இன்றைய விவாதகளம்"பின்னை மார்க்சியம்" அத்தியாயம்- 1 லிருந்து
பின்னை மார்க்சியம்: பொருள், தோற்றம் மற்றும் வரலாற்றுப் பின்னணி
மார்க்சியத்திலிருந்து பின்னை மார்க்சியத்திற்கு - இதன் நோக்கம் என்ன இதற்கு பதிலளிக்க மார்க்சிய ஆசான்களின் நூல்கள் நம் முன் உள்ளன உண்மையில் மார்க்சியத்தை நேசிப்போர் அந்த நூல்களிலிருந்து சரி பார்த்துக்
கொள்ள வேண்டும் என்று கூறிக் கொள்கிறோம்.
லெனின்
- ஏன் செய்ய வேண்டும்? (What Is to Be Done?, 1902)
- பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும் (Materialism and Empirio-criticism, 1909)
- பாட்டாளி வர்க்கப் புரட்சியும் ஓடுகாலி காவுத்ஸ்கியும் (The Proletarian Revolution and the Renegade
Kautsky, 1918)
- பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் (The Dictatorship of the Proletariat, 1919 கட்டுரை)
- "இடதுசாரி" கம்யூனிசம்: ஒரு குழந்தைத்தனமான கோளாறு (1920)
எங்கெல்ஸ்
- டூரிங்குக்கு மறுப்பு (Anti-Dühring, 1878)
- இயற்கையின் இயக்கவியல் (Dialectics of Nature, எழுதப்பட்டது 1870–1880கள்)
- லுட்விக் ஃபாயர்பாக்கும் செந்நெறி ஜெர்மன் தத்துவத்தின் முடிவும் (Ludwig Feuerbach and the End of Classical German
Philosophy, 1886)
- கடிதங்கள்: ஜோசப் பிளாக் (1890), கொன்ராட் ஷ்மிட் (1890) – பொருளாதார நிர்ணயவாதம் பற்றியவை
இனி நூலின் மீதான விமர்சனதிற்கு செல்வோம்.
அத்தியாயத்தின் மையக் வாதங்கள் பின்வருமாறு:
- மார்க்சியம்
ஒரு பொருளாதார நிர்ணயவாதக் கட்டமைப்பாக எளிமைப்படுத்தப்பட்டது
(அடித்தளம்–மேற்கட்டுமானம்).
- வர்க்கம்
சமூகத்தின் ஒரே அடிப்படை முரண்பாடு அல்ல; பல்வேறு ஒடுக்குமுறைகளுக்குத் தனித்த தர்க்கங்கள் உண்டு.
- தொழிலாளர்
வர்க்கம் "சிறப்புரிமை பெற்ற புரட்சிகர அகநிலை" என்ற கருத்து
மறுபரிசீலனைக்கு உட்பட வேண்டும்.
- தன்னிலை, அடையாளம், கருத்தியல்
ஆகியவை மொழி/கதையாடல் வழியாக உருவாகின்றன.
- வரலாறு
தற்செயல்தன்மையும் (contingency) அரசியல் போராட்டமும் கொண்டது; முன்கூட்டியே
நிர்ணயிக்கப்பட்ட இலக்கு இல்லை.
- லக்லாவ்–மூஃபேயின்
தீவிர ஜனநாயகமும் மேலாதிக்கக் கோட்பாடும் பின்னை மார்க்சியத்தின் தெளிவான
வடிவம்.
- சோவியத் அனுபவம் சோசலிசத்தின் நம்பகத்தன்மையைச் சிதைத்தது; எனவே மாற்று அரசியல் உத்தி தேவை.
பின்னை மார்க்சியம் பற்றிய இந்த அத்தியாயம் சில முக்கியமான கேள்விகளை
எழுப்புகிறது – குறிப்பாக பொருளாதார நிர்ணயவாதத்தின் வரம்புகள், பன்மைத்தன்மை, தன்னிலையின்
சிக்கல், அரசியல் போராட்டத்தின் தற்செயல்தன்மை. இவை லெனின்
மற்றும் எங்கெல்ஸ் எதிர்கொண்ட கேள்விகளின் மறுவடிவங்களே; அதனால்
அவர்களின் நூல்களுடன் உரையாடுவது அவசியம். ஆனால் இந்த நூல் அதனை செய்யவே இல்லை.
லெனினின் பார்வையில் நாம் கண்டால் இந்த அத்தியாயத்தின் மிகப் பெரிய சிக்கல்:-புறநிலை வர்க்க
நலன்களையும் அரசு அதிகாரத்தையும் மொழி மற்றும் கதையாடலின் மட்டத்திற்குக்
கீழிறக்குவது. இது சமூக அறிவியல் மற்றும் சோசலிசத்தின் அடிப்படையான புறநிலைப் பகுப்பாய்வைக்
கைவிடுவதாகும்.
