மதமும் சமூகத்தில் உள்ள பல போக்குகளில் நாத்திகவாதம்

மிகப் புராதன காலத்தில் மனிதன் மதத்திற்காக போராடினான் என்பது எந்த ஆதாரமும் இல்லை.

வரலாறு தெரிந்த காலம் தொட்டு மதம் ஒன்றுடன் ஒன்று போராடி எதிர்தே வந்துள்ளது.

ஐரோப்பிய வரலாற்றில் இயேசு பிறந்த புனித தலத்தை மீட்பதற்காக நடந்த/ நடந்துக் கொண்டிருக்கும் போர்கள்.

அன்றைய இந்தியாவில் நடந்த மதப் போராட்டங்கள் அளவே இல்லை. புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகத்தை அன்றைய சனாதன மதவாதிகள் தீக்கிரியாக்கினார்கள் என்பது வரலாற்றின் பின்னணி. மகேந்திரவர்மன் எழுதிய "மத்த விலாச பிரகசனம்" என்ற நாடகம் அவன் காலத்திய மதங்களிடையே உள்ள பூசல்களை கிண்டல் செய்வதாக அமைந்துள்ளது.
இன்று உலகெங்கிலும் நடந்தேறிக் கொண்டிருக்கும் மதவாத நிகழ்வுகளும் ஏன் இந்தியாவில் மதத்தின் பெயரால் ஆட்சி புரிவோர் செய்யும் மதவெறியும். தினம் நடந்தேறி கொண்டிருக்கும் இந்த கோரமான நிகழ்வுகளுக்கு முடிவு கட்ட ... மதத்தை முற்றிலும் ஒழித்து விட்டால் இதற்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.
தமிழகத்தில் நாத்திகம் பேசுபவர்கள் மதத்தை ஒழித்து கட்டுவதற்கு பல்வேறு விதமான செயல்களை செய்து கொண்டுள்ளார்கள். இன்று நாத்திகம் பேசிய அவர்களே ஆத்திகம் நிலை தள்ளப்பட்டு விட்டார்கள். அதை ஏன் எப்படி என்பதை ஆய்வதோடு மார்க்சியத்தில் மதம் பற்றிய பார்வையும் தெரிந்து கொள்வோம்.
மார்க்சியத்தின் ஒரு அம்சம் நாத்திகவாதம். அதேபோல மதத்தை எதிர்ப்பவர்கள் நாத்திகவாதிகள்.இந்த நாத்திகவாதிகள் கடவுள் எதிர்ப்பு மத எதிர்ப்பு என்பதை முழு கொள்கையாகக் கொண்டுள்ளார்கள். இவர்கள் எந்த கட்டத்திலும் எக்காலத்திலும் மத எதிர்ப்பு என்பதை விடாப்பிடியாக பின்பற்றுகிறார்கள். இவர்கள் முதலாளித்துவ நாத்திகவாதிகள் இவர்கள் மதத்தின் அடிப்படைகளை அறியாதவர்கள், அது எவ்வாறு தோன்றியது அது எவ்வாறு ஒவ்வொரு சமூகத்திலும் தன் பங்காற்றுகிறது என்பதனைப் பற்றியும் மதத்தின் தோற்றம் அதனுடைய இருப்பு பற்றிய எவ்வித தேடுதலும் இல்லாமல் மதத்தின் குறைபாடுகளை மட்டும் விமர்சனம் செய்வது இவர்களுடைய பணியாக உள்ளது. அதே நேரத்தில் இவர்களுடைய பணி மதத்தின் தவறான பக்கங்களை மக்களுக்கு கோடிட்டு காட்டி அவர் அட்டூழியங்கள் அவர்களுடைய தவறான அறிவற்ற போக்குகளை நாத்திகவாதம் பிரசாரம் செய்கிறது. புராண இதிகாசங்களில் உள்ள கருத்து முரண்படுகளை வெளிச்சம் போட்டு மக்களுக்கு காட்டுவதோடு கருத்தை கருத்தால் எதிர்க்கும் போராட்டத்தை தொடர்ந்து செய்கின்றனர்.
இந்தப் பணி ஓரளவுக்கு மக்களை சிந்திக்க வைத்தாலும் மக்களை மதத்தின் பிடியிலிருந்து விடுவிக்கவில்லை ஏன் என்பதை மார்க்சியம் மிகத் தெளிவாக மதத்திற்கும் மற்ற சமூக நிறுவனங்களுக்கும் உள்ள உறவுகளை கணக்கில் எடுத்துக் கொண்டு அதற்கு எதிரான போராட்டத்தினை நடத்த வேண்டும் என்று மார்க்சியம் கூறுகிறது.

மதத்தைப் பற்றி மார்க்சியம் வெறும் நாத்திக கோணத்தில் மட்டுமே தனது ஆய்வை துவக்கவில்லை. மதம் என்பது ஒரு சமூக நிறுவனம். சமூக அடிதளத்தின் பிரதிபலிப்பே மேல் கட்டுமானம் ஆகும். அதனால் மார்க்ஸ் ம\தத்தை அதன் வரலாற்று ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்தினார் . மதத்தின் தோற்றம் அதன் வளர்ச்சி அதன் தன்மை ஆகிவற்றை விரிவாக ஆராய்ந்து மதம் பற்றிய மார்க்சிய அணுகுமுறையை நமது ஆசான்கள் உருவாக்கினார்கள்.

ஆதிகாலத்தில் மனிதனின் அறியாமை காரணமாக தோன்றியது தான் கடவுள் நம்பிக்கையும் அதன் தொடர்ச்சியான மதமும். சமூகங்கள் வர்க்கங்களாக பிளவுண்ட பொழுது அது ஆளும் வர்க்கத்தின் நலன்களை பாதுகாக்கும் சாதனமாக மாறியது. அடக்குமுறை கருவியாக இன்றும் பயன்படுகிறது. ஆரோக்கியமான அறிவியல் பூர்வமான வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இன்றும் விளங்குகிறது. மதத்தின் காட்டும் மிராண்டித்தனமான பல்வேறு செயலுக்கு அதனை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பது நாத்திக வாத கோரிக்கையாக உள்ளது.

எந்த மதம் அடக்குமுறை கருவியாக உள்ளதோ அதே மதம் ஏழை எளிய உழைக்கும் மக்களின் மனதாங்கல்களை வெளிப்படுத்தும் கருவியாகவும் உள்ளது என்கிறார் மார்க்ஸ்.

அதை தான் மக்களின் பெருமூச்சு என்கிறார் மார்க்ஸ்.
தன்னுடைய இயலாநிலைக்கு மனிதன் பெருமூச்சாக மதம் மக்களுக்கு பயன்படுகிறது. அதனால் மதத்தின் இருப்பு அதன் முழு பரிமாணத்தையும் அறிந்து உணர்ந்து அதற்கு எதிராக செயல்படுவதற்கு வர்க்கப் போராட்டத்தை முன்னிறுத்துகிறது மார்க்சியம்.

மதத்தை கட்டிக் காக்கும் அதற்கு அடிப்படையான முகத்தை மாற்றி அமைக்கும் பொழுது மதத்திற்கு ஆதரவாக உள்ள சகல அடிப்படைகளும் இல்லாது ஒழிக்கப்படும் பொழுது அதன் ஆணிவேர்கள் கருகிவிடும் அதேபோல சில காலங்களில் தேவையற்று போய்விடும்.

வர்க்க சமூகத்தில் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக மதத்திற்கு எதிரான போராட்டம் இருக்க வேண்டும். வர்க்கப் போராட்டத்தை மறுத்துவிட்டு மதத்திற்கு எதிரான போராட்டம் நடத்தும் நாத்திகவாதிகள் ஒரு வகையில் ஆளும் வர்க்கத்திற்கே சேவை செய்கின்றனர்.

அய்யா மனுசனுக்கு முதலில் தின்ன சாப்பாடு வேண்டும் நாட்டில் 22 கோடி பேர் இரண்டு வேளை உணவில்லை 44 கோடி பேர் இரவு உண்ணாமல் உறங்கு கின்றனர்... மோடி ஆட்சியில் 81 கோடி பேர் வாழவழியற்றவர்கள் அவர்களுக்கு தேவை உணவுதான் நீங்கள் பேசும் எவையும் அல்ல... தேவை பட்டால் உங்களை போன்ற தின்னு கொழுத்தவர்களுக்கு நாத்திகம் பேஷ்னாக இருக்கலாம் ஆனால் அந்த பட்டினி கிடக்கும் கூட்டதிற்கு நாத்திகமோ ஆத்திகமோ அல்ல பிரச்சினை அவன் வாழ வேண்டும் அதற்கு வழி சொல்லுங்கள்......

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்