செப்டம்பர் 12 தியாகிகளுக்கு மாலை அணிவிக்க கூட்டாக செல்வதற்கான முயற்சி

 

கூட்டுமுயற்சிக்கான ஒரு விவாதம்.

 

தோழர்களுக்கு வணக்கம்,

 

செப்டம்பர் 12 தியாக தோழர்களின் நினைவு நாளில் ஒன்றுபட்டு கொடியேற்றுவதும் மாலை அணிவிப்பதும் குறித்து விவாதிக்கதான் தோழர்களே.

நக்சல்பாரிகளின் தொடர்ச்சியாய் தமிழகத்தில் உதித்த புரட்சிக்கான வித்தான கட்சி அதன் தொடர்ச்சி இன்று பல்வேறு பிரிவாக பிரிந்துக் கிடகின்றன. அதில் மார்க்சிய லெனினியத்தை ஏற்பவர்கள் குறித்து மட்டுமே இங்கே விவாதிக்கிறோம். மா-லெ ஏற்காதவர்களை பற்றி இங்கு பேச்சு இல்லை.

எத்தனை பிரிவு இருந்தாலும் மார்க்சிய லெனினியத்தை நேசிப்போர் உண்மையிலுமே சமூக மாற்றத்தை விளைவோரே ஆக அவர்கள் தேடும் வழிமுறைகள் வேறாக இருக்கலாம் ஆனால் நோக்கம் ஒன்றாக உள்ளவர்களை தற்காலிக தேவையில் இணைக்கலாமே தோழர்களே

 

சில முதலாளித்துவ கட்சிகள் பின்னால் கூட சில நேரங்களில் அணி சேர அவசியம் ஆகிறது. அதற்காக கொள்கை கோட்பாடுகளை துறந்துவிட்டு அவர்கள் பின்னால் செல்வதில்லை. ஆனால் குறிப்பான பிரச்சினைக்காக ஒன்று சேர்வது போல், நமது முன்னோடிகள் நமது வழிகாட்டிகள் சென்ற பாதையை நாம் பின்பற்றும் பொழுது அவர்களை நினைவை அவர்களின் சபதத்தை நிறைவேற்ற நினைக்கும் எல்லோரும் ஒரு நிகழ்வில் ஒன்றாக சில மணி நேரம் இணைந்து செயல்படமுடியாதா தோழர்களே?

 

நம்மை ஒன்றிணைய தடுப்பது எவை சற்று அலோசியுங்கள். மா-லெ நமக்கான வழிமுறையை தெளிவாக காண்பிக்கிறது தோழர்களே. அந்த பாதைக்கான பயணம் தோழர் லெனின் குழுக்களை இணைக்க கூறியவைதான், “ஜார் கொடூரனை எதிர்த்து தனித்தனியான குழுக்களாக பிரிந்துக் கிடக்கும் பொழுது அவனை வீழ்த்த முடியாது, அதனால் சக்தி வாய்ந்த கட்சியின் அவசியம் என்பதோடு புரட்சிகர கட்சியை கட்டியதும் புரட்சி நடத்தியதும் எல்லோரும் அறிந்தவைதானே”. நாம் பிரிந்து கிடப்பதனால் பயன் உண்டா? சிந்தியுங்கள் தோழர்களே?

இந்த தற்காலிக நிகழ்வு பயனளித்தால் தொடர்ந்து விவாதித்து செயல் படுங்கள் இல்லையேல் இந்த நிகழ்வு பயனுள்ளதா இல்லையா பரிசீலிக்கவும் தோழர்களே.

 

 

தோழமையுடன்

இலக்கு ஆசிரியர் குழு

ஜீலை 2024 


உங்களின் மேலான கருத்துகள் மேலும் தொடர்ந்து விவாதித்து கூட்டு முயற்சியை எட்டும் வரை மார்க்சிய லெனினிய வழிகாட்டுதலை ஏற்று செயல்படுவோம் தோழர்களே.

வாட்சாப் எண்- 7010134299 மற்றும் பதிலளிக்க இமெயிலிலும் இலக்கு இணையபகுதியில் அளிக்கலாம் தோழர்களே.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 தொடர்புக்கு

இலக்கு இணைய இதழ் ஆசிரியர் குழு

தொடர்புக்கு இணையத்தில்- இலக்கு இணைய இதழ் (namaduillakku.blogspot.com)

இமெயிலில் – cpalani.cpalani@gmail.com

வாட்சாப் - 7010134299

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்