தத்துவம் என்பது என்ன?, அது எவ்வாறு தோன்றி வளர்ந்தது தத்துவம் என்பது, நம்மைச் சுற்றி நிலவும் யதார்த்தம் பற்றி முழுமையாகவும் மனிதனால் அது அறியப்படுதல் பற்றியும் உள்ள கருத்துக்களின் தொகுப்பாக விளங்குகிறது. பல்வேறு சமூக வார்க்கங்கள், குழுக்களின் நலன்களைத் தத்துவம் வெளியிடுகிறது. பிரபஞ்சம் முழுவதற்கும் அடிப்படையாக இருப்பது எது என்பதை விளக்கவும், மனிதனது இயல்பையே புரிந்துகொள்ளவும், சமூகத்தில் மனிதன் வகிக்கும் இடம்யாது, பிரபஞ்சத்தின் இரகசியங்களை உட்புகுந்து தெரிந்துகொள்ளவும் இயற்கையின் அடிப்படையான சக்திகளைப் புரிந்துகொண்டு மக்களின் நன்மைக்காக அவற்றைப் பயன்படுத்தவும் மனிதனது அறிவால் முடியுமா என்பவற்றைக் தீர்மானிக்கவும் தத்துவம் தான் தோன்றிய கணம் முதலே முயன்று வந்திருக்கிறது. இவ்வாறாகத் தத்துவம் மிகவும் பொதுப்படையான, அதே சமயம் மிகவும் முக்கியமான அடிப்படைப் பிரச்சினைகளைக் கிளப்புகிறது.
தத்துவம் என்பது என்ன?
வாழ்க்கை, அறிவு, இவற்றின் மிக மிகப் பல்வகைப்பட்ட துறைகள் பால் மனிதனது அணுகுமுறையை நிர்ணயிப்பவை இவை.
தத்துவம் சுமார் மூவாயிரம் ஆண்டுகளாக நிலவிவருகிறது. ஒன்றுக்கொன்று எதிரான கருத்தோட்டங்களுக்கிடையே போராட்டம் அதில் இந்தக் காலமெல்லாம் தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. இந்தப் போராட்டம் தற்போதும் நின்றபாடில்லை. ஏன் இந்தப் போராட்டம் நடக்கிறது? அதன் காரணங்கள் யாவை? தத்துவக் கருத்தோட்டங்களின் மோதுதலில் மைய இடம் வகிப்பது உணர்வுக்கும் இருத்தலுக்கும் இடையே நிலவும் உறவு பற்றிய பிரச்சினை, வேறு வார்த்தைகளில் சொல்வதானால் கருத்தியலானதற்கும் பொருளியலானதற்கும் இடையே நிலவும் உறவு பற்றிய பிரச்சனை.
விரிவாக பேசாமல் சுருக்கமாக பேசுவோம்...
தத்துவத்தின் அடிப்படைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்கையில் விஞ்ஞானிகள் இருபெரும் முகாம்களாகப் பிரிவுபட்டிருக்கிறார்கள்.
பொருளை, இருத்தலை, இயற்கையை முதன்மை யானது என்றும் உணர்வை, சிந்தனைத் திறமையை, ஆன்மாவை இரண்டாவது என்றும் ஏற்றுக்கொள்ளும் தத்துவ அறிஞர்கள் பொருள்முதல்வாதம் எனப்படும் தத்துவப் போக்கின் பிரதிநிதிகள் ஆவர். விஞ்ஞான விவரங்களையும் மக்களின் பல்வகைப்பட்ட நடைமுறைச் செயல்கள் யாவற்றையும் ஆதாரமாகக் கொண்டு பொருள்முதல்வாதத் தத்துவ அறிஞர்கள் பிரபஞ்சம் யாராலும் படைக்கப்படவில்லை என்றும், அது என்றுமுள்ளது என்றும் எல்லையின்றிப் பல்விதப்பட்டது என்றும் நிரூபிக்கிறார்கள். பொருளியலான பிரபஞ்சத்தின் நம்மைச் சூழ்ந்துள்ள வஸ்துக்களும் தோற்றங்களும் நம்மீது சார்பு இல்லாமலே நிலவிவருகின்றன. எந்த உணர்வையும் சாராத பெருந்தொகையான பல்வேறு நிகழ்முறைகள் புறநிலைப் பிரபஞ்சத்தில் எப்போதும் நடந்துவந்துள்ளன, என்றென்றும் நடந்துவரும். பொருளியலானது கருத்தியலானதற்கு முன்பே நிலவியது. மனிதனது சிந்தனைத்திறன் பொருளியலானது இன்றி நிலவமுடியாது. இப்படிப் பொருள்முதல்வாதித் தத்துவ அறிஞர்கள் கருதுகிறார்கள். சித்தனை என்பது மூளையின் விளைபொருள். எனவே மூளை சிந்தனை உறுப்பாக விளங்குகிறது. சிந்தனைத் திறன் கருத்தியலானது என்பது புறநிலைப் பிரபஞ்சத்தைப் பிரதிபலிப்பதற்கு மூளைக்கு உள்ள திறனே ஆகும். ஆதலால் கருத்தியலானது, அதாவது உணர்வு, புறநிலைப் பிரபஞ்சத்தின்மீது சார்பு இல்லாமல் முற்றிலும் தன்னிச்சையாக நிலவ முடியாது. இவ்வாறு பொருள்முதல்வாதித் தத்துவ அறிஞர்கள் சொல்கிறார்கள்.
பொருள்முதல்வாதத்துக்கு எதிர்நிலையான கருத்துமுதல் வாதப் போக்கு தத்துவத்தில் நிலவுகிறது. நிலவுவது அனைத்திற்கும் தொடக்கமாக விளங்குவது உணர்வே, சிந்தனைத்திறனே, ஆன்மாவே, அதாவது கருத்தியலானதே எனக் கருத்துமுதல் வாதத் தத்துவ அறிஞர்கள் ஏற்கிறார்கள். கருத்துமுதல்வாகப் போக்கு இரு அடிப்படை வகைகள் கொண்டது. அகநிலைக் கருத்துமுதல்வாதம், புறநிலைக் கருத்து முதல்வாதம் என்பன அவை. சிந்தனை செய்யும் அகநிலைப்பொருள் ஆகிய மனிதனது தனிப்பட்ட உணர்வே முதன்மையானது என்று ஒப்புக்கொள்ளும் தத்துவக் கருத்துமுதல்வாதத்தின் பிரதிநிதிகள் அகநிலைக் கருத்துமுதல்வாதிகள்ஆவர். பொருள்கள் எதார்த்தத்தில் நிலவுகின்றன, அவை நமக்கு வெளியே நிலவுகின்றன என்று நமக்கு வெறுமே தோன்ற மட்டுமே செய்கிறது. அவற்றை நாம் பார்க்கிறோம், கேட்கிறோம், தொடுகிறோம் என்பதே இதன் காரணம். உண்மையிலோ காணல், தொடுதல், கேட்டல் என்பவை புலனுணர்ச்சிகளே ஆகும். இவ்வாறு அவர்கள் சொல்கிறார்கள். பிரபஞ்சம் முழுவதும் சிந்தனை செய்யும் அகத்தினால், அகநிலைப்பொருளின் தன்னுணர்வால் படைக்கப்பட்டிருக்கிறது என்றோ, அல்லது நிலவும் பொருள்கள், வஸ்துக்கள், தோற்றங்கள் ஆகியவை அனைத்தும் நமது உணர்ச்சிகள், அனுபவங்கள் ஆகியவற்றின் மொத்தமே, தொகுதியே ஆகும் என்றோ நிரூபிக்க அவர்கள் முயல்கிரார்கள். தவறான தத்துவவகைப்பட்ட இந்தப் பிரபஞ்ச அறிவு மனிதனுடைய உணர்வைப் பொருளியலான பிரபஞ்சத்துக்கு எதிர்நிறுத்துகிறது. மனிதனுக்கு இயல்பாக வழங்கப்பட்டிருப்பவை அவனுடைய அறிவின் விளைபொருள்களான கருத்துக்களும் உணர்ச்சிகளும் மட்டுமே என்று அகநிலைக் கருத்து முதல்வாதிகள் கூறுகிறார்கள். மனித உணர்வே தொடக்கப் புள்ளி என்றும் பின்பு அதிலிருந்து இயற்கை வெளிப்படுகிறது என்றும் அவர்கள் வாதித்து, இந்த வாதத்தின், அடிப்படையில் பொருள்களும் பிரபஞ்சம் முழுவதுமே புறநிலை யாக நிலவுவதையும் அதன் வளர்ச்சியின் ஓழுங்குழுறையையும் ஒருவகையில் அல்லது மறுவகையில் மறுக்கிறார்கள். புறநிலைக் கருத்துமுதல்வாதிகள் மனித சிந்தனைகள், கருத்துக்கள்ஆகியவையும், இயற்கையுமே கூட, பரம கருத்து, பிரபஞ்ச வியாபகமான அறிவு, பொருளியலானதற்கு அப்பாற்பட்ட எதார்த்தம் ஒன்றின் தனக்கு மட்டுமே எனக் கருதுகிறார்கள்.
மனிதன்மீது சார்பு அற்ற பிரபஞ்சம் நிலவுவது சாத்தியமே எனப் புறநிலைக் கருத்துமுதல்வாதிகள் ஒப்புக்கொள்கிறார்கள்.
இரண்டு மே கருத்தியல் தொடக்கத்தை அடிப்படையாக வைத்துக்கொள்கின்றன. கருத்து, ஆன்மா, அதாவது உணர்வு முதன்மையானது என்றும் யதார்த்தப் பிரபஞ்சம், அதாவது இயற்கை இரண்டாவது என்றும் இரண்டுமே ஒப்புக்கொள்கின்றன.
சரி நாம் தத்துவத்தை ஏன் பயில வேண்டும் எப்படி பயில வேண்டும் தொடர்ந்து பார்ப்போம்.
இங்கே அம்பேத்காரியம் பெரியாரியம் என்போர் முதலில் தத்துவம் என்றால் என்ன? உலகில் தோன்றிய எல்லா தத்துவங்களும் மார்க்சிய இரண்டேதான் மூன்றாவது ஏதும் மில்லை எனும் இடத்தில் இவர்களின் தத்துவம் என்ன என்பத்னையும் சற்று அலசுவோம் உங்களின் தொடர் விவாதத்தின் ஊடாக தோழர்களே...
Subscribe to:
Post Comments (Atom)
இலக்கு இதழின் கட்டுரைகள்
செய்தியை சார்ந்த அலசல்
-
தலித் விடுதலை சாதி ஒழிப்பு பற்றி பேசுவோர் இதுவரை செய்தவற்றை தொகுப்பாக காணும் பொழுது அவை எந்த வர்க்க நலனில் உள்ளது? உண்மையாலுமே சாதி ஒழிப்ப...
-
ஒரு கம்யூனிஸ்ட் கட்சியானது கறாரான பாட்டாளிவர்க்க கண்ணோட்டம், கொள்கை கோட்பாடுகளில் உறுதியான பற்றுகொண்டிருக்கவேண்டும். ஆகவே கம்யூனிஸ்ட் கட்சி...
-
தோழர் ஞானம் அவர்களின் பதிவே. இவை சில தினங்களாக வாட்சாப் விவாத பொருளாக உள்ளது ஆகையால் இங்கே பகிர்கிறேன் தோழர்களே, பாசிச எதிர்ப்பு மக்கள் முன்...
-
அம்பேத்கரும் கம்யூனிசமும் என்கிற இந்த சிறிய வெளியீடு அம்பேத்கர் குறித்த புத்தகம் ஒன்றிற்காக எழுதிபார்க்கப்பட்ட பகுதிகளில் ஒன்ற...
-
தோழர்களுக்கு வணக்கம், சிலர் ஏன் குறைக்கூறிக் கொண்டே உள்ளீர் நடைமுறையில் ஈடுபடுவதில்லை தத்துவம் பேசி என்ன பயன் சமூகம் சீரழிந்துவிட்ட பின்னர்ந...
-
தோழர்களுக்கு வணக்கம் இன்றைக்கு தொடங்கி இந்த நூல் வாசிக்க உள்ளோம். தேசிய இனப்பிரச்சனைகளும் பாட்டாளி வர்க்க சர்வதேசிய வாதமும் நூல் pdf வடிவி...
-
தோழர்களுக்கு வணக்கம், இந்த இதழில் நாம் செய்ய வேண்டியதை மார்க்சிய ஆசான்கள் செய்தவையில் இருந்து தேர்ந்தெடுத்து எழுதிக் கொண்டும் அதில் குறிப...
No comments:
Post a Comment