மார்க்சியம் என்றால் என்ன?
கார்ல் மார்க்ஸ், ஃபிரெட்றிக் ஏங்கெல்ஸ் ஆகிய இரு மேதைகளும் விஞ்ஞான பூர்வமாக வகுத்து அளித்துச் சென்ற தத்துவார்த்த பொக்கிஷமே மார்க்சிசமாகும். அன்றுவரை ஆதிக்கம் செலுத்தி வந்த பழைமைவாத கருத்து முதல் உலக பார்வைக்கு எதிராக இயங்கியல் பொருள் முதல்வாதம் என்னும் புரட்சிகரமான உலக பார்வையை மார்க்சியம் நிலைநிறுத்திக் கொண்டது. அவர்கள் முதலாளித்துவம் வளர்ச்சியடையும் காலகட்டத்தில் வாழ்ந்தனர். அவர்கள் முதலாளித்து வத்தின் வளர்ச்சி விதிகளை ஆராய்ந்து, அவற்றை தொழிலாளி வர்க்கம் புரிந்து, முதலாளித்துவத்தை தூக்கியெறி வதற்காக, அவ்விதிகளை தொழிலாளி வர்க்கத்துக்கு போதித்தனர். மார்க்சும், ஏங்கெல்சும் வர்க்கப் போராட்டம், பாட்டாளி வர்க்கப் புரட்சி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஆகியவற்றின் விதிகள் பற்றியும், அரசு பற்றிய தத்துவத்தையும் நமக்குப் போதித்தனர். ஆனால், அவர்கள் தமது கனவு நனவாவதைத் தமது தத்துவங்கள் நடைமுறையாவதைக் காணக் கொடுத்து வைக்கவில்லை. அவர்களுடைய வழிகாட்டுதல் தத்துவம் பின்னர் மார்க்சியம் என அழைக்கப்படுகின்றது. அன்றைய முதலாளித்துவம் தன்னை வளர்த்து நிலை நிறுத்திக் கொள்வதற்கு உலக நாடுகளை அடிமைப் படுத்தி அந்நாடுகளின் விலை மதிப்பற்ற வளங்கள் அனைத்தையும் சூறையாடிச் சென்றது. காலனித்துவ அமைப்பை இறுக்கிக்கொண்டது. இத்தகைய முதலாளித்துவ வளர்ச்சியையும் அதன் ஈவிரக்கமற்ற சுரண்டலையும் மார்க்சிசம் நன்கு வெளிச்சமிட்டுக் காட்டியதுடன் நில்லாது அதற்கு எதிராகத் தொழிலாளி வர்க்கமும் அடக்கப்படும் காலனி நாடுகளும் போராட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியது.
இன்றைய உலகச் சூழலில் முதலாளித்துவம் ஏகாதிபத்திய நிலை நின்று தமது இராட்சத மூலதனம் கொண்டு உலக நாடுகளின் வளங்களைக் கொள்ளையிட புதிய புதிய வழிகளில் கங்கணம் கட்டி நிற்கின்றது. அதுவே உலகமயமாதல் என்னும் நிகழ்ச்சித் திட்டமாகும். முதலாளித்துவம் பற்றிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் மேற்கோளை “அனைத்து உற்பத்திக் கருவிகளின் அதிவேக மேம்பாட்டின் மூலமும், தகவல் தொடர்பு சாதனங்களின் பிரம்மாண்ட முன்னேற்றத்தின் மூலமும் முதலாளித்துவ வர்க்கம் அனைத்துத் தேசங்களையும், மிகவும் அநாகரிகக் கட்டத்தில் இருக்கும் தேசங்களையும் கூட, நாகரிக வட்டத்துக்குள் இழுக்கிறது. முதலாளித்துவ வர்க்கம் தன்னுடைய பண்டங்களின் மலிவான விலைகள் என்னும் வலிமை மிக்க பீரங்கிகளைக் கொண்டு, சீன மதிலையொத்த தடைச்சுவர்களை எல்லாம் தகர்த்தெறிகின்றது; அதன்மூலம், அநாகரிக மக்களுக்கு அந்நியர்பால் உள்ள முரட்டுப் பிடிவாதமான வெறுப்பைக் கைவிட்டுப் பணிந்துபோகக் கட்டாயப்படுத்துகிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையை ஏற்காவிடில் அழிய நேருமென்ற அச்சத்தின் காரணமாக அனைத்துத் தேசங்களும் அம்முறையைத் தழுவிட நிர்ப்பந்திக்கிறது. அனைத்து தேசங்களையும்நாகரிகம் என்று தான் கருதுவதை ஏற்கும்படி, அதாவது, அவை தாமாகவே முதலாளித்துவமாக மாறக் கட்டாயப்படுத்துகிறது. சுருங்கக் கூறின், தன்னுடைய பிரதிபிம்பமான ஓர் உலகைப் படைக்கிறது.
ஆசான் மார்க்சின் மேற்கோள்கள் கீழே:-
- கம்யூனிஸ்டுகளுடைய உடனடி நோக்கம், மற்றெல்லாப் பாட்டாளி வர்க்கக் கட்சிகளின் உடனடி நோக்கம் எதுவோ அதுவேதான். பாட்டாளிகளை ஒரு வர்க்கமாகக் கட்டியமைத்தல், முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துதல், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்தல் ஆகியவைதாம்.
- பொருள் உற்பத்தியில் எந்த அளவுக்கு மாற்றம் ஏற்படுகிறதோ அந்த அளவுக்கு அறிவுத்துறை உற்பத்தியின் தன்மையிலும் மாற்றம் ஏற்படுகிறது என்பதைத் தவிர கருத்துகளின் வரலாறு வேறு எதை நிரூபிக்கிறது? ஒவ்வொரு சகாப்தத்திலும் ஆதிக்கம் செலுத்திய கருத்துகள், அந்தந்தச் சகாப்தத்தின் ஆளும் வர்க்கத்துரிய கருத்துக்களாகவே எப்போதும் இருந்துள்ளன.(க.க அறிக்கை இரண்டாம் அத்தியாயம்).
மார்க்சியதத்துவம், இயங்கியல்-பொருள் முதல்வாதமாகும். பொருள்முதல்வாதமோ இயங்கியல் என்ற கருத்தாக்கமோ மார்க்ஸ் கண்டறிந்தவையல்ல. அவை புராதன கிரேக்க மெய்யியலாளர்கட்கும் இந்தியாவின் மெய்யியலாளர்கட்கும் தெரிந்திருந்தவையே. எனினும் மார்க்ஸின் தனித்துவமான பங்களிப்பு எதுவென்றால் பொருள்முதல்வாதத்தை மாறா நிலையிலினின்றும் இயங்கியலைக் கருத்துமுதல் வாதத்தினின்றும் மீட்டதோடு அவற்றை ஒருங்கிணைத்து முற்றிலும் புதிய மெய்யியலான இயங்கியல் பொருள் முதல் வாதத்தை உருவாக்கியமையாகும்.
“ஏங்கெல்ஸ் கூறியுள்ளதாவது, “சகல மெய்யியல்களதும், குறிப்பாக அண்மைய மெய்யியலினது மாபெரும் அடிப்படைவினா சிந்தனைக்கும் இருப்புக்கும் இடையிலான உறவு பற்றியது. மனத்திற்கும் இயற்கைக்கு மிடையிலான உறவு பற்றியது. மனமா இயற்கையா அடிப்படையானது என்பது பற்றியது. மெய்யியலாளர்கள் இப்பிரச்சினை தொடர்பாக அதற்குத் தத்தமது விடைகட்கு அமைய இரண்டு முகாம்களாகப் பிளவுபட்டு இருந்தனர். இயற்கைக்கு மேலாக மனதின் முதன்மையை வலியுறுத்தி, அதனால் இறுதி ஆய்வில் உலகம் ஏதோ வகையில் சிருஷ்டிக்கப்பட்டது என்று ஊகித்தோர் கருத்து முதல வாத முகாமிற்கு உரியோரானார்கள். இயற்கையேஅடிப்படையானது எனக் கருதிய மார்க்ஸ் கருத்துமுதல்வாதத்தை முற்றாக நிராகரித்த பொருள் முதலவாதியாவார். மார்க்ஸிய பொருள் முதல் வாதத்தின் நிலைப்பாடுகள்.
வரலாற்றுப் பொருள்முதல்வாதம் அல்லது வரலாறு பற்றிய பொருள் முதல்வாதக் கருத்துருவம் என்பது வரலாற்றை ஆய்வதற்கு இயங்கியற்பொருள் முதல்வாத மெய்யியலைப் பிரயோகிப்பதைக்குறிக்கும். மார்க்சுக்கும் ஏங்கெல்சுக்கும் முன்னர், அரசர்களதும் அரசியர்களதும் தளபதிகளதும் பொது மக்களுக்கு ஒரு பங்குமே இல்லாத-அவர்களது ஆசாபாசங்களதும்கதைகளாகவே முதலாளிய வரலாற்றாசிரியர்கள் வரலாற்றை வழங்கி வந்தனர். அவர்களுடைய கரங்களில் வரலாறென்பது உப்புச்சப்பற்ற முறையில் மாண்டொழிந்த தேதிதிகளை ஒப்பிப்பதாகியது.
நடைமுறையிலிருந்த சுரண்டல் முறையைக் காப்பதற்கு, சமுதாயம் என்றுமே மாறாது என்றும் வர்க்கங்கள் எப்போதுமே இருந்துவந்தன என்று அவர்கள் காட்டவிரும்பினர். பைபிளில் வரும் “செல்வந்தன் தனது கோட்டையிலும் ஏழை வாசலிலும்” எனும் வாக்கியம் இந்தப் பார்வைக் கோணத்தைப் பொழிப்பாக எடுத்துக்கூறுகிறது.
எனினும் வரலாற்றுப்பொருள்முதல் வாதம் இந்தப் பழைய கருத்துருவத்தை மறுத்து அதனிடத்தில் சமூக வளர்ச்சியின் விதிகளை வெளிக்கொண்டு வந்து அதன் மூலம் வரலாற்றின் முன்னோக்கிய நடைக்கு துணை செய்யக்கூடிய ஒரு வலிய ஆயுதத்தைப்புரட்சிவாதிகளிடம்கையளித்துள்ளது.
சமுதாயத்தின் உற்பத்தி முறை சமூக அமைப்பின் பண்பையும் ஒரு அமைப்பினின்று இன்னொன் றிற்குச் சமூகத்தின் வளர்ச்சியை தீர்மானிக்கும் சக்தி எது என்றால்? உற்பத்தி சக்திகள்தான் எனலாம்.
மனித இருப்பிற்கு அவசியமானவையான பிழைப்புக்கான வழிவகைகளைப்பெறும் முறையும் சமூகத்தின் வாழ்வுக்கும் இருப்புக்கும் அத்தியாவசியமான உணவு உடை, வீடுகள், உற்பத்திச் சாதனங்கள் ஆகியனவற்றின் உற்பத்தி முறையுமே இச்சக்தி என்று வரலாற்றுப் பொருள் முதல்வாதம்கூறுகிறது.
பொருள் சார்ந்த மதிப்பை உருவாக்க மனிதர்கட்கு உதவும் கருவிகளும் செய்முறைத் திறமைகளிற் பயிற்றப்பட்டதன் விளைவாக உற்பத்திக் கருவிகளை இயக்கிப் பொருள்சார்ந்த மதிப்பின் உற்பத்தியிற் தொடரும் மக்களும், கூட்டாகச் சமூகத்தின்உற்பத்திச் சக்திகளா கின்றன.
பண்டைக் காலந்தொட்டு இன்றைய காலம் வரையில் உற்பத்திச் சக்திகளின் வளச்சியைப் பற்றிய சித்திரம் இது; “செப்பமற்ற கற்கருவிகளினின்று அம்பு-வில்லுக்கான நிலை மாற்றமும், அதையொட்டி, வேடுவ வாழ்க்கை யினின்று விலங்குகளை வசப்படுத்தித் தொடக்க நிலையிலான மந்தை மேய்ப்புக்கு மாற்றமும்; கற்கருவிகளினின்று உலோகக் கருவிகட்கான (இரும்பு கோடரி, இரும்பு முனை பொருத்திய மரத்தாலான ஏர் ஆகியன) மாற்றமும் அதனோடு இணைந்து வணிகத்திற்கும் ... (இத்தியாதி சுருக்கம் நானே)..இயந்திர முறைக்கான மாற்றமும் அதனின்று பெருமளவிலான நவீன தொழில் முறைக்கும் - மனித வரலாற்றின் போக்கில் சமூக உற்பத்திச் சக்திகளது வளர்ச்சி பற்றிய பொதுவானதும் முழுமையற்றதுமான சித்திரம் இதுவே” (தோழர் ஸ்டாலின்).
சமூகத்தின் உற்பத்திச் சக்திகளில் ஏற்பட்ட இம்மாற்றங்கட்கு இசைய மனிதரின் உற்பத்தி உறவுகளும் அவர்களது பொருளாதார உறவுகளும் மாறுகின்றன. சமூகத்தின் உற்பத்திச் சக்திகளில் ஏற்பட்ட மாற்றங்களையொட்டி வரலாற்றின் வழியே ஏற்பட்ட ஐந்துவிதமான சமுதாயங்கள் பற்றி நாம் அறிவோம்.
சமுதாயத்தில் ஏற்பட்ட ஒவ்வொரு மாற்றமும் உற்பத்தி உபகரணங்களில்ஏற்பட்ட மாற்றங்களால் வரையறுக் கப்பட்டும் அம்மாற்றங்களைத் தொடர்ந்துமே நிகழ்ந்துள்ளன என நாம் காணலாம். எனவேசமூகத்தின் வரலாறு என்பது பொருள் சார்ந்த மதிப்புக்களின் உற்பத்தியாளர் களது வரலாறேயாகும்.
இவ்விடத்து நாம் புரிந்துக்கொள்ள வேண்டிய வொரு அம்சம் ஏதெனின் உற்பத்தி உபகரணங் களின் வளர்ச்சியும் அதன் விளைவாக மனிதரது உற்பத்தி உறவுகளில் ஏற்படும் மாற்றமும் பழைய சமுதாயத்தினுள்ளே நிகழ்வது மட்டுமன்றி மனிதனது விருப்பு வெறுப்புக்கட்கு அப்பாற்பட்டே நிகழ்கின்றன. எடுத்துக்காட்டாக, தீயையோ இரும்பினது பயனையோ விலங்கினங்களை வசப்படுத்துவதையோ மனிதன் முதன் முதலாகக் கண்டறிந்தபோது, அவற்றையடுத்துச் சமுதாயத்தில் எவ்விதமான மாற்றங்கள்நிகழும் என்பதை உணராதவனாயே இருந்தான். ஆயினும், அதேசமயம் உற்பத்தி முறைகளில் ஏற்பட்டமாற்றங்களின்வேகத்தை யொட்டி மனிதரின் உற்பத்தி உறவுகள் மாறாதபோது, மாற்றத்தைத் துரிதப்படுத்துவதில்ஒரு முக்கிய பங்கு வகிக்கும் புதிய சிந்தனைகளும் புதிய கொள்கைகளும் உருவாகின்றன.- “அரசியற் பொருளாதாரத்தின் விமர்சனம்’ எனும் தனதுநூலுக்கான வரலாற்று முக்கியம் வாய்ந்த முன்னுரையில், மார்க்ஸ் வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தின் சாராம்சத்திற்கான விளக்கத்தைத் தருகிறார்.
எனவே மனித இனம் தன்னாற் செய்யக் கூடிய பணிகளையே தனக்கு விதிக்கிறது. ஏனெனில், இவ்விடயத்தைக்கூர்ந்து நோக்குவோமாயின் எப்போதும் ஒரு பணியை நிறைவேற்றுதற்கு அவசியமான நிலைமைகள் ஏற்கெனவே உள்ளபோது அல்லது உருவாகி வருகின்ற போதே அப்பணியும் தோற்றம் பெறுகிறது என நாம் காணலாம்.
- ஆக,”மார்க்ஸ்,ஏங்கெல்ஸ் ஆகிய இரு மேதைகளும் விஞ்ஞான பூர்வமாக வகுத்து அளித்துச்சென்ற தத்துவார்த்த பொக்கிஷமே மார்க்சிசமாகும். அன்றுவரை ஆதிக்கம்செலுத்தி வந்த பழைமைவாத கருத்து முதல் உலகபார்வைக்கு எதிராக இயங்கியல் பொருள் முதல்வாதம் என்னும் புரட்சிகரமான உலக பார்வையை மார்க்சிசம் நிலைநிறுத்திக்கொண்டது. இத்தகைய மார்க்சிய உலக பார்வையானதுபாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கு மட்டுமன்றிமுழு மனிதகுல விடுதலைக்குமான தத்துவமாக மாபெரும் வலிமையையும் பெற்றக் கொண்டது”.
மார்க்சியம் ஒரு விஞ்ஞானபூர்வமான தத்துவார்த்தத்தை முன்வைக்கின்றது. அத்துடன் அது தன்னை நிறுத்திக் கொள்ளவில்லை. எவ்வாறு முதலாளித்து வத்தின் தோற்றம், வளர்ச்சி என்பவற்றை நடைமுறை ஆய்வுக்கு உட்படுத்தி தனது முடிவுகளை திடப்படுத்தி நிரூபித்துக் கொண்டதோடு அவற்றை முதலாளித்து வத்திற்கு எதிரான போராட்டமாகப் பிரயோகித்தும் மார்க்சியம் வெற்றி கண்டு கொண்டது அவை லெனியமாக மாவோ சிந்தனையாக வளர்ந்தது.
கம்யூனிச அறிக்கையில் மார்க்சும், எங்கெல்சும் “சமூகத்தின் இதுவரையிலான வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே!” என்றார்கள்.
கம்யூனிஸ்ட் அறிக்கை வெளி வருவதற்கு முன்பு வரை சோசலிசத்திற்கான இயக்கம் குழப்பத்தில் இருந்தது. அதாவது முதலாளித் துவ முறைமை குறித்த அதன் ஆய்வு, அதன் நோக்கங்கள், இலக்குகள் மற்றும் முதலாளித் துவ முறையை தூக்கி எறிவதற்கான வடிவங்கள், வழி முறைகள் ஆகியன பற்றிய சித்திரம் இல்லாமல் இருந்தது. முதல் முறையாக கருத்துமுதல்வாத அணுகுமுறை களையும், திட்ட வட்டமற்ற கருத்துக் களையும் அடித்து செல்கிற அலையாக கம்யூனிஸ்ட் அறிக்கை அமைந்தது. அது ஓர் அறிவியல் பூர்வமான இயங்கு தளத்தை கம்யூனிச இயக்கத்திற்கு தந்தது. கம்யூனிஸ்ட் அறிக்கை, முதலாளித்துவத்தை வெற்றி பெற தொழிலாளி வர்க்கத்திற்கு உணர்வு மிக்க, பாட்டாளி வர்க்க தத்துவத்தை அடிப்படையாக கொண்ட, ஒழுங்கமைக்கப்பட்ட கட்சி தேவை என்பதை அழுத்தமாக வலியுறுத்துகிறது. அறிக்கையின் வார்த்தைகளில் ” கம்யூனிஸ்டு கள்… ஒரு புறம், நடைமுறையில், ஒவ்வோர் நாட்டின் தொழிலாளி வர்க்க கட்சிகளின் முன்னேறிய, உறுதிமிக்க பகுதியினர் ஆவர்; இன்னொரு பக்கம், தத்துவ கோணத்தில், பாட்டாளி வர்க்கத்தின் பெரும் திரளில், மாற்றத்திற்கானபாதை- சூழ்நிலைகள்- பாட்டாளி வர்க்க இயக்கத்தின் பொதுவான இறுதி விளை பொருள் ஆகியன பற்றிய தெளிவான புரிதல் கொண்டிருக்கும் பகுதியுமாகும்”.
முதல் அகிலம் உருவாவதற்கு முன்பே ஓர் வரலாற்றுப் பெருநிகழ்வை உலகம் கண்டது. அதுவே பாரிஸ் கம்யூன். முதலாளித்துவத்தை தூக்கி எறிய தொழிலாளி வர்க்கம் எடுத்த முதல்முயற்சி என்று அதை அவர்கள் வர்ணித்தனர். முதல்அகிலம் 1864 முதல் 1876 வரையிலான குறைவான காலமே வாழ்ந்தது. இருப்பினும் மார்க்சீய கருத்துக்களை வெகு மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் முக்கியப் பங்கை அது ஆற்றியது.
1889 ல் வந்த இரண்டாவது அகிலம் புரட்சிகர தத்துவத்திற்கும், திருத்தல்வாதத்திற்கும் இடை யிலான பெரும்போராட்டத்தை எதிர்கொண்டது. இரண்டாவது அகிலத்தில் இருந்த சக்திமிக்க, செல்வாக்கு மிக்க தலைமையையும் மீறி லெனின் மார்க்சீயத்தை ஏகாதிபத்திய வளர்ச்சி கட்டத்தில், புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ற புதிய உயரங்களுக்கு கொண்டு சென்றார்.
இந்த காலம் முழுவதும் கம்யூனிஸ்ட் இயக்கம் ஐரோப்பா, அமெரிக்க கண்டங்களுக்குள்ளேயே சுருங்கி நின்றது. காலனிநாடுகளுக்கு அது விரிவடையவில்லை. அக்டோபர் புரட்சிக்குப் பின்னரே காலனி நாடுகளில் சோசலிச சிந்தனைகள் பரவத் துவங்கின. முதலாளித் துவத்தின் இறுதிக்கட்டம், உச்சகட்டம் ஏகாதிபத்தியம் என்கிற லெனினின் ஆய்வு முடிவு. சோசலிச புரட்சிகள் வளர்ந்த முதலாளித்துவ நாடுகள் மட்டுமின்றி ஏகாதிபத்திய நாடுகளின் கண்ணி பலவீனமாக உள்ள, ஒப்பீட்டளவில் பின் தங்கிய பொருளாதாரம் கொண்ட நாடுகளிலும் வெற்றி பெறும் என்பதே அது. லெனின் மதிப்பீட்டில், உலகம் முழுவதும் புரட்சி ஏக காலத்தில் நடந்தேற வேண்டியதில்லை; மாறாக தனித்தனி நாடுகளிலும் அது வெற்றி பெறலாம். அக்டோபர் புரட்சி இக் கருது கோளை நடைமுறையில் நிரூபித்தது.
அக்டோபர் புரட்சி முடிந்து ஒன்றரை ஆண்டுகள் கழிந்த பின்னர் மூன்றாவது சர்வதேச அகிலம் பிறந்தது. பல்வேறு நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள், குழுக்கள் அகிலத்தில் இடம் பெற்றன.
ரஷ்யப் புரட்சியின் வெற்றி உலகம் முழுவதும் இருந்த கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு உத்வேகம் அளித்தது.
காலனி நாடுகளின் மக்கள் ஆதிக்கத்திற்கு எதிராக போராடும் போது தேச விடுதலைக்காக போராடும் போது அவர்களின் நம்பகமான நண்பனை, தோழமையை புரட்சியில் கண்டனர். அக்டோபர் புரட்சி உலகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் தேசிய உணர்வுகளை, எதிர்பார்ப்புகளை விசிறி விட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகள் உலகம் முழுவதும் பல பகுதிகளில் வளரத் துவங்கின. 1918 ல் இருந்து 1931 க்குள்ளாக கிட்டத் தட்ட 12 நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பிறந்தன. இதில் துருக்கி, இந்தோனேசியா, சீனா, இந்தியா, ஜப்பான், பர்மா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளும் அடக்கம்.இந்த பாடத்திலிருந்து நமது படிப்பினைக்கு செல்வோம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றம்
உலகம் முழுவதும் இருந்த புரட்சிக்காரர்கள் போன்றே இந்தியப் புரட்சியாளர்களும் ரஷ்ய புரட்சியால் ஈர்க்கப்பட்டனர். ஜெர்மனி, ஆப்கானிஸ்தான் மற்றும் பல நாடுகளில் இருந்த இவர்களில் பலர் மாஸ்கோ சென்றனர். லெனின் அவர்களை சந்தித்தார். தேசிய விடுதலைப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு எடுத்துரைத்தார். தனது ஆதரவினையும் தெரிவித்தார். ஜெர்மனி, ஆப்கானிஸ்தானில் அக்டோபர் புரட்சிக்கு முன்னரே இருந்த இந்திய புரட்சியாளர்கள் சான் பிரான்சிஸ்கோவை தலைமையகமாக கொண்டிருந்தனர். பிரிட்டிஷ்ஆதிக்கத்தில் இருந்து இந்தியாவை விடுவிப்ப தற்காக 1913-14 லிலேயே கத்தார் கட்சியை துவக்கியிருந்தனர்.அதற்கும் முன்னதாக 1905-07ல் தலைமறைவாக இருந்த புரட்சியாளர் வட்டம் லண்டனில், பின்னர் பாரீசில் செயல் பட்டது. வெளிநாட்டில் வாழ்ந்த இவர்கள் போல்ஷிவிக் கட்சியோடு நெருங்கிய தொடர்பு களை ஏற்படுத்தினர்.முதல் உலகப் போர் உலகம் முழுவதும் புதிய எழுச்சியை உருவாக்கியது. இந்தியாவும் அதற்கு விதி விலக்கு அல்ல. இந்த போரின் போது இந்திய இராணுவத்திற்குள் இந்த கத்தார் கட்சியினர் ஊடுருவி புரட்சிக்கு திட்டமிட்டனர். அவர்கள் கடுமையான அடக்கு முறைக்கு ஆளாயினர். பலர் சிறைச் சாலைக்கு அனுப்பப்பட்டனர். மற்றவர்கள் அந்தமானில் இருந்த இருண்ட செல்களில் அடைக்கப்பட்டனர். ஜாலியன் வாலாபாக் கூட்டத்தில் திரண்ட பெரும் திரள், மக்கள் மத்தியில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக இருந்த கோபத்தின் வெளிப் பாட்டை எதிரும் புதிருமான நிலைப்பாட்டை புரிந்துக் கொள்ள இந்தியா உருவாக்கத்தில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கவாதிகளின் காலகட்டத்தை புரிந்துக் கொள்ள வேண்டும். ஈடிணையற்ற துன்பமும் தியாகமும், ஈடிணை யற்ற புரட்சிகரவீரமும், நம்புதற்கரிய முனைப்பும், அயராத தேடலும், ஆராய்ச்சியும் ,நடைமுறைச் சோதனையும், ஏமாற்றமும், சரிபார்த்தலும், ஐரோப்பிய அனுபவத்துடனான ஒப்பிடலும் அரைநூற்றாண்டுக் காலத்தில் அனுபவித்த வேதனையின் வாயிலாய் ரஷ்யாவானது, பிழையற்ற ஒரேயொரு புரட்சித் தத்துவமான மார்க்சியத்தை வந்தடைந்தது. நமது முன்னோடிகளின் வரலாற்று பாடங்களின் கற்று தேறுவதன் நோக்கம் சரியானவற்றை நாம் முன்னெடுத்து செல்லவும் தவறானவற்றை ஒதுக்கி தள்ளவும் நம்மை நாம் வளர்திருக்க வேண்டும்.
பிரிட்டனின் ஆதிக்கத்து முன்பு வரலாற்று அளவிலும் அரசியல் நிர்வாக அளவிலும் இந்தியப் பகுதிகள் ஒரு நாடாக இருந்ததே இல்லை இன்னும் குறிப்பாகச் சொன்னால் தமிழ்தேசம் (Tamil Nation) கூட இருந்ததும் இல்லை.
தமிழ் தேசிய இனம் மட்டுமல்ல. எல்லா தேசிய இனமும் தான்.ஆனால் தமிழ்மொழி பேசும் பல பகுதிகள் (Principalities) இருந்தன. (இதே போல் பல்வேறு மொழி பேசும் பகுதிகள் இருந்தன). இந்தப் பகுதிகளில் இருந்த சமூகப் பொருளாதார நிலையை நிலவுடைமை அமைப்பு (Feudal Society) என்பர். நீண்ட நெடுங்காலமாக சிற்சில மாற்றங்களுக்கே உட்பட்ட இச்சமூக அமைப்பை பிரிட்டன் ஆதிக்கவதிகள் தம் நாட்டின் பொருளியல் நலங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்தனர்.
ரஷ்யப் புரட்சி அக்டோபர் 1917ல் வெற்றி பெற்ற பிறகு மேற்கத்திய நாடுகளிலும் கீழ்த் திசை நாடுகளிலும் மார்க்சியக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்த படித்த அறிவாளிகள் கம்யூனிஸ்ட் கட்சிகளை அமைக்கத் தொடங்கினார்கள்.அதேபோன்று இந்தியா விலும் வெளி நாடுகளிலும் இருந்த படித்த எம்.என்.ராய் போன்ற அறிவாளிகளின் சிலகுழுக்கள் மார்க்சியத்தின் பொதுவான கோட்பாடுகளை இந்தியாவின் சூழ்நிலைக்கு ஏற்ப, பழைய சோவியத் ஒன்றியத்தில் இருந்த தாஷ்கண்ட் நகரத்தில், இந்தியப் பொதுவுடமைக் கட்சியைத் தெடங்கினார்கள். பிந்தைய காலங்களில் இலட்சியங்களில் இருந்து விலகிச் சென்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டவராயினும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதில் எம்.என்.ராய் செய்த பங்களிப்பை நாம் மறுதலிக்க இயலாது. இந்தியாவில் இயக்கத்தின் உருவாக்கத்தலைவர்களில் ஒருவரான எம்.என்.ராய் மெக்சிகோ கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அவர் கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயற் குழுவிற்கு அதன் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அனுஷிலான் சமிதி என்ற பரவலாக அறியப்படாத புரட்சிகரகுழுவில் இருந்த ராய் ஆயுதங்கள் சேகரிப்பதற்காக மெக்சிகோ சென்றார். அப்போது இந்திய புரட்சியாளர்களுக்கு ஆயுதப் பஞ்சம் இருந்தது. மெக்சிகோவில்தான் சோசலிச கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். அதன் உறுப்பினர் ஆனார். பிறகு அதன் செயலாளர் ஆகவும் உயர்ந்தார். இவரின் தலைமையில்தான், இவர் கம்யூனிச கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட பிறகு அந்த சோசலிச கட்சி, மெக்சிகோ கம்யூனிஸ்ட் கட்சியாக மாறியது. தோழர் முசாபர் அகமது ”நானும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும்” என்ற நூலில், ராய் மெக்சிகோ கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாக சென்றாலும்” மாஸ்கோவில் அவருக்கு கிடைத்த இதமான வரவேற்புக்கும், பாராட்டுகளுக்கும் காரணம் அவர் இந்தியர் என்பதும் மார்க்சியவாதி என்பதுமே ஆகும். இரண்டாவது கம்யூனிஸ்ட் அகிலத்தில், தேசிய, காலனியப் பிரச்சினைகள் குறித்த நமது முன்னோடிகளின் வரலாற்று பாடங்களின் கற்று தேறுவதன் நோக்கம் சரியானவற்றை நாம் முன்னெடுத்து செல்லவும் தவறானவற்றை ஒதுக்கி தள்ளவும் நம்மை நாம் வளர்திருக்க வேண்டும்.
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ரஷ்யாவில் மூன்றுபுரட்சிகள் நடந்தது. அதன் பாதிப்பு இந்தியாவிலும் எதிரொலித்தது. இந்தியாவிலுள்ள புரட்சிகர அறிவுஜீவிகளும் ரஷ்யப்புரட்சியால் கவரப்பட்டு இந்தியாவிலும் பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிராக, ரஷ்யாவில் நடந்தது போன்ற ஒரு புரட்சியை நடத்திட வேண்டும் என்றுவிரும்பினர். இந்தஅறிவுஜீவிகளின் தலைமையில் பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிராக நடந்த சுதந்திரப் போராட்டத்தின் சரியான தன்மையையும் தவறான தன்மையையும் தெரிந்துகொள்ள வேண்டியது புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.
ரஷ்யாவில் 1905, டிசம்பரிலும் 1917 மர்ச்சிலும்,1917 நவம்பரிலும் புரட்சிகள் நடத்தப்பட்டது..இவற்றில் முதல் புரட்சி தோல்வியடைந்தது. அன்றைய பிரிட்டனின் ஆட்சியின் கீழிருந்த இந்தியப் பகுதிகளில், இந்த ரசிய புரட்சியை புரட்சிகர சக்திகள் பலராலும் வரவேற்கப் பட்டது, பிரிட்டனை சட்டபூர்வவழிகளில் மட்டுமே எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுவதன்மீது வெறுப்புக் கொண்டிருந்த பல்வேறு தலைவர்கள் ரஷ்யப் புரட்சியின் அனுபவத்திலிருந்து மக்களை புரட்சிப் பாதையில் அணிதிரட்டிட வேண்டும் என்று விரும்பினர். அத்தகைய சூழலில், பிரிட்டீஷ் அரசை சட்ட வழியில் மட்டுமே நின்று எதிர்ப்பதை தொழிலாக கொண்ட இந்திய தேசிய காங்கிரசின் கொள்கை மக்களின் போராட்டத்தை வரம்பிட்டு வளர்தெடுத்தது; எப்பொழு தெல்லாம் போராடும் மக்கள் வரம்பு மீறி பிரிட்டீஷ் அரசுக்கெதிரான போராட்டதில் தீவிரமாககுதிக்கின்றனரோ அப்பொழுதெல்லாம் கங்கிரஸ் தலைவர்கள் பின் வாங்கியதும் மக்களை நட்டாற்றில் விட்டதும் அன்றைய நடைமுறையாக இருந்தது. இத்தகைய போராட்ட முறையே அதாவது சட்டப்பூர்வமான, சாத்வீகமான போராட்டமுறையே இங்கே போராட்ட வழியாக மக்கள் மூளைகளில் திணிக்கப்பட்டது. எனினும் அவற்றை யெல்லாவற்றையும் தூக்கியெறிந்து பல புரட்சிகரமான போராட்டங் களை இங்கே மக்கள் தன்னியல்பாக நடத்தியுள்ளார்கள். மக்கள் தாங்கள் கொண்ட இலட்சியத்திற்காக தன் இன்னுயிரையும் தியாகம் செய்த வரலாறு அதி ல் சில தேடுதல்கள்தான் நமது இந்த கட்டுரையின் நோக்கமாகும்.
விரிவான வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் தேடினாலும் நமக்கான தேடல் குறிப்பானதே அதற்கானவையே இவை.இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு மக்களின் கடுங்கோவத்திற்க்கு ஆளான ஆங்கிலேய அரசை தூக்கி எறிய வேண்டும் என்ற இந்திய மக்களின்மனநிலை “எரிமலையின் விளிம்பில்” எந்நேரமும் வெடித்தெழும் நிலையில் இருந்தது. 1945 நவம்பர் 21-22 ஆம் நாட்களில் கல்கத்தா நகரமே போர்கோலம் பூண்டிருந்தது. பிப்ரவரி 22, 1946 அன்று மும்பாயில் கடற்படையினர், ஆங்கிலேயே கடற்படையினுடைய துணைத் தலைவரின் முன்னணி கப்பல் உள்ளிட்ட மும்பாயில் இருந்த ஏறக்குறைய 22 கப்பல் களைத் தங்கள்ளுடைய கட்டுபாட்டிற்க்குள் கொண்டுவந்தனர். 20,000 கடற் படைவீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர், விமானப்படை வீரர்களும் ஆதரவு தெரிவித்தனர். இராணுவப் படை வீரர்கள், போராடும் கப்பல்படை வீரர்களை சுடமறுத்துவிட்டனர்.
இந்திய பொதுவுடைமை இயக்கமும் பல்வேறு நிகழ்வுகளை புரிந்துக் கொள்ள அன்றைய ஆங்கிலேய ஆட்சியில் போராட்டத்தை முன்னெடுத்தது இதேகாலக் கட்டத்தில். இந்தியாவில், அன்றைய பிரிட்டிஷ் காலனி யாதிக்கத்துக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த பல்வேறு சக்திகளுக்கு 1917-ல் நடந்த ரஷ்யப் பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியின் வெற்றியானது, புதிய பார்வையையும் புதிய நம்பிக்கையையும் அளித்தது. அன்றைய பிரிட்டிஷ் காலனி யாட்சியில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல கம்யூனிசக் குழுக்கள் இரகசியமாக இயங்கி வந்தன. வங்கத்தில் அனுசீலன் சமிதி, ஜுகந்தர், முசாபர் அகமது குழு முதலான குழுக்களும், மும்பையில் டாங்கே தலைமை யிலான குழுவும், சென்னையில் சிங்காரவேலர் தலைமை யிலான குழுவும், ஐக்கிய மாகாணத்தில் சௌகத் உஸ்மானி தலைமை யிலான குழுவும், பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணத்தில் குலாம் உசைன் தலைமை யிலான குழுவும் இயங்கி வந்தன. அன்றைய பிரிட்டிஷ் காலனிய அரசானது எல்லா வகையான கம்யூனிசக் குழுக் களையும் முற்றாகத் தடைசெய்ததோடு, குறிப்பாக, லெனின் தலைமையிலான“போல்ஷ்விக்” சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்ட கம்யூனிஸ்ட் குழுக்களைத்தான் மிகத் தீவிரமாக ஒடுக்கியது. 1933-ல்தான் அகில இந்திய அளவில் மத்தியத்துவப் படுத்தப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட்டுள்ளதாக அறிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது கம்யூனிச அகிலத்தில் உறுப்புகட்சியாக இணைந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1925-ல் தொடங்கப்பட்ட போதிலும், ஏறத்தாழ 25 ஆண்டுகளாக கட்சிக்குத் திட்டமோ, போர்த்தந்திர செயல்தந்திரங் களோ, அமைப்பு விதிகளோ இல்லாமல்தான் அது இயங்கி வந்துள்ளது. திரிபுவாதத் தலைமையின் வலது சந்தர்ப்பவாத துரோகத்தனமும் புரட்சிகர அணிகளின் அளப்பரிய தியாகமும் நிறைந்தது தான் இந்திய கம்யூனிச இயக்கத்தின் கடந்தகாலவரலாறாக உள்ளது. பின்னர் 1964-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுவாதத்தை எதிர்ப்பதாகக் கூறி, தனிக் கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவான போதிலும், விரைவிலேயே அது நவீன திரிபுவாதக் கட்சியாகச் சீரழிந்தது.
இதனை சுருக்கமாக வரும் பக்கங்களில் காண்போம் அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி இன்றைய குழுக்கள் வரை பிரிந்து கிடப்பதேன் அவை என்ன செய்துக் கொண்டுள்ளன என்பத்னையும் விளக்க முயற்சிப்பேன் தேடலின் ஊடே.
நமக்கான பணி இங்குள்ள எல்லா அடக்குமுறை ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டுவதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடுதலையும் அவை பற்றியே.இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு மக்களின் கடுங்கோவத்திற்க்கு ஆளான ஆங்கிலேய அரசை தூக்கி எறிய வேண்டும் என்ற இந்திய மக்களின்மனநிலை “எரிமலையின் விளிம்பில்” எந்நேரமும் வெடித்தெழும் நிலையில் இருந்தது. 1945 நவம்பர் 21-22 ஆம் நாட்களில் கல்கத்தா நகரமே போர்கோலம் பூண்டிருந்தது. பிப்ரவரி 22, 1946 அன்று மும்பாயில் கடற்படையினர், ஆங்கிலேயே கடற்படையினுடைய துணைத் தலைவரின் முன்னணி கப்பல் உள்ளிட்ட மும்பாயில் இருந்த ஏறக்குறைய 22 கப்பல் களைத் தங்கள்ளுடைய கட்டுபாட்டிற்க்குள் கொண்டுவந்தனர். 20,000 கடற் படைவீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர், விமானப்படை வீரர்களும் ஆதரவு தெரிவித்தனர். இராணுவப் படை வீரர்கள், போராடும் கப்பல்படை வீரர்களை சுடமறுத்துவிட்டனர்.
இந்திய பொதுவுடைமை இயக்கமும் பல்வேறு நிகழ்வுகளை புரிந்துக் கொள்ள அன்றைய ஆங்கிலேய ஆட்சியில் போராட்டத்தை முன்னெடுத்தது இதேகாலக் கட்டத்தில். இந்தியாவில், அன்றைய பிரிட்டிஷ் காலனி யாதிக்கத்துக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த பல்வேறு சக்திகளுக்கு 1917-ல் நடந்த ரஷ்யப் பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியின் வெற்றியானது, புதிய பார்வையையும் புதிய நம்பிக்கையையும் அளித்தது. அன்றைய பிரிட்டிஷ் காலனி யாட்சியில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல கம்யூனிசக் குழுக்கள் இரகசியமாக இயங்கி வந்தன. வங்கத்தில் அனுசீலன் சமிதி, ஜுகந்தர், முசாபர் அகமது குழு முதலான குழுக்களும், மும்பையில் டாங்கே தலைமை யிலான குழுவும், சென்னையில் சிங்காரவேலர் தலைமை யிலான குழுவும், ஐக்கிய மாகாணத்தில் சௌகத் உஸ்மானி தலைமை யிலான குழுவும், பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணத்தில் குலாம் உசைன் தலைமை யிலான குழுவும் இயங்கி வந்தன. அன்றைய பிரிட்டிஷ் காலனிய அரசானது எல்லா வகையான கம்யூனிசக் குழுக் களையும் முற்றாகத் தடைசெய்ததோடு, குறிப்பாக, லெனின் தலைமையிலான“போல்ஷ்விக்” சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்ட கம்யூனிஸ்ட் குழுக்களைத்தான் மிகத் தீவிரமாக ஒடுக்கியது. 1933-ல்தான் அகில இந்திய அளவில் மத்தியத்துவப் படுத்தப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட்டுள்ளதாக அறிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது கம்யூனிச அகிலத்தில் உறுப்புகட்சியாக இணைந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1925-ல் தொடங்கப்பட்ட போதிலும், ஏறத்தாழ 25 ஆண்டுகளாக கட்சிக்குத் திட்டமோ, போர்த்தந்திர செயல்தந்திரங் களோ, அமைப்பு விதிகளோ இல்லாமல்தான் அது இயங்கி வந்துள்ளது. திரிபுவாதத் தலைமையின் வலது சந்தர்ப்பவாத துரோகத்தனமும் புரட்சிகர அணிகளின் அளப்பரிய தியாகமும் நிறைந்தது தான் இந்திய கம்யூனிச இயக்கத்தின் கடந்தகாலவரலாறாக உள்ளது. பின்னர் 1964-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுவாதத்தை எதிர்ப்பதாகக் கூறி, தனிக் கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவான போதிலும், விரைவிலேயே அது நவீன திரிபுவாதக் கட்சியாகச் சீரழிந்தது.
இதனை சுருக்கமாக வரும் பக்கங்களில் காண்போம் அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி இன்றைய குழுக்கள் வரை பிரிந்து கிடப்பதேன் அவை என்ன செய்துக் கொண்டுள்ளன என்பத்னையும் விளக்க முயற்சிப்பேன் தேடலின் ஊடே.
நமக்கான பணி இங்குள்ள எல்லா அடக்குமுறை ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டுவதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடுதலையும் அவை பற்றியே.
உலக அளவில் திருத்தல்வாதமும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடும் சோவியத் ரஷ்யாவில் குருஷ்சேவின் திருத்தல்வாதம் வெற்றி பெற்றதன் விளைவாக உலக அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகளில் திருத்தல்வாதம் பலப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் திருத்தல்வாதம் பலப்பட்டது. திருத்தல் வாதத்திற்கு எதிரான போராட்டம் உலக அளவிலும் இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் பிளவைக் கொண்டுவந்தது. மாசேதுங் தலைமையில்சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தொடுத்த திரிபுவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் அடிப்படையில்தான் உலக கம்யூனிஸ்ட் இயக்கம் பிளவுகளை சந்தித்தது. இந்திய கம்யுனிஸ்ட் கட்சித் தலைவர்கள் குருச்சேவின் திரிபுவாதத்தை ஆர்வமாக வரவேற்றனர். ஏப்ரல் 1956- ல் கேரளாவில் உள்ள பாலக்காட்டில் நடைபெற்ற சி.பி.ஐ.யின் நான்காவது பேராயம் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது பேராயத்தை “மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி” என்று போற்றிப் புகழ்ந்தது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பேராயம் குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்த அஜாய்கோஷ் “இங்குசில குறிப்பிட்ட பழைய கோட்பாடுகள் இயக்கங்களின் வளர்ச்சிப் பாதையில் தடைக்கற்களாக இருந்து வருகின்றன.
தற்போதைய வரலாற்றுச் சூழலுக்குப் பொருந்தும் வகையிலும், வருகின்ற புதியவரலாற்றுச் சூழலுக்குப் பொருந்தும் வகையிலும் முன்னெப் போதையும் விட இயக்கத்தை விரைவாக எடுத்துச் செல்வதற்கு ஏற்றவகை யிலும் இருபதாவது மாநாடு சில பழைய கோட்பாடுகளை மாற்றிபுதிய கோட்பாடுகளை உருவாக்கியுள்ளது” என்று கூறி குருச்சேவின் திருத்தல்வாதத்தை ஆதரித்தார்.
பாலக்காடு பேராயத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் தீர்மானம் இந்தியாஅரசியல் சுதந்திரம் அடைந்துவிட்டது என்பதைபின் வருமாறு கூறியது:
“அமைதியையும், சுதந்திரத்தையும் பேணிக் காப்பதற்கான இறையாண்மை கொண்ட சுதந்திரக் குடியரசாக இந்தியா உருவெடுத்த நிகழ்ச்சியானது உலகில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த கூறாக விளங்குகிறது”.சி.பி.ஐ -யின் சிறப்புப் பேராயம்ஒன்று ஏப்ரல் 1958-ல் அமிர்தசரசில் கூடியது. கட்சியின் அமைப்பு விதிகளில் பின்வரும்நிலைபாடு சேர்க்கப்பட்டது: “இந்தியகம்யூனிஸ்ட்கட்சியானது அமைதியான வழிகளில் முழுமையான ஜனநாயகத்தையும் சோசலிசத் தையும் அமைப்பதற்குப் பாடுபடும்” என்று அந்தத் திருத்தம் கூறியது.சி.பி.ஐ-யைகட்சியானது “மார்க்சிய-லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளால்” வழிநடத்தப் படுவதாக பேராயம் கூறியது. உண்மையில் அக்கட்சியோ நவீனதிரிபுவாதத்திற்கு ஆதரவான நிலையை எடுத்தது. அதனுடைய முன்னேற்றத்தைத் தடுக்கும் “தடைக் கற்களாக” கருதி மார்க்சிய-லெனினிய கோட்பாடுகளை நிராகரித்தது. கேரளாவிலும் இன்னும் பிற மாநிலங்களிலும் இக்கொள்கை பின்பற்றப்பட்டது. அவர்களுக்குதெலுங்கானா அல்ல; கேரளாதான் முன்மாதிரியாக விளங்கியது.
மையக்குழுவின் சார்பாகவும், சி.பி.ஐ. மாநிலக் குழுவின் சார்பாகவும் அக்டோபர்-23,1951-அன்று ஏ.கே.கோபாலன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அவ்வறிக்கையானது:-
“அனைத்துப் போராட்டநடவடிக்கைகளையும் நிறுத்து மாறும் நடைபெறவிருக்கின்ற பொதுத்தேர்தலில் ஒட்டு மொத்த மக்களையும் திரட்டி அவர்களைத் தீவிரமாக பங்கேற்கச் செய்து காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்கு மாறும்தெலுங்கானாவிவசாயிகளையும், போராளி களையும் கேட்டுக் கொண்டது”. காங்கிரஸ் எதிர்ப்பைக் காட்டி தெலுங்கானா போராட்டம் கைவிடப்பட்டது. அந்த அறிக்கையை நிறைவு செய்வதற்கு முன்பாககோபாலன் கூறியதாவது:“கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் மீண்டும் கூறியது போல தெலுங்கானா பிரச்சினை என்பது உண்மையில் நிலம் குறித்த பிரச்சினையாகும். அரசுஅதிகாரம் குறித்த பிரச்சினை அல்ல”.
தொடரும்....
No comments:
Post a Comment