பின்னை மார்க்சியம் மற்றும் சமகாலத் தாக்கங்கள்"-04

மார்க்சிய-லெனினிய கண்ணோட்டத்தில் "பின்னை மார்க்சியம் மற்றும் சமகாலத் தாக்கங்கள்" — ஒரு விரிவான விவாதப்பகுதியே இவை. இன்று முதல் அத்தியாயம் கூறும் கூற்றிலிருந்தே ஒவ்வொன்றாக ஆராய்வோம். அதற்கு மார்க்ஸ்,எங்கெல்ஸ் மற்றும் லெனின் நூல்களை சற்று திருப்பிப் பார்க்க வேண்டியிருக்கும் விருப்பம் உள்ளோர் அவசியம் மார்க்சிய ஆசான்களின் நூல்களையும் அவர்களின் தத்துவ ஆதாரங்களின் அடிப்படையில் இங்கே விவாதிப்போம். இவை முழுமையல்ல அடுத்த பகுியிலும் இதே அத்தியாயம் மீதான விமர்சனம் தொடரும்...

மார்க்சியம் என்பது வெறும் கல்விசார் தத்துவமோ அல்லது எளிமையான பொருளாதாரக் கோட்பாடோ அல்ல; அது வர்க்கப் போராட்டத்தின் அனுபவங்களிலிருந்தும், முதலாளித்துவ உற்பத்தி முறையின் உள்ளார்ந்த முரண்பாடுகளிலிருந்தும் உருவான பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர உலகப் பார்வையாகும். கார்ல் மார்க்ஸ் மற்றும் ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்ட வரலாற்றுப் பொருள்முதல்வாதம் (Historical Materialism) மனித சமூக வரலாற்றை வர்க்க முரண்பாடுகளின் அடிப்படையில் விளக்குகிறது.

மார்க்சியத்தை காலத்திற்கேற்ப வளர்த்துக்கொள்வதும், புதிய சமூக நிகழ்வுகளைப் பகுப்பாய்வு செய்வதும் அவசியம்தான். ஆனால், அந்த மறுவாசிப்பு என்பது மார்க்சியத்தின் அடிப்படை விதிகளான வர்க்கப் போராட்டம், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் மற்றும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் (Proletarian Dictatorship) ஆகிய கோட்பாடுகளைத் தகர்ப்பதாக இருக்கக் கூடாது. பின்னை மார்க்சியம் எழுப்பிய பண்பாட்டு மற்றும் கருத்தியல் கேள்விகள் கவனிக்கத்தக்கவை என்றாலும், மார்க்சிய-லெனினிய கண்ணோட்டத்தில் அவை பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைப் போராட்டத்திற்குப் பதிலாக முதலாளித்துவ அமைப்புக்குள்ளேயே சமரசம் செய்து கொள்ளும் கோட்பாட்டு விலகல்களாகவே காணப்படுகின்றன. ஆகையால் அதனை அதன் தத்துவ விவாதங்கள் எதனை நோக்கியதாக உள்ளது என்பதனை ஆராய்வதே எமக்கான பணி.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னரும், முதலாளித்துவத்தின் புதிய வடிவங்கள் மற்றும் மேற்கத்திய அறிவுஜீவிச் சூழலில் உருவான "பின்னை மார்க்சியம்" (Post-Marxism) போன்ற கோட்பாட்டுப் போக்குகள் மார்க்சியத்தை மறுவாசிப்பு செய்வதாகக் கூறிக்கொண்டு பல திருத்தல்வாத மற்றும் சந்தர்ப்பவாதக் கருத்துகளை முன்வைத்துள்ளன அதனையையே இந்த நூல் ஆசிரியர் நம் முன் வைக்கிறார். இவை உண்மையில் என்ன சொல்கிறது மற்றும் இவை மார்க்சியம்தானா? என்பதனை ஆராய்வோம்.

இந்தப்பகுதியானது,  இந்த நூலின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள எழுத்துகளின்அடிப்படையாகக் கொண்டு, மார்க்சிய-லெனினிய கண்ணோட்டத்தில் பின்னை மார்க்சியத்தின் தோற்றம், புதிய சமூக இயக்கங்கள், அமைப்பியல் சவால்கள் மற்றும் அதன் வரலாற்று வரம்புகளை விமர்சன ரீதியாக ஆராய்ந்துள்ளோம். உங்களின் மேலான விவாதத்தை முன்னெடுக்க அழைக்கிறோம். 

 பின்னைய மார்க்சியம் மற்றும் கிராம்சிய சித்தாந்தங்கள் 

இவை இரண்டாம் அத்தியாயம் பக்கம் 38 லிருந்துபெரிய அளவில் நூலாசிரியர் விவாதிதுள்ளார். இங்கே அதனை ஒரு அறிமுகதோடே பேசிவிட்டு செல்வோம், இதனை பின்னர் விரிவாக விவாதிக்க உள்ளோம். 

அன்டோனியோ கிராம்சியின் "ஆதிக்கக் கோட்பாடு" (Hegemony) மற்றும் "கலாச்சார ரீதியிலான போராட்டம்" போன்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, உற்பத்திச் சாதனங்கள் மற்றும் வர்க்கப் போராட்டத்தை மையமாகக் கொள்ளாமல் கலாச்சாரப் போராட்டத்துக்கு முன்னுரிமை கொடுப்பதுதான் இவரது கொள்கையாகும் கிராம்சியின் கருத்துக்கள் முதலாளித்துவத்தின் பண்பாட்டு ஆதிக்கத்தைப் புரிந்துகொள்ளப் பயன்பட்டாலும், அதை மார்க்சியத்தின் முதன்மை இயக்க ஆற்றலான "பொருளாதார உற்பத்தி உறவுகள்" மற்றும் "வர்க்கப் போராட்டம்" ஆகியவற்றிற்கு மாற்றாக நிறுத்துவது தவறான போக்காகும். 

மார்க்சியம் என்பது வெறும் கல்விசார் தத்துவமோ அல்லது எளிமையான பொருளாதாரக் கோட்பாடோ அல்ல; அது வர்க்கப் போராட்டத்தின் அனுபவங்களிலிருந்தும், முதலாளித்துவ உற்பத்தி முறையின் உள்ளார்ந்த முரண்பாடுகளிலிருந்தும் உருவான பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர உலகப் பார்வையாகும். கார்ல் மார்க்ஸ் மற்றும் ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்ட வரலாற்றுப் பொருள்முதல்வாதம் (Historical Materialism) மற்றும் இயக்கவியல் பொருள்முதல்வாதம் ஆகியவை மனித சமூக வரலாற்றை வர்க்க முரண்பாடுகளின் அடிப்படையில் விளக்குகின்றன.

சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட  சோசலிச வீழ்ச்சி, அரசியல் திணறல்கள், அதிகார மையப்படுத்தல் மற்றும் ஜனநாயகத்தை மீட்டெடுபதன் பெயரில் அடிப்படையில் சோசலிசக் கோட்பாட்டின் மீது சில கேள்விகளை எழுப்பின. இவை ஏகாதிபத்திய உத்தியே!  இதனைப் பயன்படுத்திக் கொண்ட நவதாராளவாதம் (Neoliberalism), சந்தைமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் மூலம் முதலாளித்துவத்தைத் தற்காலிகமாக நிலைநிறுத்திக் கொண்டது. தொழிற்துறை வேலைகள் குறைந்து, சேவைத் துறைகள் விரிவடைந்ததால் "வர்க்கம் மறைந்துவிட்டது" என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. சோசலிசதை தாக்கடத்தை மூடிமறைக்க பல்வேறு மார்க்சியம் அல்லாத குப்பைகளை மார்க்சியம் என்ற பெயரில் கடைப்பரப்பியுள்ளது.  ஆனால், மார்க்சிய-லெனினியத்தின்படி, முதலாளித்துவம் உள்ளவரை வர்க்கங்களும் அதன் முரண்பாடுகளும் புதிய வடிவங்களில் தொடரவே செய்யும்.

இனி பக்கம் 11 லிருந்து விமர்சனம் தொடரும்

மார்க்சியமும் புரட்சிகர நடைமுறையும் (Praxis)

மார்க்சியத்தின் அடிப்படை நோக்கம் உலகைப் பற்றிச் சிந்திப்பது மட்டுமல்ல, அதனை மாற்றுவதாகும். மார்க்ஸ் தனது "ஃபாயர்பாக் பற்றிய ஆய்வுரைகள்" நூலில் குறிப்பிட்டது போல், சிந்தனையும் செயற்பாடும் ஒன்றையொன்று சார்ந்தவை; சமூக யதார்த்தத்தைப் புரிந்துகொள்வதும், அதை மாற்றுவதற்கான புரட்சிகரச் செயற்பாட்டில் (Praxis) ஈடுபடுவதும் பிரிக்க முடியாதவை ஆகும்.

மார்க்சிய-லெனினியத்தின்படி, வர்க்கப் போராட்டம் மற்றும் அரசியல் பொருளாதாரம் ஆகியவை சமூக மாற்றத்தின் மைய அச்சாகும். மாறாக, பின்னை மார்க்சியப் போக்குகள் இந்த நடைமுறைச் செயற்பாட்டிலிருந்து விலகி, மார்க்சியத்தை வெறும் "கருத்தியல் விவாதமாகவும்", கல்வித்துறை சார்ந்த பட்டிமன்றப் பொருளாகவும் சுருக்க முனைகின்றன.

பொருளாதார அடித்தளமும் மேற்கட்டுமானமும்: இயந்திரத்தனமான விளக்கங்களும் திருத்தல்வாதமும்

வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின்படி, சமூகத்தின் பொருளாதார அடித்தளமே அரசியல், சட்டம், பண்பாடு மற்றும் கருத்தியல் போன்ற மேற்கட்டுமானங்களை நிர்ணயிக்கிறது. இருப்பினும், இருபதாம் நூற்றாண்டில் உருவான சில மரபுவழி மார்க்சிய விளக்கங்கள் இதனை மிக எளிய, இயந்திரத்தனமான வடிவமாக மாற்றின. அதாவது, பொருளாதார மாற்றங்கள் மட்டுமே தாமாகவே புரட்சியை ஏற்படுத்திவிடும் என்ற தவறான பார்வை நிலவியது.

இந்த இயந்திரத்தனமான விளக்கங்களின் பலவீனங்களைச் சாதகமாகப் பயன்படுத்தி, பின்னை மார்க்சியத் சிந்தனையாளர்கள் (எ.கா: எர்னஸ்டோ லக்லாவ், சாந்தால் மூஃபே போன்றோர்) பொருளாதார அடித்தளத்தின் முதன்மையை முற்றிலுமாக மறுதலித்தனர். வர்க்கப் போராட்டத்திற்குப் பதிலாக 'கதையாடல்' (Discourse), 'இனம்', 'பாலினம்', 'மொழி' போன்ற பண்பாட்டுத் தளங்களுக்கு முதலிடம் அளித்து, வர்க்கப் பார்வையைப் பலவீனப்படுத்தினர். மார்க்சிய-லெனினிய கண்ணோட்டத்தில், பண்பாடும் கருத்தியலும் முக்கியம் என்றாலும், அவை பொருளாதார உறவுகளிலிருந்தும் வர்க்க முரண்பாடுகளிலிருந்தும் தனித்து இயங்குபவை அல்ல.

முடிவாக, மார்க்சியத்தை காலத்திற்கேற்ப பகுப்பாய்வு செய்வதும், புதிய சமூக நிகழ்வுகளைப் புரிந்துகொள்வதும் அவசியம்தான். ஆனால், அந்த மறுவாசிப்பு என்பது மார்க்சியத்தின் அடிப்படை விதிகளான வர்க்கப் போராட்டம், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் மற்றும் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர முன்னணிப் பங்கு ஆகியவற்றைத் தகர்ப்பதாக இருக்கக் கூடாது. பின்னை மார்க்சியம் எழுப்பிய பண்பாட்டு மற்றும் கருத்தியல் கேள்விகள் கவனிக்கத்தக்கவை என்றாலும், மார்க்சிய-லெனினிய கண்ணோட்டத்தில் அவை பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைப் போராட்டத்திற்குப் பதிலாக முதலாளித்துவ அமைப்புக்குள்ளேயே சமரசம் செய்துகொள்ளும் கோட்பாட்டு விலகல்களாகவே காணப்படுகின்றன.

*********************************************************************

இனி இந்தப்பகுதியில் பேசப்பட்டுள்ளவற்றை சுருக்கிக் காண்போம்

சுருக்கம்

பின்னை மார்க்சியம் (Post-Marxism) என்பது 1970களுக்குப் பிறகு மேற்கத்திய அறிவுலகில் உருவான ஒரு சிந்தனைப் போக்கு. வர்க்கப் போராட்டத்தை வரலாற்றின் மைய இயக்கமாகக் கொள்ளும் மார்க்சியக் கோட்பாட்டை அது மறுவாசிப்புக்கு உட்படுத்துகிறது. பொருளாதார அடித்தளம் அடுத்தது மேற்கட்டுமானம் என்ற பகுப்பைபாய்வை விட்டு விட்டு, பண்பாடு, மொழி, அடையாளம், ஆசை ஆகியவற்றின் தன்னியல்பான பங்கை வலியுறுத்துகிறது. இந்தப் இப்போக்கின் முக்கியக் கருத்துக்களை அறிமுகப்படுத்தி, அவற்றை மார்க்சிய லெனினியக் கண்ணோட்டத்தில் விமர்சிக்கிறது. அதே நேரத்தில், பின்னை மார்க்சியம் எழுப்பிய  கேள்விகள் என்ன அவை பயன் உள்ளவையா என்றும் பரிசீலிக்கிறது.


1. அறிமுகம்

மார்க்சியத்தின் மறுவாசிப்பு ஒரே நாளில் நிகழ்ந்த நிகழ்வு அல்ல. 1917 ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு, குறிப்பாக 1920களிலும் 1930களிலும் ஐரோப்பாவில் பாசிசத்தின் எழுச்சி, சோவியத் ஒன்றியத்தில் ஏற்பட்ட மாற்றம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிராகரிடது அதிகார வர்க்கததை நிலை நிறுத்தி முதலாளித்துவத்திற்கு வழிகோலிய போக்கு, மேற்கத்தியத் தொழிலாளர் இயக்கங்களின் பின்னடைவு ஆகியவை மார்க்சியர்களுக்குக் கடுமையான கேள்விகளை முன்வைத்தன. அதனை ஆய்வு செய்ய மார்க்சிய லெனினியத் தத்துவங்கள் மட்டுமே பயனளிக்கும். அதற்கான பணியை 1960 களில் ரசிய சீன கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடேயே நடந்த விவாத டதொகுப்பு நம் முன் உள்ளன. அதனை எதனையும் ஏற்றுக் கொள்ளத இந்த நூலாசிரியர். அன்று ஏகாதிபத்தியம் உருவாக்கிய சர்க்குகளை (கருடத்துகளை) இங்கே விமர்சனமாக வைக்கிறது. ஆம்    அந்தப் பின்னணியில்தான் லூக்காச், கிராம்சி, ஃப்ராங்க்ஃபெர்ட் பள்ளி போன்றவை "மேற்கத்திய மார்க்சியம்" (Western Marxism) என்ற போக்கை உருவாக்கின அதனைாதான் இந்த நூலாசிரியர் முன் வைக்கிறார்.

இந்தச் சிந்தனை வழியே வந்தவர்கள்தான் இன்று "பின்னை மார்க்சியர்கள்" என அழைக்கப்படுபவர்களில் பலர். இவர்களிடையே கருத்து வேறுபாடுகள் மிகப் பெரியவையாக பேசப்படுகின்றன. இந்த வேறுபாடுகளையும் ஒற்றுமைகளையும் புரிந்துகொள்ள நமக்கு மார்க்சிய லெனினிய வழிகாட்டுதல் இருந்தால் போதும். இவை என்ன சொல்கிறு இவை யாருக்கானவை என்னை புரிந்துக் கொள்வது எளிது.

2. பின்னை மார்க்சியத்தின் வரலாற்றுப் பின்னணி

பின்னை மார்க்சியத்தின் எழுச்சிக்குப் பல வரலாற்றுக் காரணிகள் உள்ளன:

  • 1968 மே நிகழ்வுகள்: பிரான்சில் மாணவர் எழுச்சியும் தொழிலாளர் வேலைநிறுத்தமும் நடந்தபோது, பல அறிவுஜீவிகள் தொழிற்சங்கக் கட்சி அரசியலிலிருந்து விலகி, பண்பாட்டு விடுதலைக்கான இயக்கங்களை நோக்கி நகர்ந்தனர்.
  • 1970களின் பொருளாதார நெருக்கடி: ஃபோர்டிசப் (Fordism) உற்பத்தி முறையின் நெருக்கடி, நெகிழ்வு (flexible) உற்பத்தி முறைக்கு வழிவகுத்தது. ஹார்வி இதை "நெகிழ்வு திரளல்" (flexible accumulation) எனப் பகுத்தாய்ந்தார்.
  • 1989–1991 சோவியத் சிதைவு: இது "வரலாற்றின் முடிவு" என்ற கொண்டாட்டத்துக்கும், மார்க்சியம் தோற்றுவிட்டது என்ற வாதத்துக்கும் காரணமானது.

இந்தச் சூழலில், மார்க்சியத்தை மறுகட்டமைக்கிறோம் பல திசைகளில் சென்றனர்: ஒன்று, மார்க்சியத்தைக் கைவிட்டு பின்நவீனத்துவத்துடன் இணைவது; மற்றொன்று, சோவியத் சோசலிச வீழ்ச்சியை விமர்சிக்கிறேன் என்று வர்க்கம் மட்டுமே போதாது என்று கூறி ஏகாதிபத்திய கருதுகளை முன்வைத்டது சமூகதில் உள்ள பல்வேறு ஒடுக்குமுறை வடிவங்களை இணைக்க முயல்கிறேன் என்று மார்க்சிய அடிப்படைகளை மறுத்து பாட்டாளி வர்க்க கட்சி பாட்ாளி வர்க்க புரட்சிக்கான கோட்பாடுகளை மறுத்து தனிதனியான போராட்டங்ளுக்கு பின்னால் அணி சேர்க்க வைக்கும் பின்னை மார்க்சியம் போன்றவை என்னவென்று நூலாசிரியரின் குறிப்புகளிலிருந்தே காண்போம்.


3. நூலாசிரியர் முன் வைக்கும் முக்கியச் சிந்தனையாளர்களும் அவர்களின் கருத்துக்களும்

3.1 கிராம்சி, ஃப்ராங்க்ஃபெர்ட் பள்ளி: மரபின் தொடக்கம்

அன்டோனியோ கிராம்சி (Antonio Gramsci) தமது சிறைக் குறிப்பேடுகளில் (Prison Notebooks) "மேலாண்மை" (hegemony) என்ற கருத்தை விரிவாக்கினார். அரசு என்பது வன்முறையால் மட்டுமல்ல, பண்பாட்டு ஒப்புதல் மூலமும் ஆட்சி செய்கிறது என்பது அவரது வாதம். இது மார்க்சியத்துக்கு உண்மையான பங்களிப்பு. ஆனால், கிராம்சி வர்க்கக் கூட்டணியை மையமாக வைத்தே மேலாண்மையைப் புரிந்துகொண்டார். அவருக்கு எதிர்ப்பு என்பது வர்க்க அணிசேர்க்கையின் வழியாகவே நிகழ வேண்டும்.

ஃப்ராங்க்ஃபெர்ட் பள்ளி (அடோர்னோ, ஹார்க்ஹைமர், மார்குஸே, ஹேபர்மாஸ்) "பண்பாட்டுத் தொழில்" (culture industry) பற்றிய விமர்சனத்தை முன்வைத்தது. முதலாளித்துவம் நுகர்வுப் பண்பாட்டின் மூலம் மக்களின் விமர்சன உணர்வை மழுங்கடிக்கிறது என்பது அவர்களின் வாதம். இது பயனுள்ள அவதானிப்பு. ஆனால் பண்பாட்டை முழுமையாக ஒடுக்கும் கருவியாகக் காண்பது, மக்களை செயலற்ற பொருட்களாகக் கருதும் போக்குக்கு இட்டுச் செல்கிறது என்பது மார்க்சிய லெனினிய விமர்சனமாகும்.

3.2 சார்த்தர்: இருத்தலியமும் மார்க்சியமும்

ஜான் பால் சார்த்தர் (Jean-Paul Sartre) விமர்சனப் பகுத்தறிவின் ஆய்வு (Critique of Dialectical Reason, 1960) நூலில் மனிதனின் தனிப்பட்ட தேர்வை வரலாற்றின் மைய இயக்கமாக வைக்க முயன்றார். அவருக்கு வரலாற்று இயக்கம் தனிமனிதச் செயல்களின் கூட்டுத்தொகை. இது மார்க்சிய வரலாற்றுப் பொருள்முதல்வாதத்திலிருந்து விலகுகி நிற்கிறது. பொருளாதார உறவுகள் மனித உணர்வைத் தீர்மானிக்கின்றன என்ற மார்க்சியக் கருத்தை, உணர்வு தனக்கான வழியைத் தானே உருவாக்குகிறது என்ற இருத்தலியல் கருத்தாக மாற்றியது.

விமர்சனம்: இந்த அணுகுமுறை புரட்சிகர அமைப்பின் தேவையை மறைக்கிறது. தனிமனிதத் தேர்வுகள் முக்கியமானவை என்றாலும், அவை சமூக உற்பத்தி உறவுகளுக்குள்ளேயே நிகழ்கின்றன. லெனின் என்ன செய்ய வேண்டும்? (1902) நூலில் வலியுறுத்தியது போல, தன்னியல்பான எழுச்சி மட்டும் நிலையான அரசியல் மாற்றத்தை உருவாக்காது; அதற்கு ஒழுங்கமைந்த புரட்சிகரக் கட்சி அவசியம்.

3.3 லியோத்தார், போத்திரியா: பின்நவீனத்துவத்தின் பங்கு

ஜான்-ஃப்ராங்சுவா லியோத்தார் (Jean-François Lyotard) பின்நவீன நிலை (The Postmodern Condition, 1979) நூலில் "பெருங்கதையாடல்களின்" (grand narratives) மீது அவநம்பிக்கை தெரிவித்தார். மார்க்சியம், அறிவொளிக் காலத்தின் முன்னேற்றக் கதை ஆகியவை "பெருங்கதையாடல்கள்" எனப்பட்டன. அவற்றை நிராகரித்து, பல சிறு உள்ளூர் கதையாடல்களை முன்வைத்தார்.

ஜான் போத்திரியா (Jean Baudrillard) "சிமுலாக்ரா" (simulacra) என்ற கருத்தை முன்வைத்தார். நகல்களே மூலத்தை விட உண்மையானவையாகிவிட்ட நிலையில், உற்பத்தி மற்றும் வர்க்க உறவுகள் பின்தங்கிவிட்டன என்பது அவரது வாதம்.

விமர்சனம்: இவ்விருவரின் கருத்துக்கள் ஒரு அடிப்படை அறிவியல் பிழையைக் கொண்டுள்ளன. பெருங்கதையாடல்களை நிராகரிப்பது, உலகம் பொருளாகவே இருக்கிறது என்ற உண்மையை மறுப்பதாகிறது. லெனின் பொருள்முதல்வமும் அனுபவ விமர்சனவாதமும் (Materialism and Empirio-criticism, 1909) நூலில், உணர்வின் அப்பால் உள்ள புறநிலை யதார்த்தத்தை மறுக்கும் அறிவியல் அணுகுமுறைகளுக்கு எதிராக வாதிட்டார். அதே எதிர்ப்பு, பேரளவிலான பொருளாதார அமைப்பை "சிறு கதைகளாக" நொறுக்கும் பின்நவீனத்துவத்துக்கும் பொருந்தும். ஏ. கால்லினிக்கோஸ் (Alex Callinicos) பின்நவீனத்துவத்துக்கு எதிராக (Against Postmodernism, 1989) நூலில் இந்த நிலைப்பாட்டை விரிவாக விமர்சித்துள்ளார். இவர்கள் இவர்களன் கருத்துகளை மறுப்பார் இறுதியில் மார்க்சிய அடிப்படைகளையே மறுப்பார்கள். இவைதான் இவர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை எனலாம்.

3.4 லக்லாவ்–மூஃபே: பன்முக அரசியலும் வர்க்கத்தின் வீழ்ச்சியும்

எர்னெஸ்டோ லக்லாவ் (Ernesto Laclau) மற்றும் ஷாந்தால் மூஃபே (Chantal Mouffe) மேலாண்மையும் சோசலிசத்துக்கான உத்தியும் (Hegemony and Socialist Strategy, 1985) நூலை இப்போக்கின் அடிப்படை ஆவணமாகக் கருதலாம். வர்க்கம் என்பது ஒரு "தனித்துவமான" வரலாற்று முகவர் அல்ல என்றும், பல்வேறு "ஜனநாயகக் கோரிக்கைகள்" ஒரு "சமமான சங்கிலி" (equivalential chain) மூலம் இணைக்கப்படலாம் என்றும் அவர்கள் வாதிட்டனர். இது "பல்வேறு போராட்டங்களின் கூட்டணி" என்ற பெயரில் முன்வைக்கப்பட்டது.

விமர்சனம்: இந்த அணுகுமுறையின் சிக்கல் என்னவென்றால், உற்பத்தி உறவுகளில் வேரூன்றிய வர்க்கப் பிரிவினையை அது மறைக்கிறது. சுரண்டல் ஒரு ஜனநாயகக் கோரிக்கை மட்டுமல்ல; அது உபரி மதிப்பின் பிரித்தெடுப்பு. பல்வேறு ஒடுக்குமுறைகள் உண்மையானவை என்றாலும், அவற்றின் அடிப்படைக் காரணங்களை வர்க்க உறவுகளிலிருந்து பிரிக்க முடியாது. மார்க்ஸ் மூலதனம் நூலில் (1867) காட்டியதுபோல, முதலாளித்துவ உறவுகள் தொழிலாளர் சுரண்டலின் அடிப்படையில் இயங்குகின்றன என்றார் ஆனால் இவர்கள் அதனை ஏற்காமல் மக்களை அடையாளங்ளுக்கு பின் நிறுத்தியுள்ளனர்.

3.5 ஜிஜெக்: கருத்தியலும் உண்மையும்

ஸ்லாவோய் ஜிஜெக் (Slavoj Žižek) லக்கானிய உளப்பகுப்பாய்வையும் ஹெகலிய இயங்கியலையும் இணைத்து, கருத்தியல் குறித்த புதிய விளக்கத்தை முன்வைக்கிறார். மக்கள் கருத்தியலை நம்பாவிட்டாலும் அதன்படி நடக்கிறார்கள் என்ற கருத்து அவரது முக்கிய பங்களிப்பு.

விமர்சனம்: ஜிஜெக்கின் ஆய்வில் நுட்பம் உண்டு. ஆனால் அவர் பெரும்பாலும் கருத்தியல் அமைப்பின் உளவியலை விளக்குவதோடு நின்றுவிடுகிறார். அந்த அமைப்பின் பொருளாதார அடித்தளத்தை மாற்றுவதற்கான நடைமுறைத் திட்டத்தை அவர் தெளிவாக முன்வைக்கவில்லை. லெனின் ஏகாதிபத்தியம்: முதலாளித்துவத்தின் உயர்நிலை (1916) நூலில் காட்டியதுபோல், கோட்பாட்டு விளக்கம் நடைமுறையுடன் இணைய வேண்டும் என்றார் ஆனால் எந்த தெளிவும் இல்லாத ஒருவரை இந்த நூலாசியர் ஏன் உயர்திப்பிடிக்கிறார், அவர்தான் பதில் சொல்ல வேண்டும் .

3.6 நெக்ரி: பேரரசும் பெருந்திரளும்

அன்டோனியோ நெக்ரி (Antonio Negri) மைக்கேல் ஹார்ட்டுடன் இணைந்து எழுதிய பேரரசு (Empire, 2000) மற்றும் பெருந்திரள் (Multitude, 2004) நூல்களில், உலகமயமாக்கல் ஒரு புதிய "பேரரசை" உருவாக்கியுள்ளது என்றும், அதற்கு எதிரான விடுதலை சக்தியாக "பெருந்திரள்" (multitude) இருக்கிறது என்றும் வாதிட்டார். தொழிலாளர் வர்க்கத்துக்குப் பதிலாக பல்வேறு உழைப்பு வடிவங்களைக் கொண்ட பரந்த திரள் இயக்கங்களைக் கொண்டாடுகிறார்.

விமர்சனம்: நெக்ரியின் கருத்து உலகமயமாக்கலின் புதிய அம்சங்களை அடையாளம் காட்டுகிறது. ஆனால் அவரது "பெருந்திரள்" என்ற கருத்து உற்பத்தியில் அதன் நிலையை வரையறுக்கத் தவறுகிறது. வர்க்கம் என்பது உற்பத்தி சாதனங்களுடனான உறவால் வரையறுக்கப்படுகிறது. அந்த வரையறையை மறைத்தால், யார் சுரண்டுபவர், யார் சுரண்டப்படுபவர் என்ற கேள்வியே மழுங்கிவிடுகிறது. இன்று இந்தியாவில் நடக்கும் பல போராட்டங்கள் எவ்வித திசை வழியும் இன்றி இப்படிதான் வீணட்டிக்கப்படுகின்றது எனலாம். CJP யின் போராட்டம் என்ன சமூக மாற்றதிற்காா? இங்குள்ள பல்வேறு போராட்டங்கள் அடையாளப் போராட்டங்களாய் மாறி போய் உள்ளமை, வர்க்கத்தை மறுத்து நடக்கும் போராட்ட என்னவாய் உள்ளு நீங்களே ஆராயுங்கள்!   

3.7 ஜோடி டீன்: கம்யூனிச அரசியலின் மறுவரையறை

ஜோடி டீன் (Jodi Dean) கம்யூனிஸ்ட் அடிவானம் (The Communist Horizon, 2012) போன்ற நூல்களில், இணையமும் தொடர்பு முதலாளித்துவமும் (communicative capitalism) மக்களின் அரசியல் நடவடிக்கையை பயனற்ற "கருத்துப் பரிமாற்றமாக" மாற்றிவிட்டன என வாதிடுகிறார். அரசியல் கூட்டமைப்பின் தேவையை அவர் மீண்டும் வலியுறுத்துகிறார்.

விமர்சனம்: டீனின் பகுப்பாய்வு பல இடங்களில் லெனினிய வழியுடன் ஒத்துப்போகிறதாக இராலும்; கட்சி மற்றும் அமைப்பின் அவசியத்தை அவர் ஏற்கிறார். இது கவனிக்கத்தக்க ஒரு திருப்பம். ஆனால் அவர் இந்த அமைப்பை உற்பத்தி உறவுகளின் வரலாற்று நிலையுடன் இணைக்கவில்லை எனும் பொழுது இவை பலவீனமானவையே.

3.8 எடியன் பாலிபர்: குடியுரிமை, இனம், வர்க்கம்

எடியன் பாலிபர் (Étienne Balibar) இம்மானுவல் வாலர்ஸ்டைனுடன் இணைந்து எழுதிய இனம், தேசம், வர்க்கம் (Race, Nation, Class, 1991) நூல், இனம் மற்றும் தேசியம் ஆகியவை வரலாற்று ரீதியாக வர்க்க உறவுகளுடன் பின்னிப் பிணைந்தவை என்பதை விளக்குகிறது. அவரது அணுகுமுறை இனவாதத்தை வெறும் உளவியல் அல்லது கலாச்சாரப் பிரச்சினையாக அல்லாமல், உற்பத்தி மற்றும் உழைப்பு ஒழுங்குடன் தொடர்புடைய வரலாற்று நிகழ்வாகப் பார்க்கிறது. இது மார்க்சியத்துடன் நெருக்கமான ஒன்றாக முன் வைக்கின்றனர். ஆனால் சோவியத் ரசியாவில் லெனின்,ஸ்டாலின் முன்னெடுப்புகளை புறம்தள்ளி புதிய வகையில் இவை ஜோடிக்கும் பொழுது இவை பாட்டாளி வர்க்க விடுலைக்கா என்ற கேள்வி எழுகிறது! 

விமர்சனம்: பாலிபரின் பங்களிப்பு மதிப்புமிக்கது. ஆனால் அவர் வரலாற்று ஒடுக்குமுறைகளைப் பற்றிய விளக்கத்தை விரிவாக்கும்போது, அவற்றின் பொருளாதார அடிப்படையை எவ்வளவு ஆழமாகச் சோதிக்கிறார் என்பதும் இவை மார்க்சிய லெனினிய தத்துவ அடிப்படையிலா விலகியுள்ளதா என்பதே விவாதத்துக்குரியது.

3.9 ஜேம்சன், ஹார்வி: மார்க்சியர்கள் பின்நவீனத்துவத்துடன் உரையாடியவர்கள்

ஃப்ரெட்ரிக் ஜேம்சன் (Fredric Jameson) பின்நவீனத்துவம், அல்லது தாமதமான முதலாளித்துவத்தின் பண்பாட்டுத் தர்க்கம் (Postmodernism, or, the Cultural Logic of Late Capitalism, 1991) நூலில், பின்நவீனத்துவத்தை முதலாளித்துவத்தின் ஒரு பண்பாட்டு வெளிப்பாடாக விளக்கினார். அதை முழுவதுமாக நிராகரிக்காமல், அதன் பின்னுள்ள பொருளாதார அடித்தளத்தை ஆராய்ந்தார். இது முக்கியமான வேறுபாடு.

டேவிட் ஹார்வி (David Harvey) பின்நவீனத்துவ நிலை (The Condition of Postmodernity, 1989) நூலில், நெகிழ்வு திரளல், காலம்-இடச் சுருக்கம் (time-space compression) ஆகியவற்றை விளக்கி, சமூக மாற்றங்களை மூலதனத்தின் இயக்கத்துடன் இணைத்தார். ஹார்வியின் "சீரற்ற வளர்ச்சி" (uneven geographical development) பற்றிய ஆய்வு, மார்க்சிய புவியியலின் முக்கியப் பங்களிப்பு.

விமர்சனம்: இவ்விருவரும் நிலைக்கத்தக்க மார்க்சியர்கள். ஆனால் ஜேம்சனின் "கருத்தியல் அடையாளம்" பற்றிய சில கருத்துக்கள், பண்பாட்டுக்கு அதிக சுயாட்சி அளிக்கும்போது, அடித்தளம்-மேற்கட்டுமானப் பகுப்பின் ஆற்றலை மங்கச் செய்து மார்க்சிய லெனினிய அடிப்படைகளையே இல்லாதாக்கி மார்க்சியதிலிருந்து விலகியுள்ளதை காணலாம்.


இதுவரை ஆராய்ந்ததன் அடிப்படையில், பின்னை மார்க்சியத்தின் மையமான சிக்கல்களைப் பின்வருமாறு தொகுக்கலாம்:

  1. வர்க்கத்தின் மையத்தன்மையை மறுப்பது: முதலாளித்துவ சமூகத்தில் உபரி மதிப்பு உற்பத்தி மற்றும் அதன் பிரித்தெடுப்பு அடிப்படையானது. அதை ஒரு "கதையாடல்" என்று ஒதுக்குவது, சமூக அமைப்பின் மூலக் காரணியை மறைக்கிறது.
  2. அறிவுசார் சார்புவாதம்: உண்மை பற்றிய பின்நவீனக் கருத்துகள் பெரும்பாலும் சார்புவாதத்துக்கு (relativism) இட்டுச் செல்கின்றன. அறிவியல் பூர்வமான சமூக ஆய்வுக்கும் நடைமுறைக்கும் இது பலவீனம்.
  3. அரசியல் உத்தியின் குழப்பம்: லக்லாவ்–மூஃபே போன்றோர் "ஜனநாயகக் கூட்டணி" பற்றிப் பேசும்போது, அதிகாரத்தைக் கைப்பற்றும் பிரச்சினையும் அரசுக்கு எதிரான புரட்சிகர மாற்றமும் பின்னணிக்குத் தள்ளப்படுகின்றன. லெனின் அரசும் புரட்சியும் (1917) நூலில் காட்டியதுபோல், அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் அதிகார இயந்திரம்; அதை மாற்றாமல் சமூக விடுதலை சாத்தியமில்லை.
  4. கருத்தியல் சுயாட்சி பற்றிய மிகைப்படுத்தல்: பண்பாடும் கருத்தியலும் முக்கியமானவை என்பதை மார்க்சியர்கள் ஏற்கின்றனர். ஆனால் அவற்றை உற்பத்தி உறவுகளிலிருந்து முழுமையாகப் பிரிப்பது அறிவியல் பிழை.
  5. நம்பிக்கை மற்றும் ஏமாற்றம்: நெக்ரியின் "பெருந்திரள்" போன்ற கருத்துக்கள் உலகமயமாக்கலின் அடக்குமுறையை ஏற்கத் தவறி, எதிர்ப்பு சக்திகளை மிகைப்படுத்திக் காட்டுகின்றன.

பின்னை மார்க்சியம் முதலாளித்துவத்தின் மாறிவரும் வடிவங்களையும், அதற்கு எதிரான போராட்டங்களின் பன்முகத்தன்மையையும் கவனத்தில் கொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்துள்ளது. இது பாராட்டத்தக்கது. ஆனால் அது வர்க்கப் பகுப்பாய்வை கைவிடும்போது, மார்க்சியத்தின் அறிவியல் ஆற்றலையும் நடைமுறை வலிமையையும் இழக்கிறது.

மார்க்சிய லெனினியக் கண்ணோட்டம் கோருவது, பல்வேறு ஒடுக்குமுறைகளை அங்கீகரித்து, அவற்றின் வேர்களை உற்பத்தி உறவுகளில் தேடும் ஒரு இயங்கியல் அணுகுமுறை. பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, இனவெறி எதிர்ப்பு ஆகியவை வர்க்கப் போராட்டத்தின் அங்கங்களாக இணைக்கப்பட வேண்டும்; அவற்றுக்கு மாற்றாக அல்ல. இதுவே பின்னை மார்க்சியத்தின் கேள்விகளுக்கு மார்க்சியம் அளிக்கக்கூடிய மிகவும் பொருத்தமான பதில்.


தொடர்ந்து விவாதிப்போம் அடுத்ப்பகுதியில்   தோழர்களே ....

.


தொடர்புடைய கட்டுரைகள்:

***

எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

கருத்துகள் இல்லை:

இலக்கு இதழின் கட்டுரைகள்

பின்னை மார்க்சியம்-முதல் அத்தியாயம் மீதான மார்க்சிய-லெனினிய மதிப்பீடு-05

மனிதகுலத்தின் வரலாறு புரட்சிகள் , மக்கள் எழுச்சிகள் , அரசியல் மாற்றங்கள் , போர்கள் , வர்க்க மோதல்கள் , பல்வேறு சமூக நலன்களின் மோதல்கள் என வெ...

செய்தியை சார்ந்த அலசல்