய்யப்பட்டு உபரி மக்கள் தொகையின் திரட்சி அதிகமாக இருக்கும். அதனுடைய உழைப்பின்
வேதனையின் நேரடியான விகிதாசாரத்தில் அதன் அவல நிலையும் அதிகரிக்கிறது.... இதுதான்
முதலாளித்துவ சேமிப்புத் திரட்சியின் முழு மொத்தமான பொது விதிமுறையாகும்."¹
முதலாளித்துவ சேமிப்புத் திரட்சியின் தனி முதல் மொத்தமான பொது விதிமுறைகளை
மார்க்ஸ் கண்டுபிடித்தார், உருவாக்கினார். அதுதான் கூலி உழைப்பிற்கும் மூலதனத்திற்கும் இடையில் உள்ள
பகைமையான முரண்பாடுகளைப் புரிந்துகொள்வதற்கான தத்துவார்த்த அடிப்படையாக
இருக்கிறது.
மூலதனத்தின் பண்டைய காலச் சேமிப்புத்திரட்சி என்பது துணிவோடும் ஊக்கத்தோடும்
பல செயல் புரியும் திறமை படைத்த தனிநபர்களின் தலைசிறந்த தொழில் முயற்சி,
அரும்பாடு, சிக்கன சேமிப்பு முதலிய காரணங்களின் விளைவாகும் என்றும்
அத்தகைய தனிநபர்கள் படிப்படியாகத் தங்கள் சொந்த உழைப்பின் மூலம் ஏராளமான
செல்வத்தைச் சேர்த்தார்கள் என்றும் பூர்ஷுவா அறிவியல் நிபுணர்கள் பரப்பி வந்த
கற்பிதங்களை மார்க்ஸின் ஆராய்ச்சிகள் மறுத்தன. பண்டையக் கால சேமிப்புத்
திரட்சியின் நிகழ்ச்சிப் போக்கைப் பற்றி விவரித்துக் கூறப்படும் தனிச் சிறப்பான
ஒரு அத்தியாயத்தில் மார்க்ஸ், உற்பத்திச் சாதனங்களிலிருந்து நேரடியான உற்பத்தியாளர்களை
அது முழுமையாகத் தனியாகப் பிரித்தெடுத்ததும் ஆளும் வர்க்கங்களின் முரட்டுத்தனமான
வன்முறைச் செயல்களால் வேகப்படுத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சிப் போக்கின் விளைவும்
அடங்கியிருந்தது என்றும் எடுத்துக் காட்டினார். சிறிய,
நடுத்தர
¹ 1. Karl Marx, Capital,
Vol. I, p. 644.
விவசாயிகள் எப்படி வலுக்கட்டாயமாக தங்கள் நிலங்களிலிருந்து
விரட்டப்பட்டார்கள். அதன்மூலம் அவர்களுடைய நிலங்களை இழந்தார்கள் என்பதையும்,
கிராமங்களிலிருந்து விரட்டப்பட்டவர்கள் என்பதையும்,
அவர்கள் எவ்வாறு வளர்ந்துகொண்டிருந்த தொழில்களுக்கு ஒரு
மலிவான உழைப்பு சக்தியின் சேமிப்பாக மாற்றப்பட்டார்கள் என்பதையும் பற்றி மார்க்ஸ்
மிகவும் விரிவான ஒரு சித்திரத்தை வரைந்து காட்டினார். காலனிகளில் பயங்கரமான
படுமோசமான காட்டுக் கொள்ளை வழிப்பறி ரத்தக் களரி நிறைந்த சூறையாடுதல் மூலமும்
செல்வம் ஒரு சிலர் கைகளில் குவிந்து திரண்டது. பண்டைய கால மூலதனச் சேமிப்புத்
திரட்சியின் நிகழ்ச்சிப் போக்குகளைப் பற்றி விரிவாக விவரித்து மார்க்ஸ்
"மூலதனம் என்பது தலையிலிருந்து பாதம்வரை ஒவ்வொரு ரோமக்கண்ணிலிருந்தும்
ரத்தமாகவும் அழுக்கு நிறைந்த இதர பொருளாகவும் சொட்டுச் சொட்டாக வந்து
சேர்ந்ததாகும்"¹ என்று எழுதினார்.
மூலதனம் முதல் தொகுதியின் 24-வது அத்தியாயத்தின் (ஆங்கிலப் பதிப்பில் 32-வது அத்தியாயம்) இறுதிப்பகுதி இந்தப் படிப்பாய்வு
முழுவதினுடைய பலன்கள் அனைத்தையும் தொகுத்துக் கூறுகிறது. அது முதலாளித்துவத்தின்
எதிர்காலத்தைப் பற்றியும் தவிர்க்க முடியாமல் கட்டாயமாக சோஷலிசப் புரட்சி
நிகழ்ந்தே தீரும் என்பது பற்றியும் முடிவுகளுக்கு வருகிறது. முதலாளித்துவ செல்வச்
செழிப்பு குவியலின் வளர்ச்சி என்றால் மேலும் மேலும் அதிகமாக உழைப்பைச்
சமுதாயப்படுத்துவது என்று பொருளாகும். இது முதலாளித்துவத்தின் அடிப்படையான
முரண்பாட்டை அதாவது சமுதாயத் தன்மை கொண்ட உற்பத்திக்கும் தனியார் முறையிலான
கைப்பற்றலுக்கும் இடையிலான முரண்பாடு இடைவிடாமல் தீவிரமடையும் போக்கில் செல்கிறது.
முதலாளித்துவ சேமிப்புத் திரட்சியின் வரலாற்றுப்பூர்வமான போக்கைப் பற்றிய மார்க்ஸ்
தனது பகுப்பாய்வைப் பாட்டாளி வர்க்கம் நிச்சயம் வெற்றியடையும் என்னும் தனது
உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்திக் கொண்டு முடிக்கிறார். "மூலதனத்தின்
பெருங்கைகள் எண்ணிக்கையில் படிப்படியாக குறைந்து கொண்டேயிருக்கின்றன. அத்துடன்
சேர்ந்தே பெரும் அளவிலான துன்ப துயரங்கள், ஒடுக்குமுறை, அடிமைத்தனம், இழிவுபடுத்தப்படுதல், சுரண்டல் முதலியவை வளருகின்றன. ஆனால் இதனுடன் சேர்ந்தே
தொழிலாளி வர்க்கத்தின் எழுச்சியும் கலகமும் வளர்கிறது. தொழிலாளி வர்க்கம் என்பது
எண்ணிக்கையில் பெருகிக் கொண்டேயிருக்கும் வர்க்கமாகும். முதலாளித்துவ உற்பத்தி
முறையின் நிகழ்ச்சிப் போக்கின் கட்டமைப்பு முறையின் காரணமாகவே கட்டுப்பாட்டையும்
ஒற்றுமையையும் ஸ்தாபன பலத்தையும் பெருக்கிக் கொள்ளும் வர்க்கமாகும். உற்பத்தி
முறைகள் மூலதனத்தோடு சேர்ந்து அதன் ஆதரவின்கீழ் தோன்றி முனைத்து அதோடு சேர்ந்து
செழுமையாக வளர்ந்தன. அதே மூலதனத்தின் ஏகபோகம் அடுத்த கட்டத்தில் அந்த உற்பத்தி
முறைகளுக்கு இடையூறாகத் தடைகற்களாக ஆகிவிடுகின்றன. உற்பத்திச் சாதனங்களை
மையப்படுத்திக் குவிப்பதும் உழைப்பை சமுதாயப்படுத்துவதும் அவைகளின் முதலாளித்துவ
புறப்போர்வையுடன் ஒத்துப்போக முடியாத ஒரு இடத்தை அடைகிறது. அப்போது அந்தப்
புறப்போர்வை வெடித்துத் துண்டு துண்டாகக் கிழிந்து விடுகிறது. முதலாளித்துவ தனிச்
சொத்துடைமையின் சாவு மணி ஓசை ஒலிக்கத் தொடங்குகிறது. இதுவரை பிறரது உடமைகளைக்
கவர்ந்து கொண்டிருந்தவர்கள் இப்போது உடமையிலிருந்து
வெளியேற்றப்படுகிறார்கள்."¹ 1. Karl Marx, Capital, Vol. I, p. 760.
மூலதனத்தின் சுற்றோட்டம் பற்றிய நிகழ்ச்சிப் போக்கு
மார்க்ஸினுடைய நூலின் இரண்டாம் புத்தகத்தில் (தொகுதி இரண்டு) அவர் தொழில்
மூலதனத்தின் இயக்க அசைவுகளைப் பற்றி தொடர்ந்து பகுப்பாய்வு செய்தார். ஆனால் அவர்
முதல் தொகுதியில் செய்ததைப் போல உற்பத்தியின் நிகழ்ச்சிப் போக்குகளைப் பற்றி
அதிகமான ஆழ்ந்த கவனம் செலுத்துவதற்குப் பதிலாக தொழில் மூலதனத்தில் அதன்
சுற்றோட்டம் பற்றிய துறையில் உள்ள வடிவங்களிலும் உயிர்ப்பொருள் நுண் பொருள்
அமைப்புகளில் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்கள் புதிய
நிலைகள் பற்றி மிகவும் நெருக்கமாகக் கூர்ந்து கவனிக்கிறார்.
பதிவு ஒன்றில் மார்க்ஸ் மூலதனத்தின் மாறாட்டங்கள் மாறுபட்ட நிலைகள் பற்றியும்
அதன் சுற்றிச் செல்லும் நிலைகள் பற்றியும் பகுப்பாய்வு செய்தார். பண மூலதனத்தில்
சுற்றோட்டத்திலிருந்து தொடங்கி தனித்தனியான அத்தியாயங்களில் உற்பத்தியின்
சுற்றோட்டத்தையும் பண்ட-மூலதனத்தின் சுற்றோட்டத்தையும் அலசி ஆராய்ந்து கொண்டு
செல்கிறார்.
ஒரு முதலாளித்துவ தொழில் நிறுவனம் செயல்படும்போது அதில் திட்டவட்டமான
பண்டங்களை உற்பத்திச் செய்வதற்காக கூலித் தொழிலாளர்களும் ஊழியர்களும் குறிப்பிட்ட
திட்டவட்டமான உற்பத்திச் சாதனங்கள் (நிலம், கட்டடங்கள், எந்திரங்கள், கைக்கருவிகள், மூலப்பொருள்கள் முதலியன) பயன்படுத்துவது என்பது அதில்
நிச்சயமாக சம்பந்தப்பட்ட ஒன்றாகும். உற்பத்திச் சாதனங்களோ
¹ 1. Karl Marx, Capital, Vol. I, p. 763..
தொடர்புடைய கட்டுரைகள்:
***
எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக