நிலப்பிரபுத்துவக் காலகட்டத்திலும் பூர்ஷ்வாச் சமூகத்திலும் தத்துவப் போக்குகளின் போராட்டம்
நம் நாட்டில் இன்றுள்ள போக்குகளை புரிந்துக் கொள்ள இந்தப் பகுதி மிக முக்கியமானதாக இருக்கும்.
வளர்ச்சி வாய்ப்புக்களைப் பயன்படுத்தித் தீர்த்த பிறகு அடிமைச்
சொந்தக்கார அமைப்பு நிலப்பிரபுத்துவத்துக்கு இடம் கொடுத்துவிட்டு அகன்றுவிட்டது.
இடைக்காலப் பகுதியில் மேலோங்கியிருந்தது மத-கருத்துமுதகல்வாதப் பிரபஞ்சக் கண்ணோட்டம்.
நிலப்பிரபுக்கள், மதகுருக்கள் ஆகியோரின் ஆட்சிஅதிகாரத்தை நிலையாக வைத்திருப்பதை
நோக்கமாகக் கொண்டது இது. முந்திய தத்துவ முறைகளில் கருத்துமுதல்வாதிகளின்
கருத்துக்களே யாவற்றிலும் விரிவாகப் பரவின. தத்துவ
ஆராய்ச்சிகளில் இறைஇயலாரே பெழும்பாலும் ஈடுபட்டார்கள். அவர்கள் அரிஸ்டாட்டிலின்
தத்துவத்திலிருந்த உயிரோட்டமுள்ள அம்சங்களை எல்லாம் கொன்றுவிட்டார்கள். அவருடைய
பொருள்முதல்வாதத் தேட்டங்களையும் இயக்கஇயல் அணுகு முறைகளையும் நீக்கி எறிந்துவிட்டு அவரது போதனைகளின் கருத்துமுதல்வாக அம்சக்தை மட்டுமே மத ஸ்தாபனங்களின்
நலன்களுக்கு இசைவித்துக்கொண்டு அவர்கள் பயன்படுத்தினார்கள். இடைக்காலச்
சமூகத்தில் விஞ்ஞானம் இறைஇயலின் பணியாளாக இருந்தது என்று குறிப்பிட்டார்
எங்கெல்ஸ். மதகுருக்களும் நிலப்பிரபுக்களும் தத்துவக்தையும் அதே போல மதத் தின்
பணியாள் ஆக்கிவிட்டார்கள். மதத்தினது, திருமறைகளது உண்மைத்
தன்மையின் “சான்றுக்கு” எல்லாம் அடிப்படுத்தப்பட்டன. இறைஇயல் பாண்டித்திய முறை
எனப்பட்டது முக்கியப் பங்கு ஆற்றலுற்றது. கிறிஸ்தவ மத ஸ்தாபனங்களின் வற்ட்டுச்
சூத்திரங்கள் பற்றிய அருவமான ஆலோசனைகளையும் பயனற்ற தத்துவப் பேச்சுக்களையும்
"ஆதாரமாகக் கொண்டிருந்தது இந்த முறை. இடைக்கால இறைஇயல் பாண்டித்தியம்
மிகவும் லாகவமுள்ளதாக இருந்தது. அது வடிவங்களை அடிக்கடி மாற்றிக்கொண்டது.
மதத்தின் உண்மையை நிரூபிப்பதற்காக இயக்க இயலைப் பயன்படுத்த முயன்றது. இருத்தல், தன்மை, வடிவம்
முதலிய தத்துவக் கருதுகோள்களுக்குத் திரிபான விளக்கம்
தந்தது. அறிதல் சித்தாந்தத்தில் குழப்பம் விளைத்தது. இடைக்கால இறை இயல்
பாண்டித்தியத்தின் தலைசிறந்த பிரதிநிதியாக விளங்கியவர் தாமஸ் அக்வைனஸ் (தாமஸ்
அக்வைனஸ் இத்தாலியில் அக்வைனோ என்னும் நகரின் அருகே பிறந்தார் -1285--1274).
முதல் இயக்கு சக்தி, முதல் காரணம், எல்லா இன்றியமையாமைக்கும் ஊற்றுக்கண், எல்லாவகை
இருத்தலுக்கும் குறிக்கோள்களை நிச்சயிக்கும் அறிவுசான்ற
சிருஷ்டி கர்த்தா என்ற முறையில் கடவுள் நிலவுவதற்குச் “சான்றுகள்’? தேடுவதே தமது தத்துவத்தின் நோக்கம் என்று அவர் அறிவித்தார். நம்மைச்
சூழ்ந்துள்ள இயற்கை வஸ்துக்கள் பொ ருளியலானவை என்றும் வேறுபிரித்தறிய முடியாத
துகள்களால் ஆனவை என்றும் இந்த இறைஇயலார் ஒப்புக்கொண்டார். ஆனால் எதனால் எல்லாம் ஆக்கப்பட்டுள்ளனவோ அந்த அடிமுதல் பொருள் தூய செயலின்மையே என அவா் வலிந்துரைத்தார். அவருடைய கருத்துப்படி கடவுள்
தூய செயல் வன்மையாக விளங்குகிறார். சடப்பொருளையும் பிரபஞ்சம் அனைத்தையும்
கடவுள் வெறுமையிலிருந்து படைத்து ஒவ்வொரு பொருளுக்கும் நிலவுகலை அளித்தார். நிலப்பிரபுத்துவக்
காலப்பகுதியில் கருத்துமுதல்வாதத் தத்துவமும் பயனற்ற இறை
இயல் பாண்டித்தியமுமே மேலோங்கி இருந்தன எனினும் முற்போக்குள்ள பொருள்முதல்வாதச்
சிந்தனை அந்தக் காலத்தில்கூட அழிக்கப்பட்டு விடவில்லை. இருண்ட இடைக்கால
அண்டுகளில்கூடத் தத்துவ விவாதங்கள் ஓய்ந்துவிடவில்லை. ஆன்மாவுக்கும்
இயற்கைக்கும், சிந்தனைக்கும் இருத்தலுக்கும் உள்ள உறவு
பற்றி நடந்த இந்த விவாதங்களின் உள்ளடக்கம், பிரபஞ்சம்
கடவுளால் படைக் கப்பட்தா அல்லது என்றென்றும்
நிலவிவருகிறதா என்னும் கேள்விக்கு இட்டுவந்தது. அதிகத் துணிவுள்ள தத்துவ
அறிஞர்களும் விஞ்ஞானிகளும், “சடப்பொருள் சிந்திக்க வல்லதா
அல்லவா” என்ற கேள்வியைக்கூடக் கிளப்பினார்கள்.
உற்பத்தி, விஞ்ஞானம், இவற்றின் வளர்ச்சியில் ஈடுபாடு கொண்ட
சக்திகள் நிலப்பிரபுத்துவச் சமூகத்தின் உள்ளே தோன்றலாயின.
உதயமாகிக்கொண்டிருந்த பூர்ஷ்வா வர்க்கச் சக்திகளே அவை. இந்த பூர்ஷ்வா வர்க்கம்
நிலப்பிரபுத்துவ அமைப்பையும் இறைஇயலையும் இறைஇயல் பாண்டித்தியத்தையும்
எதிர்த்தது. மதஸ்தாபனங்களின் ஆதிக்கத்துக்கு எதிராகச்
சிறப்பாகத் தீவிரமான போராட்டம் 15—17
நூற்றாண்டுகளில் அதாவது “மறுமலர்ச்சி யுகம்' என வழக்கமாக அழைக்கப்படும் காலக்கட்டத்தில் நடந்தது. இயற்கையை அறியும்
ஆர்வமும் தொன்மைக் கிரீஸின் அனுபவ ஞானத்தையும் முற்போக்குள்ள தத்துவத்தையும்
பற்றிய அக்கறையும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தீவிரம் அடைந்தது. இந்தக் காலக்கட்டத்தின் சிறப்புத் தன்மை ஆகும்.
பூர்ஷ்வாப் புரட்சியை முதன் முதலில் நிறைவேற்றிய
நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து 17ம் நூற்றாண்டில் பொருள்முதல் வாதத்தின் புதிய
தாய்நாடு ஆயிற்று. புதுயுகப் பொருள்முதல் வாதத்தின் தந்தையாகத்
திகழ்ந்தவர் பிரான்ஸிஸ் பேக்கன் (Francis Bacon) (1561-1626). இவர் இறைஇயல் பாண்டித்தியத்தை உக்கிரமாக எதிர்த்தார். பேக்களனின்
கருத்துப்படி, தத்துவத்தின் பொருள் மதத்தின் வறட்டுச்
சூத்திரங்களின் உண்மையை நிரூபிப்பதில் அல்ல, இயற்கையை அறிவதற்கான முறைகளை வகுப்பதிலேயே
அடங்கியிருக்கிறது. ஏனெனில், மனிதனுடைய வலிமை ஞானத்திலேயே
உள்ளது என்றார் அவர். தொன்மைக் கிரேக்கப்
பொருள்முதல்வாதத்துக்குப் புத்துயிர் அளிக்க பேக்கன் பெருமுயற்சி செய்தார்.
இயக்கமும் முயற்சியும் உயிருள்ள ஆன்மாவும் ௪டப்பொருளுக்கு இயல்பானவை என்று அவர்
தீர்மானமாக வலியுறுத்தினார். ஆயினும் பேக்கனின் கருத்துக்களில் பொருத்தமற்ற
விஷயங்கள் நிறைய இருந்தன. உகாரணமாக, விஞ்ஞானத்துக்கும் கடவுள்
நம்பிக்கைக்கும் தனித்தனித் துறைகள் உள்ளன என்றும் அவை ஒன்றில் ஓன்று தலையிட
வேண்டியதில்லை என்றும் அவர் பல முறை கூறினார். ஆனால்
இங்கே ஒரு விஷயத்தைக் கவனத்தில் வைத்துக்கொள்வது அவசியம்: மதத்தின் அதிகாரம் இன்னும்
சக்தி மிக்கதாக இருந்து அந்தக் காலக்கட்டத்தில். இம்மாதிரியான
கூற்றுக்கள் விஞ்ஞானத்தின் கட்டற்ற வளர்ச்சியை உறுதுப்படுத்தும் முயற்சியாகவே
உண்மையில் விளங்க பொருள்முதல்வாதத் தத்துவம் மதத்தையும் கருத்துமுதல் வாதத்தையும்
மெதுவாக, ஒவ்வோர் அடியாக அந்தக் காலத்திலேயே நெருக்கிப்
பின்னே தள்ளியது. இருந்தாலும் மத-கருத்துமுதல்வாதத் தத்துவம் தனது நிலையை
இன்னமும் உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தது.
முற்போக்குள்ள தத்துவ அறிஞர்களின் பொருள்முதல்வாத, நாஸ்திகக் கருத்துக்களுக்கு எதிராக
வாதாடினார் அகநிலைக் கருத்துமுதல்வாதத்தின் தலைசிறந்த பிரதிதிதிகளில் ஒருவரான ஆங்கிலப்
பாதிரி ஜார்ஜ் பார்க்ஸி (Berkeley) (1685-1752). “சடப்பொருள்?
என்ற சொல்லில் எவ்வித எண்ணமும் அடங்கியிருக்கவில்லை. சடப்பொருள்
என்பது ஒன்றுமற்றது, நிலவாத தன்மை என்று அவர் எழுதினார்.
அவருடைய கருத்துப்படி இயற்கையில் புறநிலைக் காரணத்துவம் கிடையாது, விதிமுறைக்கு உட்படும் இயல்பு கிடையாது. இந்த
அகநிலைக் கருத்துமுதல்வாத நோக்குநிலை தற்காலத்தில்
புலக்கொள்கையால் மறையுருவில் ஆதரிக்கப்படுகிறது. அகநிலைப் பொருளால்
புரிந்தகொள்ளப்படுவதை மட்டுமே எதார்த்கமானது என பார்க்ளி ஒப்புக்கொண்டார்.
நம்மால் புரிந்துகொள்ளப்படும் பொருள்கள் (ஆப்பிள், திராட்சை)
நமது புலனுணர்ச்சிகளின் (இனிப்புள்ளது, சிவப்பானது, சாறுள்ளது) தொகுப்பே என அவர் அதே சமயம் வலியுறுத்தினார். இவ்வாறாக, பார்க்ளியின் கருத்திற்கு இணங்க, பொருள்களின் இருத்தல், அவை நிலவுவது, அவற்றை நாம் புரிந்துகொள்கிறோமா இல்லையா
என்பதையேபொறுக்திருக்கிறது. இந்த நோக்கின்படி, புலனறிவுக்கு
உட்படும் பொருள்களின் எதார்த்தம் அவற்றை ஒருவன் புரிந்துகொள்கிறான்
என்பதிலேயே அடங்கு யிருக்கிறது.
பார்க்ளியின் கொள்கைப்படி, நிலவுதல் என்றால் புரிந்துகொள்ளப்படக்
கூடியதாக இருத்தல் என்று அர்த்தம். இதை அடிப்படையாகக் கொண்டு, அறிவால் படைக்கப் படாதது எதுவும் நிலவுவதை அவர் மறுத்தார்.
சடப்பொருள் புறநிலையாக நிலவுகிறது என ஒப்புக்கொள்ளலாகாது என்றும், ஏனெனில் இவ்வாறு ஏற்பது நிரீசுவரவாதத்துக்கு இட்டுச் செல்லும் என்றும்
அவர் வெளிப்படையாக எழுதினார். 17ம் நூற்றாண்டின்
முடிவிலும் சிறப்பாக 18ம் நூற்றாண்டின் அநேக ஐரோப்பிய நாடுகளில் பூர்ண்வாப் போதகர்களும் ஜூவியேன் ஓப்ரே லா
மெத்ரீ (Julien Offroy de la Mettrie). (1709-1751),டெனீ
டிட்ரோ (1713—1784), Guns)
Gammsvunam (Paul Henri Holbach, க்ளாட் (Clande Adrien Helvetius) (1715—1771) போன்ற பெயர்பெற்ற பிரெஞ்சுப் பொருள்முதல்வாதிகளும் கருத்துமுதல்வாதத்தை
எதிர்த்துப் போராடினார்கள். மத-கருத்துமுதல்வாதக்
கண்ணோட்டத்துக்கு எதிராகப் பிரெஞ்சுப் பொருள்முதல்வாதிகளின் போராட்டம்
பூர்ஷ்வா வா்க்கத்தின் அரசியல் போராட்டத்துடன் நேரான தொடர்பு கொண்டிருந்தது.
நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பையும் நிலப்பிரபுத்துவ மரபுகளையும்
கொள்கைவாதகத்தையும் அரசியலையும் நிர்த்தாட்சி்ண்ணியமாக விமார்சித்ததன் வாயிலாக அவர்கள்
இடைக்கால அமைப்புமுறைகளை ஒழிக்கவும் பூர்ஷ்வா வர்க்கத்தின் நலன்களுக்கு ஏற்பச்
சமூக அமைப்பை மாற்றவும் முயன்றார்கள். உற்பத்தியும் எனவே விஞ்ஞானமும் மிக
விரைந்த வளர்ச்சி அடைவதில் பூர்ஷ்வா வர்க்கம் அக்கறை கொண்டிருந்தது. விஞ்ஞானமோ,
ஓவ்வோர் அடியிலும் இடைக்கால இறைஇயல் பாண்டித்தியத்தையும்
மதத்தையும் எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. ஆகவே பூர்ஷ்வாக் கொள்கைவாதிகள்
கல்வி, பொருள்முதல்வாதம் என்ற கொடியை உயர்த்தியவாறு இடைக்காலப்
பழக்கவழக்கங்கள் மீது தாக்குதல் நடத்தியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இயற்கைக்கு
மேலான அதீத சக்திகள் நிலவுகின்றன என்று கருத்துமுதல்வாதிகள்
பரப்பிவந்த எண்ணங்களைப் பிரெஞ்சுப் பொருள்முதல்வாதிகள் மறுத்தார்கள்.
இயற்கையும் சமூக வாழ்வும் இயல்பான விதிமுறைகளுக்கு உட்பட்டவையே என்று அவர்கள்
நிரூபித்தார்கள். பிரபஞ்சத்தில் நிகழும் மாற்றங்கள் யாவும் இயல்பான இயற்கைக்
காரணங்களாலேயே ஏற்படு கின்றன என்று அவர்கள் சரியாகக் கருதினார்கள். சடப்பொருள்
அல்லாதது அதன் இயக்கு சக்தியாக இருக்க முடியாது என்று பிரெஞ்சுப்
பொருள்முதல்வாதிகள் வலியுறுத்தினார்கள். சடப்பொருள் இயற்கை புறநிலையாக
நிலவுகிறது என்றும், ஆகையால் சடப்பொருளே எல்லாவகை
இருத்தலினதும் தன்மையாகவும் முதல் தொடக்கமாகவும் ஆதி அடிப்படையாகவும்
இருக்கிறது என்றும் அவர்கள் கூறினார்கள். இயற்கை யாராலும் படைக்கப்படவில்லை,
அது நித்தியமானது என்றார்கள் அவர்கள். சடப்பொருள் எங்கிருந்து
தோன்றியது என யாரேனும் நம்மிடம் வினவினால் அது என்றென்றும்
நிலவிவந்திருக்கிறது என்று நாம் பதில் அளிப்போம். சடப்பொருளில் இயக்கம் எங்கிருந்து தோன்றியது என்று கேட்டால் அதே ஆதாரத்தின்படி
சடப்பொருள் நிரந்தரமாக இயங்க வேண்டிவந்திருக்கிறது, ஏனெனில்
இயக்கம் சடப்பொருளுடைய நிலவுகையின், அதன் தன்மையின் இன்றியமையாத விளைவு ஆகும் என்று நாம் பதிலளிப்போம். இவ்வாறு
எழுதினார் ஹோல்பாஹ். பிரெஞ்சுப் பொருள்முதல்வாதிகளின் கருத்துப்படி சடப் பொருள்
என்பது நமது உணர் உறுப்புக்கள்மீது ஏதாவது ஒரு வகையில் செயல்படுபவை அனைத்தும்
ஆகும். நமது புலன்களால் அறியப்படும் இருத்தல் ஆகும். சடப்பொருளையும் அதன் பண்புகளையும்
பற்றிய அழ்ந்த கருத்துக்களை வெளியிட்டார் டிட்ரோ. சடப்பொருள் எவ்வாறு
வளர்ச்சியுற்றது, உணர்ச்சி யற்ற சடப்பொருள்
உணர்ச்சியுள்ளகாக மாறியது எவ்வாறு நிகழ்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள அவர்
முயன்றார். புலனுணர்ச்சி உயிருள்ள அங்கஜீவிக்கே இயல்பானது என்றும், ஆனால் புலனுணர்ச்சியுடன் உறவுள்ள ஒரு திறமையை மொத்தமாகச் சடப்பொருள்
அனைத்தும் பெற்றிருக்கிறது என்றும் அவர் ஏற்கனவே அனுமானித்திருந்தார். பிரபஞ்சத்தை
அறிவது சாத்தியமே என்ற ஆழ்ந்த நம்பிக்கையைப் பிரெஞ்சுப் பொருள்முதல்வாதிகள்
கொண்டிருந்தார்கள். புலன்களின் அறிவை அவர்கள் வெகுவாக மதித்தார்கள். கருத்துமுகல்வாதிகளை அவர்கள் கடுமையாக விமர்சித்தார்கள். கருத்துமுதல்வாதிகள்
தாங்கள் நிலவுவதையும் தங்கள் உணர்ச்சிகள் நிலவுவதையும் மட்டுமே உண்மை என ஒப்புக்கொள்கிறார்கள் என்றும் வேறுஎதையும்
ஏற்றுக்கொள்வதில்லை என்றும் கூறினார் டிட்ரோ. பிரபஞ்சம் அனைத்தும் நமது
கற்பனையில் மட்டுமே நிலவுகிறது என்னும் கருத்துமுதல்வாதிகளின் அடிப்படைக்
கருத்தை அவா் வீண் கட்டுக்கதை என அழைத்தார். பிரெஞ்சுப் பொருள்முதல்வாதிகளின்
தத்துவ நோக்கு களில் இயக்கஇயலின் சில அம்சங்கள் அடங்கியிருந்தன. ஆனால் மொத்தத்தில்
அவர்களது பொருள்முதல்வாதம் பெருத்தகுறைகள் கொண்டிருந்தது. “லுத்விக்
பாயர்பாகும் சாஸ்திரிய ஜெர்மானியத் தத்துவத்தின் இறுதியும்'' என்ற தமது நூலில் பிரெடெரிக் எங்கெல்ஸ் இக்குறைகளைச்
சுட்டிக்காட்டியுள்ளார்: முதலாவதாக, இந்தப்
பொருள்முதல்வாதம் இயந்திரத் தன்மை கொண்டிருந்தது. அக்காலத்து விஞ்ஞான
வளர்ச்சியின் தரம் காரணமாக இத்தகைய வரையறைக்குட்பட்ட தன்மை தவிர்க்க இயலாததாக
இருந்தது. இயந்திர இயல் அந்தக் காலத்தில் மிகப் பெரிதும் வளர்ச்சி
அடைந்திருந்தது. இரசாயனம், உயிரியல் போன்ற விஞ்ஞானங்களோ,
அப்போதுதான் உருவாகத் தொடங்கியிருந்தன. எனவே, அங்கக இயற்கையின் மிகச் சிக்கலான செயல்முறைகளைக்கூடத் தூயஇயந்திர இயலின்
அடிப்படையில், இயந்திரஇயலின் விதிகளை இயற்கையின் பிற
நிகழ்ச்சிகளின் துறைகளுக்குப் பயன்படுத்துவதன் வாயிலாக விளக்குவதற்கு
விஞ்ஞானிகள் முயன்றுள்ளார்கள். இரசாயனச் செயல்முறைகளைப்
பற்றியோ சொல்லவே வேண்டியதில்லை. இரண்டாவதாக, பிரெஞ்சுப்
பொருள்முதல்வாதம் மாறா நிலைவாதத் தன்மை கொண்டிருந்தது. இயற்கையை வரலாற்று வளர்ச்சியின்
நிகழ்முறையில் அது ஆராயவில்லை. இயற்கையில் ஏற்படும் மாறுதல்களை அது ஓரே
நிகழ்முறைகளின் மறுநிகழ்வு களாக மட்டுமே புரிந்துகொண்டது. இயற்கை நிகழ்ச்சிகளை விளக்குவகற்கோ
அறிதலுக்கோ இயக்கஇயல் பயன்படுத்தப் படவில்லை, இறுதியில்
மூன்றாவதாக, பிரெஞ்சுப் பொருள்முதல்வாதிகள் சமூக வாழ்வைத்
தெளிவுபடுத்துவதில் கருத்துமுதல்வாதிகளாகவே இருந்துவிட்டார்கள். சமூகத்தின் வளர்ச்சியில் உள்ள புறநிலை
விதிமுறைத் தன்மையை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. உற்பத்தியின் நிர்ணயிக்கும்
பங்கையும் பகைமைகொண்ட, வர்க்கங்களாகப் பிரிவுபட்டுள்ள
சமூகத்தில் வர்க்கப் போராட்டத்தின் நிர்ணயகரமான முக்கியத்துவத்தையும் அவர்கள்
புரிந்துகொள்ளவில்லை. சமூகத்தின் வளர்ச்சியை நிர்ணயிப்பவை எவையேனும் ஒருவகைக்
கருத்துக்களே, நோக்குகளே என அவர்கள் எண்ணினார்கள். இந்தக்
கருத்துக்களின் பொருளியல் ஊற்றுக்கண்ணைப் பற்றி, சமூக-பொருளாதார
உறவுகளைப் பற்றி அவர்கள் கேள்வி எழுப்பவில்லை. 18வது
நூற்றாண்டின் நிலப்பிரபுத்துவ முறையின் இடத்தில் மக்களின் சமத்துவம், நியாயம், சுதந்திரம், சகோதரத்துவம்
ஆகிய ஆதார்சங்களின் அடிப்ப்டையில் “பகுக்தறிவின் ஆட்சி”
வரமுடியும் என்று பிரெஞ்சுப் பொருள்முதல்வாதிகள் தவராக முடிவு செய்தார்கள்.
உண்மையிலோ, கவர்ச்சியுள்ள இந்த கோஷங்களின் கொடியின் கீழ்
பூர்ஷ்வாப் புரட்சி நடந்தேறியதே தவிர, அந்தக் காலத்தில்
இவற்றைச் செயல்படுத்துவது இயலாதிருந்தது. “பகுத்தறிவின்
இந்த ஆட்சி, ஆதர்ச வடிவம் தரப்பட்ட பூர்ஷ்வா ஆட்சி தவிர
வேறில்லை என்பதை இப்போது தாம் அறிவோம்'” என்று எழுதினார்
பிரெடெரிக் எங்கெல்ஸ். “நிரந்தர நியாயம்” என்பது, சுறண்டுவோரின் சித்தத்தை வெளியிட்ட
பூர்ஷ்வாச் சட்டமுறையின் வடிவில் செயல்படுத்தப்பட்டது. பூர்ஷ்வாச் சொத்துரிமை
மனிதனது மிக அடிப்படை உரிமைகளில் ஒன்றாகப் பிரகடனம் செய்யப்பட்டது என அவர்
மேலும் குறித்தார். ஜெர்மானியத் தத்துவத்தில் கருத்துமுதல்வாதத்துக்கும் பொருள்முதல்வாதத்துக்கும்
இடையேயும் மாறாநிலைவாதத்துக்கும் இயக்க இயல்வாதத்துக்கும் இடையேயும் கடுமையான போராட்டம்
18ம் நூற்றாண்டின் இறுதியிலும் 19ம்
நூற்றாண்டின் தொடக்கத்திலும் விரிவாக நடந்தது. எதார்த்தமான சமூக முரண்பாடுகளின்
தனிப்பட்ட பிரதிபலிப்பாக விளங்கியது இந்தப் போராட்டம். ஜெர்மானிய பூர்ஷ்வா
வர்க்கம் நிலப்பிரபுத்துவ முறைக்கு எதிராக முதன்முதலில் செயல்பட்டது. அந்தக் காலத்தில்தான்.எனினும் ஜெர்மானிய பூர்ஷ்வா வர்க்கம் மனவுறுதி
அற்றதாக, பயங்கொள்ளியாக இருந்தமையால் புரட்சி வழியால்
அன்றி, முடியரசு நிலவுகையிலேயே சில தனிப் பட்ட சலுகைகள்,
சீர்திருத்தங்களைப் பெறுவதன் வாயிலாகச் சமூக-பொருளாதார மாறுதல்களை ஏற்படுத்த முயன்றது. சமூக வாழ்வில் விட்டுக்கொடுத்தலுக்கும்
சமரசங்கள் செய்து கொள்வதற்கும் ஆன முயற்சி, கொள்கைவாதகத்
துறையிலும் சமரசத்துக்குத் தவிர்க்க முடியாதபடி இட்டு வந்தது. சாஸ்திரீயக்
தத்துவம் என அழைக்கப்படும் அந்தக் காலத்திய ஜெர்மானியத் தத்துவத்தில் இரண்டு போக்குக்கள் தனித் தனியாகப் பிரிவுபடுகின்றன.
அவையாவன கருத்துமுதல்வாதப் போக்கும் (இதன் மிகப் பிரபலமான பிரதிநிதிகள் இ.
கான்ட், இ. ஹெகல் இருவருமாவர்) மாறாநிலைவாதங்
பொருள்முதல் வாதப் போக்கும் (லு. பாயர்பாக்). (ஆதாரம் கார்ல்
மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்ஸ். “கற்பனாவாதகத் இதிலிருந்து
விஞ்ஞானத்துக்கு சோஷலிஸத்தின் வளர்ச்சி'', நூல்திரட்டு,
தொகுதி 19, பக்கம் 190
பார்க்க).
இம்மானுவேல் கான்ட் (1724-1804), வேறு விஷயங்களோடு,
சூரிய மண்டலம் தொடக்கநிலை நெபுலாவிலிருந்து தோன்றியது என்ற
விஞ்ஞானக் கற்பிதக்கொள்கையை, அனுமானத்தை
வெளியிட்டதற்காகவும் புகழ் பெற்றவர். ஒளிக்கோளங்கள் இயற்கை வரலாற்று முறையில்
தோன்றியவை என்ற இந்தக் கருத்து இயற்கை பற்றிய மாறாநிலைவாதக்
கற்பனைக்குப் பெருத்த அடியாக விளங்கியது. உணர்வுச் செயல் முறையைப் பகுத்தாய்ந்ததன் மூலம் அருவமான, சித்தாந்தச்
சிந்தனையின் பங்கைப் புரிந்து கொள்ளக் கான்ட் முயன்றார்.
ஞானங்களையே தர்க்கரீதியாகப் பகுத்தாய்வதன் இன்றியமை யாமையை அவர் காட்டினார்.
ஆயினும். சர்வப்பொதுவானது, இன்றியமையாதது பற்றிய ஞானத்தை
மனித ஆன்மாவின் இயல்பான திறன் காரணமாக இயற்கையையும் அனுபவத்தையும் சாராமலே
(அனுபவ சார்பின்றி) பகுத்தறிவு பெற்று விடுகிறது என்ற கருத்துமுதல்வாத முடிவுக்கு
அவர் வந்தார். பொருள்கள் புறநிலையாக, தாமாகவே நிலவுகின்றன என்று ஏற்றுக்கொண்டது கான்டினது தத்துவத்தின் நல்ல பகுதியாகும்.
ஆயினும் பிரபஞ்சம் கோட்பாட்டளவில் அறியொண்ணாதது என்ற
தவறான முடிவை அவர் அதாரமாகக் கொண்டார். மனிதனது பகுத்தறிவு வரையறைக்கு
உட்பட்டது என்றும் பிரபஞ்சத்தை அறிந்துகொள்ள வல்லதல்ல என்றும் காட்டி அறியொணாமைக்
கொள்கைப் போக்கை ஆதரித்தார். இந்தத் தத்துவ நிலையின்
தன்மையைச் சித்திரிக்கையில் வி. இ. லெனின் பின்வருமாறு கூறினார்: “கான்டினது
தத்துவத்தின் அடிப்படை அம்சம் பொருள்முதல் வாதத்தைக் கருத்துமுதல்வாதத்துக்கு இணங்கச்
செய்தல், இவ்விரண்டுக்குமிடையே சமரசம் ஏற்படுத்தல்,
பல்வகையான, எதிரெதிரான தத்துவப் போக்குக்களை
ஒரே தொகுப்பில் ஒன்று திரட்டல் ஆகும். நமக்கு வெளியிலுள்ள ஏதோ ஒன்று, தன்னிலைப் பொருள் எனப்படுவது, நமது
எண்ணங்களுக்குப் பொருந்துகிறது என்று ஓப்புக்கொள்ளும் பொழுது கான்ட்
பொருள்முதல்வாதி. இந்தத் தன்னிலைப் பொருள் அறியொணாதது, அனுபவ
வரம்புக்கு அப்பாற்பட் டது, மறுவுலகைச் சேர்ந்தது என்று
கூறும்பொழுது கான்ட் கருத்துமுகல்வாதியாகப் பேசுகிறார்.
(வி. இ. லெனின். முழு நூல் திரட்டு, தொகுதி 18, பக்கம் 206.)
அறிதலின் கோட்பாட்டு வரம்பை நிலைநாட்டியதன் வாயிலாக கான்ட் மதத்துக்கு, இயற்கைக்கு மேலான, இயல்பு கடந்த ஒன்றின்மீது
நம்பிக்கைக்கு உண்மையில் இடம் அளித்து விட்டார். புறநிலை விதிமுறைகள் நிலவுவதை
அவர் மறுத்தார். இயற்கைக்குரிய விதிகளைப் பகுத்தறிவே விதிக்கிறது என்று அவர்
வலிந்துரைத்தார். இயக்க இயலைப் புறநிலைக் கருத்துமுதல்வாதத்துடன் பொருத்திச்
சேர்ப்பதற்கு ஆழ்ந்த முயற்சி செய்தவர் யோர்க் வில்ஹெல்ம் பிரீட்ரிஷ் ஹெகல் (Georg
Wilhelm Friedrich Hegel) (4770-1841). அவரது தத்துவமும் உள்
முரண்பாடுகள் கொண்டதாகவும் முன்பின் இயைபு அற்றதாகவும் இருந்தது. இயக்க இயலைச்
செவ்வைப்படுத்தி, பிரபஞ்சம் அனைத்தும் இயற்கை, சமூக வாழ்வு, சிந்தனை, யாவும்-
முடிவற்ற இயக்கமும் மாறுதலும் வளர்ச்சியும் கொண்ட
நிகழ்முறை என்று காட்டுவதற்கு ஹெகல் முயன்றார். இயக்க இயலின் அடிப்படைக் கோட்பாடுகளையும்
விதிகளையும் வகைப்பிரிவுகளையும் அவர் தனித்தனியாகக்
குறித்தார். இயற்கை, சமூகம், இந்தனை ஆகியவற்றின்
வளர்ச்சி இயக்க இயலின் ஓரே விதிகளுக்கு உட்பட்டது என்னும் அவரது கருத்து பெரும்
பயன் விளைப்பதாக விளங்கியது. எனினும் புறநிலைக் கருத்துமுதல்வாதியாக இருந்த ஹெகல்,
பிரபஞ்சத்தின் எல்லா நிகழ்ச்சிகளினதும் அடிப்படை யாக, இயற்கை, சமூகம் அகியவற்றின் அடிப்படையாகப் பரம கருத்து,
பிரபஞ்ச ஆன்மா எனப்படுவதை எடுத்துக்கொண்டார். நிலவுபவை
யாவற்றுக்கும் எல்லா இருத்தலுக்கும் அடிப்படை யாகவும் அதே சமயம் செயல்படும்
தொடக்கமாகவும் இந்தப் பரம கருத்து ஹெகலின் சித்தாந்தத்தில்
முன்வைக்கப்படுகிறது.
ஹெகலின் கொள்கைப் படி இயற்கை என்பது மறுவடிவு கொண்ட
கருத்தே, அதன் வேறு
இருத்தலே, பிரபஞ்ச ஆன்மாவின் வளர்ச்சியில் ஒரு படியே ஆகும்.
அவருடைய தத்துவத்தில் எல்லாம் திரிபாகக் கற்பனை செய்யப்பட்டிருக்கின்றன:?
எண்ணங்கள் புறநிலையாக நிலவும் பொருள்களின்,
பொருளியல் இருத்தலின் பிரதிபலிப்புக்கள் அல்ல) மாறாக, கருத்துதான், பிரபஞ்ச
ஆன்மாதான் செயலாற்றும் சக்தி என்ற முறையில் இயற்கையைப் பிறப்பிக்கிறது. இந்த
இயற்கையின் வளர்ச்சி சிந்திக்கும் பிராணியான மனிதன் தோன்றுவதற்குப் பின்னர் காரணம்
ஆகிறது. மனிதன் வாயிலாகக் கருத்து தன்னைத் தானே அறிந்துகொள்கிறது. ஹெகலின்
தானே தோன்றி வளரும் இந்தப் பரமகருத்து, பிரபஞ்ச ஆன்மா, மதத்தினால் கடவுள் எனப்படுவதேதான் என்பதைப் புரிந்துகொள்வது கடினம் அல்ல. ஹெகலின் கொள்கைப்படி இயற்கை
என்பது கருத்தின் வெறும் “விலக்கம்”
தான். ஆகையால் ஒரு கணத்தில் (வளர்ச்சியில் ஆகும் செயல் நிகழ்கையில்) தூய
இருத்தல் இயற்கையாக வடிவுற்றது என்று ஆகிறது. இதன்படி இயற்கையின் வளர்ச்சியில்
தொடக்கம் இருந்தது என்று அர்த்தப்படுகிறது. புறநிலைக் கருத்துமுதல்வாதத்தால்
வலியத் திணிக்கப்படும் இந்த முடிவு இயக்க இயலுக்கு எவ்வகையிலும் பொருந்தவில்லை.
பி. எங்கெல்ஸ் இதுபற்றிப் பின்வருமாறு குறித்தார்: ஹெகலின் கொள்கைப்படி
இயற்கைகாலத்தில் வளர்ச்சியுறவல்லது அல்ல, எனவே
பிரபஞ்சத்தின் மீது வரலாற்று நோக்கு செலுத்தப்பட வேண்டும் என்று கோரும் ஹெகலின்
இயக்கஇயல் அவரது கருத்துமுதல்வாத முறைக்கு முரண்படுகிறது.
கருத்துமுதல்வாதத்துக்கும் இயக்க இயலுகும் இடையே நிலவும் இந்தத்
தீர்க்கமுடியாக முரண்பாட்டை அகற்ற ஹெகலுக்கு இயலவில்லை. சமூகவாழ்வின்
நிகழ்ச்சிகளைக் தெளிவுபடுத்துகையிலும் அறிதல் நிகழ்முறையை விளக்குகையிலும் கூட
ஹெகலிடம் இயக்கஇயல் வழிக்கும் கருத்துமுதல்வாத முறைக்கும் இடையே முரண்பாடுகள்
மிக அடிக்கடி உண்டாகின்றன. இந்தச் சிந்தனையாளரின்
வர்க்கநிலை இங்கே முழு அளவில் வெளிப்படுகிறது. ஹெகல் பிரஷ்யாவின் அரசரது
அரண்மனைத் தத்துவா ஆசிரியராக இருந்தார். பரம ஆன்மாவை
ஒப்புக்கொள்வது முடியரசைச் சித்காந்த ரீதியில் நியாயப்படுத்துவதற்குச் செளகரியமாக
இருந்தது. நிலவுலகில் பிரபஞ்ச ஆன்மாவின் வெற்றி வலத்தின்
வடிவில் முடியரசைச் சித்திரிக்க ஹெகல் முயன்றார். ஹெகலின் புறநிலைக்
கருத்துமுதல்வாதமூம் மொத்தத்தில் கருத்துமுதல்வாகத் தத்துவழமும்
ஆதாரமற்றவை என்பதைக் காட்டினார் ஜெர்மானியப் பொருள்முதல்வாதியான லுட்விக் பாயர்பாக்
(Ludwig Feuerbach) (1802-1872). பரமகருத்து முதலாவது, இயற்கை இரண்டாவது என்ற ஹெகலின் போதனையை அவர்
கவனமாக அலசி ஆராய்ந்து ஆழ்ந்த விமர் சனத்துக்கு உள்ளாக்கினார். இயற்கை கடவுளால்
படைக்கப்பட்டது என்னும் மதக் கட்டுக்கதையை நயப்பாங்குடன் வெளியிடுவகே இந்தப்
போதனை என்று பாயர்பாக் காட்டினார். பாயர்பாக், கருத்துமுதல்
வாதத்தை விமர்சித்து, புறநிலைப் பிரபஞ்சம், அதாவது இயற்கை, பொருளியலானது, பருவடிவுள்ளது,
புலன்களால் உணரப்படக்கூடியது என்று நிரூபித்தார். சடப்பொருள்
என்பது மனிதனுக்கு வெளியே, வானத்திலும் பூமியிலும்
சிதறியிருப்பது மாத்திரமே அல்ல, மனிதனுக்குள் ஒருமுனைப்படுத்தப்பட்டுள்ளதுங்கூட
என்று அவர் அழுத்திக் கூறினார். சடப்பொருள் யாராலும் படைக்கப்படவில்லை,
அது நித்தியமாக நிலவுகிறது என்றார் அவர். கடவுளா்களால் அல்ல,
இயல்பான சக்திகளாலேயே, இயல்பான
விதிகளாலேயே இயற்கை இயக்கி நடத்தப்படுகிறது என அவர் கூறினார். இயற்கையின்
இயல்பான வளர்ச்சி சிந்திக்கும் திறன் படைத்த மனிதனின் தோற்றத்துக்கு இட்டு
வந்திருக்கிறது என்பதைக் குறிப்பிட்டு, சிந்தனை
சடப்பொருளிலிருந்து தனிப் பிரிக்க முடியாதது என்றும் மூளையின் செயல்பாட்டின்
விளைவே அது என்றும் பாயர்பாக் வலியுறுத்தினார். மனிதச் சிந்தனை தவிர வேறு எவ்விதச் சிந்தனையும் இல்லை, இருக்கவும்
முடியாது என அவர் திண்ணமாகக் கூறினார். இருத்தல், சிந்தனை
இவற்றின் ஒருமை எப்போது அர்த்தமுள்ளது ஆகிறது என்றால் இந்த ஒருமையின் ஆதாரமாக,
அகநிலைப்பொருளாக எதார்த்தமான பிராணி, அதாவது
மனிதன், எடுத்துக்கொள்ளப்படும் போது தான். சடப்பொருள்
ஆன்மாவின் விளைவு அல்ல, ஆன்மாதான் சடப்பொருளின் உன்னத
விளைவு -- இவ்வாறு எழுதினார் பாயர்பாக். நமது உணர்வால் பிரதிபலிக்கப்படும்
வெளிப் பிரபஞ்சம், பொருள்கள், நிகழ்ச்சிகள்
ஆகியவற்றின் புறநிலை எதார்த்தத்தை ஒப்புக்கொண்டு, மனிதன்
நிலவுவகுற்கு ஏற்ற நிலைமைகள் இல்லாத காலத்திலுங்கூட இயற்கை நிலவியது என பாயர்பாக்
சுட்டிக்காட்டினார். பொருளியலான, நமது புலன்களால் உணர்ந்து
அறியக்கூடிய எந்தப் பிரபஞ்சத்தை நாமே சேர்ந்தவாரகளோ, அது
ஒன்றுதான் உண்மையான எதார்த்தமான பிரபஞ்சம், மற்றது எல்லாம்
கருத்துமுதல்வாதப் பிதற்றல் என்றார் அவர்.
ஹெகலின் தத்துவத்தை அம்பலப்படுத்தி அதன் வாதங்களை
ஆணித்தரமாக மறுத்தபோதிலும் பாயார்பாக் தமக்கு முந்திய பொருள்முதல்வாதத்தின்
வரையறுத்த தன்மையை அகற்றவில்லை. அவருடைய தத்துவம் மாறாநிலைவாதப்
பொருள்முதல்வாகும். ஹெகலின் கருத்துமுதல்வாத முறையை பாயர்பாக் நிராகரித்து
ஒதுக்கினார். ஆனால் அதோடுகூடவே ஹெகலின் இயக்க இயல்வாதத்தையும், வளர்ச்சி பற்றிய அவரது விலைமிக்க
கருத்துக்களையும் அவர் நிராகரித்துத் தள்ளிவிட்டார்.
மாறாநிலை வாதகப் பொருள்முதல்வாத நிலையில் நின்றுவிட்ட பாயர்பாக் மனிதனது
சமூக-வரலாற்றுச் சாரத்தை, அவனது மாற்றியமைக்கும் சமூக
நடைமுறைச் செயலின் நிர்ணயகரமான பங்கைப் புரிந்துகொள்ள முடியவில்லை. மனிதனை அவர் உயிரியல் ஐந்துவாக மட்டுமே ஆராய்ந்தார். மனிதனது வளர்ச்சி சமூக
உற்பத்தியின் வளர்ச்சியால் தீர்மானிக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளும்
அளவுக்கு அவர் முன்னேறவில்லை. மனிதனது உணர்வுகளும்
விழைவுகளுமே வர லாற்றின் இயக்கு சக்திகள் என பாயர்பாக் கருதினார். எனவே சமூக
வாழ்வின் பொருள்முதல்வாத அர்த்தத்தை அவா் தெரிந்து கொள்ளவில்லை.
No comments:
Post a Comment