வர்க்கங்கள் நிலவுகின்ற வரையில் தூய ஜனநாயகம் பற்றி பேச முடியாது. வர்க்க ஜனநாயகம் பற்றி மட்டுமே பேச முடியும். தூய ஜனநாயகம் என்பது உழைக்கும் ஏழை எளிய மக்களை ஏய்க்கும் மிதவாதிகள் பயன்படுத்தும் ஒரு பொய்யான தொடராகும் என்கிறார் லெனின். ஆக இங்குள்ள இடதுசாரி கட்சிகள் குறித்தும் அதன் மார்க்சிய விலகலை குறித்தும் தனிக்கட்டுரை எழுத இடமில்லை அதனை, சமரசங்கள் குறித்த கட்டுரையும் அரசும் புரட்சியும் கட்டுரை நிறைவு செய்யும். இனி வரும் விவாதங்களை ஒட்டியே அடுத்த கட்டுரை எழுதும் அதே வேளையில் நடைமுறை விசியங்கள் பற்றிய எழுத்தாளர்களின் கருத்தின் மீது தங்களின் விமர்சனம் கோருகிறது இலக்கு தோழர்களே.
உழைக்கும் மற்றும் ஏழை எளிய சுரண்டப்படும் மக்கள் அனைவரையும் அவர்களின் முன்னணி படையான பாட்டாளி வர்க்கத்தின் கீழ் ஒன்று திரட்டுகிறது. பழைய முதலாளித்துவ பொறியமைவு அதிகார வர்க்கம் செல்வம் முதலாளித்துவ கல்வி சமுதாய உறவுகள் மற்றும் தனி உடமைகள் அனைத்தையும் அனைத்து மக்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இங்கே உழைக்கும் ஏழை எளிய பாட்டாளி வர்க்கம் பெரும்பான்மையினர் அவர்களின் பத்திரிகை முதல் எல்லா சுதந்திரமும் இன்று வரை ஒடுக்கப்பட்ட இந்த மக்களின் கோணத்தில் இருந்து பிரச்சனை முன்வைக்கப்படுகிறது. பாட்டாளி வர்க்க ஜனநாயகமானது ஏழை எளிய உழைக்கும் மக்களின் ஜனநாயகமாக இருக்கிறது.இங்குள்ள ஜனநாயகமானது உழைக்கும் ஏழை எளிய பெரும்பான்மையான மக்களின் ஜனநாயமாகும். ஆக பொதுவாக வர்க்கங்கள் பற்றி பேசாமல் வெறும் ஜனநாயகம் என்பது வர்க்கத்தை மறந்து விட்டு வர்கத்துக்கு அப்பால் ஜனநாயகத்தை தூக்கி பிடிப்பதாகும்.
".... தொழிலாளி வர்க்கம் தனது வளர்ச்சிப் போக்கிலே பழைய முதலாளித்துவச் சமுதாயத்துக்குப் பதிலாக, எல்லா வர்க்கங்களையும் அவற்றின் பகைமையும் விலக்கிவிடும் ஒரு சங்கத்தை அமைக்கும், முறையாகச் சொல்லக்கூடிய அரசியல் அதிகாரம் இனி இராது,ஏனெனில் அரசியல் அதிகாரம் என்பது முதலாளித்துவச் சமுதாயத்திலுள்ள வர்க்கப்பகைமையின் அதிகாரப்பூர்வமான வெளிப் பாடாகும்."
வர்க்கங்கள் ஒழிக்கப்பட்டதும் அரசு மறைந்துவிடும் என்ற கருத்தின் இந்தப் பொதுவிளக்கத்தை, இதற்குச் சில மாதங்களுக்குப் பிற்பாடு - துல்லியமாய்க் கூறுவதெனில் 1847 நவம்பரில் - மார்க்சும் எங்கெல்சும் எழுதிய கம்யூனிஸ்டு அறிக்கையில் காணப்படும் விளக்கத்துடன் ஒப்பிடுதல் பயனுடையது.
"... பாட்டாளி வர்க்கத்தினது வளர்ச்சியின் மிகப் பொதுவான கட்டங்களை விவரித்த நாம்,தற்கால சமுதாயத்தில் ஏறக்குறைய திரை மறைவில் நடைபெறும் உள்நாட்டுப் போரை, அது பகிரங்கப் புரட்சியாய் வெடித்து, முதலாளித்துவ வர்க்கம் பலாத்காரமாய் வீழ்த்தப்படுவதன்மூலம் பாட்டாளி வர்க்க ஆட்சி அதிகாரத்துக்கு அடித்தளம் இடப்படும் நிலை வரையில் உருவரை தீட்டிக் காட்டினோம்...."
"..... பாட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்கத்தின் நிலைக்கு உயரச் செய்வதுதான், ஜனநாயகத்துக்கான போரில் வெற்றி ஈட்டுவதுதான், தொழிலாளி வர்க்கம் நடத்தும் புரட்சியின் முதலாவதுபடி என்பதை மேலே கண்டோம்...."
ஏகாதிபத்திய சூழ்நிலைமைகளில் முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் மிகவும் தீவிரம் அடைந்து இருந்தபோது, தொழிலாளி வர்க்கப் புரட்சி என்பது உடனடியாக நடைமுறைப்பிரச்சனையாக ஆகிவிட்டபோது, தொழிலாளி வர்க்கத்தைப் புரட்சிக்கு ஆயத்தப்படுத்தும் காலம் முடிவுற்று, ஒரு புதிய காலம் தொடங்கி விட்டபோது, அதாவது முதலாளியத்தை நேரடியாகத் தாக்க வேண்டிய காலம் தொடங்கிவிட்டபோது, லெனினியம் வளர்ந்து உருவம் பெற்றது.
ஏகாதிபத்தியத்தை அழிக்க கையை ஓங்கியாக வேண்டிய நிர்பந்தம் இருந்தது. யார் யார் ஜாரியத்தை எதிர்க்க கிளர்ந்து எழுந்தார்களோ, அவர்கள் எல்லோரும் அதே சமயத்தில், ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் கிளர்ந்து எழ வேண்டியவர்களாக ஆயினர். ஏனெனில், ஜாரியத்தை முறியடிப்பதோடு நின்று கொள்ளாமல் அதை அடியோடு வழித்து எறியவும் யாராவது சங்கற்பம் செய்து கொண்டிருந்தால், ஜாரியத்தை வீழ்த்தும் போதே அவர்கள் ஏகாதிபத்தியத்தையும் வீழ்த்த வேண்டியிருந்தது. இவ்விதம் ஜாரியத்தை எதிர்த்துக் கிளம்பிய புரட்சி, ஏகாதிபத்தியத்தை வீழ்த்தக்கூடிய புரட்சியின் எல்லையை எட்டியதோடு மட்டுமின்றி, அந்த எல்லையைத் தாண்டியும் சென்று ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சியாக, ஒரு தொழிலாளி வர்க்கப் புரட்சியாக பனிணமிக்க வேண்டியிருந்தது. (ஸ்டாலின்).
".... பாட்டாளி வர்க்கம் தனது அரசியல் மேலாண்மையைப் பயன்படுத்தி முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்து படிப்படியாய் மூலதனம் முழுவதையும் கைப்பற்றும்; உற்பத்திக் கருவிகள் யாவற்றையும் அரசின் கைகளில், அதாவது ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் ஒருசேர மையப்படுத்தும்; மற்றும் உற்பத்தி சக்திகளது ஒட்டுமொத்தத் தொகையைச் சாத்தியமான முழு வேகத்தில் அதிகமாக்கும்."
அரசு என்னும் பொருள் குறித்து மார்க்சியத்துக்குள்ள மிகச் சிறப்பான, மிக முக்கியக் கருத்துக்களில் ஒன்று, அதாவது "பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம்" (பாரிஸ் கம்யூனுக்குப்பிற்பாடு மார்க்சும் எங்கெல்சும் இப்படித்தான் இதனை அழைக்கத் தொடங்கினர்.) என்னும் கருத்து, இங்கு வரையறுத்துக் கூறப்படுவதைக் காண்கிறோம். அதோடு அரசைப் பற்றிய மிகச் சுவையான ஒரு இலக்கணமும் - மார்க்சியத்தின் "மறக்கப்பட்ட உரைகளில்" இதுவும் ஒன்றாகிவிட்டது - இங்கு நமக்குத் தரப்படுகிறது: "அரசு, அதாவது ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கம்."
அதிகாரப்பூர்வமான சமூக - ஜனநாயகக் கட்சிகளது தற்போதைய பிரச்சார, கிளர்ச்சி வெளியீடுகளில் இந்த இலக்கணம் விளக்கப்படுவதே இல்லை. அது மட்டுமல்ல, வேண்டுமென்றே இது ஒதுக்கித் தள்ளப் படுகிறது . காரணம் என்னவென்றால், இந்த இலக்கணம் சீர்திருத்தவாதத்துக்கச் சிறிதும் இணங்காதது ஆகும் "ஜனநாயகத்தின் சமாதான வழிப்பட்ட வளர்ச்சி" என்பதாய் சகஜமாய் நிலவும் சந்தர்ப்பவாதத் தப்பெண்ணங்களுக்கும் அற்பவாதக் குட்டிமுதலாளித்துவப் பிரமைகளுக்கும் இது முற்றிலும் புறம்பானதாகும்.
பாட்டாளி வர்க்கத்துக்கு அரசு வேண்டும். - எல்லாச் சந்தர்ப்பவாதிகளும் சமூக - தேசிய வெறியர்களும் காவுத்ஸ்கிவாதிகளும் இதைத் திரும்பத் திரும்பக் கூறுகிறார்கள். மார்க்ஸ் இதைத்தான் போதித்தார் என்று நம்மிடம் வலியுறுத்துகிறார்கள். ஆனால் இதோடுகூட கூறப்பட வேண்டியதை அவர்கள் கூற "மறந்துவிடுகிறார்கள்" முதலாவதாக, மார்க்சின் கருத்துப்படி, பாட்டாளி வர்க்கத்துக்கு வேண்டியது உலர்ந்து உதிர்ந்து கொண்டிருக்கும் அரசு மட்டுமேதான், அதாவது உடனடியாகவே உலர்ந்து உதிரத் தொடங்குவதாகவும், உலர்ந்து உதிர்வதாய் அன்றி வேறு விதமாய் இருக்கவொண்ணாததாகவும் அமைந்த ஓர் அரசு மட்டுமேதான். இரண்டாவதாக, உழைப்பாளி மக்களுக்கு வேண்டியது ஓர் "அரசு","அதாவது ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கம்".
அரசு என்பது பலத்தின் ஒரு தனிவகை ஒழுங்கமைப்பு; ஏதோவொரு வர்க்கத்தை அடக்குவதற்கான பலாத்கார ஒழுங்கமைப்பு. பாட்டாளி வர்க்கத்தால் அடக்கப்பட வேண்டிய வர்க்கம் எது? சுரண்டும் வர்க்கம்தான், அதாவது முதலாளித்துவ வர்க்கம்தான் என்பதே இக்கேள்விக்கு உரிய இயற்கையான பதில். சுரண்டுவோருடைய எதிர்ப்பை அடக்குவதற்கு மட்டுமே உழைப்பாளி மக்களுக்கு அரசு தேவைப்படுகிறது. பாட்டாளி வர்க்கத்தால் மட்டுமே சுரண்டுவோருடைய எதிர்ப்பை அடக்கும் பணிக்குத் தலைமை தாங்க முடியும், அதனால் மட்டுமே இப்பணியைச் செய்து முடிக்க முடியும். ஏனென்றால், பாட்டாளி வர்க்கம்தான் முரணின்றி முற்றிலும் புரட்சிகரமான ஒரே வர்க்கம்; முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தில், அவ்வர்க்கத்தை அறவே அகற்றிவிடுவதில், உழைப்பாளர் களும் சுரண்டப்படுவோருமான மக்கள் எல்லோரையும் ஒன்றுபடச் செய்யக் கூடிய ஒரே வர்க்கம்.
சுரண்டும் வர்க்கங்களுக்குச் சுரண்டலை நிலைநாட்டிக் கொள்வதற்காக, அதாவது மிகப்பெருவாரியான மக்களுக்கு விரோதமாய் மிகச் சொற்பமான சிறுபான்மையினரது சுயநலத் துக்காக, அரசியல் ஆட்சி தேவைப்படுகிறது. சுரண்டப்படும் வர்க்கங்களுக்கு, எல்லாவிதச் சுரண்டலையுமே அறவே ஒழிக்கும் பொருட்டு, அதாவது மிகப் பெருவாரியான மக்களது நலன்களுக்காக வேண்டி, நவீன கால அடிமை உடமையாளர்களாகிய நிலப்பிரபுக்களும் முதலாளிகளுமான மிகச் சொற்ப சிற்பான்மையினருக்கு எதிராய் அரசியல் ஆட்சி தேவைப்படுகிறது.
குட்டிமுதலாளித்துவ ஜனநாயகவாதிகள், வர்க்கப் போராட்டத்துக்குப் பதிலாய் வர்க்க இசைவு பற்றிய பகற்கனவுகளில் ஈடுபடும் இந்தப் போலி சோசலிஸ்டுகள், சோசலிச மாற்றத்தையுங்கூட கனவுலகப் பாணியில் சித்தரித்தனர். - சுரண்டும் வர்க்கத்தின் ஆதிக்கத்தை வீழ்த்துவதாய்ச் சித்தரிக்காமல், பெரும்பான்மையினர் தமது நோக்கங்களை உணர்ந்துகொண்டு விடுவதாகவும், சிறுபான்மையினர் சமாதானமாகவே அவர்களுக்கு கீழ்ப்படிந்து விடுவதாகவும் சித்தரிக்கின்றனர். இந்த குட்டிமுதலாளித்துவக் கற்பனை, வர்க்கங் களுக்கு அப்பாற்பட்டது அரசு என்ற கருத்திலிருந்து பிரிக்க முடியாதது.
நடைமுறையில் இந்தக் கற்பனை உழைப்பாளி வர்க்கங்களுடைய நலன் களுக்குத்துரோகமிழைக்கவே செய்தது. உதாரணமாய், 1848, 1871 ஆம் ஆண்டுகளில் பிரெஞ்சுப் புரட்சிகளின் வரலாறும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, மற்றும் பல நாடுகளில் முதலாளித்துவ அமைச்சரவை களில் "சோசலிஸ்டுகள்" பங்கு கொண்டதன் அனுபவமும் இதைத் தெளிவுபடுத்தின.
இன்றைய அரசை பற்றி பேசும் அரசியல்தான் அரசியல் வாருங்கள் தொடர்நது விவாதிப்போம்
No comments:
Post a Comment