மார்க்சியத்தின் அவசியம் குறித்தும் மார்க்சிய தத்துவம் குறித்தும்
நமது வேலை திட்டம் என்ற பகுதியில் லெனின், “நாம் முற்றிலும் மார்க்சிய தத்துவார்த்த நிலையிலே எமது அடிநிலையைக் கொண்டு நிற்கிறோம்:மார்க்சியம் தான் முதன்முதலில் சோசலிசத்தை கற்பனைவாதத்தில் இருந்து விஞ்ஞானமாக மாற்றி அமைத்து தந்தது; இந்த விஞ்ஞானத்துக்கு உறுதியான அடித்தளத்தை நிறுவிகொடுத்தது; இதை இதன் எல்லா கூறுகளிலும் மேலும் வளர்த்தும் விவரமாய் விரித்தமைத்தும் செல்வதற்கு பின்பற்றவேண்டியபாதையைசுட்டிக்காட்டுகிறது.
அரசியல் சூழ்நிலைகள் புரியாப் புதிர்களான சட்டங்கள் கடும் சிக்கலான தத்துவங்கள் ஆகியவற்றாலாகிய புகை மூட்டத்தினுள் மறைந்திருக்கும் வர்க்க போராட்டத்தை பல்வேறு வகைப்பட்ட சொத்துடைத்த வர்க்கங்களுக்கும் சொத்துடமை அற்றோர் அனைவரின் தலைமையில் நிற்கும் சொத்திலா பெருந்திரளாகிய பாட்டாளி வர்க்கத்திற்கு இடையே நடைபெறும் இந்தப் போராட்டத்தை எப்படி கண்டறிந்து கொள்வது என்று அது நமக்கு கற்றுக் கொடுத்தது. புரட்சிகர கட்சியின் முன்னுள்ள மெய்யான பணியை அது தெளிவுப் படுத்திற்று: சமுதாயத்தை திருத்தி அமைப்பதற்கு திட்டங்களை வரைவது அல்ல தொழிலாளர்களுடைய நிலைமைகளை மேம்படச் செய்வது குறித்து முதலாளிகளுக்கும் அவர்களது அடிவருடிகளுக்கும் அறிவுரை அளிப்பதல்ல, சதிகள் புரிந்திடுவது அல்ல இப்பணி, பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தை ஒழுங்கமைப்பு செய்வதும் பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வெல்வதையும் சோசலிச சமுதாய ஒழுகமைக்கப்படுவதையும் இறுதி குறிக்கோளாய் கொண்ட இந்த வர்க்க போராட்டத்துக்குத் தலைமை தாங்குவதுமே இப்பணிஎன்றுஅதுதெளிவுபடுத்திற்று.இங்கே இந்த தத்துவத்தை புதுப்பிப்பதாக சிலர் கூறிக் கொள்கிறார்கள்” என்கிறார் ஆசான் லெனின்.
மேலும் அவரே,”அவர்களின் நோக்கம் என்ன என்பதை மட்டும் பார்ப்போம் இவர்கள் மார்க்சிய ஆசான்கள் சொன்னதை எதையும் செய்யவில்லை, பாட்டாளி வர்க்கத்துக்கு விடுதலைக்கான எந்த தத்துவத்தையும் இவர்கள் பேசவில்லை. மாறாக இவர்கள் பிற்போக்கு தத்துவங்களில் இருந்து சில கவளங்களை கடன் வாங்கி ஆளும் வர்க்கத்திடம் அடிபணிந்து போக சொல்லும் தத்துவங்களையும் புதிய வழிமுறைகளை தேடி அலைந்து ஆளும் அரசுக்கு விட்டுக் கொடுத்து அடிபணிந்து போக சொல்லும் தத்துவங்களைப் பிரசாரம் செய்து பின்வாங்கி செல்ல சொல்லுகிறார்கள்”. எனும் ஆசான் இவர்கள் போன்றோரின் உண்மையான நோக்கம் மார்க்சியத்தை வளர்பதற்கல்ல அவர்களின் விமர்சனம் என்ற போர்வையில் மார்க்சியத்தை கொச்சை படுத்தும் இவர்களை இருவேறு பகுதியில் அம்பலப்படுத்தியுள்ளார் அதனை பார்ப்போம் இனி. விமர்சன சுதந்திரம் என்ற பெயரில் மார்க்சியத்தின் மீதான இவர்களின் பணியை பார்ப்போம்.
என்ன செய்ய வேண்டும் என்ற நூலில் அத்தியாயம் ஒன்றில் விமர்சன சுதந்திரம் என்பதன் பொருள் என்ன என்ற பகுதியில் லெனின் குறிப்பிட்டிருப்பார் "விமர்சன சுதந்திரம் தற்சமயம் மிகவும் பேசனாகிவிட்ட முழக்கமாக உள்ளது",....".மார்க்சியத்தின்பால் விமர்சன ரீதியான கண்ணோட்டத்தை மேற்கொள்ளும் புதிய போக்கின் சாரம்சத்தை பெர்ன்ஸ்டைன் போதுமான அளவுக்கு தெளிவுடன் முன் வைத்தார்... சமூக ஜனநாயகம் சமுதாய புரட்சிக்கான கட்சியாக இருப்பதை விட்டொழித்து சமுதாய சீர்திருத்தங்களுக்கான ஜனநாயக கட்சியாக மாறி தீர வேண்டுமாம் ..."
இவ்வாறாக தொடரும் அந்த அத்தியாயம் இறுதி லட்சியம் எனும் கருத்துருவமே தவறானது என்று பிரகடனப்படுத்தப்பட்டது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என கருத்து முற்றாக நிராகரிக்கப்பட்டது" என்கிறார் லெனின்.
மேலும் " கோட்பாடு நிலையிலே மிதவாதத்துக்கும் சோசலிசத்கும் இடையே உள்ள எதிர்நிலை மறுக்கப்பட்டது . வர்க்க போராட்டம் பற்றிய தத்துவம் மறுக்கப்பட்டது. இவ் வழியாக புரட்சிகரமான சமூக ஜனநாயகத்தை விட்டு முதலாளி வர்க்க சமுதாய சீர்திருத்த வாதத்திற்கு நிர்ணயமாக திரும்ப வேண்டும் என்கிற கோரிக்கையோடு கூடவே மார்க்சியத்தின் எல்லா அடிப்படை கருத்துகளை பற்றிய முதலாளி வர்க்க விமர்சனத்தின் பால் அதே அளவில் நிர்ணயமான திருப்பம் ஏற்பட்டது" என்கிறார் லெனின் என்ன செய்ய வேண்டும் என்ற நூலின் முதல் அத்தியாயத்தில்.
ஆக கம்யூனிஸ்டுகளின் பணி மற்றும் கம்யூனிஸ்டுகள் யார் என்பதனை லெனின் விளக்கி விடுகிறார். ஆக தத்துவம் என்றால் என்ன? அதில் மார்க்சிய தத்துவத்தின் புரிதலை உள்வாங்க வழி வகை என்ன வாருங்கள் விரிவாக நமது ஆசான்கள் வழிகாட்டுதல் பற்றி புரிதலுக்கு:-
இன்று உலக மய சூழலில் அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகள் புதிய காலனி முறையில் மேலும் மேலும் தீவிரப்படுத்துவதற்கான ஒழுகுமுறை போர் வரலாறு காணாத கொள்ளை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை எதிர்த்து சவால் விடுவதற்கு உலகில் எங்கும் சோசலிச நாடுகளும் இல்லை உலகில் பலம் வாய்ந்த கம்யூனிஸ்ட் கட்சியும் எங்கும் இல்லை. இருந்தும் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு விதமான ஜனநாயக சக்திகளும் புரட்சிகர சக்திகளும் போராடிக் கொண்டுதான் உள்ளது. ஏன் இந்தியாவிலும் கூட கம்யூனிஸ்ட் கட்சிகள் பிளவுண்டு பலவீனமாக ஏகாதிபத்திய எதிர்த்து போரிடும் அளவிற்கு எவையும் இல்லை. ஏகாதிபத்திய சுரண்டலின் உலகமயம் தனியார் மயம் தாராள மயம் தீவிரமாகஅமல்படுத்தப்பட்டுகொண்டுள்ளது.
எந்த ஒரு சிறு தடங்களும்இன்றி, இன்று நாடு முழுவதும் அந்நிய மூலதனம் வெள்ளம் என பாய்ந்து வருகிறது.இவற்றை முறியடித்து இந்திய மக்களுக்கு தலைமை தாங்கி அழைத்துச் செல்ல புரட்சிகரமான கட்சியின் அவசியத்தை புறநிலை கோருகிறது. இந்த சவாலை எதிர்கொள்ள இந்திய கம்யூனிஸ்டுகள் ஆகிய நாம் தயாராக வேண்டும்.அதற்கான தேவைபற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் ...
தத்துவம் என்றால் என்ன?
தத்துவம் என்பது, நம்மைச் சுற்றி நிலவும் யதார்த்தம் பற்றி முழுமையாகவும் மனிதனால் அது அறியப்படுதல் பற்றியும் உள்ள கருத்துக்களின் தொகுப்பாக விளங்குகிறது. பல்வேறு சமூக வர்க்கங்கள், குழுக்களின் நலன்களைத் தத்துவம் வெளியிடுகிறது. பிரபஞ்சம் முழுவதற்கும் அடிப்படையாக இருப்பது எது என்பதை விளக்கவும், மனிதனது இயல்பையே புரிந்துகொள்ளவும், சமூகத்தில் மனிதன் வகிக்கும் இடம் யாது, பிரபஞ்சத்தின் இரகசியங்களை உட்புகுந்து தெரிந்துகொள்ளவும் இயற்கையின் பெருவிறல் வாய்ந்த சக்திகளைப் புரிந்துகொண்டு மக்களின் நன்மைக்காக அவற்றைப் பயன்படுத்தவும் மனிதனது அறிவால் முடியுமா என்பவற்றைக் தீர்மானிக்கவும் தத்துவம் தான் தோன்றிய கணம் முதலே முயன்று வந்திருக்கிறது. இவ்வாறாகத் தத்துவம் மிகவும் பொதுப்படையான, அதே சமயம் மிகவும் முக்கியமான அடிப்படைப் பிரச்சினைகளைக் கிளப்புகிறது. வாழ்க்கை, அறிவு, இவற்றின் மிக மிகப் பல்வகைப்பட்ட துறைகள் பால் மனிதனது அணுகுமுறையை நிர்ணயிப்பவை இவை. இந்தப் பிரச்சினைகளுக்கு மிகமிக -வெவ்வேறான, சில சந்தர்ப்பங்களில் ஒன்றை ஒன்று நிராகரித்து விடுகிற விடைகளைக் தத்துவவாதிகள் அளிக்துவதந்திருக்கிறார்கள். தத்துவம் சுமார் மூவாயிரம் அண்டுகளாக நிலவிவருகிறது. ஒன்றுக்கொன்று எதிரான கருத்தோட்டங்களுக்கிடையே போராட்டம் அதில் இந்தக் காலமெல்லாம் தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. இந்தப் போராட்டம் தற்போதும் நின்றபாடில்லை. ஏன் இந்தப் போராட்டம் நடக்கறது? அதன் காரணங்கள் யாவை? தத்துவக் கருத்தோட்டங்களின் மோதுதலில் மைய இடம் வகிப்பது உணர்வுக்கும் இருத்தலுக்கும் இடையே நிலவும் உறவு பற்றிய பிரச்சினை, வேறு வார்த்தைகளில் சொல்வதானால் கருத்தியலானதற்கும் பொருளியலானதற்கும் இடையே நிலவும் உறவு பற்றிய பிரச்சனை. உணர்வு, கருத்தியலானது என்று சொல்லுகையில் நமது எண்ணங்கள், அனுபவங்கள், உணர்வுகள் ஆகியவற்றையே நாம் மனத்தில் கொள்ளுகிறோம் என்பதை இங்கே குறிப்பிட்டுவிட வேண்டும். இருத்தல், பொருளியலானது என்னும்போது புறநிலையில், நமது உணர்வுக்குச் சார்பு இன்றி நிலவுபவை அனைத்தும், அதாவது, வெளியுலகின் பொருள்களும் பண்டங்களும், இயற்கையிலும் சமூகத்திலும் நடைபெறும் நிகழ்ச்சிகளும் செயல்முறைகளும் குறிக்கப்படுகின்றன. தத்துவ அர்த்தத்தில் கருத்தியலானது (உணர்வு), பொருளியலானது (இருத்தல்) என்பவை மிக விரிவான விஞ்ஞானக் கருதுகோள்கள் (வகைப்பிரிவுகள்) ஆக விளங்குகின்றன. பிரபஞ்சப் பொருள்கள், நிகழ்ச்சிகள், செயல்முறைகள் ஆகியவற்றின் மிக மிகப் பொதுமை வாய்ந்த, அதே சமயம் எதிரெதிரான பண்புகளை அவை பிரதிபலிக்கின்றன. உணர்வுக்கும் இருத்தலுக்கும், ஆன்மாவுக்கும் இயற்கைக்கும் இடையே நிலவும் உறவுபற்றிய பிரச்சனை தத்துவத்தின் அடிப்படைப் பிரச்சினையாக விளங்குகிறது. இயற்கையையும், சமூகத்தையும், எனவே மனிதனையுமே பற்றிய தத்துவக் கண் ணோட்டத்தை நிர்ணயிக்கும் மற்ற எல்லாப் பிரச்சினைகளையும் தெளிவுபடுத்துவது இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதையே முடிவில் பொறுத்திருக்கறது தத்துவத்தின் அடிப்படைப் பிரச்சினையை ஆராய்கையில் அதன் இரு அம்சங்களை வேறு பிரித்துக் காண்பது மிக முக்கியமானது ஆகும். முதன்மையானது எது -கருத்தியலானதா அல்லது பொருளியலானதா--- என்ற கேள்விக்கு விடை. காண்பது முதல் அம்சம். முதன்மையானதாக இருப்பது என்றால் இரண்டாவதற்கு முன்னர் நிலவுவது, அதற்கு முந்தியிருப்பது, முடிவில் அதை நிர்ணயிப்பது என அர்த்தம். ஆகவே இந்தக் கேள்விக்கு அளிக்கப்படும் ஒரு அல்லது வேறொரு விடை தத்துவத்தில் எவ்வளவு பெருத்த பங்கு ஆற்றுகிறது என்பது தெளிவாகிவிடுகிறது. தத்துவத்தின் அடிப்படைப் பிரச்சினையின் மறு அம்சம் விடை அளிக்கும் கேள்வி என்னவெனில், சுற்றியுள்ள பிரபஞ்சத்தை, இயற்கை, சமூகம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உரிய விதிகளை அறிவது மனிதனுக்கு இயலுமா என்பது. எனவே, புற நிலை யதார்த்தத்தைச் சரியாகப் பிரதிபலிப்பதற்கு மனிதனது சிந்தனைத்திறமை கொண்டுள்ள வல்லமையை விளக்குவதுதான் இந்த இரண்டாவது அம்சத்தின் சாரம். தத்துவத்தின் அடிப்படைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்கையில் விஞ்ஞானிகள் இரு பெரும் முகாம்களாகப் பிரிவுபட்டிருக்கிறார்கள்.
பொருளை,
இருத்தலை, இயற்கையை முதன்மையானது என்றும்
உணர்வை, சிந்தனைத் திறமையை, ஆன்மாவை இரண்டாவது
என்றும் ஏற்றுக்கொள்ளும் தத்துவ அறிஞர்கள் பொருள்முதல்வாதம் எனப்படும்
தத்துவப் போக்கின் பிரதிநிதிகள் ஆவர். விஞ்ஞான விவரங்களையும் மக்களின்
பல்வகைப்பட்ட நடைமுறைச் செயல்கள் யாவற்றையும் ஆதாரமாகக்
கொண்டு பொருள்முதல்வாதத் தத்துவ அறிஞர்கள் பிரபஞ்சம் யாராலும்
படைக்கப்படவில்லை என்றும், அது என்றுமுள்ளது என்றும்
எல்லையின்றிப் பல்விதப்பட்டது என்றும் நிரூபிக்கிறார்கள். பொருளியலான
பிரபஞ்சத்தின் நம்மைச் சூழ்ந்துள்ள வஸ்துக்களும் தோற்றங்களும் நம்மீது சார்பு
இல்லாமலே நிலவிவருகின்றன. எந்த உணர்வையும் சாராத
பெருந்தொகையான பல்வேறு நிகழ்முறைகள் புறநிலைப் பிரபஞ்சத்தில் எப்போதும் நடந்துவந்துள்ளன,
என்றென்றும் நடந்துவரும். பொருளிய லானது கருத்தியலானதற்கு முன்பே
நிலவியது. மனிதனது சிந்தனைத்திறன் பொருளியலானது இன்றி நிலவ
முடியாது. இப்படிப் பொருள்முதல்வாதித் தத்துவ அறிஞர்கள் கருதுகிறார்கள்.
சித்தனை என்பது மூளையின் விளைபொருள். எனவே மூளை சிந்தனை
உறுப்பாக விளங்குகிறது. சிந்தனைக் திறன், கருத்தியலானது என்பது, புறநிலைப் பிரபஞ்சத்தைப் பிரதிபலிப்பதற்கு மூளைக்குள்ள திறனே
ஆகும். ஆதலால் கருத்தியலானது, அதாவது உணர்வு, புறநிலைப் பிரபஞ்சத்தின்மீது சார்பு இல்லாமல் முற்றிலும் தன்னிச்சையாக
நிலவமுடியாது. இவ்வாறு பொருள்முதல்வாதத் தத்துவ அறிஞர்கள் சொல்கிறார்கள்.
பொருள்முதல்வாதத்துக்கு எதிர்நிலையான கருத்துமுதல்வாதப்
போக்கு தத்துவத்தில் நிலவுகிறது. நிலவுவது அனைத்திற்கும் தொடக்கமாக விளங்குவது உணர்வே,
சிந்தனைத்திறனே,
ஆன்மாவே,
அதாவது கருத்தியலானதே எனக்
கருத்துமுதல்வாதத் தத்துவ அறிஞர்கள் ஏற்கிறார்கள்.
கருத்துமுதல்வாகப் போக்கு
இரு அடிப்படை வகைகள் கொண்டது. அகநிலைக் கருத்துமுதல்வாதம்,
புறநிலைக் கருத்து
முதல்வாதம் என்பன அவை. சிந்தனை செய்யும் அகநிலைப்பொருள் ஆகிய மனிதனது தனிப்பட்ட உணர்வே முதன்மையானது என்று
ஒப்புக்கொள்ளும் தத்துவக்
கருத்துமுதல்வாதத்தின் பிரதிதிதிகள் அகநிலைக் கருத்துமுதல்வாதிகள் ஆவர்.
பொருள்கள் எதார்த்தத்தில் நிலவுகின்றன, அவை நமக்கு வெளியே நிலவுகின்றன
என்று நமக்கு வெறுமே தோன்ற
மட்டுமே செய்கிறது. அவற்றை நாம் பார்க்கிறோம்,
கேட்கிறோம்,
தொடுகிறோம் என்பதே
இதன் காரணம். உண்மையிலோ
காணல், தொடுதல்,
கேட்டல்
என்பவை புலனுணர்ச்சிகளே
ஆகும். இவ்வாறு அவர்கள் சொல்கிறார்கள். பிரபஞ்சம் முழுவதும் சிந்தனை செய்யும் அகத்தினால்,
அகநிலைப்பொருளின் தன்னுணர்வால்
படைக்கப்பட்டிருக்கிறது என்றே,
அல்லது நிலவும் பொருள்கள்,
வஸ்துக்கள்,
தோற்றங்கள் ஆகியவை
அனைத்தும் நமது உணர்ச்சிகள், அனுபவங்கள் ஆகியவற்றின் மொத்தமே, தொகுதியே ஆகும் என்றோ நிரூபிக்க அவர்கள் முயல்கிரார்கள். திரிபான
தத்துவ வகைப்பட்ட
இந்தப் பிரபஞ்ச அறிவு
மனிதனுடைய உணர்வைப் பொருளியலான பிரபஞ்சத்துக்கு எதிர்நிறுத்துகிறது. மனிதனுக்கு
இயல்பாக வழங்கப்பட்டிருப்பவை அவனுடைய அறிவின் விளயபொருள்களான கருத்துக்களும்
உணர்ச்சிகளும் மட்டுமே என்று அகநிலைக் கருத்துமுதல்வாதிகள் கூறுகிறார்கள். மனித
உணர்வே தொடக்கப் புள்ளி என்றும் பின்பு அதிலிருந்து இயற்கை
வெளிப்படுகிறது என்றும்
அவர்கள் வாதித்து, இந்த வாதத்தின், அடிப்படையில் பொருள்களும் பிரபஞ்சம் முழுவதுமே புறநிலையாக நிலவுவதையும் அதன்
வளர்ச்சியின் ஓழுங்குழுறையையும்
ஒருவகையில் அல்லது
மறுவகையில் மறுக்கிறார்கள். புறநிலைக் கருத்துமுதல்வாதிகள் மனித சிந்தனைகள்,
கருத்துக்கள் ஆகியவையும்,
இயற்கையுமே கூட,
பரம கருத்து,
பிரபஞ்ச
வியாபகமான அறிவு,
பொருளியலானதற்கு
அப்பாற்பட்ட எதார்த்தம் ஒன்றின் துணுக்கு மட்டுமே எனக்
கருதுகிறார்கள்.
மனிதன்மீது சார்பு அற்ற பிரபஞ்சம் நிலவுவது சாத்தியமே
எனப் புறநிலைக்
கருத்துமுதல்வாதிகள் ஒப்புக்கொள்கிறார்கள்.
அகநிலைக்
கருத்துமுதல்வாதிகள் போன்று அகநிலைப்பொருளின்
தன்னுணர்வையோ, மனிதனது உணர்ச்சிகளையோ அவர்கள்
முதன்மையாக
ஏற்றுக்கொள்வதில்லை. தானேயான கருத்து, அதாவது “பிரபஞ்சக் கருத்து தான் முதன்மையானது என்றும்,
இந்தக்
கருத்தியலானதிலிருந்தே,
ஆன்மீகமானதிலிருந்தே
இயற்கை,
வெளிப்பிரபஞ்சம்,
நிலவுபவை அனைத்தும் தோன்றின
என்றும் அவார்கள் முடிவுகட்டுகிறார்கள்.
இவ்வாறாக,
புறதிலைக்
கருத்துமுதல்வாதமும் அகநிலைக் கருத்துமுதல்வாதமும் கருத்துமுதல்வாதத் தத்துவத்தின்
வகைகள் ஆகும். ஆனால்
முக்கியமான, அடிப்படையான விஷயத்தில் அவை ஒன்றுக்கொன்று வேறுபட்டவை
அல்ல. இரண்டுமே கருத்தியல் தொடக்கத்தை அடிப்படையாக வைத்துக்கொள்கின்றன. கருத்து,
ஆன்மா,
அதாவது உணர்வு முதன்மையானது
என்றும் யதார்த்தப்
பிரபஞ்சம், அதாவது இயற்கை இரண்டாவது என்றும் இரண்டுமே
ஒப்புக்கொள்கின்றன. இங்கே ஒரு விஷயத்கைக் குறிப்பிடுவது அவசியம்: தத்துவக்
கருத்துமுதல்வாதம் என்பது
மானித அறிவின்
தற்செயலான மருள் அல்ல. பிரபஞ்சம் பற்றிய கருத்துமுதல்வாதகச்
சிந்தனை மக்களின் சமூக வாழ்விலும் மனிதஞானத்தின் இயல்பிலேயுமே ஆழ்ந்து
வேருன்றியுள்ளதாகும். வரலாற்று வளர்ச்சியின் ஆரம்பக் கட்டங்களிலேயே,
மக்களுக்கு இடையே சொத்து
விஷயத்தில் ஏற்றத் தாழ்வு உண்டாகி அடிமைச் சொந்தக்கார அமைப்பு உருவான போது,
அறிவு உழைப்பு ஆளும்
வா்க்கத்தாரின், அடிமைச் சொந்தக்கார
வர்க்கத்தாரின்
சிறப்புரிமை ஆக்கப்பட்டது. கடினமான உட
௮மைப்போ ஒடுக்கப்பட்டோரின்,
அடிமைகளின் விதியாயிற்று.
இந்த நிலைமைகளில்
உடலுழைப்பு எல்லாவகையிலும் இழிவுபடுத்தப்பட்டு இகழப்பட்டது. அறிவு உழைப்பின்
முக்கியத்துவம் ஓரேயடியாக மிகைப்படுத்தப்பட்டது. விஞ்ஞானத்திலும்
கலையிலும் ஈடுபடுவது
இன்னும் சிறப்பாக மதிக்கப்பட்டது. மனிதனது அறிவு உழைப்பு,
ஆன்மீகச் செயல்கள்
ஆகியவற்றின் பங்கு மிகைப்படுத்தப்படுவதில் ஆளும் வார்க்கத்தினர்
எப்போதும் அக்கறை கொண்டிருந்தனர். இயற்கையிலும் சமூகத்திலும் நிகழும் மாறுதல்கள் இயற்கைக்கு
மேற்பட்ட கருத்தையே, பரமான்மாவையே
சார்த்திருக்கன்றன என்னும் மருட்சியை
அவர்கள் ஆதரித்து வந்தார்கள்.
இன்னொரு விஷயத்தையும்
கவனத்தில் கொள்வது அவசியம்: பிரபஞ்சம் பற்றிய கருத்துமுதல்வாதப் புலனறிவு தோன்றியது உற்பத்தி வளர்ச்சியின் தரம்
மிகத் தாழ்ந்த நிலையில் இருந்தபோது, மிகவும் அற்ப அறிவும் சுற்றியுள்ள பிரபஞ்சம்
பற்றி மக்களிடையே பெரிதும்
பண்பற்ற, வளர்ச்சிபெருத
எண் ணங்களும் நிலவிவந்த காலத்தில். இயற்கையின் மூலச்
சக்திகள் (பூகம்பம், வறட்சி, பெருவெள்ளம் முதலியன) அப்போது
மனிதனுக்கு
மார்மமானவையாகவும் முற்றிலும் தடுக்க இயலாதவையாகவும் தென்பட்டன. இயற்கைச் சக்திகளைப் பற்றி
அனேகமாக ஒன்றுமே
அறியாமையால் மக்கள் அவற்றைத் தெய்வீகம் ஆக்கிவிட்டார்கள்.
அதோடுகூட,
இயற்கை நிகழ்ச்சிகளில்
வியப்பூட்டும் ஒத்திசைவும்
கண்டிப்பான ஒழுங்கும் விதிக்கு இணக்கமான தன்மையும் எங்கும் நிலவுவதை அவர்கள்
கவனித்தார்கள். இரவும் பகலும் முறைப்படி ஒன்றை ஒன்று தொடர்வது,
வான ஒளிக்
கோளங்களின் அளவான இயக்கம்,
உயிருள்ள அங்கஜீவிகளின்
கட்டமைப்பு செவ்வைப்பாடும்
நோக்கப் பொருத்தமும் கொண்டிருத்தல் முதலியவற்றை அவர்கள் கண்டார்கள்.
இயற்கையின் அறிவுசான்ற படைப்பாளி, அல்லது இயற்கைக்கு மேற்
பட்ட எல்லாம் வல்ல சக்தி ஒன்று நிலவுவதாகவும்,
ஒவ்வொரு
மனிதனின் விதியும் உட்பட
உலகில் உள்ளவை யாவும் அதையே சார்ந்திருப்பதாகவும் ஒர் எண்ணம் இந்தக் காரணங்களால்
ஜனங்களுக்கு அவர்கள் அறியாமலே உதித்கது. கற்பனைகளை ஆக்கரபூர்வான அறிவிலிருந்தும் மருளை இயல்
பான உண்மையிலிருந்தும்
வேறுபிரித்து அறிய மக்கள் எடுத்த எடுப்பிலேயே கற்றுக்கொண்டுவிடவில்லை. பிரபஞ்சம் பற்றிய
தத்துவப் புரிவின் பாதை
மிகச் சிக்கலானது. அறிவில் எப்போதுமே ஒருசிறிது கற்பனை அடங்கித்தான்
இருக்கிறது. அறிவுச் செயல்முறையின் ஓர் அம்சத்தை,
ஒரு பகுதியை
ஒருதலைச் சார்பாக மிகைப்படுத்துவதும் முழுமையாகக் கருதி
விடுவதும் இந்தக்
காரணத்தால் சாத்தியம் ஆகிவிடுகிறது.
இதுவும்
கருத்துமுதல்வாதத்துக்கு இட்டுச் செல்கிறது. பின்னர்,
சுரண்டும் வர்க்கங்கள் தோன்றியதும் சமூகச்
சக்திகள் பொதுமக்களுக்கு விளங்கா மர்மமான அர்த்தம் பெற்றுவிட்டன.
ஒடுக்குமுறையும் அடிமைப்படுத்தலும் கொண்ட
அமைப்பு மேலுலகிலிருந்து
நிலைநாட்டப்பட்ட ஒழுங்கு என்று சொத்துள்ளவர்களைத் திருப்திப்படுத்தும் பொருட்டு
மதஸ்தாபனங்கள் பசப்பின. ஆதிக்கம் வகிப்பவர்களின் ஆட்சி அதிகாரத்தையும் தனியார் சொத்துரிமையையும் சமூக
ஏற்றத்தாழ்வு களையும் ஆண்டவனால் ஏற்படுத்தப்பட்டவை என அவை
கூறின.
இவ்வாறு வரலாற்றுப்போக்கில்
உருவாயிற்று கருத்துமுதல் வாதத்துக்கும் மதத்துக்கும் இடையே நெருங்கிய ஐக்கியம்.
நெடுங்காலமாக வழக்கொழிந்துபோன சுரண்டலின் பல்வேறு
வடிவங்களைப் பாதுகாக்கவும்
நியாயப்படுத்தவும் இன்றும் இவை சமூகத்தின் பிற்போக்குச் சக்திகளால்
பயன்படுத்தப்படுகின்றன. சுரண்டுவோரின் எந்த அரசும் பிரபஞ்சம் பற்றிய மத
கருத்துமுதல்வாதச்
சிந்தனையின் ஏதேனும் ஒரு வடிவத்தை இன்றும் ஆதரிக்கிறது,
அதற்குப் பொருந்தும்
கருத்துக்களைப் பரப்ப எல்லா விதத்திலும் முயற்சி எடுத்துக் கொள்கிறது.
மிகத் தொன்மைக் காலம்
முதலே கருத்துமுதல்வாதமும் மதமும் பிரதானமாகப் பிற்போக்குச் சக்திகளுக்கே பயன்பட்டு
வந்திருக்கின்றன.
மாறாக, பொருள்முதல்வாதம் வழக்கமாக
எப்போதுமே சமூகத்தின்
முன்னணிச் சக்திகளின் நலன்களை வெளியிட்டு வந்திருக்கிறது. பொருள்முதல்வாகக் தத்துவம்
விஞ்ஞானம்,
சமூக-வரலாற்று நடைமுறை
ஆகியவற்றின் விவரங்களைப் பொதுமைப்படுத்த உதவுகிறது,
அவற்றின்
வளர்ச்சிக்கு வாய்ப்பு
அளிக்கிறது. நாம் ஏற்கனவே கூறியதுபோன்று தத்துவத்தின் அடிப்படைப்
பிரச்சினை இரு பகுதிகள் கொண்டது. அதன் இரண்டாவது பகுதி பிரபஞ்சத்தின்
அறியப்படும் தண்மை குறித்த கேள்விக்கு
விடை அளிக்கிறது. இந்தக்
கேள்விக்கு விடை காண்பதிலும் எதிரெதிரான கருத்துக்கள் மோதிக்கொள்கின்றன. மனிதனது
சிந்தனைத்திறன்
சுற்றியுள்ள பிரபஞ்சம் பற்றிய நம்பகமான
அறிவை அவனுக்கு நல்குகிறது:
என்று பொருள்முதல்வாதிகள் எப்பொழுதும் வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். பிரபஞ்சத்தை
அறிவது சாத்தியமே என்ற
உணர்வு மனித அறிவின் ஆற்றல் மீது நமக்கு நம்பிக்கை உண்டாக்குகிறது,
ஞானம் பெறுவதற்கும்
மாற்றி அமைக்கும்
ஊக்கம்மிக்க செய்கை புரிவதற்கும் நம்மைத் தூண்டுகிறது.
பிரபஞ்சத்தை அறிவது இயலும் என்பதை மறுப்பவர்கள் அறியொணாமைக் கொள்கையினர்
எனப்படுவார்கள். அறியொணாமைக் கொள்கையினரின் கருத்துப்படி, நமதுஞானத்தின் நம்பற்குரிய தன்மையை நம்மால் நிர்ணயிக்கவே முடியாது,
ஏனெனில் பொருள்கள், தோற்றங்கள், வஸ்துக்கள் ஆகியவற்றை அவற்றின் கருத்தியலான பிரதிபலிப்புடன் ஓப்பிடுவது
இயலாது. பொருள்களையும் தோற்றங்களையும் பற்றிய எல்லாத் தகவல் களும் நமது
சொந்தப் புலனுணர்ச்சிகள் வாயிலாகவே, புலனறிவு மூலமாகவே
நமக்குக் கிடைக்கின்றன. ஆகவே, பொருள்களும் அவற்றின்
பண்புகளும் அவை உண்மையில் உள்ளபடியே புலன்களால் அறியப்படுகின்றன என்ற நம்பிக்கை
நம்மிடம் இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். பொருள்கள் யதார்த்தத்தில்
புறநிலையாக நிலவுவதைச் சில அறியொணாமைக் கொள்கையினர் ஓப்புக்கொள்கிறார்கள்
என்பது உண்மையே. ஆனால் அவர்களும் அவற்றை அறிவது இயலும் என்பதைச் சந்தேகப்படுகிறார்கள். பொருள்முதல்வாதத்தை இவ்வாறு “கூச்சத்துடன்'' ஓப்புக்கொள்வது, பொருள்முதல் வாதத்துக்கும்
கருத்துமுதல்வாதத்துக்கும் நடுவே “இடைப் பட்ட நிலையை மேற்கொள்வதிலும்
இவ்விரண்டுக்கும் “மேலே” எழும்பும்
முயற்சிகளை நியாயப்படுத்துவதிலும் அவர்களுக்கு உதவியாயிருக்கிறது. எனினும்
தத்துவத்தில் இம் மாதிரியான“ “நடுநிலைமை” கருத்துமுதல்வாதத்துக்குப் போதிய விசாலமான
இடத்தை எப்போதும் விட்டுக்கொடுக்கிறது. இது தவிர்க்க இயலாதவாறு குழப்பத்திற்கே
இட்டுச்செல்கிறது. தற்கால பூர்ஷ்வாக் கருத்துமுதல்வாகத்
தத்துவத்தில், துலக்கமாக வெளிப்படும் அறியொணாமைக்
கொள்கையின் போக்கு, அறிவின் ஆற்றலில் நம்பிக்கையில்லாத
போக்கு கடைப்பிடிக்கப்படுகிறது. மனித அறிவின் வாய்ப்புக்களை வரையறைக்கு
உட்படுத்திவிடுவதன் வாயிலாக அறியொணாமைக் கொள்கை ஏதோ மாயமான,
இயற்கைக்கு மேற்பட்ட ஒன்றின் மீது நம்பிக்கைக்கு இடம் அளிக்கிறது.
அதனால்தான் அது கருத்துமுதல்வாதக்துடனும் மதத்துடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது.
ஒரு தத்துவக் கண்ணோட்டத்தின் தன்மை அது எதை முதன் மையாகக் கருதுகிறது, பிரபஞ்சம் அறியப்படக் கூடியது என ஒப்புக்கொள்கிறதா இல்லையா என்பவற்றால்
மட்டுமே நிச்சயிக்கப்படுவதில்லை. இந்தத் கண்ணோட்டத்தின் தன்மையைச் சித்திரிப்பதற்கு
இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்வது முக்கியம்.
நம்மைச் சூழ்ந்துள்ள பிரபஞ்சத்தை ஆராய்வதற்கு எந்த அறிதல் முறை கையாளப்படுகிறது என்பதே அந்த விஷயம். தத்துவத்தின் வரலாற்றை நாம் கூர்ந்து நோக்கினால் இம்மாதிரியான இரண்டு முறைகள், ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு சிந்தனை வழிகள் நிலவவதைக் காண்போம்,. அவற்றில்
ஓன்று இயக்கஇயல், மற்றது மாறாநிலைவாதம். இயக்கஇயல்
என்பதன் மூலச் சொல் டயலெக்டிக்ஸ் என்ற கிரேக்க வார்த்தை. தொன்மைச் சிந்தனையாளர்கள் உரையாடல்களையும் விவாதங்களையும்
நிகழ்த்துவகற்கான முறையைக் குறிப்பதற்கு இச்சொல்லை வழங்கினார்கள். இம்முறையின் வாயிலாகத்
தர்க்கங்களில் முரண்பாடுகள் வெளிப்படுகின்றன, உண்மை தெளிவுபடுகிறது,
கருதுகோள்கள் துல்லியமாக வரையறுக்கப்படுகின்றன. பின்னர் இந்தச்
சொல் தத்துவமுறை என்று அதாவது சுற்றியுள்ள பிரபஞ்சக்தை அறிவதற்கான பொதுவிதிகளும்
சாதனங்களும் என்று, எதன் உதவியால் சிந்தனைத் திறன் ஒரு
குறிப்பிட்ட வஸ்துவை ஆராய்கிறதோ அந்கு முறை என்று பொருள்படலாயிற்று. ஒன்றானது,
தொடர்புள்ள முழுமை என்ற நோக்கில் பிரபஞ்சத்தை ஆராய்கிறது இயக்க
இயல். எல்லாப் பொருள்களும் நிகழ்ச்சிகளும் அவற்றின் சிந்தனைப் பிரதிபலிப்பான
நமது கருதுகோள்களும் ஒன்றன்மீது ஒன்று பாதிப்பு விளைக்கின்றன, இடையறாத இயக்கமும் முரண்பாடுள்ள வளர்ச்சியும் கொண்டு விளங்குகின்றன
என்பதை இயக்க இயல் அடிப்படையாகக் கொள்கிறது. இயற்கை, வரலாறு,
மனிதச் சிந்தனை ஆகியவற்றின்மீது இயக்க இயல் கண்ணோட்டத்திற்கு,
ஆராயப்படும் பொருளை அதன் எல்லாத் தொடர்புகளிலும் உறவுகளிலும் சோதித்து
அறிவதும், அதன் யதார்த்தமான வளர்ச்சி வரலாற்றைத் துருவி
ஆராய்வதும் அதன் மாற்றங்களின் சிக்கலான, முரண்பாடுள்ள
செயல்முறைக்குரிய உண்மைக் காரணங்களை வெளிப்படுத்துவதும் தேவைப்படுகின்றன. மாறாநிலைவாதம்
என்பதும் மெட்டாபிஸிக்ஸ் என்ற கிரேக்கச் சொல்லின் அடியாகப் பிறந்தது. தொன்மைக் காலத்தில் அது நிலவுபவை அனைத்தினதும் தொடக்கம் பற்றிய போதனை
என்றுபொருள்பட்டது. பிற்காலத்தில் இந்தச் சொல் ஒரு குறிப்பிட்ட சிந்தனை
முறையைக் காட்டுவதற்குப் பயன்படலாயிற்று. அந்த முறைப்படி பொருள்களும்
தோற்றங்களும் இயக்கமற்ற ஒரே நிலையில் இருப்பவை, உள்முரண்பாடுகள் இல்லாதவை என்ற வகையில் அவற்றின் பரஸ்பரத் தொடர்புக்கு
வெளியே ஆராயப்படுகின்றன.
16--17ம் நூற்றாண்டுகளில் மாறாநிலைவாத அறிவுமுறை இயற்கை விஞ்ஞானத்தில் நல்ல
பயன் விளைக்கும் பங்கு ஆற்றியது. பி. எங்கெல்ஸ் “டூரிங்குக்கு
மறுப்பு” என்னும் தமது நூலில் குறிப்பிட்டதுபோல, பெளதிகம்,
ரசாயனம், உயிரியல் முதலிய
இயற்கை விஞ்ஞானங்களினது வளர்ச்சியின் தொடக்கக் காலத்தில் இயற்கையைக்
தனித்தனிப் பகுதிகளாக வேறுபடுத்தி, இயற்கையின் பல்விதச்
செயல்முறைகளைத் திட்டவட்டமான வகுப்புக்களாகப் பிரித்து,
மற்ற நிகழ்ச்சிகளுடனும் செயல்முறைகளுடனும் தொடர்பற்ற தனித்த நிலையில் அவற்றைச் சோதித்து அறிவதன் வாயிலாக இயற்கையை ஆராய்வது
இன்றியமையாததாக இருந்தது. அந்தக் காலத்தில் இயற்கை விஞ்ஞானம் பெற்ற மிகப்
பெரிய வெற்றிகளுக்கு இது அடிப்படை நிபந்தனையாக விளங்கியது என எங்கெல்ஸ் கூறினார்.
ஆனால் மாறாநிலைவாதத்தின் குறுகிய வரம்புக்கு உட்பட்ட தன்மை 18ம்
நூற்றாண்டிலேயே வெளிப்பட்டுவிட்டது, ஏனெனில் அதன் வரம்புச்
சட்டங்கள் விஞ்ஞானத்தின் வளர்ச்சியைத் தடைப்படுத்தலாயின. இயற்கை, சமூக விஞ்ஞானங்களால் திரட்டப்பட்ட யதார்த்தமான விவரங்கள் பிரபஞ்சம்
பற்றிய மாறாநிலைவாத அறிவின் குறுகிய தன்மையையும் ஒருதலைச்சார்பான தன்மையையும் காட்டின. எனினும் பூர்ஷ்வாத் தத்துவத்தில்
மாராநிலைவாதம் காண் டஉப்படவில்லை. இன்றளவும் அது நிலவுகிறது. இயற்கையும் சமூகமும்
வளர்கின்றன என்னும் உண்மையை முழுமையாக வும் நிபந்தனை இன்றியும் மறுக்கும்
தத்துவ அறிஞன் எவனையும் காண்பது தற்போது கடினம் என்பது உண்மையே, முக்கிய விஷயமும் இது அல்ல, வழக்கமாகத் தற்கால மாறாநிலைவாதிகள் பொதுத் தொடர்பின் தன்மையையும் வளர்ச்சியின் தன்மையையும் போலியாக எளிமைப்படுத்தியே புரிந்துகொள்கிறார்கள். இயக்கம், வளர்ச்சி இவற்றின் உண்மை
ஊற்றுக்கண் பற்றிய கேள்வியை அவர்கள் மழுப்பலாக மறைவில் வைத்து விடுகிறார்கள்; பொருளியலற்ற சக்திகளின் செயல்களில் அது இருப்பதாகப்
பாவித்துக்கொள்கிறார்கள், அல்லது அது அறியொணாதது என்று
பறைசாற்றுகிறார்கள். இந்தக் காரணத்தினாலேயே
மாரறாநிலைவாதம் கருத்துமுதகல்வாதத்துடனும் அறியொணாமைக் கொள்கையுடனும் ஓன்றிணைந்துவிடுகிறது.
பொருள்கள், நிகழ்ச்சிகள் அகியவற்றின் முரண்பாடுள்ள அம்சங்களையும்
அவற்றின் பரஸ்பரச் செயல்பாட்டையும் ஆராய்வதற்கும்,
அடிப்படையான, பண்புவகைப்பட்ட மாற்றங்களின்
தன்மையை வரையறுப்பதுற்கும் மாறாநிலைவாத அறிவுச் செயல்முறை வலிவற்றதாகி
விடுகிறது. சமூக நிகழ்ச்சிகளை விளக்குகையில் தற்கால மாறாநிலைவாதிகள்
வர்க்க முரண்பாடுகளை மூடிமறைக்கிறார்கள், சமூகப்
புரட்சிகளின் தவிர்க்க இயலாமையை மறுக்கிறார்கள், அல்லது
அவை தாமே தோன்றும் அதிர்ச்சிகள் என்றும் அவற்றை முன்காண முடியாது என்றும் கூறிவிடுகிறார்கள்.
இவ்வாறு செய்கையில் அவர்கள் சமூக வளர்ச்சியின் புறநிலையான விதிமுறைக்குட்பட்ட
தன்மையைப் புறக்கணிக்கிறார்கள். இரண்டாந்தர முக்கியத்துவமுள்ள அல்லது வெறுமே
விஷயத்துக்குப் புறம்பான காரணிகளை (உதாரணமாக ஆட்சி அதிகாரம் பெற்ற தனி நபர்களின்
செயல்களை) மேற்கோள்களாக எடுத்துக்கொண்டு அவற்றை முழுமை வாய்ந்த வையாகக் காட்ட
முயல்கிறார்கள், சமூக முன்னேற்றத்தை மறுக்கிறார்கள். தற்கால பூர்ஷ்வாத் தத்துவத்தில் எஞ்சியிருக்கும் விஞ்ஞானத்துக்கு எதிரான
மாறாநிலைவாதச் சிந்தனைமுறை, வழக்கொழிந்த
முதலாளித்துவச் சமூக உறவுகளை நிலையாக வைத்திருப்பதிலும் நியாயப்படுத்துவதிலும்
அக்கறை கொண்ட சுறண்டும் வர்க்கத்தாருக்கே உதவியாயிருக்கிறது. இயக்கஇயலும் மாறாநிலைவாதமும் எதிரெதிரான இருஅறிதல்முறைகள், ஒன்றையொன்று நீக்கிவிடும் இருசிந்தனைமுறைகள். பொருள்முதல்வாதம்,
கருத்துமுதல்வாதம் இரண்டுமே இயக்க இயல்போக்கோ, மாறாநிலைவாதப் போக்கோ கொண்டிருக்க முடியும். ஆனால்
தர்க்கரீதியான பொருள்முதல்வாதம் மாறாநிலைவாதத்துக்கு ஒவ்வாது. இவ்வாறே இயக்க இயலும் கருத்துமுதல்வாதப் போக்கோ பொருள்முதல்வாதப் போக்கோ கொண்டிருக்கக்
கூடும்.
எனினும் தர்க்கரீதியான இயக்கஇயலும் கருத்துமுதல்வாதத்துக்கு ஒவ்வாது. தொன்மைக்காலம் தொடங்கி நம் காலம்வரையுள்ள தத்து வத்தின் வரலாறு
பொருள்முதல்வாதத்துக்கும் கருத்துமுதகல் வாதத்துக்கும் இடையே இயக்கஇயவியலுக்கும்
மாறாநிலைவாதத்துக்கும் இடையே போராட்டத்தால்
நிறைந்துள்ளது. தத்துவக் கருத்துக்களின், தத்துவரீதியான
பிரபஞ்சக் கண்ணோட்டங்களின் இந்தப் போராட்டம் கடைசியில் எதார்த்த மான சமூகச்
சக்திகளின் குறிப்பிட்ட வகுப்புக்கள், சமூகக் குழுக்கள்
ஆகியவற்றின் -- போராட்டமே என்பதைக் காணவேண்டும். பொருள்முதல்வாதமும் இயக்கஇயவியலும் மிகத் தொன்மைக்
காலத்திலேயே தோன்றின. திட்டமான வரலாற்று நிபந்தனைகளைப் பொறுத்தும்
தத்துவத்திற்குரிய விஷயங்களும் அதன் நோக்கமும் கடமையும்
மாறியதைப் பொறுத்தும் அவை தமது வடிவங்களை மாற்றிக்கொண்டன.
மார்க்ஸீயத்துக்கு முற்பட்ட பொருள்முதல்வாதத்தின்
வரலாற்றில் பின்வருவன தனிப் பிரித்துக் காணப்படுகின்றன: அடிமைச் சொந்தக்காரச் சமூகத்தின்
சிந்தனையாளர்களது பொருள்முதல்வாதம்; பூர்ஷ்வா சமூகத்தின்
மாறாநிலைவாதப் பொருள்முதல்வாதம்; ருஷ்யாவிலும் பிற
நாடுகளிலும் 19ம் நூற்றாண்டில் நிலவிய புரட்சிகர ஜநானயகவாதிகளின் பொருள்முதல்வாதம். மார்க்ஸீயத்துக்கு முத்திய இயக்க இயல்
வரலாற்றில் பின்வருவன தனிப் பிரித்துக் காணப்படுகின்றன: அடிமைச் சொந்தக் காரச்
சமூகத்தின் சிந்தனையாளர்களது இயல்பெழுந்த இயக்க இயல்வாதம்;
ஜெர்மானிய சாஸ்திரீயத் தத்துவத்தின் கருத்துமுதல்வாத இயக்க
இயல்வாதம்; புரட்சிகர ஜனநாயக வாதிகளின் இயக்க இயல்வாதம்.
கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்ஸ், இவர்களால் நிறுவப்பட்டு
லெனினால் வளர்வுறுத்தப்பட்ட இயக்கஇயல் பொருள்முதல்வாதம் உண்மையிலேயே விஞ்ஞானமுறையில்
அமைந்து தத்துவமாக விளங்குகிறது. விஞ்ஞானம், சமூக-வரலாற்று
நடைமுறை ஆகியவற்றின் தற்கால நிலைக்குப் பொருந்துகிற பொருள்முதல்வாதத்தின்
சிறந்த வடிவம் ஆகும் இது. தற்காலச் சமூகத்தின்
யாவற்றிலும் முன்னணியிலுள்ள வர்க்கமான புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் நலங்களை, உழைப்பாளி மக்கள் அனைவரதும் நலன்களை வெளியிடுவதன்
காரணமாக மார்க்ஸீய-லெனினீயத் தத்துவம் வாழ்க்கையுடன், கம்யூனிஸ
நிர்மாண நடைமுறையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது. உலகைப் புரட்சிகரமாக மாற்றி
அமைப்பதற்கேற்ற நம்பகமான வழிகளை அது காட்டு கிறது. கம்பூனிஸத்தின் சித்தாந்து
அடிப்படையாக அது செயலாற்றுகிறது. ஆனால் மக்கள் வரலாற்றைக் கற்றுக்கொள்ளாமல்
விட்டு விடக் கூடாது. ஏனெனில் சென்ற காலம் ஏதாவது ஒருவகையில் நிகழ்காலத்தில்
வாழ்கிறது. நிகழ்காலமோ வருங்காலத்தின் உள்ளார்ந்த பகுதியாகத் தவிர்க்க
இயலாதவாறு விளங்குகிறது. எனவே, மார்க்ஸீயத்துக்கு முற்பட்ட
தத்துவத்தில் பொருள்முதல்வாதம், இயக்கஇயல் ஆகியவற்றின் வளர்ச்சியின்
பிரதானக் கட்டங்களை நாம் மேலே சுருக்கமாக ஆராய்வோம், அவற்றின்
தன்மையைச் சித்திரிக்கும் சிறப்பியல்புகளை விவரிப்போம்.
தொடரும்....
No comments:
Post a Comment