பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்-5

 தோழர்களே நேற்றைய வகுப்பு பல தோழர்கள் கலந்து கொண்டு விளக்கினர் அவர்களின் கண்ணோட்டத்தை முதலில் பக்கம் 31லிருந்து 39 வரை வாசித்த பின்னர் தோழர்கள் அதற்கான விளக்கம் கொடுத்தனர்.

ஆக அடிப்படையில் பொருள்முதல்வாதம் கருத்துமுதல்வாதம் ஏன் தனித்தனியான தத்துவமாக உள்ளது அதனை நாம் புரிந்துக் கொண்டாலே எளிதாக தத்துவம் பற்றிய நமக்கான புரிதலை சரிபடுத்திக் கொள்ள முடியும் ஆகையால் இதற்கு துணை நூலாக நான் வாசிக்கும் "தத்துவம்‌: தொடக்கப்‌ பயிற்சி நூல்‌" என்ற முன்னேற்றப்‌ பதிப்பகம்‌ மாஸ்கோ வெளியிட்டுள்ள நூலிலிருந்து சிலப்பகுதியை கீழே PDF ஆகா லிங்கில் இணைத்துள்ளேன் இன்னும் சில நமக்கான கற்றலை சிறப்பிக்க...

  • இந்தப்‌ பிற்போக்கும்‌ பழைமைப்பற்றும்‌ அரசியல்‌ அக்கறையின்மை யாகவோ, சோஷலிஸத்தின்‌ ஆதர்சங்கள்‌, அதனால்‌ பெறப்பட்ட நலன்கள்‌, இவற்றின்பால்‌ எதிர்மறுப்புப்‌ போக்காகவோ, தனியார்‌ சொத்‌துரிமைக்கால மிச்ச சொச்சங்களாகவோ, எதார்த்தம்‌ பற்றிய பூர்ஷ்வா-பிலிஸ்டைன்‌ புலனறிவாகவோ, எதுவாக இருப்பினும்‌ சரியே, மார்க்ஸீயத்‌ தத்துவத்தை நன்கு புரிந்துகொண்டவர்‌கள்‌ அவற்றின்பால்‌ சமரசமற்ற எதிர்ப்பைக்‌ கடைப்பிடிக்கிறார்‌கள்‌. உயிர்த்துடிப்புள்ள மார்க்ஸீயத்‌ தத்துவம்‌ மேலான ஒளி திகழும்‌ வாழ்வின்பொருட்டு ஊக்கத்துடன்‌ போராடக்‌ தூண்டுவதும்‌, கம்யூனிஸத்தின்‌ பொருட்டு உணர்வுபூர்வமாகப்‌ போராடுவோரின்‌ பயிற்சியையும்‌ தற்பயிற்சியையும்‌ சாத்தியமாக்குவதுமான பயன்விளைக்கும்‌ சக்தியாக விளங்குகிறது. கம்யூனிஸச்‌ சமூகத்தை வெற்றி கரமாக நிர்மாணிக்க சோசலிச சமூகதிற்கு வழிகாட்டுகிறது.


மார்க்ஸீயம்‌ செயலுக்கு வழிகாட்டியே தவிர வறட்டுச்‌ சூத்திரம்‌ அல்ல என்ற பி.எங்கெல்ஸின்‌ சொற்களைச்‌ சிறப்பாகக்‌ குறித்துக்‌ காட்டி வி. இ, லெனின்‌ பின்வருமாறு எழுதினார்‌ “மார்க்ஸீயத்தின்‌ மிகஅடிக்கடி கவனிக்காது விட்டுவிடப்‌படுகிற ஓர்‌ அம்சத்தைக்‌ குறிப்பிடத்தக்க வலிவுடனும்‌ பொருள்‌ நிறைவுடனும்‌ இந்தச்‌ வரலாற்றுரீதியான கூற்று வலியுறுத்துகிறது. இதைக்‌ கவனிக்காது விட்டுவிடுவகன்‌ மூலம்‌ நாம்‌ மார்க்ஸீயத்‌தை ஒருதலைப்பட்சமானதாக உருக்குலைக்கப்பட்டதாக உயிரற்றதாகச்‌ செய்துவிடுகிறோம்‌. உயிர்த்தியங்கும்‌ ஆன்மாவை அதிலிருந்து பறித்துவிடுகிறோம்‌. சர்வ வியாபகமாகவும்‌ முரண்‌பாடுகள்‌ நிறைந்ததாகவும்‌ உள்ள வரலாற்று வளர்ச்சி பற்றிய போதனை ஆகிய இயக்கவியல்‌ என்கிற மார்க்ஸீயத்தின்‌ மூலதாரத்‌ தத்துவ அஸ்திவாரங்களைத்‌ தகர்த்துவிடுகிறோம்‌. வரலாற்றின்‌ ஒவ்வொரு புதிய திருப்பத்திலும்‌ மாறிவரக்கூடிய நமது சகாப்தத்தின்‌ திட்டவட்டமான நடைமுறைக்‌ கடமைகளோடு மார்க்ஸீயத்துக்கு உள்ள தொடர்புகளை அறுத்துவிடுகிறோம்‌.”(வி. இ. லெனின்‌. மூழு நூல்திரட்டு, தொகுதி 2, பக்கம்‌ 84)

விஞ்ஞானரீதியான இயக்கவியல்ப் பொருள்‌ முதல்வாதக்‌ கண்ணோட்டம்‌ மக்கள்திரளின்‌ கம்யூனிஸ உணர்வையும்‌ சித்தாந்தத்தில்‌ திடநம்பிக்கையையும்‌ உருவாக்குவதற்கு அடிப்படையாக விளங்குகிறது. மார்க்ஸியத்‌ தத்துவத்தை ஆழ்ந்த படைப்புமுறையில்‌ கிரகித்துக் கொள்வதால்‌ மக்களுக்‌குப்‌ புதியதிலும்‌ முற்போக்குள்ளதிலும்‌ ஆர்வ உணர்வும்‌ பிற்‌ போக்குள்ளதன்பாலும்‌ பழைமைப்‌ பற்றுள்ளதன்‌ பாலும்‌ சமரச மற்ற போக்கும்‌ பழக்கமாகிவிடுகின்றன.

தவறரான தொடக்ககாலத் தத்துவக்‌ கோட்பாடுகள்‌ மிகப்‌ பெரிய விஞ்ஞானிகளைக் கூட மேல்‌ செல்ல வழியற்ற முட்டுச்சந்துக்கு அடிக்கடி இட்டுவந்திருப்பததை விஞ்ஞான வளர்ச்சியின்‌ வரலாறு காட்டுகிறது. இது புரியக்கூடியதகே. ஓவ்வொரு விஞ்ஞானமும்‌ தான்‌ ஆராயும்‌ நிகழ்ச்சிகளின்‌ இயல்பையும்‌ அதன்‌ அடிப்‌படையில்‌ உள்ள விதிகளையும்‌ பற்றிய பிரச்சினைகளுக்கு ஏகாவது ஒரு வகையில்‌ தீர்வு காண வேண்டியிருக்கிறது. பெரிய கண்டுபிடிப்புக்கள்‌ செய்யப்பட்டு, ஏற்கனவே நிலை பெற்றுவிட்ட பழைய விஞ்ஞானக்‌ கருதுகோள்களும்‌ கோட்பாடுகளும்‌ தகார்வதும்‌ தொடக்க வரையறுப்புக்களும்‌ சில வேளைகளில்‌ விதிகளுங்கூட மறுபடி சிந்தித்துத்‌ திருத்தப்படுவதும்‌ நிகழும்‌ சந்தர்ப்பங்களில்‌ விஞ்ஞானத்துக்கும்‌ தத்துவத்துக்கும்‌ உள்ள தொடர்பு சிறப்பான துலக்கத்துடன்‌ வெளிப்படுகிறது. 

இயற்கை விஞ்ஞானங்கள்‌ பற்றிக்‌ கூறப்பட்டிருப்பவை சமூக வாழ்வின்‌ பல்வேறு துறைகளையும்‌ ஆராயும்‌ விஞ்ஞானங்‌களுக்கும்‌ பொருந்தும்‌. வரலாறு, பொருளாதாரம்‌, சட்டம்‌, பிற விஞ்ஞானங்கள்‌ ஆகியன வரலாறு, பொருளாதார உறவுகள்‌, சட்ட வடிவங்கள்‌ முதலியவற்றின்‌ வளர்ச்சிக்குரிய விதிமுறைகளை வெளிப்படுத்துகன்றன. ஒவ்வொரு சமூக விஞ்ஞானமும்‌ தனது ஆராய்ச்சித்‌ துறையுடன்‌ தொடர்பு கொண்ட விதிமுறைகளைப்‌ பரிசீலனை செய்கையில்‌ சமூகம்‌ முழுவதன்‌ வளர்ச்சிக்கும்‌ உரிய பொது விதிகளை, அதாவது வரலாற்‌றுப்‌ பொருள்முதல்வாதத்தால்‌ ஆராயப்படும்‌ விதிகளைப்‌ புறக்‌ கணித்துவிட முடியாது. இந்தப்‌ பொது விதிகள்‌ பற்றிய அறிவு இன்றிச்‌ சமூக நிகழ்முறையின்‌ வெவ்வேறு பகுதிகளின்‌ பரஸ்‌பரப்‌ பாதிப்பை விஞ்ஞான ரீதியாக விளக்க முடியாது. ஆனால்‌ பொது ஆராய்ச்சிமுறை இயல்‌ பற்றிய பல பிரச்சனைகள்‌ இங்கேதான்‌ எழுகின்றன. உதாரணமாக, பொருளாதாரமும்‌ அரசியலும்‌, விஞ்ஞானமும்‌ உற்பத்தியும்‌, உற்பத்தியின்‌ வளர்ச்சிக்‌ தரமும்‌ பொருள்வகை நலன்களது வினியோகத்‌தின்‌ வடிவங்களும்‌ பரஸ்பரம்‌ என்ன உறவு கொண்டவை? இவையும்‌ பிற தத்துவப்‌ பிரச்சினைகளும்‌ சமூக விஞ்ஞானங்‌களுக்கு மட்டுமே அல்ல, பொருளாதாரத்‌ திட்ட வகுப்பு, பொருளாதார நிர்வாக முறைகள்‌ முதலியவற்றுடன்‌ கொடர்பு கொண்ட பல ஜீவாதாரப்‌ பிரச்சினைகளின்‌ இவைக்கும்‌ கோட்‌பாட்டு ரீதியான முக்கியத்துவம்‌ உள்ளவை. 

வர்க்கங்களுக்கும்‌ அரசுகளுக்கும்‌ இடையிலுள்ள உறவின் வாயிலாக மாற்றியமைப்பதற்கான் இன்றியமையாத கம்யூனிஸ்ட்‌ கட்சி, தொழிலாளர்‌ இயக்கங்களது லட்சியங்கள்‌ ஆகியவற்றை முற்றிலும்‌ தெளிவாகப்‌ புரிந்துகொள்ள இயக்கவியல்‌ வரலாற்றுப்‌ பொருள்முதல்வாதம்‌ உதவுகிறது. வர்க்கச்‌ சக்திகளின்‌ எதார்த்தத்தில்‌ நிலவும்‌ வரிசை, தேசிய உறவுகள்‌ ஆகியவற்றையும்‌ சமூக வாழ்வின்‌ மற்ற முக்கியமான புறநிலைக்‌ காரணிகளையும்‌ உழைப்பாளி மக்கள்‌ திரளின்‌ ஒழுங்கமைப்பு, உணர்வு, இவற்றின்‌ தரத்தையும்‌ விஞ்ஞானத்‌ தத்துவத்தின்‌ ஆதாரத்தின்‌ பேரில்‌ கவனத்தில்‌ கொண்டே மார்க்ஸீய-லெனினீயக்‌ கட்சிகள்‌ தங்கள்‌ கொள்கைகளை நிச்சயிக்கின்‌றன. எனவே, திட்டவட்டமான விஞ்ஞானங்களின்‌ வெற்றிகரமான வளர்ச்சிக்கும்‌, தற்காலச்‌ சமூக வாழ்வின்‌ மிகச்‌ சிக்கலான நிகழ்முறைகளது சாரத்தை ஆழ்ந்து புரிந்துகொள்வதற்‌கும்‌, மனிதனது செயல்களின்‌ எந்தத்‌ துறையிலும்‌ எதிர்ப்படும்‌ நடைமுறைக்‌ கடமைகளை நிறைவேற்றுவகுற்கும்‌ மார்க்ஸீய-லெனினீ௰யத்‌ தத்துவ அறிவு இன்றியமையாதது. இந்தக்‌ காரணத்தினால்தான்‌ இயக்கவியல்‌ வரலாற்றுப்‌ பொருள்முதல்‌ வாதும்‌ கம்யூனிஸக்‌ கட்டுமானத்தின்‌ சித்தாந்த அடிப்படை யாகத்‌ தொண்டாற்றுகிறது.

சுற்றியுள்ள பிரபஞ்சத்தைச்‌ சரியாகப்‌ புரிந்து கொள்ளவும்‌, சிக்கலான நிகழ்ச்சிகளையும்‌ மெய்‌ விவரங்களையும்‌ ஆழ்ந்து கெளிவுபடுத்திக்கொள்ளவும்‌, அவற்றைச்‌ சரியாக மதிப்பிடவும்‌ தங்கள்‌ லட்சியங்களையும்‌ கடமைகளையும்‌ சரிவர நிச்சயித்துக் கொள்ளவும்‌, அவற்றை நிறைவேற்றுவதற்கு வெற்றிகரமாகச்‌ செயல்படவும்‌ மக்களுக்கு உதவுவதே மார்க்ஸீயத்‌ தத்துவத்தின்‌ நோக்கம்‌.

பொதுச்‌ சித்தாந்தத்தையும்‌ பிரபஞ்சக்‌ கண்ணோட்டத்தையும்‌ பற்றிய பிரச்சினைகளை எதார்த்தத்தின்‌ பொருள்முதல்‌வாதப்‌ புரிதலின்‌ அடிப்படையில்‌ மார்க்ஸீய-லெனினீயத்‌ தத்துவம்‌ தீர்த்துவைக்கிறது. பிரபஞ்சம்‌ தனது அடிப்படையில்‌ பொருளியலானது என்று அயல்‌ விஷயங்களின்‌ சேர்க்கையின்றி அது உள்ளவாறே ஆராய்‌கிறது. மையமான, மூலாதாரமான தத்துவப்‌ பிரச்சினைக்கும்‌, அதாவது சிந்தனைக்கும்‌ இருத்தலுக்கும்‌ இடையிலுள்ள உறவு பற்றிய பிரச்சினைக்கும்‌ அது இதே நிலையிலிருந்து தீர்வு காண்‌ கிறது. அடிப்படையான இந்தப்‌ பிரச்சனையின்‌ ஓரே சரியான பொருள்முதல்வாத அர்த்தம்‌, நாம்‌ ஏற்கனவே கூறியிருப்பது போல பொருள்‌, இருத்த்ல்‌ முதலாவது என்றும்‌ உணர்வு சிந்தனை இரண்டாவது என்றும்‌ ஒப்புக்கொள்வதே ஆகும்‌.

மார்க்ஸீயகத்‌ தத்துவப்‌ பொருள்முதல்வாதம்‌ பழைய பொருள்முதல் வாதத்தின்‌ மறு உயிர்ப்பாக மட்டுமே இருந்து விடவில்லை. 19ம்‌ நூற்றாண்டின்‌ இயற்கை விஞ்ஞானக்‌ கண்டு பிடிப்புக்களைப்‌ பயன்படுத்திக்கொண்டு மார்க்ஸும்‌ எங்கெல்‌ ஸும்‌ பழைய, மாறாநிலைவாதப்‌ பொருள்முதல்வாதத்தை அடி யோடு மாற்றிச்‌ சீரமைத்தார்கள்‌. பொருள்முதல்வாதத்தை இயக்க இயல்வியலுடன்‌ ஒன்றிணைத்து இயக்கவியல்‌ பொருள்‌முதல்வாதத்தை அவர்கள்‌ உருவாக்கினார்கள்‌. பிரபஞ்சத்தை மாற்றி அமைப்பதற்கான சித்தாந்தக்‌ கருவி என்ற வகையில்‌ இயக்கஇயல்‌ பொருள்முதல்வாதம்‌ உருவாக்கப்பட்டது தத்துவச்‌ சிந்தனை தோன்றிய காலம்‌ முதற்கொண்டு அதன்‌ வரலாறு முழுவதிலும்‌ அதனுடைய மிகப்‌ பெரும்‌ நிறைவேற்றமாகவும்‌ தத்துவத்தில்‌ புரட்சிகர மாற்றமாகவும்‌ திகழ்த்தது. 

பழைய பொருள்முதல்வாதத்தின்‌ வரையறுத்த இயல்பு மாறாநிலைவாதத்‌ தன்மை கொண்டிருந்ததில்‌ மட்டுமே அடங்கி யிருக்கவில்லை. அது கடைசிவரை ஓத்தியைந்ததாகவும்‌ இருக்கவில்லை, ஏனெனில்‌ மார்க்ஸீயத்துக்கு முந்திய பொருள்முதல்‌வாதிகள்‌ அதைச்‌ சமூக நிகழ்ச்சிகளுக்குப்‌ பொருந்தச்‌ செய்யத்‌ திறனற்றவர்களாக இருந்தார்கள்‌. மார்க்ஸும்‌ எங்கெல்ஸும்‌ பொருள்முதல்வாதக்தகை உச்சிவரை "நிறுவிப்‌ பூர்த்தி செய்தார்கள்‌". அவர்கள்‌ வரலாற்று ரீதியான பொருள்முதல்‌ வாகதுத்தை உருவாக்கினார்கள்‌. சமூக வளர்ச்சிக்குரிய மிகப்‌ பொதுவான விதிகள்‌ பற்றிய விஞ்ஞானம்‌ இது. தத்துவத்தில்‌ அவர்கள்‌ நிகழ்த்திய புரட்சிகரமான மாறுதலின்‌ வெளியீடாக இதுவும்‌ விளங்கியது. மார்க்ஸீயத்‌ தத்துவம்‌ வெவ்வேறு வர்க்கங்களின்‌, முதன்‌மையாகத்‌ தொழிலாளி வர்க்கத்தின்‌ வாழ்க்கைக்குரிய சமூக நிலைமைகளை எல்லாக்‌ கோணங்களிலிருந்தும்‌ ஆராய்ந்து, வரலாற்றில்‌ உழைப்பாளி மக்கள்‌ ஆற்றியுள்ள உண்மையான பங்கையும்‌ அவர்களது புரட்சிகரச்‌ செயல்களின்‌ முக்கியத்‌ துவத்தையும்‌ காட்டியது. மார்க்ஸீயத்தின்‌ தோற்றத்துக்குப்‌ பின்‌ தத்துவம்‌ விரிவான மக்கள்‌ திரளின்‌ உடைமை, கோடானு கோடி மக்களது போராட்டக்‌ கொடி ஆகிவருகிறது. விஞ்ஞானச்‌ சித்தாந்தத்தையும்‌ புரட்சி நடைமுறையும்‌, துத்துவத்தையும்‌ அரசியலையும்‌ மார்க்ஸீயம்‌-லெனினீயம்‌ இணையுறுப்புக்களாக ஓன்று சேர்த்துவிட்டது.

இன்னும் இந்த பகுதியில் வாசிக்க

மார்க்சிய லெனினிய தத்துவம் பயிலுவோம் இந்த லிங்கை அழுத்தி நூலை PDF வடிவில் பெற்றுக் கொள்ளவும் 

நேற்றைய வகுப்பை ஒலி வடிவில் கேட்க இந்த லிங்கை தொடவும் தோழர்களே



No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்