மார்க்சிய லெனினிய தத்துவம் பயில்வதற்கு அடிப்படை-4

 த்துவத்தின்‌ வளர்ச்சியில்‌ ருஷ்யப்‌ புரட்சிகர ஜனநாயகவாதிகள்‌ ஆற்றிய பங்கு

ரஷ்யப்‌ புரட்சிகர ஜனநாயகவாதிகள்‌ கருத்துமுதல்வாதத்திற்கு எதிராக முன்னணிப்‌ பொருள்முல்வாதத்தின்‌ போராட்டத்தில்‌ பெரும்‌ பங்கு ஆற்றினார்கள்‌. 19ம்‌ நூற்றடுண்டைச்‌ சேர்ந்த ரஷ்யக்‌ புரட்சிகர ஜனநாயக வாதிகளான விஸ்ஸரியோன்‌ பெலீன்ஸ்க்கய்‌ (1811-1848), அலெக்ஸாந்தர்‌ ஹெர்ட்ஸென்‌ (1812—-1870), நிக்கொலாய்‌ செர்னிஷேவ்ஸ்க்கய்‌ (1828-1889), நிக்கொலாய்‌ தப்ரலியூ பொவ்‌ (1886-1961), இமீத்ரிய்‌ பீஸரெவ்‌ (1840-1869) ஆகியோரும்‌ பிறரும்‌ ரஷ்யாவில்‌ நிலப்பிரபுத்துவ பண்ணையடிமை அமைப்பு நெருக்கடிக்கு உள்ளாகியிருந்த காலத்தில்‌ செயலாற்றினார்கள்‌. செயலூக்கம்‌ உள்ள அரசியல்‌, சமூக ஊழி யர்களாக விளங்கிய அவர்கள்‌, ஆழ்ந்த புரட்சிகர மாற்றங்கள்‌, முக்கியமாகப்‌ பண்ணையடிமை மூறையின்‌ ஒழிப்பு ருஷ்யாவுக்குத்‌ தேவை என்பதைப்‌ புரிந்துகொண்டார்கள்‌.

நாட்டின்‌ குடி மக்களில்‌ மிகப்‌ பெருந்தொகையினரான குடியானவர்கள்‌ பண்ணையடிமை முறையாலும்‌ முதலாளித்துவத்தாலும்‌ இருவகையில்‌ நசுக்கப்படுவதைப்‌ புரட்சிகர ஜனநாயகவாதிகள்‌ கண்டார்கள்‌. பண்ணையடிமைமுறைக்கு. எதிரான சக்திகளின்‌ நலன்களையும்‌ பண்ணையடிமைக்‌ குடியானவர்களின்‌ எண்ணங்களையும்‌ விழைவுகளையும்‌ அவர்கள்‌ வெளியிட்டார்கள்‌. நிலப்பிரபுத்துவ-எதேச்சாதிகார டுக்குமுறைக்கும்‌ பண்ணையடிமைத்‌ தனத்துக்கும்‌ பூர்ஷ்வா அடிமைத்தனத்துக்கும்‌ எதிராக மக்கள்‌ திரளின்‌ போராட்டத்தில்‌ புரட்சிகர ஜனநாயகவாதிகள்‌ த்துழைத்தார்கள்‌. ருஷ்யப்‌ புரட்சிகர ஜனநாயகவாதிகள்‌ பொருள்முதல்வாதமும்‌, இயக்கவிலும்‌ ஆகியவற்றின்‌ வளர்ச்சியில்‌ பெருத்து பங்கு ஆற்றினார்கள்‌.

தங்கள்‌ காலத்து விஞ்ஞானச்‌ சானைகளையும்‌ பொருள்முதல்வாதத்‌ தத்துவத்தையும்‌ ஆதாரமாகக்‌ கொண்டு அவர்கள்‌ தங்களுக்கு முந்திய பொருள்முதல்வாதிகளைக்‌ காட்டிலும்‌ அதிகத்‌ தர்க்கப்‌ பொருத்தத்துடன்‌ கருத்துமுதல்வாதத்தை விமர்சித்தார்கள்‌. மாறாநிலைவாதப்‌ பொருள்‌ முதல்வாகத்தின்‌ வரையறுத்த தன்மையை அவர்கள்‌ கணிசமான அளவு போக்கி விட்பார்கள்‌. தத்துவ வளர்ச்சியில்‌ நி. செர்னிஷேவ்ஸ்க்கியின்‌ பங்கைக்‌ குறிப்பிட்டு வி. இ. லெனின்‌ பின்வருமாறு எழுதினார்‌: “1850க்களிலிருந்து 1888ம்‌ ஆண்டு வரை முழுமையான தத்துவப்‌ பொருள்முகல்வாதுத்தின்‌ தரத்தில்‌ தொடர்ந்து நிலைத்திருக்கவும்‌ புதுக்கான்ட்வாதிகள்‌, புலக்‌ கொள்கையினர்‌, மாஹீயவாதிகள்‌ முதலிய குழப்பல்காரர்‌களின்‌ பரிதபிக்கத்தக்க பிதற்றல்களை நிராகரித்து துக்கவும்‌ வல்லமை கொண்டிருந்த உண்மையிலேயே மாபெரும்‌ ஓரே ருஷ்ய எழுத்தாளர்‌ செர்னிஷேவ்ஸ்க்கிய்‌ தாம்‌.”(வி. இ. லெனின்‌. முழு நூல்திரட்டு, தொகுதி 18, பக்கம்‌ 284). பிரபஞ்சத்தின்‌ பொருளியல் தன்மையையும்‌ அதன்‌ வளர்ச்சி விதிகளின்‌ புறநிலை இயல்பையும்‌ பற்றிய போதனையை ருஷ்யப்‌ புரட்சிகர ஜனநாயகவாதிகள்‌ செவ்வைப்படுத்தினார்கள்‌. நி. தப்ரலியூபொவ்‌ பின்வருமாறு எழுதினார்‌: “இயற்கையில்‌‌ எல்லாம்‌ எளியதிலிருந்து அதிகச்‌ சிக்கலானகற்கு, திருந்தாததிலிருந்து அதிகத்‌ திருத்மானற்குப்‌ படிப்படியாகச்‌ செல்கிறது. ஆனால்‌ எங்கும்‌ அவே சடப்பொருள்தான்‌ உள்ளது. அதன்‌ வளர்ச்சித்‌ தரங்கள்‌ மட்டுமே வெவ்வேறானவை.

நிரந்தரமாக மாறிக்‌ கொண்டிருக்கும்‌ இயற்கை தனது வளர்ச்சியின்‌ குறித்த கட்டத்தில்‌ சந்திக்கும்‌ பிராணிகளைத்‌ தவிர்க்க இயலாதவாறு தோற்றுவிக்கிறது என்ற கருத்தைப்‌ புரட்சிகர ஜனநாயகவாதிகள்‌ விரிவுபடுத்தினார்கள்‌. ஆன்மாவும்‌ எண்ணமும்‌ இயற்கையினதும்‌ வரலாற்றினதும்‌ வளர்ச்சியின்‌ விளைவு. எனவே கருத்தை, சிந்தனையை முதலாவதாகக்‌ கொள்ளலாகாது. இயற்கை, சடப்பொருள்‌ உணர்விலிருந்து தோன்றியது என்பது அபத்தம்‌ என அவர்கள்‌ வாதித்தார்கள்‌.

ரஷ்யப்‌ புரட்சிகர ஜனநாயகவாதிகள்‌ அறியொணாமைக்‌ கொள்கையை எதிர்த்தார்கள்‌. பிரபஞ்சத்தை அறிவது சாத்‌தியம்‌ என்பது பற்றிய எல்லாவிதச்‌ சந்தேகங்களையும்‌ அவர்கள்‌ நிராகரித்து விட்டார்கள்‌. புறநிலையாக நிலவும்‌ பொருள்களும்‌ நிகழ்ச்சிகளும்‌, அவற்றின்‌ பண்புகளும்‌ இயல்புகளும்‌ உறவுகளும்‌, அவை நிலவுவகுற்கும்‌ வளர்வதற்கும்‌ உள்ள புறநிலை விதிகளும்‌ நமது சிந்தனையில்‌ சரியாகப்‌ பிரதிபலிக்கின்றன என அவாரர்கள்‌ உரைத்தார்கள்‌. ரஷ்யப்‌ புரட்சிகர ஜனநாயகவாதிகள்‌ இயற்கை, சமூகம்‌, இவற்றின்‌ இயக்க இயல்‌ அர்த்தத்திற்கு மிக அருகே நெருங்கி விட்டார்கள்‌. இயக்க இயலை அவர்கள்‌ புரட்சியின்‌ இயற்கணிம்எனக்‌ கருதினார்கள்‌. ஆனால்‌ புறநிலை வரலாற்று நிலைமைகளும்‌ ருஷ்ய வாழ்க்கையின்‌ பிற்பட்ட தன்மையும்‌ அவர்கள்‌ ஒத்தியைந்த பொருள்முதல்வாதி-இயக்க இயல்வாதிகள்‌ ஆவதற்குக்‌ தடையாக இருந்தன. சமூக வாழ்வின்‌ பொருள்‌முதல்வாத அர்த்தத்தையும்‌ அவர்கள்‌ முழுதும்‌ புரிந்துகொள்ள வில்லை. சமூகத்தை ஆராய்கையில்‌ அவர்கள்‌ பொருள்முதல்‌ வாதத்தின்‌ அனேக அம்சங்களை வெளியிட்டுள்ளார்கள்‌ என்பது உண்மையே. உதாரணமாக, ரஷ்யப்‌ புரட்சிகர ஜனநாயகவாதிகள்‌ வரலாற்றில்‌ மக்கள்‌ திரள்‌ ஆற்றும்‌ மிகப்‌ பெரிய பங்கைச்‌ சுட்டிக்‌ காட்டினார்கள்‌, சமூக வாழ்வில்‌ பொருளாதாரக்‌ காரணிகளின்‌ முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்கள்‌, சமூக வளர்ச்சியில்‌ கலைகள்‌, முற்போக்குக்‌ கருத்துக்கள்‌ ஆகியவற்றின்‌ பங்கை உயார்வாக மதித்தார்கள்‌. செர்னிஷேவ்ஸ்க்கியின்‌ படைப்புக்களில்‌ வர்க்கப்‌ போராட்டத்தின்‌ மணம்‌ வீசுகிறது என்று எழுதினார்‌ லெனின்‌.

**********

மார்க்ஸுக்கு முந்திய தத்துவத்தின்‌ சிறந்த பிரதிநிதிகளால்கூட த்தியைந்த தத்துவச்‌ சித்தாந்தத்தை, உண்மையில்‌ விஞ்ஞான ரீதியான பிரபஞ்சக்‌ கண்ணோட்டத்தை உருவாக்க முடியவில்லை என்பதைக்‌ காண்கிறோம்‌. இயற்கை, சமூகம்‌, சிந்தனை ஆகியவற்றின்‌ வளர்ச்சி நிகழ்முறையைச்‌ சரியாகப்‌ பிரதிபலிக்கும்‌ செப்பமாக அமைந்து விஞ்ஞானரீதியான த்துவக்‌ கண்ணோட்டம்‌, வரலாற்றில்‌ முதன்முதலாக ௨ருவாக்கப்பட்டது மார்க்ஸீயத்தினால்தான்‌.

**********

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்