மனித இனம் தோற்றம் வளர்ச்சி- இன கொள்கையும் அவை யாரின் தேவைகானது?-2

 பின்‌ இணைப்பு 2

இனங்களையும்‌ இனக்‌ காழ்ப்புக்களையும்

பற்றிய அறிக்கை (யுனெஸ்கோ,

பாரிஸ்‌, 26 செப்டெம்பர்‌, 1967)

1. எல்லா மனிதர்களும்‌ சுதந்திரம்‌ உள்ளவர்களாகவும்‌ மதிப்பிலும்‌ உரிமைகளிலும்‌ சமமரனவார்களாகவும்‌ பிறக்கிறார்ள்‌ என்பது உலகம்‌ முழுவதிலும்‌ பிரகடனம்‌ செய்யப்பட்டுள்ள கோட்பாடு. அரசியல்‌, பொருளாதார, சமுதாய, பண்பாடும்‌ மமின்மை மனிதர்களுடைய பரஸ்பர உறவுகளைப்‌ பாதிக்கும்‌ எல்லா இடங்களிலும்‌ இந்தக்‌ கோட்பாடு அபாயத்துக்கு உள்ளாகி இருக்கிறது. மனிதார்களின்‌ சமமதிப்பை ஓப்புக்‌ கொள்வதற்குச்‌ இறப்பாகப்‌ பெரும்‌ தடையாக விளங்குகிறது இனக்‌ கொள்கை. கற்கால உலகில்‌ இனக்‌ கொள்கை தனது வெறியாட்டத்தைத்‌ தொடர்ந்து வருகிறது. முக்கியமான சமுதாய நிகழ்ச்சி என்ற வகையில்‌, மனிதன்‌ பற்றிய விஞ்ஞானங்களின்‌ எல்லாத்‌ துறைகளி லும்‌ ஆராய்ச்சி செய்பவர்களின்‌ கவனத்துக்கு உரியது அது.

2. இனக்‌ கொள்கை அதனால்‌ துன்புறுவோரின்‌ வளர்ச்சியைக்‌ டுக்கறது, அதைப்‌ பிரசாரம்‌ செய்பவர்களைச்‌ சீர்‌ கெடுக்கிறது, நாட்டினங்களைத்‌ தமக்குள்‌ பிரிவுபடுத்துகிறது, சர்வதேசக்‌ கெடு பிடி நிலைமையைத்‌ தீவிரப்படுத்துகிறது, உலக சமாதானத்துக்கு ஆபத்து விளைக்கிறது.

 3. 7967, செப்டெம்பரில்‌ பாரிஸ்‌ நகரில்‌ கூடிய நிபுணர்களின்‌ ஆலோசனைக்‌ கூட்டம்‌, இனச்‌ கொள்கைச்‌ சித்தாந்தங்கள்‌ எவ்விகு விஞ்ஞான அடிப்படையும்‌ இல்லாதவை என ஒப்புக்கொண்டது. இனங்களையும்‌ இன வேறுபாடுகளையும்‌ பற்றி 1950லும்‌ 1951லும்‌ தயாரிக்கப்பட்ட அறிக்கைகளின்‌ உயிரியல்‌ அம்சங்களை மறு பரிசீலனை செய்வதற்காக 1964ல்‌ மாஸ்கோவில்‌ கூட்டப்பட்ட நிபுணர்களின்‌ சர்வதேச ஆலோசனைக்‌ கூட்டத்தால்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட்ட யோசனைகளை அது உறுதுப்படுத்தியது.

பின்வரும்‌ கருத்துக்கள்‌ மீது சிறப்பாகக்‌ கவனம்‌ செலுத்தப்படுகிறது:

) தற்கால மனிதர்கள்‌ எல்லோரும்‌ ஒரே இனவகையைச்‌ சேர்ந்தவர்கள்‌, ஒரே மூலத்திலிருந்து தோன்றியவர்கள்.

) மனித குலம்‌ இனங்களாகப்‌ பிரிக்கப்படுவது ஒரளவு சம்பிரதாயமாகவும்‌ தான்தோன்றித்‌ தனமாகவும்‌. தான்‌. எந்த அர்த்தக்இலும்‌ அவை சமமதிப்பு அற்றவை என்பதை இது குறிக்கவே இல்லை. பல மானிட இயல்‌ அறிஞர்கள்‌ மனிதர்களின்‌ மாறும்‌ தன்மைக்கு உள்ள பெருத்த முக்கியத்துவத்தை முற்றிலும்‌ ஒப்புக்‌ கொள்கிறார்‌ கள்‌. மனிதர்கள்‌ இனங்களாகப்‌ பிரிக்கப்படுவது அளவறுத்த விஞ்ஞான முக்கியத்துவமே உள்ளது என்றும்‌ அது அளவுமீறிய பொதுமைப்பாட்டுக்குக்கூட இட்டுவரக்‌ கூடும்‌ என்றும்‌ அவர்கள்‌ கருதுகிறார்கள்‌. ) மக்கள்‌ இனங்களின்‌ பண்பாட்டுச்‌ சாதனைகளில்‌ உள்ள வேற்றுமைகள்‌ அவற்றின்‌ மரபுவழி வந்த பண்புகளின்‌ விளைவாக ஏற்பட்டவை என்று எண்ணுவதைத்‌ தற்கால உயிரியல்‌ அனுமதிப்‌ பதில்லை. மனிதார்களின்‌ சாதனைகளில்‌ உள்ள வேற்றுமைகளுக்கு அவர்களது பண்பாட்டின்‌ வரலாறே காரணம்‌ ஆக முடியும்‌. உலக மக்கள்‌, நாகரிகத்தின்‌ எந்தத்‌ தரத்தையும்‌ எட்டுவதற்கு ஒரு நிக ரான உயிரியல்‌ வாய்ப்புக்கள்‌ பெற்றிருக்கிறார்கள்‌. இனக்‌ கொள்கை மனித உயிரியல்‌ விவரங்களில்‌ மோசமாகப்‌ பித்தலாட்டம்‌ செய்கிறது.

4. இன உறவுகள்‌ எனப்படுபவை சம்பந்தமாக மனிதகுலத்‌துக்கு முன்‌ நிற்கும்‌ பிரச்சினைகள்‌, உயிரியல்‌ காரணங்களால்‌ அல்ல, சமுதாயக்‌ காரணங்களால்‌ தோன்றியவை. அடிப்படைப்‌ பிரச்சினையாக விளங்குகிறது இனக்‌ கொள்கை. னிதக்‌ குழுக்களுக்கு இடையே பேதம்‌ கடைப்பிடிப்பது உயிரியல்‌ நோக்கில்‌ சரியானது என்ற பொய்யான அனுமானத்தை அடிப்படையாகக்‌ கொண்ட சமூ விரோதச்‌ செயல்களிலும்‌ எண்ணங்களிலும்‌ இது வெளிப்படுகிறது.

5. குழுக்கள்‌ தங்கள்‌ பண்புகளை மற்றக்‌ குழுக்களின்‌ பண்புகளுடன்‌ ப்பிட்டே வழக்கமாக மதிப்பிடுகின்றன. குழுக்களின்‌ பண்பாட்டு, உளப்‌பண்புகள்‌ நிலையானவை, பிறப்பிலேயே தோன்‌றியவை என்றும்‌, அவற்றின்‌ அடிப்படையில்‌ குழுக்களைப்‌ படிவரிசையில்‌ பிரிக்க விஞ்ஞான ஆதாரம்‌ இருப்பதாகவும்‌ இனக்‌ கொள்கை பொய்யாக வலிந்து உரைக்கிறது. இவ்வாறு, குழுக்களுக்கு இடையே தற்போது நிலவும்‌ உறவுகளை என்றென்றும்‌ நிலைத்து இருக்கும்படி செய்வதை நோக்கமாகக்‌ கொண்டு, இப்போது இருக்கும்‌ வேற்றுமைகள்‌ மாற முடியாதவை என்று காட்ட அது முயல்கிறது.

6. இனக்‌ கொள்கையின்‌ உயிரியல்‌ சித்தாந்தங்கள்‌ பொய்யானவை என்பது வெளிப்பட்டுவிட்டபடியால்‌, குழுக்களின்‌ சமம்‌ இன்‌மையை நியாயப்படுத்தப்‌ புதிய புதிய சூழ்ச்சிகளை அது கையாளுகிறது. குழுக்களுக்கு இடையே மண உறவுகள்‌ நிலவாமைக்கு ஓரளவு காரணம்‌, இனக்‌ கொள்கை ஏற்படுத்தியுள்ள நிலைமைகள்‌ தாம்‌. இனக்‌ கொள்கையோ, மண உறவுகள்‌ நிலவாததற்கு உயிரியல்‌ வகைப்பட்ட வேற்றுமைகளே காரணம்‌ என்று வலிந்து உரைப்‌ பதற்குத்‌ தேவையான வாதங்களை இதிலிருந்தே எடுத்துக்‌ கொள்‌கிறது. குழுக்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள்‌ உயிரியல்‌ காரணங்களால்‌ ஏற்பட்டவை என்று நிரூபிக்க இனக்‌ கொள்கையால்‌ எந்த அளவுக்கு முடியவில்லையோ, அந்த அளவுக்கு அது வேறு சான்றுகளைக்‌ காட்ட முயல்கிறது: இறைவன்‌ சித்தம்‌, பண்பாட்டு வேற்றுமை, கல்வித்‌ தரத்தில்‌ வித்தியாசம்‌, அல்லது இனக்‌ காழ்ப்‌ புக்களை மூடி மறைக்க உதவும்‌ வேறு ஏதேனும்‌ சித்தாந்தத்தை  பயன்படுத்திக்‌ கொள்கிறது. இவ்வாறு, தற்கால உலகில்‌ இனக்‌ கொள்கை காரணமாக விளைந்துள்ள பல பிரச்சனைகள்‌ இனக்‌ கொள்கையின்‌ வெளிப்படையான தோற்றங்களிலிருந்து மட்டுமே அல்ல, இன அடிப்படையில்‌ பேதம்‌ கடைப்பிடிப்பவர்களும்‌ ஆனால்‌ அதை ஒப்புக்கொள்ள விரும்பாதவார்களுமான மனிதர்சளின்‌ நடவடிக்கைகளிலிருந்தும்‌ எழுகின்றன.

7. இனக்‌ கொள்கை வரலாற்று மூலங்கள்‌ உடையது. இது சர்வவியாபகமான நிகழ்ச்சி அல்ல. பல தற்கால சமூகங்களிலும்‌ பண்பாடுகளிலும்‌ அதன்‌ மங்கலான தடங்கள்‌ மட்டுமே காணப்படுகின்றன. நீண்ட வரலாற்றுக்‌ காலப்‌ பகுதிகள்‌ இனக்‌ கொள்கை அற்றவையாக இருந்தன. இனக்‌ கொள்கையின்‌ பல வடிவங்கள்‌ ஒரு நாட்டை வென்று கைப்பற்றியதனால்‌ ஏற்பட்ட நிலைமைகளி லிருந்து தோன்றுகின்றன. புது உலகில்‌ இந்தியர்கள்‌ பால்‌ கடைப்‌ பிடிக்கப்படும்‌ போக்கு, நீக்ரோ அடிமை முறையை நியாயப்படுத்தும்‌ முயற்சிகள்‌, அவற்றின்‌ விளைவாக இனங்களின்‌ சமம்‌ இன்மை பற்றி மேற்கு நாடுகளில்‌ எழுந்த கருத்து ஆகியவற்றை இதற்கு உதாரணமாகக்‌ காட்டலாம்‌. காலனி ஆதிக்கப்‌ போக்குகளும்‌ இனக்‌ கொள்கையின்‌ பல வடிவங்களைக்‌ தோற்றுவிக்கின்றன. வேறு பல உதாரணங்களில்‌ ஒன்று யூத எதிர்ப்பு. பல சமூகங்களுக்கு எதிர்ப்பட்ட பிரச்சினைகளுக்கும்‌ நெருக்கடிகளுக்கும்‌ பொறுப்பு யூதர்கள்‌ மேல்‌ சுமத்தப்பட்டது, அவர்கள்‌ பலிக்‌கடாக்கள்‌ ஆக்கப்பட்டார்கள்‌. இத்தகைய சமூகங்களில்‌ யூத எதிர்ப்பு சிறப்‌பாகப்‌ பெரும்‌ பங்கு ஆற்றியது.

 

8. 20ம்‌ நூற்றாண்டில்‌ நடந்த காலனி ஆதிக்க எதிர்ப்புப்‌ புரட்சி இனக்‌ கொள்கை என்னும்‌ தீமையை வேரறுப்பதற்குப்‌ புதிய வாய்ப்‌ புக்களை ஏற்படுத்தியது. முன்பு பராதீனமாய்‌ இருந்த பல நாடு களில்‌ தாழ்ந்தவர்கள்‌ எனக்‌ கருதப்பட்ட மனிதர்கள்‌ முதன்‌ முதலா முழு அரசியல்‌ உரிமைகள்‌ பெற்றார்கள்‌. தவிர, சர்வதேச நிறுவனங்களில்‌ அடிப்பட்ட நாடுகள்‌ சம உரிமையுடன்‌ பங்கு கொண்டது இனக்‌ கொள்கையின்‌ அஸ்திவாரத்தைத்‌ தகர்த்தது.

 9. ஆயினும்‌ சல சமூகங்களில்‌, முன்பு தாமே இனக்‌ கொள்‌ கையால்‌ துன்புற்று வந்த குழுக்கள்‌ விடுதலைப்‌ போராட்டத்தின்‌ போது இனக்‌ கொள்கைத்‌ தன்மை கொண்ட சித்தாந்தங்களை மேற்கொண்டுவிட்டன. இனக்‌ கொள்கைச் சித்தாந்தமும்நடைமுறையும் முன்பு தனக்கு வழங்க மறுத்த சமதிதுவத்தை அடைய னிதன்‌ செய்யும்‌ முயற்சிகளின்‌ விளைவாக ஏற்பட்ட மறு நிகழ்வு ஆகும்‌ இது. என்ன ஆயினும்‌, முதல்‌ சுரண்டலிலிருந்து கிளைத்துள்ள இனக்‌ கொள்கைச்‌ சித்தாந்தத்தின்‌ இந்தப்‌ புதிய வடிவங்‌கள்‌ எவ்வித உயிரியல்‌ அடிப்படையும்‌ அற்றவை. அவை அரசியல்‌ போராட்டம்‌ காரணமாக ஏற்பட்டவை, விஞ்ஞான ஆதாரம்‌ இல்லாதவை.

10. இனக்‌ கொள்கையை அம்பலப்படுத்துவதற்கு, அதன்‌ பொய்மையை உயிரியலார்‌ காட்டுவது மட்டுமே போதாது. உளவியலாரும்‌ சமூக இயலாரும்‌ அது தோன்றியதன்‌ காரணங்களை வெளிப்படுத்துவதும்‌ அவசியம்‌. சமுதாய அமைப்பு எப்போதுமே முக்கியக்‌ காரணியாக விளங்குகிறது. ஆனாலும்‌ ஒரே சமுதாய அமைப்புக்கு உள்ளேயே, தனி நபர்களிடையே, அவர்களது சொத்‌துப்‌ பண்புகளையும்‌ வாழ்க்கை நிலைமைகளையும்‌ பொறுத்து, இனக்‌ கொள்கைப்‌ பழகு முறையில்‌ பெருத்த வேறுபாடுகள்‌ சாத்தியமே.

11, இனக்‌ காழ்ப்புக்களின்‌ சமுதாயக்‌ காரணங்கள்‌ குறித்து நிபுணர்கள்‌ கமிட்டி பின்வரும்‌ முடிவுகளுக்கு வந்திருக்கிறது:

௮) இனக்‌ கொள்கையின்‌ சமுதாய, பொருளாதாரக்‌ காரணங்‌ கள்‌, ஆட்சி அதிகாரத்திலும்‌ சொத்து நிலைமையிலும்‌ பெருத்த ஏற்றத்தாழ்வுகள்‌ உருவாகும்‌ காலனியாளர்‌ சமூகங்களில்‌ மிக அடிக்கடி தோன்றுகின்றன. கெட்டோக்கள்‌ என்னும்‌ ஒதுக்கிடங்‌கள்‌ அமைந்துள்ள சில நகர வட்டாரங்களிலும்‌ இந்தக்‌ காரணங்‌கள்‌ தோன்றுகின்றன. இம்மாதிரி துக்கிடங்களில்‌ யூகிப்பவர்களுக்கு வேலை வாய்ப்புக்களிலும்‌ உறைவிடம்‌ பெறுவதிலும்‌ அரசியல்‌ வாழ்விலும்‌ கல்வியிலும்‌ நீதி மன்றத்திலும்‌ சம உரிமைகள்‌ மறுக்கப்படுகன்றன. பல சமூகங்களில்‌, ஒழுக்க முறைக்குப்‌ புறம்‌பானது என்றோ, சமூகத்தினரின்‌ மதிப்புக்குக்‌ குறைந்தது என்றோ கருதப்படும்‌ ஏதேனும்‌ ஒரு வகைச்‌ சமூக அல்லது பொருளாதாரச்‌ செயல்‌ புற இனக்‌ குழுக்களிடம்‌ ஒப்படைக்கப்படுகிறது. இந்தப்‌ புற இனக்‌ குழுக்களோ, இவ்வகைச்‌ செயலில்‌ எடுபட்டிருக்கும்‌ ஒரே காரணத்தால்‌ எள்ளி நகையாடவும்‌, நிந்திக்கவும்‌, தொந்தர வுக்கு உள்ளாக்கவும்‌ படுகின்றன. ஆ) தனிப்பட்ட முறையில்‌ அதிர்ச்சிகளுக்கு உள்ளான மனிதா கள்‌ இனக்‌ காழ்ப்புக்களால்‌ இறப்பாகப்‌ பாதிக்கப்படவும்‌ அவற்றை வெளிக்காட்டவும்‌ கூடும்‌. குறிக்த பண்புகள்‌ கொண்ட சிறு குழுக்களும்‌ கழகங்களும்‌ சமூக இயக்கங்களும்‌ சில வேளைகளில்‌ இனக்‌ காழ்ப்புக்களைப்‌ பேணிப்‌ பரப்புகின்றன. ஆனால்‌ இந்தக்‌ காழ்ப்புக்களின்‌ வோர்கள்‌ சமூகத்தின்‌ சமுதாய, பொருளாதார அமைப்பிலேயே உள்ளன.

இ) இனக்‌ கொள்கை தன்னைத்‌ தானே தீவிரப்படுத்திக்‌ கொள்ளும்‌ இயல்பு உடையது. இன பேதம்‌, ஒரு குழுவைச்‌ சம உரிமை அற்றது ஆக்கி, அதனாலேயே அந்தக்‌ குழுவைச்‌ சுற்றிப்‌ பிரச்சினையை எழுப்புகிறது. பிறகு அதே குழு, ஏற்பட்ட நிலைமைக்குப்‌ பொறுப்பாளி என்று குற்றம்‌ சாட்டப்படுகிறது. விளைவாகப்‌ புதிய இனக்‌ கொள்கைச்‌ சித்தாந்தம்‌ உரு ஆகிறது.

12. இனக்‌ கொள்கையை எதிர்த்துப்‌ போராடுவதற்கு ஏற்ற முக்கியச்‌ சாதனங்கள்‌ பின்வருவன: காழ்ப்புக்களை உண்டாக்கும்‌சமூக நிலைமைகளை மாற்றுவது; காழ்ப்புக்களால்‌ பீடிக்கப்பட்ட பற்றுறுதி கொண்டவர்களின்‌ செயல்களுக்கு எதிராகச்‌ செயல்‌ புரிவது; பொய்யான நம்பிக்கைகளையே எதிர்த்துப்‌ போராடுவது.

 13. சமூக அமைப்பில்‌ இனக்‌ காழ்ப்புக்ககாக்‌ களையவல்ல அடிப்படை மாற்றங்களை நிகழ்த்துவதற்கு அரசியல்‌ தன்மை கொண்ட முடிவுகள்‌ தேவைப்படலாம்‌ என்பது தெரிந்ததே. எனினும்‌, கல்வி, சமுதாய, பொருளாதார வளர்ச்சிக்கான மற்ற நடவடிக்கைகள்‌, பொதுத்‌ தகவல்‌ அறிவிப்பு, சட்ட நிறுவனங்கள்‌ ஆகியவை போன்ற சில முன்னேற்றச்‌ சாதனங்கள்‌ இனக்‌ காழ்ப்‌ புக்களை வேரறுப்பதற்காகச்‌ செயல்முறையில்‌ பயன்படுத்தப்பட லாம்‌ என்பதும்‌ தெரிந்த விஷயம்‌.

14. பள்ளியும்‌ சமுதாய, பொருளாதார முன்னேற்றத்தின்‌ பிற சாதனங்களும்‌ மக்கள்‌ விரிவாக ஒருவரை ஒருவர்‌ புரிந்து கொள்வகுற்கும்‌ மனிதனுக்கு உள்ள எல்லா வாய்ப்புக்களையும்‌ நடப்பில்‌ கொண்டுவருவதற்கும்‌ ஏற்ற மிகப்‌ பயன்‌ விளைக்கும்‌ கருவிகளாக விளங்கக்‌ கூடும்‌. அதே சமயம்‌ இன பேதத்தையும்‌ சமமின்மையையும்‌ சாசுவதம்‌ அக்குவதுற்கும்‌ அவை விரிவாசப்‌ பயன்படுத்தப்படலாம்‌. ஆகவே, எல்லா நாடுகளிலும்‌ கல்விச்‌ சாதனங்களும்‌ சமுதாய, பொருளாதார பாதிப்பு விளைக்கும்‌ சாதனங்களும்‌ பின்வரும்‌ நோக்கங்களுக்காகப்‌ பயன்படுத்தப்‌ படுவது இன்றியமையாதது:

I. பள்ளிகளின்‌ பாடத்‌ இட்டங்கள்‌ இனங்கள்‌ பற்றியும்‌ மனித குலத்தின்‌ ஒருமை பற்றியும்‌ விஞ்ஞான விவரங்களைப்‌ பிரதிபலிக்க வேண்டும்‌. பாடப்‌ புத்தகங்களிலோ, வகுப்பிலோ, எந்த மக்கள்‌ இனத்தைப்‌ பற்றியும்‌ அவமதிப்பு நிறைந்த குறிப்புக்கள்‌ செய்யப்‌ படாதவாறு பார்த்துக்‌ கொள்ள வேண்டும்‌.

II. பொதுக்‌ கல்வியும்‌ சிறப்புக்‌ கல்வியும்‌ அளிக்க வேண்டிய விஷயஞானம்‌ தொழில்‌ நுட்ப முன்னேற்றத்தின்‌ போக்கில்‌ நாளுக்கு நாள்‌ அதிக முக்கியத்துவம்‌ பெற்று வருவதனால்‌, பள்ளிகளும்‌ பிற கல்வி நிலையங்களும்‌ எவ்வித வரையறுப்புக்களோ பேதங்‌ களோ இன்றி மக்களின்‌ எல்லாக்‌ குழுக்களுக்கும்‌ இடம்‌ அளிப்ப வையாக இருக்க வேண்டும்‌. . ; ;

ஆ) அதோடு, வரலாற்றுக்‌ காரணங்களால்‌ எவையேனும்‌ குழுக்கள்‌ பொருளாதாரத்திலோ கல்வியிலோ மற்றவற்றைவிடத்‌ தாழ்ந்த தரத்தில்‌ இருக்கும்‌ சந்தர்ப்பங்களில்‌ சமூகம்‌ இந்த நிலையைச்‌ சீர்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்‌ கொள்ள வேண்டும்‌. ஏழ்மையின்‌ காரணமாக: ஏற்பட்ட வரை யறுப்புக்கள்‌ குழந்தைகளின்‌ வாழ்க்கையைப்‌ பாதிக்காதபடி, முடிந்த வரையில்‌ இந்த நடவடிக்கைகள்‌ எடுத்துக்‌ கொள்ளப்பட வேண்டும்‌.

எல்லா வகைக்‌ கல்வியிலும்‌ ஆசிரியார்கள்‌ ஆற்றும்‌ பங்கு முக்கி யமானது. இதைக்‌ கருத்தில்‌ கொண்டு ஆசிரியர்களைப்‌ பயிற்றுவஇல்‌ விசேஷ கவனம்‌ செலுத்தப்பட வேண்டும்‌. தங்கள்‌ சமூகத்தில்‌ பரவியிருக்கக்‌ கூடிய காழ்ப்புக்கள்‌ தங்கள்‌ உள்ளங்களில்‌ ஊறி யிருக்கன்றனவா என்பதை ஆசிரியர்கள்‌ உணர வேண்டும்‌. இந்தக்‌ காழ்ப்புக்களை நீக்குவதற்கு ஊக்கம்‌ அளிக்கப்பட வேண்டும்‌. 15. இனக்‌ கொள்கையின்‌ விளைவுகளால்‌ பீடிக்கப்பட்டவார்க ளின்‌ இருப்பிட நிலைமைகளையும்‌ அவர்கள்‌ வேலைகள்‌ பெறும்‌ வாய்ப்புக்‌ களையும்‌ மேம்படுத்துவது, இவற்றோடு சம்பந்தப்பட்ட அரசாங்க அலுவலகங்களதும்‌ பிற ஸ்தாபனங்களுடையவும்‌ கடமையாகும்‌. இந்த நடவடிக்கைகள்‌ இனக்‌ கொள்கை நடைமுறையின்‌ விளைவு களைச்‌ சமப்படுத்துவதுடன்‌ இனக்‌ கொள்கையினரின்‌ செயல்‌ முறை களையும்‌ நடத்தையையும்‌ மட்டுப்படுத்தும்‌ சாதனங்களாகவும்‌ பயன்படக்‌ கூடும்‌.

16, பொதுத்‌ தகவல்‌ அறிவிப்புச்‌ சாகனங்கள்‌ அறிவைப்‌ பரப்‌ புவதிலும்‌ பரஸ்பரப்‌ புரிவை ஏற்படுத்துவதிலும்‌ நாளுக்கு நாள்‌ வளர்ந்து வரும்‌ முக்கியத்துவம்‌ பெற்றவை ஆயினும்‌ இந்தச்‌ சாதனங்களின்‌ உண்மையான வாய்ப்புக்கள்‌ இன்னும்‌ அறியப்பட வில்லை. இனக்‌ காழ்ப்புக்களையும்‌ இன பேதங்களையும்‌ குறித்துக்‌ கொள்கை உறுதியையும்‌ பழகு முறை நியமங்களையும்‌ உருவாக்கு வதில்‌ அவற்றின்‌ செல்வாக்கை நிர்ணயிபதற்காக, இந்தச்‌ சாத னங்களின்‌ சமூகத்‌ துறைப்‌ பயன்பாட்டைப்‌ பற்றிய ஆராய்ச்சி நடத்துவது இன்றியமையாதது. கல்வித்‌ தரத்திலும்‌ சமூக நிலையிலும்‌ பெருக்க ஏற்றத்தாழ்வுகள்‌ கொண்ட மக்களின்‌ விரிவான வட்டாரங்களுக்கு, பொதுத்‌ தகவல்‌ அறிவிப்புச்‌ சாதனங்கள்‌ பயன்படுவதால்‌ இனக்‌ காழ்ப்புக்களைத்‌ தூண்டுவதிலும்‌ அதேபோல அவற்றை எதிர்த்துப்‌ போராடுவதிலும்‌ அவை நிர்ணயகரமான பங்கு ஆற்றக்‌ கூடும்‌. பொதுத்‌ தகவல்‌ அறிவுப்புக்‌ துறையில்‌ பணியாற்றுபவர்களின்‌ செயல்கள்‌ மக்கள்‌ குழுக்களுக்கும்‌ கூட்டு களுக்கும்‌ இடையே பரஸ்பரப்‌ புரிவை வளர்ப்பதை நோக்கமாகக்‌ கொண்டிருக்க வேண்டும்‌. மக்கள்‌ இனங்களைக்‌ கேலிக்கு உரிய விதத்தில்‌ இத்திரிக்கும்‌ பழைய மாதிரி எண்ணங்களை அவர்கள்‌ பரப்பக்‌ கூடாது. ஒருவருடைய இனத்தை அது விஷயத்தின்‌ உள்ளடக்கத்துக்கு நேரான தொடர்பு கொண்டிருந்தால்‌ தவிர, அச்சில்‌ குறிப்பிடக்‌ கூடாது.

17. சட்டம்‌ மனிதர்களின்‌ சமத்துவத்திற்கு வகை செய்ய ஏற்ற மிக முக்கியச்‌ சாதனங்களில்‌ ஒன்று, இனக்‌ கொள்கையை எதிர்த்துப்‌ போராடுவதற்கு மிக வன்மை வாய்ந்த ஆயுதமாகவும்‌ அது விளங்குகிறது. 1948, டிசெம்பர்‌ 10ந்‌ தேதி இட்ட மனித உரிமைகள்‌ பற்றிய பொது அறிக்கையும்‌ அதன்‌ தொடர்பாக அடுத்து வந்த சர்வதேச ஒப்பந்தங்களும்‌ உடன்பாடுகளும்‌ ஓவ்வொரு நாட்டிற்குள்ளும்‌ சர்வதேச அரங்கிலும்‌ இனச்‌ சார்புள்ள எல்லா அநீதிகளையும்‌ எதிர்த்துப்‌ போராடுவதில்‌ செயல்‌ வன்மையுடன்‌ உதவக்‌ கூடும்‌.

அரசுச்‌ சட்டத்‌ தொகுப்பு, இனக்‌ கொள்கைப்‌ பிரசாரத்தையும்‌ இன பேதத்தை அடிப்படையாகக்‌ கொண்ட செயல்களையும்‌ சட்ட விரோதமானவை ஆக்க வல்ல விறல்‌ மிக்க சாதனம்‌ ஆகும்‌. தவிர இந்தச்‌ சட்டத்‌ தொகுப்பில்‌ வெளியிடப்பட்டுள்ள கொள்கை அதை அமல்படுத்தும்‌ நீதிபதிகளுக்கும்‌ நீதி மன்றங்களுக்கும்‌ மட்‌ டும்‌ இன்றி, எல்லாத்‌ தரங்களையும்‌ செயல்வகையையும்‌ கொண்ட எல்லா அரசாங்க அலுவலகங்களுக்கும்‌ கட்டாயம்‌ ஆக்கப்பட வேண்டும்‌. சட்டங்கள்‌ காழ்ப்புக்களை உடனே அகற்றி ஒழித்துவிடும்‌ என்று நம்பிவிடக்‌ கூடாது. ஆனாலும்‌ காழ்ப்புக்களை அடிப்படையாகக்‌ கொண்ட செயல்களிலிருந்து காத்துக்‌ கொள்வதற்கான சாதன மாகவும்‌ நீதி மன்றங்களின்‌ அதிகார பூர்வமான ஆதரவைப்‌ பெற்றுள்ள ஒழுக்க நெறிக்‌ காரணியாகவும்‌ விளங்குவதால்‌ சட்டம்முடிவில்‌ கருத்தோட்டங்களை மாற்றுவதற்கு உதவ முடியும்‌.

18. இனபேதத்துக்கு ஏதேனும்‌ ஒரு வகையில்‌ உட்படும்‌ மக்‌ கள்‌ குழுக்கள்‌, தங்கள்‌ பண்பாட்டுச்‌ சிறப்புக்களை அறவே விட்டு விட வேண்டும்‌ என்ற நிபந்தனையின்‌ பேரில்‌ ஆதிக்கக்‌ குழுக்களால்‌ குங்களுடன்‌ சேர்த்துக்‌ கொள்ளப்படுகின்றன. தங்கள்‌ பண்பாட்டு மதிப்புக்களைக்‌ காத்து வைத்துக்‌ கொள்ள இந்த மக்கள்‌ குழுக்கள்‌ செய்யும்‌ முயற்சிகளுக்கு ஊக்கம்‌ அளிக்கப்பட வேண்டும்‌. இவ்‌ வாறு செய்வதால்‌ அவை மனிதகுலத்தின்‌ பொதுப்‌ பண்பாட்‌ டுக்குச்‌ சிறந்த தொண்டு ஆற்ற முடியும்‌. 79, தற்கால உலூல்‌ இனக்‌ காழ்ப்புக்களும்‌ இன பேதமும்‌ வரலாற்று, சமுதாய நிகழ்ச்சிகளின்‌ விளைவாகத்‌ தேோரன்றுகின்றன. விஞ்ஞானப்‌ பிரமாணத்தின்‌ பொய்ப்‌ போர்வையில்‌ மறைந்து கொள்கின்றன. எனவே உயிரியலாரும்‌ சமூக இயலாரும்‌ தத்துவ இயலாரும்‌ அவற்றுக்கு நெருங்கிய விஞ்ஞானத்‌ துறைகளின்‌ வல்‌ லுதர்களும்‌ தங்கள்‌ ஆராய்ச்சிகளின்‌ முடிவுகள்‌ இனக்‌ காழ்ப்புக்‌ களைப்‌ பரப்புவதையும்‌ இன பேதத்துக்குத்‌ தூண்டி ஊக்குவதை யும்‌ நோக்கமாகக்‌ கொண்டவர்களால்‌ திரித்துப்‌ பயன்படுத்தப்‌ பட முடியாதபடி இயன்ற வகையில்‌ எல்லாம்‌ பாடுபட வேண்டும்‌.

 

அறிக்கை நிபுணர்களால்‌ ஒருமனதாக

ஏற்றுக்‌ கொள்ளப்பட்டது

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்