நிலங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்கள் எவ்வாறு கொடூரமான சட்டங்கள் மற்றும் அடிமைத்தனமான முறைகள் மூலம் பாட்டாளி வர்க்கமாக மாற்றப்பட்டனர் என்பதை இவைகளின் மூலம் அறியலாம். கூலிகளைக் கட்டுப்படுத்தவும், தொழிற் சங்கங்களைத் தடை செய்யவும் ஐரோப்பிய அரசுகள் இயற்றிய கடுமையான ஒடுக்குமுறைச் சட்டங்கள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. பிச்சைக்காரர்கள் மற்றும் நாடோடிகள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் தொழிலாளர்களை எஜமானர்களின் கீழ் முற்றிலும் அண்டியிருக்கும் நிலைக்குத் தள்ளின. அரசின் நேரடிப் பலப்பிரயோகம் மற்றும் பொருளாதாரச் சுரண்டல் மூலமாகவே ஆரம்பக்கட்ட மூலதனத் திரட்சி சாத்தியமானது என்பதை இக்கட்டுரைகள் விளக்குகின்றன.
உடைமை பறிமுதலானோருக்கு எதிராக 15-ஆம் நூற்றாண்டின் இறுதி தொட்டு நிலவிய கொடூரமான சட்டங்கள்.
நாடாளுமன்றச் சட்டங்கள் மூலம் கூலிகளை வலுவந்தமாகக் குறைத்தல்
நிலப்பிரபுத்துவ ஏவலாளர் குழுக்கள் தகர்வுற்ற தாலும், மக்கள் நிலத்திலிருந்து பலவந்தமாக உடைமை பறிமுதல் செய்யப்பட்டதாலும் உருவாக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம், இந்த "சுதந்திர" பாட்டாளி வர்க்கம் எவ்வளவு வேகத்தில் இந்த உலகில் தோற்றுவிக்கப்பட்டதோ அந்தளவு வேகத்தில் அதை ஆரம்ப கட்டத்திலிருந்து பட்டறைத் தொழிலால் வேலைக்குச் சேர்த்துக் கொள்வது சாத்தியமல்லாததாக இருந்தது. மறு புறம் தமது வழக்கமான வாழ்க்கைப் பாங்கிலிருந்து திடீரென்று இழுக்கப்பட்ட இந்த மனிதர்கள் அவர்களது புதிய நிலையின் கட்டுப்பாட்டுக்கு அவ்வளவு சடுதியாகத் தம்மைத் தகவமைத்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் ஓரளவு மனப்பற்றுக் காரணாயும் பெரும்பாலும் சந்தர்ப்பச் சூழல்களின் நெருக்கத்தாலும், பிச்சைக்காரர்களாக, திருடர்களாக, உதவாக்கரை தெருச் சுற்றிகளாக ஒரே கூட்டாக மாற்றப்பட்டனர். எனவே 15-ஆம் நூற்றாண்டின் கடைசியிலும் 16-ஆம் ஆண்டு முழுவதிலும் மேற்கு ஐரோப்பா பூராவும் நாடோடி தெருச் சுற்றித் தனத்தை எதிர்த்த கடுமையான சட்டம் அமலாக்கப்பட்டது. இன்றைய தொழிலாளி வர்க்கத்தின் தந்தைமார் கள் நிர்ப்பந்தம் காரணமாக நாடோடிகளாயும் ஒட்டாண்டிகளாயும் மாற்றப்பட்டதற்கு தாமே தண்டனை அனுபவிக்க நேர்ந்தது. சட்டம் அவர்களை "தாமாகவே" குற்றம் புரிந்த குற்றவாளிகளாக நடத்தியது, மேலும் நிலவில் இல்லாத பழைய நிலைகளின் கீழ் தொடர்ந்து வேலை செய்வது அவர்களது சொந்த விருப்பத்தைப் பொருத்தே இருப்பதாய் கருதியது.
இந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே
இங்கிலாந்தில் இந்தச் சட்டம் ஏழாம் ஹென்றியின் கீழ் ஆரம்பமாயிற்று.
எட்டாவது ஹென்றி 1530இல் வெளியிட்ட ஆணைக்கு ஏற்ப வேலை செய்ய முடியாதவர்களான வயோதிகப் பிச்சைக்காரர்கள் பிச்சைக்காரர் லைசன்ஸ் பெற்றனர். மறு புறம் திடமான நாடோடிகளுக்கு கசையடியும் சிறைத் தண்டனையும் கிடைத்தன. அவர்கள் வண்டியின் பின்புறத்தில் கட்டிவைக்கப்பட்டு உடலிலிருந்து இரத்தம் பீறிடும் வரையில் கசையடி பெறுவார், பின்னர் தமது பிறந்த ஊருக்கோ அல்லது கடந்த மூன்று ஆண்டுகளாக அவர்கள் எங்கே வாழ்ந்திருந்தார்களோ அங்கே திரும்பிப் போய் "உழைப்பில் ஈடுபடுவதாக" வாக்குறுதியளித்து சபதேற்க வேண்டும். என்ன பயங்கர கேலிக்கூத்து! எட்டாவது ஹென்றியின் ஆட்சியின் 27ஆவது ஆண்டில் பிறப்பித்த முந்திய சட்டம் மீண்டும் இடம் பெற்றுள்ளது, புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டு வலுப்படுத்தப்பட்டுள்ளது. நாடோடித் திரிந்த ஒருவர் இரண்டாம் முறை கைது செய்யப்பட்டால் மீண்டும் கசையடி பெறுவதோடு அவரது பாதிக் காதும் அறுக்கப்படும்; மூன்றாவது தடவையாகக் கைதானால் இந்த நபர் காய்த்துப் போன குற்றவாளி பொது நலத்தின் விரோதி என்பதாகக் கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படுவார்.
ஆறாம் எட்வர்ட் ஆட்சியின் முதலாண்டில் 1547 இயற்றப்பட்ட சட்டம், ஒரு நபர் வேலை செய்ய மறுபாரானால், அவரைச் சோம்பேறி என்று யார் குற்றம் சாட்டுகிறார்களோ அவருக்கு அடிமையாக இருக்கும்படி அந்த நபர் தண்டிப்படுவார் என்று கட்டளையிடுகிறது. எஜமானர், தமது அடிமைக்கு ரொட்டி, தண்ணீர், காய்கறி வெந்த சாறு மற்றும் தனக்கு விருப்பப்பட்ட கழசல் இறைச்சி ஆகியவற்றை உணவாகத் தருவார். எவ்வளவு அருவருப்பான வேலையானாலும் சரி அடிமையிடம் கசையும் கைவிலங்கும் கொண்டு பலாக்காரமாக வேலை வாங்கும் உரிமை அவருக்கு உண்டு. அடிமை இரு வாரங்கள் வேலைக்கு வரவில்ையானால் அவன் ஆயுள் முழுதுக்கும் அடிமையாக இருக்கும்படி தண்டனை வழங்கப்படுவான். அவன் நெற்றி அல்லது முதுகில் அடிமை என்பதன் முதெழுத்துச் சூடுபோட்டுக் குறிக்கப்படும்; மூன்று தடவைகள் அவன் தப்பியோடியிருப்பானான் அவன் ஒரு படுபாதகன் என்ற முறையில் மரண தண்டனை பெறுவான். எஜமானர் தம் சொந்தத் தட்டுமுட்டு அல்லது கால்நடை போன்று அடிமையை விற்கலாம், பின் சந்ததிகளிடம் ஒப்படைக்கலாம், அடிமையாக வாடகைக்கு விடலாம். ஏஜமானர்களுக்கு எதிராக அடிமைகள் ஏதேனும் மிசயவ முதல்வார்களானால் அவர்களும் மரண தண்டனை பெறுவர். நீதிபதிகள் தகவல் தெரிந்தவுடன் இந்தப் போக்கிகினை வட்டையாடிப் பிடித்தல்வேண்டும். நாடோடியாகத் திரியும் ஒருவன் மூன்று நாட்கள் சோப்பித் திரிந்தானாகில் அவனைப் பிடித்து அவனது பிறந்த இடத்துக்குக் கொண்டு சென்று, நாடோடி என்பதன் முதல் எழுத்தை பழுக்கக் காய்ந்த இரும்பு கொண்டு அவன் மார்பில் சூடு பொரிந்து, தெருக்களிலோ வேறு ஏதாவது வேலையிலோ விலங்கிடப்பட்ட நிலையில் உழைக்கும் படி நிர்ப்பந்திக்கப்படுவான். நாடோடி ஒருவன் பொய்யான பிறந்த இடத்தைக் கூறுவானாகில், அவன் இந்த இடத்தில், இங்குள்ள மக்களின், இதன் வார்ப்போரைகளின் அடிமையாக வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும்; அடிமை என்பதன் முதல் எழுத்தும் அவன் மீது சூடு போட்டுப் பொறிக்கப்படும். நாடோடுகளின் குழந்தைகளை எடுத்துக் கொண்டு போய் அவர்களைப் பழகும் தொழிலாளர்களாக வைத்திருக்கும் உரிமை எல்லோருக்கும் உண்டு. இளைஞர் 24 வயது வரையிலும் இளம் பெண்கள் 20 வயது வரையிலும் இவ்வாறு வைக்கப்படுவார்கள். இதீ இடையில் அவர்கள் தப்பி ஓடிப்போனால் இந்த வயதடையுஞ் வரை தம் எஜமானர்களின் அடிமைகளாக இருக்க வேண்டும்; எஜமானர்கள் விருப்பப்படி அவர்களுக்கு விலங்கு பூட்டணம் கசையடி தரலாக். ஒவ்வொரு எஜமானருக்கும் தனது அடிமையின் கழுத்தில், கரங்களில், கால்களில் இரும்பு வளையல் இடடக் இதன் மூலம் அடிமையை எளிதாகவும் நிச்சயமாகவும் அடையாளம் கண்டு கொள்ளலாம். இந்தச் சட்டத்தின் கடைசி பகுதி, சில ஏழை மக்கள் ஒரு பிரதேசத் தாள் அல்லது சில நபர்களாக வேலைக்கு அமர்த்திக் கொள்ளப்படலாம், ஆனால் அவர்கள் இந்த ஏழை மக்களுக்கு உணவும்
* Essay on Trade etc. என்ற நூலின் ஆசிரியர் கூறுவதுவாது: "ஆறாம் எட்வர்ட்டின் ஆட்சியின் ஆசிரியேரிவர் பட்டறைத் தொழிலை ஊக்குவிக்கவே ஏழைகளை வேலைக்கமர்த்தவும் மிக ஆழ மும்முரமாகச் செய்படத் தொடங்கினார்கள், இதை நாடோடுகள் நினைவூக்கும் கூட்டுக்குறி போட வேண்டும்... சற்று துலங்கும் முக்கியமான சட்டத்திலிருந்து நாம் தெரிந்து கொள்வோம்' (An Essay on Trade and Commerce, London, 1779, p. 5). பானமும் அளிக்காவும் வேலை தேடித்தரவும் சம்மதிக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்த வகையான வட்டார அடிமைகள் roundsmen (தவணைக்காரர்கள்) என்ற பெயரில் 19ஆம் நூற்றாண்டு தொடங்கி பல்காலம் இங்கிலாந்திலு வைக்கப்பட்டிருந்தார்கள்.
எலிசெபெத் ஆட்சியில் 1572ல் இயற்றப்பட்ட சட்டம் கூறுவதாவது: 14 வயதுக்கு மேற்பட்ட லைசன்ஸில்லாத பிச்சைக்காரர்கள், எவரும் அவர்களை இரண்டாண்டுகளுக்கு வேலைக்கு வைத்துக் கொள்ளாத பட்சம் கடுமையாகக் கசையடி கொடுக்கப்பட்டு இடது காதில் சூட்டுக் குறி பொறிக்கப்படுவார்கள்; மீண்டும் குற்றம் செய்து அவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்களானால், யாராவது அவர்களை இரண்டாண்டுகள் வேலைக்கு வைத்துக் கொள்ளாத பட்சம் மரண தண்டனை விதிக்கப்படுவார்கள்; மூன்றாம் முறையாக அவர்கள் குற்றம் புரிவார்களானால் அவர்கள் படுபாதகன் என்று குறிப்பிடப்பட்டு ஈவிரக்கமின்றி மரண தண்டனை விதிக்கப்படுவார்கள். இதே போன்ற கட்டளைகள் எலிசெபெத் ஆட்சியின் 18ஆவது ஆண்டில் வெளியிடப்பட்ட சட்டம் (அத். 13) மற்றும் 1597ல் வெளியிடப்பட்ட சட்டத்தில் அடங்கியிருந்தன.*
