பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளி வர்க்கத்திற்கும் இடையிலான வர்க்கப் போராட்டமும் பல்வேறு அரசியல் சக்திகளுக்கு இடையிலான வர்க்க போராட்டமும் பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளி வர்க்கத்தின் இடையேயான தத்துவார்த்த தளத்தில் நடக்கின்ற வர்க்கப் போராட்டமும், இப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நெளிவு சுழிவுகளோடு சில நேரங்களில் மிகவும் கூர்மையாகவும் இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. பாட்டாளி வர்க்கம் தனது தத்துவங்களுக்கு ஏற்ப இந்த உலகத்தை மாற்றி அமைக்க போராடும் அதே நேரத்தில் முதலாளி வர்க்கம் தனது நலனுக்கேற்றவாறு இந்த உலகை மாற்றியமைக்கு போராடுகின்றன. ஒரே நேரத்தில் இரண்டு விதமான போராட்டங்கள். வெற்றி பெறப் போவது சோசலிசமா முதலாளித்துவமா என்ற கேள்விக்கான விடையை எதிர்காலம்தான் சொல்லும். உலக மக்கள்தொகையில் மார்க்சியவாதிகளின் எண்ணிக்கை எவ்வளவு? அறிவுஜீவிகள் மத்தியிலே கூட மார்க்சியவாதிகளின் எண்ணிக்கை எவ்வளவு? அவர்கள் எப்போதும் சிறுபான்மையினர் தான். எனவே மார்க்சிய தத்துவம் இன்றும் பெரும் போராட்டத்தினூடே தான் வளர வேண்டியிருக்கின்றது. நேற்றும் இன்றும் நாளையும் என்றும் அப்படித்தான். சரியானவற்றுக்கும் தவறான வற்றுக்கும் இடையேயான போராட்டம் தொடர்ந்து நடக்கின்றது, இடையறாத இந்தப் போராட்டத்தில், எது சரியோ அது தன்னை மேலும் செழுமைப் படுத்திக் கொள்கின்றது. உண்மைக்கும் பொய்மைக்கும் இடையே, நன்மைக்கும் தீமைக்கும் இடையே, அழகுக்கும் அருவருப்புக்கும் இடையே தொடர்ந்து போராட்டம் நடக்கின்றது, இப்போராட்டத்தில் நேர்மறையான சக்திகள் வெற்றி பெறுகின்றன, தம்மைச் செழுமைப்படுத்திக் கொள்கின்றன. தவறானவற்றை மக்கள் ஒதுக்கித் தள்ளி சரியானவற்றை ஏற்றுக் கொள்ளும்போது புதிய உண்மைகள் தோன்றுகின்றன. ஆனால் புதிய உண்மைகள் புதிய பொய்மைகளுடன் தமது போராட்டத்தைத் தொடங்குகின்றன. இப்போராட்டம் முடிவில்லாதது, தொடர்வது, உண்மை இவ்வாறுதான் வளர்கின்றது. தன்னை நிலை நிறுத்து கின்றது, இதுவே விதி. இந்த உண்மையைத்தான் மார்க்சிய தத்துவம் என்று அழைக்கின்றோம்.
சீன மண்ணில் வெற்றி பெறப் போவது சோசலிசமா முதலாளித்துவமா என்ற கேள்விக்கான விடையை எதிர்காலம்தான் சொல்லும், அதற்கு நீண்டகாலம் பிடிக்கும். பழைய சமூக அமைப்பில் இருந்த முதலாளிவர்க்கத்தின், அறிவுஜீவிகளின் தாக்கம் இப்போதும் இங்கு நீடிக்கின்றது. அவர்களது இந்தத் தாக்கம் என்ற அஸ்திவாரத்தின் மீதுதான் அவர்களின் வர்க்கத்தத்துவம் நிற்கின்றது. இதைப் புரிந்து கொள்ளவில்லையெனில், அல்லது சரியாகப் புரிந்து கொள்ள வில்லையெனில் மிக மோசமான தவறுகள் நடக்கலாம், தத்துவார்த்த தளத்தில் நடத்தப்பட வேண்டிய போராட்டம் புறம் தள்ளப்படலாம். தத்துவார்த்தப் போராட்டம் வேறு எந்தப்போராட்டத்தையும் விட வித்தியாசமானது. ஏனெனில் வேறெந்தப் போராட்டத்திலும் வன்முறையைப் பிரயோகிக்க முடியும், ஆனால் தத்துவார்த்தப் போராட்டம் என்பது அறிவு சார்ந்த தர்க்கவியல் போராட்டமாகும். அறிவியல் ரீதியாகத் தன்னை மெய்ப்பிக்கின்ற தத்துவமே இந்தப் போராட்டத்தில் வெல்லும். தத்துவார்த்தப் போராட்டத்தில் சோசலிசம் வலுவான நிலையில் உள்ளது. நமது அரசின் அடிப்படை அதிகாரம் பாட்டாளிவர்க்கத்தின் தலைமையிலான தொழிலாளர்களின் கையில் உள்ளது, கம்யூனிஸ்ட் கட்சி வலுவாக உள்ளது, அதன் மதிப்போ உச்சத்தில் உள்ளது. நமது பணிகளில் தவறுகளும் குறைபாடுகளும் இருக்கின்றன என்றாலும், அடிப்படையில் நமது எண்ணமும் செயல்பாடுகளும் மக்களுக்கானவை என்பதையும், தேச முன்னேற்றத்தில் அக்கறையுள்ள அனைவருடனும் இணைந்து ஒரு மகத்தான பலம்பொருந்திய தேசத்தைக் கட்டுவதற்கு நாம் என்றுமே ஆயத்தமாக உள்ளோம் என்பதையும், ஏற்கெனவே பல குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்துள்ளோம், இனியும் செய்வோம் என்பதையும் நியாய சிந்தனை படைத்த யாரும் ஒப்புக்கொள்வார்கள்.
பழைய சமூகத்திலிருந்து வந்த பெரும்பாலான முதலாளி வர்க்கத்தினரும் அறிவுஜீவிகளும் தேசபக்தர்கள்தான்; நமது சோசலிசத் தாய்நாட்டை வளம்பொருந்திய, பலம்பொருந்திய ஒரு சக்தியாக வளர்த்தெடுக்கும் பணியில் அவர்களும் தம்மை அர்ப்பணித்துக்கொள்ள ஆயத்தமாகவே இருக்கின்றார்கள், இனிமேல் பின்னால் செல்வதற்கான காரணம் எதுவும் இல்லை என்பதை அவர்கள் அறிவார்கள், சோசலிச சமூகத்திலிருந்து பின்வாங்கி நாம், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான பாட்டாளிகளிடமிருந்து தனிமைப்பட்டால் தமக்கு எதிர்காலம் இல்லை என்பதையும் அவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.
சீன மக்களில் பெரும்பாலோர் மார்க்சிய தத்துவத்தையே தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பது தெளிவானது. அப்படியிருக்க அதனை விமர்சனம் செய்யலாமா என்று சிலர் கேட்கலாம், விமர்சனம் செய்ய முழு உரிமை உண்டு, மார்க்சியம் ஒரு விஞ்ஞானக் கோட்பாடு, உண்மையானது என்பதால் விமர்சனங்களைக் கண்டு அது அஞ்சுவதில்லை, மாறாக விமர்சனங்களைக் கண்டு அது அஞ்சினால், அல்லது விமர்சனங்களால் தவிடுபொடியாகும் அளவிற்கு பலஹீனமானது என்றால் அத்தத்துவத்தால் ஒரு பயனும் இல்லை, நடைமுறையில் என்ன பார்க்கின்றோம்? கருத்துமுதல்வாதிகள், மார்க்சிய தத்துவத்தை தினந்தோறும் முடிந்தவகையில் எல்லாம் விமர்சனம் செய்து கொண்டுதானே இருக்கின்றார்கள்? சமூக மாற்றத்தை விரும்பாத, முதலாளித்துவ சிறுமுதலாளித்துவ ஆதரவாளர்களும் இதே வேலையைத்தானே செய்து கொண்டிருக்கின்றார்கள்? மார்க்சியவாதிகள் விமர்சனங்களைக் கண்டு அஞ்சக் கூடாது. விமர்சனத் தாக்குதல்கள், பேராட்டப் புயல்கள் போன்றவற்றால் தம்மை புடம்போட்டு உறுதியாக வைத்திருக்க வேண்டும்.தவறான கருத்துகள், தத்துவங்களுக்கு எதிரான போர் நோய் தடுப்பு மருந்துக்கு சமமாகும். வெப்ப அறைகளில் வள்ர்க்கப்பட்ட தாவரங்கள் எதிர்ப்பு சக்தி கிடையாது. "நூறு புக்கள் மலரட்டும்!நூறு சிந்தனைகள் மலரட்டும்! என்ற முழக்கம், மார்க்க்சிய தத்துவத்தை நிலைகுலையச்செய்யாது;மாறாக இந்த முழக்கத்தால் தத்துவார்த்த தளத்தில் மேலும் பல இடி, மழை, புயல்களை மார்க்சியம் சந்திக்கும், ஆனால் அவற்றை எதிர்கொண்டு மேலும் வலிமை பெற்று வலுவுடன் நிமிர்ந்து நிற்கும்.
முதலாளிவர்க்கமும் சிறுமுதலாளிவர்க்கமும் தத்தமது கொள்கைகளை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து கொண்டேதான் இருப்பார்கள், இப்பிரச்சாரத்தை நீங்கள் தடை செய்யக்கூடாது, அவர்களை ஒடுக்கக் கூடாது. ஆனால் அவர்களின் பிரச்சாரம் மீது நீங்கள் விவாதத்தையும் விமர்சனத்தையும் தூண்ட வேண்டும். உங்களது எதிர் விவாதங்களையும் விமர்சனங்களையும் நிறுத்தக் கூடாது, நிறுத்தினால் அவர்களது கை ஓங்கிவிடும். தவறுகளை விமர்சிப்பதும் நச்சுச்செடிகளை வேரோடு கிள்ளி எறிவதும் தொடர் நடவடிக்கையே. ஆனால் விமர்சனங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டுமே தவிர வறட்டுவாதமாக இருக்கக் கூடாது. நுண்புலப்பொருளியல்வழிவாதம் உதவாது, மாறாக இயக்கவியல் வழிவாதமே உதவும். விஞ்ஞானப்பூர்வ பகுத்தாய்வும் நேர்மையான வாதமும் தேவை. வறட்டுவாதம் எதற்கும் உதவாது. நச்சுச்செடிகளை கிள்ளியெறிய வேண்டியதுதான், ஆனால் மணம் வீசும் பூஞ்செடிகளைப் பறித்து எறிந்துவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். சாமானிய மக்களுடன் ஒன்றிணைந்து நச்சுச் செடிகளையும் பூக்களையும் தரம் பிரித்தறிவோம், நச்சுச்செடிகளை கிள்ளியெறியும் சரியான வழிகளைக் கண்டறிவோம்.
வறட்டுவாதத்திற்கு எதிரான விமர்சனம் நடக்கும்போது திருத்தல்வாதத்திற்கு எதிரான விமர்சனத்தையும் செய்ய வேண்டும். திருத்தல்வாதம், வலது சந்தர்ப்பவாதம் இரண்டுமே முதலாளித்துவ சிந்தனைகள்தான், வறட்டுவாதத்தை விடவும் அபாயமானவை. திருத்தல்வாதிகள், வலது சந்தர்ப்பவாதிகள் இருவருமே மார்க்சியத்துக்கு உதட்டளவில் சேவை செய்பவர்களே. அவர்களும் "வறட்டுவாத"த்தை எதிர்க்கின்றார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் மார்க்சியத்தின் உட்கருவைத்தான் தாக்குகின்றார்கள்; பொருளியல், இயக்கவியல் இரண்டையும் எதிர்க்கின்றார்கள் அல்லது சிதைக்கின்றார்கள்; மக்கள் ஜனநாயக சர்வாதிகாரத்தை, கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பாத்திரத்தை எதிர்க்கின்றார்கள் அல்லது சிதைக்கின்றார்கள்; சோசலிச மாற்றத்தை, சோசலிச நிர்மாணப் பணிகளை எதிர்க்கின்றார்கள், அல்லது பலஹீனப்படுத்த முயல்கின்றார்கள். சோசலிசப் புரட்சி, அடிப்படையில் வெற்றிபெற்ற பிறகும், மீண்டும் முதலாளித்துவ அமைப்பைக் கொண்டு வந்து விடலாம் என்று இப்போதும் ஒரு பிரிவினர் நம்பிக்கையோடு இருக்கின்றார்கள் என்பதையும், பாட்டாளிவர்க்கத்தின் மீது அனைத்து முனைகளிலிருந்தும் - தத்துவார்த்த முனை உட்பட - இவர்கள் தாக்குதல் தொடுப்பார்கள் என்பதையும் மறக்காதீர்கள். இவர்களுக்கு வலதுகரமாக இருப்பவர்கள் திருத்தல்வாதிகளே.
"நூறு பூக்கள் மலரட்டும்! நூறு சிந்தனைகள் மலரட்டும்!" என்ற முழக்கத்திற்கு வர்க்க குணாம்சம் கிடையாது. ஆனால் இந்த முழக்கத்தை பாட்டாளி வர்க்கம் தனக்குச் சாதகமாகத் திருப்பிக்கொள்ள முடியும், அதேபோல் முதலாளிவர்க்கமும் மற்றவர்களும் கூட தமக்குச் சாதகமாகத் திருப்பிக்கொள்ள முடியும். மணம் வீசும் மலர்கள் எவை என்பது குறித்தும், நச்சுச்செடிகள் எவை என்பது குறித்தும், பல்வேறு வர்க்கங்கள், பிரிவுகள், சமூகக் குழுக்கள் ஆகிய ஒவ்வொரு பகுதியினரும் தமக்கே உரித்தான வரையறையை,கொள்கைகளைக் கொண்டுள்ளனர். ஆனால், மணம் வீசும் மலர்கள் எவை, நச்சுச்செடிகள் எவை என்பது குறித்து சாமானிய மக்களுக்கும் ஒரு பார்வை உண்டு அல்லவா? அவர்கள் இந்த இரண்டையும் எவ்வாறு பிரிக்கின்றார்கள்? தமது அன்றாட அரசியல் வாழ்வில், ஒருவரது சொல்லும் செயலும் சரியா தவறா என்பதை மக்கள் எவ்வாறு முடிவு செய்கின்றார்கள்? நமது அரசியலமைப்புச் சட்டத்தின் கோட்பாடுகள் தொடுத்து மிகப்பெரியபான்மை மக்களின் விருப்பம், பல்வேறு தருணங்களில் அரசியல்
* ஒருவரது சொல்லும் செயலும் மக்களையும் தேசிய இனங்களையும் ஒன்றுபடுத்துவதாக இருக்க வேண்டும், பிரிக்கக் கூடாது.
* சோசலிச வளர்ச்சி மாற்றத்திற்கும் சோசலிச நிர்மாணப் பணிகளுக்கும் அவை உதவ வேண்டும், தீங்கு விளைவிக்கக் கூடாது.
* மக்கள் ஜனநாயக சர்வாதிகாரத்தை வலுப்படுத்த உதவ வேண்டும், பலஹீனப்படுத்தவோ சிதைக்கவோ கூடாது.
* ஜனநாயக மையத்தை வலுப்படுத்த உதவ வேண்டும், பலஹீனப்படுத்தவோ சிதைக்கவோ கூடாது.
* கம்யூனிஸ்ட் கட்சியை வலுப்படுத்த உதவ வேண்டும், பலஹீனப்படுத்தவோ சிதைக்கவோ கூடாது.
* சர்வதேச சோசலிச ஒற்றுமைக்கும், சமாதானத்தை விரும்புகின்ற உலக மக்களின் ஒற்றுமைக்கும் அவை பயன்பட வேண்டும், தீங்கு விளைவிக்கக் கூடாது.
இந்த ஆறு நிபந்தனைகளிலும் முக்கியமானவை சோசலிசப் பாதை, கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பற்றிக் குறிப்பிடும் நிபந்தனைகள்தான். இந்த நிபந்தனைகள் யாவும் மக்களின் கருத்துரிமையைக் கட்டுப்படுத்தும் நோக்கிலானவை அல்ல, மாறாக ஊக்கப்படுத்துபவை. இந்த நிபந்தனைகளை ஒத்துக்கொள்ளாதவர்கள் தமது நியாயங்களை எடுத்துச் சொல்லலாம். ஆனால் பெரும்பான்மையான மக்கள் இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளவரை, விமர்சனம், சுயவிமர்சனம் ஆகியவற்றை முதன்மையாகச் செய்யவேண்டும். மக்களின் சொல்லும் செயலும் சரியா தவறா என்பதையும் அவை மணம் வீசும் மலர்களா, இல்லை நச்சுச்செடிகளா என்பதையும் இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் எடைபோட்டுப் பார்க்க வேண்டும். இவை அரசியல் உரைகற்கள். விஞ்ஞானக் கோட்பாடுகளின் நம்பகத்தன்மையை அளவிடவும், கலைப்படைப்புகளின் அழகியல் மதிப்பீடுகளை எடைபோடவும் வேறுபட்ட நிபந்தனைகள் உள்ளன. ஆனால் இந்த ஆறு நிபந்தனைகளும் கலை, விஞ்ஞானத் துறைகளின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொருந்தும், நம்மைப் போன்ற ஒரு சோசலிச நாட்டின் எந்த ஒரு விஞ்ஞான, கலைத்துறை நடவடிக்கையின் நோக்கமும் இந்த நிபந்தனைகளைத் தாண்டி வெளியே செல்ல முடியுமா?
மேற்கண்ட நிபந்தனைகள் சீன தேசத்தின் பிரத்தியேகமான வரலாற்றுச் சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டவை. இதேபோல் ஒவ்வொரு சோசலிச நாடும், ஒவ்வொரு கம்யூனிஸ்ட் கட்சியும் தமது நாட்டின் சூழலுக்கும் தேவைக்கும் ஏற்ப தமது சட்டதிட்டங்களை வடிவமைத்துக் கொள்ளலாம், நமது சீன வழியைத்தான் பின்பற்ற வேண்டும் என நாம் வற்புறுத்த மாட்டோம்.
"நீண்டகால தோழமை உறவு, பரஸ்பர கண்காணிப்பு" - இந்த முழக்கமும் சீன தேசத்தின் பிரத்தியேகமான வரலாற்றுச் சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டதுதான். இந்த முழக்கத்தை நாம் நீண்ட பல வருட ஆலோசனைகளுக்குப் பிறகுதான் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளோம், ஏதோ திடீரென ஒருநாளில் வடிவமைக்கப்பட்டதல்ல இது. நீண்டகால இணக்கமான தோழமை உறவு என்ற கருத்து நீண்ட பல நாட்களாக நம்மால் விவாதிக்கப்பட்ட ஒன்றுதான், சோசலிச சமூக அமைப்பு சென்ற வருடம் நிறுவப்பட்டபின் இந்த முழக்கத்துக்கு இறுதியான தெளிவான வடிவம் கொடுத்தோம். முதலாளிவர்க்கம், சிறுமுதலாளிவர்க்க ஜனநாயகக் கட்சிகள் ஒருபுறமும், பாட்டாளிவர்க்கம் மறுபுறமும் அருகருகே இணக்கமாக நீடித்துச்செல்ல முடியாதா? செல்ல முடியும், சோசலிச சமூகத்தைக் கட்டவும் சோசலிசத்தை நிர்மாணிக்கவும் மக்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள, மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடனும் நாம் இணக்கமாகச் செல்வதில் நமக்கு எந்தத் தயக்கமும் இல்லை, 1950 ஜூன் மாதம் நடந்த அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் முதலாவது தேசியக்குழுவின் இரண்டாம் அமர்வில் எனது உரையில் நான் இவ்வாறு கூறியிருந்தேன்:
"மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒருவருக்கு, மக்களுக்கு உண்மையிலேயே சேவை செய்கின்ற ஒருவருக்கு, மக்கள் சிரமத்தில் இருந்தபோது உதவி செய்த ஒருவருக்கு, மக்களுக்கு இப்போதும் எந்தத் தயக்கமும் இன்றித் தொடர்ந்து உதவி செய்துகொண்டிருக்கும் ஒருவருக்கு இந்த நாட்டில்
– மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் தொகுதி-5 பக்கங்கள்- 600-606.
தொடர்புடைய கட்டுரைகள்:
***
எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக