கலையும் சமுதாயமும்

 கலை சித்தாந்த உள்ளடக்கம் கொண்டது. கலையும், அரசியலும் வெவ்வேறு மட்டங்களில் பணி புரிகின்றன", என்று லெனின் கூறினர். சிறந்த கலை வடிவமூலம் பிற்போக்கான சித்தாந்தங்களையும் மக்களிடை பரப்பிவிடலாம்; பொய்மைக்கு வெறும் கற்பனைக்கு கலை வடிவந்தந்து மக்களின் சிந்தனையை மழுப்பியும் விடலாம்.

ஓவியக் கலைவடிவம் ஆதி மனிதனேடு வளர்ந்து வந்த கலை வடிவமாகும்
 
இயந்திர உற்பத்தி வளர்ச்சியோடு இன்று மிகவும் ஆதிக்கம் பெற்ற கலைவடிவமாகவும் வளர்ந்து வந்துள்ளது. தொலைத் தொடர்பு நியகழ்ச்சிகளில் வலைதளங்களில் ஏன் பல குழந்தைகளுக்கான சித்திர படங்களும் ஏன் சினிமாக்களும் எப்படியெல்லாம் மக்களின் சிந்தனையை சீரழித்துக் கொண்டுள்ளது என்பதனை புரிந்துக் கொள்ள நம் முன் உள்ள கடவுள் படங்கள் அதனை பற்றி கடந்தகாலத்தை தெரிந்துக் கொள்வோம்.

பின்னர்  இன்று வளர்ந்து நிற்கும் AI தொழிற்நுடபம் படியும் பேசுவோம் முதலில் நாம் எங்கும் காணும் கடவுளர்களின் படங்களும் அதனை பற்றி தெரிந்துக் கொள்வோம். 
ரவி வர்மா (1848-1906) கேரளத்தில் பிறந்தவர். திருவாங்கூர் மகாராசாவின் அரண்மனை ஓவியராக வாழ்ந்தவர். ஆயினும் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று பணத்திற்காக ஒவியம் வரைந் தார். இவரது ஓவியங்களில் இரண்டாந்தர ஜரோப்பிய ஓவிய முறையின் சாயல் இருப்பதாக முதலாளித்துவ ஒவிய வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்

இந்தியாவில் நிலப்பிரபுத்துவத்திற்கு சேவை செய்த ஒவியர்களில் ரவிவர்மாவே முதன்மையானவர் என்று துணிந்து கூறலாம்
இவர் இந்து மத தெய்வங்களுக்கு கற்பனை வடிவம் கொடுத்தார். அத்தோடு இந்திய புராண, இதிகாச காவிய மாந்தருக்கும் பொய்மை வடிவம் தந்தார்.
இன்றுள்ள கடவுள்களின் சிருஷ்டி கர்த்த என்றால் மிகையாகது. ஆம் இவர்தான் இன்றுள்ள எல்லா கடவுளின் உருவங்களை மனித உருவில் கொணர்ந்தவர்.

 

இந்தியாவில் காலனி ஆதிக்கம் உச்சநிலை அடைந்த காலம். எழுத்துகள் அச்சாகி நூல் வடிவாமாகிய  வந்த காலமது. இயந்திர உற்பத்திப் பண்டங்கள் விற்க விளம்பரம் தேவைப்பட்டது. அதன் ஒரு வடிவம்காலண்டராகும்.காலனியஆட்சியாளர்கள் நிலப்பிரபுத்துவத்தையும்  அதன் கலைகளையும் உள்நாட்டில் உடையாது நிலை நிறுத்த ஏகாதிபத்திபத்திற்கு மதமும் தேவைப்பட்டது. ரவிவர்மாவின் ஓவியங்கள், இந்து தெய்வங்களின் படங்கள் காலண்டருக்கு நன்கு பயன்பட்டன. ஆண்டு தோறும் கோடிக்கணக்காக ரவிவர்மா சிருட்டிஷ்த 'தெய்வங்களின் படங்கள் வர்ணப் படங்களாகவே அச்சிடப்பட்டு இந்தியா பூராவும் விற்கப்பட்டது; பரப்பப்பட்டது, இன்று மதவாத கட்சி ஆட்சியில் இந்த பணி தொடரத்தான் செய்கிறது.

 நாம் வீடுகளிலும் வியாபார நிலையங்களிலும் காலண்டர்களிலும் காணும் சிவபிரான், உமாதேவி, பிள்ளையார், லட்சுமி, சரஸ்வதி, நாரதர், கண்ணன், திருமால் படங்கள் யாவும் ரவி வர்மாவின் கற்பனைப் படைப்புகளே யாகும்ரவிவர்மா தீட்டிய ஓவிய வடிவங்கள் மக்கள் நினைவுகளில் பதிந்து விட்டன. பூசை அறைகளிவேயே அவை மாட்டப்பட்டு வழிபடப் படுகின்றன.

ரவிவர்மா சிருட்டித்த கற்பனை ஓவிய உருவங்கள் நாட்டில் பரம் பரை பரம்பரையாகவே இன்று ஆதிக்கம் பெற்றுவிட்டன. அதே தெய்வங்களை புதிய ஓவியர் வரையும் போதும் ரவிவர்மா காட்டிய உருவிலேயே அமைக்க வேண்டியுள்ளத. உதாரணமாக சரஸ்வதியை வேறு உருவத்தில் மற்றோர் ஓவியர் தீட்டின் மக்கள் சரஸ்வதியின் வடிவம் என ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.
இதுதவிர இன்று நாடகத்திலே யாயினும், சினிமாவிலே யாயினும் தெய்வங்களை ரவிவர்மாவின் ஒவியத்தை ஒட்டிய உருவிலேயே கொண்டு வரவேண்டும். நாடகம், சினிமா, சிற்பம் யாவற்றிலும் ரவிவர்மாவின் ஒவியங்கள் ஆதிக்கம் பெற்றுவிட்டன. இதனால் ரவிவர்மா படைத்த ஓவிய வடிவிலேயே நாடகமேடை, சினிமாவில் நாம் நடிகர்களையும் அதே மேக்கப்பில் காண்கிறோம்.
இது ஓவியக் கலையின் ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் காட்டுகிறது. ஒவியம் கூட முதலாளித்துவத்தின் விற்பனைப் பண்டமாகும். அது பெறும் ஏக போகத்தையும் காட்டுகிறது.
தெய்வத்தைக் கூட மனிதன், கலைஞன் மனித உருவிலேயே காண்கிறான். தன்னிலும் பார்க்க உர்ந்த சக்திகள், திறமை உள் இருப்ப தாகவும் படைக்கிறான் . மூன்று, ஆறு முகங்கள், நாலு, ஆறு, பன்னிரு கரங்கள் இருப்பதாகவும் வரைகிறான் ஆயினும் எங்கோ ஒவியனைக் கவர்ந்த, நெருங்கிய, பழக்கப்பட்ட உருவங்களே அவைகளை மறந்துவிட முடிவதில்லை. ரவிவர்மா படைத்த பெண் உருவங்களில் தன் மகளின் சாயலைப் பதித்துள்ளார் என  ஒவிய நிபுணர்களே கூறுகின்றனர்.
கலைவடிவத்தின் மூலம் பொய்மையையும் சிருட்டித்து உண்மை யென்று, நம்பிக்கை ஏற்படுத்தி வெற்றி காண முடியும் என்பதற்கு உதாரணமாகவே ரவிவர்மாவின் ஓவியத்தை காணலாம்.

 

இவை  மட்டுமென்ன இன்றைய  சமூகத்தில் முதலாளித்துவ கலைஞர்களே பல்வேறு கலைவடிவங்கள் மூலமும் இத்தகைய ஏமாற்று வித்தையையே செய்து வருகின்றனர். இவை யாவும் ஆளும் வர்க்க நலன் பேணுவதால் சமுதாய அந்தஸ்தும் பெற்று விளங்குகின்றன.
சமுதாய உணர்வுக்கு? சமுதாய வளர்ச்சிக்கு உதவாத கற்பனை, விஞ்ஞான பூர்வமான உண்மையை, வரலாற்றை ஒட்டாத கற்பனைப் படைப்பு யாவும் பொய்மையை, பொய்யைப் பரப்ப முயலும் படைப்பு களே யாகும்.
நாம் வர்க்க சமூகத்தில் ஆளும் வர்க்க சார்பு கலைஞர்கள் பொய், புழுகு கூற லைசென்ஸ் பெற்றவர்கள் என்று தம் வர்க்க நலன் பேணும் கலைஞர்களை போற்றி வாழ்த்துவர் ஒடுக்கும் வர்க்கம் ஆனால் சோஷலிசம் இத்தகைய பொய் ஏமாற்றுகளுக்கு இடளிக்காது யதார்த்த நிலைக் கோட்பாட்டை முன் வைப்பதாகும்.
உண்மையான நிகழ்ச்சியை மிகைபடுத்திய கற்பனையாக, நடை முறைக்கு சாத்தியமற்றதாக காட்டுவதே கற்பனைவாதமாகும். இவ்வாறு காட்டுவதால் இரு தவறான நிகழ்வுகள் ஏற்பட காரணமாகின்றன.
(1) உண்மையென நம்புகிறவர்கள் ஏமாறுகின்றனர்,
(2) பொய், கற்பனை என எண்ணிபவர்கள் கலையின் உண்மையான பயனை அறிய முடியாத வறாகின்றனர்.
இது கலையின் ஒரு திரிந்த நிலையே ஆகும். மதகுருமார், மன்னர்கள், நிலப்பிரபுக்கள் கலையை இந்நிலையிலேயே வைத்திருந்தனர். பூர்ஷ்வாக்களும் ஆரம்ப நிலையில் கற்பனவாதத்தையே பேணினர்.
முதலாளித்துவத்தில் கலையெடுத்த இயற்பண்பு வாதமும் மற்றோர் திரிபான நிலையே, உண்மையை அப்பழுக்கின்றி காட்டுவதாக கூறி மக்களுக்கு பயனற்ற நிலையை மட்டும் படம் பிடித்தனர். பரவலான மக்களின் உணர்வுகளை ஒளித்தனர். இது அவர்களது சுய நலனைக் காப்பதற்கும் பயன்பட்டது.
இந்திய திரைப்படங்கள் யாவும் கற்பனவாத நிலையிலேயே உள்ளன. உண்மையான வாழ்க்கை நிலைகளை இவற்றில் காணமுடியாது. இவை திரைப்படங்களைப் பார்க்கும் மக்களுக்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கிறது?
உதாரணமாக சென்னை நகரில் கதை நடப்பதாக கொள்வோம். மதுரை அல்லது கொழும்பிலுள்ள மக்கள் அத்திரைப்படத்தை பார்க்கின்றனர். இவர்களில் ஒரு சிலர் தவிர எவருமே சென்னை நகரை நேரில் பார்த்ததில்லை.சென்னையில் மரீன கடற்கரை, அடையாறு வீடுகளையே படத்திலே, காட்டுகின்றனர். அதுவே சென்னை என காட்ட முயலுகின்றனர்.' படத்தைப் பார்த்த வெளியூர் மக்கள் அதுவே சென்னை நகரம் என நம்பிவிடுகின்றனர். அங்குள்ள சாதாரண மக்களின் வாழ்க்கையை, வீடுகளை, உடைகளை, உண்ணும் உணவுகளை அவர்கள் காட்டுவதில்லை. எங்கோ லட்சத்திற்கு ஒருவராக வாழ்பவரின் நடை, உடை வாழ்க்கை ஆசாபாசங்களையே காட்டுகின்றனர். இதனால் உண்மையில் வெளியூர் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். சென்னை சென்றவர்கள், விவேகமுள்ளவர், அந்நகர் வாழ்க்கை பற்றி கற்றவர்கள் மட்டுமே இது பொய்மை என கண்டு கொள்ளுகின்றனர். இது தவிர. அன்றாட வாழ்க்கைப் போராட்டங்களையும் யதார்த்த நிலையில் காட்டாது போலி நிலையில் காட்டுகிறர்கள். சாதாரண உழைக்கும் மக்களின் அன்றாட பிரச்சனைகளை காட்டி அவர்கள் அவற்றிலிருந்து விடுபட்டு முன்னேறுவதை காட்டுவதில்லை. அவர்கள் அறியாத காதல், ஆடம்பர வாழ்வு, குடும்பப்பற்று, பாச உறவுகள் பற்றியே கற்பனையாக காட்டி பிரச்சனைகளை திசை திருப்புகின்றனர்.
கலைவடிவத்தில் காணும் போலி கற்பனைகளை நம்பி நீந்துபவர்கள் யதார்த்த வாழ்வை தரிசிக்க முடியாதவர்களாகின்றனர்; உற்பத்தி, உழைப்பில் ஆர்வம் குன்றி போலிக் கற்பனையில் வாழமுயலும்  அராஜவாதிகளான எண்ணம் படைத்தவர்களாகி விடுகின்றனர்; அபின், கஞ்சா, எல். எஸ். டி. (LSD) போதைகளில் அகப்பட்டவர்களாகின்றனர்; மனோபலம் இழந்த, திரிந்த மனநிலை உள்ள நோயாளராகி சமூகத்திற்கு பயனற்றவர்களாகி விடுகின்றனர்.
யதார்த்த வாழ்வை கலைவடிவில் காண்பவர்கள் கடலின் ஆழத்தை அறிந்து கொண்டே நீரில் இறங்கி நீந்த முனைபவர்களாவர். வாழ்வின் உண்மை நிலையை அறிவு பூர்வமாகவும் அவர்கள் உணர்ந்து கொள்ளு கின்றனர். கற்பனைக்கும் யதார்த்தற்குமிடையில் அவர்களுக்கு முரண் பாடு ஏற்பட வழியில்லை.கலை வடிவங்கள் பலம் வாய்ந்தவையே. பொய்மையையும் நம்ப வைக்கும் சக்தி வாய்ந்தவை. கற்பனவாதத்திலிருந்து விடுபட மற்றுமொரு வாய்ப்பு உண்டு. அது நாம் நிஜவாழ்வை பார்க்க வில்லை,  வாழ்க்கையை கலை வடிவங்கள் மூலம் காண்கிறோம் என்ற  நினைவை அடிக்கடி ஏற்படுத்திக் கொள்வதாகும். நாம் நாடகத்தைப்  பார்த்துக் கொண்டிருக்கிறோம் அல்லது தியேட்டரில் திரையிலே  படங்கள் மூலம் கதையை தெரிந்து கொண்டிருக்கிறோம் என்ற  எமக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். அப்போது கலையின் வடிவம் எம்மை ஏமாற்றி விடமுடியாது.

இன்னும் சில நான் முன்னர் எழுதியவை கீழே

 தோழர்களே இலக்கு இதழ் தொடங்கியதிலிருந்து சமூகத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை மார்க்சிய ஆய்வில் வெளி கொணர்வதும் அதை விவாதிற்கு உடபடுத்தி சரியானவற்றை கற்று தேர்வதையும் நோக்கமாக கொண்டே இதழை நடத்தி வருகிறோம். இது வரை 21 இணைய இதழ்கள் வந்து விட்டது அதில் பல்வேறு அடிப்படை மார்க்சிய புரிதலுக்காக முயற்சி என்பதனை வாசித்தால் அறிந்துக் கொள்வீற்கள்.

நமது தோழர்கள் சினிமாவை சினிமாவாக பாருங்கள் கலையை கலையாக பாருங்கள் என்று பேசுவது உண்மையில் எவ்வளவு அபத்தமானவை என்று விளக்கவே நான் நீண்ட நெடிய கட்டுரை தொடரை எழுதினேன். அதில் நமது முன்னோடிகளின் கருத்துகளையும் பதிவு செய்து இலக்கு இதழில் கொணர்ந்தேன் ஏனோ நமது தோழர்களுக்கு ஏற்புடையவையாக இல்லாமையால் எழுதுவதை தவிர்த்து விட்டேன். நான் அன்று எழுதிய கட்டுரைகளை மீண்டும் உங்கள் முன் வைக்கிறேன் வாசிக்கவும்..

என் எழுத்து முற்றும் முடிவு என்றோ நான் சொன்னவை மட்டுமே சரியானவை என்றோ நான் வாதிடவில்லைஒரு மார்க்சிய பார்வையில் எப்படி உற்று நோக்குவது என்பதே என் எழுத்தின் நோக்கம் தோழமைகளே.

இலக்கு 4 இணைய இதழ் கட்டுரையே சினிமா பற்றிஇந்த இணைப்பை தொட்டால் உள்ளே சென்று வாசிக்கலாம் தோழர்களே. 

கலை இலக்கியம் என்ன?

கலை  தெய்வீகமானது மர்மமானது புரிந்து கொள்ள முடியாத புதிரானது.  கலைஞன் தெய்வீகப் பிறவி என்று கூறுவது யாவும் வெறும் பொய்மையே.

நிலவுடைமை சமூகத்தில் பல்வேறு பிரிவு மக்கள் தமக்கான கலைகளை தங்கள் வாழ்வியலோடு வளர்த்து வந்தனர் (துன்பவியலை பேசும் ஒப்பாரி பாடலும் கூட்டு உழைப்பில் ஈடுபடும் பொழுது கூட்டு பாட்டுகலும் இதில் அடங்கும்ஆனால் நிலவுடைமை சமூகம் தன் கட்டுக்கோப்புக்குள் கலைகளை கட்டிக் காத்தது.

ஆனால் இன்றைய வளர்ந்துள்ள இச்சமூகத்தில் கலைகள் பல வடிவங்களாக விரிவடைந்து சில சுதந்திரமான கண்ணோட்டத்தில் வளர்ந்து வந்துள்ளது.

இன்று

கலை அமைப்பு பணி பற்றிய நுட்பங்களை கற்காமலே கலைஞர்கள் கலைகளை படைப்பதும்சாதாரண மக்களும் அவற்றை சுவைப்பதையும் காணலாம் . இதுவே கலையின் இன்றைய தனிச்சிறப்பு ஏனெனில் கலைகள் யாவும் மனித உணர்வுகளின் தொகுப்பாகும் மனித உழைப்பில் இருந்தே கலைகள் தோன்றுகின்றன கலையை சுவைபவனும் (ரசிபவனும்மனிதனே.

"கலையும் விஞ்ஞானமும் சமூக உழைப்பில் இருந்து தோன்றியவைஇரண்டும் ஒன்றுக்கொன்று ஆதாரமாக உள்ள இருவகைப்பட்ட வடிவங்கள்இவை இரண்டும் மானிட உழைப்பிலே வேர்கொண்டுள்ளனஎன மார்க்சிய அறிஞர் ஜார்ஜ் தாம்சன் கூறுகிறார்.

கலைஞனும் சமூகத்தில் வாழ்வதால் எத்தனை கற்பனையாக கலையை படைத்தாலும் தன்னிச்சையாக படைத்தாலும் அது சமுதாயத்தை ஒட்டியதாக இருப்பதை காணலாம்அக்கலை சமுதாயத்துடன் தொடர்பு கொண்டு சமூகத்தில் காணும் இன்ப துன்ப நிகழ்வுகளை உணர்வுபடுத்தி உழைக்கும் மக்கள் தன் சக்தியை மீண்டும் பெற முயல வேண்டும்.

கலையும் கலைஞனின் சமூக பங்களிப்பும்

கலைஞனுடைய  படைப்பு சமுதாய உணர்வு மட்டத்தில் ந் நிலையில் உள்ளது என்பது முக்கியமாகும்.சமுதாயத்தில் சமத்துவம் சமூக நீதியை நிலைநாட்டி மனிதரது உழைப்பில் ஆர்வம் காட்டி  மேலும் உழைப்பிற்கு உந்துசக்தியாக உயர்த்தி பிடித்து எல்லா ஒடுக்குமுறைகளையும் தகர்க்கும் போராட்டத்தை தொடங்கி வைக்கும் கலை படைப்பே உயர்ந்த கலை படிப்பாகும்.

ஒரு கலைஞன் கலையை படைக்கும் பொழுது எல்லா உருவகத்திலும் புரட்சியை வேண்டியே நிற்காதுஇருந்தாலும் அவை எந்த வர்க்க நலனில் உள்ளது என்பதை கணக்கில் கொண்டு பார்த்தால்,அவர்கள் நோக்கம் ஒடுக்கப்பட்ட வர்க்க நலன் சார்ந்ததா அல்லது ஆளும் வர்க்க நலன் சார்ந்ததா என்று விமர்சகர்கள் தன்னுடைய விமர்சனக் கண்ணோட்டத்தில் இருந்து அணுக வேண்டும்.

கலையும் ரசிகனும்

தனிநபர்கள் சினிமாவின் கதையோடு தமது வாழ்க்கை சம்பவத்தை இனங்கண்டு ஒன்றிவிடலாம்.உதாரணமாக காதலில் தோல்வியுற்ற ஒருவர் சில சினிமாக்கள் ஒருதலை காதல்,காதல் தோல்வி பேசும் படங்களோடு தன்னுடைய வாழ்க்கையோடு ஒன்றிபோவதை ஏற்று கொள்வதை போன்றே பல்வேறு ஒடுக்குமுறை ஆளாகும் பலரும் தன் மீது இழைக்கப்பட்ட குற்றங்களை சினிமாவில் பார்க்கும் பொழுது அந்த வலிகளை இதன் ஊடாக தன்னை உருவகப்படுத்திக் கொள்ளலாம் அதன் வடிகாலாக இதனை காணும் அவருக்கு தீர்வாகஎன்ன சொல்வது என்பதே கலைஞனின் வெற்றி அடங்கி உள்ளது.

மார்க்சிய ஆசான்கள் பேசும் எதார்த்தம்

 "எதார்த்தம் என்பது உண்மை.Realism என்ற ஆங்கில பதத்தையே எதார்த்தம் என கலை இலக்கிய விமர்சனங்களின் போது தமிழில் பயன்படுத்துவது மரபாகிவிட்டது என்கிறார்", தோழர் செகணேசலிங்கம் அவர்கள்.

எதார்த்தம் என்பது மார்க்ஸ் எங்கெல்ஸின் வழிவந்த வார்த்தையாகும் . எங்கெல்ஸ் ஒரு கடிதத்தில் குறிப்பிட்டதை பின்வருமாறு பேராசிரியர் ககைலாசபதி அவர்கள் விளக்குகிறார், "யதார்த்த நெறி என்பது நுணுக்க விபரங்களின் உண்மையுடைமை தவிரவகை மாதிரிக்கு பொருத்தமான பாத்திரங்களை நிலைமைகளுக்கு இணங்க மெய்மை குன்றாத வகையில் சித்தரித்தலாகும்"என்பதே ஏங்கெல்ஸ்  மணிமொழி என்கிறார்.

மேலும்

"யதார்த்தவாதம் சமுதாய முரண்பாடுகளும் அவற்றுக்குக் காரணமான பௌதீக நிலைமைகளுமே வாழ்க்கையின் தன்மைக்குக் காரணம் எனக் கண்டு "துன்பமே இயற்கை "என்னும் சொல்லை மாற்ற முயலும் உள்ளங்களின் நம்பிக்கைக் குரல்என்று .கைலாசபதியே கூறுகிறார்.

கலை இலக்கியம் பற்றி இலக்கு 1 ல் வந்த கட்டுரை இந்த லிங்கை அழுத்தி வாசியுங்கள் தோழர்களே

இனி சினிமா பற்றி

சினிமாவானது முதலாளித்துவ ஆதிக்கத்தின் விற்பனை பொருளாகவே இன்றும் உள்ளன.இங்கு நிலபிரபுத்துவ சிந்தனைகளும் மதிப்புகளும் இன்றும் ஆதிக்கம் பெற்று இருப்பதால் அவற்றை கலை இலக்கியம் மூலமாக முதலாளித்துவம் விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கிறது.

சமுதாய உணர்வை கருத்தில்கொண்டு சமுதாயத்தை மாற்றி மைக்கக்கூடிய புரட்சிகர சினிமா பிற கலை இலக்கியங்களை ஆக்கி மக்களுக்கு வழங்க கூடிய பொருளாதார வாய்ப்புகள் இன்னும் முற்போக்கு இடதுசாரி சிந்தனையாளர்கள் இன்னும் முன்னேறவில்லை.

இந்த நிலையில் மக்கள் முதலாளித்துவ சந்தையின்பொருட்களை வாங்குவது போலவே முதலாளிகள் வழங்கும் கலை இலக்கியங்களையும்  ரசிக்க வேண்டிய கட்டத்தில்தான் உள்ளனர் என்றால் மிகையாகாது என்பேன்.

டால்ஸ்டாய் புரட்சிகளை ஏற்ற புரட்சிகர எழுத்தாளர் அல்ல ஆயினும் தோழர் லெனின் ரஷ்ய நிலப்பிரபுத்துவக் கொடுமைகளை டால்ஸ்டாயின் எழுத்துக்கள் மூலமே அறிந்தேன் என்று கூறினார் இதுவே நாம் எதிர்பார்க்கும் விமர்சனப் போக்கு இங்கேதான் கலைஞனின் படைப்பு உள்ளது.

கலை இலக்கியம் கருத்தியல் சார்ந்தவை மேற்கட்டுமானத்தை சார்ந்த ஒன்று.  மதம் பற்றி மார்க்ஸ் கூறும் போது "மக்களின் அபினி " என்று மட்டும் கூறவில்லை "ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சு இதயமற்ற உலகின் இதயம்" "ஆத்மா அற்ற நிலையின் ஆத்மாஎன்றும் கூறிய பின்னரே "மதம் மக்களின் அபின்என்று சொன்னார்.

அபினி வெறும் மயக்கம் மட்டும் தருவதல்ல ஒரு பொய்மையான தற்காலிக சந்தோஷத்தையும் தருவதாகும் .இதை ஒழித்து எதார்த்தமான நிரந்தர மகிழ்வு ஏற்படுத்துவதற்கு பொய்மையின் தேவையை விடுவிப்பதற்கேற்ற சூழலைகடப்பாடுகளை மன நிலைமைகளை நாம் ஏற்படுத்த வேண்டும்.

பெரும்பாலான மக்கள் சினிமாவின் பல்வேறு  கலை வடிவங்களில் மயங்கி விடுகின்றனர்தற்காலிக பொய்மை மகிழ்வில் மயங்கி  ஆர்ப்பரிக்கின்றனர்.

எப்படி கோயில் ஆராதனைகளில் கோயில் பூஜைகளில் தன்னை மறந்து ஏதேதோ வார்த்தைகளை கூறி அங்கே மயங்கிக் கிடப்பது போல சினிமாவில் காட்டப்படும் பல்வேறு கற்பனைகளில் மூழ்கி கிடப்பதும் மதம் கடவுள் போன்ற கற்பனைகளே அன்றி வேறென்ன?.

மீண்டும் நாம் மார்க்சின் கூற்றுப்படி வருவோம் மதம் என்ற அபினி மூலம் மக்களை பிரித்தும் மோதவிட்டும் தற்காலிக திருப்தி பெறுவதிலேயே இன்றும் மதவாதிகளும் ஓட்டு அரசியல்வாதிகளும் குறியாக உள்ளனர்மக்களுக்கு இதை உணர்த்தி நிரந்தர மகிழ்ச்சியுடன் சேர்ந்து நல்வாழ்வு கிடைப்கேற்ற சூழலை கடப்பாடுகளை மன நிலைகளை ஏற்படுத்தி பொய்மைகளிலிருந்து அவர்களை விடுவிக்கும்.முயற்சிகளில் மக்களை நாம் ஈடுபடுத்த முயல வேண்டும்.

மார்க்சியம் எல்லாத்துறைகளிலும் குறுகிய நோக்கத்திற்கு விரோதமானதுஉலக நாகரிகம் என்னும் வளர்ச்சிப்பாதையில் மார்க்சியம் தோன்றி முன்னேற்றம் அடைகிறது.எல்லா காலங்களிலும் வாழ்ந்து மறைந்த மூளை கூர்மையுடையோர்  மூளைகள் எழுப்பி உள்ள வினாக்களுக்கெல்லாம் விடை கூறுவது மார்க்சியம்லெனின் ( மார்க்சிய அழகியல்பேராநாவானமாமலை பக்கம் 6).

இனி இச் சினிமா மீதான என் விமர்சனம் தொடரும்

நான் இதற்க்கு முன் வைத்த விமர்சனமானது ஒரு கலையை எப்படி ரசிப்பது அதற்கான அளகோல் மற்றும் படம் பெயர் சம்பந்தமான விளக்கம் கொடுத்தேன் இந்த இணையத்தில் காணலாம் (https://ilakkaithedi.com/1666-2/) ஒவ்வொரு நபரும் அக்குறிப்பிட்ட கலையைப் பற்றிய அறிவு அனுபவத்தை முன்வைத்து பேசுவது அவரின் ரசனை மட்டம் அளவில் தன்மையும் வேறுபட்டு இருக்கும் என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.        

மேலும் இப்பொழுது எழுதுவதன் நோக்கம் இன்று சில படங்களை தூக்கி  நிறுத்தி கொண்டாடிக் கொண்டிருக்கும் இடதுசாரிகளின் (என்போரின்அரசியல் வருமையை கருத்தில் கொண்டு எழுதும் கட்டாயத்தில் உள்ளேன்.

தங்களை மார்க்சியவாதிகளாகவும் முற்போக்குவாதிகளாகவும் காட்டிக் கொள்ளும் இவர்கள் எப்படி இந்த பின் நவீனத்துவ அடையாள அரசியலில் சிக்குண்டு கொண்டனர் என்பதனை தேடுவதே இந்தப் பதிவின் நோக்கம்.

அப்படியெனில் படத்தை பற்றி விமர்சனம் இல்லையா என்பவர்களுக்குஅந்த இயக்குனர் தான் சொல்லிவிட்டாரே இந்த படம் முழுக்க கற்பனையானதே, அன்றைய ஜெய்பீம் விமர்சனம் நேரத்தில். (https://www.facebook.com/watch/?v=906975503267650

இன்றுவிடுதலைபடம்பற்றிஆர்பரிக்கும்  இந்த சிவப்பு சித்தாந்தவாதிகள் அடையாள அரசியல் என்ற பின் நவீனத்துவ குப்பைக்குள் மூழ்கி சிக்கி திக்குமுக்காடுவதோடு தனது அணிகளையும் குழப்பி சந்தர்பவாத அரசியலில் வழி தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர் கலை இலக்கியத்தை கூட இவ்வளவு மலிவாக கொண்டு போய் விட்டனர்

முதலாளிதுவ வாதிகள் கூட copy right, royalty என்னும் பொழுது யாரின் கதையை பேசினாரோ அவருக்கான பங்களிப்பு செய்யும் பொழுதுஇங்கே நீங்கள் பேசும் புரட்சியாளரின் பங்களிப்பு என்ன?

நான் பேச வந்தவை மார்க்சியவாதிகள் கலை பற்றிய புரிதலுக்காக மேலும் இயன்ற வரை என் கருத்துகளை முன் வைத்துள்ளேன் நீங்கள் உங்களின் கருத்துகளை முன் வைத்து வாதிட வாருங்கள் தோழர்களே.... பின்னர் பேசுவோம் விவாதித்தின் உடாக....





தொடரும்....

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்