உற்பத்திக் கருவிகளை உருவகப்படுத்தும் பொழுது மனிதன் தன்னையும் உருவகப் படுத்திக் கொள்கிறான்.
உற்பத்தி செய்யும் பொழுது மனிதன் இயற்கையின் உருவத்தை மாற்றவில்லை அவன் தன்னையே மாற்றிக் கொள்கிறான் ஒரு குறிப்பிட்ட முறையில் வேலை செய்வதன் மூலம் தான் தங்கள் உழைப்பின் பலனை பரிவர்த்தனை மூலம் மக்கள் உற்பத்தி செய்ய முடியும் உற்பத்தி செய்வதற்காக மக்கள் ஒருவருக்கொருவர் இடையிலே உறவுமுறை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இந்த ஒருவருக்கு ஒருவர் உறவு எனும் விஷயத்தில் நின்று கொண்டுதான் அவர்கள் இயற்கை பயன்படுத்திக்கொள்கின்றனர் உற்பத்தி செய்கின்றனர் என்றார் மார்க்ஸ்.
50ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் பயன்படுத்திய பல கருவிகள் அடிப்படையில் அவர்கள் ஆரம்பகால மனித வளர்ச்சி ஆராய்ச்சியாளர்கள் நிர்ணயிக்கின்றனர். அந்த மனிதன் தீ மூட்டினான் கிழங்குகளை வேக வைத்து தின்றான் தோல்ஆடைகளை அணிந்தான் நம்மை போன்று அவனும் முக்கியமான வேலைகளை கையால் செய்தான் அந்த மனிதனை நீண்டதாலர் மனிதன் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றனர்.அந்தக் காலத்தில் ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்க பகுதிகள் ஒன்றாகவும் வெறும் பனியால் மூடப்படும் கிடந்ததாகவும் கூறுகின்றனர் .
சுமார் 30 ஆயிரம் வருடங்களுக்கு முன் பருவ காலத்தில் மாற்றம் ஏற்பட்டது குளிர் குறைந்து வெப்பம் வரலாயிற்று பனியிலிருந்து விடுபட்டு வெப்பம் அந்தக் காலத்தில் அதிகமாயிற்று. அந்தக் காலத்தில் புத்திசாலியான விஷயம் தெரிந்த ஒரு முறையான கூட்டு வாழ்க்கை மேற்கொண்ட இன்னொரு கூட்டம் தெற்கிலிருந்து வடக்கே வந்தது. அந்தக் கூட்டம் நீண்டதாலர் மனிதர்கள் வாழ்ந்த உலகில் பிரவேசித்தது வலிமை படைத்த புதிய கூட்டம் நீண்டதாலர் மக்களை வென்றது அவர்களில் பலரைக் கொன்றது. இவர்களை உயிரின ஆராய்ச்சியாளர் ருடோதியன் மனிதர் என்று அழைக் கிறார்கள்.அதுவரையில் மனிதன் பச்சை மாமிசத்தை தின்றான் ஆனால் ருடோதியன் மனிதன் நெருப்பை உபயோகிக்க கற்றான் அவன் மாமிசத்தை வேக வைத்து தின்றான் இங்கே நமக்கு இந்த மனித சமூகம் வரலாறை புரிந்துகொள்வதற்கு அந்த கால வரலாறு ஏதும் எழுதப்படவில்லை. எனவே வாழ்க்கை முறையில் வாழ்க்கையில் அவர்கள் பயன்படுத்திய கருவிகளை அடிப்படை கொண்டும் அவர்கள் அந்த காலத்தில் அறிவு சமூக வளர்ச்சியை நிர்ணயிக்க வேண்டும் .
பரிணாம வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் மனிதன் பேசவில்லை, அவனால் பேச முடியவில்லை ஆரம்பகால மனிதன் தாடை எலும்பு மிக சிறிதாக இருந்தால் அவன் நா அசையவில்லை, எனவே அப்பொழுது அவன் பேசவில்லை அவன் சைகை காட்டினான் ஆனால் சைகை காட்டி அவனால் வாழ முடியாது அல்லவா ?
மனிதன் கூட்டு உழைப்பில் ஈடுபட்டதன் பிறகு அவனுடைய பேச்சின் அவசியம் அதிகரித்தது. சைகையால் செயல்படும் முறையில் விடை கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. வாழ்க்கை சாதனங்களை உற்பத்தி செய்யும் முறையில் மாற்றம் ஏற்பட்டு தொடர்ந்து மனிதனின் உடல் அமைப்பில் மாற்றம் ஏற்பட்டது .
வாயும் நாவும் செயல்பட ஆரம்பித்தது அவன் சத்தம் போட ஆரம்பித்தான். இந்த சப்தம் தான் ஆரம்பத்தில் மனிதனின் பேச்சு ஆகும்.
கூட்டு வாழ்க்கையின் பேச வேண்டிய அவசியத்தை உண்டு பண்ணியது. ஆதலால் தனது கருத்தை சப்ததின் மூலம் வெளிப்படுத்திய மனிதன் பேச ஆரம்பித்தான் சத்தம் வார்த்தைகளாக பரிணமித்தன கூட்டு வாழ்க்கை மொழியை வளர்த்தது .
ஆதி மனிதன் விவசாயம் செய்ய ஆரம்பித்தான் எனும் விஷயம் விவாதத்துக்குறியது இந்தக் காலத்தை வரையறுத்து கூறமுடியாது, என்றாலும் சுமார் 20 ஆயிரம் வருடங்களுக்கு முன் மனிதன் விவசாயம் செய்ய ஆரம்பித்து இருக்க வேண்டும் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
மனிதன் சிறு கூட்டங்களாக மலைகளில் வாழ்ந்த காலத்தில் தான் அவன் செடிகொடிகளை அறிந்தான் மலைகளில் வாழ்ந்த காலத்தில் மனிதன் செடிகொடிகளை நட ஆரம்பித்த காலம்,பிறகு நதிக்கரை ஓரங்களில் அவன் குடியேறியபோது பயிரிட தொடங்கினான் ஆம் விவசாயம் செய்ய வேண்டிய அவசியம் மனிதனுக்கு ஏற்பட்டது.
ஆதியில் மனிதன் அறிவியலை அறிந்திருக்கவில்லை அதற்கான அறிவும் வளர்ச்சியும் அடையவில்லை; மனிதன் அறியாமையில் தவழ்ந்து கிடந்தான். இயற்கையின் பல்வேறு விளையாட்டுகளில் திக்கித் திணறிக் கொண்டிருந்தான். அவனுக்கு இயற்கையான இரவு பகல் ஏன் மழை புயல் வெள்ளம் மின்னல் போன்ற இயற்கை சக்திகளை கண்டு அஞ்சினான். அந்த இயற்கை சீற்றத்தை அறியாமையால் அடி பணிந்து வணங்கினான்.
மனிதனின் தேவைக்கேற்ப அவன் இயற்கையோடு போரிட்டான் அவனின் முயற்சியால் ஆரம்பகட்டத்தில் பல்வேறு விதமான மூடநம்பிக்கைகளும் பிற்போக்கு கற்பிதங்களினாலும் கவரப்பட்டான். அந்த காலத்து பல்வேறுவிதமான பிற்போக்குத் தனங்கள் அந்த சமூக தேவைக்காகவே ஏற்படுத்தப்பட்டது அவர்களின் அறிவு வளர்ச்சி பின்தங்கியே இருந்தது.
இயற்கைக்கு அடிமைப்பட்டுக் கிடந்த மனிதன் இயற்கையை எதிர்த்துப் போரிட்டான் தெரிந்தோ தெரியாமலோ இயற்கையை எதிர்த்துப் போரிட்டதன் விளைவாக மனிதன் இயற்கையை புரிய தொடங்கினான். மனித வாழ்க்கை போராட்டமானது அவன் உயிர் வாழ போராடித்தான் ஆக வேண்டும்.உயிர் வாழ உணவு அவசியம். மனித வாழ்க்கைக்குத் தேவையான மற்ற பொருட்களை விட உணவுதான் முதன்மையான முக்கியமான பொருளாக கண்டெடுக்கப்பட்டது. உண்ண வேண்டுமென்றால் உழைக்க வேண்டும். உழைப்பு அறிவு வளர்ச்சிக்கு அடிப்படையாகிறது.
அறிவு என்பது இயற்கையையும் சமூக நடைமுறை செயல்பாடுகளையும் சார்ந்து இயங்குவதாகும். குறிப்பாக அது மனிதனுடைய பொருள் உற்பத்திக்கான நடவடிக்கையை பெரிதும் சார்ந்து அவற்றை அடிப்படையாகக் கொண்டு விளங்குவதாகும். அறிவு என்பது மனித மனதில் ஏற்படுத்தும் புறப்பொருளின் பிம்பமாகும், அறிவிற்கு ஆதாரமாக விளங்குவது புறப்பொருளே என பொருள்முதல்வாதம் கூறுகின்றது .வர்க்க சமூகத்தில் மனிதன் வலிமைப்படைத்தவனிடமிருந்து வலிமையற்றவன் அண்டி வாழ தேவை ஏற்பட்டது. அந்த சுரண்டல் ஒடுக்கு முறையே வர்க்கப் பிரிவினையான ஒடுக்குபவனும் ஒடுக்கப்படுபவனும் உருவானது அதாவது ஒரு புறம் உடைமையாளனும் இன்னொரு புறம் உடமை அற்றவனும். ஆண்டவனின் அருள் பெற்றவனாக ஆண்டைகளும், ஆண்டைகளே ஆண்டவனாக ஏழை எளிய மக்களுக்கு உபதேசிக்கும் மதங்களும் தோன்றின.
இந்த ஏற்றத்தாழ்வுகளை தத்துவங்களாக ஆளும் வர்க்கத் தேவைகளை உயர்த்திப் பிடிப்பதற்காக உருவாக்கப்பட்டவையே ஆளும் வர்க்க சித்தாந்தங்கள் ஆகும்.
இன்றைய சமூகத்தில் நாம் வாழும் நிலையிலிருந்து நமது சமூகத்தை அணுகி புரிந்துக் கொள்ள ஒரு முயற்ச்சியே இந்தக் கட்டுரையின் நோக்கம் ஒரு சில சுரண்டலாளர்கள் வாழ்வதற்காகவே ஒட்டுமொத்த சமூகத்தில் சுரண்டல் நடைபெற்றுக் கொண்டுள்ளது... பல நூறு ஆண்டுகளுக்கு முன் மறைந்த சமூகத்தில் புதைந்து கிடக்கும் உண்மைகளை தேடிய பயணமே இந்தப் பகுதி.
தொடரும்.....
No comments:
Post a Comment