தோழர்களே 12 செப்டம்பர் அன்றைய கூட்டதிற்கு இலக்கு இணைய ஆசிரியர்களால் முன் வைக்கப்பட்ட அறிக்கை பின் வருபவன.
மார்க்சியத்தின்அவசியம் குறித்து,
நமது வேலை திட்டம் என்ற பகுதியில் லெனின், “நாம் முற்றிலும் மார்க்சிய தத்துவார்த்த
நிலையிலே எமது அடி நிலையைக் கொண்டு நிற்கிறோம்:மார்க்சியம் தான் முதன்முதலில்
சோசலிசத்தை கற்பனைவாதத்தில் இருந்து விஞ்ஞானமாக மாற்றி அமைத்து தந்தது; இந்த விஞ்ஞானத்துக்கு உறுதியான அடித்தளத்தை நிறுவிகொடுத்தது;இதை இதன் எல்லா கூறுகளிலும் மேலும் வளர்த்தும் விவரமாய்
விரித்தமைத்தும் செல்வதற்கு பின்பற்றவேண்டியபாதையைசுட்டிக்காட்டுகிறது.
அரசியல் சூழ்நிலைகள் புரியாப் புதிர்களான சட்டங்கள் கடும்
சிக்கலான தத்துவங்கள் ஆகியவற்றாலாகிய புகை மூட்டத்தினுள் மறைந்திருக்கும் வர்க்க
போராட்டத்தை பல்வேறு வகைப்பட்ட சொத்துடைத்த வர்க்கங்களுக்கும் சொத்துடமை அற்றோர்
அனைவரின் தலைமையில் நிற்கும் சொத்திலா பெருந்திரளாகிய பாட்டாளி வர்க்கத்திற்கு
இடையே நடைபெறும் இந்தப் போராட்டத்தை எப்படி கண்டறிந்து கொள்வது என்று அது நமக்கு
கற்றுக் கொடுத்தது. புரட்சிகர கட்சியின் முன்னுள்ள மெய்யான பணியை அது தெளிவுப்
படுத்திற்று: சமுதாயத்தை திருத்தி அமைப்பதற்கு திட்டங்களை வரைவது அல்ல
தொழிலாளர்களுடைய நிலைமைகளை மேம்படச் செய்வது குறித்து முதலாளிகளுக்கும் அவர்களது
அடிவருடிகளுக்கும் அறிவுரை அளிப்பதல்ல, சதிகள் புரிந்திடுவது அல்ல இப்பணி, பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தை ஒழுங்கமைப்பு செய்வதும்
பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வெல்வதையும் சோசலிச சமுதாய ஒழுகமைக்கப்படுவதையும்
இறுதி குறிக்கோளாய் கொண்ட இந்த வர்க்க போராட்டத்துக்குத் தலைமை தாங்குவதுமே இப்பணிஎன்றுஅதுதெளிவுபடுத்திற்று.இங்கே
இந்த தத்துவத்தை புதுப்பிப்பதாக சிலர் கூறிக் கொள்கிறார்கள்” என்கிறார் ஆசான்
லெனின்.
மேலும் அவரே,”அவர்களின் நோக்கம் என்ன என்பதை மட்டும் பார்ப்போம் இவர்கள் மார்க்சிய
ஆசான்கள் சொன்னதை எதையும் செய்யவில்லை, பாட்டாளி வர்க்கத்துக்கு விடுதலைக்கான எந்த தத்துவத்தையும்
இவர்கள் பேசவில்லை. மாறாக இவர்கள் பிற்போக்கு தத்துவங்களில் இருந்து சில கவளங்களை
கடன் வாங்கி ஆளும் வர்க்கத்திடம் அடிபணிந்து போக சொல்லும் தத்துவங்களையும் புதிய
வழிமுறைகளை தேடி அலைந்து ஆளும் அரசுக்கு விட்டுக் கொடுத்து அடிபணிந்து போக
சொல்லும் தத்துவங்களைப் பிரசாரம் செய்து பின்வாங்கி செல்ல சொல்லுகிறார்கள்”. எனும் ஆசான் இவர்கள் போன்றோரின் உண்மையான
நோக்கம் மார்க்சியத்தை வளர்பதற்கல்ல அவர்களின் விமர்சனம் என்ற போர்வையில் மார்க்சியத்தை
கொச்சை படுத்தும் இவர்களை இருவேறு பகுதியில் அம்பலப்படுத்தியுள்ளார் அதனை பார்ப்போம்
இனி. விமர்சன சுதந்திரம்
என்ற பெயரில் மார்க்சியத்தின் மீதான இவர்களின் பணியை பார்ப்போம்.
என்ன செய்ய வேண்டும் என்ற நூலில் அத்தியாயம் ஒன்றில்
விமர்சன சுதந்திரம் என்பதன் பொருள் என்ன என்ற பகுதியில் லெனின்
குறிப்பிட்டிருப்பார் "விமர்சன சுதந்திரம் தற்சமயம் மிகவும் பேசனாகிவிட்ட
முழக்கமாக உள்ளது",....".மார்க்சியத்தின்பால் விமர்சன ரீதியான கண்ணோட்டத்தை
மேற்கொள்ளும் புதிய போக்கின் சாரம்சத்தை பெர்ன்ஸ்டைன் போதுமான அளவுக்கு தெளிவுடன்
முன் வைத்தார்... சமூக ஜனநாயகம் சமுதாய புரட்சிக்கான கட்சியாக இருப்பதை
விட்டொழித்து சமுதாய சீர்திருத்தங்களுக்கான ஜனநாயக கட்சியாக மாறி தீர வேண்டுமாம்
..."
இவ்வாறாக தொடரும் அந்த அத்தியாயம் இறுதி லட்சியம் எனும் கருத்துருவமே
தவறானது என்று பிரகடனப்படுத்தப்பட்டது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என கருத்து முற்றாக
நிராகரிக்கப்பட்டது" என்கிறார் லெனின்.
மேலும் " கோட்பாடு நிலையிலே மிதவாதத்துக்கும்
சோசலிசத்கும் இடையே உள்ள எதிர்நிலை மறுக்கப்பட்டது . வர்க்க போராட்டம் பற்றிய
தத்துவம் மறுக்கப்பட்டது. இவ் வழியாக புரட்சிகரமான சமூக ஜனநாயகத்தை விட்டு முதலாளி
வர்க்க சமுதாய சீர்திருத்த வாதத்திற்கு நிர்ணயமாக திரும்ப வேண்டும் என்கிற
கோரிக்கையோடு கூடவே மார்க்சியத்தின் எல்லா அடிப்படை கருத்துகளை பற்றிய முதலாளி
வர்க்க விமர்சனத்தின் பால் அதே அளவில் நிர்ணயமான திருப்பம் ஏற்பட்டது"
என்கிறார் லெனின் என்ன செய்ய வேண்டும் என்ற நூலின் முதல் அத்தியாயத்தில்.
ஆக கம்யூனிஸ்டுகளின் பணி மற்றும் கம்யூனிஸ்டுகள் யார் என்பதனை லெனின் விளக்கி விடுகிறார்.
நமக்கு இன்று
ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் அவசியம் குறித்து :-
இன்று உலக மய சூழலில் அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய
நாடுகள் புதிய காலனி முறையில் மேலும் மேலும் தீவிரப்படுத்துவதற்கான ஒழுகுமுறை போர்
வரலாறு காணாத கொள்ளை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை எதிர்த்து சவால்
விடுவதற்கு உலகில் எங்கும் சோசலிச நாடுகளும் இல்லை உலகில் பலம் வாய்ந்த கம்யூனிஸ்ட் கட்சியும் எங்கும்
இல்லை. இருந்தும் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு விதமான ஜனநாயக சக்திகளும் புரட்சிகர
சக்திகளும் போராடிக் கொண்டுதான் உள்ளது. ஏன் இந்தியாவிலும் கூட கம்யூனிஸ்ட் கட்சிகள்
பிளவுண்டு பலவீனமாக ஏகாதிபத்திய எதிர்த்து போரிடும் அளவிற்கு எவையும் இல்லை.
ஏகாதிபத்திய சுரண்டலின் உலகமயம் தனியார் மயம் தாராள மயம்
தீவிரமாகஅமல்படுத்தப்பட்டுகொண்டுள்ளது.
எந்த ஒரு சிறு தடங்களும்இன்றி, இன்று நாடு முழுவதும் அந்நிய மூலதனம் வெள்ளம் என பாய்ந்து
வருகிறது.இவற்றை முறியடித்து இந்திய மக்களுக்கு தலைமை தாங்கி அழைத்துச் செல்ல
புரட்சிகரமான கட்சியின் அவசியத்தை புறநிலை கோருகிறது. இந்த சவாலை எதிர்கொள்ள
இந்திய கம்யூனிஸ்டுகள் ஆகிய நாம் தயாராக வேண்டும்.அதற்கான தேவைபற்றி நாம் பேசிக்
கொண்டிருக்கிறோம் ஆக எந்த ஒரு புரட்சிகர குழுவும் தன்னந்தனியே
செயல்பட்டு இந்திய எதேச்சதிகார ஆட்சி வீழ்த்த முடியாது என்பதை அனைவரும் அறிந்ததே.
இருந்தும் இந்தியா எங்கும் பல்வேறு மாநிலத்தில் பல்வேறு குழுக்களாகவும் ஏன்
தமிழகத்திலேயே பல்வேறு குழுக்கள் பல்வேறு முழக்கங்களின் பால் வழி நடத்தி வருகிறது.
இது எவ்வகையிலும் உழைக்கும் மக்களின் எதிர்கால வாழ்க்கைக்கு இன்றுள்ள துன்ப
துயரங்களுக்கோ முற்றுப்புள்ளி வைக்காது. ஆக அதற்குத் தேவை ஒன்றுபட்ட ஒரு புரட்சிகர
கம்யூனிஸ்ட் கட்சி.ஆக சர்வதேச அனுபவத்திலிருந்தும் மார்க்சியத்தின் அடிப்படையில்
இருந்தும் நாடு தழுவி ஒரு பலம் வாய்ந்த புரட்சியை சாதிக்க வல்ல ஒரு கட்சி
கட்டப்பட்டு வேண்டியது அவசியம் ஆகும். அதற்கு முதல் படியாக புரட்சி நேசிக்கும்
குழுக்கள் மற்றும் தனிநபர்கள் புரட்சியாளர்கள் ஒருங்கிணைப்பு அவசியம்.
ஒன்றுபடுவதற்கு முன்னால் எல்லை கோடுகள்
வகுக்கப்பட வேண்டும் என்றுலெனினியம்கூறுகிறது.
1). மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை தத்துவ
வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளுதல்.
2).ரஷ்ய சீன திரிபு வாதத்தை எதிர்த்தல்
(குருசேவ் மற்றும் டெங் தொடங்கி வைத்த).
3).இன்றைய சகாப்தம் ஏகாதிபத்தியம் மற்றும்
பாட்டாளி வர்க்க புரட்சி சகாப்தம்.
இந்தியாவைப்பற்றி
1).1947-இல் இந்தியப் பெரும்
முதலாளிகளுக்கு அதிகார மாற்றம் மக்களுக்கு பெயரளவுக்கானசுதந்திரஜனநாயகமும்.
2).இந்திய பாராளுமன்ற ஆட்சி ஏகாபத்தியத்திற்கும் பிற்போக்குக்கும் சேவை
செய்வதே.
3). ஆளும் கும்பல் தங்களுக்கு இடையிலான
முரண்பாடுகளை அமைதியான முறையில் தீர்த்துக் கொள்வதற்கான முறையே சட்டமன்ற- பாராளுமன்ற தேர்தல்முறை.
4).இடது வலது திரிபுகளுக்கு எதிராக போராடி
சித்தாந்த ரீதியிலும் அரசியல் ரீதியிலும் அமைப்பு ரீதியிலும் வெகுஜன இயல்பு
உள்ளதாக திடப்படுத்தப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதை நோக்கி முன்னேறுவது.
5).இடதுசாரி சக்திகளுக்கு இடையே நிலவும்
தவறான போக்குகளுக்கு எதிராக போராடி சரியான மார்க்சிய லெனியத்தை போதித்து சரியான
தலைமையைநிறுவுவது.
6). பொருளாதாரவாதம் பயங்கரவாதம்
குறுங்குழுவாதம் சந்தர்ப்பவாதம் ஆகிவிட்டதுஎதிராகபோராடுவது.
7). விமர்சனம் சுய விமர்சனம் அடிப்படையில்
கருத்து சுதந்திரம் விவாத சுதந்திரம் செயல்ஒற்றுமையே ஜனநாயக மத்தியத்துவம்.
8). அரசியல் போராட்டம் பொருளாதாரப்
போராட்டம் தத்துவப் போராட்டம் வர்க்கபோராட்டத்தின்உள்ளடக்கம்.
9).மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலம் மற்றும்
மாபெரும் விவாதத்தின் கருத்துக்களை வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளுதல்.
ஒரு சரியான புரட்சிகர மார்க்சிய லெனினிய வகைப்பட்ட
ஒற்றுமைக்கான அடிப்படையாகஇருக்கும்என்றுநம்புகிறோம்.
10).சிதறி கிடக்கும் கம்யூனிச புரட்சிகர
சக்திகளை ஒன்றுப்படுத்தி ஒரே கட்சியாக அமைப்பது தான் இன்றைய கட்டத்தில் இந்திய
கம்யூனிஸ்ட்களின் முதன்மையாக பணியாக இருக்கும். மா-லெ-மா தங்களுக்கு வழிகாட்டும்
தத்துவமாக ஏற்றுக் கொள்பவர் மட்டுமே மார்க்சியத்தின் புரட்சிகர உயிரோட்டமான
தத்துவத்தை ஏற்றுக் கொள்பவர்கள். அதே நேரத்தில் மா-லெ தங்கள் மனம் போன போக்கில்
விளக்கம் அளித்து மற்றவர்கள் மீது கோட்பாடற்ற முறையில் விமர்சனம் செய்து பகைமைஅம்சத்தை
வளர்த்து வருகின்றனர். இதனால் புரட்சிகர அமைப்புகள் மத்தியில் ஒற்றுமைக்கு பதில் பிளவுகளே
நீடித்து இருக்கின்றன வருகின்றன.
விமர்சனம் செய்வதற்கு மா-லெ கோட்பாட்டின் அடிப்படையில் விவாதங்கள் தொடர வேண்டும்
நீடிக்கின்ற கருத்துகளுக்கு மா-லெ- மாவோ சிந்தனையின்
அடிப்படையில் தீர்வு காண வேண்டும்
குறுங்குழுவாதத் தலைவர்களை அடையாளம் காண வேண்டும். அதற்கு மார்க்சிய லெனினிய அடிப்படை புரிதல் வேண்டும். இத்தகைய தலைவர்களை எதிர்த்துப் போராடி கட்சியை பாதுகாக்கவும் ஒரு ஒன்றுபட்ட பலம்வாய்ந்த கம்யூனிஸ்டுக் கட்சியை கட்டமுடியும். உழைக்கும் மக்களை ஒன்றுதிரட்டி எதிரியை எதிர்த்துப் போராட முடியும். வெற்றி பெற்று பாட்டாளி வர்க்க அரசை உருவாக்க முடியும். கம்யூனிஸ்டுகளும் உழைக்கும் மக்களும் ஒன்றுபடுவதற்கு தடையாக உள்ள குட்டிமுதலாளித்துவ சுயநலவாத குறுங்குழுவாதத்தை ஒழித்துக்கட்டுவோம். அதற்கு மார்க்சிய லெனினிய தத்துவ அரசியலை கற்றுத்தேர்வோம்.
இன்னும் சில
இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்த மார்க்ஸிஸ்ட் கட்சியாகட்டும் நக்கசல்பாரியின்
தொடர்சியாக தோன்றிய கட்சி குழுக்களாக மாறியது ஏன் தமிழகத்தில் மக்கள்யுத்த குழு மற்றும் பிற குழுக்கள் பிளவுண்டதற்கு அரசியல் முரண்பாடுதான் காரணம் என்று பலரும் பிரச்சாரம் செய்கிறார்கள். அது உண்மையல்ல. அரசியல் சித்தாந்த முரண்பாடுகளை ஒரு அமைப்பிற்குள்ளேயே, அந்த அமைப்பு பிளவுபடாமலேயே தீர்த்துக் கொள்வதற்கு உட்கட்சி சித்தாந்தப் போராட்டம் நடத்துவது என்ற வழிமுறையை மார்க்சிய ஆசான்கள் போதித்துள்ளார்கள். மேலும் அதனை நடைமுறையில் செயல்படுத்தி அவர்கள் செயல்பட்ட கம்யூனிச அமைப்பிற்குள் ஒற்றுமையை சாதித்து நிரூபித்துள்ளார்கள். ஆகவே பிளவுபட்ட கம்யூனிச அமைப்புகளின் தலைவர்கள் மார்க்சிய ஆசான்களின் இந்த போதனைகளை பின்பற்ற தவறியதால்தான், கம்யூனிச அமைப்பு பல சிறுசிறு குழுக்களாகப் பிளவுபட்டது என்ற உண்மையை இவர்கள் மூடிமறைக்கிறார்கள். இதற்கு அடிப்படையான காரணம் இந்த அமைப்புகளில் நிலவும் குறுங்குழுவாதமே ஆகும். இந்த குறுங்குழுவாதத்துக்கான வர்க்க அடிப்படை குட்டி
முதலாளித்துவம். அதற்கான சிந்தனைமுறை சுயநலவாதத்தின் அடிப்படையிலான தனிவுடமை சிந்தனைமுறையாகும். ஆகவே இந்த தலைவர்கள் அவர்களிடமுள்ள சுயநலத்தை கைவிட்டுவிட்டு பொதுநலவாதிகளாக முதலில் மாறவேண்டும். தனிவுடமை சிந்தனைமுறையை கைவிட்டுவிட்டு மார்க்சிய லெனினிய சிந்தனைமுறையை கற்று அதன் அடிப்படையில் சிந்தித்து செயல்படுபவராக அதாவது உண்மையான மார்க்சிய லெனினியவாதியாக மாறவேண்டும். குட்டிமுதலாளித்துவ வர்க்க நிலையை கைவிட்டுவிட்டு பாட்டாளிவர்க்க நிலைக்கு அவர்களை உயர்த்திக்கொள்ள வேண்டும். அமைப்பிற்குள் நிலவும் குறுங்குழுவாதத்திற்கு எதிராகப் போராடி அதனை முறியடித்து ஜனநாயகத்துக்காகப் பாடுபட்டு நிலைநிறுத்த வேண்டும். அத்தகைய ஜனநாயகத்தை நிலைநாட்டாமல் மத்தியத்துவத்தை மட்டும் வலியுறுத்துவது அராஜகவாதமே ஆகும். ஆகவே இந்தக் குழுக்களின் தலைவர்கள் தனது சொந்தத் தவறுகளை சுயவிமர்சனம் செய்து முதலில் களைய வேண்டும். அந்த தவறுகளுக்கு மாற்றாக மார்க்சிய ஆசான்களின் போதனைகளின் அடிப்படையில் சிந்தித்து உறுதியாக செயல்பட்டால் மட்டுமே கம்யூனிஸ்டுகளுக்கிடையே ஒற்றுமை ஏற்பட முடியும். இந்தத் தவறுகளை களையாமல் இவர்கள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் இவர்களிடையே ஒற்றுமை ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை.
குழுக்கள் பிளவுபடும் போது யாரும் அரசியல் முரண்பாடுகளை முன்வைத்து அமைப்பிற்குள் போராடவில்லை. அற்ப விசயங்களை முன்னிறுத்தியும் தனிநர்கள் மீது குற்றச் சாட்டுகளை முனைவைத்துமே போராடினார்கள். சில அரசியல் பிரச்சனைகளை பேசிய போதும் அதற்கு எவ்விதமான முன்னுரிமையும் கொடுத்து போராட்டங்கள் நடத்தப்படவில்லை. ஆனால் பிளவுபட்ட பின்பு ஒவ்வொருவரும் வெவ்வேறான அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்தி அவர்களின் பின்னால் வந்த உறுப்பினர்களை சமாதானப்படுத்தி தக்கவைக்க முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள். ஆனாலும் இவர்களுக்கு இடையிலான முரண்பாடு அடிப்படையில் தனிநபர் முரண்பாடாகவே முதன்மையாக இருக்கிறது. எனவேதான் இதுவரை ஒரே அமைப்பில் ஒன்றுபட்டு செயல்பட்டுவிட்டு தற்போது பிரிந்தவுடன் ஒருவர் முகத்தை பிறர் பார்க்க மறுப்பதும், ஒருவரோடு ஒருவர் பேச மறுப்பதையும் இங்கு காண முடிகிறது. இது நமது சமூகத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையில் பிளவு ஏற்படும் போதும், நண்பர்களுக்கு இடையில் பிளவு ஏற்படும் போதும் ஒருவருக்கொருவர் நடந்துகொள்ளும் முறையாகவே இருப்பதை நாம் காண முடியும். நிலவுகின்ற தனிவுடமை சமூகத்தில் நிலவுகின்றதுவே இங்கே பிரதிபலிப்பதாக இருக்கிறது. ஆகவே இந்த கம்யூனிஸ்டுகள் இந்த தனிவுடமை சமூகத்திலிருந்து கற்றுக்கொண்ட பிற்போக்கான சிந்தனை மற்றும் பழக்கவழக்கங்களை கைவிடவில்லை என்பதையே இது காட்டுகிறது. இந்த அமைப்புகளின் தலைவர்கள் தனிவுடமை சிந்தனைமுறையையும் பழக்கவழக்கங்களையும் கைவிடாதது மட்டுமல்லாமல் கட்சி உறுப்பினர்களும் இவர்களைப் போலவே பிற்போக்கு சிந்தனையாளர்களாகவே வளர்த்துள்ளார்கள் என்பதை நாம் பார்க்க முடிகிறது. திட்டம் போர்த்தந்திரம் பற்றி வாய்கிழியப் பேசும் இவர்கள், சரியானது எது? தவறானது எது? என்று பிரித்துப் பார்க்கும் மார்க்சிய லெனினிய அறிவை வளர்த்துக்கொள்ளாமல் கட்சி உறுப்பினர்களும் வளர்த்துக்கொள்வதற்கு முயற்சி செய்யாமல் ஏதேதோ பேசி தங்களை பெரிய அறிவாளிகள் போல் கட்சி உறுப்பினர்களிடம் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். கட்சிக்குள் நான் பெரிய அறிவாளியா? அல்லது நீ பெரிய அறிவாளியா? என்ற போட்டி உருவாகி தனிநபர்களுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டுவிட்டால் அமைப்பு பிளவில் போய் முடிந்துவிடுகிறது. இந்த அமைப்புகளின் பிளவிற்கான வரலாற்றை நாம் ஆராய்ந்து பார்த்தால் தனிநபர்களுக்கு இடையிலான முரண்பாடே பிளவுகளுக்கு பெரும்பாண்மையாக காரணமாக இருப்பதை நாம் அறியலாம். இதற்கு எதிராக நாம் போராட வேண்டுமானால் மார்க்சி ஆசான்கள் காட்டிய வழியில் நாம் மார்க்சிய லெனினிய சிந்தனைமுறையை வளர்க்க வேண்டும், சுய வளர்ச்சி பயிற்சியைப் பெற வேண்டும். இவ்வாறு பல சிறு குழுக்களாக பிளவுபட்டவர்களால் எதையுமே சாதிக்க முடியாது என்பது இவர்களுக்கு நன்றாகவே தெரியும், இருந்த போதிலும் இவர்கள் குழுவாகவே நீடிக்க விரும்புகிறார்களே ஏன்? இவர்களது நோக்கம் மக்கள் விடுதலையோ சமூக மாற்றமோ அல்ல. மாறாக இவர்களை சிலர் புகழ வேண்டும், இவர்களைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்க வேண்டும் என்பதுதான் இவர்களது லட்சியம். இத்தகைய தலைவர்களையும் இத்தகைய அமைப்பையும் நம்புவது மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதாகவே அமையும். எனினும் இந்தத் தலைவர்கள் அவர்கள் செய்த தவறை உணர்ந்து மார்க்சிய லெனினிய வழியில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்டுக் கட்சியை கட்டுவதற்கு முயற்சி செய்வாகள் என்றால் அவர்களை நாம் ஆதரிக்கலாம், வரவேற்கலாம்.
நமக்கன
ஆய்வுகளம் பொதுவுடமை இயக்க வரலாறு இந்திய வரலாற்று நிலையில் முழுமையாக ஆய்வுப் படுத்த
வேண்டியுள்ளது.
CPI,CPM
CPI ML பாராளுமன்றத்தை ஏற்பவர்களும் பாராளுமன்ற பாதையை மறுப்பவர்களையும் கருத்தில்
கொள்வதற்கு முன் கடந்தகால நிகழ்வுகளை சற்று புரிந்துக் கொள்ள முயலுவோமே தோழர்களே.
பல்வேறு
அடக்குமுறை ஒடுக்குமுறை தியாகத்திற்கு வித்திட்ட பொதுவுடமையாளர்கள் இன்று பல்வேறு கட்சிகளாக
குழுக்களாக பிரிந்து கிடப்பது இந்த ஒடுக்கும் வர்க்கதிடமிருந்து ஒடுக்கபடும் வர்க்கதிற்கான
விடுதலைக்கான பாத்திரம் ஆற்ற முடியாமல் முடங்கி கிடக்கிறோம் ஆளுக்கொரு வழியில் அவை
சரியான வழியில் இல்லை என்பது திண்ணம்…
தொடர்ந்து விவாதிப்போம்… ஒற்றுமைகான வழியை மார்க்சிய ஆசான் களின் வழிகாட்டுதலில் தொடருவோம் தோழர்களே....
No comments:
Post a Comment