முதலாளித்துவ கலை, இலக்கியங்களில் கொலை, கொள்ளை, திருட்டு, காதல் ஏமாற்றம், வல்லுறவு போன்ற பாலியல் குற்றங்கள், கடத்தல், கலப்படம், சொத்துப் பிரச்சினைகள், கேவலமான வன்கொடுமைகள், துயரமான நிகழ்வுகள் ஆகியவற்றை தொலைகாட்சி தொடர்கள் மட்டுமன்றி நடைமுறையிலும் தாராளமாகக் காண்கிறோம் இவைகளே முக்கிய சினிமாக்களிலும் பார்க்கிறோம்.இங்கே ஒடுக்கப் பட்ட மக்களுக்கான விடுதலைக்கான ஆம் இந்த சமூகத்தில் சாத்தியமா அல்லது அதற்க்கான வழி வகை என்னவென்றாவது பேசத் துணியும் தொலைகாட்சி தொடர்களோ சினிமாக்களோ காண முடியுமா? ஏனெனில் நாம் வாழும் சமூக அமைப்பின் அவலங்களை பேசும் இவர்கள், இந்த முரண்பாடுகள் அனைத்தும் இந்த சமுதாய அமைப்பிலுள்ள முரண்பாடுகளின் பிரதிபலிப்பேயாகும் என்பதனை சொல்ல மறந்து விடுகின்றனர். இந்த சமூகத்தை கட்டிக் காக்க,அதாவது அமைதி பாதுகாப்பு என்ற பெயரில் இந்த குற்றச் செயல்களை முன்னிறுத்தி பயமுறுத்துகின்றனர். உண்மையில் இக்குற்றச் செயல்களுக்கு காரணமே இந்த சமூக அமைப்பு முறைதான் என்பதனை பேசுகின்றார்களா என்றால் இல்லை என்பதே பதிலாகும்,ஆகவே இக்குற்றங்களை எல்லாம் ஒழிப்பதற்காக இச் சமூக அமைப்புக்குள்ளே தேடுகின்றனர். உண்மையோ வேறாக உள்ளது. போலிஸ், சட்டங்கள், வக்கீல்கள், நீதிபதிகள், துப்பறியும் பிரிவுகள், சிறைச்சாலைகள், சிறை அதிகாரிகள்,சட்டக்கல்லூரிகள், அதற்க்கான பேராசிரியர்கள்.இதுதான் முதாலாளித்துவ நாகரிகமாகும். ஒருபுறம் குற்றவாளியை உருவாக்குவதும் இன்னோருபுறம் குற்றவாளியை தடுக்கவும் இதுபோன்ற செயலால் வேலையற்றவர் தொகையை முதலாளித்துவம் குறைக்க முயல்கிறது. அந்த பிரிவினர் எந்த உழைப்பிலும் ஈடுபடாமல் மக்களின் வாழ்வியலில் நேரடி தொடர்பு கொள்பவர்கள். இவர்கள் எப்படி பட்டவர்களாக இருப்பர் என்று நான் சொல்லத் தேவையில்லை.இவ்வாறாகப் பல இலட்சம் பேர் உழைக்காமல் ஒட்டுண்ணிகளாக பிறர் உழைப்பில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அதாவது சிறைச்சாலைகள், துப்பாக்கிகள், போலிஸ்காரர்கள், சிறைக்காவலர்கள், குற்றவாளிகளை வதை செய்யும் கருவிகள், இவ்வாறான பயனற்ற வேலைக்காக தேவையற்ற மனித உழைப்பை வீணடிக்க வேண்டியுள்ளது.
"சித்தாந்தவாதி கருத்துக்களையும், கவிஞன் கவிதையையும் மதகுரு பிரார்த்தனைகளையும், பேராசிரியர் விரிவுரைகளையும் உற்பத்தி செய்வது போல குற்றவாளி குற்றத்தை உற்பத்தி செய்கிறான்"என்று மார்க்ஸ் கூறியுள்ளார். இதைக் கட்டுப்படுத்த, முன்னர்கூறிய பல பிரிவினர் உழைப்பில் ஈடுபடுகின்றனர். ஒரு குற்றமானது பத்திரிகைகளில் முக்கிய செய்தியாகி விற்பனையாகிறது, இதன் அடிப்படையில் சிறுகதைகள், நாவல்கள், துப்பறியும் கதைகள், மர்மக்கதைகள், கார்டூன் கதைகளான கமிக்ஸ் ஆக இலக்கியச் சந்தையை நிரப்புகிறது. ஆக சினிமா, டி.வி. குறும் படங்களிலும் "குற்றச்செயல்களே?”முதலிடம் பிடிக்கிறது.பாலியல் குற்றங்கள், வன்கொடுமைகள் ஆகிய குற்றங்கள் இங்குமுக்கிய பங்குகள் வகிக்கின்றன.குற்றவாளி, துன்பியல் உணர்வுகளையும் உற்பத்தி செய்கிறான், இதன் மூலம் மக்களுக்கு ஒழுக்கம், அழகுணர்வு ஆகிய உணர்வு களையும் ஏற்படுத்துகிறான். இவற்றின் மூலம் ஒரு சேவையும் செய்கிறான், சட்டமன்ற உறுப்பினர் மூலம் குற்றவியல் சட்டங்களாகவும், கலைத்துறையில் நடவடிக்கைகள், ஊடகங்களின் தீணிக்காவும் இவ்வாறு மக்கள் பிரச்சினைகளை பின் தள்ளி தற்காலிக இடத்தைபிடித்துக் கொள்கின்றன ஆகவே, கலை இலக்கியம் என்பது மக்களின் வாழ்க்கை சிறக்கதானே அன்றி வெறுப்பதற்கல்ல ஆனால் இங்கோ வேறாக இருபதற்க்கு காரணம் இவர்கள் எல்லாம் உற்பத்தியில் ஈடுபடாது பிறர் உழைப்பில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர், எதற்க்காக முதலாளித்துவத்தை ஆம் அரசை கட்டிக்காக்கவே. இந்த ஆட்சியின் மாட்சிமையை காக்கின்றனர்.மேலே பார்த்த விவாதம் சுட்டிக் காட்டும் இன்னொரு சுவாரசியமான விஷயம் சந்தை இலக்கியம், கலை கலைக்காக எனும் உயர்குடி இலக்கியம் இரண்டும் ஆளும் வர்க்க கலையின் இரு தோற்றங்களே; இரண்டு முகங்களே. 99 சதவீத மக்களை சந்தை இலக்கியம் என்ற கொக்கியைப் போட்டு இழுத்து மாட்டிவிட்டு, 1 சதவீத மக்களுக்கு மட்டும் போலித்தனமான கலைரசனை வித்தை காட்டுகிறார்கள். இந்த சகாப்தத்தின் முத்திரைச் சொல்: “சந்தையேகடவுள்!” இந்தக் கடவுளுக்கே 100 சதவீத மக்களும் அடிமை என்று சந்தை விளம்பரம் கதறுகிறது.
தமிழகத்தில் சீர்திருத்தவாத இயக்க வளர்ச்சி போக்கின் ஊடே இதனை நாம் புரிந்துக் கொள்ள முடியும்.
சீர்திருத்தவாத கலைஞர்கள் மத்தியில் அவர்களின் வர்க்க உள்ளடக்கம் காரணமாக, நிலப்பிரபுத்துவ, குட்டி முதலாளித்துவ பிழைப்புவாதக் கண்ணோட்டம் காரணமாக வக்கிர மனோபவம் இருந்தது. இது மறுக்க முடியாத விஷயம். ஆனால் அன்று அவர்கள் அதை தவிர்த்து பெருவாரியான மக்களைச் சென்றடைய சிந்தித்த கலை இலக்கியம் மக்களிடையே சீர்திருத்தவாத கருத்துகளை விதைத்தது, ஒரு சிருபான்மையினர் இந்த சீர்திருத்த இயக்கத்தின் பலனை அனுபவித்து கல்வி, அறிவு, கலை நுணுக்கம் பெற்றவர்கள் இன்று ஆளும் வர்க்கத்தோடு கூடிக் குலாவிக் கொண்டுள்ளனர்.
அவர்களின் வளர்ச்சியும் தமிழ் சமூகத்தில் அவர்களின் கருத்தியல்களான நாடகம், சினிமா , நாத்திகவாதம் மூடபழக்க வழக்கங்களை விட்டொழிந்து ஒரு முற்போக்கு சிந்தனையை விதைத்து என்றாலும் சமூக அடிதள பிரச்சினையை ஒதுக்கி தள்ளி இன்று அவர்களுடன் சமரசமாக வாழ கற்று கொடுத்துள்ளது. எனவே, தொகுப்பாக, மக்களைச் சென்றடையும் எந்த ஒரு சரியான கலை இலக்கியமும் தரம் பற்றிய பிரச்சனையில் மாவோ சொல்வதுபோல இயங்கியல் கண்ணோட்டத்தையே வைக்க முடியும். மக்களின் தேவையை ஒட்டியே தரம் வளர்க்கப் பட வேண்டும். ”புரட்சிகரமான உள்ளடக்கம், சாத்தியமான அதி உயர்ந்த அளவு நிறைவடைந்த கலையியல் வடிவம்– இரண்டினது ஒற்றுமையை நாம் கோருகின்றோம்” என்றார், மாவோ தனது உரையில். இவை இங்கு இல்லை என்பதுதான் நிதர்சனம். தொடரும்......
No comments:
Post a Comment