* தாமஸ் மோரா தமது "உடோபியா" என்னும் நூலில் கூறுகிறார்: "எனவே பேராசைக்காரனும் திருப்திப்படுத்த முடியாதவனும் தனது சொந்த நாட்டைப் பொருத்தவரை ஒரு கொள்ளை நோயாக ஆகி விட்டவனுமான ஒருவன் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்துக்கு வரம்பு கட்டி வேளிக் குள் அடைத்து விடலாம், தனது நிலத்திலிருந்த விவசாயிகளை சூழ்ச்சியாலும் மோசடியாலும் அல்லது வன்மையான ஒடுக்கு முறையாலும் வெளியே தள்ளி விடலாம், தீம்புகள் கொடுமைகளின் தொல்லை பொறுக்காமல் எல்லாவற்றையும் விற்ஞொழித்து விடும் நிலைக்கு அவர்கள் ஆளாகலாம்: இவ்வாறு எப்படியாவது இந்தத் துயரமிகுந்த ஏழைகள்-- ஆண்களும் பெண்களும், கணவன்மாரும் மனைவியரும், தந்தைமில்லாக் குழந்தைகளும் விதவைகளும், இளம் குழந்தைகளுடனான துயுறும் தாய்மார்களும வீட்டுமுச்சூடும் வெளியேற வேண்டியிருந்தது.சொத்தில் சிறிதாய் தொகையில் பெரிதாய் இருந்தன இக்குடும்பங்கள், காரணம் விவசாய வேலைக்கு அதிக ஆட்கள் வேண்டுமல்லவா? தமக்குப் பழக்கமான வீடுகளை உதறி விட்டு தலை சாய்க்க இடம்காணாமல் அவர்கள்
முதலாம் ஜேம்ஸ் ஆட்சியில், சுற்றித் திரிந்து கொண்டும் பிச்சையெடுத்துக் கொண்டும் இருப்பவர்கள் போக்கிகள் மற்றும் நாடோடுகள் என்று சாற்றப்பட்டார்கள். நீதிபதிகள் சிறு அமர்வுகளில் அவர்களுக்கு பகிரங்கமாகக் கசையடி தண்டனை கொடுக்கவும், முதல் குற்றத்துக்கு 6 மாதம் சிறை, இரண்டாம் குற்றத்துக்கு 2 ஆண்டுகள் சிறை என்று தண்டனை விதிக்கவும் அதிகாரம் பெற்றிருந்தனர். கைதிகள்
வாடுகிறார்கள். அவர்களது வீட்டுச் சாமான்கள் மதிப்பில் குறைந்தவையாயினும் விற்கத்தக்கவையே, ஆனால் திடீரென்று வெளியேற்றப்பட்டதால் அவற்றை மிகவும் அற்பமான விலைக்கு விற்கும் கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டது. சுற்றித் திரிந்து இந்தச் சொற்பக் காசும் செலவழிந்த பிறகு அவர்கள் என்ன செய்வார்கள்? திருடுவதோ—அதன் விளைவாக தூக்கிலிடப்படுவதோ—அல்லது பிச்சை எடுப்பதோ தவிர வேறு வழியில்லை. மேலும் வேலையின்றி சுற்றித் திரிவதால் நாடோடுகள் என்று சொல்லி அவர்கள் சிறையில் அடைக்கப்படலாம். அவர்கள் வேலை செய்ய எவ்வளவு விரும்பினாலும் கூட யாரும் அவர்களுக்கு வேலை தர மாட்டார்கள்" திருடுமாறு அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர் என்று இந்த ஏழை அகதிகள் பற்றி தாமஸ் மோரர் கூறுகிறார். "எட்டாவது ஹென்றியின் ஆட்சியில் 72,000 பெரிய சிறிய திருடர்கள் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டார்கள்" (Holinshed, Description of England, Vol. 1, p. 186). எலிசெபெத்தின் காலத்தில் "போக்கிகள் வரிசையாகத் தூக்கிலிடப்பட்டனர். ஆண்டுக்கு முன்னாறும் நானூறுமாகத் தூக்கு மரம் பலி கொண்டது" (Strype, Annals of the Reformation and Establishment of Religion, and other Various Occurrences in the Church of England during Queen Elizabeth's Happy Reign, 2 ed., 1725, Vol. II). இதே ஸ்டிரைப்பின் கூற்றுப்படி, சோமர்செட் ஷயரில் ஒரே ஆண்டில் 40 பேர் மரண தண்டனை பெற்றார்கள், 35 திருடர்களின் கைகளில் சூடுபோடப்பட்டது, 37 பேர் கசையடிக்கப்பட்டனர், 183 பேர் "என்றுமே திருத்த முடியாத நாடோடிகள்" என்று விடுவிக்கப்பட்டனர். எனினும் இந்தப் பெரியவிலான சிறைக் கைதிகள் தொகை உண்மையான குற்றவாளிகள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு கூட இருக்காது. நீதிபதிகளின் புறக்கணிப்பும், மக்களிடையே நிலவும் முட்டாள்த்தனமான இரக்க உணர்வும் இதற்குக் காரணமாகும். இந்த விஷயத்தில் இங்கிலாந்தின் இகரமாவட்டங்கள் சோமர்செட் ஷயரை விட சற்று மேம் பட்டதாக இருக்கவில்லை, சிலவற்றில் நிலைமை இன்னும் மோசம் என்கிறார் அவர்.
சிறையில் இருக்கும் போது, நீதிபதிகள் தக்கது என்று கருதும் அளவுக்குப் பல தடவை கசையடி பெறுவார்கள்... திருத்த முடியாத மற்றும் அபாயகரமான போக்கிகளின் இடது தோளில் போக்கிரி என்பதன் முதல் எழுத்துச் சூட்டுக் குறியாகப் பொறிக்கப்படும் அவர்களுக்குக் கடின உழைப்புத் தரப்படும்; மீண்டும் பிச்சை எடுத்துப் பிடிபட்டால் இரக்கமின்றி மரண தண்டனை வழங்கப்படும். 18ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரை சட்டபூர்வப் கட்டுப்படுத்திய இந்தச் சட்டத்தின் விதிகள் ராணி அன்னாவின் ஆட்சியின் 12ஆவது ஆண்டில் (அத். 23.) மட்டுமே ரத்துச் செய்யப்பட்டன.
17ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பாரிசில் royaume des truands (நாடோதிகளின் அரசு) நிறுவப்பட்ட போது பிரான்சிலும் இது போன்ற சட்டங்கள் இருந்தன. பதினாறாவது லூயி மன்னன் ஆட்சியின் தொடக்கத்திலுங்கூட (1777, ஜூலை 13 அவசரச்சட்டம்) ஆரோக்கியமுடைய 16 முதல் 60 வயதுக்குப்பட்ட எவரும் பிழைப்பு சாதனமின்றியும் மற்றும் ஏதாவது ஒரு தொழிலை நடத்தாமலும் இருப்பாரானால் அத்தகையவர் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுவார். ஐந்தாம் சார்லஸ் நெதர்லாந்துக்கு விதித்த சட்டமும் (அக்டோபர் 1537) ஹாலந்தின் மாநிலங்கள் நகரங்களுக்கான முதல் ஆணையும் (1614, மார்ச் 19) ஐக்கிய மாகாணத்தின் "பிளகாட்"டும் (ஜூன் 25, 1649) இதே போன்ற தன்மை கொண்டவை.
இவ்வாறாக, விவசாய மக்கள் முதலில் தமது நிலத்திலிருந்து உடைமை பறிமுதல் செய்யப்பட்டு, வீடுகளிலிருந்து விரட்டப்பட்டு, நாடோடிகளாய் மாற்றப்பட்டு பின்னர் கசையடியும் சூட்டு முத்திரையும் பெற்று ஒவ்வாத பயங்கரமான சட்டங்களால் சித்திரவதை செய்யப்பட்டு கூலி அமைப்புக்கு அவசியமான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டார்கள்.
