"பின்னை மார்க்சியம்" மீதான விமர்சனம்-01

சற்று முன்னர்,"பின்னை மார்க்சியம்" என்ற நூல் கோரியர் மூலம் கிடைக்கப்பெற்றேன். இந்த நூலையும் இதன் தொடர்பான நூல்களைப்பற்றியும் தொடர் விமர்சனம் எழுத உள்ளோம். இலக்கு ஆசிரியர்களின் சார்ப்பில்.
நூலும் அதன் வெளியீட்டு நிறுவனம் பற்றி
***********************************
பதிப்புரை மற்றும் முன்னுரை வாசித்த்துவிட்டேன். NCBH நிறுவனம் தொடர்ந்து மார்க்சிய ஆசான்களின் நூல்களை கொண்டு வருவதேயில்லை, ஆனால் மார்க்சியம் அல்லாத மார்க்சிய விரோத, ஏன் ஏகாதிபத்திய எடுபிகளின் நூல்களை கொண்டு வந்து குப்பையாக கடைப்பரப்பும் பொழுது! இவர்களின் செயல் உழைக்கும் மக்களுக்கானதா? அல்லது ஏகாதிபத்திய ஆதரவானதா? என்ற கேள்வி எழுவதுடன் இவர்கள் மார்க்சிய விரோத செயலில் ஈடுபட்டுவருவதையும் அவர்களின் திருத்தல்வாதம் அதற்கான நடைமுறையும் மார்க்சியம் அல்லாதவையாக உள்ள பொழுது! அவர்கள் வெளியிடும் நூல்களின் ஆசிரியர்கள் மட்டும் மார்க்சியத்தை நேசிப்பவர்களாக! புரட்சியை நேசிப்பவர்களாக எப்படி காண முடியும்? உழைக்கும் மக்களின் விடுதலையை அடகு வைத்துதானே முதலாளித்துவ கட்சிகளிடம் தோழனாய் நேசிப்பவர்களாக இருக்க முடிகிறது!!! NCBH மற்றும் அந்த நிறுவனம் மார்க்சியத்தை மறுக்கும் மார்க்சிய விரோத பல்வேறு நூல்களை வெளியிடுவதில் கொண்டுள்ள ஆர்வத்தின் ஆதாரத்தின் அடிப்படையில் விவாதிக்க உள்ளோம்.
இப்பொழுது விவாதம் நூலாசிரியர் பற்றியதே
**************************************
இந்த நூலை ந.முத்துமோகனுக்கு சமர்ப்பிக்கிறேன் எனும் பொழுது இவர்களின் தத்துவங்கள் என்ன? உண்மையில் இவர் போன்றவர்களுக்கும் மார்க்சியத்திற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? இவர்களின் நோக்கம் என்ன? என்பதனை தொடரில் விவாதிப்போம் தோழர்களே!!!
தோழர்களே, மார்க்சியத்தை நேசிப்போர் விவாதத்தில் கலந்துக் கொள்ள அழைக்கின்றோம். எங்களுடன் இணைந்து மார்க்சிய லெனினியத்தை கட்டிக்காக்க அதன் உன்னத இலட்சியத்தை உயர்திப்பிடிக்க... உங்கள் எல்லோரையும் அழைக்கின்றோம்.
மார்க்சியம் மட்டுமே உழைக்கும் மக்களின் விடுதலைக்கான தத்துவம் மற்றெல்லாம் ஏகாதிபத்தியம் நீண்டு வாழ அதற்கு தொண்டூழியம் செய்யும் முதலாளித்துவ தத்துவங்களே இதனை லெனின் என்றோ அம்பலப்படுத்தி சவக் குழிக்கு அனுப்பிவிட்டார். இருந்தும் ஏகாதிபத்திய துணையுடன் இவை மீண்டும் மீண்டும் உயிர்பிக்க கால்பரப்ப முனைகிறது... மார்க்சிய வாதிகளே இதுபோன்ற நச்சு வேர்களை மண்ணிலிருந்தும் ஏன் வேரோடும் பிடிங்கி எறிய வேண்டிய அவசியம் மார்க்சிய லெனினியத் தத்துவத்தை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் உண்டு. வாருங்கள் தினம் விவாதிக்க தோழர்களே. முக நூலிலும் மற்றும் இணையத்திலும்..
இங்கே தனிநபர் மீதான விருப்போ வெறுப்போ அல்ல! மார்க்சிய லெனினிய தத்துவத்தை மறுக்க என்னென்ன வேடமிடுகின்றனர் என்பதனை அவர்களின் எழுத்துகளிலிருந்து ஒவ்வொன்றாக உங்கள் முன் வைக்க உள்ளோம்.
ஆக்கப் பூர்வமான விவாதத்தில் தோழர்கள் கலந்துக் கொள்ள அழைக்கின்றோம்.

****************************************************************************************************************

தொடர்புடைய கட்டுரைகள்:தொடர் விவாதம் காண அடுத்த பகுதியின் இணைப்பு இந்த இணைப்பை அழுத்தி செல்லுங்கள் தோழர்களே

2)இதன் தொடர் விவாதம் காண இந்த இணைப்பை அழுத்தவும்

***

எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இலக்கு இதழின் கட்டுரைகள்

மூலதனத்தின் பிறப்பு - மார்க்ஸ்- பிடிஎப் வடிவில்- ஒலி வடிவில் (25-10-2026)

நிலங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்கள் எவ்வாறு கொடூரமான சட்டங்கள் மற்றும் அடிமைத்தனமான முறைகள் மூலம் பாட்டாளி வர்க்கமாக மாற்றப்...

செய்தியை சார்ந்த அலசல்