மூலதனத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகள் பற்றிய பணி-23-10-2026

கார்ல் மார்க்ஸின் புகழ்பெற்ற 'மூலதனம்' (Capital) நூலின் இரண்டு மற்றும் மூன்றாவது தொகுதிகளை உருவாக்குவதில் அவர் எதிர்கொண்ட கடினமான ஆய்வுகள் மற்றும் அவரது மறைவுக்குப் பின் பிரடெரிக் எங்கல்ஸ் அவற்றை வெளியிட்டுச் செய்த மகத்தான பங்களிப்புகளை இத்தூலங்கள் விவரிக்கின்றன. மார்க்ஸ் தனது வறுமை மற்றும் உடல்நலக் குறைவுக்கும் இடையில் ரஷ்ய மொழி கற்று மேற்கொண்ட விவசாயப் பொருளாதார ஆய்வுகள், மூலதனத்தின் சுற்றோட்டம் மற்றும் மறு உற்பத்தி குறித்த ஆழமான கோட்பாடுகள் ஆகியவற்றை இவை விளக்குகின்றன. மேலும், முதலாளித்துவத்தின் உபரி மதிப்புக் கோட்பாடு, கூலி உழைப்புச் சுரண்டல் மற்றும் மூலதனச் சேமிப்புத் திரட்சி ஆகியவற்றை ஆராய்ந்து, இறுதியில் சோஷலிசப் புரட்சி தவிர்க்க முடியாதது என்ற வரலாற்று உண்மையை இந்நூல்கள் அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்துகின்றன.(இந்தப்பகுதி காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு-அத்தியாயம் 10 பக்கம் 765 - 792 வரை)

மூலதனத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகள் பற்றிய பணி

1867 ஆரம்பத்தில் மார்க்ஸ் பாக்கியிருந்த கையெழுத்துப் பிரதிகளை இறுதியாகச் சரிபார்த்து வைக்கத் தொடங்கினார். இவைகளை 1865 ஆம் ஆண்டு இறுதியில் அவர் எழுதி முடித்திருந்தார். இவைகள் மூலதனத்தின் இதர தொகுதிகளாக ஆக்கப்பட வேண்டியவை. இந்த வேலையை அவர் சில இடைவெளிகளுடன் சாகும்வரை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்.

முதலாவதாகவும் முக்கியமானதாகவும் அவர் பலவேறு நாடுகளில் உள்ள விவசாய உறவுகளைப் பற்றி இன்னும் அதிகமாக ஆழமாகப் படித்து ஆராய்ந்தார். அது முதலாளித்துவப் பொருளாதாரத்தில் புதிய உண்மை நிலைத் தோற்றமாக உள்ளதையும் படித்தாராய்ந்தார். 1868 ஜூலை 4 ஆம் தேதி ஜெர்மன் மற்றும் அமெரிக்கத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் ஒரு சோஷலிஸ்ட் தலைவரான சீக்பிரீட் மேயருக்கு எழுதிய ஒரு கடிதத்தில் மார்க்ஸ் அமெரிக்கப் பத்திரிகைகளை அவ்வப்போது அனுப்பும்படி கேட்டிருந்தார்: "அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள நிலச் சொத்துடைமை மற்றும் விவசாய உறவுகளில் ஏதாவது பூர்ஷுவா எதிர்ப்பு என்று இருந்தால் அவைகளை சேகரித்து நீங்கள் எனக்கு அனுப்ப முடியுமானால் அது மிகவும் நலமாக இருக்கும்" ^1 (அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில்) அவைகளைப் பற்றி தன் கருத்துக்களை சில கடிதங்களில்... எழுதினார்... இரண்டாவது தொகுதியை அச்சிற்குத் தயார் செய்வது இலகுவானதன்று... இத்துடன் சமூகத்தின் விவசாயம் பற்றிய... மார்க்ஸ் கவனம் செலுத்தினார். அதன் விளைவாக 1874-ல் இரண்டாவது தொகுதியின் கையெழுத்துப் பிரதி முழுவதையும் திருத்தியமைத்து இதற்கு அடிப்படையாகக் கொள்ள அவர் தீர்மானித்தார்.

1860 ஆம் ஆண்டுகளின் கடைசியிலும் 1870 ஆம் ஆண்டுகளின் தொடக்க காலத்திலும் மூலதனத்தை எவ்வளவு விரைவில் முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் முடிப்பதற்கு அவரால் ஆன வரையிலும் முயன்று பார்த்தார். ஆனால் அவர் செய்து முடிக்க வேண்டிய வேறு பல முக்கியமான வேலைகளும் இருந்தன. 1871 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி டேனியல்சனுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் கடந்த சில மாதங்களாக அவர் மிகவும் அதிகமான வேலைப் பளுவிற்குள்ளாகி இருந்ததாகவும் அதனால் தத்துவார்த்தப் படிப்புப் பணிகளை மீண்டும் தொடங்க முடியவில்லை என்றும் புகார் செய்து எழுதியுள்ளார். 1872 மே 28 ஆம் தேதி மார்க்ஸ் அவருக்குக் கீழ்க்கண்டவாறு எழுதினார்: "நான் அளவுக்கு மீறி வேலை செய்து கொண்டிருக்கிறேன், அதனால் என்னுடைய தத்துவார்த்தப் படிப்புப் பணிகளில் நான் அதிகமாகத் தலையிட்டு அவைகளைத் திருத்த வேண்டியதेंற்பட்டது. செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு அந்த வியாபார நிறுவனத்திலிருந்து நான் விலகிக்கொள்ள வேண்டியதிருக்கிறது. அந்த வேலை இப்போது மிகப் பெரும்பாலும் எனது தோள்கள்மேலேயே விழுகின்றது. அந்த நிறுவனத்திற்கு இப்போது உலகம் முழுவதும் கிளைகள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள்" (* Marx, Engels, Werke, Bd. 32, S. 551.). (அப்போது ரகசியத்தைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் இருந்ததால் முதலாவது அகிலத்தின் பொதுக்குழுவை அவர் "வியாபார நிறுவனம்" என்று குறிப்பிடுகிறார். மார்க்ஸ் முன்பு பல தடவை திரும்பத் திரும்ப தன்னை அகிலத்தின் அன்றாட நடைமுறை வேலைகளிலிருந்து விடுவிக்கும்படி தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்து வலியுறுத்தி வந்தார். 1871 நவம்பர் 24 ஆம் தேதி பெல்ஜியத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் ஒரு தலைவரான சீசர் டி பாய்பேக்கு அவர் கீழ்க்கண்டவாறு எழுதினார்: "நான் ஏற்கெனவே லண்டனில் உங்களிடம் கூறியுள்ளேன். பொதுக் குழுவிலிருந்து நான் வாபஸ் பெற்றுக் கொள்வதற்கு எனக்கு இன்னும் நேரம் வரவில்லையா என்று அடிக்கடி நான் வியப்படைகிறேன். நமது நிறுவனம் (கூட்டமைப்பு) வளருகிறது. அதை ஒட்டி நான் மேலும் மேலும் அதிகமான நேரத்தை ஒதுக்க வேண்டியதிருக்கிறது. என்ன இருந்தாலும் இப்போதோ அல்லது பின்னரோ எப்போதாவது மூலதனம் நூல் முடிக்கப்பட வேண்டுமல்லவா." (Marx, Engels, Werke, Bd. 33, S. 338.)  மூலதனத்தைப் பற்றிய அவருடைய வேலை, அகிலத்தில் அவருடைய தலைமைப் பாத்திரம், இவை இரண்டும் முற்றிலும் வேறுபட்ட இரண்டு வகையான செயல் துறைகளாகும். இந்த இரு துறைகளிலும் மார்க்ஸ் எவ்வளவு அதிகமான பலத்தையும் ஆற்றலையும் வலுவையும் வல்லமையையும் மிகவும் ஈடுபடுத்தி தன்னை அர்ப்பணம் செய்து கொண்டார் என்பது மிகவும் வியக்கத்தக்கதாக இருக்கிறது. இந்த இருவகைச் செயல்பாடுகளையும் ஒரே நேரத்தில், நோய்வாய்ப்பட்டிருந்த ஒரு மனிதர், இளமை நீங்கி முதுமையடைந்து கொண்டிருந்தவர், மிகவும் கொடுமையான வறுமையின் மிகுதியால் பொங்கி அழிந்து கொண்டிருந்தவர், முடிவில்லாத தினசரி தொல்லைகளின் காரணமாய் அல்லலுற்றுக் கொண்டிருந்த ஒருவர் எவ்வாறு நிறைவேற்றிக் கொண்டிருந்தார் என்பது ஆச்சரியப்படத் தக்கதாக உள்ளது. மிக உயர்ந்த லட்சியம் மிகப் பெரும் அளவிலான ஆற்றலையும் அதிசயங்களை விளைவிக்கும் வல்லமையையும் உண்டாக்குகிறது.

1869 ஆம் ஆண்டின் முடிவில் மார்க்ஸ் ரஷ்ய மொழியைக் கற்கத் தொடங்கினார். அந்த மொழியின்மீதும் ரஷ்ய சமுதாய சிந்தனையின் மீதும் அவருக்கிருந்த மிகப் பெரிய பற்றும் அக்கறை ஆர்வமும் ரஷ்யாவில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை என்னும் என். பிளரோவ்ஸ்கியின் நூலின் மூலம் தூண்டிவிடப்பட்டு பலப்பட்டது. அந்த நூல் அவருக்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து வந்து கிடைத்தது. அதை அவர் படித்தவுடனேயே முதல் தடவையிலேயே அதைப் பற்றி அவரிடம் ஒரு நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டு விட்டது. ரஷ்யன் பொருளாதார எழுத்துரைகள், மற்றும் மூலாதார நூல்கள் விவரங்கள் குறிப்பாக நிலச் சொத்துடைமை சம்பந்தப்பட்ட உறவுகள் ஆகியவைகளைப் பற்றிய ஒரு படிப்பாராய்ச்சி செய்வது மிகவும் அத்தியாவசியமானது என்று மார்க்ஸ் நம்பிக்கை கொண்டிருந்தார்.

இலக்கணத்தை வேகமாகப் படித்துவிட்டு அவர் ரஷ்ய நூல்களை ஒரு அகராதியை வைத்துக் கொண்டு படிக்கத் தொடங்கினார். அவர் படித்த முதல் புத்தகம் ஹெர்ஸனுடைய "சிறைக் கூடங்களும் நாடு கடத்தல்களும்" (என்னுடைய கடந்த காலம் மற்றும் என்னுடைய சிந்தனைகளின் ஒரு பகுதி) அதை எங்கல்ஸ் அவருக்கு முன்பாகப் படித்திருந்தார். அவர் புத்தகத்தின் ஓரப்பகுதிகளில் மொழி பெயர்ப்புகள், ரஷ்ய மூலச் சொற்கள் முதலியவற்றை குறித்து வைத்திருந்தார். அது மார்க்ஸ் படிப்பதற்கு மிகப் பெரிய உதவியாக இருந்தது. விரைவில் அவர் பிளரோவ்ஸ்கியினுடைய நூலைப் படிக்கத் தொடங்க முடிந்தது. 1870 பிப்ரவரி 10 ஆம் தேதி அவர் ஏற்கெனவே 150 பக்கங்கள்வரை படித்துவிட்டதாகத் தனது திருப்தியை எங்கல்ஸிற்கு தகவல் கொடுத்தார்.

மார்க்ஸ் தெரியாத சொற்களை பக்க ஓரத்தில் குறித்தார். இது போகப் போகப் புத்தகத்தை முடிக்கும் பக்கங்களில் அந்தத் தெரியாத சொற்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. அதற்குள் அவர் நன்றாகவும் வேகமாகவும் படிக்கக் கற்றுக் கொண்டு விட்டார். அந்தப் புத்தகத்தின் சாராம்சங்களைப் பற்றியும் சில குறிப்புகள் எழுதி வைத்திருந்தார். அவைகளில் சில விமர்சன பூர்வமானவை. அந்தப் புத்தகத்தின் உள்ளடக்கம் பற்றியும் அதில் அடங்கியுள்ள பல விஷயங்களைப் பற்றியும் மார்க்ஸ் பெரிதும் உயர் மதிப்பு கொண்டிருந்தார். அந்த நூல் ரஷ்யாவில் இருந்த முதலாளித்துவ அமைப்பு முறையையும் கிராம சமுதாய அமைப்பு முறை நசிந்து வந்ததையும் பண்ட உற்பத்தியின் வளர்ச்சியையும் பற்றி எடுத்துக் காட்டியிருந்தது. அதே சமயத்தில் ஆசிரியரின் கண்ணோட்டத்தில் இருந்த குறைபாடுகளையும் காணாமல் இல்லை. அவர் கிராம சமுதாய வாழ்க்கை முறையே மிகவும் சிறந்த முறை என்றும் "வர்க்க இசைவு" பற்றிய அவருடைய பிரமைகள் எல்லாம் பிரவுதானுடைய சில கருத்துக்களை ஒட்டியும் இருந்தன. இவ்வாறாக பிளரோவ்ஸ்கி, முதலாளியும் தொழிலாளியும் தங்களை "வேலை கொடுப்பவர் என்றும் கூலிக்கு வேலை செய்பவர்" என்றும் கருதக் கூடாது என்றும் ஆனால் ஒருவருக்கொருவர் "தோழர்" என்றும் "சகோதரர்" என்றும் உணர வேண்டும் என்றும் தனது விருப்பத்தை வெளியிட்டதை மார்க்ஸ் "இது ஒரு பழைய பிரமை" ^1 என்று எழுதினார்.

மொத்தத்தில் பிளரோவ்ஸ்கியினுடைய புத்தகம் மிகவும் விரிவான ஏராளமான விவரங்களை முன் வைத்தது. அதன் மூலம் மார்க்ஸிற்கு மிகவும் நல்ல விவரங்கள் கிடைத்தன. இந்தப் புத்தகம் இல்லாமல் இருந்திருந்தால் இதர மூலங்களிலிருந்து அதிகார பூர்வத்தின் நம்பிக்கைகள், அகநிலையான கருத்துப்பாங்குகள் மூலம் திரித்துக் கூறப்பட்டதும் அரைகுறையாக உள்ளதுமாகத்தான் இருந்திருக்கும். அவர் லபார்க்கேக்குக் கீழ்க்கண்டவாறு எழுதினார்: "இந்த நூலைப் படித்த பின்னர் ஒரு மிகப்பெரிய பயங்கரமான சமுதாயப் புரட்சி - இன்றைய மாஸ்கோவின் வளர்ச்சி நிலைமைகளுக்குத் தக்கபடி மிகவும் கீழான மட்டத்தில் இருந்த போதிலும் - ரஷ்யாவில் அடக்க முடியாதபடி வரும் என்றும் அதுவும் உண்மையிலேயே நிகழவிருக்கிறது என்றும் நாம் தெளிவாகப் புரிந்து கொண்டு உணர முடிகிறது. இவைகள் எல்லாம் நல்ல செய்திகள். ரஷ்யாவும் இங்கிலாந்தும் தான் இன்றைய ஐரோப்பிய அமைப்பு முறையின் இருபெரும் தூண்களாகும்." ^1

இதன் பிறகு 1870 ஆம் ஆண்டு முதல் பாதியில் செர்னிஷெவ்ஸ்கியின் நூல்களின் ஜெனிவாப் பதிப்பின் மூன்றாவது தொகுதியைப் படித்ததாகத் தெரிகிறது. அதில் அவருடைய "அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிய ஜான் ஸ்டுவர்ட் மில்லினுடைய முதல் புத்தகத்திற்கு குறிப்புகளும் சேர்க்கைகளும்" என்னும் பகுதியும் சேர்ந்ததாகும். அந்த ஆண்டின் கோடை காலத்தில் அவர் ஜெனிவாவிலிருந்து நான்காவது தொகுதியை செய்திருந்தார். காரணம் அந்த மிகப் பெரிய ரஷ்ய சோஷலிஸ்ட் மற்றும் ஜனநாயகவாதியின் நூல்களைப் பற்றிய மிகவும் அதிகமான மேலான கருத்துக் கொண்டிருந்தார்.

ஒரு ஆண்டிற்குப் பின்னர் மார்க்ஸ் தான் ரஷ்ய மொழியைப் படிப்பதற்கான அவருடைய முயற்சியின் ஆரம்ப பலன்களைத் தொகுக்க முடிந்தது. அவர் சீக்பிரீட் மேயருக்குக் கீழ்க்கண்டவாறு எழுதினார்: "முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. ஜெர்மன் மற்றும் லத்தீன் மொழி வழிகளிலிருந்து பெரிதும் மாறுபட்ட ஒரு மொழியை அதுவும் என்னுடைய இந்த முதிர்ந்த வயதில் நான் எடுத்த முயற்சிக்கு இதுவே நல்ல பலனாகும். ரஷ்யாவில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அறிவுத்துறை இயக்கம் மேல் மட்டத்திற்குக் கீழே அடி ஆழத்தில் பெருங் கொதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருப்பதையே அது காட்டுகிறது. உள்ளங்கள் மக்களின் கூட்டமைப்புடன் கண்ணுக்குத் தெரியாத எண்ணற்ற நூல் கயிறுகளால் எப்போதும் பிணைக்கப்பட்டவைகளாகும்." ^2

 * மார்க்ஸ் பால் என்பவருக்கும், லாரா லபார்க்கே என்பவருக்கும் 1870, மார்ச் 3 ஆம் தேதியில் எழுதிய கடிதம். (மார்க்ஸிய-லெனினியக் கல்வி நிலையத்தின் மத்தியக் கட்சி பழஞ்சுவடி நிலையம்.)

ரஷ்ய மொழியை நன்கு கற்ற பிறகு மார்க்ஸ் ரஷ்யாவின் சமூகப் பொருளாதார வளர்ச்சியைப் பற்றியும் விவசாய உறவுகளைப் பற்றியுமான அதிகாரபூர்வமான வெளியீடுகளையும் ஒரே பொருளைப் பற்றிய தனி நூல்களையும் முறையாகப் படிப்பதற்கு ஏற்பாடு செய்தார். எங்கல்ஸின் குறிப்புப்படி மார்க்ஸ் "முற்றிலும் புதிய தனித்தன்மையான படிப்பாராய்ச்சிகளில்" (Karl Marx, Capital, Vol. III, Moscow, 1966, p. 7.) ஈடுபட்டார். ஒரு பத்தாண்டு காலத்திற்கும் மேலாக ரஷ்யப் புத்தகங்களைக் கொண்ட கூடைக் கட்டுகள் செயின்ட் பீட்டர்ஸ் பார்க்கிற்கும் லண்டனுக்கும் இடையில் பிரயாணம் செய்தன. இருவழிகளிலும் அப்பிரயாணம் நடந்தது. காரணம் மார்க்ஸினுடைய நண்பர்கள் (அவர்களில் டேனியல்ஸனும் ஒருவர்) அவருக்குப் பலவேறு புத்தகங்கள் அனுப்பினார்கள். அவைகளைப் படித்த பின்னர் அவைகளை அடிக்கடி திருப்பி அனுப்புவார்.

வரி கமிஷன் நடவடிக்கை வெளியீடுகள், விவசாய நிலை பற்றிய ஆணையத்தின் அறிக்கைகள், விவசாயிகள் விவகாரம் பற்றிய அரசாங்க நிர்வாக அதிகாரிகளின் அறிக்கைகளின் சுருக்கங்கள், நிலச் சொத்துடைமை மற்றும் ஐரோப்பிய ரஷ்யாவிலுள்ள அதிகமான ஜனத்தொகை உள்ள பகுதிகளைப் பற்றிய புள்ளி விவரங்கள், இன்னும் பலவேறு ரஷ்ய எழுத்தாளர் ஆசிரியர்களின் நூல்கள் முதலியவைகளிலிருந்து எடுக்கப்பட்ட மார்க்ஸினுடைய ஏராளமான மிக விரிவான எண்ணற்ற குறிப்புகள், பகுதிகள், அவருடைய விமர்சனம் மதிப்புரையுடன் கூடிய அப்பகுதிகள் எல்லாம் மார்க்ஸினுடைய மிக விரிவான அக்கறை கவனம் அறிவாற்றல் முதலியவைகளைப் பிரதிபலிக்கின்றன. மேலும் மூலதனத்தின் முதல் தொகுதி பலவேறு நாடுகளில் உள்ள தலைமையான பாட்டாளிகளிடையில் ஒரு உயர்ந்த தரமான நூல் என்று இடம் பெற்ற பின்னரும் அடுத்த தொகுதிகளுக்கான ஆரம்ப கையெழுத்துப் பிரதிகள் எழுதி முடித்த பின்னரும் கூட அவர் அந்த மூலதன நூலைப் பற்றி எவ்வளவு சக்தியையும் முயற்சிப் பாடுகளையும் செலுத்த வேண்டியதிருக்கிறது என்பதையும் காட்டுகிறது.

ஒரு பூகோளப்பகுதி அல்லது நாட்டைப் பற்றிக் குறிப்பிடும் விவரங்களுடன் இதர பகுதிகள் அல்லது நாடுகளின் விவரங்களையும் சேர்த்து இணைத்துக் கொள்வதற்கு அவர் எப்போதுமே முயற்சித்தார்.

1870 ஜனவரி 24 ஆம் தேதி அவர் சீசர் டி பாய்பேக்கு கீழ்க்கண்டவாறு எழுதினார்: "நான் இப்போது மூலதனத்தின் இரண்டாவது தொகுதியில் நிலச் சொத்துடைமை பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். பெல்ஜியத்திலும், பெல்ஜியம் நாட்டின் விவசாயத்திலும் உள்ள நிலச் சொத்துடைமையின் கட்டமைப்பு பற்றிய விவரங்களுக்குள் சென்று சற்று விரிவாகப் பார்த்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். நான் கலந்து காணவேண்டிய சில பிரதானமான நூல்களின் தலைப்புகளை அனுப்பிவைத்தால் நலமாக இருக்கும்." ^1 டி பாய்பே உடனடியாக வெகு விரைவிலேயே அதைச் செய்து கொடுத்தார்.

1876 ஏப்ரல் மாதம் மார்க்ஸ் சோர்ஜேயிடம் நியூயார்க்கிலிருந்து அமெரிக்கப் புத்தகங்களின் பட்டியல் கிடைக்கச் செய்ய முடியுமா என்றும் அதன் விலை என்ன, அமெரிக்க விவசாயம், நிலச் சொத்துடைமை, கடன், நிதி மற்றும் பண உறவுகள் பற்றி 1873 ஆம் ஆண்டிற்குப் பிறகு அமெரிக்காவில் ஏதாவது பயனுள்ள புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றனவா என்றும் கேட்டிருந்தார் ^2. மேலும் அவர் இங்கிலாந்திலுள்ள பத்திரிகைகள் இப்போது தற்சமயம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் நடந்துகொண்டிருக்கும் மோசடியான ஒழுங்கீனங்களைப் பற்றி எந்த விஷயத்தையும் வெளியிடுவதில்லை. (மோசடியான ஒழுங்கீனம் என்று குறிப்பிடுவது அங்கு விரிவான வகையில் ரயில் பாதைகள் போடுவது முதலியவற்றில் நடைபெறும் வியாபார பேரம் சூதாட்டம் பற்றியதாகும்) என்றும், அத்துடன் சோர்ஜே தன்னுடைய பழைய அமெரிக்கப் பத்திரிகைப் பிரதிகளை வைத்திருக்கிறாரா என்றும் கேட்டிருந்தார்.

போதுமான விவரங்களுடன் முழுமையாகத் தயாராக இருப்பதற்கு மார்க்ஸ் விவசாயப் பொருளாதாரம் விவசாய வேதியியல், தாவர இன உயிரியல் முதலியவைகளையும் தொடர்ந்து படித்தாராய்ந்தார். இந்த அறிவியல் பிரிவுகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய சாதனைகள் அவருக்கு விஞ்ஞான விரோதமான "பொருளியல் வகையில் குறைந்து செல்லும் பயன்முறை விதிகளை" இன்னும் அதிகமாகவும் ஆழமாகவும், மற்றவர் ஒப்புக்கொள்ளும் வகையிலும் விமர்சன ஆய்வு செய்வதற்கு சாத்தியப்பாட்டை உண்டாக்கியது.

1875 மே முதல் ஆகஸ்டு வரை அவர் மிகவும் விரிவானக் கணக்குகளைப் போட்டுக் கொண்டிருந்தார். உபரி மதிப்பு விகிதத்திற்கும் லாப விகிதத்திற்கும் இடையிலுள்ள வேறுபாட்டை எடுத்துக்காட்ட இக்கணக்குகளைப் போட்டுக் காட்டினார். மூலதனம் மூன்றாவது தொகுதியின் எதிர்கால மூன்றாவது அத்தியாயத்தின் அடிப்படையாக அமைந்தது அந்தக் கணக்குகள்தான் - அதாவது "உபரி மதிப்பின் விகிதத்திற்குள்ள லாப மதிப்பின் சார்புறவு" 1876 பிப்ரவரி மத்தியில் அவர் சுருக்கமான ஆனால் தத்துவார்த்த ரீதியில் மிகவும் முக்கியமான படிப்பாராய்ச்சி "நிலத்தில் நிறுவப்பட்ட மூலதனத்தின் மீது வேறுபாடான வாடகை மற்றும் வெறும் வட்டி வாடகை" என்னும் தலைப்பில் எழுதினார். இதைப் பின்னர் எங்கல்ஸ் மூலதனம் மூன்றாவது தொகுதி மூல பாடத்தின் வெளியீட்டில் 44-வது அத்தியாயமாக சேர்த்துள்ளார்.

1870 நவம்பர் முதல் 1878 ஜூலை வரை "பண மூலதனத்தின் சுற்று வட்டம்" என்னும் தலைப்பில் அச்சிற்கான தனது கையெழுத்துப் பிரதியைத் தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தார். அது இப்போது மூலதனம் இரண்டாவது தொகுப்பின் முதல் அத்தியாயமாக இருக்கிறது. 1880-ல் மூன்றாவது புத்தகத்திற்கு "லாப விகிதத்தின் வீழ்ச்சிப் போக்கின் விதிமுறை" என்னும் தலைப்பில் மூன்றாவது பாகத்தின் புதிய பதிப்புருவை எழுதினார். அத்துடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுப்புகளின் இதர பாகங்கள் அத்தியாயங்களையும் எழுதினார்.

எனினும் 1870 ஆம் ஆண்டுகளின் கடைசியிலும் 1880 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திலும் மார்க்ஸ் அவருடைய இறுதியான மூல பாடப்படிவத்தைத் தயார் செய்வதை வேண்டுமென்றே தாமதப்படுத்தினார். இவ்வாறு "நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதற்கான" காரணங்களை அவருடைய கடிதங்களில் விவரித்திருக்கிறார். 1879 ஏப்ரல் 10 ஆம் தேதி அவர் டேனியல்சனுக்கு எழுதிய கடிதத்தில் கீழ்க்கண்டவாறுப்பிட்டிருக்கிறார்: முதலாவதாக இங்கிலாந்து நாட்டின் இப்போதைய தொழில் நெருக்கடி அதன் உச்ச கட்டத்தை அடைவதற்கு முன்பாக எந்தக் காரணத்தினாலும் எந்தச் சூழ்நிலையிலும் இரண்டாவது தொகுதியை நான் வெளியிடக் கூடாது. அந்த உண்மை நிலைத் தோற்றங்கள் இந்த நேரத்தில் ஒருமையாக இருக்கின்றன. முன்னால் இருந்ததிலிருந்து பல அம்சங்களில் மாறுபட்டிருக்கின்றன......

"எனவே இந்த நிகழ்ச்சிப் போக்குகள் முழுமையாகப் பக்குவமடையும் வரை அவைகளை "உற்பத்தி ரீதியில்" உட்கொள்ளும் முன்பு அதாவது தத்துவார்த்த முறையில் கிரகித்துக் கொள்ளும் முன்பு அவைகளைக் கவனித்து வரவேண்டியது அவசியமாகும்.....

"இரண்டாவதாக எனக்குக் கிடைத்துள்ள விவரங்களின் பெரும்பகுதி, அதாவது ரஷ்யாவிலிருந்தும், ஐக்கிய அமெரிக்க நாடுகளிலிருந்தும் வந்தவை மட்டுமல்ல, மற்றவைகளும் சேர்ந்து பார்த்தால் அவைகள், என்னுடைய ஆய்வைச் சுருட்டி எடுத்து மக்களுடைய முன்பு இறுதியாக வைப்பதற்குப் பதிலாக என்னுடைய படிப்பாராய்ச்சியை மேலும் தொடர்வதற்கான "சாக்குப் போக்குகள் கிடைத்திருக்கின்றன" என என்னை மகிழ்ச்சியடைய வைத்திருக்கின்றன.

"மூன்றாவதாக என்னுடைய வைத்திய ஆலோசகர் நான் 1874 ஆம் ஆண்டு நிலைக்குப் போகாதிருக்க வேண்டுமானால் என்னுடைய "வேலை நேரத்தை"க் கணிசமான அளவில் குறைக்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்துள்ளார். 1874 ஆம் ஆண்டிலும் அதைத் தொடர்ந்தும் எனக்கு அடிக்கடி தலைக்கிறுகிறுப்பும் மயக்கமும் ஏற்பட்டது. மிகவும் ஆழ்ந்த கவனத்துடன் நான் வேலை செய்தால் சிலமணி நேரத்தில் அவ்வாறு ஏற்பட்டு மேற்கொண்டு வேலை செய்ய முடியாத நிலை ஏற்படும்." (மார்க்ஸிய-லெனினியக் கல்விக் கழகத்தின் மத்தியக் கட்சியின் பழஞ்சுவடி நிலையம்.)

மார்க்ஸ், தான் இறப்பதற்கு சற்று முன்னர் தன்னுடைய மகள் எலியனாரிடம் மூலதனம் கையெழுத்துப் பிரதிகளை எங்கல்ஸிடம் சேர்ப்பித்து விடும்படியும் அவர் அதை வைத்து "ஏதாவது செய்யட்டும்" என்றும் கூறியிருந்தார் (Karl Marx, Capital, Vol. II, p. 5.).

மார்க்ஸினுடைய தலைசிறந்த நண்பர் என்ற முறையிலும் அவருடைய வெளியிடாமல் விட்டுச் செல்லும் எழுத்துரைகளின் பொறுப்பை ஏற்றுள்ளவர் என்னும் முறையிலும் எங்கல்ஸ் மூலதனத்தின் பாக்கியுள்ள கையெழுத்துப் பிரதிகளை உடனடியாக வெளியிடுவதற்கான தயாரிப்புகளைச் செய்ய வேண்டியது தன்னுடைய உரிமையும் கடமையும் என்று கருதினார். அதனால் தன்னுடைய சொந்த விஞ்ஞானப் படிப்பாராய்ச்சிகளை நிறுத்தி வைத்தாலும் பரவாயில்லை என்று கருதி அவ்வேலையில் ஈடுபட்டார். நூலாசிரியருடைய இரண்டாவது தொகுப்பின் கையெழுத்துப் பிரதியை அவர் இரண்டாவது மூன்றாவதாக ஆக இரண்டு தொகுப்புகளாகப் பிரித்தார். தன்னுடைய மறைந்த நண்பருக்காக மிகவும் ஆழ்ந்த அன்பு மரியாதையுடன் ஒன்றிப்பிணைந்த அவருக்கே உரித்தான இயல்பான தன்னடக்கத்துடனும் பிடிப்பான பற்றுடனும் இவ்வேலையை அவர் செய்வதற்குப் பாடுபட்டார். "நூலாசிரியரின் உண்மையான உணர்விலேயே" அதைச் செய்தார். "கிடைத்துள்ள மாறுபட்ட வடிவங்களிலிருந்து மூலபாடத்தைத் தேர்ந்தெடுத்து" (Karl Marx, Capital, Vol. II, p. 5.) சாத்தியமான அளவில் அவைகளை எடுத்து அந்த எல்லைக்குள் இருந்தே அவர் அவ்வேலைகளைச் செய்து முடித்தார். உண்மையில் எங்கல்ஸ் செய்த பெரும் பணி முக்கியமாக மூன்றாம் புத்தகத்தில் அவருடைய வேலை மிகவும் கணிசமானது. மூலதனம் இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகளை அவரே சரிபார்த்து பதிப்பித்து வெளியிட்டதானது உண்மையில் அந்த நூல்களை இருவரும் சேர்ந்து இயற்றியதற்கு ஒப்பானதாகக் கருத வேண்டும் என்று லெனின் சுட்டிக்காட்டினார்.

மூன்றாவது தொகுதிக்கு முழு வடிவம் கொடுப்பதற்கு எங்கல்ஸிற்கு அநேகமாக பத்து ஆண்டுகள் வரை செலவழிக்க வேண்டியதேற்பட்டது. சில அத்தியாயங்களில் அவர் அடிக்குறிப்புகள் கொடுத்தார். துண்டு துண்டாக இருந்த மூலபாடக் குறிப்புகளை ஒன்றிணைத்து தேவையான சேர்க்கைகளை வைத்து முழுமைப் படுத்தினார். நூலாசிரியரின் குறிப்புகளின் அடிப்படையில் நான்காவது அத்தியாயத்திற்கு ஒரு புதிய மூல பாடத்தை எழுதினார். ஐந்தாவது பாகம் முழுவதையும் மூன்று தடவை சரி பார்த்துத் திருத்தியமைத்தார். (மதிப்பின் விதிமுறை மற்றும் லாப விகிதம், "பங்குமாற்று நிலையம்") இத்தொகுதிக்கு முன்னுரையும் அனுபந்தமும் எழுதினார்.

இரண்டாவது புத்தகத்திற்காக அவர் செய்ய வேண்டியதிருந்த வேலை அவ்வளவு அதிகமான பெரு முயற்சி தேவைப்பட்டிருக்கவில்லை. ஆனாலும் வேலை அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. சிக்கலும் அதிகமிருந்தது. அச்சுக்காக நேரடியாகத் தயாரிக்கப்பட்டிருந்த கையெழுத்துப் பிரதிகளின் பகுதிகளைக் கூட உடனே அப்படியே வெளியிட முடியவில்லை. காரணம் அவைகளும் கூட பின்னர் மார்க்ஸ் உருவாக்கியிருந்த கருத்தமைப்புகள் படிப்பாய்வுகளினடிப்படையில் திருத்த வேண்டியதிருந்தது. கையெழுத்துப் பிரதிகளில் இருந்த பெரும்பகுதி விஷயங்கள் மொழி அமைப்பு வாசக அமைப்பு ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கவில்லை. 1865 முதல் 1870 வரை எழுதப்பட்ட நான்கு கையெழுத்துப் பிரதிகள், 1877 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட நான்கு கையெழுத்துப் பிரதிகள் ஆகியவற்றைச் சேர்த்துப் பின்னர் ஒரே ஒன்றிணைந்த முழுப்பகுதியாக ஆக்க வேண்டியதிருந்தது. இப்பணியைச் செய்து முடிப்பதற்கு எங்கல்ஸிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பிடித்தது.

இரண்டாவது தொகுதி 1885 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. மூன்றாவது தொகுதி 1894 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இரண்டாவது தொகுதிக்கான முன்னுரையில் எங்கல்ஸ், இரண்டாவது மூன்றாவது புத்தகங்களை மார்க்ஸ் தன்னுடைய மனைவி ஜென்னிக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும் என்ற விரும்பியிருந்தார் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

 எங்கல்ஸ் "உபரிமதிப்பு தத்துவங்கள்" என்னும் இந்நூலின் வரலாற்று - விமர்சனப் பகுதியை மூலதனத்தின் நான்காவது கடைசி தொகுதியாக வெளியிடுவதற்கு விரும்பியிருந்தார். ஆனால் அதை அவரால் செய்து முடிக்க முடியவில்லை.

முதலாளித்துவ உற்பத்தியின் செயல் வழி முறை

மார்க்ஸினுடைய மூலதனம் வாழ்நாள் முழுமையான ஒரு நூலாகும். விஞ்ஞான கம்யூனிஸத்தின் பிரதானமான நூலாகும். அதன் முதல் தொகுதி முதலாளித்துவ உற்பத்தியின் செயல்வழி முறையைப் பற்றி ஆராய்ந்து கூறுகிறது. மார்க்ஸ் தானே கூறியுள்ளதைப் போல இந்தத் தொகுதியின் ஆரம்பத்தில் (முதலாவது ஜெர்மன் பதிப்பின் முதல் அத்தியாயம், அடுத்த பதிப்புகளில் அதற்கு இணையான முதல் பாகம்.) அரசியல் பொருளாதார விமர்சன ஆய்வுக்கு ஒரு பங்களிப்பின் முதலாவதும் ஒரே ஒரு பாகமாகவும் உள்ளதை அவர் "சுருக்கி" சாரப்படுத்தி எழுதியுள்ளார்.

மீண்டும் ஒரு முறையாக பண்டத்தைப் பற்றிய பகுப்பாய்வாக மார்க்ஸ் தொடங்குகிறார். பண்டம்தான் பூர்ஷுவா செல்வத்தின் ஆரம்ப உயிரணு வடிவம். இதைப் பற்றிய ஆய்வு, முதலாளித்துவ உற்பத்தியின் மிக மேலான இன்னும் அதிகமான சிக்கலும் பின்னலும் நிறைந்த வடிவங்களைப் பற்றிய ஆராய்ச்சிக்கு மிகவும் முக்கியமான மய்யமான முன் தேவையாகும். 2,000 ஆண்டுகளுக்கு மேலாக மனிதகுலம் பண்டத்தைப் பற்றிக் கிரகித்துக் கொள்வதற்கு முயன்று பார்த்தது. அதை மதிப்பின் வடிவமாகக் கொண்டது. அது முதல் பார்வையில் ஒரு சாதாரண விஷயமாகத் தோன்றுகிறது. ஆனால் இது அளவு கடந்த மிகவும் கடினமான ஒரு கடமைப்பாடாக நிரூபணமாயிற்று. இந்த மிகப் பெரிய கடமையை மார்க்ஸ் முன்வந்து நிறைவேற்ற வேண்டியதாயிற்று. பணம் என்பது பண்டங்களிலேயே ஒரு தனித்தன்மை வாய்ந்த ஒரு பண்டம் என்றும் அப்பணம் உள்பட அதன் வரை மதிப்பின் வடிவத்தை மிகவும் ஆழ்ந்து தெள்ளத் தெளிவாகப் பகுத்தாய்ந்தார் மார்க்ஸ். இது அவருடைய மிகப் பெரிய ஆகப் பெரிய அறிவியல் சாதனைகளில் ஒன்றாகும். மதிப்பின் வடிவத்தைப் பற்றிய அவருடைய பகுப்பாய்வு மூலதனத்தைப் பற்றிய பகுப்பாய்வில் அவருடைய வெற்றிக்கு வழிவகுத்துக் கொடுத்தது.

மூலதனம் முதல் தொகுதியின் முக்கியமான முதன்மையான உள்ளடக்கம், முதலாளித்துவத்தின் கீழ் உள்ள மேலாதிக்கம் செலுத்துகின்ற உற்பத்தி உறவான மூலதனம் கூலி உழைப்பைச் சுரண்டுவதைப் பற்றிய ஒரு தொகுப்பாய்வாகும்.

பண்ட உற்பத்தி வளரும்போது பணம் மூலதனமாக மாற்றப்படுகிறது. சாதாரண பண்டப் பொருளாதாரம் ஒரு முதலாளித்துவப் பொருளாதாரமாக கூலி உழைப்பைச் சுரண்டுவதை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரமாக மாற்றப்படுகிறது.

முதலாளித்துவ சுரண்டலின் ரகசியத்தை மார்க்ஸ் கண்டுபிடித்தார். உபரி மதிப்பு பற்றிய ஒரு உண்மையான விஞ்ஞான பூர்வமான தத்துவத்தை முன் வைத்தார். அதைப் பற்றி அது அவர்களுக்கு ஒரு பேரிடியாக விழுந்தது என்று எங்கல்ஸ் கூறினார். பண்டைய வழிவந்த பூர்ஷுவா அரசியல் பொருளாதார நிபுணர்கள் உபரி மதிப்பின் மூலாதாரத்தையும் அல்லது அதன் உண்மையான தன்மையையும் விளக்குவதற்கு சக்தியற்றிருந்தார்கள்.

பண்டம் என்பதே பயன்பாட்டு மதிப்பும் (மனித சமுதாயத்தின் சில தேவைகளைப் பூர்த்தி செய்யும் குணப் பொருளைக் கொண்டது), மதிப்பும் (ஒரு உற்பத்திப் பொருளில் அடங்கியுள்ள சமுதாயத்திற்கு அவசியமாகத் தேவையான வேலை நேரம்) ஒன்று சேர்ந்து இணைந்த ஒன்றாகும் என்பதைப் போல பண்ட உற்பத்தியின் செயல்வழிப் போக்கும் ஒரே நேரத்தில் இணையாக உழைப்பின் செயல் போக்கையும் மதிப்பை உண்டாக்கிக் கொடுக்கும் செயல்வழி போக்கையும் கட்டாயம் வெளிப்படுத்த வேண்டும். இது முதலாளித்துவ உற்பத்தி முறையாக ஏற்பட்டுள்ள காரணத்தால் மதிப்பை உண்டாக்குதல் என்பதும் முதலாளி உருவாக்கும் நோக்கம் என்பதும் ஒரு குறிப்பிட்ட திட்டவட்டமான அதிகப்படி மதிப்பை உற்பத்திச் செய்வதற்காகத்தான் என்பதும் உள்ளடங்கியிருக்கிறது. "அவருடைய குறிக்கோள் ஒரு பயன்பாட்டு மதிப்பை உற்பத்திச் செய்வது மட்டுமல்ல, ஒரு பண்டத்தை உற்பத்திச் செய்கிறார். பயன்பாட்டு மதிப்பு மட்டுமல்ல ஆனால் மதிப்பு, மதிப்பு மட்டுமல்ல அதே சமயத்தில் உபரி மதிப்பு." (Karl Marx, Capital, Vol. I, p. 186.)

மார்க்ஸ் கண்டுபிடித்தது: பூர்ஷுவாப் பொருளாதார நிபுணர்கள் எண்ணுவதைப் போல உழைப்பு தானே அல்ல ஆனால் உழைப்புச் சக்தி அல்லது உழைப்பதற்கான ஆற்றல் திறன் தான் பண்டமாகும் என்னும் உண்மையை. அந்த உழைப்பு சக்தியைத்தான் தொழிலாளி விற்கிறான், முதலாளி விலைக்கு வாங்குகிறான். இந்தக் கண்டுபிடிப்பு முதலாளித்துவ சுரண்டலின் அதி நுட்ப முறையைப் புரிந்து கொள்வதற்கான முக்கிய சாதனத்தை நமக்கு அளிக்கிறது. ரிக்கார்டோவின் வழிமுறையினால் தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகளில் ஒன்றைத் தீர்ப்பதற்கு உதவி செய்கிறது. அதாவது மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையிலுள்ள பரிவர்த்தனைக்கும் உழைப்பின் மூலம் பண்டங்களின் மதிப்பை நிர்ணயித்து உறுதி செய்வதற்கும் இடையில் இணைப்பை உண்டாக்குவது பற்றியதாகும். உழைப்பு சக்தி வேறு எந்த ஒரு பண்டத்தைப் போலவே பயன்பாட்டு மதிப்பும் மற்றும் மதிப்பும் கொண்டிருக்கிறது. உழைப்புச் சக்தியின் பயன்பாட்டு மதிப்பு என்பது மதிப்பை உண்டாக்குவதற்கு அதற்குள்ள ஆற்றல் அளவாகும். அது உழைப்பு சக்தி கொண்டிருக்கும் மதிப்பைக் காட்டிலும் அதிகமான மதிப்பாகும். அந்த உழைப்புச் சக்தியின் மதிப்பு என்பது ஒரு தொழிலாளி தன்னையும் தனது குடும்பத்தையும் பராமரிப்பதற்கு வாழ்க்கை நடத்துவதற்கு - மிகவும் அத்தியாவசியமான தேவைகளுக்கான சாதனங்களின் மதிப்பாகும். உழைப்புச் சக்தியின் மதிப்பு உற்பத்திக்கு அவசியமான உழைப்பு நேரத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. அதன் விளைவாகவே இந்தக் குறிப்பிட்ட பண்டத்தின் மறு உற்பத்திக்கும் அவசியமான உழைப்பு நேரத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. உழைப்புச் சக்தியின் மதிப்பு பண வடிவத்தில் அதன் கணக்கில் கூலியாக வெளிப்படுத்தப்படுகிறது. அது திண்ணிய பொருளாதார நிலைமையைப் பொறுத்தும் குறிப்பிட்ட நாட்டிலுள்ள பரம்பரையான வாழ்க்கை முறைகளைப் பொறுத்தும் தொழிலாளி வர்க்கத்தின் ஸ்தாபனத்தையும் பலத்தையும் பொறுத்தும் இன்னும் இதர பல அம்சங்களைப் பொறுத்தும் உழைப்புச் சக்தியின் மதிப்பைச் சுற்றி மேலும் கீழும் செல்லும் பலவேறு வடிவங்களையும் எடுக்கும். கூலி என்பது உழைப்பிற்கான விலையைப் போலவே தோன்றும். மதிப்பின் மாற்றப்பட்ட ஒரு வடிவமாக, உழைப்புச் சக்தியின் விலையின் வடிவமாக அவைகள் உழைப்பின் விலையாகத் தோற்றமளிக்கிறது. அதன் மூலம் அது சுரண்டலின் செயல் வழிப்போக்குகளை மூடி மறைத்துத் தெளிவில்லாததாக்குகிறது. தொழிலாளி தனது உழைப்பை விற்கிறார் என்றும் அவருடைய உழைப்பிற்கு ஊதியமளிக்கப்படுகிறது என்றும் தோன்றுகிறது. ஆனால் கூலி என்பது எப்போதுமே, கூலி உழைப்பு உண்டாக்கும் உற்பத்திப் பொருளின் மொத்த மதிப்பைக் காட்டிலும் குறைவாகவேதான் இருக்கின்றது. தொழிலாளி, உற்பத்திச் சக்தியை மறு உற்பத்திச் செய்வதற்கு அவசியமாகத் தேவையான சாதனங்களின் மதிப்பை உற்பத்தி செய்கிறார். இதை அவர் மொத்த வேலை நேரத்தின் (அவசியத் தேவையான வேலை நேரம்) ஒரு குறிப்பிட்ட பகுதி அளவு நேரத்திற்குள் செய்து முடிக்கிறார். மொத்த வேலைநேரத்தில் பாக்கியுள்ள நேரத்தில் (உபரி வேலை நேரம்) அவருடைய உழைப்புச் சக்தியின் மதிப்பிற்கும் அப்பால் அதற்கு மேலும் ஒரு கூடுதலான மதிப்பை அல்லது உபரி-மதிப்பை உண்டாக்குகிறார்.

பூர்ஷுவா அரசியல் பொருளாதாரம் மூலதனத்தை உழைப்பின் மொத்த சேமிப்பு அதாவது உற்பத்திச் சாதனம் என்று பிரகடனம் செய்தது. மனித சமுதாயம் நிலைத்திருப்பதற்கே ஒரு நிரந்தரமான நிபந்தனை நிலைமையென்றும் அதைக் கருதுகிறது. மார்க்ஸ் அதைத் தவறு என்று நிரூபித்து விட்டார். உற்பத்திச் சாதனம் ஒரு குறிப்பிட்ட நிபந்தனை நிலையில்தான் அவைகள் முதலாளிகளுடைய சொத்துடைமையாகும் போதுதான் கூலி உழைப்பைச் சுரண்டுவதற்குப் பயன்படுத்தும் போதுதான் மூலதனம் ஆகிறது என்று எடுத்துக் காட்டினார். இவ்வாறாக மூலதனம் என்பது ஒரு வரலாற்றுக்கால கட்டமைப்பிற்குள் மட்டுமே கட்டுக்கடங்கியுள்ள ஒரு சமுதாய உறவாகும்.

முதலாளித்துவ சுரண்டலைப் பற்றிய விஞ்ஞான விளக்கத்தின் மிக விரிவான முக்கியத்துவத்தில் பண்டங்களின் மதிப்பை உருவாக்கி அமைப்பதில் உயிருள்ள உழைப்பும் உற்பத்திச் சாதனங்களும் ஆற்றியுள்ள பங்கைப் பற்றி பகுப்பாய்வதாக உள்ளது. பண்டைய வழிமுறையின் பூர்ஷுவா அரசியல் பொருளாதார நிபுணர்கள் மூலதனத்தை இயந்திர தளவாட இருப்பு மூலதனம் என்றும் சுற்றுக்கு விடப்படும் மூலதனம் என்றும் பிரித்தனர். மார்க்ஸ் இந்த வகைப்படுத்தலை நிராகரிக்கவில்லை. ஆனால் உபரி மதிப்பின் உற்பத்தியில் மூலதனம் ஆற்றிவரும் பங்கு என்னும் கண்ணோட்ட நிலையிலிருந்து அவர் மேலும் தொடர்ந்து சென்று மற்றொரு முக்கியமான அம்சத்தைக் கொண்டு வந்தார். அதை நிலையான மூலதனம் என்றும் பெருகும் மூலதனம் என்றும் விவரித்தார். உற்பத்திச் சாதனங்கள் எந்தப் புதிய மதிப்பையும் உண்டாக்கி விடுவதில்லை. உயிருள்ள உழைப்பு மட்டுமேதான் புதிய மதிப்பிற்கான மூலாதாரமாக உள்ளது. உற்பத்தியின் நிகழ்ச்சிப் போக்கில் உயிருள்ள உழைப்பு உற்பத்திச் சாதனங்களின் மதிப்பை அவைகள் பயன்படுத்தப்படுவதை வைத்து புதிய உற்பத்திப் பொருளாக மாற்றுகிறது.

மார்க்ஸ் மூலதனத்தை நிலையான மூலதனம் என்றும் பெருகும் மூலதனம் என்றும் பிரித்ததன் மூலம் கூலி உழைப்பைச் சுரண்டுவதைப் பற்றிய மிகத்தெளிவான ஒரு பகுப்பாய்வைக் கொடுக்க முடிந்தது. அத்துடன் சுரண்டலின் அளவு மட்டத்திற்கு உபரி மதிப்பின் அளவு விகிதாச்சாரத்தை முதலீடு செய்யப்பட்ட மொத்த மூலதனத்திற்கல்லாமல் பெருகும் மூலதனத்துடன் மட்டும் ஒப்பிடுவதன் மூலம் ஒரு அளவு முறையிலான வெளிப்படுத்தலைக் கண்டுபிடிக்கவும் முடிந்தது. மார்க்ஸ் இதை உபரி மதிப்பின் விகிதம் என்றும் அல்லது சுரண்டலின் விகிதம் என்றும் அழைத்தார். முதலாளித்துவம் வளர்ச்சியடைவதையொட்டி சுரண்டல் அளவின் விகிதமும் அதிகரிக்கும் போக்கில் செல்கிறது. அதை ஒட்டி ஒரே சமயத்தில் பாட்டாளி

வர்க்கத்திற்கும் பூர்ஷுவா வர்க்கத்திற்கும் இடையில் உள்ள முரண்பாடுகளும் ஆழமடைகின்றன. இன்னும் அதிகமான அளவில் தீவிரமாக வளருகின்றன.

மூலதனத்தின் முதல் தொகுதியில் மார்க்ஸ் உபரி மதிப்பின் அளவு விகிதத்தை அதிகப்படுத்துவதற்கு முதலாளிகளால் பயன்படுத்தப்படும் வழிமுறைகளை அலசி ஆராய்ந்து விளக்குகிறார். அவைகள் இரண்டு வழிகள்: 1) அவசியமான உழைப்பு நேரத்தின் பரிமாணத்தை நிலையாக நிறுத்தி வேலை நாளை நீடிப்பதன் மூலம் உபரி வேலை நேரத்தை அதிகப்படுத்துகிறான் (இது முழு மொத்தமான உபரி மதிப்பு). 2) வேலை நாளின் நீளத்தை நிலையாக நிறுத்தி உழைப்பின் தீவிரத்தன்மையையும் உற்பத்தித் திறனையும் அதிகரிக்கிறான். அதன் மூலம் அவசியமான வேலை நேரத்திற்கும் உபரி வேலை நேரத்திற்கும் இடையில் உள்ள சார்புறவை தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வது (சார்பு நிலையான உபரி மதிப்பு). முந்தைய முறை முதலாளித்துவ உற்பத்தியின் ஆரம்பக் கட்டங்களின் பிரதான குணாம்சங்களாக இருந்தன. அப்போது முக்கியமாக கைத்தொழில் நுணுக்க முறையின் அடிப்படையில் இருந்தது. ஒப்பிட்டு நோக்கும் போது உழைப்பு பற்றி பண்டைய அமைப்பு முறை மேலோங்கியிருந்தது. பிந்தைய முறை முதலாளித்துவ உற்பத்தி முறையின் மேலான உயர்ந்த வளர்ச்சிக்கட்டத்தின் பிரதான குணாம்சமாகும். அப்போது உற்பத்தியின் தொழில் நுட்பம் மற்றும் ஸ்தாபன அமைப்பு நிலைகள் மிகவும் முதிர்ச்சியடைந்திருந்தன. அத்துடன் தொழிலாளி வர்க்கத்தின் மேலான எழுச்சிமிக்க மோதல் நிறைந்த போராட்டங்கள் பூர்ஷுவா வர்க்கத்தை நிர்ப்பந்தப்படுத்தி வேலை நாளில் குறைப்பை ஏற்படுத்தியது. வேலை நேரத்தைக் குறைப்பதற்காக தொழிலாளி வர்க்கம் நடத்திய போராட்டத்தைப் பற்றிய ஏராளமான உண்மை விவரங்களைப் பற்றிய சித்திரத்தை மார்க்ஸ் பெரும் அளவில் பயன்படுத்திக் காட்டியுள்ளார்.

எனினும் உபரி மதிப்பில் ஒரு முழு மொத்தமான அதிகரிப்பை அடைவதற்கான முயற்சியில் முதலாளிகள் உண்மையில் எப்போதுமே வேலை நாளை நீடிப்பதற்கு எல்லாவிதமான முயற்சிகளையும் செய்கிறார்கள். ஒவ்வொரு மணி வேலை நேரத்திலும் தொழிலாளியை அதிகமான உழைப்பைச் செலுத்தச் செய்வதற்கு உழைப்பைத் தீவிரமாக அதிகப்படுத்துவதற்கு எல்லாவிதமான நிர்ப்பந்தங்களையும் கொடுப்பதற்கு முயற்சிக்கிறார்கள். எவ்வளவு கிடைத்தாலும் திருப்தியடையாத அடக்க முடியாத பேராசை மிக்க முதலாளித்துவம் கட்டுப்படுத்தப்பட வேண்டுமானால் "உயிருள்ள எந்திரங்களின்" உடல் வாய்ப்புகள் மூலமும் அவர்களுடைய அதிருப்தி என்னும் பயத்தின் மூலமும்தான் முடியும்.

பல அத்தியாயங்களில், அப்போது வளர்ச்சியடைந்த முதலாளித்துவத்திற்கு முன்னுதாரணமாக இருந்த இங்கிலாந்து சம்பந்தப்பட்ட பல விவரங்களை அடிப்படையாகக் கொண்டு சார்பு நிலையான உபரி மதிப்பை உண்டாக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட முறைகளைப் பற்றிய மிகச்சிறந்த தெளிவான வரலாற்றுக் கட்டுரையை மார்க்ஸ் முன்வைத்தார். அதில் சாதாரண ஆரம்ப நிலை ஒத்துழைப்பு, பட்டறைத் தொழில்முறை, பெரிய அளவிலான தொழில் ஆகிய முதலாளித்துவ வளர்ச்சியின் மூன்று கட்டங்களைப் பற்றியும் விவரிக்கிறார். இந்தக் காட்சி வடிவம் குறைவான வளர்ச்சியடைந்திருந்த நாடுகள் தன்னின் எதிர்காலக் காட்சியின் சாயலாகவே முன் வைக்கப்பட்டிருந்தது. அவர், முதலாளித்துவத்தின்கீழ் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதன் வரலாறு, நிபந்தனை நிலைகள், காரண விளைவுகள் ஆகியவைகளைப் பற்றி சிறப்பான வகையில் மிக விரிவான முறையில் தொகுப்பாராய்ச்சி செய்தார். எந்திரங்களும் இதர தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளும் உழைப்பாளர்களின் வேலைப்பளுவைக் குறைக்கவில்லை என்னும் உண்மையானது எல்லாவித புதிய, நவீன, சமீபத்திய தொழில் நுட்ப உழைப்புச் சாதனங்கள் திருப்பி விடப்பட்டுள்ள குறிக்கோள்கள் எதுவோ அதன் மூலமாகத்தான் மொத்தத்தில் நிர்ணயிக்கப்படுகின்றன. அதாவது தொழில் நுட்ப உழைப்புச் சாதனங்களை எத்திசையில் முதலாளித்துவம் திருப்பி விடுகிறது? அதன் குறிக்கோள்: பண்டங்களின் உற்பத்திச் செலவைக் குறைத்தல், அவசியமான உழைப்பின் அளவைக் குறைத்தல், கூடுதலாக வரும் உழைப்பு நேரத்தை நீட்டுதல் அதாவது "சோம்பேறி கனவான்களுக்காக" உபரி மதிப்பை உற்பத்திச் செய்வதற்கு ஒரு கருவியாக மட்டுமே அவை பயன்பட்டிருக்கின்றன.

வேலைப் பிரிவினை மற்றும் முதலாளித்துவம் எந்திரங்களைப் பயன்படுத்திப் பிரயோகிக்கும் முறை ஆகியவைகளின் பலனாக உழைப்பின் உற்பத்தித்திறன் வளருகிறது. அதைத் தொடர்ந்து தொழிலாளர்களின் நல நிலைமைகளிலும் ஒரு பொதுவான வீழ்ச்சியும் சீரழிவும்கூட ஏற்படுகின்றன. முதலாளித்துவ நாடுகளில் எந்திரங்களின் விளைவாகப் பெரும் அளவில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகுகிறது, எண்ணற்ற பல தொழில் விபத்துகள் ஏற்படுகின்றன, உழைப்பு மிகவும் கடுமையாகிறது, அழுத்தமாகிறது, சலிப்பூட்டுகிறது, சோர்வும் ஊக்கமின்மையும் ஏற்படுகிறது, மூலதனத்தின் கொடுங்கோன்மை அதிகரிக்கிறது, முட்டாள்தனமான பட்டாளத்துப் பாடிவீட்டுக் கட்டுப்பாட்டு முறைகள் புகுத்தப்படுகின்றன.

பட்டறைத் தொழிற்சாலையில் வேலையின் வேகமும் தரமும் நேரடியாகத் தொழிலாளியையும் அவனுடைய திறமையையும்

அவனுடைய அனுபவத்தையும் ஊக்கத்தையும் இன்னும் இதர தன்மைகளையும் பொறுத்திருக்கிறது. எந்திரத் தொழிற்சாலையில் வேலையின் வேகம் மிகப் பெரும்பாலும் எந்திரத்தையும் குறிப்பிட்ட தொழில் நுட்ப செயல்வழிப்போக்கையும் பொறுத்திருக்கிறது. அதன்படி எந்திர உற்பத்திக் கட்டம் உண்மையில் மூலதனத்திற்கு உழைப்பு கீழடங்கி அடிபணிந்து விட்ட நிலைமையாகும் என்று மார்க்ஸ் கூறுகிறார். எந்திரத்திலுள்ள பௌதீகப் பொருளாயத வடிவத்திலேயே முதலாளித்துவம் ஒரு சக்தியாக எழுகிறது. அதுவே அதற்குப் போதுமானதாக இருக்கிறது.

முதலாளித்துவ சுரண்டலின் சாராம்சத்தையும் உபரி மதிப்பு உற்பத்தியின் வளர்ச்சியையும் முழுமையாகப் பரிசீலனை செய்து ஆராய்ந்து பார்த்து மார்க்ஸ் முதலாளித்துவ சேமிப்புத் திரட்சி பற்றிய பிரச்சனையை அதாவது உபரி மதிப்பை மூலதனமாக மாற்றுதல் பற்றிய பிரச்சனையை முழுமையாகத் தெளிவாகப் பகுப்பாய்வு செய்தார்.

உற்பத்தியின் ஒவ்வொரு நிகழ்ச்சிப் போக்கும் அது திரும்பத் திரும்ப நிகழ்த்தப்படும்போது அது அவசியமாகவே ஒரு மறு உற்பத்தியின் செயல்போக்காகிறது. முதலாளித்துவ உற்பத்தியின் நிகழ்ச்சிப் போக்கில் தொழிலாளி உழைப்பு உற்பத்திப் பொருளின் மதிப்பில் முன்கூட்டியே மூலதனத்தை மறு உற்பத்தி செய்து அதற்கு மேலும் அதற்கு அதிகமாகவும் உபரி மதிப்பை உண்டாக்குகிறான். உபரி மதிப்பு முழுவதையும் முதலாளி நுகர்ந்துவிட்டால் உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கு ஒரு சாதாரண மறு உற்பத்தியாகவே இருக்கும். அதாவது மாறாத அளவில் உற்பத்தியின் நிகழ்ச்சிப்போக்கை திரும்பத் திரும்ப நடத்துவதாகும். ஆனால் முதலாளித்துவத்தில் மிகவும் விரிவுபடுத்தப்பட்ட மறு உற்பத்தியில் ஈடுபடுவது அதாவது மூலதனம் சேமித்துத் திரட்டப்படுவது என்பது உள்ளடங்கியுள்ள குணமாகும்.

தொழிலாளர்கள் தங்கள் உழைப்பின் மூலம் முதலாளிகளுக்கு தங்களுடைய சொந்த உபயோகத்திற்கு எவ்வளவு தேவையோ அதைக் காட்டிலும் மிகவும் கணிசமாகப் பெருகும் அளவில் உபரி மதிப்பை உண்டாக்குகிறார்கள். உபரி மதிப்பின் ஒரு பகுதி மூலதனமாக மாற்றப்படுகிறது. அது மேலும் உற்பத்தியின் அளவைப் பெருக்கி விரிவாக்குவதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. அதன் விளைவாக தொழிலாளி முதலாளியின் சொந்த உபயோகத்திற்கான சாதனங்களை மட்டும் அல்லாது சுரண்டல் எல்லையை விரிவுபடுத்துவதற்கு மேலும் அதிகமாகத் தேவைப்படும் சாதனங்களையும் உண்டாக்கிக் கொடுக்கிறான்.

மூலதனச் சேமிப்புத்திரட்சி அல்லது விரிவுபடுத்தப்பட்ட முதலாளித்துவ மறு உற்பத்தியைத் தொடர்ந்து அத்துடன் மூலதனத்தின்

உயிர்ப்பொருள் அமைப்பின் வளர்ச்சியும் ஏற்படுகிறது. இதன் பொருள் மூலதனத்தின் நிலையான பகுதிக்கும் பெருகும் பகுதிக்கும் இடையிலான உறவு அதாவது உற்பத்திச் சாதனங்களின் மதிப்பிற்கும் ஒட்டுமொத்தமான கூலிக்கும் இடையிலுள்ள உறவாகும் என்று மார்க்ஸ் கூறுகிறார். அபிவிருத்தியான முன்னேற்றகரமான எந்திரங்கள் புகுத்தப்படுவதன் மூலமும் உற்பத்தி நுட்பத்தின் வளர்ச்சியின் மூலமும் நிலையான மூலதனம் பெருகும் மூலதனத்தைக் காட்டிலும் வேகமாக வளரும் போக்கு ஏற்படுகிறது. அதன் விளைவாக தொழிலாளி வர்க்கத்தைச் சுரண்டுவது அதிகமாகிறது. உபரி மதிப்பு விகிதம் பெருகுகிறது.

அதே சமயத்தில் மூலதனத்தின் உயிர்ப்பொருள் சேர்க்கை அமைப்பின் வளர்ச்சியும் அதன் விகிதாசார அளவில் உழைப்புச் சக்தியின் தேவையும் வீழ்ச்சியடைகிறது. காரணம் இந்தத் தேவை மொத்த மூலதனத்தின் தொகையை வைத்தல்லாமல் அதன் பெருகும் பகுதியினால் மட்டும் நிர்ணயிக்கப்படுகிறது. அப்பகுதி ஒப்பீட்டு நோக்கில் மிகவும் குறைக்கப்பட்டுள்ளது.

மால்த்தூஸ் முன்வைத்த "எப்போதும் உள்ள நிரந்தரமான" "இயற்கையான" ஜனத்தொகை விதிக்கு நேர்மாறாக, மார்க்ஸ் முதலாளித்துவத்தின்கீழ் உள்ள உண்மையான மக்கள் தொகை விதிமுறைகளை உருவாக்கினார். அந்த விதிமுறை உறுதியற்ற தன்மை கொண்டதாய் சில காலத்தில் மாறி விடுவதாய் முதலாளித்துவத்தின் இயல்பால் மட்டுமே நிர்ணயிக்கப்படுவதாய் உள்ளது.

உழைக்கும் மக்கள் தொகையின் ஒரு பகுதி உற்பத்தியிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். சார்பு நிலையிலான அதிகப்படியான மக்கள் தொகை என்னும் பெயரில் ஒரு கூட்டம் அல்லது தொழில் துறை இருப்பு (ரிசர்வ்) படையாக அமைதியான வேலையில்லாமை தொழிலாளர்களின் பொருளியல் நிலைமைகளில் படுமோசமான வீழ்ச்சியை ஸ்திரமற்ற நிலையை விளைவிக்கிறது. எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்ற நிலையை உண்டாக்குகிறது. கூலி விகிதத்தின் பொது நிலையில் அழுத்தம் ஏற்பட்டு குறையும் அபாயம் ஏற்படுகிறது. அதைக் காட்டி பயமுறுத்தி வேலை செய்து கொண்டிருக்கும் தொழிலாளர்களின் உழைப்பை முதலாளிகள் அதிகப்படுத்தித் தீவிரப்படுத்துவதற்கு சுலபமாகிறது.

அதன் விளைவாக மூலதனம் சேமிக்கப்பட்டுத் திரளும்போது முதலாளித்துவ சமுதாயத்தின் ஒரு பக்கத்தில் மிகப்பெரும் அளவில் செல்வம், செருக்கு, ஆடம்பரம், புல்லுருவித்தனம், சுரண்டும் கூட்டத்தினரால் அளவுக்கு மீறிய ஆடம்பரச் செலவுகள் ஆகியவை வளருகின்றன. மறுபக்கத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் ஒடுக்குமுறை, சுரண்டல், வேலையில்லாத் திண்டாட்டம், உழைக்கும் மக்களுக்கு வாழ்க்கைக்குப் பாதுகாப்பின்மை ஆகியவை அதிகரிக்கின்றன. சமுதாயச் செல்வம் எவ்வளவு அதிகமாக உள்ளதோ, மூலதனத்தின் செயல்பாடு, அதன் வளர்ச்சியின் விரிவும் பலமும், அதன் காரணமாய் பாட்டாளி வர்க்கத்தின் மொத்தமான எண்ணிக்கைத் திரள், அதன் உழைப்பின் உற்பத்தித்திறன் எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ அந்த அளவு தொழில்துறை இருப்பு (ரிசர்வ்) படையும் அதிகமாகிறது. மூலதனம் விரிவுபட்டு ஆதிக்கமடையும் அதே காரணங்களின் விளைவாக அதன் ஆதிக்கத்தின் கீழ்வரும் உழைப்பு சக்தியும் வளர்ச்சியடைகின்றன. தொழில் இருப்புப் படை எந்த அளவுக்குப் பெரும் திரளாக அதிகரிக்கிறதோ அந்த அளவு ஒப்பீடாக செல்வாதாரத்தின் ஆற்றல் வாய்ப்பு வளமும் அதிகமாகிறது. ஆனால் செயலில் உள்ள உழைப்பாளர் படையைக் காட்டிலும் விகிதாசாரத்தில் இருப்புப் படை அதிகமாக இருந்தால் ஒன்றுதிரட்டி உறுதி செய்யப்பட்டுள்ள உபரி மக்கள் தொகையின் திரட்சி அதிகமாக இருக்கும். அதனுடைய உழைப்பின் வேதனையின் நேரடியான விகிதாசாரத்தில் அதன் அவல நிலையும் அதிகரிக்கிறது.... இதுதான் முதலாளித்துவ சேமிப்புத் திரட்சியின் முழு மொத்தமான பொது விதிமுறையாகும்."( Karl Marx, Capital, Vol. 1, p. 644.)

முதலாளித்துவ சேமிப்புத் திரட்சியின் தனி முதல் மொத்தமான பொது விதிமுறைகளை மார்க்ஸ் கண்டுபிடித்தார், உருவாக்கினார். அதுதான் கூலி உழைப்பிற்கும் மூலதனத்திற்கும் இடையில் உள்ள பகைமையான முரண்பாடுகளைப் புரிந்துகொள்வதற்கான தத்துவார்த்த அடிப்படையாக இருக்கிறது.

மூலதனத்தின் பண்டைய காலச் சேமிப்புத்திரட்சி என்பது துணிவோடும் ஊக்கத்தோடும் பல செயல் புரியும் திறமை படைத்த தனிநபர்களின் தலைசிறந்த தொழில் முயற்சி, அரும்பாடு, சிக்கன சேமிப்பு முதலிய காரணங்களின் விளைவாகும் என்றும் அத்தகைய தனிநபர்கள் படிப்படியாகத் தங்கள் சொந்த உழைப்பின் மூலம் ஏராளமான செல்வத்தைச் சேர்த்தார்கள் என்றும் பூர்ஷுவா அறிவியல் நிபுணர்கள் பரப்பி வந்த கற்பிதங்களை மார்க்ஸின் ஆராய்ச்சிகள் மறுத்தன. பண்டையக் கால சேமிப்புத் திரட்சியின் நிகழ்ச்சிப் போக்கைப் பற்றி விவரித்துக் கூறப்படும் தனிச் சிறப்பான ஒரு அத்தியாயத்தில் மார்க்ஸ், உற்பத்திச் சாதனங்களிலிருந்து நேரடியான உற்பத்தியாளர்களை அது முழுமையாகத் தனியாகப் பிரித்தெடுத்ததும் ஆளும் வர்க்கங்களில் முரட்டுத்தனமான வன்முறைச் செயல்களால் வேகப்படுத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சிப் போக்கின் விளைவும் அடங்கியிருந்தது என்றும் எடுத்துக் காட்டினார். சிறிய, நடுத்தர

 *

படம் 10 (பக்கம் 784 - காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு)

விவசாயிகள் எப்படி வலுக்கட்டாயமாக தங்கள் நிலங்களிலிருந்து விரட்டப்பட்டார்கள், அதன்மூலம் அவர்களுடைய நிலங்களை இழந்தார்கள் என்பதையும், கிராமங்களிலிருந்து விரட்டப்பட்டார்கள் என்பதையும், அவர்கள் எவ்வாறு வளர்ந்துகொண்டிருந்த தொழில்களுக்கு ஒரு மலிவான உழைப்பு சக்தியின் சேமிப்பாக மாற்றப்பட்டார்கள் என்பதையும் பற்றி மார்க்ஸ் மிகவும் விரிவான ஒரு சித்திரத்தை வரைந்து காட்டினார். காலனிகளில் பயங்கரமான படுமோசமான காட்டுக் கொள்ளை வழிப்பறி ரத்தக் களரி நிறைந்த சூறையாடுதல் மூலமும் செல்வம் ஒரு சிலர் கைகளில் குவிந்து திரண்டது. பண்டைய கால மூலதனச் சேமிப்புத் திரட்சியின் நிகழ்ச்சிப் போக்குகளைப் பற்றி விரிவாக விவரித்து மார்க்ஸ் "மூலதனம் என்பது தலையிலிருந்து பாதம்வரை ஒவ்வொரு ரோமக்கண்ணிலிருந்தும் ரத்தமாகவும் அழுக்கு நிறைந்த இதர பொருளாகவும் சொட்டுச் சொட்டாக வந்து சேர்ந்ததாகும்"^1 என்று எழுதினார்.

மூலதனம் முதல் தொகுதியின் 24-வது அத்தியாயத்தின் (ஆங்கிலப் பதிப்பில் 32-வது அத்தியாயம்) இறுதிப்பகுதி இந்தப் படிப்பாய்வு முழுவதினுடைய பலன்கள் அனைத்தையும் தொகுத்துக் கூறுகிறது. அது முதலாளித்துவத்தின் எதிர்காலத்தைப் பற்றியும் தவிர்க்க முடியாமல் கட்டாயமாக சோஷலிசப் புரட்சி நிகழ்ந்தே தீரும் என்பது பற்றியும் முடிவுகளுக்கு வருகிறது. முதலாளித்துவ செல்வச் செழிப்பு குவியலின் வளர்ச்சி என்றால் மேலும் மேலும் அதிகமாக உழைப்பைச் சமுதாயப்படுத்துவது என்று பொருளாகும். இது முதலாளித்துவத்தின் அடிப்படையான முரண்பாட்டை அதாவது சமுதாயத் தன்மை கொண்ட உற்பத்திக்கும் தனியார் முறையிலான கைப்பற்றலுக்கும் இடையிலான முரண்பாடு இடைவிடாமல் தீவிரமடையும் போக்கில் செல்கிறது. முதலாளித்துவ சேமிப்புத் திரட்சியின் வரலாறுபூர்வமான போக்கைப் பற்றிய மார்க்ஸ் தனது பகுப்பாய்வைப் பாட்டாளி வர்க்கம் நிச்சயம் வெற்றியடையும் என்னும் தனது உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்திக் கொண்டு முடிக்கிறார். "மூலதனத்தின் பெருங்கைகள் எண்ணிக்கையில் படிப்படியாக குறைந்து கொண்டேயிருக்கின்றன. அத்துடன் சேர்ந்தே பெரும் அளவிலான துன்ப துயரங்கள், ஒடுக்குமுறை, அடிமைத்தனம், இழிவுபடுத்தப்படுதல், சுரண்டல் முதலியவை வளருகின்றன. ஆனால் இதனுடன் சேர்ந்தே தொழிலாளி வர்க்கத்தின் எழுச்சியும் கலகமும் வளர்கிறது. தொழிலாளி வர்க்கம் என்பது எண்ணிக்கையில் பெருகிக் கொண்டேயிருக்கும் வர்க்கமாகும். முதலாளித்துவ உற்பத்தி முறையின் நிகழ்ச்சிப் போக்கின் கட்டமைப்பு முறையின் காரணமாகவே கட்டுப்பாட்டையும் ஒற்றுமையையும் ஸ்தாபன பலத்தையும் பெருக்கிக் கொள்ளும் வர்க்கமாகும். உற்பத்தி முறைகள் மூலதனத்தோடு சேர்ந்து அதன் ஆதரவின்கீழ் தோன்றி முளைத்து அதோடு சேர்ந்து செழுமையாக வளர்ந்தன. அதே மூலதனத்தின் ஏகபோகம் அடுத்த கட்டத்தில் அந்த உற்பத்தி முறைகளுக்கு இடையூறாக தடைத்தளைகளாக ஆகிவிடுகின்றன. உற்பத்திச் சாதனங்களை மய்யப்படுத்திக் குவிப்பதும் உழைப்பை சமுதாயப்படுத்துவதும் அவைகளின் முதலாளித்துவ புறப்போர்வையுடன் ஒத்துப்போக முடியாத ஒரு இடத்தை அடைகிறது. அப்போது அந்தப் புறப்போர்வை வெடித்துத் துண்டு துண்டாகக் கிழிந்து விடுகிறது. முதலாளித்துவ தனிச் சொத்துடமையின் சாவு மணி ஓசை ஒலிக்கத் தொடங்குகிறது. இது வரையிலும் உடமைகளைக் கவர்ந்து கொண்டிருந்தவர்கள் இப்போது உடமையிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்." ( * Karl Marx, Capital, Vol. I, p.763.) 


மூலதனத்தின் சுற்றோட்டம் பற்றிய நிகழ்ச்சிப் போக்கு

மார்க்ஸினுடைய நூலின் இரண்டாம் புத்தகத்தில் (தொகுதி இரண்டு) அவர் தொழில் மூலதனத்தின் இயக்க அசைவுகளைப் பற்றி தொடர்ந்து பகுப்பாய்வு செய்தார். ஆனால் அவர் முதல் தொகுதியில் செய்ததைப் போல உற்பத்தியின் நிகழ்ச்சிப் போக்குகளைப் பற்றி அதிகமான ஆழ்ந்த கவனம் செலுத்துவதற்குப் பதிலாக தொழில் மூலதனத்தில் அதன் சுற்றோட்டம் பற்றிய துறையில் உள்ள வடிவங்களிலும் உயிர்ப்பொருள் ஊண் பொருள் அமைப்புகளில் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்கள் புதிய நிலைகள் பற்றி மிகவும் நெருக்கமாகக் கூர்ந்து கவனிக்கிறார்.

பதிவு ஒன்றில் மார்க்ஸ் மூலதனத்தின் மாறாட்டங்கள் மாறுபட்ட நிலைகள் பற்றியும் அதன் சுற்றிச் செல்லும் நிலைகள் பற்றியும் பகுப்பாய்வு செய்தார். பண மூலதனத்தில் சுற்றோட்டத்திலிருந்து தொடங்கி தனித்தனியான அத்தியாயங்களில் உற்பத்தியின் சுற்றோட்டத்தையும் பண்ட-மூலதனத்தின் சுற்றோட்டத்தையும் அலசி ஆராய்ந்து கொண்டு செல்கிறார்.

ஒரு முதலாளித்துவ தொழில் நிறுவனம் செயல்படும்போது அதில் திட்டவட்டமான பண்டங்களை உற்பத்திச் செய்வதற்காக கூலித் தொழிலாளர்களும் ஊழியர்களும் குறிப்பிட்ட திட்டவட்டமான உற்பத்திச் சாதனங்கள் (நிலம், கட்டடங்கள், எந்திரங்கள், கைக் கருவிகள், மூலப்பொருள்கள் முதலியன) பயன்படுத்துவது என்பது அதில் நிச்சயமாக சம்பந்தப்பட்ட ஒன்றாகும். உற்பத்திச் சாதனங்களோ அல்லது கூலித் தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியோ அவைகள் மாத்திரமே மூலதனமாக ஆகிவிடாது. அவைகள் ஒன்றோடொன்று சேரும்போதுதான் அவை மூலதனமாகிறது. அதில் உற்பத்திச் சாதனங்கள் முதலாளிகள் சொத்துடமையாக இருக்கின்றன. அதில் தொழிலாளர்களும் ஊழியர்களும் அவர்கள் தங்கள் பிழைப்புக்காக வேண்டி நிர்ப்பந்தமாக வேறு வழியின்றி தங்கள் உழைப்புச் சக்தியை விற்பனை செய்கிறார்கள். இந்த இணைப்பின் மெய்நிலை காரணமாகத்தான் அவை மூலதனம் ஆகின்றன.

பண-மூலதனம் ஏற்கெனவே உற்பத்திச் சாதனங்களாகவும் உழைப்புச் சக்தியாகவும் மாற்றப்பட்டு விட்டது. மூலதனத்தின் இந்த இரு பொருளியலான வடிவங்களும் உற்பத்தியின் செயல்போக்கில் இணையும்போது அது உற்பத்தியாகும் மூலதன வடிவமாக ஒன்றிணைந்த அமைப்பாக அமைகின்றது. உற்பத்தி தொடர்ந்து நடைபெற்றால் மூலதனம் இடைவிடாமல் இந்த வடிவத்தில் காணப்படுகிறது.

உற்பத்தியின் செயல்போக்கில் முன் செலுத்தப்பட்ட மூலதனம் முழுவதும் விரைவிலோ அல்லது பின்னரோ, இப்போதோ அல்லது எப்போதாவது பண்டங்களாக மாற்றப்படுகிறது. அது அப்போது பண்ட மூலதனத்தின் வடிவத்தை அடைகிறது. இந்த வடிவத்தில் மூலதனம் ஒரு தனித் தன்மையான சுற்றோட்டத்தை நிகழ்த்துகிறது. அது பண்ட மூலதன சுற்றோட்டமாகும். இந்த இடத்தில் முதலாளி உற்பத்தி செய்யப்பட்டுள்ள பண்டங்களை விற்பனை செய்ய வேண்டிய பிரச்சனையை எதிர்நோக்க வேண்டியதேற்படுகிறது. பண்டங்களின் விற்பனை முதலாளிக்கு அவர் செலவழித்த மூலதன மதிப்பு அனைத்தும் திரும்பவும் கிடைப்பதற்கு உத்தரவாதமளிக்க வேண்டும். அத்துடன் அது அவருடைய கூலித் தொழிலாளிகள் உற்பத்திச் செய்த உபரி மதிப்பையும் தனக்குக் கொடுக்க வேண்டும். புத்தகம் இரண்டில் மார்க்ஸ் பகுத்தாய்ந்துள்ள பிரதான அம்சங்களில் ஒன்றாக அமைந்துள்ளது பண்டங்களின் விற்பனையின் நிலைமைகள் மற்றும் குறிப்பிட்ட விசேஷமான அம்சங்களையும் கொண்ட ஒரு விரிவான விளக்கமாகும்.

மூலதனத்தின் சுற்றோட்டங்களை அதனுடைய எல்லா வடிவங்களிலும் அவைகளின் பரஸ்பர இணைப்புக்களிலும் அவைகளின் எல்லாவித விவரங்களிலும் மார்க்ஸிற்கு முன்னர் யாரும் பரிசீலனை செய்து ஆராயவில்லை. மார்க்ஸ்தான் முதன் முதலாக மூலதனத்தை உற்பத்தியும் சுற்றோட்டமும் ஒன்றிணைந்த ஒன்றாக, இடத்தாலும் காலத்தாலும் ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு ஒரு அளவு பரிமாணத்திலிருந்து மற்றொரு, பெரிய அளவிலான பரிமாணத்திற்கு மூலதன மதிப்பின் தொடர்ச்சியான இயக்கமாக முன்வைத்து விளக்கினார். இது மிகவும் அதிகமான முக்கியத்துவம் மிக்கதாகும். காரணம் மார்க்ஸ் கூறியதைப் போல மூலதனத்தை "இயக்க வடிவத்தில்தான் புரிந்து கொள்ள முடியும், அசையாமல் அமைதியாகப் படிந்துள்ள ஒரு பொருளாக அல்ல." ^1

மூலதனத்தின் மூன்று பிரதான வடிவங்களின் (பணம், உற்பத்திப் பண்டம்) சுற்றுவட்டங்களை தனித்தனியாகவும் மொத்தமாக அவைகளை ஒன்றுசேர்த்தும் மார்க்ஸ் அலசி ஆராய்கிறார். அதனுடைய மற்றொரு மிக முக்கியமான குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் அது மூலதனத்தின் இயக்க அசைவில் உள்ள மிகவும் ஆழமாக அழுத்திச் சென்று கொண்டிருக்கும் முரண்பாடுகளை எடுத்துக் காட்டுகிறது.

தொடர்ச்சியான இயக்க அசைவுதான் சமுதாய மூலதனம் முழுவதினுடைய குணச் சிறப்பாகும் என்றபோதிலும் இந்த இயக்கத்தில் பண்டங்களின் மதிப்புகளிலும் விலைகளிலும் பொதுவான மற்றும் பகுதியான நெருக்கடிகளும் புரட்சிகளும் இடைவிடாமல் தோன்றுகின்றன. சில முதலாளிகளிடத்தில் பண-மூலதனம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. சிலர் அது போதுமான அளவு இல்லாமல் அழிந்து விடுகிறார்கள். சிலர் அளவுக்கு மீறி மிக அதிகமாக ஜுரவேகத்தில் உற்பத்தி செய்கிறார்கள். உற்பத்தியை விரிவுபடுத்துகிறார்கள். சிலருக்கு எந்திரங்கள் ஓடாமல் துரு பிடித்து சும்மா கிடக்கின்றன. ஏராளமான பண்டங்களுக்குச் சந்தையில்லாமல் விற்க முடியாமல் தேங்கிக் கிடக்கின்றன. அதனால் அவைகள் கெட்டுப்போய் மதிப்பு இழந்து விடுகின்றன. சில சமயங்களில் அவைகள் அப்படியே அழிக்கப்படுகின்றன. அதே சமயத்தில் உழைக்கும் மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்படுகிறார்கள். சில தொழிலாளர்கள் மிகவும் கொடுமையான வேலைப்பளுவினாலும் அளவுக்கு மீறிய வேலையினாலும் கடுமையாக உழைத்துக் களைப்படைகிறார்கள். அதே சமயத்தில் மற்றவர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் வறுமையில் வாடி வதங்குகிறார்கள். இந்த மற்றும் இதைப் போன்ற இதர உண்மைநிலைக் கூறுகள் எல்லாம் தற்செயலானவை அல்லவென்றும் அவை உண்மையில் மூலதனத்தின் இயக்கத்தினுடைய சாராம்சத்தின் மிக அவசியமான இயல்பான செயல் விளைவுகளாகவே அமைந்துள்ளன என்றும் மார்க்ஸ் எடுத்துக் காட்டுகிறார்.

மூலதனத்தின் எந்தவொரு சுற்று வட்டமும் ஒரு குறிப்பிட்ட திட்ட வட்டமான காலத்தை எடுத்துக் கொள்கிறது. அந்தக் கால அளவு எவ்வளவு இருந்தாலும் அது புற நிலையில் இரு பாகங்களாகப் பிரிந்து விடுகின்றன: உற்பத்திக்கான காலம், சுற்றோட்டத்திற்கான காலம் என்று பிரிகின்றன.

இரண்டாம் பாகத்தில் மார்க்ஸ் மூலதனத்தின் மொத்தக் கைமாற்ற சுழற்சி பற்றி மிகவும் விரிவான படிப்பாராய்ச்சியைச் செய்துள்ளார். முதலாளிக்கு அவருடைய மூலதனத்தின் மொத்தக் கைமாற்ற சுழற்சிக்கான காலம் என்பது மூலதனத்தை முன் வைத்து முதலீடு செய்து அதன் மூலம் அதனுடைய ஆரம்ப மூல வடிவ அளவை திரும்பப் பெறுவது மட்டுமல்லாமல் அதன் மதிப்பை அதிகப்படுத்துவதற்குமான கால அளவாகும். ஒவ்வொரு நிகழ்விடத்திற்கும் பலவேறு தனிப்பட்டுள்ள மூலதனங்களுக்கான மொத்தக் கைமாற்ற சுற்றுக்கான காலம், சுற்றோட்டத்திற்கான நேரமும் உற்பத்திக்கான நேரமும் சேர்ந்த ஒட்டுமொத்த கால அளவிற்குச் சமமானதாகும். மொத்த கைமாற்றச் சுற்றுக்கான கால அளவிலுள்ள வேறுபாடுகள் முன் பணமாக வைக்கப்பட்டுள்ள மூலதனம், வருடாந்திர மொத்த உபரி மதிப்பின் திரட்சி ஆகியவற்றின் மீதும், உற்பத்தி, சுற்றோட்டம் ஆகியவற்றின் முதலாளித்துவ முறையிலான செயல்போக்கு முழுவதன் மீதும் மிகவும் கணிசமான அளவில் செல்வாக்கை செலுத்துகிறது.

உற்பத்தியின் செயல்போக்கில் நிலையான மூலதனத்தின் பலவேறு பகுதிகளின் மதிப்பு பண்டங்களுக்கு பலவேறு வழிகளில் மாற்றப்படுகிறது. இவ்வாறாக மூலப்பொருள் முழுதும் உபயோகப்படுத்தப்படுகிறது. அதன் மதிப்பு முழுவதும், அதில் தொழிலின் கழிவுப் பொருளின் மதிப்பு உள்பட சேர்த்து உற்பத்திச் செய்யப்பட்ட பண்டங்களின் மதிப்புடன் சேர்க்கப்படுகிறது. நேர் மாறான முறையில் மூலப்பொருள்களைப் பயன்படுத்தி செய்பொருளாக்குவதற்கு பதப்படுத்தும் எந்திரங்களின் மதிப்பு, உற்பத்திச் செய்த பண்டங்களின் மதிப்புடன் அந்த எந்திரங்களின் தேய்மானத்தின் அளவுதான் சேர்க்கப்படுகிறது. பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டு விட்டால் முதலாளி மூலப்பொருளின் மதிப்பு முழுவதையும், உற்பத்தியின் செயல் போக்கில் பயன்படுத்தப்பட்ட எந்திரங்களின் ஒரு பகுதியின் மதிப்பையும் திரும்ப எடுத்து விடுகிறார். அதனால்தான் மூலதன மதிப்பின் சுற்றோட்டம் மற்றும் மொத்தக் கைமாற்றச் சுற்றின் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் நிலையான மூலதனம் முழுவதும் தளவாட முதலீடாகவும் சுற்றோட்ட முதலீடாகவும் பிரிக்கப்படுகிறது.

மார்க்ஸ் தான் முதன் முதலாக, உற்பத்திச் சாதனங்கள்தான் தளவாட மூலதனமாகவோ அல்லது சுற்றோட்ட மூலதனமாகவோ ஆகிறது என்றும் அவைகளின் மதிப்பு பண்டத்திற்கு படிப்படியாகவோ அல்லது உடனடியாகவோ, பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ மாற்றப்படுகிறதா என்பதைப் பொறுத்தே அது ஆகிறது என்பதையும் உருவாக்கம் செய்தார்.

பெருகும் மூலதனம் என்பது முதலாளி உழைப்பு சக்திக்காகச் செலவிடும் மூலதனப் பகுதியாகும். அது சுற்றோட்ட மூலதனமாக அமைந்துள்ள நிலையான மூலதனத்தின் பகுதியிலிருந்து மொத்த கைமாற்றுச் சுற்றின் கணக்கு வகையிலிருந்து எந்த விதத்திலும் மாறுபட்டதல்ல. அதன் விளைவாக சுற்றோட்ட மூலதனம் இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கிறது. அவைகள் ஒவ்வொன்றும் மதிப்பின் உற்பத்தியிலும், உபரி மதிப்பிலும் முற்றிலும் வேறுபட்ட பங்குகளை ஆற்றுகின்றன. ஆனால், அவை மூலதனத்தின் சுற்றோட்ட நிகழ்ச்சிப் போக்கில் ஒரே மொத்தமான ஒன்றாகக் காட்சி அளிக்கிறது. இது முதலாளித்துவ உற்பத்தியின் சுரண்டும் இயல்பை மூடிமறைப்பதற்கு உதவுகிறது. உபரி மதிப்பு என்பது சுற்றோட்டத்தின் வட்டத்தில், உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் விற்பனை செய்யப்படும்போது தோன்றுகிறது என்னும் பிரமையை உண்டாக்குகிறது. பூர்ஷுவாப் பொருளாதார நிபுணர்கள் இந்தப் பிரமையை முதலாளித்துவ அமைப்புமுறையை நியாயமானது எனக் காட்டுவதற்குப் பயன்படுத்துகிறார்கள்.

மூலதனத்தின் மொத்தக் கைமாற்ற சுற்றைப் பற்றி முழுமையாகச் செய்யப்பட்ட அவருடைய பகுப்பாய்வில் குறிப்பாக அதனுடைய தளவாடம் மற்றும் சுற்றோட்ட மூலதன அங்கக் கூறுகளின் மொத்தக் கைமாற்றச் சுற்றைப் பற்றிய ஆய்வில் மார்க்ஸ், மூலதனத்தின் மொத்தக் கைமாற்றுச் சுற்றானது முதலாளித்துவ உற்பத்தியின் பலவேறு கிளைப் பிரிவுகளிலும் துறைகளிலும் ஆற்ற வேண்டிய பங்கைப் பற்றியும், மூலதனம் தளவாட மூலதனம் என்றும் சுற்றோட்ட மூலதனம் என்றும் பிரிக்கப்பட்டுள்ளதானது, பொருளியல் உற்பத்தியின் வளர்ச்சியிலும் முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களின் வாய்ப்பு நிலைகளில் அது செலுத்தும் சரியான செல்வாக்குப் பற்றியும் ஒரு விஞ்ஞானபூர்வமான விளக்கத்தைக் கொடுத்தார்.

தனித்தனியான உற்பத்தியானால் அது பலவேறு காரணங்களினால் தற்காலிகமாகவோ அல்லது மொத்தத்திலோ தொடர்ந்து நடைபெறாமல் நின்று போய்விடலாம். ஆனால் சமுதாய உற்பத்தியோ அதைப்போல அல்லாமல் மொத்தத்தில் எப்போதும் தொடர்ச்சியாகவே நடைபெறும். மூலதனம் எவ்வாறு மறுஉற்பத்தி செய்யப்படுகிறது என்பது பற்றிய சூழ்நிலைமைகளைப் பற்றிய ஒரு பகுப்பாய்வு தொகுதி இரண்டில் ஆக முக்கியமான தத்துவார்த்தப் பிரச்சனையாக அமைந்திருக்கிறது.

மார்க்ஸிற்கு முந்திய சமுதாய மறு உற்பத்தியைப் பற்றிய ஆய்வின் முயற்சிகள் (குறிப்பாக பிரான்சுவா கெனேயின் பொருளாதார அட்டவணை) இருந்தன. எனினும் அவர் மட்டுமேதான் முதன்முதலில் சமுதாய மூலதனத்தின் மறு உற்பத்தி பற்றிய ஒரு விரிவான, முழுமையான விஞ்ஞானபூர்வமான தத்துவத்தை உருவாக்கினார். சாதாரண மறு உற்பத்தி மற்றும் விரிவுபடுத்தப்பட்ட மறு உற்பத்தி அதாவது அதிக அளவிலான மறு உற்பத்தி ஆகியவற்றை எந்த வழிகளில் பரிசீலனை செய்ய வேண்டும் என்பதை விளக்கினார். சமுதாய மூலதனம் முழுவதையும் மதிப்பின் அடிப்படையில் மட்டுமல்லாமல், அதன் பொருளியல் வடிவத்திலும் (பயன்பாட்டு மதிப்பு) பரிசீலனை செய்ய வேண்டும் என மார்க்ஸ் நிறுவினார்.

மார்க்ஸின் பங்களிப்பைத் தெளிவுபடுத்தி விளக்குவதன் மூலம் மொத்த சமுதாய உற்பத்தியின் மதிப்பமைப்பும் பொருளியல் வடிவமைப்பும் பற்றிய அவருடைய தொகுப்பாய்வை நாம் காணலாம். உற்பத்திப் பண்டங்களின் மொத்தத் திரட்சி சமுதாயத்தின் மொத்த வருடாந்திர உற்பத்தியாக அமைந்துள்ளது. அது இரண்டு பெரிய இலாகாக்களாகப் பிரிகிறது: முதலாவது இலாகாவில் அடங்கியிருப்பது உற்பத்திச் சாதனங்கள்; அவை உற்பத்தியின் உட்கொள்ளலுக்குக் கட்டாயமாகச் செல்ல வேண்டும். இரண்டாவது இலாகாவில் நுகர் பொருள்கள் அடங்கியுள்ளன; அவைகள் முதலாளிகளின் வர்க்கம் மற்றும் தொழிலாளர்களின் வர்க்கம் ஆகியவற்றில் உள்ள தனிப்பட்ட நபர்களின் உபயோகத்திற்குச் செல்கிறது. அவ்வாறாக சமுதாய உற்பத்தி முழுவதும் இரண்டு பெரிய இலாகாக்களில் நிகழ்கிறது: உற்பத்திச் சாதனங்களை உற்பத்தி செய்தல், தனிநபர்களின் உபயோகத்திற்கான பொருள்களை உற்பத்திச் செய்தல். இந்த இருவகைப் பிரிவு ஒரு மிகப் பெரிய ஆராய்ச்சி வழிமுறை முக்கியத்துவம் மிக்கதாகும். இது முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு மட்டுமல்ல இதர எல்லாவகை சமுதாய உற்பத்திக்கும் மறு உற்பத்திக்கும் பொருந்தும்.

இந்த இரண்டு இலாகாக்கள் ஒவ்வொன்றிலும் உட்கொள்ளப்பட்ட நிலையான மூலதனத்தின் மதிப்பு அதனுடைய வருடாந்திர உற்பத்தி மதிப்பிற்கு முழுமையாக மாற்றப்படுகிறது.

ஆண்டின் நிகழ்ச்சிப் போக்கில் உழைப்புச் சக்தி ஒரு புதிய மதிப்பை உற்பத்தி செய்கிறது. இந்தப் புதிய மதிப்பு உட்கொள்ளப்பட்ட நிலையான மூலதனத்தின் மதிப்புடன் சேர்க்கப்படுகிறது. உழைப்புச் சக்திக்கு விலை கொடுப்பதற்கு முதலாளிகள் செலவழித்த பெருகும் மூலதனத்தின் மதிப்பு வருடாந்திர உற்பத்தியின் மதிப்பில் மறு உற்பத்திச் செய்யப்படுகிறது என்பது மாத்திரமல்ல, உபரி மதிப்பின் பரிமாணத்தின் அளவுக்கு அதிகரிக்கப்படுகிறது. கூலித் தொழிலாளர்களால் வருடாந்திர உற்பத்தியின் மதிப்பளவில் உண்டாக்கப்பட்ட புதிய மதிப்பளவின் மொத்தப் பரிமாணம் தொழிலாளர்களின் எண்ணிக்கையையும், முதலாளித்துவச் சுரண்டலின் அளவு மட்டத்தையும் பொறுத்திருக்கிறது.

இதன் விளைவாக சமுதாய உற்பத்தியின் இரண்டு இலாகாக்கள் ஒவ்வொன்றிலும் உள்ள மொத்த வருடாந்திர உற்பத்தியின் மதிப்பில் உட்கொள்ளப்பட்ட நிலையான மூலதனம் (நி), பெருகும் மூலதனம் (பெ), உபரி மதிப்பு (உ), ஆகியவை அடங்கியிருக்கின்றன. மார்க்ஸினுடைய கணக்கியல் குறிமான முறையில் நி+பெ+உ ஆகியவைகளின் மொத்தம் அடங்கியிருக்கிறது.

மார்க்ஸினுடைய மிகப் பெரிய விஞ்ஞான சாதனை, சமுதாய உற்பத்தியின் இரண்டு பெரிய இலாகாக்கள் ஒவ்வொன்றிற்குள்ளும் இந்த இரண்டிற்கிடையிலும் உள்ள பரிமாற்றத்தின் நிலைமைகள் மற்றும் விகிதாச்சாரங்கள் ஆகியவற்றைத் தெளிவுபடுத்தி விளக்குவதாகும். அவர் பரிமாற்ற திட்டங்களை வகுத்தார். சமுதாய உற்பத்தியின் இலாகாக்கள் ஒவ்வொன்றிலும், உற்பத்திப் பொருளின் அங்கக் கூறுகளின் அதன் மதிப்பளவிலும், பொருளியல் உள்ளடக்கத்திலும் ஒப்பீட்டளவில் உள்ள உயர் பரிமாண அளவை சுட்டிக்காட்டினார். இவை சமுதாய உற்பத்திப் பொருளைக் கைகூடச் செய்வதற்கும் அதன் விளைவாக தொடர்ச்சியான மறு உற்பத்திக்கும் அவசியமாகின்றன. மார்க்ஸ்தான் முதன் முதலில் ஒரு வழியைக் காட்டினார். அதில் உற்பத்திப் பொருளின் இரு பகுதிகளையும் சுட்டிக் காட்டியுள்ளார். அதில் ஒரு பகுதி தொழிலாளர்களும் முதலாளிகளும் தனிப்பட்ட முறையில் சொந்தமாக உபயோகித்துக் கொள்வதற்குச் செல்கிறது. மறுபகுதி உற்பத்திக்குத் தேவையான மூலதனத்தின் அம்சங்களின் வடிவத்தில் பயன்படுத்தப்படும் உற்பத்திப் பொருளாகும். இந்த இரு பகுதிகளும் சமுதாய உற்பத்தியின் செயல்போக்கில் ஈடுகட்டப்படுகிறது.

தொடர்ச்சியான மறு உற்பத்திக்கு அவசியமான முழு நிறைவான விகிதாச்சாரங்களை மார்க்ஸ் நிர்ணயம் செய்தார். ஆனால் அத்துடன் முதலாளித்துவத்தின் கீழ் இந்த விகிதாச்சாரங்கள் கைகூட முடியாது என்பதையும், பலவேறு வகையான ஏற்றத்தாழ்வான விகிதாச்சாரங்கள், பகுதி அளவிலும் பொதுவான அளவிலும் அமிதஉற்பத்தி நெருக்கடிகள், நாணய நெருக்கடிகள் ஆகியவை தவிர்க்க முடியாமல் நடைமுறையில் எழுகின்றன என்பதையும் எடுத்துக் காட்டினார். முதலாளித்துவ மறு உற்பத்தியின் ஏற்பாட்டு முறையே அதன் அமைப்பில் இடைவிடாமல் ஏற்றத்தாழ்வான விகிதாச்சார ங்களையும் குறிப்பிட்ட இடைவெளியுடன் திரும்பத் திரும்ப ஏற்ற இறக்கத்தையும் அலைபடுதலையும் இல்லாமல் செய்ய முடியாது. முதலாளித்துவப் பொருளாதாரத்தின் உள் சமநிலையானது அதன் தாறுமாறான அராஜகமான வளர்ச்சியின் மொத்தமான செயல் போக்கில் அவ்வப்போது மறைந்து போகிற நிலையற்ற காலமாகவே இருக்கிறது.

விதிமுறைகளால் நிர்வகிக்கப்பட்ட சமுதாய மறு உற்பத்திக்குள் சென்ற மார்க்ஸினுடைய ஆராய்ச்சிகள், தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகரமான நடைமுறைப் பிரச்சாரத்திற்கு மிகவும் பிரம்மாண்டமான அளவில் முக்கியத்துவம் மிக்கதாக உள்ளது. முதலாளித்துவம் "தானாகவே சரிந்துவிடும்" என்றும் அது "தன்னைத்தானே கழுத்தை நெரித்து அழித்துக் கொள்ளும்" என்றும் ஆருடம் கூறும் தீங்கு விளைவிக்கும் குட்டி பூர்ஷுவா தத்துவங்களையும் முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கு "நிரந்தரமான வளமும்" "இசைவான வளர்ச்சியும்" இருக்கும் என்றும் குற்றங்களை மறைத்து அதை நியாயப்படுத்திக் கொள்ளும் தத்துவங்களையும் எதிர்த்து மார்க்ஸின் வழி வந்தவர்கள் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் போராட்டத்திற்கும் அவருடைய ஆராய்ச்சிகள் மிகவும் முக்கியமானதாகும். சமுதாய மூலதனத்தின் மறு உற்பத்தி பற்றிய மார்க்ஸினுடைய தத்துவத்தின் முடிவுகளில் முழுமையாக சார்ந்து நின்று லெனின் அவர்கள், பெரும்பாலான மக்கள் திரள் வறுமையில் தள்ளப்பட்டுள்ள போது முதலாளித்துவத்தின் கீழ் உள்நாட்டுச் சந்தை எவ்வாறு ஏற்பட்டுள்ளது என்பது பற்றி குறிப்பிடத்தக்க அளவிலான, மிக விரிவான தெளிவான சித்திரத்தைக் கொடுத்துள்ளார்கள். ஒரு சோஷலிச சமுதாயத்தை நிர்மாணிப்பதற்கும் ஒரு கம்யூனிஸ சமுதாயத்தை நிர்மாணிப்பதற்கும் சமுதாய மறு உற்பத்தி பற்றிய மார்க்ஸினுடைய தத்துவம் எவ்வளவு மிகப் பெரிய முக்கியத்துவம் மிக்கது என்பதை லெனின் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கூறியுள்ளார். தனிப்பட்ட உபயோகத்திற்கான பொருள்களை உற்பத்திச் செய்வதைக் காட்டிலும் அதிகமான உற்பத்திச் சாதனங்களை உற்பத்திச் செய்வதற்கு முன்னுரிமை வளர்ச்சிக்கு வாய்ப்பளிப்பது மிக விரிவான மறு உற்பத்தி விதிமுறைக்கு ஒரு அத்தியாவசியமான நிபந்தனை நிலையாகும்.


காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு நூலிலிருந்து--அத்தியாயம் 10 பக்கம் 765 - 792 வரை

 **********************************************************

 மூலதனத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகளின் உருவாக்கமும் எங்கல்ஸின் மகத்தான பங்களிப்பும்

உலகப் புகழ்பெற்ற பொருளாதார மற்றும் தத்துவ நூலான கார்ல் மார்க்ஸின் 'மூலதனம்' (Capital) நூலின் முதல் தொகுதி வெளியான பிறகு, அதன் இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகளை உருவாக்குவதில் மார்க்ஸ் மேற்கொண்ட இடைவிடாத ஆய்வுப் பணிகளையும், அவரது மறைவுக்குப் பின் பிரடெரிக் எங்கல்ஸ் அந்நூல்களைப் பதிப்பித்த வரலாற்றையும் இக்கட்டுரை விளக்குகிறது.

மார்க்ஸின் ஆரம்பகாலத் தயாரிப்புகளும் சவால்களும்

1865-ஆம் ஆண்டின் இறுதியில் மார்க்ஸ் எழுதி முடித்திருந்த கையெழுத்துப் பிரதிகளே பிற்காலத்தில் மூலதனத்தின் இதர தொகுதிகளாக உருப்பெற்றன. 1867-ன் தொடக்கத்தில் இவற்றை இறுதியாகச் சரிபார்க்கத் தொடங்கிய மார்க்ஸ், தன் வாழ்நாளின் இறுதிவரை சில இடைவெளிகளுடன் இப்பணியைத் தொடர்ந்தார்.

இக்காலகட்டத்தில் மார்க்ஸ் இருவேறு பெரும் பொறுப்புகளைச் சுமந்தார்:

 * தத்துவார்த்தப் பணி: மூலதனம் நூலின் அடுத்தடுத்த தொகுதிகளுக்கான ஆழமான பொருளாதார மற்றும் விவசாய உறவுகள் குறித்த ஆய்வுகள்.

 * அகிலத்தின் தலைமைப் பொறுப்பு: முதலாவது அகிலத்தின் (சர்வதேசத் தொழிலாளி வர்க்க இயக்கம்) பொதுக்குழுவில் தலைமைப் பாத்திரம் வகித்து, உலகம் முழுவதும் அதன் கிளைகளை வழிநடத்தியது.

கடுமையான வறுமை, முதுமை, தொடர் உடல்நலக் குறைவு மற்றும் அன்றாட வாழ்க்கைத் தொல்லைகளுக்கு மத்தியிலும் மார்க்ஸ் இந்த இரு பெரும் பணிகளுக்கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். அகிலத்தின் நடைமுறை வேலைப்பளு காரணமாகத் தனது தத்துவார்த்தப் பணிகள் தாமதமாவதை உணர்ந்த அவர், 1871-ல் அபொறுப்பிலிருந்து விலகி மூலதனம் நூலை முழுமையாக முடிக்க விரும்பினார்.

ரஷ்ய மொழி கற்றலும் விரிவான ஆய்வுகளும்

பல்வேறு நாடுகளின் விவசாய உறவுகள் மற்றும் நிலச் சொத்துடைமை குறித்து ஆழமாக ஆராய மார்க்ஸ் விரும்பினார். குறிப்பாக, என். பிளரோவ்ஸ்கி எழுதிய 'ரஷ்யாவில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை' என்ற நூல் மார்க்ஸை வெகுவாகக் கவர்ந்தது. ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சியையும் நில உறவுகளையும் மூல நூல்களிலிருந்தே நேரடியாகப் படித்து அறிய, 1869-ன் இறுதியில் தமது முதிர்ந்த வயதில் மார்க்ஸ் ரஷ்ய மொழியைக் கற்கத் தொடங்கினார்.

 * எங்கல்ஸ் ஏற்கெனவே படித்துக் குறிப்புகள் எழுதி வைத்திருந்த ஹெர்ஸனின் நூலைக் கொண்டு மொழிப் பயிற்சியைத் தொடங்கிய மார்க்ஸ், மிகக் குறுகிய காலத்தில் பிளரோவ்ஸ்கி மற்றும் ரஷ்ய ஜனநாயகவாதி செர்னிஷெவ்ஸ்கி ஆகியோரின் நூல்களைப் படிக்கும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றார்.

 * பிளரோவ்ஸ்கியின் நூலில் முதலாளித்துவ வளர்ச்சி மற்றும் கிராம சமுதாய நசிவு குறித்த உண்மைகளைப் பாராட்டிய மார்க்ஸ், அதில் இருந்த 'வர்க்க இசைவு' (முதலாளியும் தொழிலாளியும் சகோதரர்கள் என்பது) போன்ற கருத்துக்களை "ஒரு பழைய பிரமை" என்று விமர்சித்தார். மேலும், ரஷ்யாவில் ஒரு மாபெரும் சமுதாயப் புரட்சி தவிர்க்க முடியாமல் நிகழப்போவதை அந்நூலின் வழி மார்க்ஸ் கணித்தார்.

 * சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கும் லண்டனுக்கும் இடையே ரஷ்யப் புத்தகங்கள் அடங்கிய கூடைகள் பயணித்தன. டேனியல்சன் போன்ற நண்பர்கள் அனுப்பிய அரசாங்க அறிக்கைகள், புள்ளிவிவரங்கள் ஆகியவற்றை மார்க்ஸ் தீவிரமாக ஆராய்ந்தார்.

 * ரஷ்யா மட்டுமின்றி, பெல்ஜியம் நாட்டின் நிலச் சொத்துடைமை குறித்த நூல்களை சீசர் டி பாய்பே மூலமாகவும், அமெரிக்காவின் விவசாயம், நிதி, கடன் மற்றும் ரயில்வே ஊழல்கள் குறித்த தகவல்களை சீக்பிரீட் மேயர் மற்றும் சோர்ஜே போன்ற நண்பர்கள் மூலமாகவும் திரட்டினார்.

அறிவியல் மற்றும் கணித ஆய்வுகளும் வெளியீட்டுத் தாமதமும்

தனது பொருளாதாரக் கருத்துக்களை வலுப்படுத்த விவசாயப் பொருளாதாரம், விவசாய வேதியியல், தாவர இன உயிரியல் ஆகிய அறிவியல் பிரிவுகளையும் மார்க்ஸ் ஆராய்ந்தார். 1875 முதல் 1880 வரையிலான காலகட்டத்தில் உபரி மதிப்பு விகிதத்திற்கும் லாப விகிதத்திற்கும் உள்ள வேறுபாடுகள் குறித்த விரிவான கணக்குகள், நில வாடகை, பண மூலதனத்தின் சுற்று வட்டம், லாப விகித வீழ்ச்சி விதிமுறை ஆகிய முக்கியப் பகுதிகளை எழுதினார்.

இருப்பினும், இரண்டாவது தொகுதியை வெளியிடுவதை மார்க்ஸ் வேண்டுமென்றே தாமதப்படுத்தினார். அதற்கு மூன்று முக்கியக் காரணங்கள் இருந்தன:

 * இங்கிலாந்தில் நிலவிய தொழில் நெருக்கடி அதன் உச்சக்கட்டத்தை அடைந்து, அதன் போக்குகள் முழுமையாகப் பக்குவமடையும் வரை காத்திருந்து தத்துவார்த்த ரீதியாகக் கிரகித்துக் கொள்ள விரும்பினார்.

 * ரஷ்யா மற்றும் அமெரிக்காவிலிருந்து கிடைத்த ஏராளமான புதிய விவரங்கள், ஆய்வை முடிப்பதற்குப் பதிலாக மேலும் தொடர்வதற்கான உத்வேகத்தை அவருக்கு அளித்தன.

 * 1874 முதலே அவருக்கு ஏற்பட்டத் தொடர் தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் காரணமாக, வேலை நேரத்தைக் குறைத்துக் கொள்ளும்படி மருத்துவர்கள் கடுமையாக எச்சரித்திருந்தனர்.

பிரடெரிக் எங்கல்ஸின் ஈடுஇணையற்ற பங்களிப்பு

மார்க்ஸ் தான் மறைவதற்குச் சற்று முன்பு, தனது மகள் எலியனாரிடம் மூலதனத்தின் கையெழுத்துப் பிரதிகளை எங்கல்ஸிடம் ஒப்படைத்து, அதை வைத்து "ஏதாவது செய்யட்டும்" என்று கூறியிருந்தார்.

தனது மறைந்த நண்பரின் எழுத்துக்களை உலகிற்குக் கொண்டு வருவதைத் தனது தலையாய கடமையாகக் கருதிய எங்கல்ஸ், தனது சொந்த விஞ்ஞான ஆய்வுகளைக் கூட நிறுத்திவைத்துவிட்டு இப்பணியில் இறங்கினார்.

 * இரண்டாவது தொகுதி (1885): 1865 முதல் 1877 வரை மார்க்ஸ் எழுதிய எட்டு வெவ்வேறு கையெழுத்துப் பிரதிகளை ஒன்றிணைத்து, மொழி மற்றும் வாசக அமைப்புகளைச் சீர்படுத்தி, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான உழைப்பிற்குப் பிறகு 1885-ல் இரண்டாவது தொகுதியை எங்கல்ஸ் வெளியிட்டார்.

 * மூன்றாவது தொகுதி (1894): மிகவும் சிக்கலான மற்றும் துண்டு துண்டாக இருந்த குறிப்புகளை ஒன்றிணைத்து மூன்றாவது தொகுதிக்கு முழு வடிவம் கொடுக்க எங்கல்ஸிற்கு ஏறத்தாழ பத்து ஆண்டுகள் தேவைப்பட்டன. நான்காவது அத்தியாயத்திற்குப் புதிய மூல பாடத்தை எழுதியது, ஐந்தாவது பாகத்தை மும்முறை திருத்தியமைத்தது, அடிக்குறிப்புகள், முன்னுரை மற்றும் அனுபந்தம் எழுதியது என எங்கல்ஸ் ஆற்றிய பணி அளப்பரியது. 1894-ல் இத்தொகுதி வெளியானது.

மார்க்ஸின் விருப்பப்படியே இரண்டாவது மற்றும் மூன்றாவது புத்தகங்களை அவரது மனைவி ஜென்னிக்கு அர்ப்பணம் செய்வதாக எங்கல்ஸ் முன்னுரையில் குறிப்பிட்டார். எங்கல்ஸ் தனது தன்னடக்கத்தாலும், மார்க்ஸின் சிந்தனை ஓட்டத்தோடு கொண்டிருந்த ஆழமான பிணைப்பாலும் மூல பாடத்தின் உண்மையான உணர்வு சிதையாமல் இவற்றை உருவாக்கினார். அதனால்தான், "மூலதனத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகளை மார்க்ஸும் எங்கல்ஸும் இணைந்து உருவாக்கிய நூல்களாகவே கருத வேண்டும்" என்று மாமேதை லெனின் மிகச் சரியாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

முதலாளித்துவ உற்பத்தியின் செயல்வழி முறையும் உபரி மதிப்புக் கோட்பாடும்

கார்ல் மார்க்ஸின் வாழ்நாள் முழுமையான ஆய்வின் சாரமாகவும், விஞ்ஞான கம்யூனிஸத்தின் முதன்மையான நூலாகவும் திகழ்வது 'மூலதனம்' (Capital) ஆகும். இந்நூலின் முதல் தொகுதி, முதலாளித்துவ உற்பத்தியின் செயல்வழி முறையையும், அதன் கீழ் மூலதனம் எவ்வாறு கூலி உழைப்பைச் சுரண்டுகிறது என்பதையும் மிக ஆழமாகப் பகுப்பாய்வு செய்கிறது.

1. பண்டமும் உழைப்புச் சக்தியும்

முதலாளித்துவச் செல்வத்தின் ஆரம்ப உயிரணு வடிவமான 'பண்டத்தை' (Commodity) ஆய்வு செய்வதிலிருந்து மார்க்ஸ் தனது ஆய்வைத் தொடங்குகிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மனிதகுலம் புரிந்துகொள்ளத் திணறிய பண்டத்தின் மதிப்பு வடிவத்தையும், தனித்தன்மை வாய்ந்த பண்டமான பணத்தின் தன்மையையும் மார்க்ஸ் தெள்ளத் தெளிவாகப் பகுத்தாய்ந்தார்.

 * பண்டத்தின் இரு கூறுகள்: ஒவ்வொரு பண்டமும் மனிதத் தேவையைப் பூர்த்தி செய்யும் 'பயன்பாட்டு மதிப்பையும்' (Use-value), அதை உற்பத்தி செய்யச் சமுதாயத்திற்கு அவசியமான உழைப்பு நேரத்தால் தீர்மானிக்கப்படும் 'மதிப்பையும்' (Value) இணைத்துக் கொண்டுள்ளது.

 * உழைப்புச் சக்தி: பூர்ஷுவாப் பொருளாதார நிபுணர்கள் கருதியது போல் தொழிலாளி தனது 'உழைப்பை' விற்பதில்லை; மாறாகத் தனது 'உழைப்புச் சக்தியை' (Labour-power - உழைப்பதற்கான ஆற்றல் திறனை) தான் முதலாளியிடம் பண்டமாக விற்கிறான் என்ற பேருண்மையை மார்க்ஸ் கண்டறிந்தார்.

 * கூலியின் மாயை: உழைப்புச் சக்தியின் மதிப்பு என்பது தொழிலாளியும் அவரது குடும்பமும் உயிர்வாழத் தேவையான அத்தியாவசியப் சாதனங்களின் மதிப்பாகும். இது பண வடிவத்தில் 'கூலி'யாக வழங்கப்படுகிறது. இந்தக் கூலியானது தொழிலாளியின் முழு உழைப்பிற்கான ஊதியம் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி, முதலாளித்துவச் சுரண்டலை மூடி மறைக்கிறது.

2. உபரி மதிப்பும் மூலதனத்தின் வகைகளும்

முதலாளித்துவச் சுரண்டலின் ரகசியத்தை மார்க்ஸ் தனது 'உபரி மதிப்பு' (Surplus-value) கோட்பாட்டின் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். இது பூர்ஷுவாப் பொருளாதார நிபுணர்களுக்கு ஒரு பேரிடியாக அமைந்தது என எங்கல்ஸ் குறிப்பிடுகிறார்.

தொழிலாளி தனக்கு வழங்கப்படும் கூலிக்கு இணையான மதிப்பைத் தனது மொத்த வேலை நேரத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் (அவசியத் தேவையான வேலை நேரம்) உற்பத்தி செய்து முடித்துவிடுகிறார். எஞ்சியுள்ள 'உபரி வேலை நேரத்தில்' அவர் உருவாக்கும் கூடுதல் மதிப்பே உபரி மதிப்பு ஆகும்.

சுரண்டலின் அளவைத் துல்லியமாகக் கணக்கிட மார்க்ஸ் மூலதனத்தை இரண்டாகப் பிரித்தார்:

 * நிலையான மூலதனம் (Constant Capital): இயந்திரங்கள் மற்றும் உற்பத்திச் சாதனங்கள். இவை எந்தப் புதிய மதிப்பையும் உருவாக்குவதில்லை.

 * பெருகும் மூலதனம் (Variable Capital): உயிருள்ள உழைப்புச் சக்திக்காக வழங்கப்படும் கூலி. இந்த உயிருள்ள உழைப்பு மட்டுமே புதிய மதிப்பையும் உபரி மதிப்பையும் உருவாக்கும் மூலாதாரமாகும்.

உபரி மதிப்பை உருவாக்க முதலாளிகள் இரு வழிகளைக் கையாள்கின்றனர்:

 * முழு மொத்தமான உபரி மதிப்பு (Absolute Surplus-value): அவசியமான உழைப்பு நேரத்தை நிலையாக வைத்துக்கொண்டு, வேலை நாளை நீட்டிப்பதன் மூலம் உபரி உழைப்பைப் பெறுவது.

 * சார்பு நிலையான உபரி மதிப்பு (Relative Surplus-value): வேலை நாளின் நேரத்தை மாற்றாமல், நவீனத் தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்கள் மூலம் உழைப்பின் தீவிரத்தன்மையையும் உற்பத்தித் திறனையும் அதிகரித்து உபரி மதிப்பைப் பெருக்குவது.

இயந்திரங்களின் வருகை தொழிலாளர்களின் வேலைப்பளுவைக் குறைப்பதற்குப் பதிலாக, வேலையில்லாத் திண்டாட்டத்தையும், தொழில் விபத்துகளையும், கடுமையான உழைப்புச் சுரண்டலையும், பட்டாளத்துப் பாடிவீட்டுக் கட்டுப்பாட்டு முறைகளையுமே அதிகரித்தது என்பதை இங்கிலாந்தின் வரலாற்றுத் தரவுகளோடு மார்க்ஸ் நிறுவினார். இயந்திர உற்பத்திக் கட்டத்தில் உழைப்பானது மூலதனத்திற்கு முழுமையாகக் கீழடங்கி அடிபணிந்து விடுகிறது.

3. மூலதனச் சேமிப்புத் திரட்சியும் தொழில்துறை இருப்புப் படையும்

தொழிலாளர்களிடமிருந்து பெறப்படும் உபரி மதிப்பை முதலாளிகள் தங்கள் சொந்த நுகர்வுக்குப் பயன்படுத்துவது போக, அதன் பெரும்பகுதியை மீண்டும் மூலதனமாக மாற்றி உற்பத்தியை விரிவுபடுத்துகின்றனர். இதையே மார்க்ஸ் 'மூலதனச் சேமிப்புத் திரட்சி' (Capitalist Accumulation) என்கிறார்.

உற்பத்தி விரிவடையும்போது, கூலிக்குச் செலவிடப்படும் பெருகும் மூலதனத்தை விட, இயந்திரங்களுக்கான நிலையான மூலதனம் வேகமாக வளர்கிறது. இதனால் உழைப்புச் சக்திக்கான தேவை விகிதாசார அளவில் குறைந்து, தொழிலாளர்களின் ஒரு பகுதியினர் உற்பத்தியிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.

இவ்வாறு உருவாகும் வேலையற்றோர் பட்டாளத்தை மார்க்ஸ் 'தொழில்துறை இருப்புப் படை' (Industrial Reserve Army) என்று அழைக்கிறார். மால்த்தூஸின் போலியான 'இயற்கை ஜனத்தொகை விதி'யை நிராகரித்த மார்க்ஸ், இந்த உபரி மக்கள் தொகை என்பது முதலாளித்துவத்தின் இயல்பால் மட்டுமே உருவாக்கப்படுகிறது என்பதை நிரூபித்தார். இந்த இருப்புப் படையைக் காட்டிப் பயமுறுத்தியே, பணியில் இருக்கும் தொழிலாளர்களின் கூலியைக் குறைக்கவும், உழைப்பைத் தீவிரப்படுத்தவும் முதலாளிகளால் முடிகிறது.

இதன் விளைவாக, சமூகத்தின் ஒரு முனையில் செல்வக் குவியலும், ஆடம்பரமும், புல்லுருவித்தனமும் வளர, மறுமுனையில் உழைக்கும் மக்களின் வறுமை, ஒடுக்குமுறை மற்றும் பாதுகாப்பின்மை ஆகியவை நாளுக்கு நாள் பெருகுகின்றன.

4. பண்டைய காலச் சேமிப்புத் திரட்சியும் சோஷலிசப் புரட்சியின் தவிர்க்க முடியாமையும்

முதலாளிகளின் ஆரம்பகாலச் செல்வம் என்பது அவர்களின் கடின உழைப்பாலும் சிக்கனத்தாலும் உருவானது என்ற பூர்ஷுவா அறிவியல் நிபுணர்களின் கற்பிதங்களை மார்க்ஸ் தகர்த்தெறிந்தார்.

 * சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளை வலுக்கட்டாயமாக அவர்களின் நிலங்களிலிருந்து விரட்டியடித்து, அவர்களைத் தொழிற்சாலைகளுக்கான மலிவான கூலி உழைப்பாளர்களாக மாற்றிய வன்முறை வரலாற்றை மார்க்ஸ் அம்பலப்படுத்தினார்.

 * காலனி நாடுகளில் நடத்தப்பட்ட காட்டுக் கொள்ளை, வழிப்பறி மற்றும் ரத்தக் களரி நிறைந்த சூறையாடல்கள் மூலமே ஒரு சிலர் கைகளில் செல்வம் குவிந்தது. அதனால்தான், "மூலதனம் என்பது தலையிலிருந்து பாதம்வரை ஒவ்வொரு ரோமக்கண்ணிலிருந்தும் ரத்தமாகவும் அழுக்கு நிறைந்த இதர பொருளாகவும் சொட்டுச் சொட்டாக வந்து சேர்ந்ததாகும்" என்று மார்க்ஸ் எழுதினார்.

மூலதனத்தின் முதல் தொகுதியின் இறுதியில் (24-வது அத்தியாயம்), முதலாளித்துவத்தின் எதிர்காலம் குறித்து மார்க்ஸ் தீர்க்கமான முடிவுக்கு வருகிறார். முதலாளித்துவ வளர்ச்சி உழைப்பை மேலும் மேலும் சமுதாயமயமாக்குகிறது. ஆனால், 'சமுதாயத் தன்மை கொண்ட உற்பத்திக்கும், தனிநபர் கைப்பற்றலுக்கும்' இடையிலான அடிப்படை முரண்பாடு தொடர்ந்து தீவிரமடைகிறது. மூலதனம் ஒரு சில பெருங்கைகளில் சுருங்கும்போது, சுரண்டப்படும் பாட்டாளி வர்க்கத்தின் எண்ணிக்கையும், அதனோடு சேர்ந்து அவர்களின் வர்க்க எழுச்சியும் கலகமும் வளர்கின்றன. இறுதியில், முதலாளித்துவக் கட்டமைப்பு தகர்க்கப்பட்டு, தவிர்க்க முடியாமல் சோஷலிசப் புரட்சி நிகழ்ந்தே தீரும் என்ற உறுதியான வரலாற்று நம்பிக்கையோடு மார்க்ஸ் தனது ஆய்வை நிறைவு செய்கிறார்.

 

மூலதனத்தின் சுற்றோட்டமும் சமுதாய மறு உற்பத்தியும்: மார்க்ஸின் தத்துவார்த்தப் பங்களிப்பு

கார்ல் மார்க்ஸின் 'மூலதனம்' (Capital) நூலின் இரண்டாம் தொகுதியில், உற்பத்தி நிகழ்ச்சிப் போக்குகளைத் தாண்டி தொழில் மூலதனத்தின் சுற்றோட்டம் மற்றும் இயக்க அசைவுகள் குறித்து அவர் மேற்கொண்ட ஆழமான ஆய்வுகள் மற்றும் அவற்றின் வரலாற்றுச் சிறப்பை இக்கட்டுரை விளக்குகிறது.

1. மூலதனத்தின் சுற்றோட்டமும் இயக்க வடிவங்களும்

மார்க்ஸ் மூலதனத்தை அசையாமல் அமைதியாகப் படிந்துள்ள ஒரு பொருளாகப் பார்க்காமல், அதன் இயக்க வடிவத்தில்தான் புரிந்துகொள்ள முடியும் என்று வலியுறுத்தினார்.

 * ஒரு முதலாளித்துவ நிறுவனத்தில் கூலித் தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியும், உற்பத்திச் சாதனங்களும் (நிலம், கட்டடங்கள், எந்திரங்கள், மூலப்பொருள்கள்) ஒன்றிணையும்போது மட்டுமே அவை மூலதனமாக மாறுகின்றன.

 * உற்பத்தியின் செயல்போக்கில் முன் செலுத்தப்பட்ட மூலதனம் பண்டங்களாக மாறி, 'பண்ட மூலதன சுற்றோட்டத்தை' நிகழ்த்துகிறது. இந்த விற்பனையின் மூலம் முதலாளி தான் செலவழித்த மூலதன மதிப்பைத் திரும்பப் பெறுவதுடன், தொழிலாளிகள் உருவாக்கிய உபரி மதிப்பையும் சேர்த்துப் பெறுகிறார்.

 * மூலதனத்தின் மூன்று பிரதான வடிவங்களான பணம், உற்பத்தி மற்றும் பண்டங்களின் சுற்றுவட்டங்களை மார்க்ஸ் தனித்தனியாகவும் மொத்தமாகவும் அலசி ஆராய்ந்தார். மூலதனத்தின் இயக்கத்தில் வெளிப்படும் முரண்பாடுகளை அவர் சுட்டிக்காட்டினார்.

 * சமுதாயத்தில் சிலரிடம் பண-மூலதனம் அதிகமாக இருக்க, சிலர் அழிந்துவிடுகிறார்கள்; சிலரிடம் பொருட்கள் விற்பனை இல்லாமல் தேங்கிக் கெட்டுப்போகின்றன. மறுபுறம் உழைக்கும் மக்கள் வறுமையிலும் கடும் வேலைப்பளுவிலும் அவதிப்படுகிறார்கள். இவை தற்செயலானவை அல்ல, மாறாக மூலதன இயக்கத்தின் அவசியமான செயல் விளைவுகளாகும்.

2. கைமாற்றச் சுற்றும் நிலையான/பெருகும் மூலதனமும்

 * மூலதனத்தின் மொத்தக் கைமாற்றச் சுற்றுக்கான காலம் என்பது, முன்வைத்த முதலீட்டைத் திரும்பப் பெறுவதுடன் அதன் மதிப்பை அதிகரிப்பதற்கான கால அளவாகும். இது வருடாந்திர உபரி மதிப்பின் திரட்சியிலும் பெரும் செல்வாக்கு செலுத்துகிறது.

 * உற்பத்தியின் போது நிலையான மூலதனத்தின் (எந்திரங்கள், மூலப்பொருள்கள்) மதிப்பு படிப்படியாகவோ முழுமையாகவோ புதிய பண்டங்களுக்கு மாற்றப்படுகிறது.

 * உழைப்புச் சக்திக்காகச் செலவிடப்படும் 'பெருகும் மூலதனமும்', சுற்றோட்ட மூலதனமும் மதிப்பின் உற்பத்தியில் வெவ்வேறு பங்குகளை ஆற்றினாலும், சுற்றோட்டத்தின் போது அவை ஒன்றாகக் காட்சி அளித்துச் சுரண்டலின் இயல்பை மூடிமறைக்கின்றன.

 * உபரி மதிப்பு என்பது சுற்றோட்டத்தில் பண்டங்கள் விற்கப்படும்போது தோன்றுவதாக ஒரு பிரமையைப் பூர்ஷுவாப் பொருளாதார நிபுணர்கள் உருவாக்கி, முதலாளித்துவத்தை நியாயப்படுத்த முயல்கின்றனர்.

3. சமுதாய மறு உற்பத்தியும் இலாகாக்களும்

தனிப்பட்ட நிறுவனங்களின் உற்பதியைப் போலன்றி, சமுதாய உற்பத்தி எப்போதும் தொடர்ச்சியாக நடைபெறும் ஒரு மறு உற்பத்திச் செயல்முறையாகும். இதற்காக மார்க்ஸ் சமுதாய மூலதனத்தின் மறு உற்பத்தி குறித்த ஒரு விஞ்ஞானபூர்வமான தத்துவத்தை உருவாக்கினார்.

 * சமுதாயத்தின் மொத்த வருடாந்திர உற்பத்தி இரண்டு பெரிய இலாகாக்களாகப் பிரிக்கப்படுகிறது:

   * இலாகா I: உற்பத்திச் சாதனங்களை உற்பத்தி செய்தல்.

   * இலாகா II: தனிநபர்களின் உபயோகத்திற்கான நுகர்பொருள்களை உற்பத்தி செய்தல்.

 * இந்த இரண்டு இலாகாக்களுக்குள்ளும் மதிப்பின் பரிமாற்ற நிலைமைகள் மற்றும் விகிதாச்சாரங்களை மார்க்ஸ் துல்லியமாக நிர்ணயம் செய்தார்.

 * இருப்பினும், முதலாளித்துவத்தின் கீழ் இந்த விகிதாச்சாரங்கள் சீராக இருக்க முடியாது என்றும், பகுதி அளவிலும் பொதுவான அளவிலும் அமித உற்பத்தி நெருக்கடிகளும் நாணய நெருக்கடிகளும் தவிர்க்க முடியாமல் எழும் என்றும் அவர் காட்டினார். முதலாளித்துவப் பொருளாதாரத்தின் உள் சமநிலையானது அதன் அராஜகமான வளர்ச்சியில் அவ்வப்போது மறையும் நிலையற்ற தன்மையைக் கொண்டது.

4. மார்க்ஸின் தத்துவத்தின் வரலாற்று முக்கியத்துவம்

 * சமுதாய மறு உற்பத்தி பற்றிய மார்க்ஸின் தத்துவம், முதலாளித்துவம் "தானாகவே சரிந்துவிடும்" அல்லது "தன்னைத்தானே அழித்துக்கொள்ளும்" என்ற குட்டி பூர்ஷுவா தத்துவங்களை எதிர்த்துப் போராட தொழிலாளி வர்க்கத்திற்குப் பெரும் துணையாக உள்ளது.

 * மார்க்ஸின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, பெரும்பான்மையான மக்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ள போது முதலாளித்துவத்தின் கீழ் உள்நாட்டுச் சந்தை எவ்வாறு உருவாகிறது என்பதை லெனின் விரிவாக விளக்கியுள்ளார்.

 * சோஷலிச மற்றும் கம்யூனிஸ சமுதாயங்களை நிர்மாணிப்பதில், நுகர்பொருள்களை உற்பத்தி செய்வதைக் காட்டிலும் அதிகமான உற்பத்திச் சாதனங்களை (இலாகா I) உற்பத்தி செய்வதற்கு முன்னுரிமை அளிப்பது மறு உற்பத்திக்கான அத்தியாவசிய நிபந்தனை என்பதை லெனின் திரும்பத் திரும்ப வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறாக, மூலதனத்தின் சுற்றோட்ட இயக்கங்களையும், சமுதாய மறு உற்பத்தியின் விதிகளையும் ஆழமாக ஆராய்ந்த மார்க்ஸ், முதலாளித்துவ அமைப்பின் முரண்பாடுகளையும் அதன் தவிர்க்க முடியாத வீழ்ச்சியையும் அறிவியல் பூர்வமாக நிரூபித்துக் காட்டினார்..


தொடர்புடைய கட்டுரைகள்:

***

எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இலக்கு இதழின் கட்டுரைகள்

மூலதனத்தின் பிறப்பு - மார்க்ஸ்- பிடிஎப் வடிவில்- ஒலி வடிவில் (25-10-2026)

நிலங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்கள் எவ்வாறு கொடூரமான சட்டங்கள் மற்றும் அடிமைத்தனமான முறைகள் மூலம் பாட்டாளி வர்க்கமாக மாற்றப்...

செய்தியை சார்ந்த அலசல்