சமூகத்தின் ஒரு துருவத்தில், உழைப்பு நிலமைகள் நிரைளாக மூலதனத்தின் உருவில் செறிந்து கிடப்பதும், மறு துருவத்தில் தமது உழைப்புச் சக்தியைத் தவிர விற்பதற்கு வேறு எதுவுமில்லாத திரளான மனிதர்கள் குவிந்திருப்பதும் மட்டும் போதவில்லை. உழைப்பு சக்தியை அவர்கள் விரும்பியே விற்பனை செய்யும் படி கட்டாயப்படுத்தப்படுவதும் போதவில்லை. முதலாத்துவ உற்பத்தியின் முன்னேற்றம், முதலாத்துவ உற்பத்தி முறையின் நிலைமைகளை இயற்கையின் தானே விளங்குகிற விதிகளே என்று தமது கல்வி, மரபு, பழக்கம் காரணமாகப் பார்க்கும் ஒரு தொழிலாளி வர்க்கத்தை வளர்க்கிறது. முதலாத்துவ உற்பத்தி முறை அமைப்பு முழுமையாக வளர்ச்சியடைந்தத்துடன் எல்லா எதிர்ப்பையும் தகர்த்து விடுகிறது. ஓரளவு உபரி மக்கள் தொகை இடைவந்து பெருகி வருவது உழைப்பின் தரவு மற்றும் தேவையை நெளிப்படுத்தும் விதியையும் அதன் மூலம் கூலியையும் மூலதனத்தின் தேவைக்கு இசைவான தடத்தில் அடக்கி வைத்துக்த்துள்ளது. பொருளாதார உறவுகளின் கூட்டுச் சக்தி முதலாளியிடம் தொழிலாளி ஆட்பட்டிருப்பதை முழுமைப் படுத்துகிறது. பொருளாதார நிலைமைகளுக்குப் புறம்பான நேரடியான பலப்பிரயோகம் இன்னும் பயன்படுத்தப்படுகிறது என்பது மெய்யே ஆயினும் அது விதிவிலக்காகவே பயன்படுத்தப்படுகிறது. அன்றாட நடவடிக்கைகளில் தொழிலாளிமையை "உற்பத்தியின் இயற்கை விதிகளுக்கே", அதாவது மூலதனத்தின் மீதான அவரது சார்பு நிலக்கே உற்பத்தி நிலைமைகளிலேயே ஏற்பட்டு நிரந்தரமாக உத்தரவாதம் செய்யப்படும் சார்பு நிலக்கே விட்டுவிட்டாம், முதலாத்துவ உற்பத்தியில் வரலாற்றுப் பிறப்பின் இறுவாளில் நிலை வேறுவிதமாக இருக்கும். கூலிகளை "முறைப்படுத்தவும்" அதாவது உபரி மதிப்பு உருவாக்குவதற்கு பொருத்தமான வரம்புகளுக்குள் கூலிகளை நிர்ப்பந்தமாக வைத்திருக்கவும், வேலைநாளை நீட்டிக்கவும், தொழிலாளிமையை சகஜமான அளவில் சார்பு நிலையில் வைத்திருக்கவும் வளர்ச்சியுற்றுவரும் பூர்சுவா வர்க்கத்திற்கு அரசாங்க அதிகாரம் அவசியம், அது அதைப் பயன்படுத்துகிறது. இது புராதனத் திரட்சியின் ஓர் இன்றியமையாத கருசும்.
14ஆம் நூற்றாண்டில் பிந்திய பகுதியில் தோன்றிய கூலித் தொழிலாளர் வர்க்கம் அத்தகத்தினரும் அடுத்த நூற்றாண்டிலும் மக்கள் தொகையில் மிகவும் சிறிய பகுதியாகவும்வே இருந்தது. நாட்டுப் புறத்தில் சுதந்திரமான சில சாலி உரிமைளாளர்களாலும், நகரப் புகங்களில் கைவிலேசங்க அமைப்புகளாலும் அதன் நிலைமை நன்கு பாதுகாக்கப் பட்டிருந்தது: நாட்டுப் புறத்திலும் நகரிலும் தகரினும் எஜமானனும்.
தொழிலாளியும் சமூககிரதியில் மிகவும் நெருக்கமாக இருந்தனர். உழைப்பு மூலதனத்துக்குக் கிழடங்கியதாக இருந்தது என்பது சம்பிரதாய அளவில் மட்டுமே—அதாவது உற்பத்தி முறைக்கே இன்னும் திட்டவட்டமான முதலாத்துவத் தன்மை ஏற்பட்டிருக்கவில்லை. மாறிவரும் மூலதனம் நிரந்தர மூலதனத்தை விடவும் மிகவும் மேலோங்கியிருந்தது. மூலதனம் திரட்டப்படுதோறும் கூலி உழைப்பாளிகளுக்கான தேவை வேகமாக அதிகரித்தது. அதே சமயம் கூலி உழைப்பாளர் தரவு மிகவும் மெதுவாகவே பின் தொடர்ந்தது. முதலாத்துவத் திரட்சி நிதியாக பின்னால் மாற்றப்பட்ட தேசிய விளைபொருளில் பெரும் பகுதி அப்போதும் தொழிலாளியின் பயன்பீட்டு-நிதிக்குள் போய்க் கொண்டிருந்தது.
கூலித் தொழிலாளர் பற்றிய சட்டமியற்றல் (ஆரம்ப முதலே தொழிலாளியைச் சுரண்டும் நோக்கத்துடனும் அவன் முன்னேறிந்தோறும் தொழிலாளிக்கு எப்போதுமே பகைமையான விதத்திலும்)* இங்கிலாந்தில் மூன்றாம் எட்வர்ட்டின் ஆட்சிக் காலத்தில் 1349ல் இயற்றப்பட்ட தொழிலாளர் சட்டத்தோடு தொடங்கியது. பிரான்சில் 1350ஆம் ஆண்டு அரசாணை ஜான் மன்னர் பெயரால் பிறப்பிக்கப்பட்டது. இதுவும் முந்தையைப் போன்றே உள்ளது. ஆங்கில மற்றும் பிரெஞ்சு சட்டங்கள் இசைந்து இணையாகச் செல்கின்றன, அவை நோக்கத்தில் முற்றொருமையுடையவை, வேலை நாளைக் கட்டாயமாக நீட்டிப்பதை நோக்கமாகக் கொண்ட தொழிலாளர் சட்டங்கள் பற்றி நான் விளக்க முற்படவில்லை, அவை ஏற்கனவே (மூலதனம், தொகுதி 1, அத். X, பிரிவு 5) விளக்கப்பட்டுள்ளன.
தொழிலாளர் சட்டம் காமன்ஸ் சபையின் அவசர ஆலோசனைப்படி நிறைவேற்றப்பட்டது. ஒரு டோரி இது பற்றி அப்பாளித்தனமாகக் கூறியதுாவது:
* "எஜமானர்களுக்கும் உழைப்பவர்களுக்கும் இடையிலான வேற்றுமைகளை முறைப்படுத்த சட்டம் முயன்ற போதெல்லாம் இதன் ஆலோசகர்கள் எஜமானர்களே" என்கிறார் ஆ. ஸ்மித்; "சட்டங்களின் ஆன்மா என்றால் அது சொத்துரிமை என்று பொருளாகும்" என்கிறார் லிங்கே.
வழங்கப்பட்டுள்ள பக்கங்களில் உள்ள உரை அப்படியே கீழே எழுத்துருவில் தரப்பட்டுள்ளது:
பக்கம் 49
"முன் நாட்களில் ஏழைகள் தொழில் துறையையும் செல்வத்தையும் அச்சுறுத்தல் செய்யும் அளவில் அத்தகைய உயர்ந்த கூலிகளைக் கோரியிருந்தார்கள். அடுத்தபடி அவர்தளது கூலிகள், இன்னொரு வழியில் தொழில் துறையையும் செல்வத்தையும் இதே அளவுக்குோ அல்லது ஒருக்கால் அதிகமாகவோ அச்சுறுத்தும் வகையில் மிகவும் குறைவாக உள்ளன."*
நகரத்திலும் நாட்டுப் புறத்திலும் செய்யப்படும் நேரக் கூலி வேலைக்கும் நாள் வேலைக்கும் சட்ட மூலம் ஒரு கூலி விகிதப்பட்டியல் நிர்ணயிக்கப்பட்டது. விவசாயத் தொழிலாளர்கள் ஆண்டு முழுவதிலும், நகரத் தொழிலாளர்கள் "பகிரங்க மார்க்கெட்" நிலவரப்படியும் கூலிக்கு வேலை செய்ய வேண்டும். சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட கூலிக்கு மேல் அதிகமாகக் கொடுப்பது தடை செய்யப்பட்டிருந்தது; மீறிக் கொடுத்தால் சிறைத் தண்டனை கிடைக்கும்; அதிகக் கூலி கொடுப்பதை விட அதைப் பெறுவது பெரிய குற்றம் எனக் கருதி கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது. [இதே போல எலிசெபெத்தின் பழகுனர் பற்றிய சட்டம், பிரிவு 18 மற்றும் 19ன் பிரகாரம் அதிகச் சம்பளம் தருவருக்கு 10 நாள் சிறைத் தண்டனையும், அதிகச் சம்பளம் பெறுபவருக்கு 21 நாட்கள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.] 1360ஆம் ஆண்டுச் சட்டம் இந்தத் தண்டனைகளை அதிகரித்து, தொழிலாளிடம் சட்ட விகிதப் படியான கூலிக்கே கட்டாயமாக வேலை வாங்கவும் மறுத்தால் கசையடி போன்ற தண்டனை வழங்குவதும் எஜமானர்களுக்கு அதிகாரம் வழங்கியது. கட்டடத் தொழிலாளர்களையும் தச்சுத் தொழிலாளர்களையும் பரஸ்பரம் கட்டுப்படுத்தி வைத்திருந்த இணைப்புகள், ஒப்பந்தங்கள், வாக்குறுதிகள் அனைத்தும் செல்லத்தகாதவை என்று அறிவிக்கப்பட்டது. பதினாலாம் நூற்றாண்டு முதல், தொழிற் சங்கங்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்துச் செய்யப்பட்ட 1825ஆம் ஆண்டு வரையிலும், தொழிலாளர்கள்
* [J. B. Byles.] Sophisms of Free Trade. By a Barrister. London, 1850, p. 206. அவர் வன்மத்துடன் மேலும் கூறுகிறார்: "தொழிலதிபருக்காகத் தலையிட நாங்கள் போதியளவு தயாராக இருந்தோம்; தொழிலாளிக்கு வேண்டி இப்போது எதுவும் செய்வதற்கில்லையா?"
சங்கங்களில் சேருவது சுடுங்கொடிய குற்றச் செயலாகக் கருதப்பட்டது. 1349 தொழிலாளர் சட்டம் மற்றும் அதிலிருந்த பிறந்த எல்லா விதிகளும் அரசு ஆணை பிறப்பித்து நிர்ணயித்துள்ளது, அதிகப்பச்சக் கூலியே தவிரக் குறைந்தபட்சக் கூலி அல்ல என்று தெளிவாக அறிவித்தன.
16-ஆம் நூற்றாண்டில் தொழிலாளர்களின் நிலைமை மிகவும் மோசமாகி விட்டிருந்தது என்பதை நாம் அறிவோம். பணமாகக் கிட்டும் கூலி அதிகரித்தது ஆனால் பணத்தின் மதிப்பு பிறக்கம், அதன் விளைவாய் பண்டங்களின் விலை உயர்வு இவற்றுக்கு ஏற்ற விகிதத்தில் கூலி உயரவில்லை. அதனால் யதார்த்தத்தில் கூலிகள் குறைந்தன. இருந்தபோதிலும் இவற்றைக் குறைவாகவே வைத்திருப்பதற்கான சட்டங்கள் அமுலில் இருந்தன; இதோடு "யாருமே வேலைக்கு எடுத்துக் கொள்ள விரும்பாத நபர்கள்" காதுறுக்கப்படுவதும் சூட்டுக் குறி பொறிக்கப்படுவதும் தொடர்ந்து நீடித்தது. எலிசெபெத் ஆட்சியின் 5ஆவது ஆண்டில் வெளியிடப்பட்ட பழகுனர் சட்டம் அத்.3, சில கூலிகளை நிர்ணயிக்கவும், ஆண்டின் பருவம் மற்றும் பண்டங்களின் விலைக்கு ஏற்ப அவற்றை மாற்றியமைக்கவும் நீதிபதிகளுக்கு அதிகாரம் வழங்கியது. முதலாம் ஜேம்ஸ் இந்தச் சட்டத்தை நெசவாளர்கள், நூற்பாளர்கள் மற்றும் சாத்தியமான எல்லா வகை இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் விஸ்தரித்தார்.* இரண்டாம் ஜோர்ஜ் தொழிலாளர் சங்கத்தில் சேருவதை எதிர்க்கும் சட்டத்தை பட்டறைத் தொழில் துறைக்கு விஸ்தரித்தார்.
* முதலாவது ஜேம்ஸின் ஆட்சியின் இரண்டாவது ஆண்டில் இயற்றப்பட்ட சட்டம், அத். 6, ஒரு ஷரத்திலிருந்து, சில ஜவுளி உற்பத்தியாளர்கள் நீதிபதிகள் என்ற முறையில் தம்கிடந்த அதிகாரம் காரணமாகப் பூர்வக் கூலிஹிகிதப் பட்டியலை அமுல் செய்ய ஆணையிட்டார்கள். ஜெர்மனியில் குறிப்பாகும் முப்பதாண்டுப் போருக்குப் பின் கூலிகளைக் குறைவாகவே வைத்திருப்பதற்கான சட்டங்கள் பொதுவாக இருந்தன. "மக்கள் தொகை குறைந்திருந்த மாவட்டங்களில் வேலையாட்களும், தொழிலாளர்களும் பற்றாக்குறையாக இருப்பது நிலச்சொந்தக்காரர்களுக்கு மிகவும் தொந்தரவாக இருந்தது. தனி ஆண் அல்லது பெண் எவருக்கும் கிராம வாசிகள் அறைகளை வாடைக்கு விடக் கூடாது என்று தடைவிடிக்கப்பட்டது; அப்படியான தனி ஆட்கள் பற்றி அதிகாரிகளிடம் பட்டறை உற்பத்தி மிகவும் மேம்பட்டு விளங்கிய கால கட்டத்தில் முதலாத்துவ உற்பத்தி முறையானது, கூலி பற்றிய சட்டவிதி முறை அவசியமில்லை, எனவே நடைமுறை சாத்தியமல்ல என்று அதை நிராகரிக்கும் அளவுக்குப் போதிய வலுப்பெற்றிருந்தது. ஆனால் அவசியம் ஏற்படுமானால் பயன்படுத்த வேண்டுமே எனக் கருதி பழைய ஆயுதங்களை இல்லாமற் செய்ய ஆளும் வர்க்கங்கள் விரும்பவில்லை. இன்னும் இரண்டாம் ஜோர்ஜின் ஆட்சியின் 8ஆவது ஆண்டில் இயற்றப்பட்ட சட்டம் லண்டனிலும் அதைச் சுற்றியுமிருக்கும் தையத்தொழிலாளர்களின் தினக் கூலியை பொதுவான துக்க அனுஷ்டிப்பு சம்பந்த வேலைகள் தவிர, 2 ஷில்லிங் 7\frac{1}{2} பென்சுக்கு மேல் அதிகரிக்கக் கூடாது என்று தடை செய்தது; இன்னும், மூன்றாம் ஜார்ஜின் ஆட்சியின் 13ஆவது ஆண்டு சட்டம், அத்.68 பட்டு நெசவாளர் கூலிகளை முறைப்படுத்தும் உரிமையை நீதிபதிகளுக்கு அளித்தது; இன்னும் 1796ல், கூலிகள் சம்பந்தமான நீதிபதியின் உத்தரவு விவசாயத் புகார் செய்யப்படும். வேலையாட்களாக இருக்க அவர்கள் விரும்பாவிடில், நாட் கூலிக்கு விவசாயிகளுக்கு விதைப்பாடு வேலை செய்வது, அல்லது தானியத்தை வாங்குவது விற்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டிருந்த போதிலும், அவர்கள் சிறைக்குள்ளும் தள்ளப்படுவார்கள் [Kaiserliche Privilegien und Sanctionen für Schlesien, I., 125]. சிறிய ஜெர்மன் ஆளுநர்களின் ஆணைகளில், தனது கஷ்ட நிலைமையை ஏற்றுக் கொள்ள மறுப்போர், மற்றும் சட்டப்படியான கூலியில் திருப்தியுறாதவர்களான கொடிய, திமிரான கீழ் மக்கள் பற்றி மீண்டும் மீண்டும் இந்த நூற்றாண்டு முழுவதும் வெறுப்பான ஓலம் கேட்டது. தனிப்பட்ட நிலவுரிமையாளர்கள் அரசு நிர்ணயித்த கூலிவிகிதப் பட்டியலுக்கு மேல் அதிக கூலி தருவது தடை செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் போருக்குப் பிந்திய அக்காலத்திய சேவா நிலைமைகள் அக்கா காலத்துக்கு நூராண்டுகளுக்குப் பிறகு இருந்ததை விடவும் சில சமயங்களில் நன்றாக இருந்தன. 1652ல் சைலிசியாவில் பன்னை வேலையாட்களுக்கு வாரம் இரு முறை இறைச்சி கிடைத்தது, ஆனால் நமது நூற்றாண்டில் பல மாவட்டங்களில் அவர்களுக்கு வருடத்தில் மூன்று தடவையே கிடைக்கிறது. மேலும் போருக்குப் பிந்திய கூலி அடுத்து வந்த நூற்றாண்டுப் [பு]ல் இருந்ததைக் காட்டிலும் உயர்வாக இருந்தது" (G. Freytag. [Neue Bilder aus dem Leben des deutschen Volkes, Leipzig, 1862, S. 35, 36]).
தொழிலாளர்களல்லாதவர்களுக்கும் பொருந்துமா என்பதை முடிவு செய்ய உயர் நீதிமன்றங்களின் இரண்டு தீர்ப்புகள் தேவையாக இருந்தன; இன்னும் 1799ல் ஸ்காட்லாந்தின் சுரங்கத் தொழிலாளர்களின் கூலி எலிசெபெத்தின் சட்டத்தினாலும் 1661 மற்றும் 1671 இரு ஸ்காட்லாந்துச் சட்டங்களாலும் முறைப் படுத்தப்பட வேண்டும் என்று ஒரு நாடாளுமன்றச் சட்டம் உத்தரவிட்டது. இதக்கிடையில் சந்தர்ப்ப சூழ்நிலைகள் எவ்வாறு முழுமையாக மாற்றமடைந்து விட்டன என்பதை இங்கிலாந்தின் காமன்ஸ் சபையில் (English Lower House) முன் என்றுமே கேள்விப்பட்டிராத ஒரு நிகழ்ச்சி நிரூபித்துக் காட்டியது. இதற்கப்பால் கூலி அறவே உயரக் கூடாது என்று அதிகப்பச்சத்தை நிர்ணயித்து 400 ஆண்டுகளாகச் சட்டமியற்றிய அந்த மன்றத்தில் விப்பிரெட் என்பவர் 1796ல் விவசாயத் தொழிலரிகளுக்குரிய குறைந்த பட்சக் கூலி சட்ட பூர்வமாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்தார். பிட் இதை எதிர்த்தார் ஆனால் "ஏழைகளின் நிலைமை மிகவும் வேதனை தருவதே" என்பதை ஒப்புக்கொண்டார். இறுதியாக கூலியை முறைப்படுத்தும் சட்டங்கள் 1813ல் ரத்துச் செய்யப்பட்டனர். முதலாளி தனது ஆலையைப் தனது சொந்தச் சட்டப்படி முறைப்படுத்தி வந்ததாலும், ஏழ்மை வரிகள் மூலம் விவசாயத் தொழிலாளியின் கூலியை இன்றியமையாத அளவுக்குக் குறைந்த பட்சமாக்க முடிந்ததாலும் இவை அபத்தமான முறை கேடுகளாயின. எஜமானுக்கும் தொழிலாளிக்குமிடையிலான ஒப்பந்தங்கள், ஒப்பந்தங்களை ரத்தாக்குவது பற்றி முன் அறிவிப்பு அளித்தல் போன்றவை சம்பந்தப்பட்ட தொழிலாளர் சட்டத்தின் ஷரத்துகள் ஒப்பந்தத்தை மீறும் எஜமான் மீது சீல் நடவடிக்கை எடுப்பதை மட்டுமே அனுமதித்தன, ஆனால் ஒப்பந்தத்தை மீறும் தொழிலாளி மீது குற்ற நடவடிக்கை எடுக்க அனுமதித்தன. இந்த ஷரத்துகள் இன்னும் முழுமையாக அமுலில் உள்ளன.
தொழிற் சங்கங்களை எதிர்த்த காட்டுமிராண்டிச் சட்டங்கள், 1825ல் பாட்டாளி வர்க்கம் மேற்கொண்ட அச்சுறுத்தும் போர்க் கோலத்தின் முன் வீழ்ச்சியடைந்தன. இருப்பினும் அவற்றில் ஒரு பகுதியே வீழ்ச்சியடைந்தைட். பழைய சட்டத்தின் சில அழகான பகுதிகள் 1859தான் மறைந்தன.
இறுதியாக, தொழிற் சங்கங்களுக்குச் சட்ட அங்கோாரத்தை வழங்கிய மூலம் 1871, ஜூன் 29ந் தேதிய தேசிய நாடாளுமன்றச் சட்டம் இந்த வகையான சட்டங்களின் கடைசித் தேவூகளை அகற்றுவதாகப் பாவனை செய்தது. ஆனால் அதே தேதியில் இயற்றப்பட்ட இன்னொரு நாடாளுமன்றச் சட்டம் (வன்முறை, அச்சுறுத்தல், வலுவந்தம் பற்றிய குற்றச் சட்டத்தைத் திருத்தும் சட்டம்) மெய்யாகவே முன்பிருந்த நிலமையை புதிய உருவில் மீண்டும் நிலைநாட்டியது. இந்த நாடாளுமன்றத் திருத்தம் மூலம் ஒரு வேலைநிறுத்தம் அல்லது கதவடைப்பின் போது தொழிலாளர் பயன்படுத்தக் கூடிய செயல் முறைகள் எல்லாக் குடிமக்களுக்கும் பொதுவாக உள்ள சட்டங்களிலிருந்து அகற்றப்பட்டு விசேஷக் குற்றச் சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டன; இதை வியாக்கியானம் செய்யும் உரிமை நீதிபதிகள் என்ற முறையில் எஜமானர்களையே போய்ச் சேர்ந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தொழிலாளி வர்க்கத்திற்கு எதிரான அசாதாரணமான எல்லா குற்றச் சட்டங்களையும் ரத்துச் செய்யக்கோரும் ஒரு மசோதா இதே காமன்ஸ் சபையால், இதே திரு. கிளாட் ஸ்டளனால் நன்கறிந்த நேர்மையான முறையில் கொண்டு வரப்பட்டது. ஆனால் இது இரண்டாம் சுற்று விவாதத்திற்கு மேல் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை, இந்த விஷயம் நீடித்துக் கொண்டே போயிற்று. இறுதியாக "மாபெரும் மிதவாதக் கட்சி" டோரிகளுடன் கூட்டணி சேர்ந்து அதை ஆட்சி பீடத்தில் அமர்த்திய அதே பாட்டாளி வர்க்கத்தை எதிர்த்துத் தாக்குவதற்கான துணிவைப் பெற்றது. இந்த துரோகச் செயலோடு திருப்தিপடாமல், இந்த "மாபெரும் மிதவாத கட்சி" "சதிக்கு" எதிரான முன்பிருந்த சட்டங்களைத் தோண்டி எடுத்து அவற்றைத் தொழிலாளர் சங்கங்களுக்கு எதிராகப் பிரயோகிக்கவும் ஆளும் வர்க்கத்திற்குச் சேவை புரிவதில் அகமகிழ்ச்சியுறும் ஆங்கில நீதிபதிகளை அனுமதித்தது. தனது விருப்பத்திற்கு எதிராகவும் வெகு ஜனங்களின் நிர்ப்பந்தத்தின் கீழும் மட்டுமே ஆங்கில நாடாளுமன்றம் வேலை நிறுத்தங்கள் மற்றும் தொழிற் சங்கங்களுக்கு எதிரான சட்டங்களை—500 ஆண்டுகளாகத் தொழிலாளர்களை எதிர்த்த முதலாளிகளின் நிரந்தரத் தொழிற்சங்கம் தானே என்ற நிலையை வெட்கக்கெட்டத் தன்னாணைவத்துடன் மேற்கொண்டு அவற்றை விடாமல் வைத்திருந்த ஆங்கில நாடாளுமன்றம்—கைவிட்டது என்பதை நாம் காண்கிறோம்.
புரட்சியின் முதல் புயல்வீச்சின் போதே பிரெஞ்சு பூர்ஷவாக்கள், தொழிலாளர்கள் அப்பொழுது தான் பெற்றிருந்த சங்கம் சேரும் உரிமையை அகற்றி விடத் துணிந்தார்கள். 1791 ஜூன் 14ந் தேதி பிறப்பித்த ஆணை மூலம் அவர்கள் தொழிலாளர்களின் சங்கங்கள் யாவும் "சுதந்திரத்திற்கும் மனித உரிமைகள் பிரகடனத்திற்கும் எதிரான ஒரு முயற்சி" எனவும் மேலும் இது 500 லிவெர்கள் அபராதம், அதோடு ஓர் ஆண்டுக்கு செயலாக்கமுள்ள குடிமகளது உரிமைகள் இழப்பு என்னும் தண்டனையும் வழங்கத்தக்க குற்றம் எனவும் சாற்றினார்கள்.* அரசாங்க நிர்ப்பந்த மூலமாக முதலாளிகளுக்கும் தொழிலரிகளுக்குமிடையிலான போராட்டத்தை முதலாளிகளுக்கு வசதியான முறையில் வரம்புகளுக்குள் கட்டுப்படுத்தி வைத்த இந்தச் சட்டம், புரட்சிகள் மற்றும் அரச வம்சங்களில் ஏற்பட்ட மாற்றங்களையும் கடந்து நிலவியது. பயங்கர ஆட்சியும் கூட இதை ஒன்றும் செய்யாது விட்டு விட்டது. இது மிகவும் அண்மை
* * இந்தச் சட்டத்தின் முதல் விதி பின்வருமாறு: "சமுதாய ரீதியில் ஒரே அந்தஸ்துள்ள, ஒரே தொழிலைச் செய்து வருவோமான பாரிகளின் எல்லா விதமான அமைப்புகளையும் ஒழித்துவிடுவது என்பது பிரெஞ்சு அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கையாதலால், அத்தகைய அமைப்புகளை எந்த ஒரு சாக்குப் போக்கின் கீழும், அல்லது எந்த ஒரு வடிவிலும் மீண்டும் நிறுவுவது தடை செய்யப்பட்டுள்ளது." நாலாவது விதி கூறுவதாவது: "ஒரே தொழில், கலை அல்லது கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ள குடிமக்கள் தமது தொழில் துறைச் செயல்பாடு அல்லது வேலையைச் செய்ய மறுப்பதையும் அல்லது ஒரு குறிப்பிட்ட ஊதியத்துக்குத்தான் செய்வோம் என்பதையும் நோக்கமாக்கி தமக்குள்ளும் இணக்கமேற்படுத்திக் கொள்வதோ அல்லது பரஸ்பர உடன்பாட்டுக்கு வரவோ செய்யும் பட்சம் மேற்குறிப்பிட்ட கூட்டுயோசனை மற்றும் உடன்படிக்கைகள்... சட்டவிரோதமானவை, சுதந்திரத்தை மீறியவை, மனித உரிமைகள் பிரகடனத்தை மீறியவை என்று கருதப்படும்." வேறு சொற்களில் கூறினால் பழைய தொழிற்-சட்டங்களில் நிர்ணயிக்கப்பட்டது போன்ற அரசுக்கு எதிரான குற்றமாகக் கருதப்படும் (Révolutions de Paris, Paris, 1791, III, p. 523).யிலேயே குற்றச் சட்டத் தொகுப்பேட்டிலிருந்து அகற்றப்பட்டது. இந்தப் முதலாத்துவ திடீர் மாற்றத்திற்குக் கூறப்படும் காரணம் பொருள் நிறைந்ததாகும். இந்தக் சட்டத் இதைப் பற்றி அறிவிப்பாளரான ஷுபெலியே கூறுவதுாவது: "கூலி விகிதங்கள் இப்போதையிருப்பதை விடவும் சிறிது உயர்ந்ததாகத் தான் இருக்க வேண்டும் என்பதையும்... அவை கூலி பெறுவார்கள் வாழ்க்கைத் தேவைகளின் இல்லாமை காரணமாக முற்றிலும் பிறரை அண்டியிருக்கும் நிலை, அதாவது கிட்டத்தட்ட அடிமைத்தனத்திற்கு இணையான நிலை ஆகியவற்றிலிருந்து விடுபட்டு நிற்பதற்குப் போதியளவு உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பதையும் ஒப்புக்கொண்டாலுங்கூட" தொழிலாளர்கள் தமது சொந்த நலன்கள் சம்பந்தமான எந்த விதமான முடிவுக்கும் வருவதற்குோ, அல்லது பொதுவாகச் செயல்பட்டுத் தமது "கிட்டத்தட்ட அடிமைத்தனத்திற்கு இணையான, முற்றிலும் பிறரை அண்டியிருக்கும் நிலையைக்" குறைத்துக் கொள்வதோ அனுமதிக்கக் கூடாது; காரணம் இதைச் செய்வதன் மூலம் அவர்கள் "தமது முன்னாள் எஜமானர்களான, இன்றைய தொழில்முனைவர்களின் சுதந்திரத்திற்குத் தீங்கு விளைவிக்கிறார்கள், ஏனெனில் கார்பொரேஷன்களின் முன்னாளைய எஜமானர்களின் கொடுங் கோன்மையை எதிர்த்து சங்கம் சேருவது, பிரெஞ்சு அரசியல் சட்டம் ஒழித்து விட்ட கார்பொரேஷன்களை மீண்டும் நிலை நாட்டுவதாகும்."*
முதலாத்துவத் சாருபடியாளரின் பிறப்பு
சடக்க்காப்பற்ற பாட்டாளிகள் வர்க்கம் வலுவந்தமாக உருவாக்கப்பட்டது. அப்பாட்டாளிகளைக் கூலித் தொழிலாளர்களாக மாற்றிய கொடூரமான கட்டுப்பாடு, தொழிலாளர்கள் சுரண்டப்படும் அளவை அதிகரிப்பது மூலம் மூலதனத் திரட்சியைத் துரிதப்படுத்தப் போலீசை ஏவிவிட்ட
* Buchez et Roux, Histoire Parlementaire, t. X, pp. 193-195, passim.
வழங்கப்பட்டுள்ள பக்கங்களின் அடிப்படையில், "உடைமை பறிமுதலும் மூலதனத்தின் பிறப்பும்" (அல்லது மூலத்துவத் திரட்சியின் தொடக்கம்) குறித்த ஒரு சுருக்கமான கட்டுரை வடிவம் கீழே தரப்பட்டுள்ளது:
உடைமை பறிமுதலும் மூலதனத்தின் பிறப்பும்: வரலாற்றுப் பின்னணி
1. கொடூரச் சட்டங்களும் பாட்டாளி வர்க்கத்தின் உருவாக்கமும்
15-ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 16-ஆம் நூற்றாண்டு முழுவதும் மேற்கு ஐரோப்பாவில் நிலப்பிரபுத்துவ முறை தகர்ந்து, மக்கள் தங்கள் நிலங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். இதன் மூலம் உருவாக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம், ஆரம்பக்கட்ட பட்டறைத் தொழில்களில் உடனடியாக இணைக்க முடியாத அளவுக்கு விரைவாகத் தோற்றுவிக்கப்பட்டது. வழக்கமான வாழ்க்கைப் பாங்கிலிருந்து திடீரெனப் பெயர்க்கப்பட்ட மனிதர்கள், சந்தர்ப்பச் சூழல்களின் நெருக்கடியால் பிச்சைக்காரர்களாகவும் திருடர்களாகவும் மாறினர். இதனைத் தடுக்கும் பெயரில் நாடோடித் தனத்தை எதிர்த்த கடுமையான சட்டங்கள் அமலாக்கப்பட்டன. இங்கிலாந்தில் ஏழாம் ஹென்றி மற்றும் எட்டாவது ஹென்றியின் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டங்கள், நாடோடிகளைத் தாமாகவே குற்றம் புரிந்தவர்களாகக் கருதி கசையடி, சிறை மற்றும் மரண தண்டனை வரை வழங்கி அடக்கின.
2. அடிமைத்தனத்திற்கு நிகரான கட்டுப்பாடுகள்
ஆறாம் எட்வர்ட் ஆட்சியின்போது (1547) இயற்றப்பட்ட சட்டத்தின்படி, வேலை செய்ய மறுப்பவர்கள் சோம்பேறிகளாகக் கருதப்பட்டு எஜமானர்களுக்கு அடிமைகளாகத் தண்டிக்கப்பட்டனர். அடிமைகளை விற்கவும், வாடகைக்கு விடவும், அவர்களின் நெற்றி அல்லது முதுகில் சூடுபோட்டுக் குறிக்கவும் எஜமானர்களுக்கு உரிமை வழங்கப்பட்டது. மேலும், பிச்சைக்காரர்கள் மற்றும் நாடோடிகளைக் கட்டுப்படுத்தக் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் அவர்களின் மனித உரிமைகளைப் பறித்து, அவர்களை முற்றிலும் பிறரை அண்டியிருக்கும் அடிமை நிலைக்குத் தள்ளின.
3. கூலிகளைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள்
தொழிலாளர் வர்க்கத்தின் மீது நாடாளுமன்றச் சட்டங்கள் மூலம் கூலிகள் வலுவந்தமாகக் குறைக்கப்பட்டன. சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட கூலியை விட அதிகமாகக் கொடுப்பதும் பெறுவதும் பெருங்குற்றமாகக் கருதப்பட்டு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டன. தொழிற் சங்கங்கள் தொடங்குவதும், சங்கங்களில் இணைவதும் சுடுங்கொடிய குற்றச் செயல்களாகக் கருதப்பட்டன. 14-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டு வரை அமலில் இருந்த இத்தகைய சட்டங்கள், தொழிலாளர்களை எப்போதும் குறைந்தபட்சக் கூலிக்கும் அடிமை நிலைக்கும் கீழே வைத்திருப்பதை உறுதி செய்தன.
4. பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் ஒடுக்குமுறை
இங்கிலாந்தைப் போலவே பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளிலும் நாடோடிகள் மற்றும் வேலைவாய்ப்பற்றோருக்கு எதிரான கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு 1791-ல் இயற்றப்பட்ட ஆணைகள், தொழிலாளர்கள் சங்கம் சேரும் உரிமையை "சுதந்திரத்திற்கும் மனித உரிமைகளுக்கும் எதிரான முயற்சி" எனக் கூறி தடை செய்தன. முதலாளிகளின் சுதந்திரத்திற்குத் தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற பெயரில் தொழிலாளர்களின் கூட்டமைப்புகள் ஒடுக்கப்பட்டன.
5. மூலத்துவ உற்பட்சியும் இறுதி நிலைமையும்
முதலாத்துவ உற்பத்தி முறை முழுமையாக வளர்ச்சியடைந்தவுடன், நேரடியான பலப்பிரயோகங்களை விடப் பொருளாதார உறவுகளின் கூட்டுச் சக்தியே தொழிலாளியை முதலாளியிடம் ஆட்படுத்தியது. அரசின் ஆதரவுடனும் சட்டப் பாதுகாப்பினாலும் பூர்சுவா வர்க்கம் தனது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டது. நீண்ட போராட்டங்களுக்குப் பிறகும், பல வடிவங்களில் தொழிற் சங்கங்களுக்கு எதிரான சட்டங்கள் தொடர்ந்து நடைமுறையில் இருந்தன. சக்க்காப்பற்ற பாட்டாளிகள் வர்க்கத்தை வலுவந்தமாக உருவாக்கிய இந்தக் கொடூரமான கட்டுப்பாடுகள், தொழிலாளர்கள் சுரண்டப்படுவதை அதிகரித்து மூலதனத் திரட்சியைத் துரிதப்படுத்தின.
மூலதனத்தின் பிறப்பு மார்க்சின் நூல் பிடிஎப் வடிவில்
.
தொடர்புடைய கட்டுரைகள்:
***
எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக