ஊழியர் பயிற்சி நூலின் முன்னுரை
கடந்த கால சமுதாயப் புரட்சிகளைப் போல் புரட்சிகர கம்யூனிச இயக்கம் தானாகவே நிறைவேற்றப்படவில்லை; மாறாக இது சுய உணர்வுடன் விஞ்ஞான ரீதியாக அறிந்துணரப்பட்ட மனித சமுதாய வரலாற்று வளர்ச்சியின் புறவய விதிகளின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. பல மில்லியன்களை இட்டுச் செல்லும் பரவலான இந்த இயக்கத்திற்கு ஈடு இணையில்லை. இந்தத் தொடர்பில் அரசியல் தலைவர்கள், ஸ்தாபன அமைப்பாளர்கள், உழைக்கும் மாமக்களின் வழிகாட்டிகள் ஆகியவற்றுக்கான தொண்டர்களைப் பயிற்றுவிக்கும் பிரச்சினை குறிப்பாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
ஊழியர் பயிற்சி நூலை பிடிஎப் வடிவில் டவுன்லோட் செய்து வாசிக்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே
அவரது படைப்புகள் அனைத்திலும் கட்சிக்கான, பொருளாதார துறைக்கான தொண்டர்களைப் பயிற்றுவிப்பது, அவர்களை மேம்படுத்துவது, மக்கள் மத்தியில் அவர்களின் பாத்திரத்தையும் செல்வாக்கையும் அதிகரிப்பது ஆகியவற்றைப் பற்றிய அக்கதை தெட்டத் தெளிவாகச் செய்யப்படுகிறது. தொண்டர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் அவற்றை நடைமுறை ரீதியாகச் சோதித்துப் பார்ப்பதிலும் கட்சியின் மிக முக்கியக் கடமைகளில் ஒன்று அடங்கியுள்ளது என்பதை லெனিন கண்டார். "தேவையானவர்களைத் தேடுங்கள், அவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணியுங்கள்—இதை மக்கள் மதிப்பிடுவார்கள்" என்றார் லெனினி.
தொழிலாளி வர்க்கத்தின் மத்தியிலிருந்தே புரட்சித் தொண்டர்களைத் தேர்ந்தெடுத்து முன்மொழிவது இதில் முக்கியக் கடமையாகும் என்று அவர் கருதினார். கட்சியின் தலைமை ஊழியர்கள் மக்களுடன் இடையறாத தொடர்பு உடையவர்களாகவும் தன்னலமற்று புரட்சிக்குப் தம்மை அர்ப்பணித்தவர்களாகவும் மக்களின் எல்லையற்ற நம்பிக்கையை உடையவர்களாகவும் விளங்க வேண்டும்.
புரட்சிப் போராட்டத்தின் ஆரம்பக் கட்டங்களில் இருந்தே, முழுநேரப் புரட்சியாளருக்கும் மக்கள் லட்சியத்திற்கான போராட்ட வீரருக்கும் அவசியமான உயர்ந்த தனிக்குணங்களைக் கம்யூனிஸ்டுகளுக்கு புகட்ட வேண்டும் என்று லெனின் போதித்தார். சமூக-ஜனநாயகவாதியின் இலட்சியம் தொழிற்சங்கத்தின் செயலாளராக இருத்தல் கூடாது; மாறாக, பொதுஜனங்களின் மத்தியில் எப்போதும் இருக்கக் கூடிய மக்கள் மாமேதையாக இருக்க வேண்டும். புரட்சிவீரன்—கம்யூனிஸ்து தனது பிரஜைக்குரிய கடமையின் முழு முக்கியத்துவத்தையும் ஒட்டுமொத்தமாக புரட்சி இயக்கத்தின் முழுப்பொறுப்பையும் உணருகிறான்.
தொழிலாளி வர்க்கத்தின், மக்களின் நலன்களை, குறுகிய தனிப்பட்ட மற்றும் வேலைக்குழுக்களின் நலன்களுக்கு மேலாக வைக்கும் கம்யூனிஸ்டுகளின் திறமையை லெனின் உயர்வாக மதிப்பிட்டார். உயர்ந்த ஸ்தாபனரீதியான கட்டுக்கோப்பிற்காகவும் ஒழுக்கத்திற்காகவும், எதிர்காலத்தை இயலாது சுமத்தப்படும் சோதனைகளையும் இன்னல்களையும் பொறுத்துக்கொள்ளும் திறமைக்காகவும் அவர் போர்டார்.அதே சமயம், பதவிமோகம், தந்நலம் மற்றும் சகதோழர்களுடனான உறவில் மரியாதையின்மை ஆகியவற்றுக்கெதிரான சகியாமையைக் கம்யூனிஸ்டுகளுக்கு புகட்ட வேண்டியதான அவசியத்தைப் பற்றி கட்சி ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை மீறுவதைக் குறிக்கக்கூடிய, உழைப்பாளி கள் விடுதலை இயக்கத்தின் நலன்களுக்கு பெரும் கேடு விளைவிக்கக்கூடிய கர்வம், "கம்யூனிச கர்வம்" போன்ற "குணங்கள்" வெளிப்படுவதை அவர் கடுமையாகக் கண்டித்தார்.
கட்சித் தொண்டர்களை சரிவரத் தேர்ந்தெடுத்து கல்வி புகட்டுவதற்கான முக்கிய நிபந்தனை ஜனநாயகம் மத்தியத்துவத்தைப் பற்றிய லெனினியக் கோட்பாடுகளைக் கண்டிப்பாக பின்பற்றுவதாகும்; இத்தொகுதியில் இடம் பெற்றுள்ள லெனினின் பல படைப்புகள் இதற்கு அர்ப்பணிக்கப்பட்டவை.
கட்சி கீழிருந்து மேல் வரை ஜனநாயக ரீதியில் கட்டப்பட்டிருப்பதுதான் உன்கட்சி ஜனநாயகத்திற்கு வழிவகை செய்கிறது என்று லெனின் சுட்டிக்காட்டினார். கட்சியின் எல்லா உறுப்பினர்களும் கட்சிப் பணிகளை சம உரிமையுடன் செய்கிறார்கள் என்பது இதன் பொருள். கட்சியில் எல்லாப் பதவிகளில் உள்ளவர்களும் தலைமை உறுப்புகளும் மேலிருந்து நியமிக்கப்படுவதில்லை, மாறாக, தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்கள் கட்சி உறுப்பினர்கள் முன்னும் மக்களின் முன்னும் தங்களது நடவடிக்கைகளைப் பற்றி அவ்வப்போது அறிக்கை சமர்ப்பிக்கக் கடமைப்பட்டவர்களாகிறார்கள். கட்சித் தலைமை பதவிகளுக்கு முன்மொழியப்பட்ட தலைவர்கள் இப்பதவிகளைத் தற்காலிகமாகத்தான் வகிக்கிறார்கள்: குறிப்பிட்ட காலம் முடிந்ததும் இவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படலாம்.
விமர்சன சுதந்திரம், கட்சியால் திட்டமிடப்படும் நடவடிக்கைகளைப் பற்றிய விவாத சுதந்திரம் ஆகியவற்றுக்கும் முடிவுகளை பொதுவாக உருவாக்கி ஏற்பதற்கும் ஜனநாயகம் மத்தியத்துவம் வழிவகோடுகிறது. கட்சித் தலைமையைப்பற்றிய எல்லா விஷயங்களும் பெரும்பான்மை வாக்கின் மூலம் தீர்மானிக்கப்படும். கட்சிக் காங்கிரசுகளால் ஏற்கப்பட்ட எல்லா முடிவுகளையும் நிறைவேற்றுவது கம்யூனிஸ்டுகளுக்குக் கட்டாயமானதாகும். நடவடிக்கைகளின், மன ஒற்றுமையும் இதன் மூலம் சாத்தியமாகிறது. எல்லாக் கட்சி நடவடிக்கையிலும் சுறுசுறுப்பாக பங்கு கொள்ளும் வாய்ப்பையும் மக்களின் உண்மையான தலைவனாக தன்னைப் பயிற்றுவித்துக் கொள்ளும் வாய்ப்பையும் கட்சியின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஜனநாயகம் அளிக்கிறது என்பதிதான் அதன் முக்கியத்துவம் அடங்கியுள்ளது.
பரந்த ஜனநாயகம், திட்டவட்டமான ஸ்தாபனக்கோப்பு, கடுமையான கட்சிக் கட்டுப்பாடு ஆகியவற்றின் உள்ளார்ந்த இணைப்பு, விவாத சுதந்திரம், நடவடிக்கைகளின் முழு ஒற்றுமையின் அடிப்படையில் விமர்சனம், சுயவிமர்சனத்தின் பரவலான வளர்ச்சி—இவைகள்தான் கட்சித் தலைவர்களாகப் போகின்றவர்களின் தோற்றத்திற்கும் வெற்றிகரமான சேவைக்கும் உரிய சூழ்நிலைகள்.
தொழிலாளர் கட்சியில் கட்டுப்பாட்டின் உள்ளடக்கத்தை வரையறுத்து லெனின் எழுதுகிறார்: "நடவடிக்கைகளின் ஒற்றுமை, விவாதம் மற்றும் விமர்சனத்திற்கான சுதந்திரம்—இதுதான் நமது வரையறை. இத்தகைய கட்டுப்பாடுதான் முற்போக்கு வர்க்கத்தின் ஜனநாயகக் கட்சிக்குத் தகுந்தது".
புரட்சிப் போராட்டத்தின், கம்யூனிசக் கட்டுமானத்தின் எல்லா கட்டங்களிலும் கம்யூனிஸ்டுகளை ஸ்தாபனக் கோப்பு, உறுதியான கட்சி கட்டுப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் பயிற்றுவிக்க வேண்டுமென லெனின் கோரினார். "தொழிலாளி வர்க்கத்தின் சக்தி—ஸ்தாபனம், ஸ்தாபனம் இன்றி பாட்டாளி மக்கள் ஒன்றுமேயில்லை. ஸ்தாபனரீதியாக அவர்கள் எல்லாமே" என்று லெனின் போதித்தார்.
அதே சமயம், சிந்தனையற்ற சம்பிரதாயமான கீழ்படிதலுக்குப் பாடுபடாமல், மாறாக, செய்யும் காரியங்களின் அவசியத்திலும் சரித்தன்மையிலும் ஒவ்வொரு உறுப்பினரும் கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் சுயமான கட்டுப்பாட்டிற்காகப் பாடுபட வேண்டுமென லெனின் கூறினார். தொண்டர்களின் உறுதியான சித்தாந்தப் பயிற்சியின் அடிப்படையில்தான் இத்தகைய நம்பிக்கையை அடைய முடியும். இது எப்பொழுதுமே கம்யூனிச கட்சியின் குறிப்பான அக்கறையைப் பெற்றதாக இருந்து வந்துள்ளது.
மார்க்சிய-லெனினிய புரட்சித் தத்துவத்தைப் படைப்பாற்றலோடு படிப்பதும் அதை ஆழ்ந்து புரிந்து கிரகிப்பதும்தான் பாட்டாளி வர்க்க புரட்சிவீரரின் முதற்கடமையாக இருந்துள்ளது, இன்னமும் இருக்கிறது. விஞ்ஞான கம்யூனிசம் கனவோ அல்லது ஒருசில தனிமேதைகளின் கற்பனையோ அல்ல; அது ஒரு கட்டுக்கோப்பான உலகக் கண்ணோட்டமாகும் என்று லெhren எழுதினார். இது எல்லா துறைகளிலும் மனித ஞானம் அடைந்துள்ளது திட்டவட்டமான விஞ்ஞான விவரங்களை ஆதாரமாகக் கொண்டது. "எப்போது ஒருவன் மனிதகுலம் உருவாக்கிய எல்லா செல்வத்தைப் பற்றியும் ஞானத்தால் தனது ஞாபகசக்தியை வளமூட்டிக் கொள்கிறானோ அப்பொழுதுதான் அவன் கம்யூனிஸ்டாக முடியும்" என்ற லெனினின் புகழ்பெற்ற வார்த்தைகள் அனைவருக்கும் தெரிந்ததே.
உழைப்பாளர்கள் நடைமுறையில் சோசலிசக் கட்டுமானத்தைத் துவக்கிய சூழ்நிலையில் சித்தாந்தப் பயிற்சிப் பணியின் புதிய உள்ளடக்கத்தை லெனின் காண்பித்தார். கம்யூனிசத்திற்கு "சாதாரண எழுத்தறிவு போதாது." "கம்யூனிசத்தைக் கற்க வேண்டும், கம்யூனிச சமுதாயத்தை உருவாக்க" கற்றுக் கொள்ள வேண்டும் என்று லெனின் வலியுறுத்தினார். கம்யூனிசத்திற்கான அன்றாட நடைமுறைப் போராமின்றி, இதை உருவாக்குவதில் நிலையாக தனிப்பட்ட முறையில் பங்கு கொள்ளாமல் இதை அடைய முடியாது. "வேலை இல்லாமல், போராட்டமில்லாமல் கம்யூனிசத்தைப் பற்றிய புத்தக அறிவு என்பது... ஒன்றுமே இல்லாததாகும்" என்கிறார் லெனின்.
தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்று பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிலைநாட்டப்பட்டபின் தொண்டர்களைப் பற்றியப் பிரச்சனை குறிப்பான கடுமையுடன் முன்னின்றுள்ளது. போல்ஷிவிக்குகள் கட்சியை நர்வகிக்க கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது, அதாவது "புதிய அமைப்பை வழிகாட்டி ஒழுங்குபடுத்த, முதலாளிகள் இன்றி, முதலாளிகளுக்கு எதிரான பொது வாழ்வின் கட்டுமானத்தில் அனைத்து உழைப்பாளர்கள், சுரண்டப்படுபர்களின் தலைவராக, வழிகாட்டியாக, ஆசிரியராக இருக்க வேண்டும்."
இந்த நேரத்தில் (1917ஆம் ஆண்டு நவம்பர் முதல் 1923 மார்ச் வரை) லெனின், கட்சி மற்றும் அரசு தலைமைப் பதவிகள், சோசலிசக் கட்டுமானப் பணியின் விவகாரத்தில் தொண்டர்களின் பணிகளைப் பற்றிய பிரச்சனைகள் குறித்து எழுதிய திட்டமான செயல்திட்டத்தைத் திட்டினார்; தொண்டர்கள் வாக்களித்தல், அவர்களைத் தேர்ந்தெடுத்தல், தக்க இடத்தில் வைத்தல் ஆகியவற்றைப் பற்றியக் கோட்பாடுகளையும் கோட்டிட்டுக் காண்பித்திருந்தார்.
பொறுப்பான கட்சி, அரசுப் பதவிகளுக்கு ஆட்களை முன்மொழியும்போது அவர்களின் அரசியல் மற்றும் ஆட்சிகிரிய குணநலன்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் லெனினின். எந்த ஒரு தலைமைப் பொறுப்பில் உள்ள விசேஷ ஞானம், அனுபவம், திறமைகள் உடையவராகவும் இருக்க வேண்டும் என்பது இதன் பொருள். "...எப்பப்பட்ட நேர்மையும் எப்பப்பட்ட கட்சிச் செல்வாக்கும், முக்கியமானதாகிய செய்யும் காரியத்தின் உள்ள அறிவை மாற்றாது" என்று சுட்டிக் காட்டினார் லெனின்.
முக்கிய தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் தேர்தல், அவர்களின் மாற்றம், அறிக்கை சமர்ப்பித்தல் மற்றும் அவர்களின் நடவடிக்கைகளை மக்கள் கண்காணித்தல் போன்றவற்றுக்கு அவர் மிகுந்த முக்கியத்துவம் தந்தார்.
தலைவனின் நடவடிக்கைகளைக் கீழிருந்து மக்கள் பரவமாகக் கண்காணிப்பதில் அதிகாரவர்க்க மனப்பாங்கை வர்க்க மனப்போக்கிற்கான எதிரான போராட்டத்திற்கு அவர் பெரும் கவனம் செலுத்தினார். ஜனநாயக அமைப்புகளால் கைகளில் குவித்துறைக்கொள்ளும் நாட்டம், பதவி வேட்கை, அதிகாரம் செலுத்துதல், கர்வம், மக்களிடமிருந்து தள்ளியிருந்தல் போன்ற அதிகாரவர்க்க மனப்போக்கின் ஒரு பிரதிபலிப்பையும் லெனின் மிகப்பெரும் தீது எனக் கருதினார்: இவைகளுக்கு எதிராக கம்யூனிசக் கட்சியின் இடையறாது போராட வேண்டுமென்றார். தலைவர்கள் தங்களின் கொள்கைகளை விளக்கியும் தங்களது நடவடிக்கைகளைப் பற்றிய அறிக்கையை சமர்ப்பித்துத் தொடர்ந்து மக்களுடன் உரையாற்ற வேண்டும். லெனின். அவர்கள் மக்களின் மனப்போக்கை அறிந்திருக்க வேண்டும்; பொது நலன்களை உத்தேசித்து அதன் மேல் தாக்கம் செலுத்தும் திறமையுடையவர்களாய் இருக்க வேண்டும்.
முன்னணித் தொண்டர்கள் மார்க்சியத்திலிருந்து பிறழ்வதைச் சகித்துக் கொள்ளாமை, உயர்ந்த கோட்பாட்டு நெறி, புதியதை உணரும் தன்மை, விமர்சனத்திற்கும் சுயவிமர்சனத்திற்கும் தக்க கவனம் செலுத்துதல் போன்ற குணங்களை உடையவர்களாய் இருக்க வேண்டும்.
சோசலிசக் கட்டுமானத்தில் கட்சிக்குள் தலைமைப் பாத்திரத்தை மறுக்கும் கட்சி விரோதிகளின் முயற்ிகளையும் கட்சித் தலைமையை கலாச்சார, கல்வி துறைகளோடு மட்டுப்படுத்த செய்யப்பட்ட முயற்ிகளையும் தோலுரித்துக் காட்டியதில்தான் லெனினின் மாபெரும் தகுதி அடங்கியுள்ளது. உழைப்பாளர்களின் அரசு மற்றும் சமூக ஸ்தாபனங்களை, உதாரணமாக தொழிற்சங்கங்களை, கட்சிக்கு மேலாக வைக்க விரும்பிய திருத்தவாதிகளின் முயற்சிகளை அவர் மறுத்தார். கட்சிக்கும் தொழிற்சங்கங்கள், கூட்டுறவுடைகள், இளங் கம்யூனிச சங்கம் போன்ற உழைப்பாளர்களின் வெகுஜன சமூக ஸ்தாபனங்களுக்கும் இடையேயுள்ள பரஸ்பர உறவுக்கான விஞ்ஞான அடிப்படையை லெனின் வகுத்தார். வெகுஜன ஸ்தாபனங்களின் மேல் உள்ள கட்சியின் சித்தாந்த மற்றும் ஸ்தாபனச் செல்வாக்கின் தளர்ச்சி அவற்றின் தலைமையும் ஐக்கியத்தையும் எதிர்காலச் சாத்தியக்கூறுகளை இல்லாதவாறு செய்துவிடும்; இது அவற்றின் ஸ்தாபனக் கலைப்பிற்கு மட்டுமே கொண்டுவிட்டுவிடும் என்று லெனின் சுட்டிக் காட்டினார்.
சோசலிசக் கட்டுமானம், அரசிலும் சமுதாயத்திலும் கட்சியின் தலைமைப் பாத்திரம் அப்படியே இருந்தால் மட்டும் போதாது, இன்னமும் வலுப்படுத்தப்பட வேண்டுமெனக் கோருகிறார் என்றார் லெனின். இது இல்லாமல், புரட்சியில் வெற்றிவாகை சூடிய தொழிலாளி வர்க்கத்தால் தன் முன் நிற்கக் கூடிய வர்க்கப் போராட்டத்தின், ஆக்கப் பணியின் எந்த ஒரு புதிய பிரச்சனையையும் வெற்றிகரமாகத் தீர்க்க முடியாது.