எங்கெல்ஸின் பார்வையில் இதனை ஆய்வு செய்தால் இதன் சிக்கல்:- இயந்திரத்தனமான நிர்ணயவாதத்தை மறுக்கும்போது, இறுதியில் நிர்ணயிக்கும் அடிப்படையையும் மறுத்துவிடுதல். எங்கெல்ஸ் காட்டிய சமநிலை – பொருளாதார அடித்தளம் + மேற்கட்டுமானத்தின் சார்பு சுயாட்சி + வரலாற்றின் தற்செயல் – அத்தியாயத்தில் பெரும்பாலும் இல்லை. ஏனெனில் இந்த ஆசிரியரின் நோக்கம் மார்க்சியத்தை வளர்பதல்ல மார்க்சியம் அல்லாதவற்றை இங்கே மார்க்சியம் என்று கடைப்பரப்புவதே!
மதிப்பீடு: அத்தியாயம்-1 பின்னை மார்க்சியத்தை விளக்குவதில் பயனுள்ள அறிமுகமாக தெரிகிறது, ஆனால் உண்மையில் இந்த ஆசிரியரின் நோக்கமே மார்க்சியத்தை வளர்பதாக இல்லாத பொழுது ரசிய புரட்சியும் சீனப்புரட்சியும் மந்திரத்தில் நடக்கவில்லை அவை ஒரு நீண்ட போராட்ட மரபையும் ஒரு புரட்சிகர கட்சி அதற்கான புரட்சிகர தத்துவம் அதன் மூலம் நடத்தப் பட்டதே ஆனால் மற்ற நாடுகளில் புரட்சி நடவாமைக்கு காரணத்தை லெனின் தெளிவுப்படுத்தி இருப்பார். ஆனால் இந்த நூலாசிரியர் அதனை பற்றி துளியும் அக்கரையின்றி அதற்கு தீர்வு பின்னை மார்க்சியம் என்று ஏகாதிபத்திய வாதத்தை முன்வைக்கிறார் என்று குற்றம் சாட்ட வேண்டியுள்ளது. மார்க்சிய ஆய்வுமுறையோ அதற்கான விமர்சனத்தை முழுமையாகவோ சரியாகவோ கையாளவில்லை. அதன் ஆதரவாளர் பார்வை வெளிப்படையாக இருக்கிறது; எதிர் வாதங்களுக்கு அது போதிய இடம் கொடுக்கவில்லை.
மார்க்சிய வளர்ச்சியா? அல்லது திருத்தல்வாதமா? (Development vs. Revisionism): லெனின் மார்க்சியத்தை வளர்த்தெடுத்த முறைக்கும், நவீன திருத்தல்வாதிகள் அதை மாற்றுவதற்கும் இடையிலான தெளிவான வேறுபாடு என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்: [மார்க்சியம் (Marxism)] ──► [லெனினியம் (Leninism)] • வர்க்கப் போராட்டம் மற்றும் புரட்சியைத் தக்கவைத்தது. • ஏகாதிபத்தியச் சூழலுக்கு ஏற்ப "பலவீனமான கண்ணி" (Weakest Link) கோட்பாட்டைத் தந்தது. • தத்துவத்தின் புரட்சிகர சாராம்சத்தை (Revolutionary Essence) லெனின் மாற்றவில்லை மாறாக அதனை மேலும் வளர்த்தார்.
லெனினுக்கு மாறாக கழிசடை மார்க்சிய விரோத அறிவாளிகள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் [மார்க்சியம்
(Marxism)] ──► [பிந்தைய மார்க்சியம் (Post-Marxism)] • வர்க்கப் போராட்டத்தையும்
ஆயுதப் புரட்சியையும் நிராகரிக்கிறது. • அமைப்பிற்குள்
(System) சீர்திருத்தம் மற்றும் அடையாள அரசியலை முதன்மைப்படுத்துகிறது.
• தத்துவத்தின் புரட்சிகர சாராம்சத்தையே நீர்த்துப்போகச் செய்கிறது.
இந்த வகையில்தான்தான் மார்க்சியப் போர்வை போர்த்திக்கொண்டு செயல்படும்
அறிவாளிகளின் செயல்கள் மற்றும் பிரச்சாரம் அமைந்துள்ளது.
- லெனினின் பங்களிப்பு: மேலைநாட்டுச் சூழலைத்
தாண்டி, ஏகாதிபத்தியத்தின் பலவீனமான கண்ணியான ரஷ்யா போன்ற
பின்தங்கிய நாட்டிலும் சோசலிசப் புரட்சி சாத்தியம் என்று லெனின் கூறியது மார்க்சியத்தின்
இயங்கியல் ரீதியான வளர்ச்சி (Dialectics). ஏனெனில், அது புரட்சியையோ அரசதிகாரத்தைக் கைப்பற்றுவதையோ மறுக்கவில்லை. இதற்கு மாறாக * நவீனத் திருத்தல்வாதம்:, "பிந்தைய மார்க்சியம்" என்ற
பெயரில் கட்டமைப்புச் சீர்திருத்தங்களையும், முதலாளித்துவ
ஜனநாயகத்திற்குள் இயங்குவதையும் மட்டுமே முன்னிறுத்துவது மார்க்சியத்தை வளர்ப்பது
அல்ல; அது மார்க்சியத்தின் அடிப்படையையே மறுப்பதாகும்.
- 'அரசு'
மற்றும் 'வர்க்க உணர்வு' பற்றிய மார்க்சிய நிலைப்பாடு மார்க்சியத்தின் மாறாத சில அடிப்படை உண்மைகள்
உள்ளதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்:
- அரசு பற்றிய கோட்பாடு: அரசு என்பது நடுநிலையான
அமைப்பு அல்ல; அது ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்கான
கருவி. சோசலிசப் புரட்சியின் மூலம் முதலாளித்துவ அரசைத்
தகர்த்து, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை நிறுவாமல் சமூகத்தில்
உண்மையான மாற்றத்தைக் கொண்டுவர முடியாது.
- புரட்சிகர உணர்வு அளித்தல்: தொழிலாளர்களின்
தன்னியல்பான (Spontaneous) போராட்டங்கள் தொழிற்சங்க உணர்வை
(Trade Union Consciousness) மட்டுமே தரும். அவர்களுக்குப் பாட்டாளி வர்க்க அரசியல் உணர்வைக் கட்சியே வெளியே இருந்து
ஊட்ட வேண்டும் என்ற லெனினியக் கோட்பாடு இன்றைக்கும் மாறாமல் பொருந்துகிறது.
. கிராம்சியம் மற்றும் அடையாள அரசியல் பயன்பாடு
- கிராம்சியின் ஆதிக்கக் கோட்பாடு (Hegemony): கிராம்சியின்
கருத்துக்கள் முதலாளித்துவத்தின் பண்பாட்டு ஆதிக்கத்தைப் புரிந்துகொள்ளப் பயன்பட்டாலும்,
அதை மார்க்சியத்தின் முதன்மை இயக்க ஆற்றலான "பொருளாதார உற்பத்தி உறவுகள்" மற்றும்
"வர்க்கப் போராட்டம்" ஆகியவற்றிற்கு
மாற்றாக நிறுத்துவது தவறான போக்காகும்.
- அடையாள அரசியல் (Identity
Politics): சாதி,
இனம், மொழி சார்ந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிரான
போராட்டங்களை வர்க்கப் போராட்டத்தோடு இணைக்காமல், அவற்றை
மார்க்சியத்திற்கு மாற்றாகவே பயன்படுத்துவது மார்க்சியத்தின் வர்க்கப் பகுப்பாய்வைச்
சீர்குலைக்கும் செயலாகும்.
லெனின் வலியுறுத்துவது என்னவென்றால், மனித உணர்வுக்கும் சிந்தனைக்கும் முன்பே இருக்கும் பொருள் உலகம்
உண்மையானது; அறிவு என்பது அந்த உலகைப் பிரதிபலிப்பதும்,
அதனைப் பரிசோதிக்கக்கூடியதுமான செயல்முறையாகும். சிந்தனை, மொழி, கருத்தியல் ஆகியவை யதார்த்தத்திலிருந்து
தனித்து நிற்கும் சுயாதீன அடிப்படைகள் அல்ல.
இந்தப் பகுதியில் லக்கான், அல்தூசர்,
லக்லாவ்-மூஃபே ஆகியோரின் வழியாக “தன்னிலை மொழி மற்றும் குறியீட்டு
அமைப்புகளால் உருவாக்கப்படுகிறது”, “அடையாளங்கள் அரசியல்
இணைப்பின் வழியாக உருவாக்கப்படுகின்றன” என்ற கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இவை
மனித உணர்வு மற்றும் அரசியல் அடையாளத்தின் சிக்கலைப் புரிய வைக்க,
மொழியையும் கதையாடலையும் யதார்த்தத்தின் முதன்மைத் தளமாக
முன்வைக்கும்போது, அவை லெனினியப் பொருள்முதல்வாதத்திற்கு
முரணாகின்றன.
கதையாடல் வாதத்தின் வரம்பு
லக்லாவ்-மூஃபேவின் கோட்பாட்டில் சமூக முரண்பாடுகள், அடையாளங்கள், மேலாதிக்கம் ஆகியவை கதையாடல் மற்றும் அரசியல் இணைப்பு மூலம் உருவாகின்றன என்று கூறப்படுகிறது. இது அரசியல் போராட்டத்தின் தன்னிச்சைத் தன்மையையும், பன்மைத்தன்மையையும் முன்னிலைப்படுத்துகிறது. ஆனால் லெனினின் பார்வையில், கருத்தியல் போராட்டம் என்பது பொருளாதார மற்றும் வர்க்க உறவுகளிலிருந்து பிரிந்து நிற்பதில்லை. மக்கள் எந்த அடையாளத்தை ஏற்கிறார்கள் என்பது வெறும் கதையாடலின் வெற்றியால் மட்டும் நிர்ணயிக்கப்படுவதில்லை; அது உற்பத்தி உறவுகள், சொத்துரிமை, சுரண்டல், அரசின் வர்க்கப் பண்பு ஆகிய பொருண்மையான நிலைமைகளால் வடிவமைக்கப்படுகிறது. எனவே, “அனைத்து அடையாளங்களும் தற்செயலானவை” என்ற நிலைப்பாடு, சுரண்டலின் கட்டமைப்பு யதார்த்தத்தை மறைக்கும் ஆபத்தைக் கொண்டுள்ளது என்பதே மார்க்சியம் அதனை மறுப்பதே பின்னை மார்க்சியம்.
எங்கெல்சின் இயக்கவியல் நோக்கு
எங்கெல்சின் டூரிங் மறுப்பு இயக்கவியலை இயற்கை, சமூகம், சிந்தனை ஆகிய
மூன்று தளங்களிலும் பொருந்தும் ஒரு பொதுவான இயக்க விதியாகப் புரிகிறது. சமூகம்
நிலையான கட்டமைப்புகளின் தொகுப்பாக அல்ல; முரண்பாடுகள்,
மாற்றம், போராட்டம் ஆகியவற்றின் வழியாக
முன்னேறும் ஒரு இயங்கும் முழுமையாகும்.
இந்த அர்த்தத்தில், பின்னை
மார்க்சியத்தின் “முரண்பாடுகள் என்றும் தொடரும்” என்ற கூற்று எங்கெல்சிய
இயக்கவியலுக்கு நெருக்கமாகத் தோன்றலாம். ஆனால் அது முரண்பாடுகளின் வர்க்கப்
பண்பையும், அவற்றைத் தீர்க்கும் வரலாற்றுச் செயற்பாட்டையும்
தெளிவாகக் குறிப்பதில்லை. முரண்பாடு என்பது ஜனநாயக விவாதத்தின் நிரந்தர அம்சம்
மட்டுமல்ல; முதலாளித்துவச் சமூகத்தில் அது முதலாளி-தொழிலாளி
உறவில் வேரூன்றிய ஒரு பொருளாதார முரண்பாடும் ஆகும்.
வர்க்கம் குறைக்கப்படுவது
இந்தப் பகுதி தொழிலாளர் வர்க்கத்தை “ஒரே சிறப்புரிமை பெற்ற புரட்சிகர அகநிலை” என்று கேள்விக்குள்ளாக்குகிறது. பெண்ணியம், சாதி, இனம், சுற்றுச்சூழல், தேசியம் போன்ற போராட்டங்களை வர்க்கப் போராட்டத்தின் கீழ் அடக்க முடியாது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இவை அக்டோபர் புரட்சி அதற்கு பிந்தைய சோவியத் கட்டுமானத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது லெனின் அக்டோபர் புரட்சியின் நான்காம் ஆண்டில் முன் வைத்த நிலைப்பாடுகளை காணவேயில்லை இந்த நூலாசிரியரின் நோக்கம் அதுவல்ல என்பதனை அவரின் எழுத்துகள் தெளிவுப்படுத்துகிறது.
வரலாற்றுத் தவிர்க்கமுடியாமை குறித்த கேள்வி
இந்தப் பகுதி, மார்க்சியத்தின்
வரலாற்று இலக்குவாதத்தை—அதாவது சோசலிசம் வரலாற்றின் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட
இலக்கு என்ற கருத்தை—விமர்சிக்கிறது.
ஆனால் லெனினும் எங்கெல்சும் வரலாற்றை ஒரு இயந்திர விதியாகக் கருதவில்லை.
அவர்கள் வலியுறுத்தியது என்னவென்றால், வரலாற்று இயக்கத்தில் பொதுவான போக்குகள் உண்டு; அவற்றை
அறிந்து செயல்படுவதே புரட்சிகர அரசியலின் அடிப்படை. தற்செயல்தன்மையை மிகைப்படுத்தி,
வரலாற்றின் பொதுவான இயக்கத்தை மறுப்பது, அறிவின்
சாத்தியத்தையும் அரசியல் உத்தியின் அடிப்படையையும் பலவீனப்படுத்தும் பணியே.
“பின்னை” என்பதன் அரசியல் பொருள்
இந்தப் பகுதி பின்னை மார்க்சியத்தை “மார்க்சியத்தின் முடிவு” என்று கூறாமல், அதன் கேள்விகளைத் தொடர்ந்து கொண்டு
செல்லும் முயற்சியாக விளக்குகிறது. டெரிடாவின் “மார்க்சின் ஆவிகள்”, ஜிஜெக்கின் மறுவாசிப்பு, லக்லாவ்-மூஃபேவின்
மேலாதிக்கக் கோட்பாடு ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிடப்படுகின்றன.
1. அளவுகோல் இல்லாமை: அனைத்து விடுதலைப் போராட்டங்களையும் சமமாகப் பார்ப்பதால், எது முற்போக்கானது, எது பிற்போக்கானது என்று மதிப்பிட முடியவில்லை. லெனின் இதை "அரசியல் சுயாதீனம்" என்ற பெயரில் தவறான சமரசமாகக் கண்டிருப்பார்.
2. வர்க்கத்தின் அரசியல் பங்கு குறைத்து மதிப்பிடப்படுகிறது: உற்பத்தி மாற்றங்களால் வர்க்க அமைப்பு மாறியது உண்மை. ஆனால் அதிலிருந்து வர்க்கச் சுரண்டல் மறைந்துவிட்டது என்று முடிவுசெய்ய முடியாது. அத்தியாயம் "வர்க்கமற்ற" அரசியலை நோக்கிச் சாய்கிறது.
3. வன்முறை மற்றும் அரசு கேள்விகள் தவிர்க்கப்படுகின்றன: மேலாதிக்கம் பற்றிப் பேசும்போது அரசு அதிகாரத்தின் பொருண்மையான அமைப்பு பேசப்படுவதில்லை.
4. "தீவிர ஜனநாயகம்" பற்றிய தெளிவின்மை: அது முதலாளித்துவ சட்ட-அரசியல் சட்டகத்துக்குள்ளா, அல்லது அதைத் தாண்டியதா? அத்தியாயம் பதில் சொல்லவில்லை. காவுத்ஸ்கிய சிக்கலின் நவீன வடிவம் இங்கே உள்ளது.
5. தன்னிலை பற்றிய முரண்: அத்தியாயம் ஒருபுறம் கதையாடல் மூலம் உருவாகும் தன்னிலையைச் சொல்கிறது, மறுபுறம் "பல்வேறு வாழ்க்கை அனுபவங்கள்" பற்றிப் பேசுகிறது. அனுபவம் யாருடையது என்ற கேள்விக்கு பதில் தேவை.
இவ்வாறு பல்வேறு முரண்பாட்டு குவியலாகவும் மார்க்சிய ஆசான் கள் முன்வைத்த தத்துவ ண்டைமுறைகளை ஓரங்கட்டி விட்டு முதலாளித்துவ அறிவாளிகளை முதன்மைப்படுத்தி அதனை மார்க்சியம் என்று இவர் கடை விரிக்கிறார்
*நாங்கள் நூலை வாசிக்காமல் விமர்சிப்பதாக சிலர் எண்ணுகின்றனர், அட முட்டாள்களே இதற்கான பணி என்று இந்த நூல் ஆசிரியர் தன் நூலை விளம்பரப்படுத்தினாரோ அன்றே அவர் அட்டைபடத்தில் பேசியுள்ளவர்களின் அரசியல் நைலப்பாடுகளை தொகுத்து விட்டோம் மேலும் நூலில் இருந்தே அந்த எழுத்துகள் மீதே விமர்சனத்தை முன் வைக்கிறோம்
தொடர்புடைய கட்டுரைகள்:
- 1)இதற்கு முந்தைய விவாதங்கள் அதனை வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் தோழர்களே
2)இதற்கு முந்தைய விவாதங்களை வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் தோழர்களே
***
எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக