கார்ல் மார்க்ஸின் புரட்சிகரப் பாதையும் அரசியலும்-ஒலி வடிவிலும்

ஜனநாயக இயக்கங்கள் மற்றும் பாட்டாளி வர்க்க இயக்கங்களின் ஒரு புதிய பேரெழுச்சி(- காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு பக்கம் 663-691 வரை)

 

மார்க்ஸ் 1848-ல் இருந்ததைப் போலவே பெரும் பாலும் பூர்ஷுவா ஜனநாயக இயக்கத்தின் வாய்ப்புகளை விஸ்தரிப்பதிலும் மேலும் மேலும் அதிகமான அளவில் மிகவும் விரிவான அடித்தட்டு மக்கள் பொதுவாக குட்டி பூர்ஷுவா ஜனப்பகுதி குறிப்பாக விவசாயப் பெருங்குடி மக்கள் இறுதியாக மொத்தத்தில் ஏழைகளாக உள்ள வர்க்கங்கள் அனைத்தும் பங்கு கொள்வதன் மூலம் தலைமைக்குக் கொண்டு வரவும் மிகவும் அக்கறை கொண்டார்.

— வி.இ. லெனின்

 

உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைவாக புரட்சி நிகழ வில்லையாயினும் அது ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் 1850 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியிலும் 1860 ஆம் ஆண்டுகளின் ஆரம்ப காலத்திலும் ஒரு புதிய புரட்சிகரமான பேரெழுச்சிக்கு தூண்டுவிசையைக் கொடுத்தது. தேசிய ஒருமைப் பாட்டிற்கான இயக்கம் ஜெர்மனியிலும் இத்தாலியிலும் வேகமாக வெடித்தது. அந்நாடுகளில் பூர்ஷுவா ஜனநாயகப் புரட்சியின் அடிப்படைக் கடமைகள் இன்னும் நிறைவேற்றப்பட வேண்டியதிருந்தது. ரஷ்யாவிலும் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் ஒரு புரட்சிகரமான நிலை வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது. போலந்திலும், அயர்லாந்திலும் தேசிய ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் புதிய கட்டத்திற்கு வந்து கொண்டிருந்தது. போனபார்ட்டிஸ பிரான்ஸிலும் ஆஸ்திரிய சாம்ராஜ்யத்திலும் மக்களிடம் புரட்சிகரமான வேகம் பொங்கி எழுந்து கொண்டிருந்தது. ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் இதர நாடுகளில் தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் நடவடிக்கைகள் அதிகரித்துக் கொண்டிருந்தன. பாட்டாளி வர்க்க இயக்கம், பூர்ஷுவா ஜனநாயக இயக்கத்திலிருந்து கிளை பிரிந்து தனது சொந்த வளர்ச்சிப் பாதையைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்தது.

தொழிலாளி வர்க்க இயக்கத்தின் மிக முக்கியமான தேவைகள் காரணமாய் ஒரு பாட்டாளி வர்க்க கட்சியை அமைப்பதற்கான போராட்டத்தின் நடைமுறைப் பணிகளில் மார்க்ஸ் மேலும் மேலும் அதிகமாக கவனம் செலுத்தத் தொடங்க வேண்டியதேற்பட்டது. தொழிலாளி வர்க்க விரோத சக்திகளின் கூடாரத்திற்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டியதிருந்தது. பூர்ஷுவாக் கட்சிகளின் அரசியல் செல்வாக்கிலிருந்து தொழிலாளி வர்க்கம் சகல வழிகளிலும் தப்பிப்பதற்கும் பூர்ஷுவா ஜனநாயக மாற்றத்தை பூர்த்தி செய்வதற்கு தொழிலாளி வர்க்கம் ஒரு சுயேச்சையான பங்கை ஆற்றுவதற்கும் உதவி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்தது. தொழிலாளி வர்க்கம் இந்தப் பங்கை ஆற்றுவதற்கு அதைத் தத்துவார்த்த ரீதியில் தயார் செய்வதற்கு மார்க்ஸிற்கு ஏற்பட்ட ஆவல் அவரைத் தனது பொருளாதார ஆராய்ச்சியை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் பூர்த்தி செய்வதற்குள்ள முயற்சியில் அவரைத் தூண்டியது. அரசியல் பொருளாதாரத்தின் விமர்சன ஆய்விற்கு ஒரு பங்களிப்பின் முதல் பாகத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து அவர் தனது பழைய பொருளாதார கையெழுத்துப் பிரதிகளிலும் புதியவைகளிலும் ஓய்வு ஒழிச்சல் இன்றி ஊக்கத்துடன் பணியாற்றினார். வியக்கத்தக்க முறையிலான அளவு கடந்த முயற்சியுடன் அவர் மிகவும் விரிவான வகையில் ஆராய்ச்சியை நடத்துவதில் வெற்றி கண்டார். அதே சமயத்தில் பாட்டாளி வர்க்க ஸ்தாபன அமைப்பாளர் என்னும் முறையிலும் கிளர்ச்சி பிரச்சார எழுத்தாளர் என்னும் முறையிலும் தனது கடமைகளைச் செய்தார். அன்றைய புதிய சூழ்நிலைமைகளில் அத்தகைய கடமைகள் அதிகரித்திருந்தன.

அன்றைய புதிய சர்வதேச மோதல்களும் யுத்தங்களும் இருந்த சூழ்நிலையில் அத்துடன் பல நாடுகளில் நடைபெற்ற புரட்சிகரமான சம்பவங்கள் தொடர்பாகவும் பாட்டாளி வர்க்கப் புரட்சியாளர்களுக்கு உபாய வழிமுறைகளை உருவாக்குவதற்கு அவர் பெரும் அளவில் குறிப்பாக நேரத்தை செலவழித்தார்.

1859 ஆரம்பத்தில் மார்க்ஸ், சர்வதேசப் பாட்டாளி வர்க்கத் தொடர்புகளையும் இணைப்புகளையும் விரிவுபடுத்தவும் பலப்படுத்தவும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். 1859 பிப்ரவரியில் அவர் வெய்டிமேயருடன் மிகவும் நெருக்கமான கடிதப்போக்கு வரத்தைத் தொடங்கினார். அவருக்கு, சிகாகோ தொழிலாளர்களுக்காக ஒரு பத்திரிகை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கான உதவியை மார்க்ஸ் செய்தார். அவர் ஜெர்மனியில் பலபேருக்கு கடிதங்கள் எழுதத் தொடங்கினார். 1862 இறுதியில், 1848-49 புரட்சியில் பங்கு கொண்டிருந்த ஹனோவர் நகரத்து வைத்திய நிபுணர் லூத்விக் குகல்மானுடன் தொடர்ச்சியான கடிதப்போக்குவரத்தைத் தொடங்கினார்.

கம்யூனிஸ்ட் லீகின் பழைய உறுப்பினர்களான லெஸ்னர், பாண்டர், லோச்னர், இமாண்ட் முதலிய பலருடன், லண்டனிலும் இங்கிலாந்தின் இதர நகரங்களிலும் குடியிருந்த பலருடனும் நெருங்கிய தொடர்புகளை உருவாக்கினார். மார்க்ஸ் தனது நெருங்கிய தோழர்கள் ஒவ்வொருவரும் புரட்சிகரமான இயக்கத்தின் புதிய பேரெழுச்சியில் பாட்டாளி வர்க்க புரட்சிக்காரர்களின் கடமைகளில் பங்கு கொண்டிருப்பதைக் காண வேண்டும் என்று விரும்பினார்.

புதிய நிலைமையில் ஒரு பாட்டாளி வர்க்கப் பத்திரிகையை ஆரம்பிக்க வேண்டியது குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அது புரட்சிகரக் கருத்துக்களைப் பரப்புவதற்கும் ஒரு பகிரங்கமான கட்சி மேடையாகவும் பாட்டாளி வர்க்கப் போராட்ட வீரர்களை ஒன்று திரட்டும் மையமாகவும் செயல்படும். 1859 மே மாதம் 18 ஆம் தேதி மார்க்ஸ் எங்கல்ஸிற்கு எழுதினார்: "நமது எதிரிகள் மட்டுமல்ல நாமும் ஒரு லண்டன் செய்திப் பத்திரிகையில் நமது கருத்தோட்டங்களை அச்சிடுவதற்கு முடிவது மிகவும் அவசியமானதும் முக்கியத்துவம் மிக்கதுமாகும்." * Marx, Engels, Werke, Bd., 29, S. 436.

டாஸ் வோல்க்

1859 ஆம் ஆண்டு மே மாத ஆரம்பத்தில் மார்க்ஸும் அவருடைய நெருங்கிய தோழர்களும், பாட்டாளி வர்க்கக் கருத்துக்களைப் பத்திரிகைகள் மூலம் பரப்புவது பற்றி விவாதித்தார்கள். ஒரு சில நாட்களில் டாஸ் வோல்க் என்னும் வாரப்பத்திரிகைக்கு எழுதும்படி மார்க்ஸிற்கு அழைப்பு வந்தது. இந்த வாரப்பத்திரிகை லண்டனில் இருந்த ஜெர்மன் தொழிலாளர் கம்யூனிஸ்ட் கல்விக்கழகம் மற்றும் இதர ஜெர்மன் தொழிலாளர் கழகங்களின் சார்பில் அவைகளின் பத்திரிகையாக 1859 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி முதன் முதலில் வெளிவந்தது. மார்க்ஸிற்கு வந்த அழைப்பு அந்தப் பத்திரிகை ஆசிரியரிடமிருந்து வந்தது. அவர் பெயர் இலார்டு பிஸ்காம்ப். அவர் ஒரு குட்டி பூர்ஷுவா ஜனநாயகவாதி. மார்க்ஸ் அந்த அழைப்புக்கு சரியான பதில் கொடுக்காமல் தட்டிக் கழித்துக் கொண்டு வந்தார். காரணம் இந்தப் பத்திரிகையில் ஒரு சித்தாந்த செல்வாக்கைச் செலுத்துவது சாத்தியமா என்பதைக் கண்டுகொள்ள வேண்டும் என்று விரும்பினார். அவர் அதிகாரபூர்வமாக எழுதுவதற்கு மறுத்து விட்டார். ஆனால் தனது இடைவிடாத ஆதரவு உண்டு என்று பிஸ்காம்பிற்கு உறுதி கூறியிருந்தார். சில கட்டுரைகள் பதிப்பிப்பதற்கு உதவி செய்தார். பத்திரிகைக்கு நிதி வசூல் செய்து கொடுத்தார். விஷயங்கள் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்.

இவ்வாறு ஆக அதனுடைய இரண்டாவது இதழில் எங்கல்ஸின் போ நதியும் ரைன் நதியும் என்னும் பிரசுரத்தைப் பற்றிய கட்டுரை வந்தது. அந்தப் பிரசுரம் அப்போது தான் வெளிவந்திருந்தது. மே 28 ஆம் தேதி வெளியான 4-வது இதழில் மார்க்ஸினுடைய வேண்டுகோளின்படி எழுதப்பட்ட எங்கல்ஸின் கட்டுரை "இத்தாலிய கிளர்ச்சி ஏற்பாடு" என்னும் தலைப்பில் வெளிவந்தது. மார்க்ஸினுடைய செல்வாக்கின் காரணமாய் முக்கியமான கட்டுரைகளின் தொனி படிப்படியாக மாறத் தொடங்கியது. உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கை சம்பவங்கள் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கக் கண்ணோட்ட நிலையிலிருந்து பகுத்தாய்ந்து எழுதப்பட்டன. ஆரம்பத்தில் அது ஒரு லண்டனில் குடியேறியுள்ள கூட்டத்தின் இதழாக பிரதானமாக ஜெர்மன் குட்டி பூர்ஷுவா வட்டாரங்களின் குறுகிய நலவுரிமைகளைப் பிரதிபலிப்பதாக மட்டுமே இருந்தது. அந்த நிலை மாறி அப்பத்திரிகை ஒரு தீவிரமான போர்க்குணம் மிக்க புரட்சிகரமான பத்திரிகையாக மாற்றப்பட்டது. பாட்டாளி வர்க்கக் கருத்தோட்டத்திற்கு குரல் கொடுத்தது. இதன் காரணமாய் மார்க்ஸிற்கும் அவருடைய நெருங்கிய தோழர்களுக்கும் 1859 ஜூன் மாத வாக்கில் அப்பத்திரிகையுடன் மிகவும் நெருக்கமான உறவு வைத்துக் கொள்ள சாத்தியப்பட்டது. ஜூன் 11 ஆம் தேதி வெளியிடப்பட்ட 6-வது இதழில் பத்திரிகை ஆசிரியர்களால், மார்க்ஸ், எங்கல்ஸ், பிரிலிகிராத், உல்ஃப் ஆகியோர் பத்திரிகையில் பணியாற்றுகிறார்கள் என்னும் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவந்தது.

ஜூலை ஆரம்பத்தில் மார்க்ஸ் அநேகமாக அந்தப் பத்திரிகையின் ஆசிரியராகவும் நிர்வாகியாகவும் ஆகிவிட்டார். பத்திரிகையும் பாட்டாளி வர்க்கப் புரட்சியாளர்களின் கருவியாகி விட்டது. டாஸ் வோல்க் பத்திரிகையின் பத்திகளில் மார்க்ஸும் எங்கல்ஸும் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர தத்துவம் மற்றும் நடைமுறை உபாயங்கள் பற்றிய பல்வேறு அம்சங்களைப் பற்றி விளக்கி எழுதினார்கள். அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சன ஆய்வுக்கு ஒரு பங்களிப்பு புத்தகத்திற்கு மார்க்ஸ் எழுதியிருந்த முன்னுரை பத்திரிகையில் வெளிவந்தது. அத்துடன் எங்கல்ஸின் மதிப்புரையும் வெளியாயிற்று. அது விஞ்ஞானத்திற்கும் நடைமுறை அனுபவத்திற்கும், புரட்சிகரமான இயக்கத்திற்கும் மார்க்ஸால் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் எவ்வளவு மகத்தான முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எடுத்துக் காட்டியது. மார்க்ஸ் வகுத்து வைத்த பொருள்முதல்வாதத் தர்க்கவியல் முறையின் அடிப்படை அம்சங்களை எங்கல்ஸ் விளக்கினார்.

டாஸ் வோல்க் பாட்டாளி வர்க்க மக்கள் திரளின் நலவுரிமைகளைத் தற்காத்து நின்றது. பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டங்களின் செய்திகள் அறிக்கைகளை வெளியிட்டது. இவ்வாறு 1859 ஜூலை இறுதியில் லண்டன் கட்டிடத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தைப் பற்றிய செய்தியை வெளியிட்டு தனது வாசகர்களுக்குத் தகவல் கொடுத்தது. அச்செய்தி ஆங்கிலேயத் தொழிலாளி வர்க்கத்தைச் செயலில் இறங்குவதற்கு உணர்ச்சி ஊட்டித் தட்டி எழுப்புவதற்கு மிகப்பெரிய பங்கை ஆற்றியது.

பத்திரிகையினுடைய பிரதான கடமைகளில் ஒன்று குட்டி பூர்ஷுவா சித்தாந்தத்தை எதிர்த்துப் போரிடுவதாகும் என்று மார்க்ஸ் நம்பிக்கை கொண்டிருந்தார். பத்திரிகையில் பல இதழ்களில் பல போட்டிகளைப் பற்றிய கட்டுரைகள் வெளியிடப்பட்டன. அப்போட்டிகள் பற்றிய கட்டுரைகள் பிஸ்காம்பும் பங்கு கொண்டு மார்க்ஸ் எழுதியவைகளாகும். அக்கட்டுரைகளில் குட்டி பூர்ஷுவா சித்தாந்திகள் மற்றும் அவர்களுடைய கருத்தோட்டங்களில் இருந்த அரசியல் கோட்பாட்டுக் குறைபாடுகள் புற்றாக்குறைகளைப் பற்றி சரியானபடி அவை மீண்டும் எழும்ப முடியாதபடியான விமர்சனங்களைக் கொண்டவைகளாக இருந்தன. அந்தக் குட்டி பூர்ஷுவாக் கருத்துக்களில் குறுகிய தேசிய வாதமும் பண்பற்ற முரட்டுத்தனப் போக்கும் நிறைந்திருந்தன.

இப்பத்திரிகை அப்போது இத்தாலியப் போரைப் பற்றியும் (1859 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆஸ்திரியா-இத்தாலி- பிரான்ஸிற்கிடையில் நடைபெற்ற யுத்தம் அப்போது இத்தாலியப் போர் என்று அழைக்கப்பட்டது) யுத்தத்தின்பால் பாட்டாளி வர்க்கம் அனுசரிக்க வேண்டிய நடைமுறை உபாயங்களைப் பற்றியும், போனபார்ட் தனத்தை அம்பலப்படுத்துவது பற்றியும் இங்கிலாந்து, பிரஷ்யாவின் மற்றும் ரஷ்யாவின் வெளிநாட்டுக் கொள்கை பற்றியும் குறிப்பிடத் தக்கபடி அதிகமான கவனத்தைச் செலுத்தியது.

டாஸ் வோல்க் நீண்டநாள் நிலைத்திருக்கவில்லை. ஆரம்பத்திலிருந்தே பத்திரிகைக்கு அதிகமான பண நெருக்கடி இருந்தது. 1859 ஆகஸ்டில் அப்பண நெருக்கடி சமாளிக்க முடியாத அளவு அதிகரித்தது. பத்திரிகையைத் தொடர்ந்து நடத்துவதற்கான பணம் தயாரிப்பதற்கு மார்க்ஸ் பெரும் அளவில் முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. அதன் கடைசி பதினாறாவது இதழ் 1859 ஆகஸ்டு 20-ல் வெளிவந்தது. மிகவும் குறுகிய காலமே டாஸ் வோல்க் இருந்திருந்த போதிலும் அப்பத்திரிகை விஞ்ஞானக் கம்யூனிஸக் கருத்துக்களைப் பரப்புவதிலும் பாட்டாளி வர்க்கக் கட்சியின் உபாயங்கள் பற்றிய கோட்பாடுகளைப் பரப்புவதிலும் கணிசமான அளவில் பங்காற்றியது.

இத்தாலியின் ஒருமைப்பாட்டிற்கு புரட்சிகரமான பாதைக்காக

1859 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இத்தாலி ஒரு புரட்சிகரமான வெடிப்பின் விளிம்பில் இருந்தது. நாட்டை ஒற்றுமைப்படுத்த வேண்டியதன் அவசியமும், வடபகுதியை (லம்பார்டி சமவெளி வெனிஸ் பகுதி) ஆஸ்திரிய ஆட்சியிலிருந்து விடுவிக்க வேண்டிய அவசியமும் மிகவும் வேகமாக தீவிரமாக முன்னுக்கு வந்தது. இத்தாலியப் பெரும் பூர்ஷுவா வர்க்கமும் மிதவாத மேட்டுக் குடியினரும், "மேலே" யிருந்து, மன்னர் மரபு மூலம் வெகுஜனப் பங்கு இல்லாமல் தேசத்தை ஒற்றுமைப்படுத்தும் நம்பிக்கையில் இருந்தார்கள். இந்தக் கொள்கையின் பிரதான உந்து உணர்வாக இருந்தது ஒரு பெரிய பணக்கார நிலப்பிரபுவான கேவர் பிரபு என்பவராவார். அவர் பீட்மோண்டின் சார்டீனியன் மன்னராட்சியில் பிரதம மந்திரியாக இருந்தார். அவர் பீட்மோண்டும் பிரான்ஸும் சேர்ந்து கூட்டாக ஆஸ்திரியா மீது யுத்தத்தை நடத்துவதன் மூலம் அவருடைய திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று நம்பினார். அதே சமயத்தில் மூன்றாவது நெப்போலியன் ஒரு வெற்றிகரமான "ஸ்தல ரீதியான" ராணுவ நடவடிக்கை இத்தாலிய "விடுதலை" என்னும் போலியான வேண்டுகோள் மூலம், பிரான்சில் ஆட்டங்கண்டு நிற்கும் அவருடைய ஆட்சிக்கு முட்டுக்கொடுக்கவும் இத்தாலியின் செலவில் தான் மேலும் அதிகப் பிரதேசத்தைக் கைப்பற்றிக் கொள்ளவும் உதவும் என்று நம்பிக்கொண்டிருந்தார்.

எனினும் மூன்றாவது நெப்போலியனும் கேவரும் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக, ஆஸ்திரியாவுக்கு எதிராக பிரான்ஸும் பீட்மோண்டும் 1859 ஏப்ரல் இறுதியில் ஆரம்பித்த யுத்தம், இத்தாலியில் ஒரு மிக வலுவான புரட்சிகரமான பேரெழுச்சியில் போய் முடிந்தது. பெருவாரியான மக்களின் அந்தப் பேரெழுச்சி டஸ்கனி, பார்மா, மேடேனா முதலிய பகுதிகளில் எல்லாம் பரவிப் பெருகியது. இந்த ராஜ்யங்களில் இருந்த எதேச்சதிகார ஆட்சி முறைகள் எல்லாம் தூக்கி எறியப்பட்டன. ரோமாக்னா மற்றும் இதர பாப்பால் மாகாணங்களிலும் எழுச்சி பரவியது.

இத்தாலியப் பிரச்சனை ஐரோப்பா முழுவதையும் பாதிக்கக் கூடிய ஒன்று என்று மிகவும் சரியாகவே அதை மார்க்ஸும் எங்கல்ஸும் கருதினார்கள். இத்தாலியில் நடைபெறும் போராட்டம் இதர நாடுகளிலும் உள்ள புரட்சிகரமான இயக்கங்களில் அதன் செல்வாக்கைப் பிரயோகம் செய்யும் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். 1859 ஜனவரியில் யுத்தம் வெடிப்பதற்கு முன்னர்...

மார்க்ஸ் கீழ்க்கண்டவாறு எழுதினார்: "இத்தாலியில் ஒரு வெற்றிகரமான புரட்சி ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் அனைத்தும், தங்களை ஒடுக்கிக்கொண்டிருக்கும் கூட்டத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்கான ஒரு பொதுப் போராட்டத்திற்கு அடையாள அறிகுறிகளாகும்."( * New York Daily Tribune, No. 5541, January 24, 1859.)

இத்தாலியப் பிரச்சனைக்கு ஒரு புரட்சிகரமான முறையில் தீர்வு காண்பதற்கு ஆதரவாக மார்க்ஸும் எங்கல்ஸும் ஒரு உறுதியான நிலை எடுத்தார்கள். 1859 ஜனவரி தொடக்கத்தில் "இத்தாலிய ஒற்றுமைக்காக" என்னும் தலைப்பில் எழுதப்பட்ட ஒரு கட்டுரையில் மார்க்ஸ் தனது உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்: "இத்தாலியர்கள் தங்களுடைய ஒடுக்குமுறையாளர்கள் பால் காட்டும் மிகவும் கொதிப்புமிக்க வெறுப்பு, அவர்களுடைய நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கஷ்ட நஷ்டங்களுடன் இணைந்து ஒரு பொதுவான புரட்சி கொப்பளித்து வெளிவருவதற்கு இடமளிக்கும்."( * New York Daily Tribune, No. 5541, January 24, 1859.) மார்க்ஸ் உண்மையான தேசபக்த சக்திகளுக்கு ஆதரவு கொடுத்தார், அவர்களை "இத்தாலிய தேசியக் கட்சி" என்று அவர் அழைத்தார். பீட்மோண்டினுடைய சாவோய் வமிசாவழியினரின் கீழ் இத்தாலியை ஒன்றுபடுத்துவதற்கான மக்கள் விரோத எதிர்ப்புரட்சி திட்டங்களை அவர் அம்பலப்படுத்தினார். இத்தாலிய ஜனநாயகவாதிகள் நடுத்தர பூர்ஷுவா வர்க்கம், குட்டி பூர்ஷுவா வர்க்கம், விவசாயிகள், முற்போக்கு எண்ணம் கொண்ட அறிவாளிகள், இன்னும் சிறிய அளவிலேயே உள்ள தொழிலாளி வர்க்கம் முதலிய பகுதிகளை யெல்லாம் ஒன்று திரட்டுவதில் வெற்றி பெற்று "மகத்தான தேசியப் புரட்சிக்கான கிளர்ச்சியில் இறங்குவதற்கு முன் கையெடுத்து செயல்படுவார்கள்"( * New York Daily Tribune, No. 5541, January 24, 1859.) என்று மார்க்ஸ் நம்பிக்கை கொண்டிருந்தார். அது ஒன்றுதான் தேசிய விடுதலையைப் பெறவும், உண்மையான ஜனநாயகக் கோட்பாடுகளின் அடிப்படையில் இத்தாலியை ஒன்றுபடுத்தவும், விரிவான மக்கள் பகுதிகளின் நலவுரிமைகளின் அடிப்படையில் - நிலப்பிரபுத்துவத்தின் மிச்சசொச்சங்களைத் துடைத்தெறிதல், மன்னரீக ஆட்சி முறைகளை ஒழித்தல் முதலிய இத்தாலியை அழுத்திக் கொண்டிருக்கும் சமுதாய அரசியல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் உள்ள ஒரே வழியாகும் என்று அவர் நம்பிக்கை கொண்டிருந்தார்.

இத்தாலிய சம்பவங்களைப் பற்றி எழுதப்பட்ட அவருடைய கட்டுரைகளில் மார்க்ஸ் இத்தாலிய மக்களைப் பற்றி மிகவும் உயர்வாகப் பாராட்டி எழுதியுள்ளார். பெரும் பூர்ஷுவா வர்க்கம் மற்றும் பிரபுக்களுடைய கூட்டணியின் எதிர்ப்புரட்சி, போனபார்ட்டிஸ்ட் ஆதரவு நடவடிக்கைகளை மூடமாக்குவதற்கு இத்தாலிய மக்கள் சக்தி படைத்தவர்கள் என்னும் நம்பிக்கையை வெளிப்படுத்தினார். இத்தாலிய ஜனநாயகவாதிகளின் தலைவர் மாஜினி இத்தாலி சம்பந்தமாக மூன்றாவது நெப்போலியனுடைய எதிர்ப்புரட்சித் திட்டங்களை அம்பலப்படுத்தியதை மார்க்ஸ் புகழ்ந்தார், மாஜினி "தார்மீகத் துணிச்சலுடனும் தேசபக்த விசுவாசத்துடனும் மிகவும் வியக்கத்தக்க முறையில் காரியங்களை நிறைவேற்றினார்"( New York Daily Tribune, No. 5665, June 17, 1859.) என்று மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

மார்க்ஸ் தன்னுடைய பங்காக இத்தாலியில் மூன்றாவது நெப்போலியனுடைய கொள்கையின் உண்மையான தன்மையை எடுத்துக்காட்டுவதற்கு தன்னால் ஆன மட்டும் செய்தார். ராஜதந்திர வழிகளிலும் ராணுவ வழிகளிலும் யுத்தத்திற்கான தயாரிப்புகள் செய்யப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் எழுதப்பட்ட பல கட்டுரைகளில், "ஐரோப்பாவில் யுத்த வாய்ப்பு", "லூயி நெப்போலியனுடைய நிலை", "பிரான்ஸில் யுத்த வாய்ப்பு" முதலிய கட்டுரைகளில் இத்தாலிய விவகாரங்களில் நெப்போலியனுடைய தலையீடானது அந்த நாட்டில் ஒரு புரட்சியை வெடிக்கவிடாமல் தடுக்கவும் எதிர்ப்புரட்சி ஆட்சிகளின் கீழ் இத்தாலியை சின்னாபின்னமாகவே வைத்துக் கொண்டிருக்கவும், அத்துடன் பிரான்ஸில் தனது சொந்த நிலையை பலப்படுத்திக் கொள்ளவும் உள்ள உணர்வு வேகத்தின் ஆசையினால்தான் என்பதை மார்க்ஸ் எடுத்துக்காட்டினார். "இரண்டாவது சாம்ராஜ்யத்தின் போலிப் பெருமைகள் வெகுவேகமாக மறைந்து கொண்டிருந்தன. அருவருப்பு மிக்க அந்த வஞ்சக உருவத்தைப் புதிதாக சமாதி கட்டுவதற்கு ஏராளமான ரத்தம் தேவைப்பட்டது"( New York Daily Tribune, No. 5547, January 31, 1859.) என்று அவர் எழுதினார். இத்தாலியப் போர் தொடங்கிய நேரத்திலேயே இந்த உண்மை தெளிவாக வெளியே வந்துவிட்டது.

புரட்சிகர ஜனநாயக சக்திகள் இந்த நிலைமையை நன்கு பயன்படுத்தி மக்களை செயலுக்குத் தூண்டி அதன் மூலம் வமிசாவழி அதிகாரச் சண்டையை புரட்சிப் போராக மாற்றக்கூடும் என்றும் மார்க்ஸ் நம்பிக்கை கொண்டிருந்தார்.

போர் முடிந்து 1859 ஜூலை 11 ஆம் தேதி வில்லாபிராங்காவில் தற்காலிகமான சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. இந்தப் போரின் பலன்களைப்பற்றி மார்க்ஸ், "இத்தாலிக்கு என்ன லாபம் கிடைத்தது", "சமாதானம்", "வில்லாபிராங்கா சமாதான ஒப்பந்தம்" முதலிய கட்டுரைகளில் அலசி ஆராய்ந்து எழுதினார். மூன்றாவது நெப்போலியன் அவசர அவசரமாகவே சமாதான உடன்படிக்கையை செய்துகொண்டார் என்றும் காரணம் அவர்கள் முன் கையெடுத்துப் போரைத் துவக்கியிருந்த போதிலும் "அப்போர் திசைமாறி ஒரு புரட்சிப் போராக ஆகும் நிலை வந்துகொண்டிருந்தது"(* New York Daily Tribune, No. 5698, July 28, 1859) என்றும் மார்க்ஸ் கூறினார். ஆனால் வில்லாபிராங்கா சமாதான ஒப்பந்தம் லூயி நெப்போலியனின் உள்நோக்கத்தைத் தெளிவாகக் குறிப்பாக வெளிப்படுத்திவிட்டது. ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களைக் காப்பாற்றப் போவதாகக் கூறிக் கொண்டிருந்தது வெறும் மூடுதிரை என்பது தெளிவாகி விட்டது. இத்தாலியை விடுவிப்பது, ஒன்றுபடுத்துவது என்று அவர்கள் கூறியதெல்லாம் வெறும் ஓலமே தவிர வேறில்லை. இந்த சமாதான ஒப்பந்த ஷரத்துக்களானது இத்தாலியர்களுக்கு எவ்வளவு அவமானகரமானது என்பதை மார்க்ஸ் வலியுறுத்திக் கூறினார். முதலில் லம்பார்டி பிரான்ஸ் கையில் ஒப்படைக்கப்பட்டது. அது பின்னர் பிரெஞ்சுப் பரிசுப்பொருளாகத் திரும்பவும் சாவோய் வம்சா வழியினருக்கு கொடுக்கப்பட்டது."( * New York Daily Tribune, No. 5704, August 4, 1859) இதற்கு நஷ்ட ஈடாக நெப்போலியன் சாவோய் நகரத்தையும் நைஸ் நகரத்தையும் வேண்டும் என்றார். வெனிஸ் நகரம் ஆஸ்திரியாவின் ஆட்சியின்கீழ், தொடர்ந்து இருந்தது. (1866 ஆம் ஆண்டுவரை) மார்க்ஸ் கீழ்க்கண்டவாறு கூறினார்: "இனி லூயி நெப்போலியன் தன் மீது பற்றார்வமும் உணர்ச்சிப்பகட்டும் மிக்கவர்களிடம் கூட தான் சுதந்திரத்திற்காகப் போராடி சாதிப்பவர் என்று கருதும்படி ஏமாற்ற முடியாது, அந்தக் காலம் போய்விட்டது."( * New York Daily Tribune, No. 5698, July 28, 1859)

கரிபால்டி இயக்கம்

வில்லா பிராங்கா சமாதான ஒப்பந்தத்தின் உடனடி விளைவுகளைப் பொறுத்து மார்க்ஸ் 1859 ஜூலையில் கீழ்க்கண்டவாறு எழுதினார்: "எனினும், அநேகமாக ஒரு இத்தாலியப் புரட்சி, அந்த தீபகற்பம் முழுவதினுடைய அம்சங்களை மாற்றுவதற்காகத் தலையிடக்கூடும். மாஜினியையும் குடியரசுக்காரர்களையும் மீண்டும் அரங்கத்திற்கு கொண்டுவரக்கூடும்."( New York Daily Tribune, No. 5704, August 4, 1859..) பத்து மாதங்களுக்குள்ளாகவே அவர் கூறியது சரியென நிரூபிக்கப்பட்டது. 1860 ஏப்ரலில் சிசிலியில் ஒரு விரிவான மக்கள் எழுச்சி வெடித்தது. அந்த எழுச்சி இத்தாலியின் ஒருமைப்பாட்டை வேண்டியது. கியுசெப்பி கரிபால்டி ஒரு தலைசிறந்த புகழ்மிக்க இத்தாலியைப் புரட்சிவீரர். அவர் இந்தக் கிளர்ச்சிக்காரர்களுடன் வெகுவேகமாகச் சேர்ந்து கொண்டார். 1860 மே மாதம் ஒரு பெரிய தொண்டர்படைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அந்தப் படைக்கு "ஆயிரவர்" என்று புகழ் மிக்க பெயருண்டு. அவரோடு சிசிலியில் இறங்கிற்று. அங்கிருந்து கரிபால்டியின் வெற்றிகரமான படை நேப்பிள்ஸை நோக்கி முன்னேறி அந்நகரத்துக்குள் செப்டம்பர் தொடக்கத்தில் புகுந்தது. அதன்மூலம் தென் இத்தாலி முழுவதையும் நெப்போலிட்டன் போர்போன்களிடமிருந்து (சிசிலியன்களிடமிருந்து) விடுவித்தார்கள். கரிபால்டி பின்னர் ரோமை நோக்கிப் படையெடுக்கத் திட்டமிட்டுத் தயாரிப்பு செய்தார்.

இத்தாலிய நிகழ்ச்சிகளின் வளர்ச்சிப்போக்கை மார்க்ஸும் எங்கல்ஸும் மிகவும் கூர்மையாகக் கவனித்து நெருக்கமாகப் பின்பற்றிச் சென்றனர். கரிபால்டியும் அவருடைய தொண்டர் படையும் நடத்திவந்த வீரம் செறிந்த போராட்டத்திற்கு மிகவும் சூடான ஆதரவை நல்கினர். இந்த உண்மையான மக்களுடைய மிகப் பிரபலமான தலைவரின் புரட்சிகரமான தந்திர உபாயங்களை வெகுவாகப் பாராட்டினர்.

இத்தாலியில் மூன்றாம் நெப்போலியனுடைய சூழ்ச்சித் திட்டங்களுக்கு எதிராக உறுதியாக நின்று போராடுவதற்கு கரிபால்டி தீர்மானம் கொண்டிருந்ததை மார்க்ஸ் பெரிதும் அங்கீகரித்தார். பிரெஞ்சு சக்கரவர்த்தியின்பால் கரிபால்டிக்கேயுள்ள எதிர்மறையான மனப்பான்மையைப் பற்றிப் பகுத்தாய்ந்து மார்க்ஸ் 1860 செப்டம்பர் 15 ஆம் தேதி லாயிலேயருக்குக் கீழ்க்கண்டவாறு எழுதினார்: "மாஜினியைப் போலவே கரிபால்டியும் போனபார்ட்டின் நடவடிக்கைக் கோலத்தைப் பற்றி என்னுடைய கருத்தோட்டத்திற்கு ஒத்திருக்கிறார்."( Marx, Engels, Werke, Bd. 30, S. 564.) கரிபால்டியின் வெற்றிச் சாதனை இத்தாலிய புரட்சிக்கு மிகப்பெரிய வாய்ப்புகளைத் திறந்து விட்டுள்ளது மட்டுமல்லாமல் மூன்றாவது நெப்போலியனுடைய ஐரோப்பியக் கொள்கையின் அடித்தளங்களையும், போனபார்ட்டிஸ்ட் ஆட்சி அதிகாரம் அனைத்தின் அடித்தளங்களையும் ஆட்டங்காண வைத்தது என்று மார்க்ஸ் நம்பிக்கை கொண்டிருந்தார்.

கரிபால்டியின் புரட்சிகரமான நடவடிக்கைகளுக்குக் கடுமையான எதிர்ப்பைச் செய்துகொண்டிருந்த பீட்மோண்ட்டின் ஆளும் வட்டாரங்களின் எதிர்ப்புரட்சிக் கொள்கையை மார்க்ஸ் அம்பலப்படுத்தினார். சார்டீனியன் ராஜ்ய சர்க்கார் லூயி நெப்போலியனுடன் கலந்து ஏற்பாடுகள் செய்து பீட்மோண்டித் துருப்புகள் மூலம், பாப்பால் பகுதி மீது படையெடுத்து கரிபால்டியின் ரோமை நோக்கி அணிவகுத்துச் செல்லும் திட்டத்தைக் குலைக்க வேண்டுமென்று நடுத்துக் கொண்டிருந்த நடவடிக்கைகளைக் கேள்விப்பட்டு மார்க்ஸ் மிகவும் கவலை கொண்டார். மார்க்ஸ் எழுதினார்: "தேவர் போன நாட்டின் நேரடியான கைக்கூலியாகும்".(1. Marx, Engels, Werke, Bd. 10, S. 560.)

இத்தகைய மாபெரும் வெற்றிகள் அனைத்தும் கரிபால்டிக்குக் கிடைத்திருந்த போதிலும் அவர் புரட்சிப் போராட்டத்தை அதன் முடிவுவரை எடுத்துச் செல்லத் தவறிவிட்டார். மாஜினியும் இதர ஜனநாயகவாதிகளும் வலியுறுத்திய போதிலும் அவர் நேபிள்ஸில் ஒரு ஜனநாயக குடியரசைப் பிரகடனம் செய்யத் துணியவில்லை. அதைத் தொடர்ந்து நடத்தி அந்தப் பதாகையின் கீழ் இத்தாலி முழுவதையும் ஒன்றுபடுத்துவதற்குப் போராடத் துணியவில்லை. 1860 அக்டோபரில் அவர் ரோமை நோக்கிப் படையை அணிவகுத்துச் செல்வதைக் கைவிட்டுவிட்டார். பீட்மாண்டியினுடைய துருப்புகளை நேபிள்ஸிற் குள்ளே நுழைவதை அனுமதித்தார். அவருடைய அதிகாரத்தை விட்டுக் கொடுத்துவிட்டார்; அதன் மூலம் அவர் அரசியலில் தொலைநோக்கின்றி இருந்ததையும் உறுதியற்று இருந்ததையும் வெளிக்காட்டி விட்டார். அது அவருக்கு இயல்பாக அமைந்திருந்த குணக்குறையாக இருந்தது. அவருடைய மிகப் பெரிய கவலையாக இருந்த விஷயம் இத்தாலி முழுவதையும் ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்பதாகும். ஆனால் அத்தகைய ஒற்றுமை எந்த வடிவத்தில் இருக்க வேண்டும் என்னும் விஷயத்திற்கு அவர் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதனால் அவர் ஒரு குடியரசுவாதியாகவும் ஜனநாயகவாதியாகவும் இருந்த போதிலும் ஒரு சட்டத்திற்குட்பட்ட மன்னராட்சியின் கீழ் நாட்டை ஒன்றுபடுத்துவதை அவர் ஆட்ஷேபிக்க வில்லை. இவ்வாறாக கரிபால்டி என்னும் அரசியல்வாதி மார்க்ஸ், ஏங்கல்ஸினுடைய நம்பிக்கைக்கு நேர் மாறாக கரிபால்டி என்னும் புரட்சிகர தளபதியிலிருந்து அந்தஸ்தில் பெயரளவில் மிகவும் குறைவாகவே காணப்பட்டார்.

1860 அக்டோபர் இறுதியில் தெற்கு இத்தாலியில் நடைபெற்ற குடிமக்களின் அனைவரின் கருத்தறியும் வாக்கில் அவர்கள் பீட்மாண்ட் மன்னருடைய ராஜ்யத்துடன் இணைவதற்கு ஆதரவு தெரிவித்தார்கள். அந்த மன்னரரசு, இத்தாலிய மக்கள் கரிபால்டியின் தலைமையின்கீழ் மிகவும் கஷ்டப்பட்டு வென்றெடுத்த வெற்றியின் பலன்களை பெல்லாங் சார்லோவ் மன்னர் பரம்பரையினரிடம் ஒப்படைத்து விட்டது. மிதவாத பிரபுக்களும் மேட்டுக் குடியினரும், பெரிய பூர்ஷ்வாக்களும் கொண்ட கூட்டு இதை ஆதரித்தது.

ஜெர்மனியின் ஒற்றுமைக்கான போராட்டத்தில் நடைமுறை உபாயங்கள்

இத்தாலியப் போர் பிரஷ்யாவிலும் ஜெர்மன் கூட்டாட்சி சம்மேளனத்தில் உள்ள இதர ராஜ்யங்களிலும் ஒரு பெரிய தேசிய எழுச்சியைக் கொண்டு வந்தது. ஜெர்மனியின் பொதுமக்கள் வட்டாரங்கள் மூன்றாவது நெப்போலியன் ஆஸ்திரியாவைத் தாக்கியது பற்றி இந்த நடவடிக்கை அடுத்தாற்போல் ரைன் நதியின் இடது பக்கக் கரைப்பகுதியிலும் தன்னுடைய பிரதேச விஸ்தரிப்பு ஆதிக்கத்தைக் கொண்டு வருவதற்கு முன்னோடியானதாகும் என்று மிகவும் சரியாகவே கருதினர். பத்திரிகைகள், கூட்டங்கள், கிளப்களிலும் இந்தத் திட்டங்களுக்கு எதிராக எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டு மென்று கோரிக்கைகளும் குரல்களும் எழுந்தன. 1859-ல் ஏற்பட்ட தேசியப் பேரெழுச்சியும் ஜெர்மனியில் இருந்த எண்ணற்ற பல குறுநில அரசுகளும் ஒன்றுசேர்க்கப்பட்டு ஒரே மொத்த அரசாக ஒற்றுமைப் படுத்த வேண்டும் என்னும் பிரச்சனையை மீண்டும் எழுப்பியது.

மார்க்ஸும் ஏங்கல்ஸும் இந்தப் பிரச்சனையின் மீது பாட்டாளி வர்க்க உபாய முறைகளை வகுத்தார்கள். இத்தாலிய மோதலில் பாட்டாளி வர்க்கப் புரட்சியாளர்கள் எடுத்துக் கைக்கொண்ட உபாய நிலையுடன் மிகவும் நெருக்கமாக இணைத்தார்கள். அவர்களுடைய தெளிவான வேறுபட்ட கருத்து என்னவென்றால் போனபார்ட்டிஸம் ஐரோப்பாவில் இருந்த பலவேறு புரட்சிகர இயக்கங்களையும் தேசிய இயக்கங்களையும் நெரித்துக் கொண்டிருந்த போனபார்ட்டிஸம்தான் ஜெர்மனியின் ஒற்றுமைக்கு மிகப் பெரிய தடையாக இருக்கிறது என்பதாகும். போனபார்ட்டிஸம் பிரான்ஸை முறியடிப்பதானது ஒரு ஐரோப்பிய புரட்சிக்கு ஆக முக்கியமான முன் தேவையாகும் என்று மார்க்ஸும் ஏங்கல்ஸும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அதன் காரணமாய், பிரஷ்யாவும், இதர ஜெர்மானிய அரசுகளும் ஆஸ்திரியாவின் பக்கமாகச் சேர்ந்து இத்தாலியப் போரில் கலந்து கொண்டிருக்க வேண்டிய அவசியத்தை வற்புறுத்தினார்கள். அவர்களுடைய இந்த உபாயங்கள் எந்த வகையிலும் ஆஸ்திரிய சாம்ராஜ்யத்திலுள்ள பிற்போக்கான ஆட்சியாளர்களையோ அல்லது இத்தாலியில் அவர்களுடைய ஆட்சியையோ ஆதரிப்பதாகப் பொருள்படவில்லை. அவர்கள் தொடர்ந்து ஆஸ்திரியா இத்தாலிய மக்களையும் இதர மக்களையும் அடக்கி ஒடுக்கி வருவதைக் கண்டித்துக்கொண்டு வந்திருக்கிறார்கள். "பிரஷ்யாவில் போர் வாய்ப்புகள்" என்னும் தனது கட்டுரையில் மார்க்ஸ் கீழ்க்கண்டவாறு எழுதினார்: "அவர்கள் (ஜெர்மன் மக்கள்-ஆ-ர்) தீர்மானமாகவே இத்தாலி மக்களுடன் சேர்ந்து ஆஸ்திரியாவுக்கு எதிராக நிற்கும்போது போனபார்ட்டிற்கு எதிராக ஆஸ்திரியாவின் பக்கம் நின்று பங்கு கொள்ளாமல் இருக்க முடியாது."¹ இதுதான் அன்றைய காலத்தில் இருந்த உலக அரசியலில் இருந்த மிகவும் சிக்கலான பிரச்சனைகளில் ஒன்றாக இருந்தது. இந்த பிரச்சனைக்கு பாட்டாளி வர்க்க இயக்கம் மற்றும் ஜனநாயக இயக்கத்தின் நலன்களுக்கு உகந்த முறையில் தீர்வு காண்பதற்கு தர்க்கவியல் முறையிலான அணுகுமுறையே சரியானதாகும்.

ஜெர்மானிய அரசுகள் இத்தாலியப் போரில் ஆஸ்திரியாவின் பக்கமாகப் போய் சேர்ந்திருப்பார்களேயானால் அவர்களுடைய சொந்த விருப்பங்கள் எப்படியிருந்திருந்தாலும், மன்னர்களின் வம்சாவளிப் போரை ஒரு புரட்சிகரமான போராக மாற்றுவதற்குச் சாதகமான சூழ்நிலைமைகளை மிகவும் நன்றாக உண்டாக்கியிருக்க முடியும் என்றும் அதன் மூலம் ஆஸ்திரியாவின் ஆட்சியிலிருந்து இத்தாலியின் உண்மையான விடுதலையையும் கொண்டு வந்திருக்க முடியும் என்றும் மார்க்ஸ் நிச்சயமாக நம்பிக்கை கொண்டிருந்தார். ஆஸ்திரியாவும் ஜெர்மன் அரசுகளும் சேர்ந்து கூட்டு நடவடிக்கை எடுத்திருந்தால் பிரான்ஸினுடைய தோல்வியால் ஐரோப்பா முழுவதிலுமே ஒரு புரட்சி வெடிப்பு ஏற்பட்டிருக்கும். அத்தகைய ஒரு புரட்சி ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் அது பிரான்ஸில் போனபார்ட்டிஸ்ட் ஆட்சி முறையைத் தூக்கி எறிவதிலும், அத்துடன் மட்டுமல்லாமல், ஆஸ்திரியாவிலேயே உள்ள பிற்போக்கு ஆட்சியாளர்களைத் தூக்கி எறிவதிலும் மற்றும் பிரஷ்யாவிலும் ஜெர்மன் கூட்டில் இருந்த இதர நாடுகளில் உள்ள பிற்போக்கு ஆட்சியாளர்களைத் தூக்கி எறிவதிலும், புரட்சிகரமான ஜனநாயக வழிமுறைகளில் ஜெர்மனியும் இத்தாலியும் ஒன்றுபடுத்தப் படுவதிலும் போய் முடிந்திருக்கும். இந்தக் கருத்தை விரிவாக விவரித்துக் கூறி மார்க்ஸ் "சூதாட்டமும் கூறுபோடுதலும்" என்னும் தனது கட்டுரையில் இப்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் பிரஷ்யாவும் ஆஸ்திரியாவும் கூட்டுச் சேருமானால் "அதன் பொருள் புரட்சியாகும்"(New York Daily Tribune, No. 5598, March 31, 1859) என்று கண்டறிந்து கூறினார். சம்பவங்கள் இந்த திசையில் வளர்ச்சியடைந்திருக்குமானால் ஜாரிஸ்ட் ரஷ்யா ஜெர்மனிக்கு எதிராக பிரான்ஸ் பக்கம் கட்டாயம் சேர்ந்து போரில் குதிக்க வேண்டியதேற்பட்டிருக்கும். அது புரட்சிகர நெருக்கடியை மேலும் துரிதப்படுத்தியிருக்கும், தீவிரப்படுத்தியிருக்கும். ஐரோப்பியப் புரட்சியை மேலும் அதிகமான அளவில் சாத்தியப்படுத்தி யிருக்கும்.

"போரைப் பற்றி பிரஷ்யக் கண்ணோட்டம்", "இழப்பீடாக ஒன்றையொன்று கை மாற்றிக் கொள்ளுதல்", "சூதாட்டமும், கூறுபோடுதலும்" போன்ற, மற்றும் இதர பல கட்டுரைகளில் மார்க்ஸ் பிரஷ்ய சர்க்கார் கடைப்பிடித்த கோழைத்தனமான நடுநிலைக் கொள்கை உண்மையில் நேருக்கு நேராக போனபார்ட்டிஸத்திற்கு ஆதரவான கொள்கையாகும் என்று கடுமையாக கண்டித்தார். பிரஷ்ய சர்க்கார் மூன்றாவது நெப்போலியனுக்கு எதிராக வருவதற்கு மறுத்ததானது அதற்கு ஒரு புரட்சிகரமான வெடிப்பு ஏற்பட்டு விடுமோ என்னும் பயம், ஆஸ்திரியாவின் பலவீனத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பிரஷ்யாவின் கீழ் ஜெர்மனி முழுவதையும் ஒரே வமிசாவளியின் கீழ் கொண்டு வரவேண்டும் என்னும் ஆசை, "ஜெர்மனியின் தலைமை ஸ்தானத்திற்கு வருவதற்கு அது வரவு வைத்துக் கொள்வதற்கான கணக்குச் சீட்டு என்னும் தவறான கணிப்பின் போலியான நடிப்பு"(¹ 1. Marx, Engels, Werke, Bd. 13, S. 455.) ஆகியவைகளிலிருந்து எழுந்தவைகளாகும் என்று மார்க்ஸ் எடுத்துக் காட்டினார். அவருடைய தலைசிறந்த மிகத் தெளிவான கட்டுரை "1859 ஆம் ஆண்டில் எர்பார்ட்டிஸம்" நேரடியாகவே ஜெர்மனிக்கு முன்னால் வரலாறு முன் வைத்துள்ள மாற்றத்திட்டத்தை எடுத்துக் கூறுகிறது: அவசரக் கடமைகள் - தேசம் ஒற்றுமைப்படுத்தப்பட வேண்டியதும் இதர மாற்றங்களும் - ஒன்று புரட்சிகரமான வழியில் நிறைவேற்றப்பட வேண்டும் அல்லது மேலேயிருந்து ஆளும் கூட்டங்கள் தங்களுடைய நலவுரிமைகளுக்குகந்த வழிமுறைகளில் அவர்களுடைய சாதனங்கள் மூலம் நடத்திக் கொள்வார்கள். "பிற்போக்காளர்களின் கையில் இந்தப் புரட்சிகரமான வேலைத்திட்டம் அதற்குகந்த ஈடான புரட்சிகரமான அபிலாசைகள் வெறும் நையாண்டித் தாக்குதலாக ஆகிறது"(¹ 1. Marx, Engels, Werke, Bd. 13, S. 414.) என்று மார்க்ஸ் எச்சரிக்கை செய்தார்.

பத்திரிகைகளுக்கான தன்னுடைய கட்டுரைகளில் இத்தாலியில் போர் முடிந்து விட்டது என்றால் அதனுடைய பொருள் ஐரோப்பாவில் புரட்சி ஊரப் போடப்பட்டுவிட்டது என்பதல்ல என்று வலியுறுத்திக் கூறியுள்ளார். உண்மையில் ஜெர்மனியில் ஏற்பட்டிருந்த தேசிய எழுச்சி வில்லாபிரான்கா சமாதான உடன்படிக்கை முடிவடைந்த பிறகும் கூட தொடர்ந்து முன் சென்று கொண்டிருந்தது. மாகாண சட்டமன்றத்தின் கீழ்சபையில் ராணுவத்தைப் புனரமைக்கவும், ராணுவச் செலவுக்கு அதிக நிதி ஒதுக்கவும் கொண்டுவரப்பட்ட சர்க்கார் மசோதாவுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதை ஒட்டி பிரஷ்யாவில் 1860-ல் எழுந்த அரசியல் சட்ட மோதல் ஜெர்மனியின் ஒற்றுமைக்கான இயக்கத்திற்கு ஒரு புதிய ஊக்க சக்தியைக் கொடுத்தது. ஜெர்மனியில் ஒரு புரட்சிகரமான நிலைமை வளர்ச்சியடையத் தொடங்கியது. "பெர்லின் நகரில் பொதுமக்களின் உணர்வு" என்னும் கட்டுரையை மார்க்ஸ் 1860 ஏப்ரலில் எழுதினார், அதில் அவர் புரட்சிகரமான பொங்கி எழுந்து வரும் கிளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்து வருவதைக் குறிப்பிட்டார்.

1862 ஆம் ஆண்டில் இந்த மோதல் ஒன்றுசேர்ந்து சங்கமமாகும் கட்டம். அப்போது மார்க்ஸும் ஏங்கல்ஸும் பரிமாறிக் கொண்ட கடிதங்கள், பிரஷ்யாவில் நிலைமை மேலும் தீவிரமாக மோச மடைந்திருந்தன என்று அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பதையும் நெருக்கடியின் விளைவாக ஒரு புரட்சி ஏற்படுவது சாத்தியம் என்பதையும் எடுத்துக் காட்டுகின்றன. ஆனால் 1848-ஐப் போலவே மிதவாத எதிர்க்கட்சியினர் நிலப்பிரபுத்துவ ஜங்கர் சர்க்காரிடம் துரோகத்தனமான முறையில் அடிப்பட்டு தனது கோழைத்தனத்தை வெளிப்படுத்தக்கூடும் என்றும் பெரும்பாலும் அவர்கள் பயந்தனர். உண்மையில் பிரஷ்யன் மிதவாதிகள் வெறும் வெத்துவேட்டான எதிர் அறிக்கைகள் விடுவதற்கப்பால் மேல் ஒன்றும் செய்யவில்லை. அதற்குப் பதில் பிற்போக்கு சக்திகள் தங்கள் நிலைகளை வலுப்படுத்தி உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அனுமதித்தனர். முதலாவது வில்ஹெல்ம் அரசன் 1861-ல் பிரஷ்யாவின் மன்னனானான். அவன் 1862 செப்டம்பரில் ஒட்டோவான் பிஸ்மார்க் பிரபுவை தன்னுடைய பிரதம மந்திரியாக நியமனம் செய்து கொண்டான். அவர் ஒரு போமரேனியன் நிலப்பிரபு (குறுநில மன்னர்). அவர் மாகாண சட்ட மன்றத்தின் சம்மதம் இன்றி ராணுவ சீர்திருத்தத்தை நிறைவேற்றினார். அந்த சட்ட மன்றத்தில் இருந்த மிதவாதப் பெரும்பான்மை பூராக்ரலிஸ்டுகள் வெறும் வாய்ச்சொல் அறிக்கைகள், கண்டனங்களை மட்டும்தான் செய்து கொண்டிருந்தனர். உண்மையில் பிஸ்மார்க்கை மேலேயிருந்து அவரே குறிப்பிட்டதைப் போல "ரத்தத்தையும் இரும்புக்கரத்தையும்" கொண்டு ஜெர்மனியை ஒற்றுமைப்படுத்தத் தொடங்கியதை அனுமதித்தனர்.

லாஸ்ஸலேயுடன் வேறுபாடுகள்

பாட்டாளி வர்க்க இயக்கங்களிலும் ஜனநாயக இயக்கங்களிலும் ஏற்பட்ட எழுச்சியின்போது மார்க்ஸிற்கும் லாஸ்ஸலேக்கும் இடையில் இருந்த வேறுபாடுகள் மிகவும் தெளிவாக வெளிப்பட்டன. பல ஆண்டுகளாக மார்க்ஸ் தொடர்ந்து முயற்சி செய்து லாஸ்ஸலேயை புரட்சிகரமான தத்துவத்தை ஒப்புக் கொள்ளச் செய்வதற்கும் பாட்டாளி வர்க்கத்திற்காக வேலை செய்வதற்கும் தூண்டிப் பார்த்தார். ஏங்கல்ஸிற்கும் இன்னும் லாஸ்ஸலேக்கும் கூட மார்க்ஸ் எழுதிய கடிதங்களில் திரும்பத்திரும்ப லாஸ்ஸலேயின் தத்துவார்த்தக் கருத்தோட்டங்களை விமர்சனம் செய்தார். லாஸ்ஸலே ஒரு எண்ண முதல்வாத ஹெகலிஸ நிலையைக் கைக்கொள்கிறார் என்பதை மார்க்ஸ் குறிப்பாகக் கண்டுணர்ந்தார். லாஸ்ஸலேயின் தத்துவஞான எழுத்துரைகள் மேலெழுந்த வாரியாகவும் கதம்பக் கருத்துக்கள் நிறைந்ததாகவும் இருந்தன என்றும் அவரே கூட வெறும் வேடம் போடுபவராக இருந்தார் என்பதையும் மார்க்ஸ் வலியுறுத்திக் கூறினார்.

1858 பிப்ரவரி 1-ல் ஏங்கல்ஸிற்கு எழுதிய ஒரு கடிதத்தில் லாஸ்ஸலேயின் புத்தகமான "ஹெராக்லிட்டஸ்ஸின் தத்துவ ஞானம், எபிஸஸின் தெளிவற்ற வாதம்" என்பதைக் கடுமையாக விமர்சித்துத் தொகுத்து ஆராய்ந்தார். அவர் எழுதினார்: "தெளிவற்ற ஹெராக்லிட்டஸ்ஸைப் பற்றி ஒளிமிக்க லாஸ்ஸலே எழுதியதானது, சாரமற்ற சக்கைக் குப்பையின் அடிமட்டத்திலே அமர்ந்திருக்கிறது. பல உருவங்கள் ஒவ்வொன்றையும் வைத்து ஹெராக்லிட்டஸ், ஒப்புதல், மறுத்தல் ஆகியவற்றின் ஒற்றுமையைப் பற்றி அவரே ஆராய்ந்து கூறியுள்ளதை வைத்து லாஸ்ஸலே அதைப் படியாக எடுத்துக் கூறி அதை வைத்து அவர் நமக்கு போதிக்க முயற்சிக்கிறார் - எப்போதும் முழு அளவில் செய்து பார்க்கிறார் - ஓரளவு ஹெகலுடைய தர்க்கத்திலும் உள்ள மேற்கோள்களை எடுத்துக் கொள்கிறார். இந்த வளர்ச்சிப் போக்கிற்கு அது எவ்வித பலனையும் அளிக்கவில்லை. அவர் ஒரு பள்ளி பாலகனைப்போல அதைச் செய்கிறார். அதுவும் தனது "சாராம்சம்", "தோற்றம்", "தர்க்கவியல் வளர்ச்சிப் போக்கு" ஆகியவற்றை தானாகவே தட்டியெடுத்து நிரூபிக்க வேண்டிய பள்ளிப் பையனைப் போல அவர் அதைச் செய்கிறார்."( Marx and Engels, Selected Correspondence, p. 101.)

மார்க்ஸ் தொடர்ந்து லாஸ்ஸலேயுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தார். தன்னுடைய விமர்சனத்தை ஏற்றுக் கொண்டு லாஸ்ஸலே அவருடைய தவறான கருத்துக்களைத் திருத்திக் கொள்வார் என்று மார்க்ஸ் நம்பிக்கை கொண்டு அவருடன் தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்தார். எனினும் லாஸ்ஸலே தொடர்ந்து குட்டி பூர்ஷ்வா ஜனநாயகவாதியாகவே இருந்தார். இருப்பினும் மார்க்ஸினுடைய கருத்தோட்டங்களை தான் ஆதரிப்பதாக லாஸ்ஸலே அறிவித்தார். அப்போது லாஸ்ஸலே லேசாக சோஷலிஸக் கருத்தோட்டங்களின் பக்கம் சாய்ந்திருந்தார். ஆயினும் அது விஞ்ஞான கம்யூனிஸத்திலிருந்து வெகு தொலைவில் நின்றது. அவருடைய சோஷலிஸ சார்பு பல்வேறு கற்பனா சோஷலிஸ்டு தத்துவக் கொள்கைகளிலிருந்து குறிப்பாக குட்டி பூர்ஷ்வா சோஷலிஸ்டுகளுடைய கருத்துக்களிலிருந்து தோன்றியவை. 1850 ஆம் ஆண்டுகளின் இறுதியில் அன்றாட அரசியல் பிரச்சனைகளில் அணுகும் முறையிலும் கண்ணோட்டத்திலும் மிகவும் தெளிவான வேறுபாடுகள் ஏற்பட்டன. பல்வேறு பாடுகள் ஒரு பக்கம் மார்க்ஸ், ஏங்கல்ஸ் மறுபக்கம் லாஸ்ஸலே ஆகியவர்களுக்கிடையில் பல தத்துவார்த்தப் பிரச்சனைகள் பற்றியும் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்காரர்களின் உபாயங்கள் பற்றியும் அடிப்படையான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.

லாஸ்ஸலே ஒரு வரலாற்று நாடகம் எழுதியிருந்தார். அதன் பெயர் பிரான்ஜ் வான் சிக்கின்ஜென். அது ஜெர்மனியில் விவசாயிகள் போராட்டத்திற்கு முன்பாக 1522-23 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பட்டம் பெற்ற படை வீரர்களின் எழுச்சி பற்றியது. அந்த நாடகத்தைப் பற்றி 1859-ல் மார்க்ஸும் ஏங்கல்ஸும் மிகவும் நட்புரவான வகையில் ஆனால் மிகவும் விரிவான முறையில் குற்றவிமர்சனம் செய்து மதிப்புரை எழுதியனுப்பியிருந்தார்கள். லாஸ்ஸலேக்கு அவர்கள் எழுதிய கடிதங்களில் (மார்க்ஸினுடைய கடிதம் 1859 ஏப்ரல் 19 ஆம் தேதியிட்டது, ஏங்கல்ஸினுடைய கடிதம் 1859 மே 18 ஆம் தேதியிட்டது) அவர்கள் மார்க்சியக் கலைநயங்களைப் பற்றிய அடிப்படையான முக்கிய கோட்பாடுகளை உருவாக்குகிறார்கள். லாஸ்ஸலேயின் நாடகத்தின் இலக்கிய அம்சங்களை அவர்கள் பகுத்து ஆய்ந்த கருத்துக்கள் யதார்த்த வாதம் பற்றிய பிரச்சனைகளைச் சுற்றிச் சுழன்று நின்றது. இந்த அம்சத்தில் அவர்களுடைய அறிக்கைகள் இலக்கியத்தைப் பற்றிய தத்துவம் வரலாறு பற்றிய அவர்களுடைய கருத்தோட்டங்களுக்கு ஒரு அடித்தளமாக அமைந்தன.

எதார்த்த வாதம் என்பது இலக்கியத்தில் ஒரு போக்கு என்னும் வகையில் கலைத்துறையில் ஒரு வழி முறை என்னும் வகையில் கலைகளின் வளர்ச்சியில் ஆக மேலான சாதனையாகும். மெய் நிலை வழிமுறைகள் மூலம் மிகவும் சிறந்த கச்சிதமான முழுமையான அனைத்து அம்சங்களும் அடங்கிய அடக்கமான மிகத் தெளிவான உண்மை நிலைப் பிரதிபலிப்புகளை கலையின் வடிவத்தில் கொடுப்பது சாத்தியம் என்று கருத்துக் கொண்டிருந்தனர். உண்மை நிலையான உருவகம் என்பது உண்மை நிலையை அப்படியே மறுபதிப்பு எடுப்பதல்ல. ஆனால் உண்மை நிலை தோற்றத்தின் அடி ஆழத்திற்கு அதன் சாராம்சத்திற்குள் ஊடுருவிச் செல்லும் வழிமுறையாகும். கலைத்தன்மையான வரைகளில் பொதுமைப்படுத்துவதாகும். குறிப்பிட்ட சகாப்தத்தின் சிறப்பான முன் மாதிரி வகையான அம்சங்களை முன்கொண்டு வருவதாகும். இதைத்தான் மார்க்ஸும் ஏங்கல்ஸும், ஷேக்ஸ்பியர், செர்வான்டேஸ், கோய்தே, பால்ஜாக், புஷ்கின் போன்ற மாபெரும் எதார்த்தவாதிகளின் படைப்புகளுக்கு மிகப் பெரும் மதிப்பைக் கொடுத்தனர். 1854-ல் எழுதப்பட்ட ஒரு கட்டுரையில் மார்க்ஸ் கூறினார்: "19 ஆம் நூற்றாண்டின் ஆங்கிலேய எதார்த்தவாத எழுத்தாளர்கள் - டிக்கன்ஸ், தாக்கரே, சார்லொட்டி பிரான்தே, எலிஸபெத் காஸ்கெல் - கதை எழுதுவதில் மிகச் சிறந்த வியக்கத்தக்க சகோதரத்துவம் கொண்ட வர்கள்... அவர்களுடைய தலைசிறந்த வர்ணனை மிக்க சொல் ஆற்றல் நிறைந்த பக்கங்கள், பெரிய பெரிய வாழ்நாள் தொழிலாகக் கொண்ட அரசியல்வாதிகள், பிரச்சார எழுத்தாளர்கள், நீதி போதனையாளர்கள் எல்லோரும் சேர்ந்து கூறியுள்ளதைக் காட்டிலும் அதிகமாக அரசியல் மற்றும் சமுதாய உண்மைகளை உலகுக்கு எடுத்துக் கூறியுள்ளன."( New York Daily Tribune, No. 4145, August 1, 1854.)

லாஸ்ஸலேயின் நாடகத்தை சீர்தூக்கிப் பார்த்து நிர்ணயம் செய்வதில் மார்க்ஸினுடைய அளவுகோல் எதார்த்த வாதத்தின் சாராம்சத்தைப் பற்றிய ஒரு மிகத் தெளிவான ஞானத்தைப் பிரதி பலித்தது. அதனுடைய நல்ல அம்சங்களை அவர் குறித்தார். அதாவது அதன் தலைசிறந்த சொல்லமைப்பு, நடிப்பின் உயிரோட்டம் ஆகியவைகளைப் பாராட்டினார். அதே சமயத்தில் அது எவ்வாறு எதார்த்தவாதக் கோட்பாடுகளிலிருந்து விலகிச் சென்றிருக்கிறது. வெறும் சொல்லலங்காரம் எதுகை, மோனை, கதாபாத்திரங்களைப் பற்றி மிகவும் அமிதமான முறையில் அளவுக்கு மீறிய அர்த்தமற்ற அருவமான வர்ணனை ஆகியவைகள் எவ்வளவு தூரம் உண்மை நிலையிலிருந்து விலகிச் சென்றிருக்கிறது என்பதை எடுத்துக் காட்டினார். கதாபாத்திரங்களை "காலத்தின் உணர்வுகளைப் பற்றிக் கூறும் வெறும் பேசும் குழாய்களாக"( Marx and Engels, Selected Correspondence, pp. 116, 117) மாற்றிக் கொண்டதன் மூலம் லாஸ்ஸலே அப்பாத்திரங்களின் நம்பத்தக்க நிலையையும் தனித்தன்மைகளையும் நீக்கிவிடுகிறார். எதார்த்த வாதத்திலிருந்து அந்த நாடகம் விலகிச் சென்றுள்ளதன் மற்றொரு முக்கிய அம்சம் அது ஒரு உண்மையான சமுதாயப் பின்னணியை மக்கள் பின்னணியைக் கொண்டிருக்கவில்லை. லாஸ்ஸலே ஒரு வரலாற்றுச் சூழ்நிலையையும் முன்வைத்து எடுத்துக் கூறத் தவறிவிட்டார்.

இந்த விமர்சனக் குறிப்புகள் எதார்த்தவாதக் கலையின் முக்கியமான கோட்பாடுகளை வெளிப்படுத்தியது. ஒரு நம்பத்தக்க வகையிலான உருவகம் இருக்க வேண்டும் என்றும், எடுத்துக் காட்டி முன்வைக்கப்படும் உண்மை நிலைக் காட்சிக்கு ஒரு ஸ்தூலமான வரலாற்று அணுகுமுறை இருக்க வேண்டும் என்றும் மார்க்ஸும் ஏங்கல்ஸும் வற்புறுத்தினார்கள். கதாபாத்திரங்கள் நம்பத்தக்க முறையில் நாம் ஒப்புக்கொள்ளும் வகையிலான தனியான அம்சங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு கதாபாத்திரம் அதனுடைய வர்க்கச் சூழ்நிலையில் இயல்பு மனப்போக்கு ஆகிய அம்சங்களின் முன் மாதிரிகளைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். ஒரு உண்மையான எதார்த்த வாதப் படைப்பின் ஆசிரியர் வாசகர்களுக்குத் தன்னுடைய கருத்துக்களை அறிவுரை கூடிய பாட போதனைகளின் வடிவத்தில் எடுத்துக் கூறக் கூடாது. ஆனால் ஒரு முழு மூச்சான ரத்த ஓட்டம் மிக்க உயிர் துடிப்பான கதாபாத்திரங்களின் மூலம் எடுத்துக்கூற வேண்டும். வாசகர்களின் எண்ணத்திலும் உள்ளத்திலும் பலவேறு கலைத் தன்மையுடன் கூடிய உணர்ச்சி வெளிப்படுத்தல் மூலம் செயல்பட வேண்டும். லாஸ்ஸலே, மாபெரும் ஜெர்மன் கவிஞரும் நாடக எழுத்தாளருமான ஷில்லரின் எழுத்துரையில் உள்ள பலவீனமான அம்சங்களில் சிலவற்றை மிகவும் மிகைப்படுத்தி தீவிரப்படுத்துகிறார் என்று மார்க்ஸும் ஏங்கல்ஸும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அதாவது மிக அதிகமான உரத்த குரலுடன் கூடிய சொல்லலங்கார முறையை நோக்கிய போக்கை லாஸ்ஸலே மிகையாக்கியிருந்தார். இத்தகைய முறை அவருடைய பாத்திரங்களை பல்வேறு கருத்துக் களைக் கூறுவதற்கான அர்த்தமற்ற அருவமான ஒரே ரீதியான பேச்சுக்களை வெளிப்படுத்துபவர்களாக மாற்றி யுள்ளது. இந்த அம்சத்தில் அவர்கள் ஷில்லரைக் காட்டிலும் ஷேக்ஸ்பியருடைய எதார்த்தவாதத்தை விரும்பி ஏற்றார்கள். ஷில்லருடைய முறைகளை பின்பற்றுவதன் மூலம் ஒரு எதார்த்த வாத எழுத்தாளர் சித்தாந்த ஆழம் மற்றும் உயர்ந்த லட்சியங்கள், உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய உருவகங்களையும் பதைரப்பட்ட கதாபாத்திரங்களையும் உண்டாக்கி முன் வைக்கும் ஷேக்ஸ்பியரின் ஆற்றல் முதலியவைகளை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை புறக்கணித்து விட்டார் லாஸ்ஸலே என்று அவருக்கு மார்க்ஸும் ஏங்கல்ஸும் எடுத்துரைத்தார்கள்.

கலையின் வடிவம் சம்பந்தமாகவும் எழுத்தாளர்களுக்கு ஒரு மிக மேலான தரத்தை மார்க்ஸ் வகுத்தார். அவர் லாஸ்ஸலேக்குக் கூறினார்: "இப்போது நீங்கள் கவிதை நடையில் எழுதியிருக்கிறீர்கள். உங்களுடைய சரஸைச் சீர்களில் இன்னும் கொஞ்சம் அதிகமாக கலைத்தன்மையைச் சேர்த்து மெருகிட்டிருக்கலாம்."( Marx and Engels, Selected Correspondence, p. 116)

லாஸ்ஸலேக்கு எழுதிய கடிதங்களில் மார்க்ஸும் ஏங்கல்ஸும் இலக்கியத்திற்கும் நிகழ்காலக் காட்சியான வாழ்க்கைக்கும் இடையிலுள்ள தொடர்பைப் பற்றி எடுத்துக் கூறியுள்ளார்கள். லாஸ்ஸலே தனது கருத்துக்கு நாடகத்தில் உருவாக்கிக் காட்டப்பட்டிருந்த 16-வது நூற்றாண்டு சம்பவங்களுக்கும் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் இருந்த நிலைமைக்கும் இடையில் ஒப்பீடு கொண்டு வரும் கருத்துக்கு மார்க்ஸ் எந்த வகையிலும் கண்டனம் தெரிவிக்கவில்லை.உண்மையான "பரிதாபகரமான மோதல்... 1848-49 ஆம் ஆண்டின் புரட்சிகரமான கட்சியின் இறுதி முடிவைக் கொண்டு வந்த மோதலைப்பற்றி"( Marx and Engels, Selected Correspondence, p. 116.) குறிப்பாகக் கட்டிக்காட்டுகிறார். அவர் தவறு என்று கருதியது அந்த மோதலைப்பற்றி எண்ணுமுதலாவாத, சரியானதல்லாத வியாக்கியானத்தைப் பற்றியும் அதன் லட்சியங்களை, பெயரளவிலான நித்தியமான அருவமான "புரட்சியின் அவல நிலை"க்குத் தாழ்த்தி எந்தவிதமான ஸ்தூலமான வரலாறு பூர்வமான வர்க்க உள்ளடக்கத்தையும் இல்லாமல் செய்ததையும்தான். மார்க்ஸ், லாஸ்ஸலேயை விமர்சனம் செய்தது அவருடைய நாடகத்தில் அரசியல் போக்கு இருந்தது என்னும் காரணத்தினால் அல்ல, ஆனால் அந்த நாடகம் வரலாற்றில் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலும், பாட்டாளி வர்க்கப் புரட்சியின் கண்ணோட்டத்தின் அடிப்படையிலும் பார்க்கும்போது அது அடிப்படையில் தவறாக இருந்ததுதான் காரணமாகும். மொத்தத்தில் ஒரு அரசியல் போக்கு, ஏதாவது ஒரு அரசியல் கருத்தின் பிரதிபலிப்பு, இந்த அல்லது அந்தக் கண்ணோட்டத்தின் பிரதிபலிப்பு எந்த ஒரு இலக்கியப் படைப்பிற்கும் ஒன்றிணைந்த பகுதியாகிறது என்று மார்க்ஸும் ஏங்கல்ஸும் நம்பிக்கை கொண்டிருந்தனர். இலக்கியத்தை அரசியலுக்கு அப்பால் தனியாக வைக்கும் முயற்சியைப் பற்றியும் "கலை கலைக்காகவே" என்று கூறப்படும் பலவகையான தத்துவங்கள்பாலும் மிகவும் உயர்வான விமர்சனக் கண்ணோட்டத்தை அவர்கள் கொண்டிருந்தனர். இதே காலத்தில் பிரிலிகிராத் கட்சி நலன்களைப் புறக்கணித்ததை மார்க்ஸ் கண்டனம் செய்தார். அத்துடன் பிரிலிகிராத் ஒரு புரட்சிகரமான நிலையிலிருந்து மாறி விட்டதைப் பற்றியும் பூர்ஷ்வா ஜனநாயகவாதிகளுடன் அவருக்கு இருந்த நெருக்கமான இணைப்பு பற்றியும் அதன் காரணமாக அது அவருடைய எழுத்துரைகளில் பாதகமான விளைவுகள் ஏற்படுத்தியதைப் பற்றியும் அவர் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் குறிப்பிட்டுள்ளார்.

மிகச்சிறந்த புத்தகங்கள் என்றால் அவை சரியான நம்பத்தக்க வகையிலான உணர்ச்சிகளைக் கருத்துக்களை வெளியிடுவதாக, மிகவும் விபுலமான கலைத்தன்மையான வடிவத்தில் நிகழ்கால வாழ்க்கையின் வளர்ச்சிப் போக்கிற்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்பதிலும், அவைகள் முற்போக்குக் கருத்துக்களை முன்னறிவிக்க வேண்டும் என்றும் சமுதாயத்தின் முற்போக்கான சக்திகளின் நலவுரிமைகளுக்காக உறுதியாக பாடுபடுவதாக இருக்க வேண்டும் என்பதிலும் மார்க்ஸும் ஏங்கல்ஸும் மிகவும் ஆழ்ந்த உறுதியான மனக்கருத்துக் கொண்டிருந்தனர். இத்தகைய உயர்ந்த பண்பாடுமிக்க லட்சிய உணர்வில்தான் அவர்கள் இலக்கியத்தில் கட்சி உணர்வு பற்றிய கருத்துருவத்தைப் புரிந்து கொண்டிருந்தார்கள். சித்தாந்த உள்ளடக்கம், கலை நயத்தின் வடிவம், இலக்கிய நேர்த்தியமைப்பு ஆகியவைகளின் உயிரிணைப்பான சேர்க்கைதான் உண்மையான எதார்த்தவாதக் கலையின் ஒரு அத்தியாவசியமான குண இயல்பாக இருக்க வேண்டும் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். இந்த அம்சங்களில் லாஸ்ஸலேயின் நாடகம் மிகவும் தெளிவாக குறைபாடு மிக்கதாக இருந்தது.

லாஸ்ஸலேயின் நாடகத்தைப் பற்றி அவர்களுடைய விமர்சன பூர்வமான பகுப்பாய்வு, அதன் இலக்கியச் சிறப்பையும் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டுவதுடன் நின்று கொள்ளவில்லை, அதில் அடிப்படையான அரசியல் கோட்பாடுகளும் ஈடுபட்டிருந்தன. அதிவீரன் சிக்கின்ஜென் தலைமையில் இருந்த எதிர்க்கட்சி பிரபுத்துவத்தை புரட்சிகரமான கருத்துக்களின் சாதகமாக லாஸ்ஸலே உருவகப்படுத்துவதை மார்க்ஸ் வன்மையாகக் கண்டனம் செய்தார். அவர் லாஸ்ஸலேக்குக் கீழ்க்கண்டவாறு எழுதினார்: "நீங்களே குறிப்பிட்ட அளவில் உங்களுடைய பிரான்ஜ் வான் சிக்கின் ஜென்னைப் போலவே அவர் ஹூரன்-அதிவீர எதிர்க்கட்சியினரை மேட்டுக்குடி முன்செரியன் எதிர்க்கட்சியினருக்கு மேலாக உயர்வாக வைத்ததைப்போல ராஜதந்திரத் தவறில் கீழே விழுகிறீர்கள்!"( Marx and Engels, Selected Correspondence, p. 117, 118.)

உண்மையில் லாஸ்ஸலேயின் தவறுகளுக்கு நல்ல காரணம் இருந்தது. ஜெர்மனியில் விவசாயிகள் போரைப்பற்றிய அவருடைய கருத்தோட்டங்கள் மக்களுடைய குறிப்பாக விவசாயிகளுடைய புரட்சிகரமான ஆற்றல் வாய்ப்புகளைப் பற்றிய அவருடைய குறைவான மதிப்பீட்டிலிருந்து எழுந்து தோன்றியதாகும். விவசாயிகளை மொத்தத்தில் ஒரு பிற்போக்கான வர்க்கமாகவே அவர் கருதினார். ஜெர்மனியின் தேசிய ஒற்றுமையைக் கொண்டுவருவதற்கும், தேசத்தினுடைய முக்கியமான சமுதாய அரசியல் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் பலவேறு வழிகளில் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலத்தில் லாஸ்ஸலே பூர்ஷ்வா - நிலப்பிரபுத்துவக் கூட்டின் பக்கம் ஆதரவு தெரிவிக்கும் போக்கில் இருந்தார். லாஸ்ஸலேயின் நாடகத்தின் அரசியல் போக்குகளை அலசி ஆராய்ந்த காலத்தில் மார்க்ஸ் உண்மையில் அவருடன் கடந்தகாலப் புரட்சிகர சம்பவங்களில் மட்டுமல்ல ஜெர்மனியின் எதிர்கால வளர்ச்சியிலும் இயங்கும் உந்துசக்திகளைப் பற்றியும் கூட ஒரு விவாதத்தை நடத்திக் கொண்டிருந்தார்.

மார்க்ஸும் ஏங்கல்ஸும் தங்களுடைய கருத்தோட்டத்தின் பக்கம் லாஸ்ஸலேயைத் திருப்பிக்கொண்டு வருவதற்கு செய்த முயற்சியில் வெற்றி பெறவில்லை. அவர்களுடைய விமர்சனக் குறிப்புகளுக்கு பதிலளித்து லாஸ்ஸலே அவர்களுக்கு எழுதும்போது வேறு பல விஷயங்களுடன் விவசாயிகள் போர்கள் "புரட்சிகரமானதல்ல", ஆனால் அவைகள் "கடைசியில் இறுதியாக பிற்போக்கானவைதான்"( F. Lassalle, Nachgelassene Briefe und Schriften. Herausgegeben von Gustav Mayer, Stuttgart-Berlin, 1922, Bd. 3, S. 205.) என்று எழுதினார்.

ஜெர்மனியை ஒன்றுபடுத்துவதற்கான வழிகள் பற்றிய பிரச்சனை மார்க்ஸிற்கும் லாஸ்ஸலேக்கும் இடையில் 1859 ஆம் ஆண்டின் இத்தாலியப் போரைப் பற்றியும் குறிப்பாகக் கூர்மையான வேறுபாடுகளுக்கு இட்டுச் சென்றது. போ நதியும் ரைன் நதியும் என்னும் பிரசுரத்தின் மூலம் மார்க்ஸும் ஏங்கல்ஸும் எத்தகைய கருத்தோட்டத்தைக் கொண்டிருந்தார்கள் என்பதை லாஸ்ஸலே மிகவும் தெளிவாகத் தெரிந்திருந்தார். அக்கருத்துக்களை ஆதரிப்பதற்குப் பதிலாக அவர் அதற்கு எதிரான மனப்பான்மையை அனுசரித்தார். 1859 மே மாதம் அவர் பெர்லினில் ஒரு பிரசுரம் வெளியிட்டார். அதை எழுதியவர் யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. அப்பிரசுரத்தின் பெயர் இத்தாலியப் போரும் பிரஷ்யாவின் கடமைகளும் என்பதாகும். இந்தப் பிரசுரம் பிரஸ்ஸோ பைல் பூர்ஷ்வா வர்க்கத்துடனும் பிரஷ்யன் நிலப்பிரபுக்களுடனும் ஒன்றுபட்டு நின்று அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு அறைகூவல் விட்டது. பிரஷ்யாவைத் தலைமையாகக் கொண்டு ஜெர்மனியை மன்னர் பரம்பரை வழியில் ஒற்றுமைப்படுத்துவதற்கான ஆதரவைத் தெரிவித்தது. 1848-ல் மார்க்ஸ் ஒரு ஜனநாயகக் குடியரசாக நாட்டின் ஒற்றுமைக்கு வேண்டுகோள் விட்டதற்கு நேர்மாறாக லாஸ்ஸலே விரும்பி ஆதரவு கொடுத்தது, பிரஷ்ய மன்னரின் கீழ் இதர ராஜ்யங்களும் சேர்ந்து இணைய வேண்டும் என்பதற்காகவாகும். அவருடைய பிரசுரம் ஜெர்மன் மக்களுக்காகச் சொல்லப்படவில்லை. ஆனால் அது பிரஷ்யன் சர்க்காருக்குத்தான் சொல்லப்பட்டது.

லாஸ்ஸலே பிரஷ்ய சர்க்காரின் நடுநிலைக் கொள்கையை நிலை நிறுத்தி ஆதரவளித்து ஆஸ்திரியாவின் தொல்லைகளைப் பயன்படுத்தி கொண்டு தன்னுடைய ஒற்றுமைப்படுத்தும் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளுமாறு ஆலோசனை கூறினார். இத்தாலியப் பிரச்சனையில் போனபார்ட்டிஸ் வாய்ச்சவடாலை அம்பலப்படுத்துவதற்கு பதிலாக லாஸ்ஸலே, இத்தாலியின் மூன்றாவது நெப்போலியன் "ஒரு மாபெரும் நியாயமான லட்சிய நோக்கத்திற்காக நாகரிகப்படுத்தும் நோக்கத்திற்காக மிக மேலான ஜனநாயக லட்சியத்திற்காக, அதனால் எல்லா மக்களும் விரும்பி ஏற்றுக் கொள்ளும் மகத்தான லட்சியத்திற்காக"( F. Lassalle, Gesammelte Reden und Schriften, Berlin, 1919, Bd. 1, S. 43) வேலைசெய்து கொண்டிருந்தார் என்று வலியுறுத்திக் கூறினார்.

மார்க்ஸும் ஏங்கல்ஸும் லாஸ்ஸலேயின் பிரசுரத்தின்பால் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஜெர்மன் ஒருமைப்பாட்டைப் பற்றிய தங்களுடைய கருத்தோட்டங்களுக்கு எதிராக வெளிப்படையான தாக்குதலே அது என்று நியாயமாகவே கருதினர். 1859 மே 18 ஆம் தேதி மார்க்ஸ் ஏங்கல்ஸிற்குக் கீழ்க்கண்டவாறு எழுதினார்: "லாஸ்ஸலேயின் பிரசுரம் ஒரு மிகப்பெரும் அளவிலான கண்மூடித்தனமான பெரும் பிழையானதாகும்"( Marx, Engels, Werke, Bd. 29, S. 432). லாஸ்ஸலேயினுடைய நிலை, பாட்டாளி வர்க்கப் புரட்சிக்காரர்களுடைய நிலையுடன் எந்தவிதமான பொதுத் தன்மையும் இல்லாதது, எந்த விதத்திலும் அதனுடன் ஒத்துவரடாதது என்று அவரிடம் மார்க்ஸ் கூறினார். இருப்பினும் எப்படியாவது அவருடைய கருத்தோட்டங்களையும் உபாயங்களையும் மாற்றிக் கொள்வதற்காக அவருடன் தொடர்ந்து அணுகி முயற்சிக்கும் நம்பிக்கையில் மார்க்ஸ் லாஸ்ஸலேயுடன் தொடர்ந்து நெருங்கிய தொடர்பு வைத்துக் கொண்டிருந்தார்.

1859-ல் மார்க்ஸிற்கும் லாஸ்ஸலேக்கும் இடையில் இருந்த அடிப்படையான வேறுபாடுகளைப் பற்றி லெனின் கீழ்க்கண்டவாறு விளக்கிக் கூறுகிறார்: "லாஸ்ஸலே தன்னை பிரஷ்யாவின் மற்றும் பிஸ்மார்க்கின் வெற்றிக்குத் தக்கவாறு, இத்தாலியிலும் ஜெர்மனியிலும் இருந்த ஜனநாயக தேசிய இயக்கங்களில் போதுமான பலம் இல்லாத நிலைமைக்குத் தக்கபடி நிறம் மாற்றி அமைத்துக் கொண்டார். இவ்வாறாக லாஸ்ஸலே ஒரு தேசிய-மிதவாதத் தொழிலாளர் கொள்கையை நோக்கி விலகிவிட்டார். ஆனால் அதே சமயத்தில் மார்க்ஸ் ஒரு சுயேச்சையான உறுதிமிக்க ஜனநாயகக் கொள்கையை தேசிய-மிதவாதக் கோழைத் தனத்திற்கெதிரான கொள்கையை ஊக்கமூட்டி வளர்த்தார். (நெப்போலியனுக்கு எதிராக 1859-ல் பிரஷ்யா தலையிட்டிருந்தால் அது ஜெர்மனியில் ஒரு பிரபலமான மக்களியக்கத்திற்கு ஊக்கமூட்டியிருக்கக் கூடும்.)"( V.I. Lenin, Collected Works, Vol. 21, p. 141.)

ஹெர் வோக்டின் பிரசுரம்

மார்க்ஸும் ஏங்கல்ஸும் ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சியை உருவாக்கி அமைப்பதில் முக்கியமான கடமைகளில் ஒன்று பாட்டாளி வர்க்க ஊழியர்களைப் பாதுகாப்பதாகும் என்று கருதினார்கள். பாட்டாளிவர்க்க ஊழியர்கள் அப்போது இன்னும் இளமை நிலையில்தான் இருந்தார்கள். இன்னும் போதுமான அளவில் பலமடைந்திருக்கவில்லை. பூர்ஷ்வா வர்க்க சித்தாந்தவாதிகள் மற்றும் ஏஜண்டுகளின் அவதூறுகள் தொல்லைகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்க வேண்டியதிருந்தது. அத்தகைய பூர்ஷ்வா வர்க்க ஏஜண்டுகளில் ஒருவர் காரல் வோக்ட் என்பவர். அவர் ஒரு கொச்சையான ஜனநாயகவாதி. அவர் 1859 டிஸம்பர் மாதம் ஒரு பிரசுரத்தை வெளியே கொண்டு வந்திருந்தார். அந்தப் பிரசுரத்தின் பெயர் ஆல்ஜீமீன் ஜீட்டுங்கிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள எனது வழக்கு என்பதாகும். அந்தப் பிரசுரம் முழுவதிலும் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்காரர்களுக்கு எதிராகப் படுமோசமான முறையில் கெட்ட நோக்கத்தோடு கூடிய அவதூறுகள் நிறைந்திருந்தன. வோக்ட் பெரும்பாலும் மிகவும் குறிப்பாக, கம்யூனிஸ்ட் லீகில் மார்க்ஸ் மற்றும் அவருடைய கூட்டாளிகளின் நடவடிக்கைகளின் பெருமையைக் குறைத்து அவர்கள் மீது மண்வாரித் தூற்ற வேண்டும் என்று பேராவல் கொண்டிருந்தார். அவர்களை சதிகாரர்கள் என்று உருவகப்படுத்தி வர்ணித்தார். அவர்கள் ரகசியமாகப் போலீஸுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அவர்கள் கள்ளநோட்டு அச்சடித்து அப்பணத்தைக் கொண்டு புரட்சியைத் தூண்டிவிடுகிறார்கள் என்றும் அவதூறு செய்தார். அவர் டாஸ் வோல்க்கை பிற்போக்கு பவேரியன் ஆல்ஜீமீன் ஜீட்டுங்கின் கிளையென்றும் சந்தேகத்திற்கிடமான இடங்களிலிருந்து அவர்களுக்குப் பணம் கிடைக்கிறது என்றும் சித்திரித்துக் களங்கம் ஏற்படுத்துவதற்கு முயன்றார்.

வோக்டினுடைய தாக்குதல் தொடக்க நிலையிலுள்ள பாட்டாளி வர்க்கக் கட்சிக்கு பொது மக்களுக்கு முன்பாக கெட்ட பெயர் உண்டாக்கி கேவலப்படுத்துவதற்காக பூர்ஷ்வா வர்க்கத்தினால் எடுக்கப்பட்ட முயற்சியாகும். மார்க்ஸ் பொதுவாக தனிப்பட்ட முறையில் தன்மீது வரும் தாக்குதல்களுக்கு பதில் அளிப்பதில்லை. அவைகளைச் சாதாரணமாகப் பொருட்படுத்துவதில்லை. ஆனால் இது கட்சியின் கவுரவத்திற்கு களங்கம் கற்பிக்க செய்யப்பட்ட முயற்சியாகையால் இதை அவரால் எடுத்து ஒதுக்க முடியவில்லை. அவர் கீழ்க்கண்டவாறு எழுதினார்: "மிகவும் அரிதான, தவிர்க்க முடியாத நிலைமையில்தான் அசாதாரணமான நிலைமையில்தான், அதிலும் அதில் கட்சியினுடைய நலனும் அடங்கியிருக்கிறது என்று காணும் போதுதான் கோலோன் கம்யூனிஸ்ட் வழக்கு காலத்தில் ஏற்பட்டதைப் போல உள்ள நிலைமை ஏற்பட்டுள்ள போதுதான், இப்போது கடந்த பத்தாண்டு காலமாக ஜெர்மன் பத்திரிகைகளிலும் ஜெர்மன் - அமெரிக்கப் பத்திரிகைகளிலும் என்மீது அள்ளி வீசப்பட்ட எண்ணற்றஅவதூறுகளுக்கு நான் எழுத்து மூலம் பதில் கொடுப்பதற்கு முன் வந்துள்ளேன்."( Marx, Engels, Werke, Bd. 14, S. 614)

வோக்டினுடைய பிரசுரத்திற்கு மார்க்ஸினுடைய பதில் ஹெர் வோக்ட் என்னும் தலைப்பில் ஒரு பிரசுரமாகும். அந்தப் பிரசுரம் 1860 டிஸம்பரில் லண்டனில் வெளியிடப்பட்டது. அந்த நூல் வெளியிடுவதில் இரண்டு கடமை நோக்கங்கள் உண்டு. முதல் நோக்கம் வோக்ட்டையே அவர் ஒரு தற்செயலான தனிநபர் என்னும் வகையில் அல்ல, ஆனால் "ஒரு முழுமையான போக்கையே பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தனிநபர்"( Marx, Engels, Werke, Bd. 14, S. 386) என்னும் முறையில், பூர்ஷ்வா வர்க்கத்தின் முன் மாதிரியான கைக்கூலி என்னும் வகையிலும் அவரை அம்பலப்படுத்துவதாகும். அத்துடன் ஒரு ஜனநாயகவாதி என்னும் முகமூடியை கவுரமாக அணிந்து கொண்டு ஒரு இயற்கைவாதி என்னும் நற்பெயரை அனுபவித்துக் கொண்டு வோக்ட் உண்மையில் அரசியல் துறையில் ஒரு ரகசியமான போனபார்ட்டிஸ்ட் ஏஜண்டாக செயல்பட்டுக் கொண்டிருந்தார் என்பதை மார்க்ஸ் பின்னர் தெளிவாக ஸ்தாபித்தார்.

மார்க்ஸினுடைய இரண்டாவது நோக்கம் மக்களுக்கு பாட்டாளி வர்க்கப் புரட்சி வீரர்களுடைய கடந்த கால நிகழ்கால நடவடிக்கைகளையும் அவர்களுடைய கருத்தோட்டங்களையும் குறிக்கோள்களையும் ஒரு உண்மையான திரித்துக் கூறப்படாத முறையில் எடுத்துக்காட்டி அவர்களுடைய செல்வாக்கு வீச்சை தகுதியை வலப்படுத்துவதாகும். மார்க்ஸ் 1860 பிப்ரவரி 23 ஆம் தேதி பிரிலிகிராத்திற்கு எழுதிய கடிதத்தில் வோக்ட்டிற்கு எதிரான போராட்டம் "கட்சியை வரலாற்றுபூர்வமாக நிலை நிறுத்திக் காட்டுவதற்கும், ஜெர்மனியில் அதன் எதிர்கால நிலைப்பாட்டிற்கு மிகவும் தீர்மானமான முக்கியத்துவம்"( Marx, Engels, Werke, Bd. 30, S. 459) மிக்கதாகும் என்று எழுதினார்.

மார்க்ஸ் 1860 ஜனவரி இறுதியில் தனது பிரசுரத்திற்கு தேவையான பின்னணி விவரங்களை சேகரிக்கத் தொடங்கினார். ஓய்வு ஒழிவின்றி ஓராண்டு காலம் இதற்காகப் பாடுபட்டார். இந்த வேலையின் காரணமாக அவர் தற்காலிகமாக தனது பொருளாதார படிப்பாராய்ச்சியைக் கூட நிறுத்தி வைத்திருந்தார். வோக்டினுடைய இட்டுக்கட்டான கண்டுபிடிப்புகளை மறுப்பதற்குப் போதுமான தகவல்களை சேகரிப்பதற்கும் வோக்ட்டையே அம்பலப்படுத்துவதற்கும் அவர் ஐரோப்பாவில் உள்ள பல நகரங்களிலும் உள்ள தனது பல நண்பர்களுக்கும் அறிமுகமானவர்களுக்கும் இன்னும் தமக்கு முன்பின் தெரியாத சிலருக்கும் கூட சேர்த்து 50-க்கு மேற்பட்ட கடிதங்கள் எழுதினார். அத்துடன் ஏராளமான ஆவணங்கள் பலவேறு வெளியீடுகள் முதலியவற்றைப் படித்து ஆராய்ந்தார். இத்துடன் அவர் ஏங்கல்ஸைப் பார்ப்பதற்கு மான்செஸ்டருக்கு சென்றார். 1850 பிப்ரவரி மத்தியிலிருந்து மார்ச் 25 வரை அங்கு அவருடன் தங்கினார். அவருடன் வோக்ட்டிற்கு எதிரான வாக்குவாத நூல் எழுதுவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதித்தார். கம்யூனிஸ்ட் லீகினுடைய வரலாற்றைப் பற்றி ஏங்கல்ஸிடமிருந்து விவரங்களையும் ஆவணங்களையும் கண்டாய்ந்தார். மார்க்ஸினுடைய நண்பர்கள் பலர் இந்த விஷயத்தில் இவர் ஏன் இவ்வளவு முயற்சி செய்து கொண்டிருந்தார் என்பதைப் பற்றி புரிந்து கொள்ள முடியவில்லை. மார்க்ஸ் தனது நேரத்தை வீணாக்குகிறார் என்று கூட சிலர் கருதினார்கள். ஆனால் மார்க்ஸ் பிரதான விஷயத்தில் மிகவும் தெளிவாக இருந்தார். அவர் மக்களுக்கு முன்பாக பாட்டாளி வர்க்கக் கட்சியை அதன் மகத்தான தூயதன்மையின் முழுவடிவத்தை அதன் கருத்துக்களைத் தெளிவாக எடுத்துக்காட்ட வேண்டும், தொழிலாளி வர்க்கத்தின் எதிரிகளுக்கு கட்சியின் பெருமையைக் குலைத்து அதை சிறுமைப்படுத்துவதற்கு எந்த வாய்ப்பையும் கொடுக்கக் கூடாது என்பது அவருடைய நோக்கம்.

இந்தப் பிரசுரத்தில் வோக்டைப் பிரதானமாக ஒரு அரசியல்வாதி என்னும் முறையில்தான் மார்க்ஸ் முன்வைத்துக் காட்டுகிறார். ஆனாலும் அவருடைய விஞ்ஞான எழுத்துரைகளில் வெளியிடப்பட்டுள்ள தத்துவஞானக் கருத்தோட்டங்களையும் மார்க்ஸ் அலசி ஆராய்ந்துள்ளார். கூர்மையான கிண்டல் கேலியுடன் மார்க்ஸ் வோக்டினுடைய பத்தாம் பசலிக் கருத்துக்களைச் சாடினார். வோக்டினுடைய கருத்துக்கள், லுட்விக் பூச்னர், ஜேக்கப் மோஸெஸ்காட் முதலியவர்களுடன் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் இருந்த ஜெர்மானிய கொச்சையான பொருள் முதல்வாதப் போக்குகளுடன் சேர்ந்ததாகும்.

படிப்படியாக மார்க்ஸ், பாட்டாளி வர்க்கக் கட்சியைப் பற்றிய வோக்டினுடைய அவதூறுகளை அம்பலப்படுத்தினார். வோக்ட், ஒரு படுமோசமான பொய்யன் என்பதை எடுத்துக் காட்டினார். வோக்டினுடைய கெட்ட நோக்கங்களைக் கொண்ட கட்டுக்கதை பொய்முளைகளைக் கொண்டவை, ஒன்றுக்கொன்று முரணான அறிக்கைகள் கொண்டவை. அந்தக் "கொழுத்த அயோக்கியன்" தான் அவிழ்த்துவிட்ட முடிச்சுகளையே திரும்பப் போட முடியாமல் திணறினார். அவர் பாட்டாளி வர்க்கப் புரட்சியாளர்கள் மீது அவர்கள் போலீஸுடன் உடந்தையாய் இருந்தார்கள் என்று அபாண்டமான பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்திவிட்டு அவரே தன்னுடைய வாசகங்களையே போலீஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து கொண்டுதான் பூசி மெழுகி தனது அடிப்படையை உண்டாக்கிக் கொண்டார்.

வோக்டினுடைய இட்டுக் கட்டிய செய்திகளுக்கு நேர்மாறாக மார்க்ஸ் சர்வதேசக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சியைப் பற்றிய ஒரு உண்மையான சித்திரத்தை எடுத்துக் காட்டினார். பலவேறு எண்ணற்ற ஆவணங்கள் மூலமாக அவர் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்காரர்களின் வீரமிக்கப் போராட்டத்தை ஒரு புரட்சிகரமான பாட்டாளி வர்க்க ஸ்தாபனத்தை நிறுவுவதற்காக நடத்திய போராட்டத்தை வர்ணித்து விவரித்தார். துணிவான துல்லியமான வரிகளில் கம்யூனிஸ்ட் லீகின் வரலாற்றுக் கதையை மார்க்ஸ் கூறினார். அதன் செயல்பாட்டின் வரலாற்றுப் பின்னணி, அதன் குணச் சிறப்புகள், குறிக்கோள்கள், செக்டேரியன் நபர்களுக்கு எதிராகவும், கொச்சைத்தனமான கரடுமுரடான குட்டி பூர்ஷ்வா ஜனநாயகவாதிகளுக்கு எதிராகவும் அது நடத்திய போராட்டத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றை விவரித்துக் கூறினார்.

மார்க்ஸினுடைய பிரசுரத்தின் மையமான விஷயம் வோக்ட் ஒரு போனபார்ட்டிஸ்ட் கைக்கூலி என்னும் முறையில் அவரை அம்பலப்படுத்தியதாகும். ஐரோப்பாவின் இன்றைய நிலைமையை பற்றிய படிப்பாய்வு என்னும் வோக்டினுடைய புத்தகம் 1859 மார்ச்சில் வெளியிடப்பட்டது. மார்க்ஸ் அதைப் படித்தபோது, அப்புத்தகம், பிரான்ஸின் நேரடியான உத்தரவின் பேரில் எழுதப்பட்டது என்பதும் ஐரோப்பிய பொதுஜன அபிப்ராயத்தின் மீது ஒரு சித்தாந்த செல்வாக்கைச் செலுத்துவதற்காக மூன்றாவது நெப்போலியனால் அது பயன்படுத்தப்பட்டது என்பதும் தெளிவாகப் புரிந்தது. அவர் எழுதினார்: "வோக்ட் எண்ணற்ற பல ஊதுகுழல்களில் ஒன்றாக இருந்தார். அவர் மூலம் டூலெரியிலுள்ள மாற்றுக்குரல் கோமாளி தன்னுடைய குரலை அன்னிய மொழிகளில் குறி செலுத்துவதற்குப் பயன்படுத்தினார்."( Marx, Engels, Werke, Bd. 14, S. 516) ஆனால் வோக்ட் மூன்றாவது நெப்போலியனுக்கு வேறு பல ஊழியங்களும் புரிந்தார். பல நாடுகளில் வலைப்பின்னல்போல் கிளையோடியிருந்த போனபார்ட்டிஸ்ட் ஏஜண்டுகளுடன் வோக்ட் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார் என்பதையும், உண்மையில் இவர் அவ்வாறான ஏஜண்டுகளுக்கு ஆள் சேர்ப்பவர்களில் ஒருவராக இருந்தார் என்பதையும் மார்க்ஸ் தெளிவாக வெளிப்படுத்திக் காட்டினார்.

மார்க்ஸிற்கு அப்போது தெரிந்திராத பல ஆவணங்கள் பின்னர் வெளியாயின. அவைகள் இந்த "ஜனநாயக"வாதி வோக்ட் உண்மையில் போனபார்ட்டிஸ்ட் சர்க்காரின் சேவையில் அமர்த்தப்பட்டிருந்தார் என்னும் அவருடைய கருத்தை முழுமையாக ஊர்ஜிதம் செய்தன. இரண்டாவது சாம்ராஜ்யம் வீழ்ந்த பின்னர் மூன்றாவது நெப்போலியனுடைய ரகசிய நிதியின் செலவு பற்றிய கணக்குகள் வெளியாயின. அக்கணக்குகள் பிரெஞ்சு சக்கரவர்த்தியிடமிருந்து 1859 ஆகஸ்டில் வோக்ட் 40,000 பிராங்குகள் பணம் பெற்றார் என்பதைக் காட்டின.

மூன்றாவது நெப்போலியனுடைய கொள்கையின் எதிர்ப் புரட்சியின் தன்மையை, இத்தாலியப் போர் தொடங்கிய அவருடைய பங்கு உள்பட அதில் அடங்கியிருந்த எதிர்ப்புறட்சித் தன்மை உள்பட மார்க்ஸ் அம்பலப்படுத்தினார். தேசியப் பிரச்சனை பற்றிய போனபார்ட்டிஸ்ட் வாய்ச்சவடால்களையும், அவர்களுடைய படுமோசமான அவச்சொல் மிக்க "தேசிய இனக்கோட்பாட்டையும்" மார்க்ஸ் வெளிப்படையாகக் கண்டித்தார். அந்த 'தேசிய இனக்கோட்பாடுகளை' பிரெஞ்சு சக்கரவர்த்தி சிறுசிறு நாட்டு மக்களின் தேசிய இயக்கங்களை தன்னுடைய எதிர்ப்புறட்சி முடிவுகளுக்காகப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஒரு மூடு திரையாகப் பயன்படுத்தியதை மார்க்ஸ் பகிரங்கமாகக் கண்டனம் செய்தார். இதற்குச் சம ஈடான முக்கியத்துவம் மிக்கதாகவே, தொழிலாளி வர்க்க இயக்கம் பாட்டாளி வர்க்கத்திடையே உள்ள சில ஊசலாட்டக்காரர்களின் காரணமாய் போனபார்ட்டிஸ்ட் ஆளும் வட்டாரங்களுடன் கண் சிமிட்டி உறவாடிக் கொண்டிருப்பதைப் பற்றிய மார்க்ஸினுடைய எச்சரிக்கையும் இருந்தது.

ஜெர்மனியைப் பொறுத்தவரை வோக்ட் மற்றும் அவர் வகைப்பட்ட மற்றவர்களும் எடுத்த நிலை அவர்களுடைய பிரஷ்யோபைல் மனப்பான்மைகளையும் பிரஷ்யாவின் "ஒன்றுபடுத்தும் கட்டளைப் பணியை"ப் பரப்புவதற்கான முயற்சிகளையும் வெளிப்படுத்தியது என்று மார்க்ஸ் எடுத்துக் காட்டினார். பிரஷ்யாவின் தலைமையின்கீழ் ஜெர்மன் ஒற்றுமையை முன்வைத்து வாதாடும் நபர்களின் விமர்சனம் சந்தேகத்திற்கிடமின்றி லாஸ்ஸலேக்கு எதிராக குறி வைக்கப்பட்டிருந்தது. மார்க்ஸ் இவர்களில் யாரையும் பெயரைக் குறிப்பிட்டு கூறவில்லை. 1859 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி மார்க்ஸ் ஏங்கல்ஸிற்கு "லாஸ்ஸலேயும் உண்மையில் வோக்ட் ஊதிய கொம்பையே ஊதினார்"( Marx, Engels, Werke, Bd. 29, S. 515.) என்று கூறினார்.

ஹெர் வோக்ட் என்னும் பிரசுரம் உள்ளடக்கத்தில் மிகவும் தெளிவாகவும் உருவத்தில் தலைசிறந்தும் விளங்கியது. இலக்கியத்துறைக் கண்ணோட்டத்தில் பார்த்தால் அது உலகத்தின் மிகச் சிறந்த நையாண்டி எழுத்துரைகளின் அணியில் வைக்கப்பட வேண்டியதாகும். 1860 டிஸம்பர் 19 ஆம் தேதி மார்க்ஸிற்கு ஏங்கல்ஸ் எழுதிய கடிதத்தில் "நீங்கள் இதுவரை எழுதிய நூல்களில் எல்லாம் இதுதான் மிகச்சிறந்த வாதப்பிரதிவாத நூல் என்பதை நிச்சயமாகக் கூற முடியும்"¹ என்று கூறியுள்ளார்.

ஜென்னி மார்க்ஸின் உடல்நலமின்மை

வோக்டினுடைய அவதூறு மொழிகள் மார்க்ஸினுடைய மனைவியின் மனநிலையை மிகவும் மோசமாக பாதித்தது. வோக்ட்டிற்கு எதிராக எழுதிய புத்தகத்திற்காக மார்க்ஸ் வேலைசெய்து கொண்டிருந்த மாதங்கள் முழுவதிலும் - அக்காலம் முழுவதிலும் - அவள் கடுமையான மன வேதனைக்கும் தளர்ச்சிக்கும் ஆளானாள். அடிக்கடி உறக்கம் கொள்ளாமல் துன்பத்திற்குள்ளானாள். அந்தப் பிரசுரத்தின் சரியான பிரதி எடுப்பதில் அவளும் மிகவும் கடுமையாக வேலை செய்தாள். நவம்பர் 19 ஆம் தேதி அவ்வேலை முடிந்தவுடன் அவள் படுத்த படுக்கையாகிவிட்டாள். அவளுக்கு வைசூரி நோய் வந்துள்ளதாக டாக்டர்கள் பரிசோதனையில் கூறினார்கள். அவள் மிகவும் மெலிந்து விட்டாள். வியாதியை எதிர்க்கும் தன்மை அவளுடைய உடம்பில் குறைந்துவிட்டது. அவளுக்கு இரு தடவை அம்மை குத்தியிருந்த போதிலும் அந்த நோய் அவளைப் பற்றிக் கொண்டது. அதைத் தடுக்கும் வலு அவள் உடம்பில் இல்லாமல் இருந்தது.

இக்காலம் மார்க்ஸிற்கு மிகவும் சோதனை மிக்க காலமாக இருந்தது. அடுத்த வீட்டில் குடியிருந்த லீப்க்னெஸ்ட்ஸ் பொறுப்பில் குழந்தைகளையெல்லாம் விட்டிருந்தார். காரல் மார்க்ஸும் ஹெலென் டெமுத்தும் மாறி மாறி ஜென்னியின் படுக்கையருகில் இருந்து கவனித்து வந்தார்கள். பிற்காலத்தில் ஜென்னி தான் நோய்வாய்ப்பட்டிருந்த இந்தக்காலத்தின் ஆரம்ப சில தினங்களைப் பற்றி லூயி வெய்டிமேயருக்கு எழுதிய கடிதத்தில் கீழ்க்கண்டவாறு விவரித்திருந்தார்: "நான் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன். எனது முகத்தில் மிகவும் கடுமையான வேதனையும் நமச்சலும் இருந்தது. நான் அநேகமாக சுத்தமாகத் தூங்கவே முடியவில்லை. நான் காரலைப்பற்றி மிகவும் அதிகமாகக் கவலை கொண்டிருந்தேன். அவர் என்னை மிகவும் அதிகமாகக் கவலையுடன் அன்பு ஆதரவுடன் கவனித்து வந்தார். கடைசியில் நான் எல்லா நேரத்திலும் நல்ல பிரக்ஞையுடன் முழு உணர்வுடன் இருந்தபோதிலும் வெளிப்படையான புலனுணர்வுகள் எதுவும் இல்லாமல் இருந்தேன்.

ஆதாரம்- காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு, அலைகள் வெளியீட்டகம், பக்கம் 663-691 வரை

 

 வழங்கப்பட்ட மூலங்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டில் கார்ல் மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் ஆகியோரின் புரட்சிகரப் பணிகள், அரசியல் உத்திகள் மற்றும் இலக்கியக் கோட்பாடுகளைப் பற்றி விரிவாக விளக்குகின்றன. இக்காலகட்டத்தில், சர்வதேச பாட்டாளி வர்க்க இயக்கங்களை வலுப்படுத்துவதிலும், டாஸ் வோல்க் போன்ற பத்திரிகைகள் மூலம் சோசலிசக் கருத்துக்களைப் பரப்புவதிலும் மார்க்ஸ் தீவிரமாக ஈடுபட்டார். மேலும், இத்தாலி மற்றும் ஜெர்மனியின் ஐக்கியத்திற்கான போராட்டங்களில் நிலவிய சிக்கல்களை ஆராய்ந்து, தொழிலாளர் வர்க்கத்திற்கான தந்திரோபாயங்களை அவர் வகுத்தார். லாஸ்ஸலேயின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் இலக்கியப் படைப்புகளை மார்க்ஸும் ஏங்கல்ஸும் கடுமையாக விமர்சித்து, யதார்த்தவாதக் கலை மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் அவசியத்தை வலியுறுத்தினர். இறுதியாக, பாட்டாளி வர்க்கக் கட்சியின் பெயரைக் கெடுக்க முயன்ற கார்ல் வோக்ட்டின் அவதூறுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் "ஹெர் வோக்ட்" என்ற புகழ்பெற்ற நையாண்டி நூலை மார்க்ஸ் எழுதி வெளியிட்டார்.

கார்ல் மார்க்ஸின் காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற முக்கிய பாட்டாளி வர்க்க இயக்கங்கள் மற்றும் புரட்சிகர எழுச்சிகள்:

இந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே

  • 1848 பேரெழுச்சிகள்: 1848 ஆம் ஆண்டில் ஜனநாயக இயக்கங்கள் மற்றும் பாட்டாளி வர்க்க இயக்கங்களின் ஒரு புதிய பேரெழுச்சி ஏற்பட்டது.
  • பாட்டாளி வர்க்கத்தின் சுயேச்சை அரசியல் நடவடிக்கைகள்: 1850-களின் பிற்பகுதியிலும் 1860-களின் ஆரம்ப காலத்திலும் ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் நடவடிக்கைகள் கணிசமாக அதிகரித்தன. பாட்டாளி வர்க்க இயக்கம், பூர்ஷுவா ஜனநாயக இயக்கத்திலிருந்து கிளைபிரிந்து தனது சொந்த வளர்ச்சிப் பாதையைக் கடைப்பிடிக்கத் தொடங்கியது.
  • இங்கிலாந்து கட்டிடத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் (1859): 1859 ஜூலை இறுதியில் லண்டன் கட்டிடத் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தம், ஆங்கிலேயத் தொழிலாளி வர்க்கத்தைச் செயலில் இறங்குவதற்கு பெரும் ஊக்கமளித்தது.
  • இத்தாலியப் புரட்சிகர எழுச்சிகளும் கரிபால்டி இயக்கமும் (1859–1860):
    • 1859-ல் ஆஸ்திரிய ஆட்சிக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக டஸ்கனி, பார்மா, மேடேனா மற்றும் பாப்பால் மாகாணங்களில் பெருவாரியான மக்கள் எழுச்சி ஏற்பட்டு, அங்கிருந்த எதேச்சதிகார ஆட்சிகள் தூக்கி எறியப்பட்டன.
    • 1860 ஏப்ரலில் சிசிலியில் மக்கள் எழுச்சி வெடித்தது. கியுசெப்பி கரிபால்டி தலைமையிலான "ஆயிரவர்" தொண்டர்படை சிசிலியிலும் நேப்பிள்ஸிலும் வெற்றி பெற்று தென் இத்தாலியை விடுவித்தது.
  • ஜெர்மனியின் தேசிய எழுச்சி மற்றும் அரசியல் சட்ட மோதல் (1859–1860): ஜெர்மன் அரசுகளை ஒன்றுபடுத்தும் தேசிய இயக்கமும், 1860-ல் பிரஷ்யாவில் ராணுவச் செலவு மசோதாவை ஒட்டி எழுந்த அரசியல் சட்ட மோதலும் அங்கு ஒரு புதிய புரட்சிகரமான நிலைமையை உருவாக்கின.
  • தேசிய விடுதலைப் போராட்டங்கள்: போலந்திலும் அயர்லாந்திலும் தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் புதிய கட்டத்தை எட்டின.
  • பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியாவில் மக்களியக்கம்: போனபார்ட்டிஸ பிரான்ஸிலும் ஆஸ்திரிய சாம்ராஜ்யத்திலும் மக்களிடம் புரட்சிகரமான வேகம் பொங்கி எழுந்தது.

கார்ல் மார்க்ஸ் மற்றும் ஃபிரெட்ரிக் எங்கல்ஸ் 1850-களின் பிற்பகுதியிலும் 1860-களின் தொடக்கத்திலும் நிலவிய சர்வதேசப் புரட்சிகரச் சூழலில் வகுத்த முக்கிய புரட்சிகர உத்திகள் மற்றும் கொள்கைகள்:

  1. சுயேச்சையான பாட்டாளி வர்க்கக் கட்சி மற்றும் அரசியல் பாதை:

    • பாட்டாளி வர்க்க இயக்கம், பூர்ஷுவா ஜனநாயக இயக்கத்திலிருந்து கிளைபிரிந்து தனது சொந்த வளர்ச்சிப் பாதையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
    • பூர்ஷுவாக் கட்சிகளின் அரசியல் செல்வாக்கிலிருந்து தொழிலாளி வர்க்கம் தப்பித்து, பூர்ஷுவா ஜனநாயக மாற்றங்களைப் பூர்த்தி செய்வதில் சுயேச்சையான பங்கை ஆற்ற வேண்டும்.
  2. பாட்டாளி வர்க்கப் பத்திரிகைகளை அமைப்பாகப் பயன்படுத்துதல்:

    • 'டாஸ் வோல்க்' (Das Volk) போன்ற பாட்டாளி வர்க்கப் பத்திரிகைகள் மூலம் விஞ்ஞானக் கம்யூனிஸக் கருத்துக்களையும் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தையும் பரப்புதல்.
    • பத்திரிகையைப் பகிரங்கமான கட்சி மேடையாகவும், பாட்டாளி வர்க்கப் போராட்ட வீரர்களை ஒன்றுதிரட்டும் மையமாகவும், தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டங்களை (எ.கா. லண்டன் கட்டிடத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்) ஆதரிக்கும் கருவியாகவும் செயல்படுத்துதல்.
  3. தேசிய விடுதலை மற்றும் ஜனநாயக இயக்கங்களில் புரட்சிகரப் பாதை:

    • இத்தாலி மற்றும் ஜெர்மனியில் தேசத்தை ஒன்றுபடுத்தும் பணிகளை ஆளும் மேட்டுக்குடியினர் "மேலேயிருந்து" மன்னராட்சியின் மூலம் நிறைவேற்றுவதை எதிர்த்து, தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஜனநாயக சக்திகளை ஒன்றுதிரட்டி "கீழேயிருந்து" எழும் மகத்தான தேசியப் புரட்சிகரப் பாதையை வலியுறுத்துதல்.
    • ஆளும் வர்க்கங்களின் வம்சாவளிப் போர்களையும் பிராந்திய மோதல்களையும், மக்கள் திரள் பங்கேற்கும் புரட்சிகரப் போராக மாற்ற முயலுதல்.
  4. போனபார்ட்டிஸம் மற்றும் பிற்போக்கு ஆட்சிகளை எதிர்த்தல்:

    • ஐரோப்பியப் புரட்சிகளுக்கும் தேசிய இயக்கங்களுக்கும் மிகப்பெரிய தடையாக இருந்த பிரான்ஸின் போனபார்ட்டிஸம் மற்றும் ஆஸ்திரிய-பிரஷ்ய பிற்போக்கு ஆட்சிகளை அம்பலப்படுத்துதல்.
  5. குட்டி பூர்ஷுவா மற்றும் மிதவாதச் சித்தாந்தங்களுக்கு எதிரான போராட்டம்:

    • ஃபெர்டினாண்ட் லாஸ்ஸலே (Ferdinand Lassalle) பிரஷ்ய மன்னராட்சியுடன் சமரசம் செய்துகொண்டு கடைப்பிடித்த "தேசிய-மிதவாதத் தொழிலாளர் கொள்கையை" எதிர்த்து, சுயேச்சையான ஜனநாயகப் பாதையைத் தற்காத்தல்.
    • கார்ல் வோக்ட் (Herr Vogt) போன்ற போனபார்ட்டிஸ்ட் ஏஜண்டுகள் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் மீது வீசிய அவதூறுகளை அம்பலப்படுத்தி, கட்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க கௌரவத்தையும் தூய்மையையும் பாதுகாத்தல்.

💡 மார்க்ஸ் மற்றும் லாஸ்ஸலே இடையிலான தத்துவார்த்த மற்றும் அரசியல் வேறுபாடுகள் குறித்து மேலும் ஆழமாக ஆராய விரும்புகிறீர்களா?

கார்ல் மார்க்ஸ் மற்றும் ஃபிரெட்ரிக் எங்கல்ஸ் ஆகியோருக்கும் ஃபெர்டினாண்ட் லாஸ்ஸலே (Ferdinand Lassalle) அவர்களுக்கும் இடையிலான முக்கிய தத்துவார்த்த மற்றும் அரசியல் வேறுபாடுகள்:

  1. தத்துவார்த்த மற்றும் சித்தாந்த வேறுபாடுகள்:

    • ஹெகலிய எண்ணமுதல்வாதம்: லாஸ்ஸலே ஒரு எண்ணமுதல்வாத ஹெகலிசக் கருத்தோட்டத்தைக் கொண்டிருந்தார்; அவருடைய தத்துவஞான எழுத்துரைகள் மேலெழுந்தவாரியாகவும் கதம்பக் கருத்துக்கள் நிறைந்ததாகவும் இருந்தன என்று மார்க்ஸ் விமர்சித்தார்.
    • கற்பனா சோஷலிசம்: லாஸ்ஸலேயின் சோஷலிசச் சார்பு விஞ்ஞானக் கம்யூனிசத்திலிருந்து விலகி, பல்வேறு கற்பனா சோஷலிச மற்றும் குட்டி பூர்ஷ்வா சோஷலிசக் கருத்துக்களிலிருந்தே தோன்றியது.
  2. ஜெர்மனி ஒருமைப்பாடு மற்றும் பிரஷ்ய மன்னராட்சி பற்றிய நிலைப்பாடு:

    • மேலேயிருந்து vs கீழேயிருந்து புரட்சி: லாஸ்ஸலே பிரஷ்யாவைத் தலைமையாகக் கொண்டு, பிரஷ்ய மன்னரின் கீழ் ஜெர்மனியை ஒன்றுபடுத்துவதற்கான ஆதரவை அளித்தார். ஆனால் மார்க்ஸ், மன்னர் பரம்பரை வழிக்கு எதிராக மக்கள் திரள் பங்கேற்கும் "கீழேயிருந்து" எழும் புரட்சிகர ஜனநாயகக் குடியரசுப் பாதையை வலியுறுத்தினார்.
    • தேசிய-மிதவாத விலகல்: லெனின் சுட்டிக்காட்டியது போல, லாஸ்ஸலே பிஸ்மார்க்கின் வெற்றிக்கும் பிரஷ்ய மன்னராட்சிக்கும் ஏற்பத் தன்னை நிறம் மாற்றிக்கொண்டு, "தேசிய-மிதவாதத் தொழிலாளர் கொள்கை" நோக்கி விலகினார். மார்க்ஸோ தேசிய-மிதவாதக் கோழைத்தனத்திற்கு எதிராகச் சுயேச்சையான ஜனநாயகப் பாதையை உருவாக்கினார்.
  3. போனபார்ட்டிசம் மற்றும் இத்தாலியப் போர் குறித்த அணுகுமுறை:

    • பிரான்ஸின் மூன்றாம் நெப்போலியன் (போனபார்ட்டிசம்) ஐரோப்பியப் புரட்சிகளுக்குப் பெரும் அச்சுறுத்தல் என்பதை மார்க்ஸும் எங்கல்ஸும் அம்பலப்படுத்தினர்.
    • ஆனால் லாஸ்ஸலே, மூன்றாம் நெப்போலியன் ஜனநாயக லட்சியத்திற்காகப் போராடுவதாகக் கூறி அவரது நடவடிக்கைகளுக்கு ஆதரவாகப் பிரசுரம் எழுதினார்; இதை மார்க்ஸ் "மிகப்பெரும் கண்மூடித்தனமான பிழை" என்று கடுமையாகக் கண்டித்தார்.
  4. விவசாயிகள் வர்க்கம் குறித்த பார்வை:

    • ஜெர்மனியின் விவசாயிகள் போர்களைப் பற்றி மதிப்பிடும்போது, விவசாயிகளை மொத்தத்தில் ஒரு பிற்போக்கான வர்க்கமாகவே லாஸ்ஸலே கருதினார்.
    • மாறாக, மார்க்ஸ் விவசாயிகளைப் பூர்ஷ்வா-நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கு எதிரான புரட்சிகரமான ஆற்றல்மிக்க சக்தியாகவும், பாட்டாளி வர்க்கத்தின் முக்கிய கூட்டாளியாகவும் கருதினார்.
  5. இலக்கியம் மற்றும் கலைக் கோட்பாடுகள் (எதார்த்தவாதம்):

    • லாஸ்ஸலேயின் 'பிரான்ஜ் வான் சிக்கின்ஜென்' என்ற வரலாற்று நாடகத்தை விமர்சித்த மார்க்ஸும் எங்கல்ஸும், அவர் பாத்திரங்களை எதார்த்தமான மனிதர்களாக உருவாக்காமல் "காலத்தின் உணர்வுகளைப் பேசும் வெறும் அருவமான பேசும் குழாய்களாக" மாற்றிவிட்டார் என்று சுட்டிக்காட்டினர்.
    • ஷில்லரின் அருவமான சொல்லலங்கார முறையைப் பின்பற்றிய லாஸ்ஸலேக்கு மாறாக, மார்க்ஸ் மற்றும் எங்கல்ஸ் ஷேக்ஸ்பியரின் உண்மை நிலையை ஊடுருவும் எதார்த்தவாத முறையை (Realism) வலியுறுத்தினர்.

💡 மார்க்ஸ் மற்றும் எங்கல்ஸ் வகுத்த எதார்த்தவாதக் கலைக் கோட்பாடுகள் அல்லது 'ஹெர் வோக்ட்' பிரசுரம் மூலம் பாட்டாளி வர்க்கக் கட்சியின் வரலாற்றுச் சிறப்பை மார்க்ஸ் எவ்வாறு தற்காத்தார் என்பது குறித்து மேலும் அறிய விரும்புகிறீர்களா?

.


தொடர்புடைய கட்டுரைகள்:



***

எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

இலக்கு இதழின் கட்டுரைகள்

கார்ல் மார்க்ஸின் புரட்சிகரப் பாதையும் அரசியலும்-ஒலி வடிவிலும்

ஜனநாயக இயக்கங்கள் மற்றும் பாட்டாளி வர்க்க இயக்கங்களின் ஒரு புதிய பேரெழுச்சி (- காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு பக்கம் 663-691 வரை)   மார...

செய்தியை சார்ந்த அலசல்