அனைத்து கம்யூனிஸ்டுகளையும் பாட்டாளி வர்க்க சர்வதேசத்துவத்திற்கு விசுவாசமான மனப்போக்கில் கல்விபுகட்டுவதற்கு லெனினின் குறிப்பான முக்கியத்துவம் அளித்தார். "மூலதனம் ஒரு சர்வதேச சக்தி. இதை வெல்வதற்குச் சகோதரத்துவமும் அவசியம். நாம் சர்வதேசவாதிகள்" என்று லெனின் எழுதினார்.
தனது நாட்டில் புரட்சி இயக்கத்தின், புரட்சிப் போராட்ட நாடுகளிலும் புரட்சிப் போராட்டத்திற்கு ஆதரவு என்பதைத்தான் சர்வதேசவாதம் நடைமுறை ரீதியாகக் குறிக்கிறது என்று லெனின் போதித்தார். இதில் எல்லாவிதமான சந்தர்ப்பவாதப் போக்குகளுக்கும் எதிரான போராட்டத்திற்கு அவர் முதன்மையான முக்கியத்துவம் அளித்தார். இந்நூலில் இடம்பெற்றுள்ள சர்வதேசவாதம், உலகக் கோட்பாடுகள் மிக நம்பிக்கையான அளவுகோளாகும்; இதன் உதவியால் ஒவ்வொரு கம்யூனிஸ்ட் கட்சியும் தனது அரசியல் கொள்கையை சரிபார்த்துக் கொள்ளலாம்; வலதுசாரிகளுக்கும் "இடதுசாரி" துர்ச்சாகசக்காரர்களுக்கும் பதிலடி தரலாம்.
தொழிலாளர் இயக்கத்தின் தனிப்பட்ட பிரிவுகளில் தோன்றக் கூடிய கருத்து மாறுபாடுகளையும் தவறுகளையும் சமாளிக்க வேண்டியதன் அவசியத்தையும், இயக்க ஒருமைப்பாட்டின் நலன்களுக்காக அவற்றை சர்வதேச அளவில் கவனமாக விவாதித்து கருத்துப் பரிமாறிக் கொள்வதன் அவசியத்தையும் லெனின் வலியுறுத்தினார். அதே நேரத்தில் அவர், புரட்சிகர மார்க்சியத்தின் மாபெரும் இலட்சியங்களிலிருந்து விலகுபவர்களுடனும் அதை இழிவுபடுத்துபவர்களுடனும் சமரசம் செய்து கொள்வதை சகித்துக்கொள்ளாத நிலையில் கட்சித் தொண்டர்களைப் பயிற்றுவித்தார். ஒற்றுமை என்பது ஒரு மாபெரும் செயலாகும்; ஆனால் "மார்க்சியவாதிகளின் ஒற்றுமைதான் வேண்டுமே தவிர, மார்க்சிய எதிரிகளு-றை அதை இழிவுபடுத்தும் கடுமையான ஒற்றுமை தேவையில்லை" என்று லெனின் போதித்தார்.
லெனினிய தத்துவத்தையும் சர்வதேச புரட்சி இயக்கத்தையும் ஒருமைப்பாட்டைப் பிளவுபடுத்துபவர்களுக்கு எதிரான போராட்டத்தில் உள்ள உற்சாகமும் எந்த ஒரு உண்மையான மார்க்சிய-லெனினியவாதியும் தக்க உதாரணமாகும்.
இந்நூல் பரவலான வாசகர்களுக்கானது. கட்சியை உருவாக்கி அதன் உறுப்பினரின் ஒற்றுதிரட்டி உழைப்பாளர்களின் மேல் உள்ள செல்வாக்கை உறுதிப்படுத்தும் முகமாக லெனினின் ஆற்றிய மாபெரும் பணி இந்நூலில் பிரதிபலிக்கிறது. லெனினியப் படைப்புகள், புரட்சிகர மார்க்சியத்தின் சரித்திரத்தினது தத்துவத்தினும் ஆர்வமுள்ள அனைவருக்கும் பெரும் கல்வி புகட்டும், போதிக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குவதோடுன்றி, எல்லா மார்க்சிய-லெனினியவாதிகளுக்கும், அவர்களின் பணிகேற்ற வழிகாட்டியாகவும் விளங்குகின்றன.
ஆ. பிரோஷ்னிக்கல்.
முன்னுரையின் முக்கியக் கருத்துகள்:
-
கட்சியின் பங்கு: கம்யூனிஸ்டு கட்சி தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் தலைவராகவும் அமைப்பாளராகவும் செயல்படுகிறது. அது அறிவியல் சோசலிசத்தின் அடிப்படையில் செயல்திட்டம் வகுத்து, வெகுஜன இயக்கத்தை இணைக்கிறது.
-
புரட்சி தானாக நடக்காது: கடந்தகால சமூகப் புரட்சிகளைப் போல் கம்யூனிசப் புரட்சி தானாக நிகழாது. அது வரலாற்று விதிகளைப் புரிந்து திட்டமிட்டு நடத்தப்பட வேண்டும். அதனால் தொண்டர்களைப் பயிற்றுவிப்பது மிக முக்கியம்.
-
முழுநேரப் புரட்சியாளர்கள்: லெனின் ஆரம்பத்திலிருந்தே முழுநேரப் புரட்சியாளர்களையும் அமைப்பாளர்களையும் உருவாக்குவதை முதன்மையாக வைத்தார். தொழிலாளி வர்க்கத்திலிருந்தே தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்.
-
பொருளாதாரவாதத்திற்கு எதிர்ப்பு: கட்சி தொழிலாளர்களின் பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகப் போராட வேண்டும். ஆனால் அதன் முக்கியப் பணி அரசியல் புரட்சிப் போராட்டம்தான். அதை மட்டுப்படுத்தக் கூடாது என்று லெனின் வாதிட்டார்.
-
தொண்டர்களின் பண்புகள்: கட்டுக்கோப்பு, ஒழுக்கம், தன்னலமின்மை, சுயவிமர்சனம், விமர்சனத்தை ஏற்கும் மனப்பாங்கு ஆகியவை தேவை. பதவி ஆசை, கர்வம், அதிகாரவர்க்க மனப்போக்கு ஆகியவற்றை எதிர்க்க வேண்டும்.
-
ஜனநாயக மையத்துவம்: கட்சித் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், மக்களிடம் கணக்குக் காட்ட வேண்டும். விவாதத்திற்குப் பிறகு எடுக்கப்பட்ட முடிவுகளை அனைவரும் ஒருமித்து நிறைவேற்ற வேண்டும்.
-
ஆட்சி அதிகாரத்திற்குப் பின்: அரசை நிர்வகிக்கவும் சோசலிசக் கட்டுமானத்தை நடத்தவும் தொண்டர்களுக்குப் புதிய பயிற்சி தேவை. "எழுத்தறிவு மட்டும் போதாது, கம்யூனிசத்தைக் கற்று அதை உருவாக்கவும் கற்க வேண்டும்" என்று லெனின் வலியுறுத்தினார்.
-
வெகுஜன அமைப்புகளுடனான உறவு: தொழிற்சங்கங்கள், இளைஞர் அமைப்புகள் போன்ற வெகுஜன அமைப்புகளின் மீது கட்சியின் சித்தாந்தச் செல்வாக்கு பலவீனமானால் அந்த அமைப்புகள் சிதைந்துவிடும்.
-
சர்வதேசியம்: தொழிலாளர் ஒற்றுமையும் சர்வதேசப் பார்வையும் அவசியம். சந்தர்ப்பவாதத்திற்கும் வலது, இடது தீவிரவாதத்திற்கும் எதிராக நிற்க வேண்டும்.
தொடர்புடைய கட்டுரைகள்:
***
எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக